மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.5.10

அங்கேயும் யுத்தம்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அங்கேயும் யுத்தம்!

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..
- கவியரசர் கண்ணதாசன்
+++++++++++++++++++++++++
கிரக யுத்தமும், யோக பலன்கள் கிடைக்காமல் போவதற்கான காரணங்களும்!

ஜோதிடம் கடலைவிட ஆழமானது. கற்பவர்களுக்குப் பல சிரமங்களை அல்லது சிக்கல்களைக் கொடுக்ககூடியது.

Astrology is a deep and complicated science.Difficult to analyze or understand

ஜாதகத்தைப் பார்க்கும்போது நிறைய யோகங்கள் இருப்பதைப் போன்று தோன்றும். ஆனால் ஜாதகனைப் பார்த்தால், களை இழந்து காணப்படுவான். அவன் ஜாதகத்தில் உள்ள முக்கியமான யோகங்கள் செல்லாமல்
அதாவது பயன் தராமல் போயிருக்கும்.

இருந்தால் பலன் தரவேண்டும்! ஏன் தரவில்லை?

இருப்பதால், தரவேண்டும் என்பதில்லை. அதைத் தரவிடாமல் பல தடைகள் ஜாதகத்திலேயே இருக்கலாம்.

ஆளைப் பார்த்தால் ஜம்மென்று ஜவான் போல இருப்பான். ஆனால் அவனை மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கினால் தெரியும். அவன் உடம்பில் எத்தனை ஓட்டைகள் இருக்கின்றன - எத்தனை வியாதிகள் இருக்கின்றன என்று தெரியவரும்.

அதுபோல ஜாதகத்தையும் அலசினால், உள்ள குறைகள் தெரியும். அந்தக் குறைகளை வைத்து, ஜாதகத்தில் முடங்கிப்போன கிரகங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

முடங்கிப் போன அவைகளால் உரிய பலனை எப்படித் தரமுடியும்?

இன்றையப் பாடம் அதைப் பற்றியதுதான். அதாவது கிரகங்களின் முடக்கடியைப் பற்றியது.
+++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு உதாரண ஜாதகம் கொடுத்துள்ளேன்.

ஜாதகன் 13.10.2009 அன்று காலை 6:30 மணிக்குச் சென்னையில் பிறந்தான். ஆமாம், அப்படி வைத்துக் கொள்ளுங்கள்

கடகம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகளில் 9 கிரகங்களும் அடைபட்டுள்ளன.

லக்கினம் துலாம். லக்கினாதிபதி சுக்கிரன் நீசம். அதுவும் 12ஆம் வீட்டில் மறைவு.
ஆனால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். எப்படி? சுக்கிரன், உச்சமான புதனுடன் சேர்ந்து நீசபங்க ராஜ யோகத்தைப் பெற்றுள்ளான். அதோடு லாபாதிபதி சூரியனுடன் சேர்ந்திருக்கிறான். சூரியனும் புதனும் சேர்ந்ததால் புத ஆதித்ய யோகமும் உள்ளது.

துலா லக்கினத்திற்கு யோககாரகனான சனியும் அங்கே உள்ளார்.எல்லாம் உள்ளது முழு யோகமா? இல்லை ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் உள்ளதால், முதலில் கிரக யுத்தம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
-----------------------------------------------------
கிரகயுத்தம் என்றால் என்ன?

அதை முதலில் பார்ப்போம்!
.......................
இரண்டு கிரகங்கள் ஒரு இடத்தில், ஒரு பாகைக்கும் குறைவான அமைப்பில் ஒன்று சேரும்போது, அதிக பாகையில் நிற்கும் கிரகம் தோற்றுவிடும். அதை விடக் குறைந்த பாகையில் உள்ள கிரகம் வெற்றி பெறும்.
சூரியன், சந்திரன், ராகு & கேது ஆகிய கிரகங்களுக்கு இந்த விதி இல்லை! செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கு மட்டுமே கிரக யுத்த விதிகள். அதை மனதில் கொள்க!

Planets defeated in the Planetary war. Planetary war occurs when two planets are in conjunction within one degree. The victor is the planet whose longitude is less. The defeated one is the planet whose longitude is more.

A planetary war, or graha yuddha, occurs in a chart when two planets (other than the Sun, Moon, Rahu. and Ketu) are within 1 degree of one another. This is a controversial topic in astrology because there are conflicting methods given, in classic texts, for determining which planet wins the war and what the effects are.
++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரண ஜாதகத்தில்:
கன்னி ராசியில் நான்கு கிரகங்கள் உள்ளன. அதில் சனியும், சுக்கிரனும் ஒரு பாகைக்கும் குறைவான நிலையில் உரசிக் கொண்டு கிரக யுத்தத்தில் உள்ளன.

சூரியன் 177.16.55
புதன் - 161.43.09
சனி - 155.28.42
சுக்கிரன் - 155.05.38

சுக்கிரன் - சனி இருவரின் யுத்தத்தில், இந்த ஜாதகத்தைப் பொறுத்தவரை, சுக்கிரன் வெற்றி பெறுவார்.

அதாவது லக்கினாதிபதி வேற்றி பெறுவார். யோககாரகன் சனி தோற்றுவிடுவான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜாதகத்தில் உள்ள யோகங்கள் கிடைக்காமல் போவதற்கான கிரக லைப்பாடுகள் அல்லது அமைப்புக்கள் சில உள்ளன. அவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன்

1. நீசமான கிரகங்கள்
2. யுத்தத்தில் தோற்ற கிரகங்கள்
3. மறைவிடங்களில் மாட்டிக் கொண்ட கிரகங்கள்
4. பாவ சந்திப்பில் சிக்கிக்கொண்ட கிரகங்கள்
5. வக்கிரம் பெற்ற கிரகங்கள்
6. அஸ்தமனத்தில் அடிபட்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் கிரகங்கள்
7. ராகு அல்லது கேதுவின் கூட்டணியில் சேர்ந்துள்ள கிரகங்கள்
8. அஷ்டகவர்க்கத்தில் 3ம் அதற்குக் கீழான பரல்களையும் பெற்று வலிமை இழந்து தவிக்கும் கிரகங்கள்
9. 6, 8, 12ஆம் வீடுகளுக்கு அதிபதியாக நேர்ந்துவிட்ட கிரகங்கள்
-------------------------------------------
1) Debilitated Planets
2) Defeated Planets ( defeated in planetary war )
3) Planets in inimical houses.
4) Planets in Bhava Sandhis
5) Retrograde Planets
6) Combust Planets
7) Planets associated with the North Node
8) Vibala Planets ( planets devoid of strength )
9) Lords of 6, 8 & 9 houses
All these works against yogas
இவைகள் ஜாதகனின் யோகத்திற்கு வேட்டு வைக்கும் நிலைப்பாடுகள் அல்லது அமைப்புக்கள்.
-----------------------------------------------
1. நீசமான கிரகங்கள் (Debilitated Planets) நீசமான கிரகங்கள் நன்மையான பலனைத் தராது. (நவாம்சத்தில் நீசம் கேன்சலாகியுள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்)

2) யுத்தத்தில் தோற்ற கிரகங்கள் (Defeated Planets) இரண்டு கிரகங்கள் ஒரு இடத்தில், ஒரு பாகைக்கும் குறைவான அமைப்பில் ஒன்று சேரும்போது, அதிக பாகையில் நிற்கும் கிரகம் தோற்றுவிடும். அதை விடக் குறைந்த பாகையில் உள்ள கிரகம் வெற்றி பெறும்.

3. மறைவிடங்களில் மாட்டிக் கொண்ட கிரகங்கள் 6,8,12ஆம் வீடுகளில் மாட்டிக் கொண்ட கிரகங்கள் அவைகள் தீய இடங்கள் Planets in Inimical Houses இந்த இடங்களில் உள்ள கிரகம் வலிமை இல்லாமல் இருக்கும் வலிமை இல்லாமல் இருப்பதால் நன்மைகளைச் செய்யாது. அதாவது ஒரு கிரகம் அமரும் 6,8, 12ஆம்
இடத்து அதிபதிகள் வலிமையாக இருந்தால், அதாவது, ஆட்சி அல்லது உச்ச வீடுகளில் இருந்தாலும் அல்லது சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் அந்தத் தீமைகள் கேன்சலாகிவிடும்.

ஜாதகன் நன்மைகளைப் பெறுவான்

4. பாவ சந்திப்பில் அதாவது ராசி சந்திப்பில் இருக்கும் கிரகங்கள் (Borderல் இருக்கும் கிரகங்கள். மேஷம் 30 பாகையில் முடிந்து ரிஷபம் 30.01ல் ஆரம்பிக்கும். 29.95 பாக முதல் 30.5 பாகை வரை உள்ள இடத்தில்
இருக்கும் கிரகம் பாவ சந்திப்பில் உள்ள கிரகம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட கிரகத்தை வெறும் பார்வையில் வைத்துக் கொண்டு, பலன் சொல்வது தவறாகி விடும் If you are born on a border between 2 rasis, you will incorporate the energies of both the rasis (Signs)

5. வக்கிரகதியில் உள்ள கிரகங்கள்:
சுப கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் உரிய பலனைத் தராது.
தீய கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத அலைச்சலையும், ஊர் ஊராக பெட்டி தூக்கும் வாழ்க்கையையும் கொடுத்து விடும். சனி அல்லது செவ்வாய் வக்கிரகதியில் நின்றால் அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுக்கும்.

ஜாதகன் பல வழிகளிலும் அவதிப்பட நேரிடும். தப்பித்து ஓட முடியாது. அவதிப்பட்டே ஆக வேண்டும்.

6. அஸ்தமனம் ஆகிவிட்ட கிரகங்கள்.Combust Planets சூரியனுடன் 10 பாகைக்குள் இருக்கும் கிரகங்கள் அச்தமனமாகிவிடும். அஸ்தமனமான கிரகத்தால் ஜாதகனுக்கு பலன் கிடைக்காது.

Planets when they become proximate to the Sun, become combust. Combust planets are weak.

7. ராகுவுடன் 12 பாகைகளுக்குள் சேரும் கிரகமும் மெலிவாக இருக்கும். அதாவது வலிமை இல்லாமல் இருக்கும். அதனால் ஜாதகனுக்கு உரிய நன்மைகளைச் செய்ய முடியாது.

Planets in conjuction with Rahu, is considered weak. Conjuction means the planet should be within 12 degrees of the other planet.

8) 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகள் தீயவர்களாகிவிடுவார்கள். அந்த இடத்தின் அதிபதியானால், அவர்கள் அப்படித்தான் செயல்படுவார்கள்

The lords of 6, 8 & 12 are malefics by ownership.
The 6th lord brings diseases & problems from enemies,
The 8th lord brings health hazards and
The 12th lord brings uncontrollable expenditure.
===============================================================
இதற்கு மேல் எழுதினால் ஓவர் டோஸ் ஆகிவிடும். ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இவற்றை வைத்து உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசிக் கொள்ளூங்கள்.எனக்கு அனுப்பி, இவற்றை வைத்து பல கேள்விகள் கேட்டு, பதில் அளிக்கும்படி கேட்காதீர்கள்.

உங்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுத்தருவது மட்டுமே என் வேலை! மீனைப் பிடித்து வறுத்து, மசாலாத் தடவி வேளா வேளைக்குத் தருவது என் வேலை அல்ல! அதற்கு உரிய நேரமும் எனக்கு இல்லை.

கடந்த பாடங்களில் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு பாடத்தையும் அனுப்பியவுடன், 10 முதல் 20 வரை மின்னஞ்சல்கள் உடனே எனக்கு வரும். அவைகள் அனைத்துமே, தங்களுடைய ஜாதகத்தை இணைத்து அல்லது
வெறும் பிறந்த நாள், பிறந்த நேரத்தைக் குறிப்பிட்டு, அதில் பாடத்தில் குறிப்பிட்ட சாதகம் அல்லது பாதகம் இருக்கிறதா? எந்த அளவு இருக்கிறது? என்று விதம் விதமான கேள்விகளைக் கொண்டதாக இருக்கும்.

அத்தனை பேர்களுக்கும், அவர்களைத் திருப்திப்படுத்த, அவர்களுடைய ஜாதகத்தை எனது கணினியில் கணித்து, அலசி ஆராய்ந்து பதில் சொல்வது என்பது- அதுவும் ஒவ்வொரு பாடத்திற்கும் பதில் சொல்வது என்பது நடக்கக்
கூடிய காரியமா சொல்லுங்கள்?

ஆகவே யாரும் உங்களுடைய ஜாதகத்தை வைத்துக் கேள்விகளைக் கேட்காதீர்கள். நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளூங்கள். பொறுமையாகப் படித்துக் கொண்டே வந்தால், ஒரு நாள் அனைத்தும் உங்களுக்குப்
பிடிபடும். அப்போது நீங்களே ஒரு ஜோதிட வல்லுனர் ஆகி விடுவீர்கள். உங்களால் பலருக்கும் பலன் சொல்ல முடியும்!

அடியவன் பாடம் நடத்தும் நோக்கமும் அதுதான்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

34 comments:

  1. good morning to everybody!i have a doubt ....all yogams are also applicable to amsa chart?

    ReplyDelete
  2. Dear Sir

    Paadam Arumai Sir. Nandraga Purindhadhu.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Thank you very much for your fine tuning Sir.

    ReplyDelete
  5. நீ.................ண்ட‌ பாடம்தான்.பொறுமையாகப்படித்தேன். ஒன்றையும் விடாமல் திகுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.ந‌ன்றி

    ReplyDelete
  6. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    கிரகயுத்தம் என்றால் என்ன? என்பதை,
    உதாரண ஜாதகத்தின் மூலமாக நன்கு புரிய வைத்துள்ளீர்கள்.

    ஜாதகத்தில் உள்ள யோகங்கள் கிடைக்காமல் போவதற்கான கிரக நிலைப்பாடுகள்:-கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்பது வகையான அமைப்புகள்

    ஜாதகனின் யோகத்திற்கு வேட்டு வைக்கும் நிலைப்பாடுகள்

    யாவும் அருமையாக கொடுத்துள்ளமைக்கு
    மிக்க நன்றி.
    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-05-11

    ReplyDelete
  7. Iyaa Vanakkam.

    nanraaka ullathu paadam.

    நான் (enpathanai adiyen enpathu nanraaka irukkum enpathu thankalin maanavanin karuththu iyaa ) பாடம் நடத்தும் நோக்கமும் அதுதான்!

    ReplyDelete
  8. ஐயா!!!

    Conjuction means the planet should be within 12 degrees of the other planet.Is there any difference between Conjuction and Combination in astrology?

    பழைய பாடங்களில் பல கிரகங்களின் கூட்டணி(combination) பலன்களை பற்றி சொல்லியுள்ளீர்கள்.அந்த பலன்கள் எல்லாம் 12 டிகிரிக்குள் அவர்கள் அமர்ந்தால் மட்டுமே என்று கருத்தில் கொள்ளலாமா?

    உதாரணம்:ஆரசவுரி யோகம்(conjuction of Saturn and Mars).இவை இரண்டும் 12 டிகிரிக்குள் இருந்தால் மட்டுமே இந்த கெட்ட யோகம் உள்ளதாக எடுத்து கொள்ளலாமா?

    Little bit confusion like you said astrology is deep and complicated science.

    Kindly clarify...

    Thanks&Regards,
    Arul

    ReplyDelete
  9. அய்யாவுக்கு வணக்கம் . சென்னை வெய்யில் சுட்டெரிக்கிறது. கோவை எப்படி?
    புது பாடங்களையும் அவ்வப்போது கொடுத்த வண்ணம் இந்த REVIEW SESSION ஐ தொடர்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..பது வரவின் எதிபார்ப்பினால் ஆர்வம் குறைகிறது..
    கூடுதுரையாரின் வகைபடுத்தப்பட்ட பாடங்களின் தொகுப்பில் இருந்து சமீபத்தில் சேர்ந்த ஆர்வமுள்ள எவருமே எளிதில் எடுக்கக்கூடிய பாடங்களை மறு பதிவிடுவது அவசியம்தானா?

    ReplyDelete
  10. /////govind said...
    good morning to everybody!i have a doubt ....all yogams are also applicable to amsa chart?///////

    ராசியின் விரிவாக்கம்தான் அம்சம்! ஆகவே அம்சத்திற்கும் அவை உண்டு.ச்

    ReplyDelete
  11. //////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Paadam Arumai Sir. Nandraga Purindhadhu.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  12. /////Alasiam G said...
    Thank you very much for your fine tuning Sir.////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  13. /////kmr.krishnan said...
    நீ.................ண்ட‌ பாடம்தான்.பொறுமையாகப்படித்தேன். ஒன்றையும் விடாமல் தொகுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.ந‌ன்றி//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  14. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கிரகயுத்தம் என்றால் என்ன? என்பதை, உதாரண ஜாதகத்தின் மூலமாக நன்கு புரிய வைத்துள்ளீர்கள்.
    ஜாதகத்தில் உள்ள யோகங்கள் கிடைக்காமல் போவதற்கான கிரக நிலைப்பாடுகள்:-கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்பது வகையான அமைப்புகள் ஜாதகனின் யோகத்திற்கு வேட்டு வைக்கும் நிலைப்பாடுகள்
    யாவும் அருமையாக கொடுத்துள்ளமைக்கு
    மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  15. /////Mayakkanna said...
    Iyaa Vanakkam.
    nanraaka ullathu paadam.
    நான் (enpathanai adiyen enpathu nanraaka irukkum enpathu thankalin maanavanin karuththu iyaa ) பாடம் நடத்தும் நோக்கமும் அதுதான்!/////

    உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. பதிவில் திருத்திவிட்டேன். நன்றி!

    ReplyDelete
  16. Dear sir,

    please provide answer to my question.

    For tula lugna if mars and venus are placed in 12 place(kanni) .whether it will give Vibaritha raja yoga or not. how is the marriage life for that person with respect to the above combination .

    ReplyDelete
  17. Padam nandraga ullathu ayya, Amasathil girangalukku Parvai balam illai endru padithirukkirean aanal neengal Yogam irukkirathu endru sollugireral ayya...

    Ondru mattum nadra porikirathu intha Genmam Pathathu Jathagam katru kolluvathurukku...

    Nandri

    ReplyDelete
  18. //////Blogger Arul said...
    ஐயா!!!
    Conjuction means the planet should be within 12 degrees of the other planet.Is there any difference between Conjuction and Combination in astrology?
    பழைய பாடங்களில் பல கிரகங்களின் கூட்டணி(combination) பலன்களை பற்றி சொல்லியுள்ளீர்கள்.அந்த பலன்கள் எல்லாம் 12 டிகிரிக்குள் அவர்கள் அமர்ந்தால் மட்டுமே என்று கருத்தில் கொள்ளலாமா?////////

    கூட்டணிக்கான பலன் 12 டிகிரிக்குள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  19. ///////Blogger minorwall said...
    அய்யாவுக்கு வணக்கம் . சென்னை வெய்யில் சுட்டெரிக்கிறது. கோவை எப்படி?
    புது பாடங்களையும் அவ்வப்போது கொடுத்த வண்ணம் இந்த REVIEW SESSION ஐ தொடர்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..பது வரவின் எதிபார்ப்பினால் ஆர்வம் குறைகிறது..
    கூடுதுரையாரின் வகைபடுத்தப்பட்ட பாடங்களின் தொகுப்பில் இருந்து சமீபத்தில் சேர்ந்த ஆர்வமுள்ள எவருமே எளிதில் எடுக்கக்கூடிய பாடங்களை மறு பதிவிடுவது அவசியம்தானா?////////

    வெய்யில் மட்டுமா? விலைவாசி, மின்வெட்டு, பெருகிவரும் முறையற்ற போக்குவரத்து என்று எல்லாமே சுட்டெரிக்கிறது மைனர்!

    மின்னஞ்சலில் இருந்த 13 பாடங்களில், ஒன்பது பாடங்களை வகுப்பறையில் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் 4 பாடங்கள் உள்ளன. அதையும் வெளியிட்டால் நடத்திய பாடங்களில் எதுவும் பாக்கி இருக்காது. பதிவேட்டின்படி வகுப்பறையில் 1476 மாணவர்கள் இருக்கிறார்கள். மின்னஞ்சல் வகுப்பில் சுமார் 700 மாணவர்களுக்கு நடத்திய பாடத்தை புதியவர்களுக்கும் அறியத்தந்துள்ளேன் மைனர். அது எப்படி ரிவிசன் ஆகும்? சொல்லுங்கள்! கூடுதுறையாரின் தொகுப்பில் இவைகள் எப்படி இருக்க முடியும் சொல்லுங்கள்?

    ReplyDelete
  20. ///////Murali said...
    Dear sir,
    please provide answer to my question.
    For tula lugna if mars and venus are placed in 12 place(kanni) .whether it will give Vibaritha raja yoga or not. how is the marriage life for that person with respect to the above combination .///////

    வி.ரா.யோகம் இல்லை! லக்கினாதிபதி 12ல் மறைந்ததால் எதிர்நீச்சல் போடவேண்டிய வாழ்க்கை. 7ஆம் அதிபதி அந்த வீட்டிற்கு 6ல் இருப்பதால், திருமணம் தாமதமாகலாம். அவ்வளவுதான்!

    ReplyDelete
  21. /////Loga said...
    Padam nandraga ullathu ayya, Amasathil girangalukku Parvai balam illai endru padithirukkirean aanal neengal Yogam irukkirathu endru sollugireral ayya...///////

    என்ன குழப்பம்? பார்வை வேறு. யோகபலன்கள் வேறு!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //// Ondru mattum nandra porikirathu intha Genmam Pathathu Jathagam katru kolluvathurukku...
    Nandri/////

    முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை!

    ReplyDelete
  22. கேட்கப் படும் கேள்விகளுக்கு எப்படியோ சமாளித்து பதில் சொல்லி விடுகிறீர்கள். இது கூட முடியாவிட்டால் நான் எப்படி வாத்தியாராக இருப்பது என்கிறீர்களா? அதுவும் சரிதான். நானும் பல சமயங்களில் அதிகம் குடைய விரும்புவதில்லை. No tension, no BP எனது கொள்கை be happy என்ற பாடல்படி இருக்கும் தங்களை அதற்கு நேர் மாறாக ஆக்கி விடக் கூடாதல்லவா.

    கிரக பலம் மற்றும் பலன்களை காண இந்த 9 நிலைகளையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது தாங்கள் சொன்னதுபோல். இந்த நிலை கிரகங்களுக்கு devoid of strength என்று சொல்ல முடியாது. reduced strength என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    கிரக யுத்தம் என்பது சற்று மண்டை குடைச்சலான விஷயம்தான். பலரும் பல விதமாக சொல்கிறார்கள். பாகை ரீதியாக முன்னால் செல்லும் கிரகம்தான் வெற்றி பெற்ற கிரகம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

    எனக்கு இப்போது தங்கள் பாணியில் சொல்வதானால் அஸ்தமனத்தில் அடிபட்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் சனி தசை நடந்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் Matter close என்று சொல்வதற்கு இல்லைதான்.

    ReplyDelete
  23. வணக்கம் அய்யா,
    பாடம் அருமை அய்யா,

    நல்ல வேளை எனக்கு எந்த க்ரக்ஹா யூக்தமும் இல்லை :-), ஆனால் சதாசஞ்சாரம் போல.

    நன்றிகள் அய்யா

    ReplyDelete
  24. //////ananth said...
    கேட்கப் படும் கேள்விகளுக்கு எப்படியோ சமாளித்து பதில் சொல்லி விடுகிறீர்கள். இது கூட முடியாவிட்டால் நான் எப்படி வாத்தியாராக இருப்பது என்கிறீர்களா? அதுவும் சரிதான். நானும் பல சமயங்களில் அதிகம் குடைய விரும்புவதில்லை. No tension, no BP எனது கொள்கை be happy என்ற பாடல்படி இருக்கும் தங்களை அதற்கு நேர் மாறாக ஆக்கி விடக் கூடாதல்லவா.
    கிரக பலம் மற்றும் பலன்களை காண இந்த 9 நிலைகளையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது
    தாங்கள் சொன்னதுபோல். இந்த நிலை கிரகங்களுக்கு devoid of strength என்று சொல்ல முடியாது. reduced strength என்று வேண்டுமானால் சொல்லலாம்.
    கிரக யுத்தம் என்பது சற்று மண்டை குடைச்சலான விஷயம்தான். பலரும் பல விதமாக சொல்கிறார்கள்.

    பாகை ரீதியாக முன்னால் செல்லும் கிரகம்தான் வெற்றி பெற்ற கிரகம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எனக்கு இப்போது தங்கள் பாணியில் சொல்வதானால் அஸ்தமனத்தில் அடிபட்டு மருத்து வமனையில் படுத்திருக்கும் சனி தசை நடந்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் Matter close என்று சொல்வதற்கு இல்லைதான்.//////

    ஜோதிடம் மிகவும் சிக்கலான பாடம். பல மகான்களால் நமக்கு அருளப்பெற்றது. காலம் காலமாக பலரது அனுபவங்களும் அதில் சேர்ந்துள்ளது. அத்துடன் பல இடைச்சொருகல்களும் உள்ளன. இதுதான் சரி என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. மற்றவர்கள் சொல்வதையும் தெரிந்துகொள்ள வேண்டும். கேட்டுக்கொள்ள வேண்டும்.

    நான் இந்தப் பாடத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பு எழுதத்துவங்கியபோது, பல எதிர்ப்புக்களைச் சந்தித்துள்ளேன்.
    நான் எதையும் சமாளித்து எழுதுவது இல்லை. தெரியாததை தெரியாது என்று பலமுறை எழுதியுள்ளேன்.

    தெரிந்ததை மட்டுமே இதுவரை எழுதிவந்துள்ளேன். இனியும் அதைத்தான் செய்ய உள்ளேன்.

    ஜோதிடத்திற்கு வலு சேர்ப்பது அடியவனின் நோக்கம் அல்ல! நான் அறிந்தவற்றை மற்றவர்களுக்குக் குறிப்பாக அடுத்த தலைறையினருக்கு அறியத்தருவது மட்டுமே அடியவனின் நோக்கம். அதில் நான் தெளிவாக உள்ளேன்.

    எனது காதல் எழுத்தின் மீது மட்டுமே! ஜோதிடத்தின் மேல் எனக்கு சகோதரி பாசம் மட்டுமே உண்டு!

    சமாளிப்பது போன்று உங்களுக்குத் தோன்றுவது எனது எழுத்தின் வன்மையாக இருக்கலாம். விளக்கம் போதுமா ஆனந்த்?

    ReplyDelete
  25. ////Sabarinathan TA said...
    வணக்கம் அய்யா, பாடம் அருமை அய்யா,
    நல்ல வேளை எனக்கு எந்த கிரகயுத்தமும் இல்லை :-), ஆனால் சதாசஞ்சாரம் போல.
    நன்றிகள் அய்யா/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. Sir,

    For Dhanu lagna, can we call mars & sani together at 12th house as Vipareetha raja yogam with Mars being the lord of 12th and Sani lord of 3rd house.

    If so, how is the yogam act?

    Regards,
    Srinath G

    ReplyDelete
  27. //////Srinath said... Sir,
    For Dhanu lagna, can we call mars & sani together at 12th house as Vipareetha raja yogam with Mars being the lord of 12th and Sani lord of 3rd house.
    If so, how is the yogam act?
    Regards,
    Srinath G//////

    உண்டு. சனி 2ஆம் வீட்டு அதிபதியும் கூட. அவர் அந்த வீட்டிற்குப் 11ல் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயுடன் சேர்ந்து இருப்பதால், அவர்களுடைய தசா புத்திகளில் பண வரவு உண்டாகும். கிடைத்தால் மற்றவர்களுக்கு உதவுங்கள்!

    ReplyDelete
  28. Sir..!
    Simply superb with suitable example... Thankingyou..

    ReplyDelete
  29. //////Srinath said... Sir,
    For Dhanu lagna, can we call mars & sani together at 12th house as Vipareetha raja yogam with Mars being the lord of 12th and Sani lord of 3rd house.
    If so, how is the yogam act?
    Regards,
    Srinath G//////

    உண்டு. சனி 2ஆம் வீட்டு அதிபதியும் கூட. அவர் அந்த வீட்டிற்குப் 11ல் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயுடன் சேர்ந்து இருப்பதால், அவர்களுடைய தசா புத்திகளில் பண வரவு உண்டாகும். கிடைத்தால் மற்றவர்களுக்கு உதவுங்கள்!

    Wednesday, May 12, 2010 12:42:00 AM
    ---------
    Thx sir , what will be the effect of the 5th house ie., mind, kids, poorva punniyam?

    ReplyDelete
  30. ///M. Thiruvel Murugan said...
    Sir..!
    Simply superb with suitable example... Thankingyou..////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. /////Srinath said...
    //////Srinath said... Sir,
    For Dhanu lagna, can we call mars & sani together at 12th house as Vipareetha raja yogam with Mars being the lord of 12th and Sani lord of 3rd house.
    If so, how is the yogam act?
    Regards,
    Srinath G//////
    உண்டு. சனி 2ஆம் வீட்டு அதிபதியும் கூட. அவர் அந்த வீட்டிற்குப் 11ல் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயுடன் சேர்ந்து இருப்பதால், அவர்களுடைய தசா புத்திகளில் பண வரவு உண்டாகும். கிடைத்தால் மற்றவர்களுக்கு உதவுங்கள்!
    ---------
    Thx sir , what will be the effect of the 5th house ie., mind, kids, poorva punniyam?/////////

    உங்களின் கேள்விக்கு முன்னரே பதில் சொல்லிவிட்டேன். சொந்த ஜாதகத்தை வைத்து அடுத்தடுத்துக் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். என்னுடைய முதல் பிரச்சினை நேரமின்மை! அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுகிறென்!

    ReplyDelete
  32. எங்கேயோ பார்த்த ஞாபகம்....அது மெயில் பாடம் என்பது நினைவில் இல்லை..படித்தது மட்டுமே நினைவில் நின்றது..விளக்கத்துக்கு நன்றி..

    ReplyDelete
  33. /////minorwall said...
    எங்கேயோ பார்த்த ஞாபகம்....அது மெயில் பாடம் என்பது நினைவில் இல்லை..படித்தது மட்டுமே நினைவில் நின்றது..விளக்கத்துக்கு நன்றி../////

    நல்லது. உங்களின் புரிதலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மைனர்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com