மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.5.10

வித்தைக் குறைபாடுகள் நீங்கி வெற்றிபெற என்ன செய்யவேண்டும்?



---------------------------------------------------------------------
வித்தைக் குறைபாடுகள் நீங்கி வெற்றிபெற என்ன செய்யவேண்டும்?

நவக்கிரஹ ஸ்தலங்கள். புதன் கிரகத்திற்கான கோவில்!

அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு.
(சீர்காழி அருகில் உள்ளது)

கும்பகோணத்தில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம்! சீர்காழியில் இருந்து தென்கிழக்கு திசையில், பூம்புகார் செல்லும் சாலையில் பத்துக் கிலோ மீட்டர் தூரம்.

இந்தத் திருக்கோவிலில் உறையும் சிவனாரின் பெயர் ஸ்வேதாரண்யேஸ்வரர். அம்பிகையின் பெயர் பிரம்ம வித்யாம்பிகை. புதன் கிரகத்திற்கு இக்கோவிலின் உள்ளே தனி சந்நிதானம் உள்ளது.

அகோரமூர்த்தி, நடராஜர், துர்கை, காளி தேவி, அஷ்டலெட்சுமி ஆகிய வடிவங்களில் உறையும் தெய்வங்களும் இங்கே உள்ளார்கள். பக்தர்கள் வணங்கி மகிழலாம்.

சிதம்பரத்திற்கு முன்பாகவே இத்தலத்தில் நடராஜர் ஹஸ்த நடனம் புரிந்தார் என்பது வரலாறு! அதனால் இத்தலத்திற்கு ஆதி சிதம்பரனார் ஆலயம் என்னும் பெருமையும் உண்டு!

இந்தப் பகுதி துவக்கத்தில் வெள்ளைக்காடாக - வெண் மலர்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. அதனால்தான் இத்தலத்திற்குத் திருவெண்காடு என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.

மனிதன் காடுகளை எல்லாம் விறகாக்கி, சமையல் செய்வதற்குப் பயன் படுத்தி அழித்து விட்டதால், காடுகள் மறைந்து விட்டன. இயற்கை எரிவாயு, கேஸ் சிலிண்டர்கள், எரிவாய் அடுப்புக்களை எல்லாம் முன்பே கண்டு பிடித்திருந்தால் பல காடுகள் தப்பித்திருக்கும். இன்றிருக்கும் குளோபல் வார்மிங் அவல மெல்லாம் இருந்திருக்காது.

ஸ்தல விருட்சம் ஆலமரம். வில்வ மரமும், கொன்றை மரமும் உள்ளன. அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்னும் 3 குளங்கள் இங்கே உள்ளன. நீராடி மகிழலாம்.

சிவனாரும், அம்பிகையும் இங்கே மூன்று வடிவங்களில் உள்ளனர். மூன்று ஸ்தல விருட்சங்கள் உள்ளன. மூன்றுவகையான தீர்த்தக்குளங்களும் உள்ளன. அதுதான் இக்கோவிலின் முக்கிய சிறப்பு. அத்துடன் நவக்கிரகங்கள் எல்லாம் ஒரு வரிசையில் அமையப்பெற்றுள்ளன என்பதும் கூடுதல் சிறப்பாகும்!

தலவரலாறு:

தல வரலாறு சற்று ரீலாகவும், தலை சுற்றும்படியாகவும் உள்ளது. வரலாற்றை எல்லாம் கேள்வி கேட்க முடியாது. ஏன் கேட்க முடியாது என்றால் பதில் சொல்ல ஆளில்லை. ஆகவே ஆராயக்கூடாது. முடிந்தால் நம்ப வேண்டும். இல்லா விட்டால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும். கண்டு கொள்ளாமல் விடுவது நமக்குப் பழக்கமான ஒன்று. ஆகவே தகவலுக்காக மட்டும் அதைத் தெரிந்து கொள்வோம்.

அந்த மனநிலையோடு இப்போது மேலே படியுங்கள்!

புதபகவான், சந்திரனுக்கும், தாரணிக்கும் பிறந்தவர். இந்தத் தாரணி குரு பகவானின் மனைவி. சிவனாரும், பிரம்மாவும் இந்த முறையற்ற தொடர்பிற்கு ஆட்சேபம் தெரிவித்து, தாரணியைத் திருப்பி அனுப்பி வைத்தார்களாம். சிறு வயதில் தன் தாய் யாரென்பது தெரியாமல் வளர்ந்த புதபகவான், பின்னால் தகவல் தெரிந்த போது தன் தந்தையார் மீது கடும் கோபம் கொண்டாராம். அத்துடன் தன்னுடைய இழிபிறப்பு அவலம் நீங்க கடும்

தவமிருந்து, சிவனின் ஆசி பெற்று, அவலம் நீங்கி அமைதியுற்றாராம்.
---------------------------------------------------------------------------------------------------
ஆக்க வேலைகளுக்கு அதிபதியான பிரம்மா (the creator of all life) இந்தத் தலத்தில்தான் அம்பிகையின் முன் தவமிருந்து ஞானம் பெற்றாராம் (attained knowledge) அதானால்தான் இங்கே உறையும் அம்பிகைக்கு பிரம்ம வித்தியாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது.

கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறத் திணறும் குழந்தைகளை இத்தலத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் இறைவியை வணங்கச் செய்வது நன்மையளிக்கும்!

காசிக்கு இணையான சிவ ஸ்தலம் இது. அந்தக் காலத்தில், காசிக்குச் சென்று வரமுடியாதவர்கள், இங்கே சென்று வந்தார்களாம்.

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நல்வராலும் பாடல் பெற்ற ஸ்தலம் இது! அத்துடன் பட்டினத்தார் முக்திபெற்ற ஸ்தலமும் இதுதான். அதை மனதில் கொள்க!
------------------------------------------------------------------------------------------------------
அகோரமூர்த்தி வடிவாக இக்கோவிலில் இருக்கும் சிவனின் கதை! (கதை என்று குறிப்பிட்டு இருப்பதைக் கவனிக்கவும்):

முன்னொரு காலத்தில் மருதுவாசுரன் என்னும் அசுரனை அழிக்க, சிவன் அகோரமூர்த்தி என்னும் தடாலடி வடிவம் எடுத்தாராம். இந்த மருதுவாசன் நல்லபிள்ளையாக பிரம்மாவிடம் வரம் பெற்றவன், பிறகு நம் திரைப்பட
வில்லன்களைப்போல, தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பலவிதமான இடையூறுகளை ஏற்படுத்தத் துவங்கினானாம். அவர்கள் சென்று தங்கள் நிலைமையைச் சிவனாரிடம் சொல்லி மூக்கால் அழுக, சிவன் அவர்களைத்
திருவெண்காடு சென்று அங்கே வேற்று உருவில் மறைந்து வாழும்படி பணித்தாராம். அங்கேயும் மருதுவாசனின் ஆட்டம் தொடர, சிவன் தன் நந்தியை அனுப்பி, அவனைச் சாய்த்துவிட்டு வரும்படி பணித்தாராம். நந்தியார்
அந்த அசுரனைத் தோல்வியுறச் செய்து, விரட்டி அடித்துவிட்டு, தேவர்களையும், ரிஷிகளையும் காப்பாற்றினாராம்.

தோல்வியுற்றவன், மீண்டும் கடும்தவம் புரிந்து, அதுவும் சிவனிடமே கடும் தவம் புரிந்து, திரிசூலத்தைப் பெற்றானாம். பெற்றவனுக்கு மீண்டும் புத்தி பேதலிக்க, தன்னைத் தாக்கி நிலைகுலையச் செய்த நந்தியாரை, அத்திரிசூலத்தை வைத்துக் காயப் படுத்தினானாம். கடும் கோபமுற்ற சிவனார், அகோர மூர்த்திவடிவம் எடுத்து, அசுரனை அழித்தாராம்.

அசுரனால் ஏற்பட்ட காய வடுக்கள், இத்தலத்தில் உள்ள நந்தியின் மேல் இன்றும் இருப்பதைக் காணலாம்.

இக்கதையின் சாரம்சம் என்னவென்றால், எதிரிகளால், தொல்லைகளுக்கு உள்ளாகும் பக்தர்கள், இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால், எதிரிகளின் தொல்லைகள் காணாமல் போய்விடும். அதாவது இருக்காது. எதிரிகளே
இல்லாமல் போய்விடுவார்கள் என்பது நம்பிக்கை!
-------------------------------------------------------------------------------------------------------.
பிள்ளை இடுக்கு அம்மன்:

பிள்ளையை எடுக்கிய அம்மன் என்று பொருள் கொள்க! ஒருமுறை திருஞான சம்பந்த சுவாமிகள், இத்தலத்திற்கு வந்தபோது, அப்பகுதி மொத்தமும் சிவனார் வடிவத்தையே கண்ணுற, அவற்றைத் தன் காலடியால், கடந்து, அல்லது தாண்டிச் சென்று கோவிலின் உட்புறம் உறையும், சிவனாரை எப்படி வணங்குவது என்று கலங்கி நிற்க, பெரியநாயகி அம்மன் அவருக்கு உதவ முன் வந்தாராம்.

அம்மையே, அவர்முன் தோன்றி, அவரைப் பிள்ளையாக்கித் தன் இடுப்பில் ஏற்றிக்கொண்டு சென்று சுவாமியைத் தரிசிக்க வைத்தாராம். அதனால் இக்கோவிலில் உறையும் பெரியநாயகி அம்மனுக்கு, பிள்ளை இடுக்கி அம்மன்
என்னும் பெயரும் உண்டு. பிள்ளையை எடுக்கியவடிவில் அம்மனுக்கு இங்கே உருவச்சிலையும் உண்டு. அதுவும் இக்கோவிலின் தல வரலாறு. ஆகவே அதையும், நம்புங்கள். அல்லது நம்பாமல் விடுங்கள். அது உங்கள் விருப்பம்.
-------------------------------------------------------------------------------------------------------
மெய்கண்டாரின் கதை:

அச்சுதகாளப்பர் என்னும் சிவபக்தருக்கு, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தபோது, தனது குருவின் அறிவுரைப்படி, இத்தலத்தில் உறையும் ஸ்வதாரண்யேஸ்வரரை, மூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பின் பிரார்த்திக்க,
இறையருளால், குழந்தை வரம் பெற்றாராம். அத்துடன் அக்குழந்தைக்கு மெய்கண்டார் என்றும் பெயரிட்டாராம்.

அந்த மெய்கண்டார்தான் பின்னாளில் ’சிவஞானபோதம்’ என்னும் அற்புத நூலை எழுதினாராம்.

இக்கோவிலுக்குச் சென்று பிரார்த்திக்கும் பக்தர்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது இக்கதையின் சாராம்சம்,
--------------------------------------------------------------------------------------------------------
அதுபோல ஒருமுறை துர்வாச முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க, இந்திரன், இத்தலத்தில்தான் பிரார்த்தனை செய்தான் என்னும் உபகதையும் உண்டு. பதிவின் நீளம் கருதி அதைக் கொடுக்கவில்லை
---------------------------------------------------------------------------------------------------------
முக்கியமான செய்திக்கு வருவோம். புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், வித்தைக் குறைவு. அக்குறைபாடு உடையவர்கள், குறிப்பாகக் குழந்தைகளை இத்தலத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்து பிரார்த்தனை செய்தால், அக்குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. இங்கே வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம்
இருந்து மேற்கூறியவற்றை வைத்து வழிபடலாம்.

புதன்கிழமைகளில், இக்கோவிலில் விஷேச பூஜைகள் உண்டு. வழிபாடுகள் உண்டு. ஆண்டுக்கொருமுறை நடைபெறும் பிரம்மோத்சவ விழா மாசி மாதம் நடைபெறும்

அன்புடன்
வாத்தியார்

மேலதிகத்தகவல்:

Mercury is the lord to bless with good education, knowledge, eloquence, music, astrology, mathematics, sculpture, medicine, scholarship in languages. A temple for Chandra (moon) the father of Mercury is just opposite to the Mercury with Chandra Pushkarani theertha. If mercury is not favourably placed in a horoscope, the native may not have children. Also he/she will have nervous debility and lack of knowledge. They have to propitiate Lord Mercury. இசைக்கலைஞர்களும் மேன்மை பெற வழிபட வேண்டிய ஸ்தலம் இது.

வாழ்க வளமுடன்!

38 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,

    பு(த்)தனார் பற்றிய விவரங்களுக்கு நன்றிகள் ஐயா!
    தலவரலாறு......ரீலா? ரியலா?.........
    ஜோதிடத்தை (உண்மையை) நம்புவோர் அனைத்தையும் நம்புவோரே.
    ஜோதிடம் தெய்வத்தைப் பற்றிய அறிவை "Fine Tune" செய்கிறது....
    இந்த நவீன உலகில் எல்லாவற்றிற்குமே நிரூபணம் கேட்கும் நிலை.....
    பூமியை முதலில் தட்டை என்று நிரூபித்தார்கள்... பிறகு அது உருண்டை என்று நிரூபித்தார்கள்..... நிரூபிப்பதே நம்பிக்கை என்றானப் பிறகு?...
    ஆண்டவன் படைப்பில் உள்ள அதிசயங்களை இந்த ஆறறிவு மட்டும் காட்டாது... சுனாமி போன்றதொரு பேரிடர்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள.. அதிர்வுகளை உணர்ந்துக் கொள்ள சக்தியை பெற்ற விலங்கினங்கள் ஆறறிவுக் கொண்ட மனிதனைவிட உயர்ந்து நிற்கின்றன... நேற்றையச் செய்தித்தாளில் திருச்சியில் ஒரு சகோதிரி சூர்யவம்ச திரைக்கதையை உண்மையாக்கி இருக்கிறார் என்பதைப் பார்த்தபோது...... ஆக "ரீல்கள்-ரியலாகும்" போது "ரியல்கள்-ரியல்கள்" தான் மாற்றுக் கருத்து வேண்டாம். யாருக்கு எதுவேண்டும் என்பதை அந்த மகா சக்தியே தீர்மானிக்கிறது.... இவனுக்கு அழகு, இவனுக்கு கல்வி, இவனுக்கு பொருள் என்று அவனவன் தேவையை நம்மை விட இறைவனே அறிவான்....அவனேக் காரணம்.. அவனே சாட்சி.... அவனே என்னை இப்படிச் செய்தவன்.....எல்லாம் ஆனவன் அவனே...
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. we can get buses from mayiladuthurai to this temple. i think its 20 kms far from mayiladuthurai.

    ReplyDelete
  3. Good Morning,

    I'd been there to buthan temple more than couple of times. It was good to be there.

    Studied well after been there and still.

    The presentation of this lesson is good.

    :)

    ReplyDelete
  4. புராணக் கதைகள் எல்லாம் கப்ஸா என்பது இல்லை.பல கோயில்களின்
    ஸ்தல புராணங்க‌ளை இணைத்து வைத்துப் பார்த்தால் ஒன்றுக்கொன்று
    தொடர்புடைய வரலாறே கிடைக்கும்.பொதுவாக நல்லவனாகத் தவம் செய்து
    மும்மூர்த்திகள் யாராவது ஒருவரிடம் வரம் பெற்ற அசுர குண்முடையோன்
    அஹங்காரம் மேலிட அனைவருக்கும் தீங்கு விளைவிக்கத் துவங்கும் போது
    மாற்று தேவதா ஸ்வ‌ரூபம் அசுரனை அழித்து,யாவரையும் காத்தது என்பதே
    மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டாலும், அந்த அந்த‌ இடத்திற்கான புவியியல், சுற்றுச் சூழல்,அங்குள்ள பயனுள்ள காரணிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஸ்தல விருட்சம் என்னவோ அதை வைத்து, மண்ணின்
    வளத்தைச் சொல்ல அறிந்து இருந்த‌னர்.

    ஸ்வேதாரண்யம் என்று எழுத வேண்டும்.ஸ்வேதம் என்றால் வெண்மை.ஆரண்யம் என்றால் வனம். ஸ்வேதாரண்யேஸ்வரர் என்றால்,
    வெண்காட்டில் உறையும் ஆண்டவர்.

    கயாவில் விஷ்ணு பாதம் உள்ளது.அங்கு சென்று நீத்தார் கடன் தீர்ப்பது
    மக்கள் வழக்கம்.சுத்த சைவ மரபுடையவர்களுக்காக சிவபாதம் திருவெண்காட்டில் உள்ளது.இங்கு வந்து பிண்டம் போடுதல் , 5 குளங்களிலும்
    நீராடுத‌ல் எல்லாம் ந‌ம் குல‌த்தில் உதித்து ம‌றைந்த‌ முன்னோர்க‌ளுக்கு ந‌ற்க‌தியை நோக்கி அவ‌ர்க‌ளை முன்னேற்ற‌ம‌டைய‌ச் செய்ய‌ நாம் செய்ய‌
    வேண்டிய‌ பித்ரு க‌ர்மாக்க‌ளாகும்.

    ReplyDelete
  5. Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    பு(த்)தனார் பற்றிய விவரங்களுக்கு நன்றிகள் ஐயா!
    தலவரலாறு......ரீலா? ரியலா?.........
    ஜோதிடத்தை (உண்மையை) நம்புவோர் அனைத்தையும் நம்புவோரே.
    ஜோதிடம் தெய்வத்தைப் பற்றிய அறிவை "Fine Tune" செய்கிறது....
    இந்த நவீன உலகில் எல்லாவற்றிற்குமே நிரூபணம் கேட்கும் நிலை.....
    பூமியை முதலில் தட்டை என்று நிரூபித்தார்கள்... பிறகு அது உருண்டை என்று நிரூபித்தார்கள்.....
    நிரூபிப்பதே நம்பிக்கை என்றானப் பிறகு?... ஆண்டவன் படைப்பில் உள்ள அதிசயங்களை இந்த ஆறறிவு மட்டும் காட்டாது... சுனாமி போன்றதொரு பேரிடர்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள.. அதிர்வுகளை உணர்ந்துக் கொள்ள சக்தியை பெற்ற விலங்கினங்கள் ஆறறிவுக் கொண்ட மனிதனைவிட உயர்ந்து நிற்கின்றன... நேற்றையச் செய்தித்தாளில் திருச்சியில்
    ஒரு சகோதிரி சூர்யவம்ச திரைக்கதையை உண்மையாக்கி இருக்கிறார் என்பதைப் பார்த்தபோது...... ஆக "ரீல்கள்-ரியலாகும்" போது "ரியல்கள்-ரியல்கள்" தான் மாற்றுக் கருத்து வேண்டாம். யாருக்கு எதுவேண்டும்
    என்பதை அந்த மகா சக்தியே தீர்மானிக்கிறது.... இவனுக்கு அழகு, இவனுக்கு கல்வி, இவனுக்கு பொருள் என்று அவனவன் தேவையை நம்மை விட இறைவனே அறிவான்....அவனேக் காரணம்.. அவனே சாட்சி.... அவனே என்னை இப்படிச் செய்தவன்.....எல்லாம் ஆனவன் அவனே... நன்றிகள் குருவே!///////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  6. /////govind said...
    we can get buses from mayiladuthurai to this temple. i think its 20 kms far from mayiladuthurai.//////

    தமிழ்நாட்டில் பேருந்துகளுக்கு ஏது பஞ்சம்? தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. //SP Sanjay said...
    Good Morning,
    I'd been there to buthan temple more than couple of times. It was good to be there.
    Studied well after been there and still. The presentation of this lesson is good.:)////

    சென்று வந்ததற்குப் பிறகு நன்கு படித்தேன் என்னும் தகவலுக்கு நன்றி சஞ்சை!

    ReplyDelete
  8. ////kmr.krishnan said...
    புராணக் கதைகள் எல்லாம் கப்ஸா என்பது இல்லை.பல கோயில்களின் ஸ்தல புராணங்க‌ளை இணைத்து வைத்துப் பார்த்தால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய வரலாறே கிடைக்கும்.பொதுவாக நல்லவனாகத் தவம் செய்து
    மும்மூர்த்திகள் யாராவது ஒருவரிடம் வரம் பெற்ற அசுர குண்முடையோன் அஹங்காரம் மேலிட அனைவருக்கும் தீங்கு விளைவிக்கத் துவங்கும் போது
    மாற்று தேவதா ஸ்வ‌ரூபம் அசுரனை அழித்து,யாவரையும் காத்தது என்பதே மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டாலும், அந்த அந்த‌ இடத்திற்கான புவியியல், சுற்றுச் சூழல்,அங்குள்ள பயனுள்ள காரணிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஸ்தல விருட்சம் என்னவோ அதை வைத்து, மண்ணின்
    வளத்தைச் சொல்ல அறிந்து இருந்த‌னர். ஸ்வேதாரண்யம் என்று எழுத வேண்டும்.ஸ்வேதம் என்றால் வெண்மை.ஆரண்யம் என்றால் வனம். ஸ்வேதாரண்யேஸ்வரர் என்றால்,வெண்காட்டில் உறையும் ஆண்டவர்.
    கயாவில் விஷ்ணு பாதம் உள்ளது.அங்கு சென்று நீத்தார் கடன் தீர்ப்பது மக்கள் வழக்கம்.சுத்த சைவ மரபுடையவர்களுக்காக சிவபாதம் திருவெண்காட்டில் உள்ளது.இங்கு வந்து பிண்டம் போடுதல் , 5 குளங்களிலும் நீராடுத‌ல் எல்லாம் ந‌ம் குல‌த்தில் உதித்து ம‌றைந்த‌ முன்னோர்க‌ளுக்கு ந‌ற்க‌தியை நோக்கி அவ‌ர்க‌ளை முன்னேற்ற‌ம‌டைய‌ச் செய்ய‌ நாம் செய்ய‌ வேண்டிய‌ பித்ரு க‌ர்மாக்க‌ளாகும்.///////

    ஸ்வேதாரண்யம் என்பதற்கு விளக்கம் சொன்னமைக்கு நன்றி கிருஷ்ணன் சார். எனக்கு வடமொழி தெரியாது.
    பதிவில் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கும் மேலதிகத்தகவல்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  9. நல்ல தகவல்கள்.

    திரு. ஆலாசியம் ‍‍‍//நேற்றையச் செய்தித்தாளில் திருச்சியில்
    ஒரு சகோதிரி சூர்யவம்ச திரைக்கதையை உண்மையாக்கி இருக்கிறார்// இது என்ன செய்தி? விவரம் கூறமுடியுமா?

    ReplyDelete
  10. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    நவக்கிரஹ ஸ்தலங்களில், புதன் கிரகத்திற்கான திருவெண்காடு ஸ்ரீ புதன் பகவான் கோவில் படம் மற்றும் ஸ்ரீ புதன் பகவான் படம் மிக நன்றாக உள்ளது.
    ஸ்தலபுராணம்,புதன் பற்றிய வரலாறு,ஜோதிடத்தில் புதன் விவரங்கள் விளக்கமாக உள்ளது.தங்களுக்கு மிக்க நன்றி.


    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    ReplyDelete
  11. Strong 6th house will give standing power to face any situation. எதிரிகள்/எதிர்ப்புகள் இருக்க வாய்ப்பில்லை. (எல்லாமே நண்பர்கள்தான்). இருந்தாலும் நாம் இருக்கும் திசை பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். இவ்வளவுதான் எனக்குத் தெரிந்தது. தாங்கள் மனதில் என்ன நினைத்திருக்கிறீர்களோ.

    ReplyDelete
  12. ஒரு வலைதலத்தில் படித்தது. இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

    The best Yoga for the destruction of enemies is Jupiter in the Ascendant &
    the North Node in the sixth. This is also known as Ashta Lakshmi Yoga.
    This Yoga will wipe out enemies !

    ReplyDelete
  13. வாத்தியார் மீண்டும் வந்து விட்டார் அல்லது பிரச்சினைகளிலிருந்து மீண்டு வந்து விட்டார். வந்ததுமே எனக்கு பிடித்த கிரகமான புதனின் தலத்தைப் பற்றிய பாடம் கண்டதில் மகிழ்ச்சி. நான் பிறந்தது புதன் கிழமை, லக்ன/ராசிக்காதிபதி மட்டுமல்ல நவாம்சம் மற்றும் பல அம்சங்களின் லக்னத்திற்கும் அவர்தான் அதிபதி. பெயரின் கூட்டு எண்ணும் புதனின் எண்ணான 5தான். எந்த முக்கிய காரியமும் புதன் கிழமை வருவது போல் அமைத்துக் கொள்வதுண்டு.

    ReplyDelete
  14. Dear sir,
    Thanks a lot for the informations regarding budhan graha sthalam.
    I want to share my experience. Budhan is in paaba karthaari in my horoscope and an astrologer adviced me to do Kalvi dosha parigaaram in budhan temple. I gone through as he adviced and found drastic changes in my studies.

    ReplyDelete
  15. ///////Uma said...
    நல்ல தகவல்கள்.
    திரு. ஆலாசியம் ‍‍‍//நேற்றையச் செய்தித்தாளில் திருச்சியில்
    ஒரு சகோதிரி சூர்யவம்ச திரைக்கதையை உண்மையாக்கி இருக்கிறார்// இது என்ன செய்தி? விவரம் கூறமுடியுமா?//////

    ஆகா, கேட்டுவிட்டீர்கள் அல்லவா? நிச்சயம் கூறுவார்!

    ReplyDelete
  16. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    நவக்கிரஹ ஸ்தலங்களில், புதன் கிரகத்திற்கான திருவெண்காடு ஸ்ரீ புதன் பகவான் கோவில் படம் மற்றும் ஸ்ரீ புதன் பகவான் படம் மிக நன்றாக உள்ளது.
    ஸ்தலபுராணம்,புதன் பற்றிய வரலாறு,ஜோதிடத்தில் புதன் விவரங்கள் விளக்கமாக உள்ளது.தங்களுக்கு மிக்க நன்றி. வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    வகுப்பறைக்கு வருபவர்களில் மிகவும் சாதுவானவர் நீங்கள்தான். அனைத்தையும் மறுப்பின்றி ஏற்றுப் பின்னூட்டம் இடும் அழகே தனி. உங்களின் இந்தப் பண்பை நானும் கற்றுக்கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  17. //////ananth said...
    Strong 6th house will give standing power to face any situation. எதிரிகள்/எதிர்ப்புகள் இருக்க வாய்ப்பில்லை. (எல்லாமே நண்பர்கள்தான்). இருந்தாலும் நாம் இருக்கும் திசை பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். இவ்வளவுதான் எனக்குத் தெரிந்தது. தாங்கள் மனதில் என்ன நினைத்திருக்கிறீர்களோ.///////

    மற்ற இரண்டை விட்டுவிட்டீர்களே! ஆறம் வீட்டிற்கு இன்னும் இரண்டு துறைகள் (portfolios) உண்டு. நோய், கடன் ஆகிய இரண்டு துறைகள் அவைகள். ஆறாம் வீடு வலுவாக இருந்தால் நோயும் அண்டாது. கடன்களும் ஏற்படாது!

    ReplyDelete
  18. /////ananth said...
    ஒரு வலைதலத்தில் படித்தது. இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
    The best Yoga for the destruction of enemies is Jupiter in the Ascendant &
    the North Node in the sixth. This is also known as Ashta Lakshmi Yoga.
    This Yoga will wipe out enemies !//////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////ananth said...
    வாத்தியார் மீண்டும் வந்து விட்டார் அல்லது பிரச்சினைகளிலிருந்து மீண்டு வந்து விட்டார். வந்ததுமே எனக்கு பிடித்த கிரகமான புதனின் தலத்தைப் பற்றிய பாடம் கண்டதில் மகிழ்ச்சி. நான் பிறந்தது புதன் கிழமை, லக்ன/ராசிக்காதிபதி மட்டுமல்ல நவாம்சம் மற்றும் பல அம்சங்களின் லக்னத்திற்கும் அவர்தான் அதிபதி. பெயரின் கூட்டு எண்ணும் புதனின் எண்ணான 5தான். எந்த முக்கிய காரியமும் புதன் கிழமை வருவது போல் அமைத்துக் கொள்வதுண்டு.//////

    எனக்கும் பிடித்த கிரகம் புதன். எனக்கு ஏழில் புதன். நல்ல நினைவாற்றலைக் கொடுத்தது அவர்தான். ஆனால் பதிவு முன்பே எழுதிவைத்தது. வரிசைப்படி வெளியிட்டுள்ளேன். மூன்று நாட்களாக, கணினி + அகண்ட வரிசை இணைய இணைப்பு இரண்டும் ஒன்று சேர்ந்து படுத்திவிட்டது. இப்போது முற்றிலும் சரியாகிவிட்டது!

    ReplyDelete
  20. /////Dr.Vidhya said...
    Dear sir,
    Thanks a lot for the informations regarding budhan graha sthalam.
    I want to share my experience. Budhan is in paaba karthaari in my horoscope and an astrologer adviced me to do Kalvi dosha parigaaram in budhan temple. I gone through as he adviced and found drastic changes in my studies./////

    புதனை வழிபட்டு, மேன்மையுற்ற செய்தியைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. ஐயா,

    புதன் அஸ்தமனம் ஆனாலும் அது வித்தைக் குறைபாடாகக் கருதப்படுமா?

    ReplyDelete
  22. ஐயா வணக்கம்!

    தனி ஒரு மனிதனால் எத்தனையோ வேலை மற்றும் இடையிருகளுக்கு இடையில் எல்லா விசையங்களை அருமையாக பொறுமையாக விளக்கத்துடன் விடை தருவதிற்கு தங்களால் எப்படி முடிகின்றது.

    வாழ்க்கையில் இன்னும் பாதி தூரம் செல்ல வேண்டி உள்ளதால் அனுபஷ்தரின் அனுபவங்களை கேட்கின்றேன் ஐயா!

    ****************>>>><<**********

    ஒரு புதிய யோசனை ஐயா

    ஒரு ஜீவனின் உண்மையான உள்மனது, வெளிமனது, நடத்தை, செயல் காரியங்களை வைத்து அவனுடைய ஜாதகம் இப்படி தான் என்று தீர்மானம் செய்ய முடியுமா ஐயா

    (எ, கா )

    25 வயது வரைக்கும் வாழ்ந்த ஒருவனின் உண்மையான வாழ்க்கை வரலாறை பார்த்தாலே போதுமானதாக இருக்கும் என்பது அடியவனின் கருத்து மட்டும்.

    ReplyDelete
  23. அய்யா. . .
    பட்டினத்தார் முத்தி பெற்ற தலம் திருவெற்றியூர் தானே . . .
    திருவெண்காடன் என்பது அவர் இயற் பெயர் மற்றும் அல்ல . .
    அவர் அவதரித்த தலமும் அது தானே ..

    மேலும் ஒரு செய்தி

    பணத்தின் மீது தான் என்ற பாடலை எத்தனை முறை படிப்பது . . .

    மாற்றங்கள் இதில் வரக் கூடாதா . . (கிரகங்களில் மட்டும் தான் வரவேண்டுமா?)

    இந்த "குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா . . ."

    ReplyDelete
  24. //////Anandhi said...
    ஐயா,
    புதன் அஸ்தமனம் ஆனாலும் அது வித்தைக் குறைபாடாகக் கருதப்படுமா?/////////

    புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்ற வாதிப்போரும் உண்டு. சூரியனும் புதனும் சேர்ந்திருந்தால் ஆதித்ய யோகம். ஆகவே அது குறைபாடல்ல!

    ReplyDelete
  25. //////kanna said...
    ஐயா வணக்கம்!
    தனி ஒரு மனிதனால் எத்தனையோ வேலை மற்றும் இடையிருகளுக்கு இடையில் எல்லா விசையங்களை அருமையாக பொறுமையாக விளக்கத்துடன் விடை தருவதிற்கு தங்களால் எப்படி முடிகின்றது.
    வாழ்க்கையில் இன்னும் பாதி தூரம் செல்ல வேண்டி உள்ளதால் அனுபஷ்தரின் அனுபவங்களை கேட்கின்றேன் ஐயா!
    ****************>>>><<**********
    ஒரு புதிய யோசனை ஐயா
    ஒரு ஜீவனின் உண்மையான உள்மனது, வெளிமனது, நடத்தை, செயல் காரியங்களை வைத்து அவனுடைய ஜாதகம் இப்படி தான் என்று தீர்மானம் செய்ய முடியுமா ஐயா
    (எ, கா )
    25 வயது வரைக்கும் வாழ்ந்த ஒருவனின் உண்மையான வாழ்க்கை வரலாறை பார்த்தாலே போதுமானதாக இருக்கும் என்பது அடியவனின் கருத்து மட்டும்.//////

    இரட்டை வேடம் போடும் ஆசாமிகளே அதிகம். நீங்கள் சொல்வதைப்போல, உண்மையான உள்மனது, வெளிமனது, நடத்தை, செயல் காரியங்களை வைத்து ஒருவனுடைய ஜாதகம் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானம் செய்யமுடியாது.

    ReplyDelete
  26. /////visu said...
    அய்யா. . .
    பட்டினத்தார் முத்தி பெற்ற தலம் திருவெற்றியூர் தானே . . .
    திருவெண்காடன் என்பது அவர் இயற்பெயர் மற்றும் அல்ல . .
    அவர் அவதரித்த தலமும் அதுதானே ..///////

    ஆமாம். நீங்கள் சொல்வது சரி. பதிவில் திருத்திவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    மேலும் ஒரு செய்தி
    பணத்தின் மீது தான் என்ற பாடலை எத்தனை முறை படிப்பது . . .
    மாற்றங்கள் இதில் வரக் கூடாதா . . (கிரகங்களில் மட்டும் தான் வரவேண்டுமா?)
    இந்த "குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டு கேட்குதா . . ."

    ஆகா, உங்கள் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி பாடல் வரிகளை 2 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிவிடுகிறேன்!

    ReplyDelete
  27. அண்ணா !!


    //////Anandhi said...
    ஐயா,
    புதன் அஸ்தமனம் ஆனாலும் அது வித்தைக் குறைபாடாகக் கருதப்படுமா?/////////

    \\புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்ற வாதிப்போரும் உண்டு. சூரியனும் புதனும் சேர்ந்திருந்தால் ஆதித்ய யோகம். ஆகவே அது குறைபாடல்ல!\\

    அருமை !! ஆனால் ராகுவுடன் 12 -இல் கடகத்தில் இருந்தால் (சூரியன், புதன் , ராகும் ஒரே வீட்டில்)????

    ReplyDelete
  28. //////media said...
    அண்ணா !!
    //////Anandhi said...
    ஐயா,
    புதன் அஸ்தமனம் ஆனாலும் அது வித்தைக் குறைபாடாகக் கருதப்படுமா?/////////
    \\புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்ற வாதிப்போரும் உண்டு. சூரியனும் புதனும் சேர்ந்திருந்தால் ஆதித்ய யோகம். ஆகவே அது குறைபாடல்ல!\\
    அருமை !! ஆனால் ராகுவுடன் 12 -இல் கடகத்தில் இருந்தால் (சூரியன், புதன் , ராகும் ஒரே வீட்டில்)????/////

    3 கிரகங்கள் ஒரே வீட்டில் எனும்போது அது கிரக யுத்தம் எனும் கணக்கில் வரும். அத்துடன் 12 ஆம் வீட்டிற்கான பாதகங்களும் சேர்ந்துவரும்!

    ReplyDelete
  29. Dear Sir

    10th Lord is in 10th Place (Simam-SUN with Sukkiran) -Viruchiga Lagnam.

    SUN - Suya paral -4

    Very Nice and Lengthy lesson. Thanks Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  30. அன்புள்ள அண்ணா !!

    கடக லக்னம் ....லகினாதிபதி சந்திரன் 12 - இல் மறைவு மற்றும் மாந்தியுடன் . ஆனால் சூரியன் 4 -இல் நீசம் மற்றும் புதனுடன் சேந்திருபதால் நீசபங்கம் ஆகிறது மற்றும் குருவுடன் . இதை ஆதித்ய யோகம் என்று சொல்லலாமா ?? மாந்தி அமர்ந்திருக்கும் ராசிநாதன் புதன். இந்த ஜாதகத்துக்கு ராசி அதிபதியும் புதன் தான். வர இருக்கும் புதன் திசை இவருக்கு எந்த மாதிர்யான பலனை தரும் ? மேலும் தீய பலன் எனில் இந்த நீச பங்க யோகத்தின் பங்கு என்ன???

    ReplyDelete
  31. அண்ணா!!!

    புதன் பாவ கிரகங்களுதன் சேரும்பொழுது அதுவும் பாவ கிரகமா மாறுகிறது என்று படித்தேன் .
    இது அதனுடைய ஆட்சி வீட்டிற்கும் பொருந்துமா ?(மிதுனம் மற்றும் கன்னி...உதாரணம் செவ்வாய் உடன் )

    ReplyDelete
  32. ////////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    10th Lord is in 10th Place (Simam-SUN with Sukkiran) -Viruchiga Lagnam.
    SUN - Suya paral -4
    Very Nice and Lengthy lesson. Thanks Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  33. /////Nattu said...
    அன்புள்ள அண்ணா !!
    கடக லக்னம் ....லகினாதிபதி சந்திரன் 12 - இல் மறைவு மற்றும் மாந்தியுடன் . ஆனால் சூரியன் 4 -இல் நீசம் மற்றும் புதனுடன் சேந்திருப்பதால் நீசபங்கம் ஆகிறது மற்றும் குருவுடன் . இதை ஆதித்ய யோகம் என்று சொல்லலாமா ?? மாந்தி அமர்ந்திருக்கும் ராசிநாதன் புதன். இந்த ஜாதகத்துக்கு ராசி அதிபதியும் புதன் தான். வர இருக்கும் புதன் திசை இவருக்கு எந்த மாதிர்யான பலனை தரும் ? மேலும் தீய பலன் எனில் இந்த நீச பங்க யோகத்தின் பங்கு என்ன???///////

    சூரியனுடன் அந்த இடத்திற்கு உச்சனான சனி சேர்ந்தால் அல்லவா நீசபங்கம்? துலாமில் சூரியனுடன் புதன் சேர்வது நீசபங்கம் என்று யார் சொன்னது? எல்லோருக்கும் பயன்படும்படி பொதுக் கேள்விகளைக் கேளுங்கள். உங்கள் சொந்த ஜாதகத்தைவைத்துக் கேள்விகள் கேட்பதைத் தவிருங்கள்!

    ReplyDelete
  34. /////Nattu said...
    அண்ணா!!!
    புதன் பாவ கிரகங்களுதன் சேரும்பொழுது அதுவும் பாவ கிரகமா மாறுகிறது என்று படித்தேன் .
    இது அதனுடைய ஆட்சி வீட்டிற்கும் பொருந்துமா ?(மிதுனம் மற்றும் கன்னி...உதாரணம் செவ்வாய் உடன் )/////

    பொருந்தும்!

    ReplyDelete
  35. thanks a lot ...one more thing that is not my horoscope...now a days i am collecting my friends horoscopes..from one of the book i have raised that questions...anyway i am a new student..its really helpful to learn a new thing in our life..nice experiance....thank once again....

    ReplyDelete
  36. ////Nattu said...
    thanks a lot ...one more thing that is not my horoscope...now a days i am collecting my friends horoscopes..from one of the book i have raised that questions...anyway i am a new student..its really helpful to learn a new thing in our life..nice experiance....thank once again....////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. சார் வணக்கம், திருவெண்காடு பற்றிய வரலாறு அற்புதம். மேலும் குழந்தை பாக்கியம் பெற அச்சுதகாளப்பர், திருஞானசம்பந்தர் திருவெண்காட்டில் பாடிய பதிகத்தை பாடி சிவபெருமானை வணங்கி குழந்தை பாக்கியம் பெற்றார் என்றும் சொல்லுவார்கள். குழந்தை இல்லாதவர்கள் அந்த பதிகத்தை பாடி வணங்கினால் குழந்தை பிறக்கும்.

    ReplyDelete
  38. ////ilayaraja said...
    சார் வணக்கம், திருவெண்காடு பற்றிய வரலாறு அற்புதம். மேலும் குழந்தை பாக்கியம் பெற அச்சுதகாளப்பர், திருஞானசம்பந்தர் திருவெண்காட்டில் பாடிய பதிகத்தை பாடி சிவபெருமானை வணங்கி குழந்தை பாக்கியம் பெற்றார் என்றும் சொல்லுவார்கள். குழந்தை இல்லாதவர்கள் அந்த பதிகத்தை பாடி வணங்கினால் குழந்தை பிறக்கும்.///

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com