மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.9.10

அம்ப்பயர் இல்லாத ஆட்டம் எது?

----------------------------------------------------------------------------------------
அம்ப்பயர் இல்லாத ஆட்டம் எது?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.16
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.52
செந்தில்குமார்
   
சார், பொதுவாக ஜாதகத்தில் விதி (லக்னம் )யை வைத்து பார்க்க வேண்டும். விதி சரியில்லை எனில் மதியை (சந்திரன்)வைத்து பார்க்க வேண்டும். மதி சரியில்லையெனில் கதியை (சூரியன் )வைத்து பார்க்க வேண்டும் என என் ஜோதிட நண்பர் சொல்வார். இது எந்த அளவு சாத்தியம்?

லக்கினம்தான் பிரதானம். லக்கினத்தை வைத்துத்தான் பலன்களைப் பார்க்க வேண்டும். சிலர் சந்திரனை - சந்திரன் இருக்கும் ராசியை லக்கினமாக எடுத்துக்கொண்டு பலன்களைப் பார்ப்பார்கள். திருமணம் நடக்குமா? அல்லது நடக்காதா? திருமணம் தாமதம் ஆவதற்குக் காரணம் என்ன என்பதுபோன்ற விஷயங்களுக்கு அப்படிப் பார்ப்பர்கள். சனியால் ஏற்படவுள்ள திருமண அவஸ்தைகளுக்கு, இரண்டு இடங்களையுமே பார்ப்பது நல்லது.

எல்லா பலன்களுக்கும் அப்படிப்பார்த்தால் மண்டைகாய்ந்து விடும். மண்டை காய்ந்து விடுவது என்றால் என்ன வென்று தெரியுமல்லவா?

லக்கினத்தை வைத்துப்பார்க்கும்போது எல்லாம் சரியாக இருந்தால் சந்திர லக்கினத்தை நினைக்க மாட்டார்கள்.

நீங்கள் லக்கினத்தை மட்டும் வைத்தே பலன்களைப் பாருங்கள். அது ஒருத்தியை மட்டும் மணந்து கொண்டு வாழ்வதற்குச் சமம். இரண்டையும் வைத்துப் பலன்களைப் பார்ப்பது இரண்டு பெண்களை மனந்து கொண்டு வாழ்வதற்குச் சமம். இரண்டு பெண்டாட்டிக்காரர்கள் கதைகள் தெரியுமல்லவா? தெரியாவிட்டால் கேட்டுத்  தெரிந்து கொள்ளுங்கள்.

கிரிக்கெட்டில் பந்து வீச்சுப் பகுதியில் ஒரு அம்ப்பயரும், ஸ்கொயர் லெக் பகுதியில் ஒரு லைன் அம்ப்பயரும்  என்று இரண்டு பேர்கள்
இருப்பதோடு, Third Umpire ஒருவரும் இருப்பார். ஜாதகங்களுக்கும்
அப்படி மூன்று நிலை அம்ப்பயர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அம்ப்பயர் இல்லாத ஆட்டம் ஒன்று உண்டு என்றால், அது கிரகங்கள் நம்முடன் ஆடும் ஆட்டம்தான்!
-----------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.53
அழகிரி
   
ஐயா,
எனது ஜாதகத்தில் அரசாணி தோஷம் உள்ளது என்று கூறுகின்றனர் அதனால் திறமான தடை ஏற்படுகின்றது என்றும் கூறுகின்றனர் .
அரசாணி தோஷம் என்றால் என்ன? அதற்குரிய பரிகாரதையும் 
கூறவும். உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கும்
அழகிரி

அரசாணி என்றால் எங்கள் கோவையில் அது பரங்கிக்காயைக்குறிக்கும். அரசாணிக்காய் என்பார்கள். காரைக்குடிப்பகுதியில் அரசாணைக் கால் என்றால், திருமணத்திற்கு முதல் நாள் மணவறையில், மனைக்கு எதிரில் கட்டப்பெறும் அரசு ஆணக் காலைக் குறிக்கும். அதாவது முற்காலத்தில் மன்னனிடம் இருந்து உத்தரவு வந்து அதைச் செய்வார்களாம். இப்போதும் அப்பழக்கத்தை விடாமல் தொடர்கிறார்கள்.

நீங்கள் சொல்லும் அரசாணி என்னவென்று தெரியவில்லை.
-------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.54
அரியப்பன் சாத்தப்பன்

வணக்கம் அய்யா,
1 ,ஒரு கிரகம் தன் வீட்டை பார்பதால் அந்த வீடு பலம் பெரும். அதன் அடிப்படையில் இரண்டுக்கு உடையவன் 8ல் இருந்து பார்ப்பதால் இரண்டாம் வீடு பலம் பெருமா?

உடையவன் எங்கே இருந்து தன் வீட்டைப் பார்த்தாலும், அந்த வீடு பலம் பெறும்.

2,வக்கிர கிரகத்துக்கு 12ல் எதேனும் (லக்கின ரீதியில் சுபக்கிரகம்) இருப்பதோ அல்லது பார்வையோ இருந்தால் நல்ல பலனை தருமா? மாத .ஜோதிடத்தில் படித்த நினைப்பு இருக்கிறது இது சரியா?தவறா?

தெரியவில்லை. நீங்கள் எங்கேயோ படித்து, அரைகுறையாக மனதில் வைத்திருப்பதற்கு, இங்கே வந்து விளக்கம் கேட்பதும் தவறுதான்!

3, சர்வஅஷ்ட்டக வர்க்கத்தில் (பரல்களின் கூட்டுதொகை) 1 முதல் 4வரை இளமை, 5 முதல் 8வரை மத்திய பருவம்,9ஆம் வீடுமுதல்12ஆம் வீடு வரை வயோதிகம் காலம் என்று பலன் இருப்பதாக படித்துருக்கிறேன் இது சரியா?
நன்றியுடன்
அரிபாய் 

தவறு. மீனம் முதல் மிதுனம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - இளமைக்காலம். கடகம் முதல்  துலாம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - மத்திய வயது விருச்சிகம் முதல் கும்பம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - வயதான காலம் என்பதுதான் சரியானதாகும்
------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.55
ரவி மாதவன்

Anbulla Ayya
          Regarding retrograde palnets i have doubts, like in normal gochara plantes like mercury, venus, saturn, jupiter,mars gets retograde and it comes back to the normal position but in natal chart if any one of the planet shows retrograde whether it will have vakra nivarthi like gochara or else whether it will remain vakra through outs the person life time please clarify.
Regards
Ravi.M

ஒரு கிரகம் வக்கிரகதியில் இருக்கும்போது, பிறந்தவரின் ஜாதகத்தில் அது வக்கிரகதியில் இருந்ததாகக் குறிப்பிடப் பெற்றிருக்கும். It is fixed. Cannot be changed for any reason. ஜாதகத்தில் கடைசிவரை அது அப்படியே நிலைபெற்று இருக்கும்!

கிரகம் வக்கிரகதி நிவர்த்தி பெறும்வரை, தாய் வயிற்றிலேயே இருந்துவிட்டுப் பிறகு பிறக்கும் வாய்ப்பு எவருக்கும் தரப்படவில்லை. தந்திருந்தால், இந்த வக்கிரகதி, அதனால் ஏற்படும் உபத்திரவங்கள் எல்லாம் இருக்காது. நீங்களும், நானும் நிம்மதியாக இருக்கலாம்.
------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.56
R.K.சுரேஷ்

Dear Sir,

My Questions are:
   1. Who is giving all benefits?

சுபக் கிரகங்கள் நன்மைகளை வழங்கும் எல்லா நன்மைகளையும் என்னும்போதுதான் சிக்கல். ஒரே மாத்திரையில்  எல்லா நோய்களையும் குணமாக்க முடியமா? ஒரே ரயில் எல்லா ஊர்களுக்கும் போக முடியுமா? எல்லா சக்திகளையும் எல்லா வைட்டமின்களையும் தரக்கூடிய
ஒரே உணவு உண்டா? அதுபோல எல்லா நன்மைகளையும் வழங்கக்
கூடிய தனிப்பட்ட கிரகம் எதுவும் இல்லை.

   2. Who is authorised planets to giving any kind of Govt jobs? because somebody told me mars and somebody told me sun.

சூரியன்.

   3. How the jobs are assigned? because somebody told me based on lakna, based on your statement 10th place, somebody told me based on nakchatra.

பத்தாம் வீட்டுக்காரனும், சனீஷ்வரனும் சேர்ந்து அடித்து ஆடினால் நல்ல ஸ்கோர் கிடைக்கும். அதாவது நல்ல வேலை அல்லது தொழில் அமையும்.
-----------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

40 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    அருமையான வரிகள்.
    வாயிருந்தும் வாழ்த்தவில்லை,
    இளமையான மனம் இருந்தும் நினைக்கவில்லை,
    இதனோடு நீ படைத்த தலையிருந்தும் வணங்கவில்லை,
    காலத்தை வீணாக்கிய எனக்கு, உன்னை வணங்க அருளிருக்க வேண்டாமா?
    இதையும் அவனிடமே கேட்டு விடுவோம்.

    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. அய்யா,
    கேள்வி பதில் தொடர் மிக சிறப்பாக அமைந்து வருகிறது. நீங்கள் பாடத்தின் துவக்கத்தில் சொல்லும் நெஞ்சை தொட்ட வரிகள் மிக பொருத்தம். நமக்கு எல்லாம் இந்த வாழ்க்கையை அருளிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லாமல் கழிக்கும் ஒவ்வொரு நாளுமே வீணான நாளே.

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்.

    " மனம் போல் மாங்கல்யம்!" என்று ஒரு சொலவடை உண்டு என்பது தாங்களுக்கும் அறிந்ததே

    மாணவனின் கேள்வி

    ஒரு ஜீவனின் ஜாதகத்தில் "சந்திரன் " மட்டும் நன்றாக இருக்கும் பட்சத்தில், அந்த ஜீவனின் மனம் மற்றும் ஆத்மசரிரம் நன்றாக இருக்கும் அப்படிதானே பொருள் ஏனெனில் மனம் தானே செயலுக்கு அதிபதி, சரி கதைக்கு வருவோம் மற்ற அமைப்புகள் நன்றாக இல்லாது இருந்து மனத்தால் ( சந்திரனால் ) என்ன பயன் ?

    இங்கு " எண்ணம் போல வாழ்க்கை " என்பது பொய்த்து அல்லவா போகிவிடுகின்றது எமது அருமை ஐயா!

    ReplyDelete
  4. oru graham vakramaga irundhu. asta varga paralil adhu 7 irundhal . nalladha .. or oru graham vakramaga irundhu paral 2 or lessthanaga irundhal naladha.

    ReplyDelete
  5. தவறு. மீனம் முதல் மிதுனம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - இளமைக்காலம். கடகம் முதல் துலாம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - மத்திய வயது விருச்சிகம் முதல் கும்பம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - வயதான காலம் என்பதுதான் சரியானதாகும்.

    இதற்கு முன்னால் இப்படி சொல்ல மறந்து விட்டீர்களே ஐயா...இப்படி சொல்ல மறந்த விசயங்களெல்லாம் கேள்வி-பதில் பகுதியில் வரும் போலிருக்கிறது. நன்றி

    ReplyDelete
  6. தறி கெட்டுப் போன கிரிக்கெட் . .
    இங்கேயும் வந்துட்டதான்னு
    ஒரு நிமிஷம் (படத்தை பார்த்தவுடன்)பார்த்தேன். .

    அட இது தானா . .
    என அப்புறம் யோசித்தேன் ..

    உடையானை பற்றிய செய்தி அருமை
    என்னுடைய ஜாதகத்தில் அப்படியே
    பொருந்தி வருகிறது ..

    ReplyDelete
  7. நெஞ்சை தொட்ட வரிகளில்
    யாருடைய பாடல் என எப்போதும் குறிப்பிடும் ஆசிரியர்
    இன்றைய பாடலை யார் பாடல் என குறிப்பிடவில்லையே .

    இது அப்பர் (upper) வாக்கு அல்லவா . .
    அதை குறிப்பிட்டுச் சொன்னால் தேவாரத்தை படிக்க வேண்டும் அல்லது கடையில் வாங்கியாவது rockல் அடுக்க வேண்டும் என நினைப்பார்கள் தானே . .

    ReplyDelete
  8. அய்யா, அற்புதமான வரிகள். தாங்கள் இது போன்ற சிறந்த பாடல்கள் குறித்து பதிவுகள் எழுதி தங்கள் விளக்கத்துடன் அதை படிக்க ஆசை.
    என் பதிவிற்கு தங்கள் வருகைக்கு நன்றி.

    அடிக்கடி வரவும்.

    http://vettipaechchu.blogspot.com/2010/09/blog-post_06.html

    மிகுந்த மகிழ்வுடனும் நன்றியுடனும்,

    அன்பன்,
    வேதாந்தி

    ReplyDelete
  9. பத்தாம் வீட்டுக்காரனே சனியாக இருந்தால் what kind of jobs may one end up ?

    ReplyDelete
  10. //மீனம் முதல் மிதுனம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - இளமைக்காலம். கடகம் முதல் துலாம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - மத்திய வயது விருச்சிகம் முதல் கும்பம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - வயதான காலம் என்பதுதான் சரியானதாகும் //

    whow today i learnt something , may i know more about this concept, is this topic covered else where in வகுப்பறை ?

    ReplyDelete
  11. todays question on Job is attracting lot of interest from all.

    if possible shall we take a retake on the lessons on 10th house

    Thanks for the todays answers

    ReplyDelete
  12. "" மீனம் முதல் மிதுனம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - இளமைக்காலம். கடகம் முதல் துலாம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - மத்திய வயது விருச்சிகம் முதல் கும்பம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - வயதான காலம் என்பதுதான் சரியானதாகும் ""

    இளமைக்காலம் - மத்திய வயது - வயதான காலம் - இந்த காலங்களை சுமாராக எவ்வளவு வருடங்களை கணக்கிடலாம். சராசரி வயதாக 60 வருடங்களை வைத்து கணக்கிடலாமா ?? எப்படி கணக்கிடுவது ???

    வாழ்க வளமுடன்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வணக்கம் அய்யா......
    பதிவு அசத்தலாக உள்ளது......
    நன்றி வணக்கம்.....

    ReplyDelete
  14. Ques:-ஒரு கிரகம் தன் வீட்டை பார்பதால் அந்த வீடு பலம் பெரும். அதன் அடிப்படையில் இரண்டுக்கு உடையவன் 8ல் இருந்து பார்ப்பதால் இரண்டாம் வீடு பலம் பெருமா?

    ans:-உடையவன் எங்கே இருந்து தன் வீட்டைப் பார்த்தாலும், அந்த வீடு பலம் பெறும்.


    Ques:-How to find whether Love Marriage will be Success or not?

    Ans: -இருவரில் ஒருவருக்கு புனர்பூ தோஷம் இருக்கக்கூடாது. இரண்டாம் அதிபதி எட்டில் அமர்ந்துள்ள பெண் கணவனுடன் குடும்பம் நடத்தமாட்டாள் (பொது விதி) அவளுடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடியும்.

    அய்யா,

    மேலெ குறீபிட்டுள்ள இர‌ண்டூ கேள்வி, பதிலில் தங்களின் கருத்தை நான் எப்படி எடுத்துக் கொல்வது?

    doubt: கடக லக்ன அதிபதி சந்திரன் ‍ விருச்சிகத்தில் இருக்கிறது( kadaga lagna athipathi chandran - viruchigathil neesam )
    இரண்டு க்கு உடைய ஸூரியன் எட்டாம் வீட்டில் (erandu kku vudaiya suriyan - 8ம் வீட்டிலிருந்து தன் வீட்டை பார்கிறார்.)
    7ம் வீட்டில் குரு வும் neesam - magara guru.

    இது போல் இருக்கும் ஒரு பெண்னின் ஜாதகத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள படி புனர்பூ தோஷம் இருக்கிறதா?

    Mrs .Nagarajan

    ReplyDelete
  15. அருள் சொன்னது
    அதவறு. மீனம் முதல் மிதுனம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - இளமைக்காலம். கடகம் முதல் துலாம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - மத்திய வயது விருச்சிகம் முதல் கும்பம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - வயதான காலம் என்பதுதான் சரியானதாகும்.

    இதற்கு முன்னால் இப்படி சொல்ல மறந்து விட்டீர்களே ஐயா...இப்படி சொல்ல மறந்த விசயங்களெல்லாம் கேள்வி-பதில் பகுதியில் வரும் போலிருக்கிறது///
    இல்லை இத்ற்கு முன்னாடி சொல்லிருக்கிறார்கள் நீங்கள்தான் சரியா படிக்கவில்லை. வாத்தியார் பாடத்தைமட்டும் படிக்க கூடாது அதோட வகுப்பறை பின்னூட்ட கேள்வி பதிலையும் படிங்க சார் எவ்வள்வோ அடிப்படை
    பாடங்களை வலையேற்றி கூட அதை படிக்காமல வருகிற புதியவர்கள் கேட்கும்
    கேள்விக்கும் வாத்தியார் பதில் த்ருகிறார் ரொம்ப கஷ்ட்ட பட்டு திரும்ப திரும்ப படிச்சி மனதில் நிலை நிறுத்த வேண்டும். உங்களை நான் தப்பா சொல்லவில்லை.
    சார் வணக்கம்.
    இன்றையா பாட‌த்திற்க்கு ரொம்ப‌ ந‌ன்றி, என‌க்கு ஜாத‌க‌ புத்த‌க‌ம் வேண்டும் ச‌ர்ர்
    சுந்த‌ரி

    ReplyDelete
  16. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம், அருமையான வரிகள்.
    வாயிருந்தும் வாழ்த்தவில்லை, இளமையான மனம் இருந்தும் நினைக்கவில்லை,
    இதனோடு நீ படைத்த தலையிருந்தும் வணங்கவில்லை,
    காலத்தை வீணாக்கிய எனக்கு, உன்னை வணங்க அருளிருக்க வேண்டாமா?
    இதையும் அவனிடமே கேட்டு விடுவோம்.
    நன்றிகள் குருவே!//////

    ஒகோ..உங்களை நல்ல வண்ணம் படைத்ததைப்போல, அவனை நீங்கள் வணங்குவதற்கும், நன்றிக் கடனோடு இருப்பதற்கும், அவனே அருளியிருக்க வேண்டும் என்கிறீர்களா? ஆமாம்.
    அதுவும் சரிதான். அப்படிச் செய்யாமல் விட்டது அவன் தவறுதான். அவனை மன்னித்து விடுங்கள். வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  17. venkatesan.P said...
    அய்யா,
    கேள்வி பதில் தொடர் மிக சிறப்பாக அமைந்து வருகிறது. நீங்கள் பாடத்தின் துவக்கத்தில் சொல்லும் நெஞ்சை தொட்ட வரிகள் மிக பொருத்தம். நமக்கு எல்லாம் இந்த வாழ்க்கையை அருளிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லாமல் கழிக்கும் ஒவ்வொரு நாளுமே வீணான நாளே.
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்/////

    உணர்ந்தால் சரிதான்!

    ReplyDelete
  18. kannan said...
    ஐயா வணக்கம்.
    " மனம் போல் மாங்கல்யம்!" என்று ஒரு சொலவடை உண்டு என்பது தாங்களுக்கும் அறிந்ததே
    மாணவனின் கேள்வி
    ஒரு ஜீவனின் ஜாதகத்தில் "சந்திரன் " மட்டும் நன்றாக இருக்கும் பட்சத்தில், அந்த ஜீவனின் மனம் மற்றும் ஆத்மசரிரம் நன்றாக இருக்கும் அப்படிதானே பொருள் ஏனெனில் மனம் தானே செயலுக்கு அதிபதி, சரி கதைக்கு வருவோம் மற்ற அமைப்புகள் நன்றாக இல்லாது இருந்து மனத்தால் ( சந்திரனால் ) என்ன பயன் ?
    இங்கு " எண்ணம் போல வாழ்க்கை " என்பது பொய்த்து அல்லவா போகிவிடுகின்றது எமது அருமை ஐயா!///////

    நீங்கள் ஜோதிடத்தையும், கிரகங்களையும், வேதாந்தத்தையும், சரீரத்தையும், மனதையும், ஆன்மாவையும் அவ்வப்போது ஒன்றாக்கி கிண்டி உப்புமாவாக்கி விடுகிறீர்கள். நீங்களே உப்புமா செய்வதோடு, சாப்பிட்டால் ஒன்றும் ஆகாதல்லவா என்று கேட்கிறீர்கள்.

    மனதிற்கு சந்திரன், உடம்பிற்கு சூரியன், ஆன்மாவிற்கு உள்ள கிரகம் எது? சொல்லுங்கள்.

    எண்ணம்போல வாழ முடியாது. முடிந்தால், பல பேர் டாஸ்மாக் கடையை விட்டு (Bar) வெளியே வரமாட்டார்கள்.
    70 விழுக்காடு இன்று குடிப்பழக்கம் உள்ளவர்கள். அவர்களிடம் எதுவும் எடுபடாது!

    ReplyDelete
  19. ///////Jack Sparrow said...
    oru graham vakramaga irundhu. asta varga paralil adhu 7 irundhal . nalladha .. or oru graham vakramaga irundhu paral 2 or lessthanaga irundhal naladha./////

    வக்கிரம் பெற்ற கிரகத்திற்கு எப்படி ஏழு மார்க்குகள் வந்தன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
    யோசித்து, அதற்கான பதிலை எழுதுங்கள்!

    ReplyDelete
  20. ////Arul said...
    தவறு. மீனம் முதல் மிதுனம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - இளமைக்காலம். கடகம் முதல் துலாம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - மத்திய வயது விருச்சிகம் முதல் கும்பம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - வயதான காலம் என்பதுதான் சரியானதாகும்.
    இதற்கு முன்னால் இப்படி சொல்ல மறந்து விட்டீர்களே ஐயா...இப்படி சொல்ல மறந்த விசயங்களெல்லாம் கேள்வி-பதில் பகுதியில் வரும் போலிருக்கிறது. நன்றி////

    ஜோதிடம் பெரிய கடல். அதை மனதில் வையுங்கள்

    ReplyDelete
  21. iyer said...
    தறி கெட்டுப் போன கிரிக்கெட் .இங்கேயும் வந்துட்டதான்னு
    ஒரு நிமிஷம் (படத்தை பார்த்தவுடன்)பார்த்தேன். .
    அட இது தானா . .
    என அப்புறம் யோசித்தேன் ..
    உடையானை பற்றிய செய்தி அருமை என்னுடைய ஜாதகத்தில் அப்படியே பொருந்தி வருகிறது ./////

    நல்லது. நன்றி!.

    ReplyDelete
  22. ///iyer said...
    நெஞ்சை தொட்ட வரிகளில் யாருடைய பாடல் என எப்போதும் குறிப்பிடும் ஆசிரியர்
    இன்றைய பாடலை யார் பாடல் என குறிப்பிடவில்லையே .
    இது அப்பர் (upper) வாக்கு அல்லவா . .
    அதை குறிப்பிட்டுச் சொன்னால் தேவாரத்தை படிக்க வேண்டும் அல்லது கடையில் வாங்கியாவது rockல் அடுக்க வேண்டும் என நினைப்பார்கள் தானே . ./////

    முயன்றவரை போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் சுவாமி!

    ReplyDelete
  23. ////வெட்டிப்பேச்சு said...
    அய்யா, அற்புதமான வரிகள். தாங்கள் இது போன்ற சிறந்த பாடல்கள் குறித்து பதிவுகள் எழுதி தங்கள் விளக்கத்துடன் அதை படிக்க ஆசை.
    என் பதிவிற்கு தங்கள் வருகைக்கு நன்றி.
    அடிக்கடி வரவும்.
    http://vettipaechchu.blogspot.com/2010/09/blog-post_06.html
    மிகுந்த மகிழ்வுடனும் நன்றியுடனும்,
    அன்பன்,
    வேதாந்தி///////

    நல்லது. நன்றி!.

    ReplyDelete
  24. //////சிங்கைசூரி said...
    பத்தாம் வீட்டுக்காரனே சனியாக இருந்தால் what kind of jobs may one end up?//////

    விவசாயம் அல்லது உடல் உழைப்பு மிகுந்த தொழில். அது பொதுவிதி. மற்ற அமைப்புக்களை வைத்து எல்லாம் மாறிவிடும். அது பற்றி பழைய பாடங்களில் நிறைய செய்திகள் உள்ளன. மீண்டும் ஒருமுறை திரும்பப் படியுங்கள்.

    ReplyDelete
  25. ////சிங்கைசூரி said...
    //மீனம் முதல் மிதுனம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - இளமைக்காலம். கடகம் முதல் துலாம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - மத்திய வயது விருச்சிகம் முதல் கும்பம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - வயதான காலம் என்பதுதான் சரியானதாகும் //
    whow today i learnt something , may i know more about this concept, is this topic covered else where in வகுப்பறை ?////

    முன்பு எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் இருக்கும். பாருங்கள்.

    ReplyDelete
  26. Ram said...
    todays question on Job is attracting lot of interest from all.
    if possible shall we take a retake on the lessons on 10th house
    Thanks for the todays answers//////

    ரிடேக் அல்ல ரிவைஸ் என்று சொல்லுங்கள். பழைய பாடங்களில் நிறைய செய்திகள் உள்ளன. மீண்டும் ஒருமுறை திரும்பப் படியுங்கள்.

    ReplyDelete
  27. ஐயா!

    இங்கு ஒரு கருத்தை இந்தசிறியவன்
    சொல்ல விருப்புகின்றேன் ஐயா!

    ஒரு புலவன் சொன்னான்
    " யாம் கண்ட புலவனில் இளங்கோவைப்போல், வள்ளுவனைப்போல், பாரதியைப்போல்"
    இனிமேல் நான் காண்பேனோ? என்று

    அதனைப்போல உடையது நமது ஆன்மிகம் .இந்த இந்து என்ற ஆன்மீக
    ஆலமரத்தின் கிளைகள், இலைகள், இளம் தலைகள், விழுதுகள், மிக சிறிய பழம்கள், அதனில் உள்ள மதுரம்கள், அதனால் பயன் பெரும் எண்ணற்ற உயிர் ஜீவன் இன்னும் சுருக்கமாக சொல்ல போனால் " பிறப்பில் இருந்து மனிதனின் இறப்பு வரைக்கும்"
    நமது கூட வரும் ( நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ) ஆலமரம் போன்றது.

    { இன்றும் கிராமத்தில் மாடுகள் கன்றுகுட்டி போட்டால் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வருமே இளம்கொடி (குடல் மற்ற சதையை) ஆலமரத்தில் கட்டி தொங்க விடும் வழக்கம் உள்ளது.
    இதனை போலதான் சந்தனமும், சவ்வாதும், திரவியமும், தங்க பஸ்பமும் உண்டு உண்டான மனித உடலை எரிக்கும் அல்லது அடக்கம் செய்யும் மயானமும் உள்ளது.
    மாடு கன்றுகுட்டி ஈன்றிவிட்டால் வெந்நீர் வைத்து அதனை ( எமது தாயார் ) குலுப்பாட்டுவதை கண்கூட பார்த்து இருக்கின்றேன் ஐயா.

    சில நபர்கள் நினைக்கலாம் பைத்தியகார தனம் என்று ஆனால்! இங்கு காணப்படுவது பாசம் மட்டுமே . மாடும், கன்றும் தனது நாவால் தடவி கொடுக்குமே! !! அந்த பாசத்திற்கு ஈடு ஏது ஐயா }

    இந்த ஆலமரத்தின் தொடக்கம் வேண்டும் என்றால் அணுவைபோன்ற சிறிய விதையாக இருக்கலாம் ஆனால், ஜோதிடம் முதல் சங்கீதம் தொட்டு எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையது தானே ,

    எல்லாவற்றின் நோக்கமும் " மனிதன் மேன்மை" அடைய தானே ஐயா!

    {உருபா வழிபாடு வேண்டும் என்றால் எமது அப்பன் பழனி யான்டவர் உள்ளார்அப்படி உருப வழிபாடு வேண்டாமா?

    வள்ளாரில் இருந்து திருமூலர் வரைக்கும் எண்ணற்ற சித்த மாகாபுருசர்கள் உள்ளனர்,

    சந்கீததின்மூலம் சங்கரனைபார்தவர்களும் உண்டு அவனது சங்கீத பரதநாட்டியத்தில் பரந்தாமனை உணர்தவர்களும் உண்டு}

    இதனில் யதனை ஐயா பிரிக்க முடியும் . " குஞ்சு மிதித்து கோழிக்கு தான் வலிக்குமா அல்லது கோழி மிதித்து குஞ்சு தான் சாகுமா"

    ஒருவேளை சரிரம் சாகலாம் ஆன்மா சாகுமா ?

    இந்த வகுப்பறைக்கு நம்பிக்கையுடன் வருபர்களுக்கு சேர்த்து தான் ஐயா விளக்கம் கேட்பதும் கூட, நேரம் போக அல்ல ஐயா!

    எமது 8 வகுப்பு ஆசிரியர் திருவாளர் ஐயா ராமதாஸ் அவர்கள் அடிக்கடி சொல்லுவார் "ஆட முடியாதவளுக்கு தெரு கோணலாம்!"

    மற்றவரை பற்றி நமக்கு ஏன் ஐயா கவலை,

    முண்டாசு கவிஞன் மீசைக்காரன் மகா கவி சுப்பிரமணி பாரதி சொன்னது போல

    " மதி கெட்ட மூடரை போல மால்வேன் என்று நினைத்தாயா!"
    என்பது ஆகும்.

    இந்த ஜென்மத்தில் ஒன்றும் முடியாவிட்டாலும் முடிந்தவரைக்கும் மோட்சம் அடைய யாமோ தயார்.

    தங்களால் முடிந்த வரைக்கும் வழியை காட்டுங்கள் இறைவனின் சித்தம் போல் நாங்களும் வருகின்றோம் வாத்தி (யார்) ஐயா.

    ReplyDelete
  28. //சுபக் கிரகங்கள் நன்மைகளை வழங்கும் எல்லா நன்மைகளையும் என்னும்போதுதான் சிக்கல். ஒரே மாத்திரையில் எல்லா நோய்களையும் குணமாக்க முடியமா? ஒரே ரயில் எல்லா ஊர்களுக்கும் போக முடியுமா? எல்லா சக்திகளையும் எல்லா வைட்டமின்களையும் தரக்கூடிய
    ஒரே உணவு உண்டா? அதுபோல எல்லா நன்மைகளையும் வழங்கக்
    கூடிய தனிப்பட்ட கிரகம் எதுவும் இல்லை//

    உபமான் உபமேயம் உங்களூக்குக் கைவந்த கலை அய்யா!ந‌ன்றாக உள்ளது.

    ReplyDelete
  29. ///// ஒகோ..உங்களை நல்ல வண்ணம் படைத்ததைப்போல, அவனை நீங்கள் வணங்குவதற்கும், நன்றிக் கடனோடு இருப்பதற்கும், அவனே அருளியிருக்க வேண்டும் என்கிறீர்களா? /////

    ///ஆமாம்.
    அதுவும் சரிதான். அப்படிச் செய்யாமல் விட்டது அவன் தவறுதான். அவனை மன்னித்து விடுங்கள். வாழ்க வளமுடன்!////

    மன்னிக்கணும், அவனின்றி அணுவும் அசையாது ஏற்ற கருத்தை மனதில் கொண்டும். நாம் அருளப் பட்டிருந்தால் தான் அது போன்றதொரு பாதைக்கு செல்வோம்...... இல்லை என்றால்?.........
    அவன் ஆட்கொள்ள விரும்பினால் அது சூலை, தெப்பம் என்று எதில் தள்ளியாவது ஆட்கொண்டு விடுவான் என்ற அர்த்தத்தில் சொன்னேன். அதற்காக இவ்வளவு பெரிய சாபமா? யார் யாரை மன்னிப்பது...................

    ReplyDelete
  30. T K Arumugam said...
    "" மீனம் முதல் மிதுனம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - இளமைக்காலம். கடகம் முதல் துலாம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - மத்திய வயது விருச்சிகம் முதல் கும்பம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - வயதான காலம் என்பதுதான் சரியானதாகும் ""
    இளமைக்காலம் - மத்திய வயது - வயதான காலம் - இந்த காலங்களை சுமாராக எவ்வளவு வருடங்களை கணக்கிடலாம். சராசரி வயதாக 60 வருடங்களை வைத்து கணக்கிடலாமா ?? எப்படி கணக்கிடுவது ???
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள்////

    எதற்காக சராசரி வயதைக் குறைக்கிறீர்கள்? 75 என்று வைத்துக்கொள்ளுங்கள். 25 + 25 + 25 = 75 என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள் நண்பரே!

    ReplyDelete
  31. /////astroadhi said...
    வணக்கம் அய்யா......
    பதிவு அசத்தலாக உள்ளது......
    நன்றி வணக்கம்.....////

    நல்லது. நன்றி ஆதிராஜ்!

    ReplyDelete
  32. //////rajanblogs said...
    Ques:-ஒரு கிரகம் தன் வீட்டை பார்பதால் அந்த வீடு பலம் பெரும். அதன் அடிப்படையில் இரண்டுக்கு உடையவன் 8ல் இருந்து பார்ப்பதால் இரண்டாம் வீடு பலம் பெருமா?
    ans:-உடையவன் எங்கே இருந்து தன் வீட்டைப் பார்த்தாலும், அந்த வீடு பலம் பெறும்.
    Ques:-How to find whether Love Marriage will be Success or not?
    Ans: -இருவரில் ஒருவருக்கு புனர்பூ தோஷம் இருக்கக்கூடாது. இரண்டாம் அதிபதி எட்டில் அமர்ந்துள்ள பெண் கணவனுடன் குடும்பம் நடத்தமாட்டாள் (பொது விதி) அவளுடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடியும்.
    அய்யா,
    மேலெ குறிப்பிட்டுள்ள இர‌ண்டூ கேள்வி, பதிலில் தங்களின் கருத்தை நான் எப்படி எடுத்துக் கொள்வது?
    doubt: கடக லக்ன அதிபதி சந்திரன் ‍ விருச்சிகத்தில் இருக்கிறது( kadaga lagna athipathi chandran - viruchigathil neesam )
    இரண்டு க்கு உடைய ஸூரியன் எட்டாம் வீட்டில் (erandu kku vudaiya suriyan - 8ம் வீட்டிலிருந்து தன் வீட்டை பார்கிறார்.)
    7ம் வீட்டில் குரு வும் neesam - magara guru.
    இது போல் இருக்கும் ஒரு பெண்னின் ஜாதகத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள படி புனர்பூ தோஷம் இருக்கிறதா?
    Mrs .Nagarajan//////

    நல்ல கேள்வி. இதே கேள்வியை இங்கே பின்னூட்டத்தில் கேட்காமல் மின்னஞ்சல் மூலம் கேளுங்கள். கேள்வி பதில் பகுதியில் பதில் சொல்கிறேன். அனைவர் கண்ணிலும் படும்!

    ReplyDelete
  33. ////sundari said...
    அருள் சொன்னது
    அதுதவறு. மீனம் முதல் மிதுனம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - இளமைக்காலம். கடகம் முதல் துலாம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - மத்திய வயது விருச்சிகம் முதல் கும்பம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - வயதான காலம் என்பதுதான் சரியானதாகும்.
    இதற்கு முன்னால் இப்படி சொல்ல மறந்து விட்டீர்களே ஐயா...இப்படி சொல்ல மறந்த விசயங்களெல்லாம் கேள்வி-பதில் பகுதியில் வரும் போலிருக்கிறது///
    இல்லை இத்ற்கு முன்னாடி சொல்லிருக்கிறார்கள் நீங்கள்தான் சரியா படிக்கவில்லை. வாத்தியார் பாடத்தைமட்டும் படிக்க கூடாது அதோட வகுப்பறை பின்னூட்ட கேள்வி பதிலையும் படிங்க சார் எவ்வள்வோ அடிப்படை பாடங்களை வலையேற்றி கூட அதை படிக்காமல் வருகிற புதியவர்கள் கேட்கும்
    கேள்விக்கும் வாத்தியார் பதில் தருகிறார் ரொம்ப கஷ்ட்ட பட்டு திரும்ப திரும்ப படிச்சி மனதில் நிலை நிறுத்த வேண்டும். உங்களை நான் தப்பா சொல்லவில்லை.
    சார் வணக்கம்.
    இன்றையா பாட‌த்திற்கு ரொம்ப‌ ந‌ன்றி, என‌க்கு ஜாத‌க‌ புத்த‌க‌ம் வேண்டும் சார்
    சுந்த‌ரி/////

    புதிதாக வருகிறவர்கள் பாடங்கள் முழுவதையும் படித்தால், சந்தேகம் வராது. அதற்கு ஆர்வமும் பொறுமையும் வேண்டும்.

    ReplyDelete
  34. kannan said...
    ஐயா!
    இங்கு ஒரு கருத்தை இந்தசிறியவன்
    சொல்ல விருப்புகின்றேன் ஐயா!
    ஒரு புலவன் சொன்னான்
    " யாம் கண்ட புலவனில் இளங்கோவைப்போல், வள்ளுவனைப்போல், பாரதியைப்போல்"
    இனிமேல் நான் காண்பேனோ? என்று
    அதனைப்போல உடையது நமது ஆன்மிகம் .இந்த இந்து என்ற ஆன்மீக
    ஆலமரத்தின் கிளைகள், இலைகள், இளம் தலைகள், விழுதுகள், மிக சிறிய பழம்கள், அதனில் உள்ள மதுரம்கள், அதனால் பயன் பெரும் எண்ணற்ற உயிர் ஜீவன் இன்னும் சுருக்கமாக சொல்ல போனால் " பிறப்பில் இருந்து மனிதனின் இறப்பு வரைக்கும்"
    நமது கூட வரும் ( நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ) ஆலமரம் போன்றது.
    { இன்றும் கிராமத்தில் மாடுகள் கன்றுகுட்டி போட்டால் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வருமே இளம்கொடி (குடல் மற்ற சதையை) ஆலமரத்தில் கட்டி தொங்க விடும் வழக்கம் உள்ளது.
    இதனை போலதான் சந்தனமும், சவ்வாதும், திரவியமும், தங்க பஸ்பமும் உண்டு உண்டான மனித உடலை எரிக்கும் அல்லது அடக்கம் செய்யும் மயானமும் உள்ளது.
    மாடு கன்றுகுட்டி ஈன்றிவிட்டால் வெந்நீர் வைத்து அதனை ( எமது தாயார் ) குளிப்பாட்டுவதைக் கண்கூட பார்த்து இருக்கின்றேன் ஐயா.
    சில நபர்கள் நினைக்கலாம் பைத்தியகாரத்தனம் என்று ஆனால்! இங்கு காணப்படுவது பாசம் மட்டுமே . மாடும், கன்றும் தனது நாவால் தடவி கொடுக்குமே! !! அந்த பாசத்திற்கு ஈடு ஏது ஐயா }
    இந்த ஆலமரத்தின் தொடக்கம் வேண்டும் என்றால் அணுவைபோன்ற சிறிய விதையாக இருக்கலாம் ஆனால், ஜோதிடம் முதல் சங்கீதம் தொட்டு எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையது தானே ,
    எல்லாவற்றின் நோக்கமும் " மனிதன் மேன்மை" அடைய தானே ஐயா!
    {உருவ வழிபாடு வேண்டும் என்றால் எமது அப்பன் பழனியாண்டவர் உள்ளார். அப்படி உருவ வழிபாடு வேண்டாமா? வள்ளலாரில் இருந்து திருமூலர் வரைக்கும் எண்ணற்ற சித்த மாகாபுருசர்கள் உள்ளனர்,
    சங்கீதத்தின்மூலம் சங்கரனைப் பார்த்தவர்களும் உண்டு அவனது சங்கீத பரதநாட்டியத்தில் பரந்தாமனை உணர்ந்தவர்களும் உண்டு}
    இதனில் யதனை ஐயா பிரிக்க முடியும் . " குஞ்சு மிதித்து கோழிக்கு தான் வலிக்குமா அல்லது கோழி மிதித்து குஞ்சு தான் சாகுமா"
    ஒருவேளை சரிரம் சாகலாம் ஆன்மா சாகுமா ?
    இந்த வகுப்பறைக்கு நம்பிக்கையுடன் வருபர்களுக்கு சேர்த்துத்தான் ஐயா விளக்கம் கேட்பதும் கூட, நேரம் போக அல்ல ஐயா!
    எமது 8 வகுப்பு ஆசிரியர் திருவாளர் ஐயா ராமதாஸ் அவர்கள் அடிக்கடி சொல்லுவார் "ஆட முடியாதவளுக்கு தெரு கோணலாம்!"
    மற்றவரை பற்றி நமக்கு ஏன் ஐயா கவலை,
    முண்டாசு கவிஞன் மீசைக்காரன் மகா கவி சுப்பிரமணி பாரதி சொன்னது போல
    " மதி கெட்ட மூடரை போல மாள்வேன் என்று நினைத்தாயா!" என்பது ஆகும்.
    இந்த ஜென்மத்தில் ஒன்றும் முடியாவிட்டாலும் முடிந்தவரைக்கும் மோட்சம் அடைய யாமோ தயார்.
    தங்களால் முடிந்த வரைக்கும் வழியை காட்டுங்கள் இறைவனின் சித்தம் போல் நாங்களும் வருகின்றோம் வாத்தி (யார்) ஐயா.//////

    ஆகா, வாருங்கள். நான் செல்கின்ற நல்வழியை உங்களுக்கும் காட்டுகிறேன்.

    ReplyDelete
  35. ////kmr.krishnan said...
    //சுபக் கிரகங்கள் நன்மைகளை வழங்கும் எல்லா நன்மைகளையும் என்னும்போதுதான் சிக்கல். ஒரே மாத்திரையில் எல்லா நோய்களையும் குணமாக்க முடியமா? ஒரே ரயில் எல்லா ஊர்களுக்கும் போக முடியுமா? எல்லா சக்திகளையும் எல்லா வைட்டமின்களையும் தரக்கூடிய
    ஒரே உணவு உண்டா? அதுபோல எல்லா நன்மைகளையும் வழங்கக்
    கூடிய தனிப்பட்ட கிரகம் எதுவும் இல்லை//
    உபமான் உபமேயம் உங்களூக்குக் கைவந்த கலை அய்யா!ந‌ன்றாக உள்ளது.//////

    சில விஷயங்களை அப்படித்தான் சொல்ல வேண்டியதாக உள்ளது கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  36. //////Alasiam G said...
    ///// ஒகோ..உங்களை நல்ல வண்ணம் படைத்ததைப்போல, அவனை நீங்கள் வணங்குவதற்கும், நன்றிக் கடனோடு இருப்பதற்கும், அவனே அருளியிருக்க வேண்டும் என்கிறீர்களா? /////
    ///ஆமாம்.
    அதுவும் சரிதான். அப்படிச் செய்யாமல் விட்டது அவன் தவறுதான். அவனை மன்னித்து விடுங்கள். வாழ்க வளமுடன்!////
    மன்னிக்கணும், அவனின்றி அணுவும் அசையாது ஏற்ற கருத்தை மனதில் கொண்டும். நாம் அருளப் பட்டிருந்தால் தான் அது போன்றதொரு பாதைக்கு செல்வோம்...... இல்லை என்றால்?.........
    அவன் ஆட்கொள்ள விரும்பினால் அது சூலை, தெப்பம் என்று எதில் தள்ளியாவது ஆட்கொண்டு விடுவான் என்ற அர்த்தத்தில் சொன்னேன். அதற்காக இவ்வளவு பெரிய சாபமா? யார் யாரை மன்னிப்பது...................//////

    விறுப்பு, வெறுப்பு இல்லாதவன் இறைவன். அவனுக்கு எல்லோரும் சமம், வேண்டியவர் வேண்டாவதவர் என்று அவன் யாரையும் பாகுபடுத்திப் பார்ப்பதில்லை. அவன் எல்லோருக்கும்தான் அருள்வான். சிலர் அதைப் பிடித்துக்கொண்டுவிடுகின்றனர். பலர் அதை உணராமலேயே தங்கள் காலத்தை முடித்துக்கொண்டு விடுகின்றனர்

    ”வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல”
    - திருவள்ளூவர்

    சிறு குழந்தை அப்பாவை உதைத்து விளையாடுவதில்லையா? நாம் இறைவனின் குழந்தைகள். அவரைத் திட்டலாம், உதைக்கலாம், மன்னிக்கலாம், ஒன்றும் சொல்ல மாட்டார். நம்மைத் தப்பாகவும் நினைக்க மாட்டார். நினைத்தால் அவர் எப்படி எல்லாம் கடந்தவராக, கடவுளாக இருக்கமுடியும்? சொல்லுங்கள் ஆலாசியம்

    ReplyDelete
  37. என் ஜாதகத்தில் 4 கிரகங்கள் தங்கள் சொந்த வீட்டைப் பார்க்கும் அமைப்பு இருக்கிறது. 2,6,7,8 ஆகிய வீடுகள். பல வகையில் பார்த்தால் இவற்றில் 6ம்,8ம் வீடுகள் பலமாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு வகையில் நல்ல அமைப்பு என்றால் இதுவும் அதன் வகையில் நல்ல அமைப்புதான்.

    ReplyDelete
  38. //////////////
    3, சர்வஅஷ்ட்டக வர்க்கத்தில் (பரல்களின் கூட்டுதொகை) 1 முதல் 4வரை இளமை, 5 முதல் 8வரை மத்திய பருவம்,9ஆம் வீடுமுதல்12ஆம் வீடு வரை வயோதிகம் காலம் என்று பலன் இருப்பதாக படித்துருக்கிறேன் இது சரியா?
    நன்றியுடன்
    அரிபாய்

    தவறு. மீனம் முதல் மிதுனம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - இளமைக்காலம். கடகம் முதல் துலாம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - மத்திய வயது விருச்சிகம் முதல் கும்பம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - வயதான காலம் என்பதுதான் சரியானதாகும்\\\\\\\\\\\\\\\\\\\

    இந்த பாடக் கேள்வி பதில்களில் வயது பற்றியதில் முதல் கட்டமாக மீனம் கொடுக்கப்பட்டது லாஜிக் இல்லாமல் உள்ளதே?மேஷம் என்றால் அல்லவா சரியாக இருக்கும்?என்ன காரணத்தால் இப்படி என்று கொஞ்சம் ஆசிரியர் விளக்குவீர்களா?மேலும் உதாரணத்துக்கு குறைந்த அளவிலே முதல் நான்கு கட்டங்களிலே பரல்கள் இருக்கும் பட்சத்தில் எப்படி இளமைக்காலம் என்பது குறைந்த அளவில் கொள்ள வேண்டும் என்பது எந்த வகையில் சாத்தியம்? இளமைக்காலம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான் என்று கிட்டத்தட்ட 25 -28 வரை என்று கொணாடால் இந்த கணக்கு வித்தியாசமாக உள்ளதே?

    ReplyDelete
  39. /////ananth said...
    என் ஜாதகத்தில் 4 கிரகங்கள் தங்கள் சொந்த வீட்டைப் பார்க்கும் அமைப்பு இருக்கிறது. 2,6,7,8 ஆகிய வீடுகள். பல வகையில் பார்த்தால் இவற்றில் 6ம்,8ம் வீடுகள் பலமாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு வகையில் நல்ல அமைப்பு என்றால் இதுவும் அதன் வகையில் நல்ல அமைப்புதான்./////

    கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  40. ////minorwall said...
    //////////////
    3, சர்வஅஷ்ட்டக வர்க்கத்தில் (பரல்களின் கூட்டுதொகை) 1 முதல் 4வரை இளமை, 5 முதல் 8வரை மத்திய பருவம்,9ஆம் வீடுமுதல்12ஆம் வீடு வரை வயோதிகம் காலம் என்று பலன் இருப்பதாக படித்துருக்கிறேன் இது சரியா?
    நன்றியுடன்
    அரிபாய்
    தவறு. மீனம் முதல் மிதுனம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - இளமைக்காலம். கடகம் முதல் துலாம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - மத்திய வயது விருச்சிகம் முதல் கும்பம்வரை உள்ள பரல்களின் கூட்டுத்தொகை - வயதான காலம் என்பதுதான் சரியானதாகும்\\\\\\\\\\\\\\\\\\\
    இந்த பாடக் கேள்வி பதில்களில் வயது பற்றியதில் முதல் கட்டமாக மீனம் கொடுக்கப்பட்டது லாஜிக் இல்லாமல் உள்ளதே?மேஷம் என்றால் அல்லவா சரியாக இருக்கும்?என்ன காரணத்தால் இப்படி என்று கொஞ்சம் ஆசிரியர் விளக்குவீர்களா?மேலும் உதாரணத்துக்கு குறைந்த அளவிலே முதல் நான்கு கட்டங்களிலே பரல்கள் இருக்கும் பட்சத்தில் எப்படி இளமைக்காலம் என்பது குறைந்த அளவில் கொள்ள வேண்டும் என்பது எந்த வகையில் சாத்தியம்? இளமைக்காலம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான் என்று கிட்டத்தட்ட 25 -28 வரை என்று கொணாடால் இந்த கணக்கு வித்தியாசமாக உள்ளதே? ////////

    மேஷத்தில் இருந்து ஏன் துவங்கவில்லை என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். வேறு ஒருவர் லக்கினத்தில் இருந்து துவங்குதானே முறை என்கிறார். பண்டைய நூல்களில் கொடுக்கப்பட்டதைக் கொடுத்திருக்கிறேன். அதைத் தட்டிக்கேட்பதற்கெல்லாம் வழியில்லை மைனர்!

    சராசரி வயதை 75 ஆகக் கொண்டு பிரித்தால், 25 + 25 + 25 = 75 என்று காலங்கள் வரும். அப்படியே நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள்

    ஒருவர் 48 வயதில் புட்டுக்கொண்டு விடுகிறார். அதாவது டிக்கெட் வாங்கிக்கொண்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் என்றால் அவருக்கும் இதே கணக்கை வைத்துக்கொள்ளலாம். மத்திய வயதிலே போய்விட்டார் என்று மணியடித்துச் சொல்லிவிடலாம்.

    337 வகுத்தல் 3 காலங்கள் = 112.33

    112ற்கு மேல் உள்ள காலங்கள் வளமையாக இருக்கும். மகிழ்ச்சியுடையதாக இருக்கும்

    விளக்கம் போதுமா? இல்லையென்றால் மீண்டும் வருகிறேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com