மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.9.10

எதிர்காலம் பற்றிய நினைப்பே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதிர்காலம் பற்றிய நினைப்பே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.15
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண். 47
ரகுராமன்.
மதுரை
   
Sir,
My DOB:5-12-1963. Time:23:11Hrs and Place: Madurai.

My father mentioned that it is only my horoscope that has made him to explore his knowledge about Astrology. His comments are that my horoscope appears like choicest pre-positioned  one. What ever minuscule of knowledge in this Astrology ocean, it is only due to my father's gift to me.

My doubt:
Vipareetha Raja Yoga (As per Jathaka Phaladeepika): Exchanges between Dhusthana lords and also placement of lords of Dhusthana exactly in them. 
In this regard, my father has shown me the sloka it this work, which mentions that with this yoga, even a poorest person can assume a position which he cannot even dream about. Example is our Super Star Rajinikanth.
As per by Greatest Astrologer of modern days B.V.Raman, that such Lords of Dusthana in their own places is Vichtra Raja Raja Yoga, wherein the native of this horoscope will have no re-birth. In my horoscope, I have 6 - 8 - 12 places occupied by its lords.
In Bala Jothidam Aug'10 Issue, it is mentioned that Vipareetha Raja Yogam is a 
common yoga. When I went through Jagannatha Hora S/W, I observed the 
same with note that such Natives will capitalize on other's loss. I expect your 
esteemed comments please.  
Raghu

உங்களுடைய நீண்ட விளக்கத்திற்கு நன்றி. விசித்திர ராஜ யோகம் என்பது, ஜாதகனுக்கு சிறப்பான நன்மைகளை, அதுவும் ஒரு கஷ்டமான காலகட்டத்திற்குப் பிறகு, அள்ளித்தரும் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். நீங்கள் சுட்டிக்காட்டும் மறுபிறவி இன்மையைப் பற்றித் தெரியவில்லை சுவாமி!
--------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.48
ஏ.ஆர்.பாபுகிருஷ்ணா,
கோலாலம்பூர், மலேசியா
   
ஐயா வணக்கம்,
ஞான ஜாதகம்  4ஆம்வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீடு வலுவாக இருப்பது என்றால் என்ன?

ஒரு வீட்டின் அதிபதி உச்சமாக அல்லது திரிகோண வீடுகளில் அல்லது கேந்திர வீடுகளில் அல்லது சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தால் அவர் வலுவாக இருக்கிறார் என்று பொருள்.

ஒரு வீட்டில் 30 பரல்களுக்கு மேல் இருந்தால் அந்த வீடு 
வலுவாக உள்ளது என்று அர்த்தம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.49
ஏ.ஆர்.பாபுகிருஷ்ணா,
கோலாலம்பூர், மலேசியா
   
ஐயா வணக்கம்,

எட்டாம் வீட்டை பற்றிய தங்களது பாடத்தில் ஏழாம் வீட்டு  
(களத்திரக்கரன்) அதிபதியின் தசா / புத்தி அல்லது  ரெண்டாம் வீட்டு 
(குடும்ப ஸ்தான) அதிபதியின் தசா / புத்தி மரணம் (கண்டம்) ஏற்படும் 
என்று கூறி இருந்தீர்கள். இது விசயமாக அடியேன் எனக்கு ஒரு 
சந்தேகம்  ராகு  தசா / புத்தியில் or கேது  தசா / புத்தியில்  மரணம் 
இல்லையா  ஏனெனில் ராகு, கேது சொந்த வீடு  இல்லையே?

ராகு & கேது இருவருக்கும் சொந்த வீடு இல்லாவிட்டாலும், தாங்கள் குடியிருக்கும் வீட்டையே சொந்த வீடாக்கிக் கொள்வார்கள் என்று பாடம் நடத்தியுள்ளேனே சுவாமி. மறந்துவிட்டீர்களா?

ராகு சனியைப் போல மேக்கப் போட்டுக்கொண்டு (வேஷம் கட்டிக்கொண்டு) காய்களை நகர்த்துவார். காரியங்களைச் செய்வார். கேது செவ்வாயைப்போல மேக்கப் போட்டுக்கொண்டு (வேஷம் கட்டிக்கொண்டு) காய்களை நகர்த்துவார். காரியங்களைச் செய்வார்.

விளக்கம் போதுமா?
----------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.50
குமரன்
   
அன்புடன் வாத்தியார் அவர்களுக்கு எனது கேள்விகள்
1. ராசிக் கற்களால் நன்மை பயக்கும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதை மோதிரம் அல்லது செயினில் ஒரே கல்லாக அணியவேண்டுமா ? அல்லது சிறு சிறு கற்களாகவும் அணியலாமா ? இல்லை வெறும் கற்களை மட்டும் பையில் வைத்துக்கொண்டால் போதுமா? சற்று விளக்கவும்.

கற்களால் அதீதமான நன்மை. ஜாதகத்தையே அது தலை கீழாகப் புரட்டிப்போட்டு, ஜாதகனுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்யும் என்றால், உங்களுக்கும் எனக்கும் சந்தையில் ஒரு கல் கூடக் கிடைக்காது. நாட்டில் இன்று உள்ள பணக்காரர்கள் அனைவரும் அதை வளைத்துப் போட்டு வாங்கி வைத்துவிடுவார்கள். இருப்பதிலேயே பெரிய கற்களாக Top 100 பணக்காரர்களும் வாங்கிப் போட்டுக் கொண்டுவிடுவார்கள்.

கற்கள் உங்கள் ஜாதகப் பலன்களை மாற்றித் தராது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். The precious stones will enhance the benefits.  அவ்வளவுதான் உங்களுக்குக் கிடைக்கப்போவதைக் கூட்டிதரும் உரிய நேரத்தில் தரும். உங்களுக்கு அலைச்சல் இன்றிப் பெற்றுத்தரும். அவ்வளவுதான்!

2. ராசியில் ஒரு கிரகம் நீசமடைந்தும் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருந்தால் அந்த கிரகம் உச்சமான பலனைக் கொடுக்குமா அல்லது நீசமான பலனைக் கொடுக்குமா?

நவாம்சத்தை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம் உங்கள் மொழியில் சொன்னால், magnified version of rasi chart அம்சத்தில் உச்சம் பெற்றுள்ள கிரகம் உச்சத்திற்கான பலனைக் கொடுக்கும். இல்லையென்றால் அது உச்சம் பெற்றதற்கு என்ன அர்த்தம்?

3. ராசியில் உச்சமான கிரகம் வக்ரமடைந்து வர்கோத்தமமும் பெற்றால் அதற்கு என்ன பலனைச் சொல்லலாம்?

குரங்கிற்குக் கள்ளையும் ஊற்றிக் கொடுத்து, கையில் கம்பையும் கொடுத்தால் என்ன ஆகும்? அதுதான் ஆகும்? வக்கிரம் பெற்ற கிரகத்தால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும். அது வர்க்கோத்தமம் அடைந்தால், அந்தப் பாதியிலும் இன்னும் சரிபாதி குறைந்து விடும்.

உங்களுக்கு இன்னும் விளக்கமாகச் சொன்னால், சுபக்கிரகம் நன்றாக ஆட்சி பலத்துடன் இருந்தால் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்றால், அதுவே அக்கிரகத்திற்குப் பகைவீடு என்றால், கிடைக்கும் தொகை பாதியாகக் குறைந்துவிடும். அதாவது ரூ. ஐம்பதாயிரம் மட்டுமே கிடைக்கும். அதே நிலையில் வக்கிரம் பெற்றிருந்தால் அதில் பாதிதான் கிடைக்கும். அதாவது ரூ.இருபத்தையாயிரம் மட்டுமே கிடைக்கும். அதே நிலையில் வர்கோத்தமும் பெற்றிருந்தால் அதுவும் பாதியாகக் குறைந்துவிடும். எல்லாம் உத்தேசமாக உதாரணத்திற்காகச் சொல்லியுள்ளேன். உடனே இதற்குச் சான்று கேட்டு, கம்பைத் தூக்கிக்கொண்டு வராதீர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.51
அனந்தாச்சாரி முரளீதரன்
திண்டிவனம்

My Dear sir,
This mail finds u best of health and cheers.  Recently I heard about you 
througu e mail. I am furnishing below my birth details;  Could u please 
predict my future.

ஒரு வீட்டிற்கு 3 பலன்கள். ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளுக்கும்
சேர்த்து 36 பலன்கள். உட் கேள்விகளையும் சேர்த்துக்கொண்டால்
360 பலாபலன்கள். எதிர்காலம் (future) என்று எதைச் சொல்லச்
சொல்கிறீர்கள்? ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு என்னென்ன
வியாதிகள் உள்ளன என்று கேட்டால் எப்படியிருக்கும்? வியாதியைச்
சொல்லி, அதற்கான மருந்தையல்லவா கேட்க வேண்டும்.
பிரச்சினையைச் சொல்லி அதற்கான தீர்வைக் கேட்பதுதான்
முறையானது. உங்களுக்கு 48 வயது ஆகின்றது. வாழ்க்கையின்
வசந்தகாலம் எல்லாம் முடிந்து விட்டது. அத்துடன்  சுமார் 2/3 பங்கு
காலமும் முடிந்துவிட்டது.  மீதமுள்ள காலத்தை 
சந்தோஷமாக்குங்கள். பொது சேவை  செய்யுங்கள். எதிர்காலம்  
பற்றிய நினைப்பே வராது.

NAME      A. MURALIDHARAN
DATE OF BIRTH : 5TH MARCH  1962
PLACE OF BIRTH : TINIDIVANAM
TIME OF  BIRTH : 5.50 AM 

One of my astrolger told me that kalasarbha dosam is over and need not worry about this.  My question is if the vedic chart is kalasarbha dosam, how it will over? Dont mistake me.  I am confussed so I want to clear my doubts. 
With warm regards
amuralidharan

உங்கள் ஆஸ்தான ஜோதிடர் சொல்லியே நீங்கள் நம்பவில்லை. நான் சொல்லியா நம்பப்போகிறீர்கள்? உங்களுக்கு காலசர்ப்ப தோஷம் முடிந்து 18 வருடங்கள் ஆகின்றன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

40 comments:

  1. //ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு என்னென்ன
    வியாதிகள் உள்ளன என்று கேட்டால் எப்படியிருக்கும்? வியாதியைச்
    சொல்லி, அதற்கான மருந்தையல்லவா கேட்க வேண்டும்.
    பிரச்சினையைச் சொல்லி அதற்கான தீர்வைக் கேட்பதுதான்
    முறையானது.//

    சரியான பதில். என்னிடம் 6 தசைகளையும் கடந்து போனஸ் வருடங்களில் வாழ்ந்துவரும் 85 வயது முதியவர் 'எதிர்கால‌த்தைச் சொல்லு' என்கிறார்.

    "உங்க‌‌ளுக்குப் ப‌ற்க‌ள் மீண்டும் முளைத்துவிடும், முடி மீண்டும் க‌ருத்துவிடும்,ஆண்மை மீண்டும் திரும்பிவிடும்,18 வ‌ய‌துப்பெண்ணைத் திரும‌ண‌ம் செய்வீர்க‌ள், இன்னொரு 85 வ‌ய‌து வாழ்வீர்க‌ள் "என்றேன்.
    "என்ன‌ ந‌க்க‌லா?‌"என்று கேட்டு முறைத்தார்."இல்லை என‌க்கு விக்கல்" என்று சொல்லித் த‌ப்பித்தேன்.

    ReplyDelete
  2. வாத்தியார் ஐயா
    அதிகாலைப்பொழுது வணக்கம்.

    மாணவனே இப்படி ஒரு சந்தேகம் கேட்கின்றான் என்று தாங்கள் நினைக்கவேண்டாம் ஐயா

    ஜாதகம் என்பதை பார்க்காத மக்கள் என்று பார்த்தல் தோராயமாக சுமார் 300,00,00,000 உள்ள இந்த உலகில் மனதிற்கு பிடித்த நபர்களை கல்யாணம் செய்துகொண்டு நல்ல முறையில் ( உலகையே ஆண்ட அல்லது மாபெரும் சாதனைகள் செய்த)பிள்ளை செல்வங்களை பெற்று வாழ்ந்த, வாளுகின்றவர்களை பற்றி வகுப்பிற்கு வரும்

    அனைத்து பெரியவர்களின் "கருத்தினையும் " மற்றும் அறிய ஜோதிடத்தை சராசரி மனிதனை விட நன்கு அறிந்தவர் என்ற முறையிளையும் ,நான் படிக்கும் வகுப்பின் வாத்தியார் என்ற உரிமையுடன் கேட்கின்றேன் ஐயா.

    (எ கா )
    தாங்கள் ஒரு இடத்தில் ஐயன் திருவள்ளுவர் கூறியதை கூறி உள்ளீர்கள்

    மாமிசம் உண்ணுதல் நல்லது அல்ல என்று அப்படி பார்த்தல் மாமிசம் உன்னாதவர்களின் வாழ்க்கை மேன்மை மற்றும் மோட்சம் அடையாமல் அல்லவா போகி இருக்க வேண்டும் ஐயா

    " நதி மூலம் மற்றும் ரிசி மூலம்"! பார்க்க கூடாது என்பார்கள் ஐயா அனைவருக்கும் இதனின் பொருள் நன்றாக அறியும்

    " நதி மூலம் மற்றும் ரிசி மூலம்" பார்க்காமல் நாம் பிறந்து வந்த சமுக
    பண்பாட்டின் படி வெளி இடங்களில் வாழ்ந்து வரும் பொழுது மற்றவர்கள் நம் மீது உள்ள அன்பினால் மற்றும் உண்மை நிலவரத்தைப்பற்றி அறிந்து கொள்ள விபரம் கேட்கும் பொழுது பதில் கூற தெரியவில்லை ஐயா

    காலம் முழுவதும் ஒன்றும் தெரியாமல் வாழுவதை விட தெரிந்து கொள்ளலாம் அல்லவா ஐயா

    அதனால் தான் இந்த பதிவிகூட

    ReplyDelete
  3. /////kmr.krishnan said...
    //ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு என்னென்ன
    வியாதிகள் உள்ளன என்று கேட்டால் எப்படியிருக்கும்? வியாதியைச்
    சொல்லி, அதற்கான மருந்தையல்லவா கேட்க வேண்டும்.
    பிரச்சினையைச் சொல்லி அதற்கான தீர்வைக் கேட்பதுதான்
    முறையானது.//
    சரியான பதில். என்னிடம் 6 தசைகளையும் கடந்து போனஸ் வருடங்களில் வாழ்ந்துவரும் 85 வயது முதியவர் 'எதிர்கால‌த்தைச் சொல்லு' என்கிறார்.
    "உங்க‌‌ளுக்குப் ப‌ற்க‌ள் மீண்டும் முளைத்துவிடும், முடி மீண்டும் க‌ருத்துவிடும்,ஆண்மை மீண்டும் திரும்பிவிடும்,18 வ‌ய‌துப்பெண்ணைத் திரும‌ண‌ம் செய்வீர்க‌ள், இன்னொரு 85 வ‌ய‌து வாழ்வீர்க‌ள் "என்றேன்.
    "என்ன‌ ந‌க்க‌லா?‌"என்று கேட்டு முறைத்தார்."இல்லை என‌க்கு விக்கல்" என்று சொல்லித் த‌ப்பித்தேன்.//////

    எதிர்காலத்தின் மேல் ஆசை வைத்திருப்பவர்களுக்கு வயது வித்தியாசம் கிடையாது. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறார்கள். ஆசையை ஒழித்தால்தான் மகிழ்ச்சி கிடைக்கும் என்பதைப் பலரும் உணர்வதில்லை!

    ReplyDelete
  4. //////kannan said...
    வாத்தியார் ஐயா
    அதிகாலைப்பொழுது வணக்கம்.
    மாணவனே இப்படி ஒரு சந்தேகம் கேட்கின்றான் என்று தாங்கள் நினைக்கவேண்டாம் ஐயா
    ஜாதகம் என்பதை பார்க்காத மக்கள் என்று பார்த்தல் தோராயமாக சுமார் 300,00,00,000 உள்ள இந்த உலகில் மனதிற்கு பிடித்த நபர்களை கல்யாணம் செய்துகொண்டு நல்ல முறையில் ( உலகையே ஆண்ட அல்லது மாபெரும் சாதனைகள் செய்த)பிள்ளை செல்வங்களை பெற்று வாழ்ந்த, வாழுகின்றவர்களை பற்றி வகுப்பிற்கு வரும்
    அனைத்து பெரியவர்களின் "கருத்தினையும் " மற்றும் அறிய ஜோதிடத்தை சராசரி மனிதனை விட நன்கு அறிந்தவர் என்ற முறையிளையும் ,நான் படிக்கும் வகுப்பின் வாத்தியார் என்ற உரிமையுடன் கேட்கின்றேன் ஐயா.
    (எ கா )
    தாங்கள் ஒரு இடத்தில் ஐயன் திருவள்ளுவர் கூறியதை கூறி உள்ளீர்கள்
    மாமிசம் உண்ணுதல் நல்லது அல்ல என்று அப்படி பார்த்தல் மாமிசம் உன்னாதவர்களின் வாழ்க்கை மேன்மை மற்றும் மோட்சம் அடையாமல் அல்லவா போகி இருக்க வேண்டும் ஐயா
    " நதி மூலம் மற்றும் ரிசி மூலம்"! பார்க்க கூடாது என்பார்கள் ஐயா அனைவருக்கும் இதனின் பொருள் நன்றாக அறியும்
    " நதி மூலம் மற்றும் ரிசி மூலம்" பார்க்காமல் நாம் பிறந்து வந்த சமுக
    பண்பாட்டின் படி வெளி இடங்களில் வாழ்ந்து வரும் பொழுது மற்றவர்கள் நம் மீது உள்ள அன்பினால் மற்றும் உண்மை நிலவரத்தைப்பற்றி அறிந்து கொள்ள விபரம் கேட்கும் பொழுது பதில் கூற தெரியவில்லை ஐயா
    காலம் முழுவதும் ஒன்றும் தெரியாமல் வாழுவதை விட தெரிந்து கொள்ளலாம் அல்லவா ஐயா
    அதனால் தான் இந்த பதிவிகூட////

    ஆகா, அவர்களைப்போல திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தலாம். கிடைக்கும் விலங்குகளை எல்லாம் அடித்து, சமைத்துச் சாப்பிடலாம். சோமபானம் அருந்தலாம். எந்தப் பாவத்தை வேண்டுமென்றாலும் செய்யலாம். அதர்மத்திற்குத் துணை போகலாம். பிறன்மனை நோக்கலாம். கடைசியில் பாவ மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம்.

    நமது சித்தாந்தத்தில் பாவ மன்னிப்புக் கிடையாது. “பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும்” என்றார் பட்டினத்தடிகள்

    நமது சித்தாந்தங்களில் நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம்!

    ReplyDelete
  5. சின்னச் சின்ன துன்பமெல்லாம்
    எண்ண எண்ண கூடுமடா
    ஆவதெல்லாம் ஆகட்டுமே
    அமைதி கொள்ளடா
    வண்ண வண்ண கனவுகளை - உன்
    எண்ணமெல்லாம் தூவிவிடு
    திண்ணமுள்ள நெஞ்சம் பெற்று
    வன்மையோடு எதிர்கொண்டு - வரும்
    துன்பம்தனை வென்றிடவே,
    அன்னை சக்தியையே நாடிவிடு!

    கவியரசரின் அற்புதமான தத்துவமேவிய வரிகள்.
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  6. ஜோதிடம் என்னும் விஞ்ஞானத்துடன் மெஞ்ஞானம் கலந்து தரும் அய்யா-வுக்கு நன்றி..

    -மாணவன்.

    ReplyDelete
  7. வகுப்பறையில்
    என்னுடைய பின் ஊட்டங்கள் வருவது இல்லை . .
    தவறு வகுப்பறையில் இல்லை என்பது தெரியும் . .

    என்ன தவறு என்னிடம் எனச் சொன்னால் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும் . .

    அன்பு மாணவர்கள் பாசமுள்ள ஆசிரியர் உதவலாம் என கருதி
    இந்த பின்ஊட்டமாவது வருகிறதா என்ற நோக்கில் எழுதி வைக்கிறேன்.

    மற்ற தோழர் மற்றும் ஆசிரியருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்.

    visuiyer@yahoo.com

    ReplyDelete
  8. ஐயா,
    இன்றைய பதில்கள் அருமை. ஆனால் எனக்குதான் ஒரு பதிலை படித்தால் பல கேள்விகள் எழுகின்றன.
    என்னடா இவன் நிறைய கேள்விகள் கேட்கிறானே என்று தவறாக என்ன வேண்டாம் எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான்
    1. இராகு மற்றும் கேது தீய வீட்டில் இருப்பின் நல்லது என்பது பொது விதி. அவர்கள் தாங்கள் இருக்கும் வீட்டை சொந்த வீடாக்கிக் கொள்வதால் அவர்களும் , திரிகோண வீடுகளில் அமர்வது நல்லது தானே?
    திரிகோண வீட்டின் அதிபதி எப்போதும் சுபராகவே கருதப்படவேண்டும் என்பதும் ஒரு விதி. ஆதலால் அவர்களும் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள் தானே?
    2. அதேபோல் 11-மிட இராகு. ஏன் இவன் மட்டும் அதீத புகழையும் செல்வத்தையும் அளிக்கின்றான்?.
    தமிழத்தின் மிக முக்கிய புள்ளிகளுக்கு இந்த அமைப்பு இருப்பது கவனிக்க தக்கது. தங்கள் கருத்து ஐயா?

    இவன்
    இரா.புரட்சிமணி

    ReplyDelete
  9. //உங்கள் ஆஸ்தான ஜோதிடர் சொல்லியே நீங்கள் நம்பவில்லை. நான் சொல்லியா நம்பப்போகிறீர்கள்?//

    i was reading this in office i couldn't stop laughing :-)

    ReplyDelete
  10. //////Alasiam G said...
    சின்னச் சின்ன துன்பமெல்லாம்
    எண்ண எண்ண கூடுமடா
    ஆவதெல்லாம் ஆகட்டுமே
    அமைதி கொள்ளடா
    வண்ண வண்ண கனவுகளை - உன்
    எண்ணமெல்லாம் தூவிவிடு
    திண்ணமுள்ள நெஞ்சம் பெற்று
    வன்மையோடு எதிர்கொண்டு - வரும்
    துன்பம்தனை வென்றிடவே,
    அன்னை சக்தியையே நாடிவிடு!
    கவியரசரின் அற்புதமான தத்துவமேவிய வரிகள்.
    நன்றிகள் ஐயா!/////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. //////Iyappan said...
    ஜோதிடம் என்னும் விஞ்ஞானத்துடன் மெஞ்ஞானம் கலந்து தரும் அய்யா-வுக்கு நன்றி..
    -மாணவன்./////

    நமது மண்ணிற்கு அவை இரண்டுமே வேண்டும் சாமி!

    ReplyDelete
  12. ////iyer said...
    வகுப்பறையில்
    என்னுடைய பின் ஊட்டங்கள் வருவது இல்லை . .
    தவறு வகுப்பறையில் இல்லை என்பது தெரியும் . .
    என்ன தவறு என்னிடம் எனச் சொன்னால் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும் .
    அன்பு மாணவர்கள் பாசமுள்ள ஆசிரியர் உதவலாம் என கருதி
    இந்த பின்ஊட்டமாவது வருகிறதா என்ற நோக்கில் எழுதி வைக்கிறேன்.
    மற்ற தோழர் மற்றும் ஆசிரியருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்.//////

    நான் வருகின்ற பின்னூட்டங்களை எல்லாம் பதிவிற்கு அவ்வப்போது அனுப்பிவிடுகிறேன். அதிகமாகப் புகழ்ந்து வரும் பின்னூட்டங்களை அங்கேயே பிரேக் அடித்து ஒதுக்கிவிடுவேன். அதிகமாகப் புகழ்ந்து (உங்களை அல்லது என்னை) எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  13. /////R.Puratchimani said...
    ஐயா,
    இன்றைய பதில்கள் அருமை. ஆனால் எனக்குதான் ஒரு பதிலை படித்தால் பல கேள்விகள் எழுகின்றன.
    என்னடா இவன் நிறைய கேள்விகள் கேட்கிறானே என்று தவறாக என்ன வேண்டாம் எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான்
    1. இராகு மற்றும் கேது தீய வீட்டில் இருப்பின் நல்லது என்பது பொது விதி. அவர்கள் தாங்கள் இருக்கும் வீட்டை சொந்த வீடாக்கிக் கொள்வதால் அவர்களும் , திரிகோண வீடுகளில் அமர்வது நல்லது தானே?
    திரிகோண வீட்டின் அதிபதி எப்போதும் சுபராகவே கருதப்படவேண்டும் என்பதும் ஒரு விதி. ஆதலால் அவர்களும் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள் தானே?
    2. அதேபோல் 11-மிட இராகு. ஏன் இவன் மட்டும் அதீத புகழையும் செல்வத்தையும் அளிக்கின்றான்?.
    தமிழத்தின் மிக முக்கிய புள்ளிகளுக்கு இந்த அமைப்பு இருப்பது கவனிக்க தக்கது. தங்கள் கருத்து ஐயா?
    இவன்
    இரா.புரட்சிமணி////////

    தமிழகத்துப்புள்ளிகளை எல்லாம் விட்டு விட்டு, உங்களுக்கு வரும் சந்தேகங்களை Doubt' என்னும் தலைப்பிட்டு தனி மின்னஞ்சலில் அனுப்பிவையுங்கள். பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  14. Dear Sir

    Good Morning Sir.

    All the questions and Answers are good.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  15. /////சிங்கைசூரி said...
    //உங்கள் ஆஸ்தான ஜோதிடர் சொல்லியே நீங்கள் நம்பவில்லை. நான் சொல்லியா நம்பப்போகிறீர்கள்?//
    i was reading this in office i couldn't stop laughing :-)//////

    யதார்த்தமாகத்தான் சொன்னேன் ராசா!

    ReplyDelete
  16. இனிய கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Good Morning Sir.
    All the questions and Answers are good.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  18. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கேள்விகளுக்கான பதில்கள் சிறப்பாக உள்ளது.
    சந்தேகங்கள் அதன் மூலம் நிவர்த்தியகிவிடுகிறது.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-09-01

    ReplyDelete
  19. ////rajesh said...
    இனிய கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள்/////

    வெறும் வாழ்த்துக்கள்தானா? வெண்ணெய் இல்லையா?

    ReplyDelete
  20. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கேள்விகளுக்கான பதில்கள் சிறப்பாக உள்ளது.
    சந்தேகங்கள் அதன் மூலம் நிவர்த்தியகிவிடுகிறது.
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  21. SP.VR. SUBBAIYA said...
    /////Ram said...
    வணக்கம் ஐயா,
    சந்திரன் 2லிலும், குரு 7லிலும் இருந்தால் சட்டாட்ட தோஷம் என கூற கேட்டேன். அதை சிறிது விளக்கினால் நல்லது.//////

    நீங்கள் குறிப்பிடும் ”சட்டாட்ட” என்னும் வார்த்தையில் ஏதோ தவறு உள்ளது. சரியான பதத்தைச் சொல்லுங்கள்

    pls correct the fonts as i cont able to do it from my office computer.

    I heared that if moon in 2nd place and guru in 7 the place in the horoscope, then they will become 6th and 8th from each other and they will make the Jathagan;s life with lots of ups and downs. Can u if possible pls explain the combination with benefits and limitations, if already u mentioned in earlier lessons pls give the link for the same. as i could not able to find it.

    ReplyDelete
  22. நமது சித்தாந்தத்தில் பாவ மன்னிப்புக் கிடையாது. “பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும்” என்றார் பட்டினத்தடிகள்

    நமது சித்தாந்தங்களில் நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம்!///

    good answer

    ReplyDelete
  23. ////Blogger Ram said...
    SP.VR. SUBBAIYA said...
    /////Ram said...
    வணக்கம் ஐயா,
    சந்திரன் 2லிலும், குரு 7லிலும் இருந்தால் சட்டாட்ட தோஷம் என கூற கேட்டேன். அதை சிறிது விளக்கினால் நல்லது.//////
    நீங்கள் குறிப்பிடும் ”சட்டாட்ட” என்னும் வார்த்தையில் ஏதோ தவறு உள்ளது. சரியான பதத்தைச் சொல்லுங்கள்
    pls correct the fonts as i cont able to do it from my office computer.
    I heared that if moon in 2nd place and guru in 7 the place in the horoscope, then they will become 6th and 8th from each other and they will make the Jathagan;s life with lots of ups and downs. Can u if possible pls explain the combination with benefits and limitations, if already u mentioned in earlier lessons pls give the link for the same. as i could not able to find it.////

    நீங்கள் குறிப்பிடும் இரண்டு கிரகங்களுமே சுபக்கிரகங்கள். இரண்டும் சேரும்போது குரு மங்கள யோகம், இரண்டும் ஒன்றையொன்று பார்க்கும்போது கஜகேசரி யோகம் போன்ற யோகங்கள் ஜாதகனுக்குக் கிடைக்கும்.
    இரண்டும் அஷ்ட சஷ்டமத்தில் (அதாவது 6/8 நிலையில்) இருந்தால் அது அவயோகம்தான். இரண்டும் பாட்டிங்கில் சொதப்பிவிடும். ஸேவக்கும் டெண்டூல்கரும் ஒன்றாகச் சேர்ந்து ஆடாமல் சொதப்பினால் எப்படியிருக்கும்?

    ReplyDelete
  24. ////Blogger Uma said...
    நமது சித்தாந்தத்தில் பாவ மன்னிப்புக் கிடையாது. “பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும்” என்றார் பட்டினத்தடிகள்
    நமது சித்தாந்தங்களில் நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம்!///
    good answer///

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  25. கண்ணா! கார்முகில் மோகண்ணா ! காதலின் மணிவண்ணா
    கருமை நிறத்தை உடையதால் கண்ணன் ஆனாயோ
    இல்லை மற்றவரை கந்தர்வ கண்களால் கவர்ந்ததலாலையோ!

    பிறந்ததோ ஒரு வயிற்றில் - நீ
    உதைத்து வளர்ந்ததோ மற்றொரு வயிற்றில்
    இரு தாய்களின் (ஆண்) பிள்ளை கனவை மெய்யாக்கியவன்
    உனது தாய்மாமனின் ஆணவத்தை மண்ணோடு மன்னாகியவன்.

    நீ பிறந்ததோ கொடும் சிறையில்
    நீ வளர்ந்ததோ மாபெரும் அன்புச் சிறையில்
    ம்மா! ம்மா! என்று அழைக்க பசுக்களை மேயத்தாய் பிள்ளை பருவத்தில்
    கண்ணா! கண்ணா! என்று கோபியர் மோகிக்க வளந்தாய்
    விடலைபருவதில்

    தயிரும் வெண்ணையும் திருடியதோ அறியாத வயதில்
    மற்றவர்களின் வெள்ளை மனதை திருடியதோ நீ அறிந்த வயதில்

    இரு தாய்களின் கண்ணீருக்காக குழந்தையானாய்
    இளம் கோபிய கண்ணியருக்காக மோகன்னனும் ஆனாய்
    மாமியின் துயர் கண்ணீருக்காக தூதுவிம் போனாய்
    உடன் பிறவா தங்கைக்காக போர்களமும் போனாய்!

    பள்ளி தோழனுக்காக தோலும் கொடுத்தாய்
    உன்னை மட்டுமே படித்த பாண்டுரங்கனுக்கு காட்சியும் கொடுத்தாய்
    நீ பிறந்ததோ அஷ்டமியில்
    நீ வளர்ந்ததோ அதிஸ்டம் இன்மையில்

    ஆயர் குல சிறுவர்களுடன் நீ ஆடியவன்
    அன்னை யசோதாவின் அன்பைமட்டுமே சாடியவன்
    யதுகுலம் நோக்கி ஓடியவன், அன்பை மட்டுமே பாடியவன்

    எல்லோரின் மனதை திருடியதால் உன்னை " கள்வன்" என்பதா!
    கருணையே வடிவம்மான உன்னை "கருணை"வடிவம் என்பதா!

    உனக்கு நிகர் நீயே "கண்ணா"! உனக்கு நிகர் நீயே தான் "கண்ணா"!

    ReplyDelete
  26. /////kannan said...
    கண்ணா! கார்முகில் மோகண்ணா ! காதலின் மணிவண்ணா
    கருமை நிறத்தை உடையதால் கண்ணன் ஆனாயோ
    இல்லை மற்றவரை கந்தர்வ கண்களால் கவர்ந்ததலாலையோ!
    பிறந்ததோ ஒரு வயிற்றில் - நீ
    உதைத்து வளர்ந்ததோ மற்றொரு வயிற்றில்
    இரு தாய்களின் (ஆண்) பிள்ளை கனவை மெய்யாக்கியவன்
    உனது தாய்மாமனின் ஆணவத்தை மண்ணோடு மன்னாகியவன்.
    நீ பிறந்ததோ கொடும் சிறையில்
    நீ வளர்ந்ததோ மாபெரும் அன்புச் சிறையில்
    ம்மா! ம்மா! என்று அழைக்க பசுக்களை மேயத்தாய் பிள்ளை பருவத்தில்
    கண்ணா! கண்ணா! என்று கோபியர் மோகிக்க வளர்ந்தாய் விடலைபருவதில்
    தயிரும் வெண்ணையும் திருடியதோ அறியாத வயதில்
    மற்றவர்களின் வெள்ளை மனதை திருடியதோ நீ அறிந்த வயதில்
    இரு தாய்களின் கண்ணீருக்காக குழந்தையானாய்
    இளம் கோபிய கண்ணியருக்காக மோகனனும் ஆனாய்
    மாமியின் துயர் கண்ணீருக்காக தூதும் போனாய்
    உடன் பிறவா தங்கைக்காக போர்க்களமும் போனாய்!
    பள்ளி தோழனுக்காக தோளும் கொடுத்தாய்
    உன்னை மட்டுமே படித்த பாண்டுரங்கனுக்கு காட்சியும் கொடுத்தாய்
    நீ பிறந்ததோ அஷ்டமியில்
    நீ வளர்ந்ததோ அதிர்ஸ்டம் இன்மையில்
    ஆயர் குல சிறுவர்களுடன் நீ ஆடியவன்
    அன்னை யசோதாவின் அன்பைமட்டுமே சாடியவன்
    யதுகுலம் நோக்கி ஓடியவன், அன்பை மட்டுமே பாடியவன்
    எல்லோரின் மனதை திருடியதால் உன்னை " கள்வன்" என்பதா!
    கருணையே வடிவம்மான உன்னை "கருணை"வடிவம் என்பதா!
    உனக்கு நிகர் நீயே "கண்ணா"! உனக்கு நிகர் நீயே தான் "கண்ணா"!/////

    கோகுலாஷ்டமிக்கு சிக்கனமாகப் பாட்டுடன் முடித்துவிட்டீர்களே?
    வெண்ணெய், அதிரசம், சீடை, நெய் முறுக்கு எல்லாம் கிடையாதா?

    ReplyDelete
  27. Good evening sir,
    Thanks for today lesson. Lesson is very nice. Happy krishna Jayanthi to u sir and all brothers and sisters.
    sundari

    ReplyDelete
  28. குருவும் சந்திரனும் சேர்ந்தால் குரு சந்திர யோகம் என்பார்கள். குரு மங்கள யோகம் என்பது குருவும் செவ்வாயும் சேர்ந்தால் வருவது. ராம் அவர்களின் கேள்விக்கு தாங்கள் சொன்ன பதிலை மேற்கோள் காட்டி சொல்கிறேன். நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு என்று சொல்ல மாட்டேன். திருத்திக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

    ReplyDelete
  29. ///////////
    ////Blogger Ram said...
    SP.VR. SUBBAIYA said...
    /////Ram said...
    வணக்கம் ஐயா,
    சந்திரன் 2லிலும், குரு 7லிலும் இருந்தால் சட்டாட்ட தோஷம் என கூற கேட்டேன். அதை சிறிது விளக்கினால் நல்லது.//////
    நீங்கள் குறிப்பிடும் ”சட்டாட்ட” என்னும் வார்த்தையில் ஏதோ தவறு உள்ளது. சரியான பதத்தைச் சொல்லுங்கள்
    pls correct the fonts as i cont able to do it from my office computer.
    I heared that if moon in 2nd place and guru in 7 the place in the horoscope, then they will become 6th and 8th from each other and they will make the Jathagan;s life with lots of ups and downs. Can u if possible pls explain the combination with benefits and limitations, if already u mentioned in earlier lessons pls give the link for the same. as i could not able to find it.////

    நீங்கள் குறிப்பிடும் இரண்டு கிரகங்களுமே சுபக்கிரகங்கள். இரண்டும் சேரும்போது குரு மங்கள யோகம், இரண்டும் ஒன்றையொன்று பார்க்கும்போது கஜகேசரி யோகம் போன்ற யோகங்கள் ஜாதகனுக்குக் கிடைக்கும்.
    இரண்டும் அஷ்ட சஷ்டமத்தில் (அதாவது 6/8 நிலையில்) இருந்தால் அது அவயோகம்தான். இரண்டும் பாட்டிங்கில் சொதப்பிவிடும். ஸேவக்கும் டெண்டூல்கரும் ஒன்றாகச் சேர்ந்து ஆடாமல் சொதப்பினால் எப்படியிருக்கும்?
    //////////
    Dear Sir,

    Your lesson was nice......

    I heard about SAKATA yoga will give bad effects.But if guru in angular (kendra place) then one more yoga will form.The yoga name is "KALYANA SAKATA YOGA" and it will cancel the SAKATA YOGA effects.
    This yoga i have seen in the below website:
    www.yogaballchair.com/philosophical-astrology-some-important-yogas

    thanks sir......

    ReplyDelete
  30. வாத்தியார் ஐயா

    கண்ண பரமாத்வாவின் பிராமண குல நண்பன் வறுமையின் பிடியில் சிக்கி உழன்று தட்டு தடுமாறி தனது இல்லாளின் அறியுரையால் பால்யகால நண்பன் ஆனகண்ணனை
    கானவரும்பொழுது தனக்கு என்று இருந்த ஒரே துண்டில் நெல்லை இடித்து அவிழாக கொண்டு வந்தாராம்.

    இதனை எல்லாம் அறிந்த மாயக்கண்ணன் கேட்டாராம் எனது அண்ணி எனக்கு என்று ஒன்றுமே கொடுத்து விடவில்லையா என்றாராம் அப்பொழுது பிராமனகுல கண்ணனின் நண்பன் கூட்சபட்டுகொண்டு தான் கொண்டு வந்த அவிலை கண்ணில் காட்டியதுதான் மிச்சமாம் அதனை வெடுக்கு என்று பிடிங்கி ஆவலோடு உண்டாராம் கிருஷ்ணபரமாத்மா .

    வெண்ணெய், அதிரசம், சீடை, நெய் முறுக்கு எல்லாம் கிடையாதா?

    வாத்தியார் ஐயாவிற்கு கொடுக்கத்தான்
    ஆசை ஆனால்? நாம் இருவருக்கும் உள்ளதூரமோ சுமார் 3,200 KM

    மேலும் 1,777 + 1 (தாங்கள் ) தங்களையும் சேர்த்து அனைத்து மாணவர்களின் முகவரியையும் தாருங்கள் பார்சல் மூலம் அனுப்பி வைத்துவிடலாம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஐயா.

    ஏனெனில் மற்ற மாணவர்களை பார்க்கவைத்து குரு என்பதால் தங்களுக்கு மட்டும் தர மனம் வரவில்லை ஏனெனில் நானோ தங்களின் மாணவனாட்சே:-)))

    ReplyDelete
  31. // கற்கள் உங்கள் ஜாதகப் பலன்களை மாற்றித் தராது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்//

    பொட்டில் அடித்து உணரவைத்திருக்கிறீர்கள்.

    பத்து விரல்களுக்கும் பத்துவித கல் அணிந்து
    பத்தாது என காதிலும் தோடணிந்து
    பைத்தியமான நிலையில்
    வைத்தியரைத் தேடுகின்ற உலகம் இது.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  32. ////sundari said...
    Good evening sir,
    Thanks for today lesson. Lesson is very nice. Happy krishna Jayanthi to u sir and all brothers and sisters.
    sundari/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  33. ///ananth said...
    குருவும் சந்திரனும் சேர்ந்தால் குரு சந்திர யோகம் என்பார்கள். குரு மங்கள யோகம் என்பது குருவும் செவ்வாயும் சேர்ந்தால் வருவது. ராம் அவர்களின் கேள்விக்கு தாங்கள் சொன்ன பதிலை மேற்கோள் காட்டி சொல்கிறேன். நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு என்று சொல்ல மாட்டேன். திருத்திக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.////

    slip of tongue மாதிரி slip in the writing. மாற்றி வாசித்துக் கொள்ள வேண்டுகிறேன். சுட்டிக்காடியமைக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  34. rama said...
    நீங்கள் குறிப்பிடும் இரண்டு கிரகங்களுமே சுபக்கிரகங்கள். இரண்டும் சேரும்போது குரு மங்கள யோகம், இரண்டும் ஒன்றையொன்று பார்க்கும்போது கஜகேசரி யோகம் போன்ற யோகங்கள் ஜாதகனுக்குக் கிடைக்கும்.
    இரண்டும் அஷ்ட சஷ்டமத்தில் (அதாவது 6/8 நிலையில்) இருந்தால் அது அவயோகம்தான். இரண்டும் பாட்டிங்கில் சொதப்பிவிடும். ஸேவக்கும் டெண்டூல்கரும் ஒன்றாகச் சேர்ந்து ஆடாமல் சொதப்பினால் எப்படியிருக்கும்?
    //////////
    Dear Sir,
    Your lesson was nice......
    I heard about SAKATA yoga will give bad effects.But if guru in angular (kendra place) then one more yoga will form.The yoga name is "KALYANA SAKATA YOGA" and it will cancel the SAKATA YOGA effects.
    This yoga i have seen in the below website: www.yogaballchair.com/philosophical-astrology-some-important-yogas
    thanks sir......//////

    நானும் எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் உள்ளது.

    ReplyDelete
  35. //////kannan said...
    வாத்தியார் ஐயா
    கண்ண பரமாத்வாவின் பிராமண குல நண்பன் வறுமையின் பிடியில் சிக்கி உழன்று தட்டு தடுமாறி தனது இல்லாளின் அறியுரையால் பால்யகால நண்பன் ஆனகண்ணனை
    கானவரும்பொழுது தனக்கு என்று இருந்த ஒரே துண்டில் நெல்லை இடித்து அவிழாக கொண்டு வந்தாராம்.
    இதனை எல்லாம் அறிந்த மாயக்கண்ணன் கேட்டாராம் எனது அண்ணி எனக்கு என்று ஒன்றுமே கொடுத்து விடவில்லையா என்றாராம் அப்பொழுது பிராமனகுல கண்ணனின் நண்பன் கூட்சபட்டுகொண்டு தான் கொண்டு வந்த அவிலை கண்ணில் காட்டியதுதான் மிச்சமாம் அதனை வெடுக்கு என்று பிடிங்கி ஆவலோடு உண்டாராம் கிருஷ்ணபரமாத்மா .
    வெண்ணெய், அதிரசம், சீடை, நெய் முறுக்கு எல்லாம் கிடையாதா?
    வாத்தியார் ஐயாவிற்கு கொடுக்கத்தான்
    ஆசை ஆனால்? நாம் இருவருக்கும் உள்ளதூரமோ சுமார் 3,200 KM
    மேலும் 1,777 + 1 (தாங்கள் ) தங்களையும் சேர்த்து அனைத்து மாணவர்களின் முகவரியையும் தாருங்கள் பார்சல் மூலம் அனுப்பி வைத்துவிடலாம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஐயா
    ஏனெனில் மற்ற மாணவர்களை பார்க்கவைத்து குரு என்பதால் தங்களுக்கு மட்டும் தர மனம் வரவில்லை ஏனெனில் நானோ தங்களின் மாணவனாச்சே:-)))

    நல்லது. ஒரு நகைச்சுவைக்காக அப்படி எழுதினேன். வேறு ஒன்றுமில்லை. இடையில் உள்ள தூரம் எனக்குத் தெரியாதா என்ன? நன்றி!

    ReplyDelete
  36. //////sury said...
    // கற்கள் உங்கள் ஜாதகப் பலன்களை மாற்றித் தராது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்//

    பொட்டில் அடித்து உணரவைத்திருக்கிறீர்கள்.

    பத்து விரல்களுக்கும் பத்துவித கல் அணிந்து
    பத்தாது என காதிலும் தோடணிந்து
    பைத்தியமான நிலையில்
    வைத்தியரைத் தேடுகின்ற உலகம் இது.
    சுப்பு ரத்தினம்.///////

    உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி சுப்பு ரத்தினம் சார்!

    ReplyDelete
  37. vithiyai mathiyal vella mudiyium. Adhavadhu mathiyil iraivanai ninaithu nadanthukonde vandhal,namma mathi(iraivan) paarthukolvan...
    i hope thats why tehy say " vithiyai mathiyaal velalam endru" .

    ReplyDelete
  38. /////Jack Sparrow said...
    vithiyai mathiyal vella mudiyium. Adhavadhu mathiyil iraivanai ninaithu nadanthukonde vandhal,namma mathi(iraivan) paarthukolvan...
    i hope thats why tehy say " vithiyai mathiyaal velalam endru" .////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  39. அய்யா !,
    நான் தங்கள் நெடுநாளைய மாணவன் . முரனாவரி யோகத்தை பற்றி கூற முடியுமா ?. எங்கு தேடினும் இதை பற்றி தகவல் இல்லை !
    நன்றி . முரளி கிருஷ்ணா .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com