மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.5.10

வில்லனே கதாநாயகன் வேலையை எப்போது செய்வான்?

---------------------------------------------------------------------------
வில்லனே கதாநாயகன் வேலையை எப்போது செய்வான்?

”உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே!
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே!

உனதுயிராய் எனதுயிரும்
உலவிடத் துடிக்குதே!
தனியொரு நான் தனியொரு நீ
நினைப்பது வலிக்குதே!"
--------------------------------------------------------------------
Lesson: Mutual aspect and mutual exchange!: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!

ஒரு திரைப்படத்தில், நடிகர் பாண்டியராஜன் மாணவராக வருவார். வகுப்பில் ஆசிரியர், அன்பிற்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கும்போது, இப்படிப் பதில் சொல்வார்:

“சார், உங்கள் பெண்ணிற்கு நீங்கள் லெட்டர் எழுதினா, அது அன்பு. நான் எழுதினா, அது காதல்!”

அதுபோல, கிரகங்களின் பரஸ்பர பார்வைக்கும் (mutual aspect) பரிவர்த்தனைக்கும் (mutual exchange of places) வித்தியாசம் உண்டு!

பரஸ்பர பார்வை என்பது அன்பு. பரிவர்த்தனை என்பது காதல்.

காதலில், காதலர்கள் இருவருமே நேசம் மிகுந்தவர்களாக, விசுவாச மிக்கவர்களாக, ஒத்த மனப்பான்மை உடையவர்களாக இருந்தால் காதல் திருமணத்தில் முடியும். வாழ்க்கை ஒளி மயமாக இருக்கும்.

அதுபோல பரிவர்த்தனையாகும் கிரகங்கள் இருவருமே சுபக்கிரகங்களாக இருந்தால், அவர்கள் பரிவர்த்தனையான வீட்டிற்கான பலன்கள் அசத்தலாக இருக்கும். ஜாதகனின் வாழ்க்கை அந்த இரண்டு வீடுகளைப் பொறுத்தவரை அற்புதமாக இருக்கும்

காதலர்கள் இருவரில், ஒருவர் வேஷக்காரராக, வில்லத்தனம் மிகுந்தவராக இருந்தால் காதலின் முடிவு அல்லது அவர்களின் மணவாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்
+++++++++++++++++++++++++++++++++
சரி, காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு, வேறு உதாரணம் சொல்கிறேன்.

பரஸ்பர பார்வை:
1
உங்கள் நண்பர் - அதாவது உங்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், அன்பு மிக்கவர், உங்கள் மேல் பிரியமுள்ளவர், உங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்?
2.
உங்களுக்கு வேண்டாத விரோதி எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்?

பரிவர்த்தனை:
1. மிகவும் செல்வாக்கு, சொல்வாக்கு, பண பலம் மிகுந்த நண்பர் உங்களுக்குத் தொழிலில் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்?

2.உங்கள் விருப்பத்திற்கு மாறாக, தீயவன் ஒருவன், ஏமாற்றிக் கவிழ்க்கக்கூடியவன் ஒருவன் உங்களுக்குத் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்?
+++++++++++++++++++++++++++++++++
கோள்களின் பரஸ்பர பார்வையாலும், பரிவர்த்தனையாலும் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிய விரிவான பாடத்தைக் கீழே கொடுத்துள்ளேன்:

அனைவரும் படித்துப் பயனடையுங்கள்; படித்து மகிழுங்கள்
++++++++++++++++++++++++++++++++++
பரிவர்த்தனை என்றால் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்:

ஒரு கிரகத்தின் வீட்டில் இன்னொரு கிரகம் வந்து அமர்வதும், அமர்ந்த கிரகத்தின் வீட்டில் அந்த இடத்திற்கு உரிய கிரகம் மாறி அமர்வதும் பரிவர்த்தனை ஆகும்.

"Parivartannai" is equal to Planet-A occupies the sign of Planet-B while simultaneously Planet-B occupies the sign of Planet-A.

பரிவர்த்தனையின் முக்கியப் பலன்கள்: பரிவர்த்தனையான வீடுகளின் வலிமை அதிகமாவதுடன், பரிவர்த்தனை பெற்ற கிரகங்களின் வலிமையும் அதிகமாகும்! இந்த அமைப்பு ஜாதகனின் வெற்றிக்கு ஊன்றுகோலாக இருக்கும்! வெற்றிபெற வழிகளை உண்டாக்கித்தரும்!

அதே நேரத்தில் பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தீய கிரகங்கள் என்றால் எதிர்மறையான விளைவுகள் (negative results) அதிகமாகும். ஜாதகன் பல சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்!

பரிவர்த்தனையில் சம்பந்தப்படும் கிரகம் இயற்கையில் சுபக்கிரகமாகவோ அல்லது ஜாதகத்திற்கு யோககாரகனாகவோ இருந்தால், அக்கிரகம் சம்பந்தப்பட்ட காரகங்களுக்கு (செயல்களுக்கு) உரிய பலன்கள் எளிதாக வந்து சேரும். உங்கள் மொழியில் சொன்னால் அவைகள் உங்களைத் தேடிவரும். பரிவர்த்தனைக்கு உள்ளான வீடுகளின் பலன்களும் நன்மை சேர்ப்பதாக இருக்கும்.

அதே நேரத்தில் பரிவர்த்தனையில் சம்பந்தப்படும் கிரகம் தீய கிரகம் என்றால், அக்கிரகம் தனித்துக் கொடுப்பதைவிடத் தீயபலன்களை அதிகமாகக் கொடுக்கும். அவைகள் அதிக சிரமத்தைக் கொடுப்பதாக இருக்கும்.

பரிவர்த்தனை பெற்ற கிரகங்களில் ஒருவரோ அல்லது இருவருமே, ஜாதகத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகமாக இருந்தால் (உதாரணத்திற்கு ரிஷப மற்றும் துலா லக்கினத்திற்கு யோககாரகனான சனீஷ்வரன்) பரிவர்த்தனை பெற்ற வீடுகள் அல்லது இடங்களின் பலன்கள் அற்புதமாக இருக்கும். ஜாதகனே திகைக்கும் அளவிற்கு நன்மை செய்யக்கூடியதாக இருக்கும்.

தீய கிரகமே நன்மை செய்யக்கூடிய வீட்டுக்காரனாகி விடுவான். உங்கள் மொழியில் சொன்னால் வில்லனே கதாநாயகனாகி விடுவான்.

துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன். அந்த லக்கினக்காரர்களுக்கு, சனி 4ஆம் மற்றும் ஐந்தாம் வீடுகளுக்கு உரியவன். அந்த லக்கின ஜாதகனுக்கு கல்விக்கும், அறிவிற்கும் உரியவனாவான். அந்த இரண்டு இடங்களையும், அவற்றிற்குரிய பலன்களையும் நெறிப்படுத்தி ஜாதகனை மேன்மைப் படுத்துபவன் அவன். ஆனால் ஜாதகத்தில் சாதாரண நிலையில் அமர்ந்திருக்கும் சனி, அவற்றை அள்ளிக் கொடுக்க மாட்டான். பங்கிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பான். (Ration shopகளில் நமக்குப் பொருட்கள் கிடைப்பதைப் போல அவைகள் கிடைக்கும்)

ஆனால் அதே துலா லக்கின ஜாதகத்தில் சனி, பரிவர்த்தனை பெற்றிருந்தால், குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளுக்கான பலன்களை அள்ளி அள்ளிக் கொடுப்பான். அவன் இரட்டைச் சனியாகிவிடுவான். நன்மைகள் இரண்டு மடங்காகிவிடும். சனியின் சுயவர்க்கப்பரல்கள் 5ம் அல்லது அதற்கு மேலும் இருந்தால் (அதாவது அந்த ஜாதகத்தில்) பலன்கள் நான்கு மடங்காகக்கூட ஆகிவிடும்!

அதே சனி பரிவர்த்தனை பெற்றும் பலமின்றி இருந்தால், அவஸ்தைகளும், சிரமங்களும் இரண்டு மடங்காகிவிடும். பலன்கள் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் காலதாமதமாகி, நமது பொறுமையை சோதித்து, கடைசி நிமிடத்தில் கிடைப்பதாக இருக்கும்.

பரிவர்த்தனையாகும் கிரகங்களின் பொதுப் பலாபலன்கள்: மூன்று விதமாக இருக்கும் 1. நல்லது. 2. கெட்டது. 3. அதி மேன்மையானது.

தைன்ய பரிவர்த்தனை: பரிவர்த்தனையாகும் கிரகங்களில் ஒருவர் 6 அல்லது 8 அல்லது 12ஆம் இடத்தின் அதிபதியாக இருப்பது. அப்படி இருந்தால், பரிவர்த்தனைக்கு உள்ளாகும் அடுத்த கிரகம் அடிபட்டுப்போகும்! உங்கள் மொழியில் சொன்னால், காயப்பட்டு, படுத்துக் கொண்டு விடும். ஆனாலும் மறைவிடத்திற்குச் சொந்தமான கிரகம், பரிவத்தனையால் வலிமை உடையதாகிவிடும்.

The dusthamsha lord will be strengthened by its interaction with the other non-dusthamsha partner.
-----------------------------------------------------
கஹல பரிவர்த்தனை: பரிவர்த்தனையாகும் கிரகங்கள் இருவரில் ஒருவர் 3ஆம் இடத்து அதிபதி என்னும் நிலைமையில் இது ஏற்படும்.

இந்த அமைப்பில் பரிவர்த்தனையாகும் மற்றொரு கிரகமும், தீய இடத்து அதிபதியாக இருக்க முடியாது. இருந்தால் அது தைன்ய பரிவர்த்தனைக் கணக்கில் வரும். அதை மனதில் வையுங்கள்.

ஆகவே, இந்த இடத்து அமைப்பில் வரும் மற்றொரு கிரகம் 1, 2, 4, 5, 7, 9, 10, or 11. ஆகிய இடங்களில் ஒன்றிற்கு அதிபதியாக மட்டுமே இருக்க முடியும்.

இந்த அமைப்பில் பரிவர்த்தனைக்கு உள்ளாகும் கிரகம், மூன்றாம் இடத்திற்கு உரிய குணங்களான துணிச்சல், அதிரடி, போட்டிபோடும் தன்மை, ஆர்வம், குறுகுறுப்பு ஆகியவற்றைக் கொண்டுவிடுவார். ஜாதகனின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் அவைகள் உதவியாக இருக்கும்.

Kahala yoga will give abnormal strength to the native of the horoscope in talking, scheming and competing mind to go out and get stuff done.
....................................................
மகா பரிவத்தனை யோகம்:

1, 2, 4, 5, 7, 9, 10, or 11ஆம் இடங்களின் அதிபதிகளில் இருவர் தங்களுக்குள் பரிவர்த்தனையாவது இந்த யோகத்தைக் கொடுக்கும். சொத்து.சுகம், அந்தஸ்து என ஜாதகன் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவான். அது தவிர சம்பந்தப்பட்ட வீடுகளுக்குரிய வேறு பலன்களும் அசத்தலாகக் கிடைக்கும்
===================================================
An important difference: Parivarththanai vs. Paarvai (Mutual-Aspect)

ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக நிகழ்த்தும் நிகழ்வுகள் அல்லது செயல்கள் அல்லது உதவிகள் பரஸ்பரம் (Mutual) என்பதற்கு ஒருவருக்கொருவர் என்று பொருள் கொள்ளூங்கள்.

எனக்கு நீ செய்; உனக்கு நான் செய்கிறேன்.
என் இடத்தையும் அதன் செயல்களையும் நீ பார்த்துக்கொள்.
உன் இடத்தையும் அதன் செயல்களையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.

1
Reciprocally acting or related;
reciprocally receiving and giving;
reciprocally given and received;
reciprocal; interchanged;
as, a mutual love, advantage, assistance, aversion, etc.
2
Possessed, experienced, or done by two or more persons or things at the same time;
common; joint; as, mutual happiness; a mutual effort.

Parivarththanai strengthens both planets even if they are both malefics - possibly increasing their evil capacity, but always dignifying both.
++++++++++++++++++++++++++++++++++++++++
பரஸ்பர பார்வை:

Mutual Aspect by contrast does not normally dignify the two planets.
Any two planets in opposition, 180 degrees apart, will provide mutual aspect to each other.
If those two planets are friendly, the mutual aspect is a good thing, but then they will need to both rule favorable houses and occupy good signs in order to really help each other.

The mutual aspect of Saturn and Mars which can occur when those two grahas occupy at 180 deg or 90/270 deg (4/10) angle to each other, is nearly always a disaster, causing intensely repressed anger which consumes most of the person's life force, eventually blocking the very accomplishments this person works so hard for.
+++++++++++++++++++++++++++++++++++++++++++

Parivarththanai between Sani and Kuja, no matter how repressed it makes the personality, will give full discipline from Shani and full productivity from Mangala.
The native will definitely accomplish something in life despite one's habit of taking the longer, harder road toward nearly every goal.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
6ஆம் அதிபதியும் 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்:
சொத்துக்கள் விரையமாகிக் கரைந்துபோகும். (அவற்றின் தசாபுத்திகளில்)

------------------------------------------------
2

2ஆம் அதிபதியும் 9ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்:
ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். பிறப்பில் ஏழையாக இருந்தாலும், அதீதமாகப் பொருள் ஈட்டி செல்வந்தனாக உயர்வான். அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான். மகிழ்ச்சி உடையவனாக இருப்பான்.
-------------------------------------------------
3

1ஆம் அதிபதியும் 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்: மகா ராஜயோகம்!

அல்லது

சூரியனும், குருவும் லக்கினத்தில் இருப்பது அல்லது ஐந்தாம் வீட்டில் இருப்பது அல்லது இருவரும் உச்சம் பெற்றிருப்பது அல்லது தங்களுடைய ஆட்சி வீட்டில் இருப்பது அல்லது தங்களுடைய சொந்த நவாம்சத்தில் இருவரும் இருப்பது ஆகிய நிலைகளில் ஒன்றுடன் சுக்கிரன் அல்லது சந்திரனின் சுபப்பார்வையை இருவரும் பெற்றிருந்தால் அதுவும் இந்த யோகத்தைத் தரும். ஜாதகன் அதிகமான பேரையும், புகழையும் பெறுவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.
--------------------------------------------------
4
1ஆம் அதிபதியும் 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்:

ஜாதகன் ஆட்சியாளர்களுடன் அல்லது அரசுடன் நல்லதொடர்பு உடையவனாக இருப்பான். அல்லது அரசாங்கத்தில் பெரிய உத்தியோகத்தில் இருப்பான். இந்த அமைப்பு ஜாதகனுக்கு நல்ல பதவி, அந்தஸ்து, புகழ், ஆற்றல், சக்தி என தொழில் அல்லது வேலை சம்பந்தமாக அனைத்தையும் கொடுக்கும்!
-------------------------------------------------------
5
9ஆம் அதிபதியும் 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்:
இதற்கு தர்மகர்மாதிபதி யோகம் என்று பெயர். ஜாதகனுக்கு அந்தஸ்து, மதிப்பு, மரியாதை, புகழ், பதவி என்று அனைத்தும் தேடி வரும்!
...........................................................................................
6
நவாம்சத்தில் நவாம்ச செவ்வாயும், நவாம்ச சுக்கிரனும் பரிவர்த்தனையாகியிருந்தால்:
இந்த அமைப்பு பெண்கள் ஜாதகத்திற்கு நல்லதல்ல. இந்த அமைப்புள்ள பெண், ஆண்கள் மேல் அதிக மோகம் கொண்டவளாக இருப்பாள். இதே அமைப்பில் அந்தப் பெண்ணின் நவாம்சத்தில் 7ல் சந்திரன் இருந்தால், அவளுடைய கணவனும் ஒழுக்கமற்றவனாக ஸ்த்ரீலோலனாக இருப்பான்.
------------------------------------------------------
7
சனியும், செவ்வாயும் (ராசியில் அல்லது நவாம்சத்தில்) பரிவர்த்தனை பெற்றிருப்பது நல்லதல்ல! அதைப்பற்றி விரிவாக எழுதுவது எனக்கு நல்லதல்ல! அதைப்பற்றி, எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் நடத்தும்போது விரிவாக எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்

பாடம் ஸ்கிரீன் ஷாட்டில் எட்டுப் பக்கங்கள். யோசித்து, தட்டச்சி, அதை உங்களுக்கு அளிப்பதற்கு எவ்வளவு நேரம் பிடித்திருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். அதோடு, அவற்றைக் கவனத்துடன் படித்து மனதில் ஏற்றுங்கள். மேலோட்டமாகப் படித்துவிட்டு, “சார், அடுத்த பாடம் எப்போது என்று கேட்காதீர்கள்!

எழுதிய பாடத்தை நன்றாகப் படித்து மனதில் ஏற்றுங்கள். அதுதான் நீங்கள் எனக்குச் செய்யும் பிரதி உபகாரமாகும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

61 comments:

  1. தங்க‌ளின் உழைப்பு பாடத்தில் ப்ரதிபலிக்கிறது. எந்தப் புத்தகத்திலும் பரிவர்தனை, பார்வைகளுக்கு இவ்வளவு செய்திகள் யாரும் கூறவில்லை.வகுப்பு அறை மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகளே. எல்லோருக்கும் 4ம் இடம் நன்றாக உள்ளது போல.நன்றி.வணக்கம்.

    ReplyDelete
  2. Dear Sir

    Paadam Arumai sir. Mr.KMR Krishnan Sir Sonnadhu pola Vaguparai Manavargalukku (Enakku Rasiyil 4ikkuriyavan 9il(Sani)- Navamsathil Uchham(Sani))- Bhagyasaligal than sir...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  3. Nandri ayya..Oru sandhegam..Parivarthanai aagamal sani-yudan sevvai thulaam rasiyil irundhal adhan palan eppadi irukum?

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,
    அற்புத விளக்கம் இருந்தும்; ஏன்
    முக்கோணப் பரிவர்த்தனை விலக்கம்?.
    செவ்வாயும் சனியும் பரிவத்தனை நல்லதல்ல
    என்பதன் சுருக்கம்..!? ஐயா அது,
    விருச்சிகமா? இல்லை மேஷமா?
    மேசமென்றால் நீசச் சனியன்றோ?
    அது தான் எனக்குள் குழப்பம்.
    அடியேனின் விருப்பம்,
    தங்களின் விளக்கம்.

    புத்தக வெளியீடு எப்போது ஐயா??
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  5. ayyaa vanakkam...

    intha parivarthanai amaippu navamsathil palan tharuma .....enathu navamsa laknam thulam sani and guru parivarthanai ....sani in thanusu and guru in kumbam.....ithu palan tharuma ayyaa???????????

    ReplyDelete
  6. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    கிரகங்களின் பரஸ்பர பார்வைக்கும்,பரிவர்த்தனைக்கும் உள்ள வித்தியாசங்களையும்,அதற்கான பலன்களையும் உதாரணத்துடன்
    நன்கு புரியுமாறு கொடுத்துள்ளீர்கள்.
    நன்றாக மனதில் வைப் பதற்கு மீண்டும் மீண்டும் படித்து வருகிறேன்.
    இவ்வாறு பாடத்தினை தெளிவோடு அளிப்பதற்கு,
    பல்வேறு வேலைகளுக்கிடையே சிரமம் பாராமல் முயற்சிக்கும்
    தங்களுக்கு மிக்க நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-05-31

    ReplyDelete
  7. Good Morning Sir .
    Was longing to get back to our class after a 3 day break .

    ReplyDelete
  8. thangaludaiya blog . india valaithala rank pattiyalil 24,539 idathil uladhu. overall ulaga pattiyalil 141,651 idathil uladu.pala kodi websitegal ulladu. athil ungaludaiya blog indha rankai pidithirupadu thangalin dedication ..matrum studentsin regular attendance ..hehe...i wish our blog to grow more & more..thank u . pls click the below link and check more details about ur blog sir.

    http://www.alexa.com/siteinfo/http%3A%2F%2Fclassroom2007.blogspot.com

    ReplyDelete
  9. munbaivida indha madham students attendance kamiyaga uladu poll therigindradu....ellorum ennai pol holiday restuku sendru vittargalo..:)):)))

    ReplyDelete
  10. ஐயா!!!

    2ம் அதிபதியும் 9ம் அதிபதியும் பரிவர்த்தனையானால் பிறப்பில் ஏழையானாலும் செல்வந்தனாக வளர்வான் என்று குறிப்பிட்டீர்கள். தனுசு லக்ன ஜாதககாரனான எனக்கு 2,9 க்குடைய சனி,சூரியன் பரிவர்த்தனை.இருவரும் பகைவர்கள்.2ல் சுக்கிரனும் உள்ளார். சனி திசை,சூரிய புத்தியில்(2007) வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்தது.சம்பாதித்ததில் 30% மட்டுமே சேமிப்பாகிறது.சூரியனுடன் சுக்கிரன் இருப்பதால் பொருள் நாசமா? அல்லது சனி,சூரிய பரிவர்த்தனையால் இந்த பலனா? 7,10க்குடைய புதன் திசையில் 9க்குரிய சூரிய புத்தியில் நல்ல பலன்கள் இருக்குமா? அல்லது 6,11 க்குரிய சுக்கிர புத்தியில் நல்ல பலன்கள் இருக்குமா?

    ReplyDelete
  11. United Arab Emirates
    8,009

    Malaysia
    13,815

    Sri Lanka
    14,136

    India
    24,539

    ranking list or your blog..

    ReplyDelete
  12. எனக்கு ஒரு சந்தேகம். 7, 11 அதிபதி பரிவர்த்தனை (மகர லக்) ஆனால் சந்த்‍ உடன் ராகு இருந்தால் பலன்கள் குறையுமா? (ஆனால் ராகு உச், அதனால் நீச்ச பங்க ராஜயோகம், சூர் மற்றும் நீச்ச கேதுவின் பார்வை).

    ReplyDelete
  13. Sir,

    Magra Lagnam - sukiran [neesam][10 th lord in 9 th place] - 5 paral, bhudhan [9 th lord in 10 th place - 5 paral. They had a mutual exchange between them. here sukiran is delibated but has 5 parals. thus this exchange produce good results sir

    ReplyDelete
  14. Thanks for the lesson sir!
    I was searching for parivarthana of sani and sevvai for a long time, I dont find any note about it.
    Is it good or bad is still under question mark.
    Waiting to know more about it from your words.

    ReplyDelete
  15. To sai gokula krishna,Rrulkumar Rajaraman,Subbaraman
    வகுப்பு அறை முகப்புப் பக்கத்தில் வலது பக்கக் கடைசியில் "தமிழ் எழுதி" என்ற சுட்டி உள்ளது. அதனை அழுத்தினால் http://tamileditor.org
    திற‌க்கும். அதில் உள்ள‌ க‌ட்ட‌த்தில் தாங்கள் இப்போது த‌மிழை ஆங்கில‌த்தில் transliterate ப‌ண்ணி எழுதுவது போல‌வே எழுதினால் அது தமிழிலேயே எழுத‌ப்ப‌டும். அதனை செலெக்ட் செய்து காப்பி செய்து கொண்டு,பேக் ப‌ட்ட‌னை அழுத்தி மீண்டும் வ‌குப்ப‌றை முக‌ப்புக்குச் சென்று"போஸ்ட் கமெ‌ன்ட்"ஐ அழுத்தி த‌ற்போது க‌மென்ட் எழுதும் வ‌ழ‌க்க‌ப்ப‌டி
    அத‌ற்குரிய‌ ‌kaட்ட‌த்தில் "பேஸ்ட்"செய்யுங்க‌ள்.
    அப்புற‌‌ம் பிர‌சுரிக்க‌ச் சொன்னால்
    த‌மிழிலேயே உங்க‌ள் பின்னூட்டம் வெளியாகும்.

    ReplyDelete
  16. அய்யா,

    துலா லக்னத்தை உதாரணமாக கொடுத்து உள்ளீர்கள். நானும் துலா லக்னம், அனால் பரிவாதனை இல்லை. ஆனால் சுய வர்க்க பரல் 6.
    நல்ல பலன் அவர் தசா / புத்தி இல் தான் கொடுப்பார?

    நன்றி
    சரவணா

    ReplyDelete
  17. Sir ,
    You said for rishba lagnanm sani yogakaragan so parivarthanai in that will give double plus ,& also you said sevvai sani parivarthanai nallathalla , so if both this critiria in a same horoscope wat will be the effect ( for rishaba lagna , sani in virchugam & chevvai in makaram )

    Regards
    Soundar

    ReplyDelete
  18. கிரகங்களின் பரஸ்பர பார்வைக்கும்,பரிவர்த்தனைக்கும் உள்ள வித்தியாசங்களையும்,அதற்கான பலன்களையும் உதாரணத்துடன்
    நன்கு புரியுமாறு கொடுத்துள்ளீர்கள்.

    "6/11 பரிவர்த்தனை ஆகியிருந்தால் சொத்துக்கள் விரயமாகும்"

    ..இரெண்டும் சுபகிரகமாக இருந்தாலுமா அய்யா? (சந்திரன்/குரு)

    ReplyDelete
  19. பரிவர்த்தனை பாடம் நன்றாக இருந்தது ஐயா, நன்றிகள் கோடி. 3ம் அதிபதியும்(செவ்வாய்) 12ம் அதிபதியும்(சூரியன்) பரிவர்த்தனை ஆனால் பலன் என்ன தயவு செய்து சொல்லவும்.

    ReplyDelete
  20. ///kmr.krishnan said...
    தங்க‌ளின் உழைப்பு பாடத்தில் ப்ரதிபலிக்கிறது. எந்தப் புத்தகத்திலும் பரிவர்தனை, பார்வைகளுக்கு இவ்வளவு செய்திகள் யாரும் கூறவில்லை.வகுப்பு அறை மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகளே. எல்லோருக்கும் 4ம் இடம் நன்றாக உள்ளது போல.நன்றி.வணக்கம்./////

    என் மாணவர்களின் சராசரி வயது 40. ஆகவே, நீங்கள் சொல்வதுபோல 4ஆம் வீடு நன்றாக இருப்பதாலும் என் பாடங்களைப் படிப்பதாலும் அவர்களுக்குப் பெரிய அளவில் என்ன நன்மை கிடைக்கப்போகிறது என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை சார்!:-))))

    ReplyDelete
  21. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Paadam Arumai sir. Mr.KMR Krishnan Sir Sonnadhu pola Vaguparai Manavargalukku (Enakku Rasiyil 4ikkuriyavan 9il(Sani)- Navamsathil Uchham(Sani))- Bhagyasaligal than sir...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    அவருக்கு எழுதியுள்ள பதில்தான் உங்களுக்கும். நீங்களும் அதை ஒருமுறை படியுங்கள்!

    ReplyDelete
  22. ////Subbaraman said...
    Nandri ayya..Oru sandhegam..Parivarthanai aagamal sani-yudan sevvai thulaam rasiyil irundhal adhan palan eppadi irukum?/////

    எந்த லக்கினக்காரர் நீங்கள்? அவர்களுக்கிடையே உள்ள பாகைகள் எத்தனை? அவர்களுடைய சுயவர்க்கப்பரல்கள் எத்தனை?’ என்பதையெல்லாம் வைத்து அல்லவா பலன்!

    ReplyDelete
  23. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம், அற்புத விளக்கம் இருந்தும் ஏன் முக்கோணப் பரிவர்த்தனை விலக்கம்?.
    செவ்வாயும் சனியும் பரிவத்தனை நல்லதல்ல என்பதன் சுருக்கம்..!? ஐயா அது,
    விருச்சிகமா? இல்லை மேஷமா? மேசமென்றால் நீசச் சனியன்றோ?
    அது தான் எனக்குள் குழப்பம். அடியேனின் விருப்பம்,
    தங்களின் விளக்கம்.
    புத்தக வெளியீடு எப்போது ஐயா??
    நன்றிகள் குருவே!///////

    முக்கோணப் பரிவர்த்தனை இன்னும் சிறப்புடையது. நீங்கள் கேட்டுள்ள விளக்கம் பின்னால் வரும்! புத்தக வெளியீடு - வேலைகள் முடியவில்லை. முடிந்தவுடன்!

    ReplyDelete
  24. /////astroadhi said...
    ayyaa vanakkam...
    intha parivarthanai amaippu navamsathil palan tharuma .....enathu navamsa laknam thulam sani and guru parivarthanai ....sani in thanusu and guru in kumbam.....ithu palan tharuma ayyaa???????????/////

    ராசிக்கொரு பரிவத்தனை - நவாம்சத்திற்கு ஒரு பரிவர்த்தனை என்றெல்லாம் கிடையாது. ராசியைவைத்தே பாருங்கள். நவாம்சம் ராசியின் விரிவாக்கம்தானே!

    ReplyDelete
  25. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கிரகங்களின் பரஸ்பர பார்வைக்கும்,பரிவர்த்தனைக்கும் உள்ள வித்தியாசங்களையும்,அதற்கான பலன்களையும் உதாரணத்துடன் நன்கு புரியுமாறு கொடுத்துள்ளீர்கள்.
    நன்றாக மனதில் வைப்பதற்கு மீண்டும் மீண்டும் படித்து வருகிறேன்.
    இவ்வாறு பாடத்தினை தெளிவோடு அளிப்பதற்கு,
    பல்வேறு வேலைகளுக்கிடையே சிரமம் பாராமல் முயற்சிக்கும்
    தங்களுக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  26. //////Sowmya said...
    Good Morning Sir .
    Was longing to get back to our class after a 3 day break .///////

    இடையில் ஒருநாள்தானே அம்மணி இடைவெளியிருந்தது? நீங்கள் எப்படி 3 நாட்கள் என்கிறீர்கள்?

    ReplyDelete
  27. /////Jack Sparrow said...
    thangaludaiya blog . india valaithala rank pattiyalil 24,539 idathil uladhu. overall ulaga pattiyalil 141,651 idathil uladu.pala kodi websitegal ulladu. athil ungaludaiya blog indha rankai pidithirupadu thangalin dedication ..matrum studentsin regular attendance ..hehe...i wish our blog to grow more & more..thank u . pls click the below link and check more details about ur blog sir.
    http://www.alexa.com/siteinfo/http%3A%2F%2Fclassroom2007.blogspot.com/////

    உங்களுடைய விவரங்களுக்கு நன்றி. இந்த அலக்ஸா ரேங்கை நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை!
    நமீதாவைப் பற்றியும், நயந்தாராவைப் பற்றியும் தொடர்ந்து எழுதினால், நமது பதிவு முதல் இடத்தில் வந்து நிற்கும்!

    ReplyDelete
  28. ////Jack Sparrow said...
    munbaivida indha madham students attendance kamiyaga uladu poll therigindradu....ellorum ennai pol holiday restuku sendru vittargalo..:)):)))/////

    ஜோதிடப் பதிவிற்கு வருவார்கள். ஆன்மீகப் பதிவிற்கு டும்மா அடித்துவிட்டுப்போய்விடுவார்கள். அதனால் குறைவாகத் தெரியும்!

    ReplyDelete
  29. ///Jack Sparrow said...
    United Arab Emirates
    8,009
    Malaysia
    13,815
    Sri Lanka
    14,136
    India
    24,539
    ranking list or your blog..////

    உங்களுடைய தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  30. /////Arul said...
    ஐயா!!!
    2ம் அதிபதியும் 9ம் அதிபதியும் பரிவர்த்தனையானால் பிறப்பில் ஏழையானாலும் செல்வந்தனாக வளர்வான் என்று குறிப்பிட்டீர்கள். தனுசு லக்ன ஜாதககாரனான எனக்கு 2,9 க்குடைய சனி,சூரியன் பரிவர்த்தனை.இருவரும் பகைவர்கள்.2ல் சுக்கிரனும் உள்ளார். சனி திசை,சூரிய புத்தியில்(2007) வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்தது.சம்பாதித்ததில் 30% மட்டுமே சேமிப்பாகிறது.சூரியனுடன் சுக்கிரன் இருப்பதால் பொருள் நாசமா? அல்லது சனி,சூரிய பரிவர்த்தனையால் இந்த பலனா? 7,10க்குடைய புதன் திசையில் 9க்குரிய சூரிய புத்தியில் நல்ல பலன்கள் இருக்குமா? அல்லது 6,11 க்குரிய சுக்கிர புத்தியில் நல்ல பலன்கள் இருக்குமா?/////

    இப்படி உதியான கிரக நிலைகளை வைத்துப் பலன் சொல்ல முடியாது. முழு ஜாதகத்தையும் அலசிப் பிழிந்தால் தெரியும்!

    ReplyDelete
  31. /////Uma said...
    எனக்கு ஒரு சந்தேகம். 7, 11 அதிபதி பரிவர்த்தனை (மகர லக்) ஆனால் சந்த்‍ உடன் ராகு இருந்தால் பலன்கள் குறையுமா? (ஆனால் ராகு உச், அதனால் நீச்ச பங்க ராஜயோகம், சூர் மற்றும் நீச்ச கேதுவின் பார்வை)./////

    நீசபங்க ராஜயோகம் சிறந்த யோகமாகும். தன்னுடைய தசாபுத்திகளில் அது உரிய பலனைத் தரும்!

    ReplyDelete
  32. /////RameshVeluswami said...
    Sir,
    Magra Lagnam - sukiran [neesam][10 th lord in 9 th place] - 5 paral, bhudhan [9 th lord in 10 th place - 5 paral. They had a mutual exchange between them. here sukiran is delibated but has 5 parals. thus this exchange produce good results sir/////

    ஒன்பது மற்றும் பாத்தாம் இட அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருப்பது தர்மகர்மாதிபதி யோகம் சுவாமி. நல்ல அமைப்பு அது. அதைப்பற்றி முன் பாடம் ஒன்றில் விவரமாக எழுதியுள்ளேன். தேடிப்பிடித்துப் படியுங்கள் நண்பரே!

    ReplyDelete
  33. /////Dr.Vidhya said...
    Thanks for the lesson sir!
    I was searching for parivarthana of sani and sevvai for a long time, I dont find any note about it.
    Is it good or bad is still under question mark.
    Waiting to know more about it from your words.//////

    சனியும், செவ்வாயும் (ராசியில் அல்லது நவாம்சத்தில்) பரிவர்த்தனை பெற்றிருப்பது நல்லதல்ல! அதைப்பற்றி விரிவாக எழுதுவது எனக்கு நல்லதல்ல! அதைப்பற்றி, எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் நடத்தும்போது விரிவாக எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள் டாக்டர்!

    ReplyDelete
  34. /////kmr.krishnan said...
    To sai gokula krishna,Rrulkumar Rajaraman,Subbaraman
    வகுப்பு அறை முகப்புப் பக்கத்தில் வலது பக்கக் கடைசியில் "தமிழ் எழுதி" என்ற சுட்டி உள்ளது. அதனை அழுத்தினால் http://tamileditor.org திற‌க்கும். அதில் உள்ள‌ க‌ட்ட‌த்தில் தாங்கள் இப்போது த‌மிழை ஆங்கில‌த்தில் transliterate ப‌ண்ணி எழுதுவது போல‌வே எழுதினால் அது தமிழிலேயே எழுத‌ப்ப‌டும். அதனை செலெக்ட் செய்து காப்பி செய்து கொண்டு,பேக் ப‌ட்ட‌னை அழுத்தி மீண்டும் வ‌குப்ப‌றை முக‌ப்புக்குச் சென்று"போஸ்ட் கமெ‌ன்ட்"ஐ அழுத்தி த‌ற்போது க‌மென்ட் எழுதும் வ‌ழ‌க்க‌ப்ப‌டி
    அத‌ற்குரிய‌ ‌கட்ட‌த்தில் "பேஸ்ட்"செய்யுங்க‌ள்.
    அப்புற‌‌ம் பிர‌சுரிக்க‌ச் சொன்னால்
    த‌மிழிலேயே உங்க‌ள் பின்னூட்டம் வெளியாகும்.
    By KMR.Krishnan, Thanjavur//////

    நன்றி கிருஷ்ணன் சார்! உங்களுடைய அறிவிப்பை நிரந்தமாகத் தெரியும்படி செய்துவிட்டேன். நீங்களும் முகப்புப் பகுதியை ஒருமுறை பாருங்கள்

    ReplyDelete
  35. ////Saravana said...
    அய்யா,
    துலா லக்னத்தை உதாரணமாக கொடுத்து உள்ளீர்கள். நானும் துலா லக்னம், அனால் பரிவாதனை இல்லை. ஆனால் சுய வர்க்க பரல் 6. நல்ல பலன் அவர் தசா / புத்தியில்தான் கொடுப்பார?
    நன்றி
    சரவணா//////

    ஆமாம் சுவாமி! ஆமாம்!

    ReplyDelete
  36. ////Soundarraju said...
    Sir ,
    You said for rishba lagnanm sani yogakaragan so parivarthanai in that will give double plus ,& also you said sevvai sani parivarthanai nallathalla , so if both this critiria in a same horoscope wat will be the effect ( for rishaba lagna , sani in virchugam & chevvai in makaram )
    Regards
    Soundar/////

    mixed result!

    ReplyDelete
  37. ////dubai saravanan said...
    கிரகங்களின் பரஸ்பர பார்வைக்கும்,பரிவர்த்தனைக்கும் உள்ள வித்தியாசங்களையும்,அதற்கான பலன்களையும் உதாரணத்துடன் நன்கு புரியுமாறு கொடுத்துள்ளீர்கள்.
    "6/11 பரிவர்த்தனை ஆகியிருந்தால் சொத்துக்கள் விரயமாகும்"
    ..இரெண்டும் சுபகிரகமாக இருந்தாலுமா அய்யா? (சந்திரன்/குரு)/////////

    ஆறாம் வீட்டு அதிபதியாகும்போது, சுபக்கிரகம் எனும் பட்டம் பறிபோய்விடுமே சுவாமி!

    ReplyDelete
  38. /////Pugazhenthi said...
    பரிவர்த்தனை பாடம் நன்றாக இருந்தது ஐயா, நன்றிகள் கோடி. 3ம் அதிபதியும்(செவ்வாய்) 12ம் அதிபதியும்(சூரியன்) பரிவர்த்தனை ஆனால் பலன் என்ன தயவு செய்து சொல்லவும்./////

    அந்த இரண்டு வீடுகளுக்கும் உரிய தீமைகளைக் குறைத்து, ஜாதகன் சற்று நிம்மதியாக இருக்க உதவுவார்கள்

    ReplyDelete
  39. முதலில் போட்டிருக்கும் கண்ணதாசன் வரிகளை சிந்தித்தேன்...!!!

    அவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன், என்றும் இறவாதவன் என்பதை தெளிந்துகொண்டேன்...!!!

    நன்றி !!!

    ReplyDelete
  40. கன்னி லக்ன ஜாதகனான எனக்கு முக்கோண பரிவர்த்தனைதான் இருக்கிறது. செவ்வாய் (ராகுவுடன்) மகரத்தில், சுக்கிரன் (புதனுடன்) மேஷத்தில், சனி ரிஷபத்தில். பரஸ்பர பார்வை? 9ல் சனி, சூரியன். 3ல் குரு. என் வாழ்க்கையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டது குரு தசையில், சனி, சூரிய புத்திகளில். இருப்பினும் புதன், சுக்கிர புத்தி அந்தரங்களில் ஏற்பட்ட யோக பலன்கள் போல் வேறெப்போதும் ஏற்பட்டதில்லை. சனி பகவான் தன் தசை சுய புத்தியில் என்னை ஒரு புரட்டு புரட்டியெடுத்து விட்டார் என்பதயும் இங்கு சொல்லிக் கொள்கிறேன். எந்த தசாநாதனும் தன் சுய புத்தியில் நன்மை செய்ய மாட்டார் (அல்லது சுமாரான பலன்கள் கொடுப்பார்) என்றும் அப்படி நன்மை செய்தால் தன் தசை முழுவதும் கெடுதல்தான் செய்யும் படித்திருக்கிறேன். இந்த கருத்தை வலியுறுத்தும் சந்திர காவியப் பாடல் ஒன்றை கீழே கொடுத்திருக்கிறேன்.

    ’இரவிமுத லொன்பதுகோ ளேற்கும் தெசையிற்
    சருவுமவர் புத்தியினிற் றாரார் மருவுபலன்
    வேறொருவர் புத்தி யநுசரித்து விள் பலன்கள் கூறுகூறாய்க் கொடுப்பார் கூறு’

    9,10 அதிபதிகளின் பார்வை பட்டால் 3,6,8,12 அதிபதிகளும் நன்மையே செய்வார்கள் என்றும் படித்திருக்கிறேன். சிலர் 9 அதிபதி மட்டும் என்கிறார்கள்.

    ReplyDelete
  41. வணக்கம் ஐயா,
    கணவன் மனைவி இருவருக்கும் ஒரெ நேரதில் கேது திசை வந்தால்?
    எனக்கு மீன ராசி ‍, உதிராட்டதி நட்சதிரம்
    எனது மனைவி விருஷிகம் அனுசம் நட்சதிரம்
    பலன்கள் எவ்வாறு இருக்கும் ?

    அன்புடன்
    சரவணன்

    ReplyDelete
  42. /////செந்தழல் ரவி said...
    முதலில் போட்டிருக்கும் கண்ணதாசன் வரிகளை சிந்தித்தேன்...!!!
    அவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன், என்றும் இறவாதவன் என்பதை தெளிந்துகொண்டேன்...!!!
    நன்றி !!!//////

    உங்களைப்போன்ற அன்பர்களின் (ரசிகர்களின்) நெஞ்சிலிருந்து வரும் இதுபோன்ற வாசகங்கள்தான் அவருக்கு மேலும் மேலும் பெருமையைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. நன்றி செந்தழலாரே!

    ReplyDelete
  43. ////ananth said...
    கன்னி லக்ன ஜாதகனான எனக்கு முக்கோண பரிவர்த்தனைதான் இருக்கிறது. செவ்வாய் (ராகுவுடன்) மகரத்தில், சுக்கிரன் (புதனுடன்) மேஷத்தில், சனி ரிஷபத்தில். பரஸ்பர பார்வை? 9ல் சனி, சூரியன். 3ல் குரு. என் வாழ்க்கையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டது குரு தசையில், சனி, சூரிய புத்திகளில். இருப்பினும் புதன், சுக்கிர புத்தி அந்தரங்களில் ஏற்பட்ட யோக பலன்கள் போல் வேறெப்போதும் ஏற்பட்டதில்லை. சனி பகவான் தன் தசை சுய புத்தியில் என்னை ஒரு புரட்டு புரட்டியெடுத்து விட்டார் என்பதயும் இங்கு சொல்லிக் கொள்கிறேன். எந்த தசாநாதனும் தன் சுய புத்தியில் நன்மை செய்ய மாட்டார் (அல்லது சுமாரான பலன்கள் கொடுப்பார்) என்றும் அப்படி நன்மை செய்தால் தன் தசை முழுவதும் கெடுதல்தான் செய்யும் படித்திருக்கிறேன். இந்த கருத்தை வலியுறுத்தும் சந்திர காவியப் பாடல் ஒன்றை கீழே கொடுத்திருக்கிறேன்.
    ’இரவிமுத லொன்பதுகோ ளேற்கும் தெசையிற்
    சருவுமவர் புத்தியினிற் றாரார் மருவுபலன்
    வேறொருவர் புத்தி யநுசரித்து விள் பலன்கள் கூறுகூறாய்க் கொடுப்பார் கூறு’
    9,10 அதிபதிகளின் பார்வை பட்டால் 3,6,8,12 அதிபதிகளும் நன்மையே செய்வார்கள் என்றும் படித்திருக்கிறேன். சிலர் 9 அதிபதி மட்டும் என்கிறார்கள்.///////

    உங்களுடைய கருத்துப்பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  44. //////BTest said...
    வணக்கம் ஐயா,
    கணவன் மனைவி இருவருக்கும் ஒரெ நேரதில் கேது திசை வந்தால்?
    எனக்கு மீன ராசி ‍, உதிராட்டதி நட்சதிரம்
    எனது மனைவி விருஷிகம் அனுசம் நட்சதிரம்
    பலன்கள் எவ்வாறு இருக்கும் ?
    அன்புடன்
    சரவணன்//////

    வரக்கூடாது. வந்தால் இருவருக்குமே பிரச்சினைகள் இருக்கும் ஒருவருக்கொருவர் உதவ முடியாது.
    இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் வயிற்றுப்போக்கு (dysentery) வந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கும்!
    கூட்டாகப் பிரார்த்தனை செய்யுங்கள். அதுதான் பரிகாரம்!

    ReplyDelete
  45. சிம்ம லக்ன ஜாதகனான எனக்கு சூரியன் 10ல். எனக்கு முக்கோண பரிவர்த்தனைதான் இருக்கிறது. 7இல் குரு(சுய வர்க்க பரல் 5),5இல் செவ்வாய்(சுய வர்க்க பரல் 4),4இல் சனி (சுய வர்க்க பரல் 4).

    நவாம்சத்தில் புதன்,சுக்கிர(neecham)பரிவர்த்தனை (இருவரின் சுய வர்க்க பரல் 3), .

    நல்ல பலன் அவர்,அவர் தசா / புத்தியில் கொடுப்பாரா?

    ReplyDelete
  46. Enakku 3 day break sir,Out Of Station poirundhen ,Monday thaan classroomkku vara mudinchadhu sir

    ReplyDelete
  47. http://tamileditor.org ,intha websitea ennale open panna mudile ,enga proxy server block senjidhudhu .Thats why i comment in English.

    ReplyDelete
  48. ///rama said...
    சிம்ம லக்ன ஜாதகனான எனக்கு சூரியன் 10ல். எனக்கு முக்கோண பரிவர்த்தனைதான் இருக்கிறது. 7இல் குரு(சுய வர்க்க பரல் 5),5இல் செவ்வாய்(சுய வர்க்க பரல் 4),4இல் சனி (சுய வர்க்க பரல் 4).
    நவாம்சத்தில் புதன்,சுக்கிர(neecham)பரிவர்த்தனை (இருவரின் சுய வர்க்க பரல் 3),
    நல்ல பலன் அவர்,அவர் தசா / புத்தியில் கொடுப்பாரா?/////

    கொடுப்பார். நம்பிக்கையோடு இருங்கள்!

    ReplyDelete
  49. /////Sowmya said...
    Enakku 3 day break sir,Out Of Station poirundhen ,Monday thaan classroomkku vara mudinchadhu sir/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  50. ////Sowmya said...
    http://tamileditor.org ,intha websitea ennale open panna mudile ,enga proxy server block senjidhudhu .Thats why i comment in English./////

    No problem. You can comment in English as usual!

    ReplyDelete
  51. Sir, Suppose Nakshatra lord become parivardhana...will they do the same aspect....

    ReplyDelete
  52. /////Vinodh said...
    Sir, Suppose Nakshatra lord become parivardhana...will they do the same aspect....//////

    நடசத்திர அதிபதி பரிவர்த்தனையா? என்ன குழப்பம்? கேட்பதைச் சற்று விளக்கத்துடன் கேளுங்கள்

    ReplyDelete
  53. "தன ராஜயோகம் (yogas for wealth) 2,6,10, & 11ம் வீட்டதிபதிகளின் சேர்க்கை அல்லது பரிவர்த்தனையால் இந்த யோகம் ஏற்படும்"

    "6/11 பரிவர்த்தனை ஆகியிருந்தால் சொத்துக்கள் விரயமாகும்"

    புரியமாட்டேங்குதே அய்யா....

    ReplyDelete
  54. thank you sir for your all leason

    thanks a lot

    ReplyDelete
  55. /////raja said...
    "தன ராஜயோகம் (yogas for wealth) 2,6,10, & 11ம் வீட்டதிபதிகளின் சேர்க்கை அல்லது பரிவர்த்தனையால் இந்த யோகம் ஏற்படும்"
    "6/11 பரிவர்த்தனை ஆகியிருந்தால் சொத்துக்கள் விரயமாகும்"
    புரியமாட்டேங்குதே அய்யா..../////

    2,6,10, & 11ம் வீட்டதிபதிகளின் சேர்க்கை அல்லது பரிவர்த்தனையைப் பற்றி எங்கே படித்தீர்கள்? அதற்கான சுட்டியைக் கொடுங்கள்!

    ReplyDelete
  56. ////sathesh kumar said...
    thank you sir for your all leason
    thanks a lot///////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  57. /////Vinodh said...
    Sir, Suppose Nakshatra lord become parivardhana...will they do the same aspect....//////

    நடசத்திர அதிபதி பரிவர்த்தனையா? என்ன குழப்பம்? கேட்பதைச் சற்று விளக்கத்துடன் கேளுங்கள்

    -----------------------------------
    for eg. If Sukran In Aayilliam and Budhan in Pooram....will it do parvardhanai yoga

    ReplyDelete
  58. மிகவும் அருமை வாத்தியார் அவர்களே

    "பரிவர்த்தனையாகும் கிரகங்களில் ஒருவர் 6.8.12 ம் இடத்தின் அதிபதியாக இருந்தால்
    அடுத்த கிரகம் அடி பட்டு போகும் "

    இதில் 6. 8.12 ம் இடம் மூலத்திரிகோணமாக இருந்தால் தான் அதிகமாக பிரச்சினை
    வரலாம்.மற்ற படி பிரச்சினை இருக்காது என்பது அடியேனின் அபிப்பிராயம்.தவறு
    ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும் . அல்லது ஜாதகங்களை ஒப்பிட்டு அனுபவத்தில்
    பார்க்கலாம்
    இத்தனை சொந்த வேலைகளுக்கு இடையிலும் இதை எழுதி பிறருக்கு
    பயன் அளிக்கும் உங்களுக்கு
    நன்றியை செலுத்திக் கொள்கிறேன்.
    சில விஷயங்கள் கேள்வியுற்று மனம் மிகவும் வேதனை அடைந்தேன்.
    சிலர் பின்னூட்டங்களில் சம்பந்தமில்லாமல் வந்து தங்கள் மனம் புண்படும் படி
    எழுதியதாகபடித்தேன். தாங்கள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதுங்கள்
    ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருக்கும் போது இந்த இருவரைப்பற்றி
    கவலை வேண்டாம் ஜோதிடப் புத்தகம் ரெடி யானதும் நானும் ஒன்று
    வாங்கிக்கொள்கிறேன். (எனக்கு பாரம்பரிய ஜோதிடத்தில் ஆர்வம் இல்லை
    நான் கேபி யில் மட்டுமே படித்திருக்கின்றேன் ஆயினும் தங்களது எழுத்தாற்றலும்
    எளிமையும் என்னை கவர்ந்திருக்கின்றது . எனவே வாங்க விரும்புகிறேன். சீக்கிரம்
    வெளியிட ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.
    நன்றி
    இனியன் பாலாஜி

    ReplyDelete
  59. http://classroom2007.blogspot.com/2009/10/blog-post_05.html

    ReplyDelete
  60. ////Vinodh said...
    /////Vinodh said...
    Sir, Suppose Nakshatra lord become parivardhana...will they do the same aspect....//////
    நடசத்திர அதிபதி பரிவர்த்தனையா? என்ன குழப்பம்? கேட்பதைச் சற்று விளக்கத்துடன் கேளுங்கள்
    -----------------------------------
    for eg. If Sukran In Aayilliam and Budhan in Pooram....will it do parvardhanai yoga/////

    அதாவது கடகத்தில் சுக்கிரன். சிம்மத்தில் புதன். வாய்ப்பு இல்லை. நோ சான்ஸ்! குழப்பம் வரக்கூடாது என்றுதான் ஒருவீட்டின் அதிபதி இன்னொருவீட்டில் மாறி அமரும் நிலையைப் பரிவர்த்தனை என்று குறிப்பிட்டுள்ளார்கள்!
    நீங்கள் நீங்களாகவே கற்பனை செய்துகொண்டு குழம்பாதீர்கள்!

    ReplyDelete
  61. ////இனியன் பாலாஜி said...
    மிகவும் அருமை வாத்தியார் அவர்களே
    "பரிவர்த்தனையாகும் கிரகங்களில் ஒருவர் 6.8.12 ம் இடத்தின் அதிபதியாக இருந்தால்
    அடுத்த கிரகம் அடி பட்டு போகும் "
    இதில் 6. 8.12 ம் இடம் மூலத்திரிகோணமாக இருந்தால் தான் அதிகமாக பிரச்சினை
    வரலாம்.மற்ற படி பிரச்சினை இருக்காது என்பது அடியேனின் அபிப்பிராயம்.தவறு
    ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும் . அல்லது ஜாதகங்களை ஒப்பிட்டு அனுபவத்தில்
    பார்க்கலாம்
    இத்தனை சொந்த வேலைகளுக்கு இடையிலும் இதை எழுதி பிறருக்கு
    பயன் அளிக்கும் உங்களுக்கு நன்றியை செலுத்திக் கொள்கிறேன்.
    சில விஷயங்கள் கேள்வியுற்று மனம் மிகவும் வேதனை அடைந்தேன்.
    சிலர் பின்னூட்டங்களில் சம்பந்தமில்லாமல் வந்து தங்கள் மனம் புண்படும் படி
    எழுதியதாகபடித்தேன். தாங்கள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதுங்கள்
    ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருக்கும் போது இந்த இருவரைப்பற்றி
    கவலை வேண்டாம் ஜோதிடப் புத்தகம் ரெடி யானதும் நானும் ஒன்று
    வாங்கிக்கொள்கிறேன். (எனக்கு பாரம்பரிய ஜோதிடத்தில் ஆர்வம் இல்லை
    நான் கேபி யில் மட்டுமே படித்திருக்கின்றேன் ஆயினும் தங்களது எழுத்தாற்றலும்
    எளிமையும் என்னை கவர்ந்திருக்கின்றது . எனவே வாங்க விரும்புகிறேன். சீக்கிரம்
    வெளியிட ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.
    நன்றி
    இனியன் பாலாஜி//////

    எழுதத் துவங்கிய காலத்தில் (3 ஆண்டுகளுக்கு முன்பு) நிறைய எதிர்ப்புக்கள் இருந்தது. அவற்றைத் தாண்டிவந்துதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் எதைப்பற்றியும் கவலைப் படாத ஆசாமி.
    பழநி அப்பன் துணை இருக்கிறான். தொடர்ந்து எழுதுவேன். நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com