மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.5.10

நவக்கிரகக் கோவில்கள் - பகுதி இரண்டு!

சந்திர பகவான்

திங்களூர் கோவில்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நவக்கிரகக் கோவில்கள் - பகுதி இரண்டு!

நவக்கிரகக் கோவில்கள் வரிசையில் சென்ற வாரம் சூரியனார் கோவிலைப் பற்றி எழுதியிருந்தேன். இந்த வாரம் சந்திரனுக்கு உரிய கோவில் இருக்கும் திங்களூரைப் பற்றி எழுதியுள்ளேன்! படித்து மகிழும்படி கேட்டுக் கொள்கிறேன்!.
-------------------------------------------------------------------
நவக்கிரகக் கோவில்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டத்திலே உள்ளன. சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பெற்ற கோவில்கள் அவைகள். அதனால் தஞ்சை மாவட்டத்திலேயே அவைகள் இடம் பெற்றுள்ளன. சோழ மன்னர்கள் காலத்தில் குடந்தையில் (தற்போதைய கும்பகோணம்) நிறைய ஜோதிட விற்பன்னர்கள் (experts) இருந்ததாகவும், அவர்களின் ஆலோசனைப்படியும், ஆகம விதிகளின் படியும், மன்னர்கள் கோவில்களை அமைத்ததாக வரலாறு.

நூறுக்கணக்கான ஆண்டுகளாக, பல லட்சக்கணக்கான மக்கள் சென்று வந்ததாலும், பல லட்சம் முறைகள் கோள்களுக்கான மந்திரங்கள் உரக்க ஒலிக்கப்பெற்றதாலும், அக்கோவில்களுக்கு, ஒரு சக்தி உள்ளது.

அசட்டுக் கேள்விகளைத் தவிர்த்து, நம்பிக்கையோடு அத்தலங்களுக்குச் சென்று அங்கே உறையும் கிரகங்களை வழிபட்டு வாருங்கள், உங்கள் துன்பங்கள் நீங்கும். வாழ்க்கையில் மாறுதல்கள் உண்டாகும். மறுமலர்ச்சி உண்டாகும்!
---------------------------------------------------------------------
திங்களூர்.

சந்திரனுக்காக உள்ள கோவில் இருக்கும் இடம்.

பெயர்ப் பொருத்தம் நன்றாக உள்ளது பாருங்கள். சந்திரனுக்கு உரிய கிழமை திங்கட்கிழமை. உரிய ஊர் திங்களூர். கும்பகோணத்தில் இருந்து தெற்கே 36 கிலோ மீட்டர் தொலைவில் திருவையாறு அருகில் உள்ளது இந்த ஸ்தலம். திருவையாற்றில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பச்சை அரிசியும், வெண்மலர்களும், வெண்மை நிறத் துணிமணிகளும் வைத்து வணங்குதற்கு உரிய நிவேதனப் பொருட்களாகும்.

சிவசக்தி தம்பதியர் கைலாசநாதராகவும், பெரிய நாயகியாகவும் கொலு வீற்றிருக்கும் ஸ்தலமாகும். அவர்களுக்குத் தான் கோவிலில் முதலிடம்.. அவர்கள் இன்றி கிரகங்கள் ஏது? அதனால் அவர்களுக்கு முதலிடம் கொடுத்துக் கோவில் வடிவமைக்கப் பெற்றுள்ளது.

இக்கோவிலுக்கு சென்று வணங்கி வருபவர்களுக்கு, மன அழுத்தங்களும், துக்கங்களும் குறைந்து சுகமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

பங்குனி மாதப் பெளர்ணமித் திதியன்று சந்திரனின் முழுக்கதிர்களும், இக்கோவிலில் உறையும் சிவனார் மீது விழும்படியாகக் கோவில் அமையப்பெற்றுள்ளது இக்கோவிலின் சிறப்பாகும். அது காண்பதற்கு அரிய காட்சியாகும்!

விஷேச காலங்கள்: ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கே விஷேசம்தான். பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று சென்று வருவது மிகுந்த பலன் தரும்.

ஜாதகத்தில் சந்திரனின் அமைப்பு முக்கியமானதாகும். ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்திருந்தாலும் அல்லது பகைவீட்டில் இருந்தாலும், அல்லது சனி, ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களின் கூட்டணியில் இருந்தாலும் அல்லது தீய கிரகங்களின் நேரடிப் பார்வையில் இருந்தாலும் அது நன்மையானதல்ல. அந்தக் குறைபாடு உள்ளவர்கள் திங்களூர் சென்று கைலாசநாதரையும், பார்வதி அம்மனையும், சந்திரபகவானையும் ஒரு சேர வணங்கு வருவது அந்தக் குறைபாடுகளைப் போக்கும் என்பது நம்பிக்கை.

நம்பிக்கையோடு சென்று வரலாம். நலம் வென்று வரலாம்!

ஸ்தல வரலாறு:

அப்பூதி அடிகளை அனைவரும் அறிவோம். உபயம். இயக்குனர். A.P.நாகராஜன். அவருடைய திருவருட்செல்வர் திரைப்படத்தில் விரிவான படக் காட்சிகள் உண்டு. அப்பூதி அடிகள் சிறந்த சிவனடியார். 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு, தனது இல்லத்தில் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். விருந்திற்காக வீட்டுத் தோட்டத்தில் வாழை இலையைக் கொய்து எடுத்துவரச் சென்ற அப்பூதி அடிகளின் மகனை அரவம் ஒன்று தீண்டிவிட பையன் ஸ்பாட் அவுட்! ஆமாம் சிறுவன் இறந்துவிட்டான்.

அப்பூதி அடிகள் இப்படி நடந்துவிட்டதே என்று கண்கலங்கினாலும், மனதைத் திடமாக்கிக் கொண்டு, இறந்த சிறுவனின் உடலை ஒரு பாயில் சுற்றி வீட்டுப் பின்புறம் வைத்துவிட்டு, விருந்திற்கு வரவிருக்கும் நாவுக்கரசரை உபசரிக்கத் தம்மையும், தன் மனைவியையும் தயார் படுத்திக் கொண்டார்.

சிவனின் அருளால், நடந்ததை உணர்ந்த நாவுக்கரசர், சிறுவனின் உடலைக் கைலாச நாதர் கோவிலில் வைத்து, இறைவனைத் தன் பதிகம் ஒன்றைப் பாடி வேண்டிக்கொள்ள சிறுவன் உயிர் பெற்று எழுந்த அதிசயம் அங்கே நிறைவேறியது. பையன் தூக்கம் கலைந்து எழுந்தவனைப்போல எழுந்து நின்றான்.

அந்தப் பதிகத்தை நம்பிக்கையோடு பாடுபவர்களுக்கு, விஷமும் விஷயமில்லாமல் ஆகிவிடும் என்பது இக்கோவில் வரலாறு!

அதுபோல இன்னொரு வரலாறும் உண்டு. அது சற்று ரீலாக உள்ளது. இருந்தாலும் உங்களுடைய தகவலுக்காக அதையும் தந்துள்ளேன்.

தக்‌ஷா பிரஜாபதி என்னும் மன்னன் தன்னுடைய 27 பெண்களையும் சந்திரனுக்கே மணமுடிக்க விரும்பியதாகவும், அவர்களில் ரோஹிணி என்ற பெண்ணை மட்டுமே மணந்துகொள்ள சந்திரன் விருப்பம் தெரிவித்ததாகவும், அதனால் வெகுண்ட மன்னன், சந்திரனுக்குச் சாபமிட, சந்திரன் தன் பொலிவை இழந்தானாம். திங்களூரில் இருந்த கைலாசநாதர் சன்னதியில் சந்திரன் அடைக்கலமாகவிட, சிவனார் சந்திரனின் சாபத்தைப் போக்கி, 15 நாட்கள் படிப்படியாகத் தன் பொலிவை இழந்தாலும், பெளர்ணமியன்று தன் முழுப் பொலிவையும் பெற ஆசீர்வதித்தாராம்.

அதோடு, இங்கே வந்து சந்திரனை வணங்குபவர்களுக்கு, தங்கள் வாழ்வின் குறைகள் நீங்கி, பொலிவைப்பெறவும் ஆசி வழங்கினாராம். தேய்பிறைச் சந்திரன் இருக்கப் பிறந்த ஜாதகர்களுக்கு இந்த ஸ்தலம் ஒரு சிறந்த பரிகாரத்தலமாகும். கதை எப்படியோ போகட்டும். இந்தக் கடைசி வரியை மட்டும் மனதில் வையுங்கள்

வழிபடும் மூறை:

இங்கே உள்ள சந்திர புஷ்கரணி தீர்த்ததில் (குளத்தில்) நீராடி, முதலில் கைலாச நாதரையும், பிறகு பெரிய நாயகி அம்மனையும் வணங்கிவிட்டுப் பிறகு சந்திர பகவானை வணங்க வேண்டும். பச்சரிசியுடன் சர்க்கரையைக் கலந்து வைத்து சந்திர பகவானை வணங்குவது நலம். வெள்ளை அரளிப்பூவும், வெண் ஆடைகளும் உரிய நிவேதனப் பொருட்களாகும்.

அதோடு நம்பிக்கை முக்கியம். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்கள் அனைத்தும் நீங்கும்!

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

22 comments:

  1. Dear Sir

    Chandran(Navagraha)koyilai patriya paadam arumai sir.

    Ananth Sonnadhu Pola for me-
    4th Dasai(Coming soon after 2 years) Saturn- Suya Paral 4 - Andha Idathin Paral 30 - Viruchiga Lagnathukku(3,4ikkuriyavar) - 9il (Kadagathil -Pusham 3il) - Aiyya Satru Vikagamudan answer Sir.

    Aiyya Indha Dasai Eppadi Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  2. good morning sir,

    sorry sir computer problem athunala kadantha sila natkala vagupuku vara mudiala ......thingalur pathivu arumai....அதுபோல இன்னொரு வரலாறும் உண்டு. அது சற்று ரீலாக உள்ளது.sema punch lines vaathiyare.......
    thank you ...

    ReplyDelete
  3. ஐயா,

    சென்னையில் கூட நவகிரகக் கோவில்கல் இருக்கின்றன. குமுதம் பக்தி அதனை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

    - ஜெகதீஸ்வரன்.

    ReplyDelete
  4. Good Morning,

    Thank you so much for the details about the Temple of Chandiran Sir.

    ReplyDelete
  5. நம் முன்னோர்களின் அறிவையும், அறிவியல் முன்னேர்றத்தையும் அறியும் போது மெய் சிலிர்க்கின்றது.

    இந்த இடுகை அவர்களின் புகழை இணையப்படுத்தும் மிக மகத்தான படைப்பு!.

    ReplyDelete
  6. அழகாக எழுதியுள்ளீர்கள் அய்யா பணி சிறக்க வாழ்த்துகள். அத்துடன் நவகிரக தலத்திற்கான Road Mapயும் இணையுங்கள் வாசகர்கள் சென்று வர எளிதாக இருக்கும்.நன்றி அய்யா.

    ReplyDelete
  7. ஐயா,
    மிகவும் நன்றாக இருந்தது இன்றய பாடம்...
    அப்புறம், அப்பூதி அடிகள் பற்றிய முழு பாடமும் 7-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படித்து இருக்கிறேன். என்னே அடியார் பக்தி...அவைகளை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள் சமர்ப்பணம்...

    **வீட்டில் தனஆதர்ஷன சக்கரம் வைத்து, திங்கள் வார விரதம் இருந்து சிவ பூஜையுடன், தங்கள் கூறிய நிவேதனம் செயலாம் என்றும் கேள்வி பட்டேன், முழு விவரம் தெரியாது. :-)
    Just thought to share...

    ReplyDelete
  8. ''அதுபோல இன்னொரு வரலாறும் உண்டு. அது சற்று ரீலாக உள்ளது. இருந்தாலும் உங்களுடைய தகவலுக்காக அதையும் தந்துள்ளேன்.

    தக்‌ஷா பிரஜாபதி என்னும் மன்னன் தன்னுடைய 27 பெண்களையும் சந்திரனுக்கே மணமுடிக்க விரும்பியதாகவும், அவர்களில் ரோஹிணி என்ற பெண்ணை மட்டுமே மணந்துகொள்ள சந்திரன் விருப்பம் தெரிவித்ததாகவும்''

    வாத்தியாருக்கு குறும்பு ஜாஸ்திங்கோ

    ReplyDelete
  9. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Chandran(Navagraha)koyilai patriya paadam arumai sir.
    Ananth Sonnadhu Pola for me-
    4th Dasai(Coming soon after 2 years) Saturn- Suya Paral 4 - Andha Idathin Paral 30 - Viruchiga Lagnathukku(3,4ikkuriyavar) - 9il (Kadagathil -Pusham 3il) - Aiyya Satru Vikagamudan answer Sir.
    Aiyya Indha Dasai Eppadi Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    உதிரியான கிரக நிலைகளைவைத்துக்கொண்டு பலன்சொல்வது தவறாகிவிடும். முழு ஜாதகத்தையும் அலச வேண்டும். அதற்குத் தற்சமயம் நேரமில்லை. பொறித்திருங்கள். பின்னால் பார்க்கலாம்.

    ReplyDelete
  10. //////astroadhi said...
    good morning sir,
    sorry sir computer problem athunala kadantha sila natkala vagupuku vara mudiala ......thingalur pathivu arumai....அதுபோல இன்னொரு வரலாறும் உண்டு. அது சற்று ரீலாக உள்ளது.sema punch lines vaathiyare.......
    thank you ..///////.

    நல்லது. நன்றி ஆதிராஜ்!

    ReplyDelete
  11. ///////Alasiam G said...
    Good Morning,
    Thank you so much for the details about the Temple of Chandiran Sir./////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. //////ஜெகதீஸ்வரன். said...
    ஐயா,
    சென்னையில் கூட நவகிரகக் கோவில்கல் இருக்கின்றன. குமுதம் பக்தி அதனை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
    - ஜெகதீஸ்வரன்./////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. //////ஜெகதீஸ்வரன். said...
    நம் முன்னோர்களின் அறிவையும், அறிவியல் முன்னேற்றத்தையும் அறியும் போது மெய் சிலிர்க்கின்றது.
    இந்த இடுகை அவர்களின் புகழை இணையப்படுத்தும் மிக மகத்தான படைப்பு!.//////

    எனது பதிவு சாதாரணப் படைப்புதான்! முன்னோர்களின் செய்கை மட்டுமே மகத்தானது.

    ReplyDelete
  14. ///////rajesh said...
    அழகாக எழுதியுள்ளீர்கள் அய்யா பணி சிறக்க வாழ்த்துகள். அத்துடன் நவகிரக தலத்திற்கான Road Mapயும் இணையுங்கள் வாசகர்கள் சென்று வர எளிதாக இருக்கும்.நன்றி அய்யா.///////

    உள்ளது. அடுத்த பதிவில் இணைக்கிறேன்!

    ReplyDelete
  15. //////Sabarinathan TA said...
    ஐயா,
    மிகவும் நன்றாக இருந்தது இன்றய பாடம்...
    அப்புறம், அப்பூதி அடிகள் பற்றிய முழு பாடமும் 7-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படித்து இருக்கிறேன். என்னே அடியார் பக்தி...அவைகளை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள் சமர்ப்பணம்...
    **வீட்டில் தனஆதர்ஷன சக்கரம் வைத்து, திங்கள் வார விரதம் இருந்து சிவ பூஜையுடன், தங்கள் கூறிய நிவேதனம் செயலாம் என்றும் கேள்வி பட்டேன், முழு விவரம் தெரியாது. :-)
    Just thought to share.../////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////N.K.S.Anandhan. said...
    ''அதுபோல இன்னொரு வரலாறும் உண்டு. அது சற்று ரீலாக உள்ளது. இருந்தாலும் உங்களுடைய தகவலுக்காக அதையும் தந்துள்ளேன்.
    தக்‌ஷா பிரஜாபதி என்னும் மன்னன் தன்னுடைய 27 பெண்களையும் சந்திரனுக்கே மணமுடிக்க விரும்பியதாகவும், அவர்களில் ரோஹிணி என்ற பெண்ணை மட்டுமே மணந்துகொள்ள சந்திரன் விருப்பம் தெரிவித்ததாகவும்''
    வாத்தியாருக்கு குறும்பு ஜாஸ்திங்கோ////////

    உண்மையைச் சொன்னால் குறும்பு என்கிறீர்களே! அந்த வரியை எழுதவில்லை என்றால், எனக்கு எத்தனை கேள்விக் கணைகள் வரும் தெரியுமா?

    ReplyDelete
  17. குறிப்பிட்ட தசை இத்தனையாவது தசையாக வந்தால் அது மாரக தசையாக இருக்கும் என்று குமாரசுவாமியம் மற்றும் வேறு சில நூல்களிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அது என் ஜாதகத்தின் கிரக நிலைகளோடு ஒப்பிட்டு பார்த்தால் சரியாக வந்தது. ஆனால் அது எல்லாருக்கும் அப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. அருள்குமார் அவர்களே நான் சொன்னதை வைத்து குழம்ப வேண்டாம். நல்லதே நடக்கும் என்று நினைத்து கொள்ளுங்கள்.

    மனகாரகன் பற்றிய தல வரலாறு நன்று. என் ஜாதகத்தில் மற்ற கிரகங்களை விட இவர் நல்ல நிலையில் அமர்ந்திருக்கிறார். இரண்டு குறை. நவாம்சத்தில் நீச்சம். ராசியில் பாப கர்த்தாரி (அவ) யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டார். பல நிறைகள் இந்த குறைகளால் அடிபடவில்லை.

    நீச்ச பங்கத்திற்கு இருக்கும் பல விதிகளில் ஒன்று. நீச்ச கிரகம் சந்திர கேந்திரத்தில் இருக்க வேண்டும் என்பது. அவ்வளவு மகத்துவம் வாய்ந்தவர் சந்திரன். அவரே நீச்சமானால் வேறு விதி பொருந்துகிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  18. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    "நூறுக்கணக்கான ஆண்டுகளாக, பல லட்சக்கணக்கான மக்கள் சென்று வந்ததாலும், பல லட்சம் முறைகள் கோள்களுக்கான மந்திரங்கள் உரக்க ஒலிக்கப்பெற்றதாலும், அக்கோவில்களுக்கு, ஒரு சக்தி உள்ளது".----
    "அதோடு நம்பிக்கை முக்கியம். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்கள் அனைத்தும் நீங்கும்".-----
    இவைகள் தங்களால் அளிக்கப் பட்ட மிக மிக முக்கியமான கருத்துக்கள். அப்படியேநம்பிக்கையோடு செயல் படுவோர்க்கு பலன்கள் நிச்சயம் உண்டு.சந்திர தோஷங்கள் மட்டுமல்ல எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.தாங்கள் இந்த வகுப்பில் கொடுத்துள்ளதிங்களூர் கோவில் படமும் மற்றும் விளக்கமும் மிக நன்றாக உள்ளது.
    மிக்க நன்றி.
    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-05-05

    ReplyDelete
  19. எதையும் ரீல் என்று ஒதுக்கி விட முடியாது
    வாத்தியார் அவர்களே. இன்றைய விஞ்ஞான உலகில்
    சந்திரனில் காலெடுத்து வைத்து விட்டதால் மட்டும்அதை
    ஒரு வெறும் கிரகம் என்று மட்டும் எடுத்துக் கொள்ளமுடியாது
    புராணங்களில் சிலவிஷயங்களை கதைகளாக சொல்வதும் உண்டு.
    சில நம்பத்தகாத விஷயங்கள் உண்மையாகவும் இருப்பதுண்டு.
    பூமிக்குக் கூட பூமாதா வென்றும் பூமித்தாய் என்றும்
    நாம் விளையாட்டாக கூறுவதில்லை இந்த உலகில் உள்ள
    ஒவ்வொரு உயிருள்ள உயிரற்றபொருட்களுக்கும் உயிர்
    இருக்கின்றது {.சைதன்ய நிலை}.
    அதனால் தான் பாரதி
    நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்றார்.
    {நிச்சயம் அவர் ஒரு முக்தி நிலை அடைந்தவராகத்தான் இருக்கவேண்டும்}
    நிற்க‌
    நான் திங்களூருக்கு சென்றிருந்த போது
    ஒரு திண்ணையில் சற்று ஓய்வாக அமர்நதேன். அப்போது ஒரு வீட்டில் இருந்த
    சிறுவனிடம் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குடித்தேன் அப்போது
    அவனிடம் அந்த ஊரின் விசேஷ‌த்தைப் பற்றிக் கேட்டேன்
    அவன் அதற்கு அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். ஆனால் இந்த ஊரில் யாரையும்
    எந்த விஷ க்கடியும் ஒன்றும் செய்யாது என்றான்.
    அப்பூதியடிகளின் மகனை அப்பர் காப்பாற்றியதால் அச்சிறுவனுக்கு மட்டுமல்ல
    என்றளவும் பலரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது
    தாங்களின் இந்த இடுகை மிகவும் பிரமாதம் போங்கள்
    ஒரு பக்கம் ஜோதிடம், ஒரு பக்கம் கண்ணதாசன் , ஒருபக்கம்
    திருத்தலங்கள் பற்றி எழுதுகிறீர்கள்
    கலக்குகிறீர்கள் போங்கள்
    தாங்கள் பல்லாண்டு வாழ்ந்து அனைவருக்கும் பயனுறச் செய்ய
    எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
    நன்றி

    ReplyDelete
  20. ////ananth said...
    குறிப்பிட்ட தசை இத்தனையாவது தசையாக வந்தால் அது மாரக தசையாக இருக்கும் என்று குமாரசுவாமியம் மற்றும் வேறு சில நூல்களிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அது என் ஜாதகத்தின் கிரக நிலைகளோடு ஒப்பிட்டு பார்த்தால் சரியாக வந்தது. ஆனால் அது எல்லாருக்கும் அப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. அருள்குமார் அவர்களே நான் சொன்னதை வைத்து குழம்ப வேண்டாம். நல்லதே நடக்கும் என்று நினைத்து கொள்ளுங்கள்.
    மனகாரகன் பற்றிய தல வரலாறு நன்று. என் ஜாதகத்தில் மற்ற கிரகங்களை விட இவர் நல்ல நிலையில் அமர்ந்திருக்கிறார். இரண்டு குறை. நவாம்சத்தில் நீச்சம். ராசியில் பாப கர்த்தாரி (அவ) யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டார். பல நிறைகள் இந்த குறைகளால் அடிபடவில்லை.
    நீச்ச பங்கத்திற்கு இருக்கும் பல விதிகளில் ஒன்று. நீச்ச கிரகம் சந்திர கேந்திரத்தில் இருக்க வேண்டும் என்பது. அவ்வளவு மகத்துவம் வாய்ந்தவர் சந்திரன். அவரே நீச்சமானால் வேறு விதி பொருந்துகிறதா என்றுதான் பார்க்க வேண்டும்./////

    நல்லது. உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  21. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    "நூறுக்கணக்கான ஆண்டுகளாக, பல லட்சக்கணக்கான மக்கள் சென்று வந்ததாலும், பல லட்சம் முறைகள் கோள்களுக்கான மந்திரங்கள் உரக்க ஒலிக்கப்பெற்றதாலும், அக்கோவில்களுக்கு, ஒரு சக்தி உள்ளது".----
    "அதோடு நம்பிக்கை முக்கியம். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்கள் அனைத்தும் நீங்கும்".-----
    இவைகள் தங்களால் அளிக்கப் பட்ட மிக மிக முக்கியமான கருத்துக்கள். அப்படியேநம்பிக்கையோடு செயல் படுவோர்க்கு பலன்கள் நிச்சயம் உண்டு.சந்திர தோஷங்கள் மட்டுமல்ல எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.தாங்கள் இந்த வகுப்பில் கொடுத்துள்ளதிங்களூர் கோவில் படமும் மற்றும் விளக்கமும் மிக நன்றாக உள்ளது.
    மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  22. /////இனியன் பாலாஜி said...
    எதையும் ரீல் என்று ஒதுக்கி விட முடியாது
    வாத்தியார் அவர்களே. இன்றைய விஞ்ஞான உலகில்
    சந்திரனில் காலெடுத்து வைத்து விட்டதால் மட்டும்அதை
    ஒரு வெறும் கிரகம் என்று மட்டும் எடுத்துக் கொள்ளமுடியாது
    புராணங்களில் சிலவிஷயங்களை கதைகளாக சொல்வதும் உண்டு.
    சில நம்பத்தகாத விஷயங்கள் உண்மையாகவும் இருப்பதுண்டு.
    பூமிக்குக் கூட பூமாதா வென்றும் பூமித்தாய் என்றும்
    நாம் விளையாட்டாக கூறுவதில்லை இந்த உலகில் உள்ள
    ஒவ்வொரு உயிருள்ள உயிரற்றபொருட்களுக்கும் உயிர்
    இருக்கின்றது {.சைதன்ய நிலை}.
    அதனால் தான் பாரதி
    நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்றார்.
    {நிச்சயம் அவர் ஒரு முக்தி நிலை அடைந்தவராகத்தான் இருக்கவேண்டும்}
    நிற்க‌ நான் திங்களூருக்கு சென்றிருந்த போது
    ஒரு திண்ணையில் சற்று ஓய்வாக அமர்நதேன். அப்போது ஒரு வீட்டில் இருந்த
    சிறுவனிடம் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குடித்தேன் அப்போது
    அவனிடம் அந்த ஊரின் விசேஷ‌த்தைப் பற்றிக் கேட்டேன்
    அவன் அதற்கு அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். ஆனால் இந்த ஊரில் யாரையும்
    எந்த விஷ க்கடியும் ஒன்றும் செய்யாது என்றான்.
    அப்பூதியடிகளின் மகனை அப்பர் காப்பாற்றியதால் அச்சிறுவனுக்கு மட்டுமல்ல
    என்றளவும் பலரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது
    தாங்களின் இந்த இடுகை மிகவும் பிரமாதம் போங்கள்
    ஒரு பக்கம் ஜோதிடம், ஒரு பக்கம் கண்ணதாசன் , ஒருபக்கம்
    திருத்தலங்கள் பற்றி எழுதுகிறீர்கள்
    கலக்குகிறீர்கள் போங்கள்
    தாங்கள் பல்லாண்டு வாழ்ந்து அனைவருக்கும் பயனுறச் செய்ய
    எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
    நன்றி/////

    பிரார்த்தனைகள் எப்போதுமே வீண்போகாது. உங்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com