மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.9.10

அறஞ்செய விரும்பலாமா? கூடாதா? - பகுதி.2

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அறஞ்செய விரும்பலாமா? கூடாதா? - பகுதி.2
மனவளக் கட்டுரை - பகுதி.2

ஒரு கதை சொல்வார்கள். கதைதான் - யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சான்று கேட்டுத் தொல்லைப்படுத்த வேண்டாம்.

பதினெட்டு வயது நிரம்பிய ஒரு அழகானபெண்ணையும், பத்து லட்சம் டாலர் பணத்தையும் ஒருவரிடம் கொடுத்து மூன்று மாதம் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் என்ன ஆகும்?

ஒரு பிரெஞ்சுக்காரரிடம் கொடுத்தால், பணம் பத்திரமாக இருக்கும். ஆனால் பெண் இருக்காது. மூன்று மாதங்களுக்குள் பெண்ணை சுவைத்து விடுவார் என்பார்கள்.

ஒரு ரஷ்யரிடம் கொடுத்தால், பெண் பத்திரமாக இருப்பாள், ஆனால் பணத்தைக் கையாண்டு விடுவார் என்பார்கள்..

ஒரு சீனரிடம் கொடுத்தால் இரண்டையுமே ருசி பார்த்துவிடுவார் என்பார்கள்.

ஆனால் ஒரு பிரிட்டீஷ்காரரிடம் கொடுத்தால் இரண்டுமே பத்திரமாக இருக்கும் என்பார்கள்..

இது பழைய நிலமை. இப்போது எப்படி என்று தெரியாது. பண வீக்கத்தால் கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே இன்று கெட்டுப்போயிருக்கின்றன.

இதன் ஒரிஜினல் கதை நம் நாட்டில் உள்ள சில சமூகங்களை வைத்துச் சொல்லப்பட்டிருக்கும். அதை அப்படியே எழுதி, புயலைக் கிளப்ப வேண்டாம் என்றுதான் கதையை மாற்றியிருக்கிறேன்.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசியக் குணம் உண்டு.

அமெரிக்காவின் தேசியக் குணம் Discipline!

ஜப்பானின் தேசியக் குணம் சுறுசுறுப்பு!

சீனாவின் தேசியக் குணம் உழைப்பு!

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தியாவின் தேசியக் குணம் எது?

இரண்டு உள்ளது. நல்ல குணம் ஒன்றும் தீய குணம் ஒன்றும் உள்ளது.

நல்ல குணம்: சகிப்புத்தன்மை: தீய குணம்: சுய நலம்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குழுவாக 200 அமெரிக்கர்கள் தென் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தார்கள். ஒரு மாத சுற்றுலாப் பயணத்திற்குப் பிறகு நிறைவு நாள் அன்று, இந்திய சுற்றுலாத்துறை, அவர்கள் அனைவருக்கும் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் விருந்தளித்துச் சிறப்பித்தது.

பல இந்தியப் பத்திரிக்கையாளர்களும் அதில் கலந்து கொண்டார்கள்.

பத்திரிக்கையாளர்களின் பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொன்னார்கள். அதில் முக்கியமான இரண்டு கேள்வி பதிலை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.

கேள்வி:   "இந்தியாவில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன?"
பதில்:   "இந்தியன் பியர், சிகரெட்டுகள் (Beer & Cigarettes) மற்றும் இந்திய மக்களின் சகிப்புத்தன்மை."

கேள்வி:   "இந்தியாவில் உங்களுக்குப் பிடிக்காதது என்ன?"
பதில்:   "மக்களின் சுயநலம்"

எது எப்படியிருந்தால் என்ன என்னும் ஏனோதானோத்தனம். ரோடுகளின் நிலைமை, குடிநீரின் அவலம், மின்வெட்டு என்று எதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலைப் படாமல் தாங்கள் உண்டு, தங்கள் வேலை உண்டு என்று இருக்கும் மக்களின் சுயநலத்தை வைத்து அவர்கள் அப்படிச் சொன்னார்கள்.

அது உண்மைதான். கிராமங்களில் சொல்வார்கள்: “நரி வலம் போனால் என்ன? அல்லது இடம்போனால் என்ன? நம்மீது விழுந்து, நம்மைப் பிடுங்காமல் இருந்தால் சரி”

பெரும்பான்மையான மக்களிடம் அந்தக் குணம்தான் இன்று உள்ளது!
---------------------------------------------------------------------------------
நமக்குக் கடவுள் கொடுத்த வரம்: சகிப்புத்தன்மை. (வடிவேலைப்போல என்ன நடந்தாலும் சகித்துக்கொள்வோம்)

நமக்குக் கடவுள் கொடுத்த சாபம்: சுயநலம்.

சகிப்புத்தன்மை அனைவரும் அறிந்ததே. இப்பொது சுயநலத்தை சற்று விரிவு படுத்திப்பார்ப்போம்.

சுயநலம் மூன்று வகைப்படும்

1. ஒரு வேலையைச் செய்யும் முன்பு, அதில் என் பங்கு என்ன என்று தெரிந்து கொண்டு அந்த வேலையைச் செய்வது. அதாவது அந்த வேலையைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு அதைச் செய்வது.

2. நான் உமி கொண்டு வருகிறேன். நீ அவல் கொண்டுவா. இரண்டையும் கலந்து, ஒரு இடத்தில் அமர்ந்து, இருவரும் ஊதி ஊதி அதைத் தின்போம் என்னும் போக்கு. அதாவது ஒரு வேலையை நான் கொஞ்சமாகச் செய்வேன். அதிகமான பலன் எனக்குக் கிடைக்க வேண்டும் என்னும் போக்கு.

3. ”தலை விழுந்தால் நான் ஜெயித்தேன். பூ விழுந்தால் நீ தோற்றாய்” என்று வார்த்தை ஜாலத்தில் ஏமாற்றிச் சொல்லி ஒரு வேலையைச் செய்யும் நிலைமை. அதாவது தலை விழுந்தாலும் நான்தான் ஜெயிப்பேன். பூ விழுந்தாலும் நான்தான் ஜெயிக்க வேண்டும் என்னும் வக்கிர மனப்பான்மை.
--------------------------------------------------------------------------------
இந்தச் சுயநலம் சில இடங்களில் தலை காட்டும். சில இடங்களில் தலைகாட்டாது. சிலரிடம் அப்பட்டமாகக் காணப்படும். சிலர் அதைச் சாமர்த்தியமாக மறைத்து நடப்பார்கள்.

சுயநலம் இல்லாத மனிதர்களே கிடையாது. அது இருக்க வேண்டிய அளவு இருந்தால் நல்லது. அளவு ஒரு எல்லையைத் தாண்டும்போதுதான் சிக்கல்.

பணம், பெண்டாட்டி, பிள்ளைகள் என்று அதாவது தான், தன் குடும்பம் என்று ஒரு வட்டத்திற்குள் பலர் இன்றுவாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் தாய் தகப்பனைக்கூடக் கண்டு கொள்வதில்லை. கேட்டால், “நான் ஒருவன் மட்டும்தான் பிறந்தேனா? வீட்டில் மற்ற பிள்ளைகளுக்கு இல்லாத அக்கறை எனக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும்?” என்று நம்மையே எதிர்க் கேள்வி கேட்பார்கள்.

பச்சை இலை அனைத்தும் ஒரு நாள் பழுத்த இலையாக மாறும். அதற்கு அடுத்து சருகாக மாறும். அதற்கு அடுத்து மரத்தைவிட்டு உதிரும். அந்த இயற்கையின் விதிதான் நமக்கும். நமக்கும் ஒரு நாள் வயதாகும். நமக்கும் அதே நிலைமை வராது என்பது என்ன நிச்சயம் என்று ஒருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதுதான் அவலம்!

ஒரு கூடை மாம்பழம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆசாமி அப்படியே கொண்டுபோய் வீட்டிற்குள் வைத்துவிடுவான். அக்கம் பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு இரண்டு பழங்களைக்கூடக் கொடுக்க மாட்டான். அவன் வீட்டு அம்மணியும், அதை அப்படியே வைத்திருந்து, வேளா வேளைக்குப் பத்துப் பழங்கள் வீதம் வெட்டி, தன் அன்புக் கணவனுக்கும், அருமைப் பிள்ளைகளூக்கும் ஊட்டோ ஊட்டு என்று ஊட்டி மகிழ்வாள்.

வேண்டிய அளவு மாம்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, “கண்ணில் ஆடும் மாங்கனி, கைகளில் ஆடாதோ” என்னும் புரட்சித்  தலைவரின்
பாடல் வரிகளைக்  கேட்டபடி நம் ஆசாமி பகலிலேயே  தூங்க ஆரம்பித்துவிடுவான்.

அப்படி உலகையே மறந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது, இரண்டு டேங்கர் லாரிகள் மோதிக் கொண்டதைப் போன்ற படு பயங்கரமான சத்தம் கேட்க எழுந்து உட்கார்ந்து விடுவான்.

சத்தம் வந்தது தொலைக்காட்சியில். அத்துடன் தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரில் உட்காரந்து அக்காட்சியை ரசித்துக் கொண்டிருக்கும், மனைவி, மக்களின் கரவொலி வேறு!

ஆசாமி எழுந்து உட்கார்ந்து எரிச்சல், மற்றும் கோபம் மேலிடக் காட்டுக்கத்தாகக் கத்துவான்: “சனியன்களா, சவுண்டைக் குறையுங்கள். அல்லது டி.வியை அணைத்துவிட்டு, எங்காவது தொலையுங்கள். மனிதனை ஒரு அரை மணி நேரமாவது நிம்மதியாகத் தூங்க விடுகிறீர்களா”

இது சுய நலத்தின் அடுத்தகட்டம் அல்லது அடுத்த வட்டம். தனக்கு என்று வரும்போது, பெண்டாட்டி பிள்ளைகள் கூட சனியன்கள் ஆகிவிடுவார்கள்.

தனக்கு ஒரு கேடு வரும்போது, தேவதையாக இருக்கும் மனைவிகூட பிசாசாகத் தோற்றமளிப்பாள். ‘ராசாத்தி’ என்று அன்பொழுகக் கூப்பிட்டவளைக்கூட,  ‘சனியனே’  என்று கூப்பிடத் தயங்க மாட்டான்.

அதுதான் சுயநலத்தின் உண்மையான தன்மை!

ஏன் அப்படி?

கவியரசர் கண்ணதாசன் இரண்டு வரிகளில் அதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.

“பாதி மனதில் தெய்வமிருந்து பார்த்துக்கொண்டதடா
மீதி மனதில் மிருகமிருந்து ஆட்டிவைத்ததடா”


(தொடரும்)

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், என்னுடைய தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் அடுத்த பகுதிகள் அடுத்த வாரம், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் வரும். இடையில் வேறு பாடங்கள். பொறுத்திருந்து படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

38 comments:

  1. மாசே! நமஸ்காரம்

    Posted by SP.VR. SUBBAIYA to வகுப்பறை at Thursday, September 16, 2010 5:01:00 PM

    தாங்கள் கூறுவது என்னவோ உண்மைதான் மாசே!

    எதனையுமே எதிர்பார்க்காமல் means ஜாதகத்தை, ஜாதக பொருத்தத்தை thavira

    {ex ... 20 ஜாதகம் வரை வந்ததில் அதில் சரியாக பொருந்தகூடிய தோஷம் உள்ள ஜாதகம் என 3 எண்ணமும் அடங்கும்.
    அனைத்தையும் ஜோதிடரிடம் கொடுத்தும்,கார்த்திகை 20 க்கு ( Dec 6, 2010 ) மேல் வரும் ஜாதகத்தை கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டார்.இந்தகொடுமையை
    எங்கு போகி சொல்ல மாஷே!}

    ஆனாலும் பாருங்கோ மிக அரிதாக கிடக்க கூடிய ஒரு வாய்ப்பு தாயிடம் இருந்து ரெஸ்க் எடுக்க பயம்
    ok
    அது என்ன வென்று தானே கேட்கின்றீர்கள்?

    உனக்கு எவளை பிடித்து உள்ளதோ அவளை கட்டி கொண்டு வா என்பது

    கண்ணதாசனிடம் அவர்களின் தாயார் கேட்டார்களாம் நிறைய பெண்களின் போட்டோவை காண்பித்துக்கொண்டு எந்த பொண்ணு பிடித்து உள்ளது என்று அதற்க்கு அவர் சொன்னாராம் எல்லா பெண்களுமே என்று

    மேற்கண்ட கூற்று போல் அல்லவா எல்லோரையும் பிடித்து உள்ளது :-))

    எந்த நாட்டை (உள்நாடு அன்ட் வெளிநாடு) பெண்ணை தேர்ந்து எடுப்பது என்பதில் இருந்து :-)))

    ********

    எதையும் எதிர்பார்க்காமலா? நோ சான்ஸ். எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால் அவன் கடவுளாகிவிடுவான்!

    ReplyDelete
  2. மாஷே!

    Posted by minorwall to வகுப்பறை at Thursday,September 16,2010 2:49:00 PM

    என் கையைக் கட்டிப் போட்ட மாதிரி என்னால் சில எனக்கு விருப்பமான விஷயங்களில் ஈடுபடமுடியாத காலகட்டம்.Finance flow கொஞ்சம் கம்மி..
    அதுனாலே ப்ரீ டைம் அதிகம் கிடைக்குது..இல்லேன்னா இங்கெல்லாம் எட்டிப் பார்க்கவே நேரம் கிடைக்குமோ என்னவோ?
    >>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<

    தாங்கள் சொல்லி உள்ளது தான் அனைவரின் நிலைமைகூட
    தங்களுடைய நகைசுவைநடை, உடை, பாவனை, ஒத்த வயது இதனால் தான் மேலும் நகைசுவைக்காக அவ்வாறு சொல்ல தோணியது ஒழிய மற்றது அல்ல! எம்முடைய ஜாதகம் கூட தங்களிடம் உண்டு அல்லவா?

    மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூட ஒவ்வொரு மாட்சியிலும் ஒரு கலக்கலான சம்பவம் நிகழ்த்த தான் பார்கின்றார். ஆனால், சிலநேரம் கைகூடும் சிலநேரம் தங்களுக்கே தெரியும் என்ன ஆகும் என்று.

    ஒருபக்கம் பார்த்தீர்கள் என்றால் உலகையே வெற்றி வாகை சூட புறப்பட்ட அலக்ஸாண்டர் எழுப்பு கூடுகள் முசியுயத்தில் அம்பேல் என்று

    மற்றொரு பக்கம் பார்த்தீர்கள் என்றால்
    வாழ்க்கை முழுவதும் மற்றவரின் உழைப்பில் வாழ்க்கை ஓட்டிய பாமரனின் எலும்புகூடு கூட

    இதனில் நாம் எதனை எடுக்க அன்ட் ஒதுக்க minorwaal
    தலைவா!
    ************
    வாத்தியாரோ, உண்மைத்தமிழனோ இல்லே,ஒட்டுமொத்த கிளாஸ் ரூமுமே சொன்னாலுமே இந்தக் கதையெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது..

    டெய்லி வந்து ஏதோ ரெண்டு கமெண்ட் அடிச்சோமா?கலாய்ச்சோமா?..............

    ReplyDelete
  3. //இந்தச் சுயநலம் சில இடங்களில் தலை காட்டும். சில இடங்களில் தலைகாட்டாது. சிலரிடம் அப்பட்டமாகக் காணப்படும். சிலர் அதைச் சாமர்த்தியமாக மறைத்து நடப்பார்கள்.

    சுயநலம் இல்லாத மனிதர்களே கிடையாது. அது இருக்க வேண்டிய அளவு இருந்தால் நல்லது. அளவு ஒரு எல்லையைத் தாண்டும்போதுதான் சிக்கல்.//

    சுயந‌லத்தைச் சாமர்த்தியமாக மறைப்பவர்களாலேயே அதிகத் தொல்லை.அதிலும் தான் செய்வது எல்லாம் சமூகத்திற்கான தன்னலமற்ற உழைப்பு என்று வேறு விளம்பரம் வேறு செய்து கொள்வார்கள்.நெருங்கிப் பார்த்தால் தன் மனைவி மக்கள் பேரன் பேத்தி(சேர்த்துக்கொண்ட பெண்மணியின் குடுமபம்) வரை எல்லோரும் 100 தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடக் கூடிய வசதியை பொது வேலைகளில் இருந்து எப்படி பெற்றுக்கொள்வது என்பதை ஒரு கலையாகவே கற்றுவைத்து உள்ளார்கள்.

    எல்லாவற்றையும் அந்த பழனி ஆண்டவன் பார்த்துக்கொண்டுதான் உள்ளான்.
    அவன் வேலுக்கு எப்போது வேலை கொடுப்பானோ?

    ReplyDelete
  4. ஆசிரியரே வணக்கம்.

    விஸ்வநாதா வேலை வேண்டும்!
    House of Profession
    தலைப்பு - பத்தாம் வீடு!

    6.
    பத்தாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் நீதித்துறை, சிறைச்சாலைகள், மருத்துவமனைகள்
    ஆகிய ஒன்றில் பணி செய்யநேரிடும்.

    இந்த அமைப்பு அதாவது பத்தாம் வீட்டு அதிபதி ஆறில் வந்து அமர்வது - சொந்தத் தொழிலிற்கும், வணிகம் செய்வதற்கும் ஏற்றதல்ல. ஜாதகன் வேலைக்குச் செல்வது உத்தமம். அதில் அவன்
    வளர்ச்சியடைவான்.உங்கள் மொழியில்
    சொன்னால் வெற்றி பெறுவான்.

    ?

    இல்லாளின் ஜாதக அமைப்பில் சொந்தமாக தொழில் செய்யும் அமைப்பு இருப்பின் இல்லறதாலை முதலாளியாக ஆக்கிக்கொண்டு தலைவன் ஊழியனாக வேலை
    செய்தால் முன்னேற்றம் ஏற்படுமா?
    வெற்றி பெறுவானா? ஆசானே!

    ReplyDelete
  5. ////சுயநலம் இல்லாத மனிதர்களே கிடையாது. அது இருக்க வேண்டிய அளவு இருந்தால் நல்லது. அளவு ஒரு எல்லையைத் தாண்டும்போதுதான் சிக்கல்//////
    உலகநலம்-நாட்டுநலம்-ஊர்நலம்- பெரிய உள்ளம் கொண்ட மா மனிதர்களுக்கு மாத்திரம்.

    இனநலம்(இது நம்மாளு அவன் வாழ்ந்தால் போதும் என்று அருவா தூக்கிறது மரத்த வெட்டிறது பூர்வீகத்த தேடிபிடுச்சு பல காரணம் சொல்லி புறம் தள்ளுறது) - குடும்பநலம்- சுயநலம்..கடுகுள்ளம் கொண்டோருக்கு மாத்திரம்.

    தாங்கள் கூறியதுபோல் வாழ்க்கை என்கிற விருந்து சுவைக்க சுயநலம் ஊறுகாயாய் இருந்தால் நன்றே!
    நன்றிகள் ஆசிரியரே!

    ReplyDelete
  6. நம் மக்களிடம் இருப்பது சுயநலம் மற்றொன்று சகிப்புத்தன்மை என்கிறீர்கள். முதல் குணம் சரி. சுயநலம் இல்லாத பிறவியே கிடையாது. ஒருசிலர் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம், இருக்கிறார்கள். மற்றொரு குணத்துக்கு சகிப்புத்தன்மை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது சுயநலத்தின் விரிவாக்கம்தான். தன்னை பாதிக்காத வரையில் மனிதன் எதையும் கண்டு கொள்வதில்லை. ஆபத்துத் தன் வீட்டுக் கதவைத் தட்டுகிறது எனும்போது மட்டும் சற்று முணுமுணுப்பான். கோழைத்தனத்துக்கு மறுபெயர்தான் சகிப்புத் தன்மை. வங்காளிகள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பார்கள். சிறு தவறைக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. பொங்கி எழுந்துவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்றா பொருள். பொறுத்துக்கொள்ளக்கூடியவற்றைப் பொறுத்துக் கொள்ளலாம், தவறு என்றால் பொங்கி எழத்தான் வேண்டும். கோழைத்தனத்துக்கு வேறு பெயரிட்டு நம்மை உயர்த்திக் கொள்ளும் இயல்பு தவறு. சரிதானே! என் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தயைகூர்ந்து மன்னித்து விடுங்கள்.

    ReplyDelete
  7. ////"இடஒதுக்கீட்டுச் சலுகை மூலம் டாக்டர் பட்டம் பெற்று பல லட்சம் சம்பாதித்தவர், தனது மகனுக்கும் இடஒதுக்கீட்டில் டாக்டர் படிப்புக்கு இடம்பெற்று, பல கோடி சம்பாதித்து, இப்போது பேத்திக்கும் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் இடம்பெறுவார் என்றால், அதே சமூகத்தின் இரு குடும்பங்களின் பலனை அவர் தட்டிப் பறிப்பதாகத்தானே அர்த்தம்? இப்படிப்பட்டவரை ஏன் "கிரீமி லேயர்' என்று கருதி, சலுகைகள் பெறுவதைத் தடுக்கக்கூடாது?"/////
    நன்றி தினமணி...
    (இது வேறு வித சுயநலம்,
    ஆனா எல்லாம் இதுக்குள்ள தான் அடக்கம்!)

    கொளவி சுத்தியது நின்னுபோய்
    கல்லு சுத்துது...
    நாம சுத்தி சுத்தி பேசின
    போன் (தொலை பேசி) போயி அதுவும் இப்ப
    நம்மக் கூடவே சுத்துது....
    ஆனா இந்த சமூக நீதி மட்டும்
    செக்கு மாடு மாதிரி அங்கேயே சுத்துது...

    திறமைசாலி எல்லாம் உலகம் சுத்துறான்....

    ReplyDelete
  8. Thanjavooraan said...
    /////பொறுத்துக்கொள்ளக்கூடியவற்றைப் பொறுத்துக் கொள்ளலாம், தவறு என்றால் பொங்கி எழத்தான் வேண்டும். கோழைத்தனத்துக்கு வேறு பெயரிட்டு நம்மை உயர்த்திக் கொள்ளும் இயல்பு தவறு. சரிதானே!//////
    சரிதான்! சரிதான்!! சரிதான்!!! நானும் உங்கள் பக்கம் தான். உலகத்தில் நிறையப்பேர் வேறுமாதிரி இருப்பதால், நம்மோடு நெருங்க சிரமப் படுகிறார்கள். அதனால் என்ன உயிரல்ல, உண்மைதான் பெரிது.... உரக்கச் சொல்வோம்.
    சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
    எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
    கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
    கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ
    நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
    நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
    ராஜகோபால் சார்.....அதனாலே நீங்கள் பாரதி பயிலகத்தின் இயக்குனர்.
    மற்றவரின் இயலாமையை, சகிப்பு தன்மையோடு எதிகொள்வோம்.
    நன்றி ஆசிரியரே!

    ReplyDelete
  9. அய்யா,
    இன்றைய உலகில் சுயநலம் இல்லாமல் இருக்க மனிதனால் முடியுமா என்று வினா எழுப்பினால் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சுயநலத்தின் அளவு மிக அதிகமாக தற்போது இருக்கிறது. அது தான் இன்றைய சமுதாயத்தின் சீர்கேடு. எப்போது நம் நாட்டில் கூட்டு குடும்ப அமைப்பு சீர் குலைந்ததோ அன்றே இதற்கான விதை விதைக்கப் பட்டு விட்டது. காலம் எல்லாவற்றிற்கும் மருந்து தர வல்லது. அந்த காலம் வரும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  10. good morning sir.......

    very nice lesson .....thank you sir........

    ReplyDelete
  11. மாஷே!

    Alasiam G said...
    Friday, September17,2010 6:55:00 AM

    திறமைசாலி எல்லாம் உலகம் சுத்துறான்....

    அர்த்தநாரிஸ்வரர் ஆலயத்தில் சுமார் 15 வருடத்திற்கு முன்னர் கேட்டது மாஷே
    கலியுகத்தை எப்படி அறிந்துகொள்வது

    ONLY LIVE SHOW

    நேற்றோ இன்றோ எழுதபட்டசாஸ்திரம்
    அல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோர்களால் இன்றைய nikaivikalai படம்பிடித்து காட்டபட்ட உண்மை! உண்மை காட்சி தொடர்

    நேரடியான உண்மையான விதி

    1. தமக்கை போகி அக்காள் வீடு புகுவாள்
    ௨. கற்புள்ளவர்கள் எல்லாம் சிறிது சிறுதாக கற்பை இழப்பர்
    ௩. அந்தணன் சாஸ்திரம் மறந்து அரிசி வியாபாரம் செய்யான்
    ௪. சூத்திரன் நாட்டை ஆள்வான்
    ௫.வர்ண கலப்பு உண்டாகும்
    6. ulakam enthiramayam aakum

    kmr.krishnan sir chonnathu போல vara வேண்டி ஆள் வராமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ஏனென்னில்
    விலைக்கோ , பரிதாபதாலோ , களவாடகூடியாது, புண்ணியத்தாலோ கூட கிடைக்காத ஒன்று உள்ளது. அதுதான் சிறப்பு தன்மை வாயிந்த ( ஜாதக ) கட்டம்கள்.

    ReplyDelete
  12. நன்றி அய்யா,

    சில நேரங்களின் நான் பொறாமைப்படுகிறேன் சுயநலமாய் இருக்கிறேன் என்று எனக்கே தெரிந்தும் அதில் இருந்து வெளிவரமுடியாமல் வேதனைப்பட்டு இருக்கிறேன். அந்த மாதிரி சமயங்களில் என்னை அந்த தீய எண்ணங்களில் இருந்து விடுவிப்பது எவ்வாறு ?

    ReplyDelete
  13. Dear Sir

    Manavazha katturai Arumai Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  14. சுயநலமில்லாதவர் இருக்கின்றனரா என தேடிப்பார்த்தேன் . .
    ஒருவரை கண்டு கொண்டேன் . .
    அவரை எங்கு பார்த்தீர்கள் என கேட்பது புரிகிறது . .

    அவரை நான் பார்த்தேன் . .
    அவரோடு பேசியும் பார்த்தேன் . .

    ஆம் . .

    ReplyDelete
  15. Katturai padikka migavum nantraga irunthadhu.suyanalam illatha manithane illai. irukka vendum but alavu meeri irukka goodathu. Nantri.

    ReplyDelete
  16. /////kannan said...
    மாசே! நமஸ்காரம்
    Posted by SP.VR. SUBBAIYA to வகுப்பறை at Thursday, September 16, 2010 5:01:00 PM
    தாங்கள் கூறுவது என்னவோ உண்மைதான் மாசே!
    எதனையுமே எதிர்பார்க்காமல் means ஜாதகத்தை, ஜாதக பொருத்தத்தை thavira
    {ex ... 20 ஜாதகம் வரை வந்ததில் அதில் சரியாக பொருந்தகூடிய தோஷம் உள்ள ஜாதகம் என 3 எண்ணமும் அடங்கும்.
    அனைத்தையும் ஜோதிடரிடம் கொடுத்தும்,கார்த்திகை 20 க்கு ( Dec 6, 2010 ) மேல் வரும் ஜாதகத்தை

    கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டார்.இந்தகொடுமையை
    எங்கு போய்ச் சொல்ல மாஷே!}
    ஆனாலும் பாருங்க மிக அரிதாக கிடக்க கூடிய ஒரு வாய்ப்பு தாயிடம் இருந்து ரிஸ்க் எடுக்க பயம்
    ok அது என்ன வென்று தானே கேட்கின்றீர்கள்?
    உனக்கு எவளை பிடித்து உள்ளதோ அவளை கட்டி கொண்டு வா என்பது
    கண்ணதாசனிடம் அவர்களின் தாயார் கேட்டார்களாம் நிறைய பெண்களின் போட்டோவை

    காண்பித்துக்கொண்டு எந்த பொண்ணு பிடித்து உள்ளது என்று அதற்க்கு அவர் சொன்னாராம் எல்லா

    பெண்களுமே என்று
    மேற்கண்ட கூற்று போல் அல்லவா எல்லோரையும் பிடித்து உள்ளது :-))
    எந்த நாட்டை (உள்நாடு அன்ட் வெளிநாடு) பெண்ணை தேர்ந்து எடுப்பது என்பதில் இருந்து :-)))
    ******** எதையும் எதிர்பார்க்காமலா? நோ சான்ஸ். எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால் அவன் கடவுளாகிவிடுவான்!///////

    மாசே என்றால் என்ன? மாசேதுங்கா? எல்லோரையும் பிடித்த பிறகு அதில் என்ன பிர்ச்சினை? எவ(ள்)ர் சம்மதிக்கிறாரோ, அவரின் கரத்தைப் பற்ற வேண்டியதுதானே? படுக்கை அறையில் எல்லா தேசமும் ஒன்றுதான்!

    ReplyDelete
  17. //////kannan said...
    மாஷே!
    Posted by minorwall to வகுப்பறை at Thursday,September 16,2010 2:49:00 PM
    என் கையைக் கட்டிப் போட்ட மாதிரி என்னால் சில எனக்கு விருப்பமான விஷயங்களில் ஈடுபடமுடியாத

    காலகட்டம்.Finance flow கொஞ்சம் கம்மி..
    அதுனாலே ப்ரீ டைம் அதிகம் கிடைக்குது..இல்லேன்னா இங்கெல்லாம் எட்டிப் பார்க்கவே நேரம்

    கிடைக்குமோ என்னவோ?
    >>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<
    தாங்கள் சொல்லி உள்ளது தான் அனைவரின் நிலைமைகூட
    தங்களுடைய நகைசுவைநடை, உடை, பாவனை, ஒத்த வயது இதனால் தான் மேலும் நகைசுவைக்காக

    அவ்வாறு சொல்ல தோணியது ஒழிய மற்றது அல்ல! எம்முடைய ஜாதகம் கூட தங்களிடம் உண்டு அல்லவா?
    மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூட ஒவ்வொரு மாட்சியிலும் ஒரு கலக்கலான சம்பவம் நிகழ்த்த தான்

    பார்கின்றார். ஆனால், சிலநேரம் கைகூடும் சிலநேரம் தங்களுக்கே தெரியும் என்ன ஆகும் என்று.
    ஒருபக்கம் பார்த்தீர்கள் என்றால் உலகையே வெற்றி வாகை சூட புறப்பட்ட அலக்ஸாண்டர் எழும்புக் கூடுகள் முசியுயத்தில் அம்பேல் என்று மற்றொரு பக்கம் பார்த்தீர்கள் என்றால்
    வாழ்க்கை முழுவதும் மற்றவரின் உழைப்பில் வாழ்க்கை ஓட்டிய பாமரனின் எலும்புகூடு கூட
    இதனில் நாம் எதனை எடுக்க அன்ட் ஒதுக்க minorwaal
    தலைவா!/////
    ************

    அதற்குப் பெயர்தான் தலை எழுத்து! நீங்கள் எதையும் எடுக்க வேண்டாம். அதுவாக வந்து சேரும்!

    ReplyDelete
  18. /////kmr.krishnan said...
    //இந்தச் சுயநலம் சில இடங்களில் தலை காட்டும். சில இடங்களில் தலைகாட்டாது. சிலரிடம் அப்பட்டமாகக்

    காணப்படும். சிலர் அதைச் சாமர்த்தியமாக மறைத்து நடப்பார்கள்.
    சுயநலம் இல்லாத மனிதர்களே கிடையாது. அது இருக்க வேண்டிய அளவு இருந்தால் நல்லது. அளவு ஒரு

    எல்லையைத் தாண்டும்போதுதான் சிக்கல்.//
    சுயந‌லத்தைச் சாமர்த்தியமாக மறைப்பவர்களாலேயே அதிகத் தொல்லை.அதிலும் தான் செய்வது எல்லாம்

    சமூகத்திற்கான தன்னலமற்ற உழைப்பு என்று வேறு விளம்பரம் வேறு செய்து கொள்வார்கள்.நெருங்கிப் பார்த்தால்

    தன் மனைவி மக்கள் பேரன் பேத்தி(சேர்த்துக்கொண்ட பெண்மணியின் குடுமபம்) வரை எல்லோரும் 100

    தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடக் கூடிய வசதியை பொது வேலைகளில் இருந்து எப்படி பெற்றுக்கொள்வது

    என்பதை ஒரு கலையாகவே கற்றுவைத்து உள்ளார்கள்.
    எல்லாவற்றையும் அந்த பழனி ஆண்டவன் பார்த்துக்கொண்டுதான் உள்ளான்.
    அவன் வேலுக்கு எப்போது வேலை கொடுப்பானோ?/////

    முன்பு சூரசம்ஹாரம் நடத்திய வேலன், இனி நடத்த வேண்டியது சூரர்கள் சம்ஹாரம். நாட்டில் ஆயிரக்கணக்கான ஆசாமிகள் இருக்கிறார்கள்!

    ReplyDelete
  19. ////kannan said...
    ஆசிரியரே வணக்கம்.
    விஸ்வநாதா வேலை வேண்டும்!
    House of Profession
    தலைப்பு - பத்தாம் வீடு!
    6.
    பத்தாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் நீதித்துறை, சிறைச்சாலைகள், மருத்துவமனைகள்
    ஆகிய ஒன்றில் பணி செய்யநேரிடும்.
    இந்த அமைப்பு அதாவது பத்தாம் வீட்டு அதிபதி ஆறில் வந்து அமர்வது - சொந்தத் தொழிலிற்கும்,

    வணிகம் செய்வதற்கும் ஏற்றதல்ல. ஜாதகன் வேலைக்குச் செல்வது உத்தமம். அதில் அவன்
    வளர்ச்சியடைவான்.உங்கள் மொழியில்
    சொன்னால் வெற்றி பெறுவான்.?
    இல்லாளின் ஜாதக அமைப்பில் சொந்தமாக தொழில் செய்யும் அமைப்பு இருப்பின் இல்லறதாலை

    முதலாளியாக ஆக்கிக்கொண்டு தலைவன் ஊழியனாக வேலை
    செய்தால் முன்னேற்றம் ஏற்படுமா?
    வெற்றி பெறுவானா? ஆசானே!/////

    முதலில் ஒரு பெண்ணைப் பிடித்துக் கட்டிக்கொள்ளுங்கள். பாதி வெற்றி கிடைத்துவிடும். மற்றதை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்!

    ReplyDelete
  20. ///Alasiam G said...
    ////சுயநலம் இல்லாத மனிதர்களே கிடையாது. அது இருக்க வேண்டிய அளவு இருந்தால் நல்லது. அளவு ஒரு

    எல்லையைத் தாண்டும்போதுதான் சிக்கல்//////
    உலகநலம்-நாட்டுநலம்-ஊர்நலம்- பெரிய உள்ளம் கொண்ட மாமனிதர்களுக்கு மாத்திரம்.
    இனநலம்(இது நம்மாளு அவன் வாழ்ந்தால் போதும் என்று அருவா தூக்கிறது மரத்த வெட்டிறது பூர்வீகத்த

    தேடிபிடுச்சு பல காரணம் சொல்லி புறம் தள்ளுறது) - குடும்பநலம்- சுயநலம்..கடுகுள்ளம் கொண்டோருக்கு

    மாத்திரம்.
    தாங்கள் கூறியதுபோல் வாழ்க்கை என்கிற விருந்து சுவைக்க சுயநலம் ஊறுகாயாய் இருந்தால் நன்றே!
    நன்றிகள் ஆசிரியரே!/////

    ஊறுகாயும் அப்பளமும் உடலுக்கு ஊறு விளைவிக்கக்உடியவை! முடிந்தவரை ஒதுக்கிவிடுவது நல்லது:-)))))

    ReplyDelete
  21. /////Thanjavooraan said...
    நம் மக்களிடம் இருப்பது சுயநலம் மற்றொன்று சகிப்புத்தன்மை என்கிறீர்கள். முதல் குணம் சரி. சுயநலம்

    இல்லாத பிறவியே கிடையாது. ஒருசிலர் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம், இருக்கிறார்கள். மற்றொரு

    குணத்துக்கு சகிப்புத்தன்மை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது சுயநலத்தின் விரிவாக்கம்தான். தன்னை

    பாதிக்காத வரையில் மனிதன் எதையும் கண்டு கொள்வதில்லை. ஆபத்துத் தன் வீட்டுக் கதவைத் தட்டுகிறது

    எனும்போது மட்டும் சற்று முணுமுணுப்பான். கோழைத்தனத்துக்கு மறுபெயர்தான் சகிப்புத் தன்மை. வங்காளிகள்

    உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பார்கள். சிறு தவறைக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. பொங்கி

    எழுந்துவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்றா பொருள்.

    பொறுத்துக்கொள்ளக்கூடியவற்றைப் பொறுத்துக் கொள்ளலாம், தவறு என்றால் பொங்கி எழத்தான் வேண்டும்.

    கோழைத்தனத்துக்கு வேறு பெயரிட்டு நம்மை உயர்த்திக் கொள்ளும் இயல்பு தவறு. சரிதானே! என் கருத்தை

    ஏற்றுக்கொள்ளாதவர்கள் தயைகூர்ந்து மன்னித்து விடுங்கள்./////

    கல்லானாலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன் என்று சகித்துக்கொண்டு வாழ்க்கை நடத்தும் லட்சக்கணக்கான பெண்களுக்கு இருப்பது சுத்தனான சகிப்புத்தன்மை! அதைச் சுயநலத்தின் விரிவாக்கம் என்று தள்ள முடியாது சார்!

    ReplyDelete
  22. ////Alasiam G said...
    ////"இடஒதுக்கீட்டுச் சலுகை மூலம் டாக்டர் பட்டம் பெற்று பல லட்சம் சம்பாதித்தவர், தனது மகனுக்கும்

    இடஒதுக்கீட்டில் டாக்டர் படிப்புக்கு இடம்பெற்று, பல கோடி சம்பாதித்து, இப்போது பேத்திக்கும் இடஒதுக்கீட்டின்

    மூலம் மருத்துவச் சேர்க்கையில் இடம்பெறுவார் என்றால், அதே சமூகத்தின் இரு குடும்பங்களின் பலனை அவர்

    தட்டிப் பறிப்பதாகத்தானே அர்த்தம்? இப்படிப்பட்டவரை ஏன் "கிரீமி லேயர்' என்று கருதி, சலுகைகள்

    பெறுவதைத் தடுக்கக்கூடாது?"/////
    நன்றி தினமணி...
    (இது வேறு வித சுயநலம்,
    ஆனா எல்லாம் இதுக்குள்ள தான் அடக்கம்!)
    குழவி சுத்தியது நின்னுபோய் கல்லு சுத்துது...
    நாம சுத்தி சுத்தி பேசின போன் (தொலை பேசி) போயி அதுவும் இப்ப நம்மக் கூடவே சுத்துது....
    ஆனா இந்த சமூக நீதி மட்டும் செக்கு மாடு மாதிரி அங்கேயே சுத்துது...
    திறமைசாலி எல்லாம் உலகம் சுத்துறான்..../////

    எங்கே சுத்தினாலும் கடைசியில் அங்கேதான் வந்து சேரவேண்டும். வெட்டியானின் அலுவலகத்திற்கு!;-))))

    ReplyDelete
  23. /////Alasiam G said...
    Thanjavooraan said...
    /////பொறுத்துக்கொள்ளக்கூடியவற்றைப் பொறுத்துக் கொள்ளலாம், தவறு என்றால் பொங்கி எழத்தான்

    வேண்டும். கோழைத்தனத்துக்கு வேறு பெயரிட்டு நம்மை உயர்த்திக் கொள்ளும் இயல்பு தவறு. சரிதானே!//////
    சரிதான்! சரிதான்!! சரிதான்!!! நானும் உங்கள் பக்கம் தான். உலகத்தில் நிறையப்பேர் வேறுமாதிரி

    இருப்பதால், நம்மோடு நெருங்க சிரமப்படுகிறார்கள். அதனால் என்ன உயிரல்ல, உண்மைதான் பெரிது.... உரக்கச்

    சொல்வோம்.
    சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
    எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
    கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
    கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ
    நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
    நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
    ராஜகோபால் சார்.....அதனாலே நீங்கள் பாரதி பயிலகத்தின் இயக்குனர்.
    மற்றவரின் இயலாமையை, சகிப்பு தன்மையோடு எதிகொள்வோம்.
    நன்றி ஆசிரியரே!/////

    ஆகா செய்யுங்கள்!

    ReplyDelete
  24. /////venkatesan.P said...
    அய்யா,
    இன்றைய உலகில் சுயநலம் இல்லாமல் இருக்க மனிதனால் முடியுமா என்று வினா எழுப்பினால் முடியாது

    என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சுயநலத்தின் அளவு மிக அதிகமாக தற்போது இருக்கிறது. அது தான்

    இன்றைய சமுதாயத்தின் சீர்கேடு. எப்போது நம் நாட்டில் கூட்டு குடும்ப அமைப்பு சீர் குலைந்ததோ அன்றே

    இதற்கான விதை விதைக்கப் பட்டு விட்டது. காலம் எல்லாவற்றிற்கும் மருந்து தர வல்லது. அந்த காலம் வரும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்/////

    எல்லாம் ஒருநாள் களையப்படும். ஆண்டவன் எதற்கு இருக்கிறார்?:-))))

    ReplyDelete
  25. ///////astroadhi said...
    good morning sir.......
    very nice lesson .....thank you sir........//////

    நல்லது. நன்றி ஆதிராஜ்!

    ReplyDelete
  26. /////kannan said...
    மாஷே!
    Alasiam G said...
    Friday, September17,2010 6:55:00 AM
    திறமைசாலி எல்லாம் உலகம் சுத்துறான்....
    அர்த்தநாரிஸ்வரர் ஆலயத்தில் சுமார் 15 வருடத்திற்கு முன்னர் கேட்டது மாஷே
    கலியுகத்தை எப்படி அறிந்துகொள்வது
    ONLY LIVE SHOW
    நேற்றோ இன்றோ எழுதபட்டசாஸ்திரம்
    அல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோர்களால் இன்றைய nikaivikalai படம்பிடித்து

    காட்டபட்ட உண்மை! உண்மை காட்சி தொடர்
    நேரடியான உண்மையான விதி
    1. தமக்கை போகி அக்காள் வீடு புகுவாள்
    ௨. கற்புள்ளவர்கள் எல்லாம் சிறிது சிறுதாக கற்பை இழப்பர்
    ௩. அந்தணன் சாஸ்திரம் மறந்து அரிசி வியாபாரம் செய்யான்
    ௪. சூத்திரன் நாட்டை ஆள்வான்
    ௫.வர்ண கலப்பு உண்டாகும்
    6. ulakam enthiramayam aakum
    kmr.krishnan sir chonnathu போல vara வேண்டி ஆள் வராமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ஏனென்னில்
    விலைக்கோ , பரிதாபதாலோ , களவாடகூடியாது, புண்ணியத்தாலோ கூட கிடைக்காத ஒன்று உள்ளது.
    அதுதான் சிறப்பு தன்மை வாயிந்த ( ஜாதக ) கட்டங்கள்.////

    ஒன்னுமே புரியலை உலகத்திலே!:-))))

    ReplyDelete
  27. /////தமிழ்மணி said...
    நன்றி அய்யா,
    சில நேரங்களின் நான் பொறாமைப்படுகிறேன் சுயநலமாய் இருக்கிறேன் என்று எனக்கே தெரிந்தும் அதில்

    இருந்து வெளிவரமுடியாமல் வேதனைப்பட்டு இருக்கிறேன். அந்த மாதிரி சமயங்களில் என்னை அந்த தீய எண்ணங்களில் இருந்து விடுவிப்பது எவ்வாறு?/////

    மனதைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ளுங்கள். எல்லாம் வசப்படும்!

    ReplyDelete
  28. ///////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Manavazha katturai Arumai Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  29. /////iyer said...
    சுயநலமில்லாதவர் இருக்கின்றனரா என தேடிப்பார்த்தேன் . .
    ஒருவரை கண்டு கொண்டேன் . .
    அவரை எங்கு பார்த்தீர்கள் என கேட்பது புரிகிறது . .
    அவரை நான் பார்த்தேன் . .
    அவரோடு பேசியும் பார்த்தேன் . .
    ஆம் . ./////

    அடடா, கடவுளைப் பார்த்தீர்களா? எங்கே திருவண்ணாமலையிலா? அல்லது சிந்தாரிப்பேட்டையிலா?

    ReplyDelete
  30. /////s.adimoulame said...
    Katturai padikka migavum nantraga irunthadhu.suyanalam illatha manithane illai. irukka vendum but alavu

    meeri irukka goodathu. Nantri.//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. நல்லதொரு சிந்தனை. வேதாந்திகள் சொல்வது போல் சொல்வதானால் கலி முற்றி போய் விட்டது. பகவத் கீதையில் பகவான் சொன்னது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ அது நிச்சயமாக நடக்க வேண்டிய நேரத்தில் நன்றாகவே நடக்கும்.

    என்னை நானே அதிகம் expose செய்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் வேண்டுமென்றே மிகத் தாமதமாக வந்து பின்னூட்டம் இட்டு செல்கிறேன். இந்த நேரத்தில் வருகையாளர்கள் மிகக் குறைவாக இருப்பார்கள் என்ற எண்ணம் காரணம்.

    ReplyDelete
  32. ////ananth said...
    நல்லதொரு சிந்தனை. வேதாந்திகள் சொல்வது போல் சொல்வதானால் கலி முற்றி போய் விட்டது. பகவத் கீதையில் பகவான் சொன்னது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ அது நிச்சயமாக நடக்க வேண்டிய நேரத்தில் நன்றாகவே நடக்கும்.
    என்னை நானே அதிகம் expose செய்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் வேண்டுமென்றே மிகத் தாமதமாக வந்து பின்னூட்டம் இட்டு செல்கிறேன். இந்த நேரத்தில் வருகையாளர்கள் மிகக் குறைவாக இருப்பார்கள் என்ற எண்ணம் காரணம்./////

    நீங்கள் எப்போது வந்து பின்னூட்டம் இட்டாலும், அதை அடுத்த நாள் வந்து படிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். நல்லது நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  33. கண்ணன்..பார்த்தேன்..கமென்ட் எல்லாம்..
    ஆமா நீங்க ஏன் இன்னும் லேட் பண்றீங்க. சீக்கிரம் மேரேஜை முடிங்க..இல்லேன்னா
    இப்பிடித்தான் புரியாதது எதுனாச்சும்..எதாவுது எழுதிட்டே இருப்பீங்க..
    கதையெல்லாம் தெளிவா புரியுது..
    உங்களுக்கு மட்டுமே புரிந்த பாஷையிலே கமென்ட் அடிக்குறீங்க..
    (நான் கடவுள் படத்துலே ஆரியா ரொம்ப சீரியசாய் ஏதோ மந்திரம் சொல்லிட்டுப்பாப்லே..பக்கத்துலே ஒரு சாதா சாமியார் 'இழுவையைப் போட்டு சாப்பிடாமக் கிடந்தா இப்பிடித்தான் எதாவுது ஏடாகூடம் செய்யத் தோணும், கருவாட்டுக் கொழம்பு இருக்கு,வாங்க சாப்பிடலாம்' ன்னு கமெண்ட் அடிப்பாப்லே..அப்பிடி எடுத்துக்குங்க..)
    உதாரணத்துக்கு 'மாஷே' ன்னா ஏதோ உங்களுக்கும் வாத்தியாருக்கும் மட்டுமே புரிகிற சமாச்சாரமின்னு நினச்சுக்கிட்டுருந்தேன்..
    அவரே என்னாது அதுன்னு கேட்டுருக்காரு..

    ReplyDelete
  34. //////minorwall said...
    கண்ணன்..பார்த்தேன்..கமென்ட் எல்லாம்..
    ஆமா நீங்க ஏன் இன்னும் லேட் பண்றீங்க. சீக்கிரம் மேரேஜை முடிங்க..இல்லேன்னா
    இப்பிடித்தான் புரியாதது எதுனாச்சும்..எதாவுது எழுதிட்டே இருப்பீங்க..
    கதையெல்லாம் தெளிவா புரியுது..
    உங்களுக்கு மட்டுமே புரிந்த பாஷையிலே கமென்ட் அடிக்குறீங்க..
    (நான் கடவுள் படத்துலே ஆரியா ரொம்ப சீரியசாய் ஏதோ மந்திரம் சொல்லிட்டுப்பாப்லே..பக்கத்துலே ஒரு சாதா சாமியார் 'இழுவையைப் போட்டு சாப்பிடாமக் கிடந்தா இப்பிடித்தான் எதாவுது ஏடாகூடம் செய்யத் தோணும், கருவாட்டுக் கொழம்பு இருக்கு,வாங்க சாப்பிடலாம்' ன்னு கமெண்ட் அடிப்பாப்லே..அப்பிடி எடுத்துக்குங்க..)
    உதாரணத்துக்கு 'மாஷே' ன்னா ஏதோ உங்களுக்கும் வாத்தியாருக்கும் மட்டுமே புரிகிற சமாச்சாரமின்னு நினச்சுக்கிட்டுருந்தேன்..
    அவரே என்னாது அதுன்னு கேட்டுருக்காரு..///////

    ஜப்பானில் ஏதாவது செட்டாகுமா பாருங்கள் மைனர். முடிச்சுப்போட்டு வைத்துவிடுவோம். அவளும் புரியாத மொழியில் பேசுவாள். இவரும் பேசுவார். ஜோடிப்பொருத்தம் ஜோராக இருக்கும்!

    ReplyDelete
  35. ///
    உதாரணத்துக்கு 'மாஷே' ன்னா ஏதோ உங்களுக்கும் வாத்தியாருக்கும் மட்டுமே புரிகிற சமாச்சாரமின்னு நினச்சுக்கிட்டுருந்தேன்..
    அவரே என்னாது அதுன்னு கேட்டுருக்காரு..///
    வடிவேலு style -ல சொன்ன
    மூக்கு புடைப்பா இருந்த இப்டிலாம் எழுத சொல்லும்...
    அப்படி தானே மைனர் அண்ணா..

    ReplyDelete
  36. சுயநலத்தில் இத்தனை வகைகளா? புதிய பாடங்களைத் தெரிந்துக் கொண்டேன். பாடங்கள் நன்றாக இருக்கிறது. இப்போது உங்களை பின்தொடர்பவர்களில் நானும் ஒருவன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  37. /////என்னது நானு யாரா? said...
    சுயநலத்தில் இத்தனை வகைகளா? புதிய பாடங்களைத் தெரிந்துக் கொண்டேன். பாடங்கள் நன்றாக இருக்கிறது. இப்போது உங்களை பின்தொடர்பவர்களில் நானும் ஒருவன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com