மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.4.10

மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!

-----------------------------------------------------------------
மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!

இடம். நாளந்தா பல்கலைகழகம்.

தெரியாத பெயராக இருக்கிறதா?

ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும்.

ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு.

அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா?

ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி, பானிபூரி, பேல்பூரி, ஏ.கே 47கள் எல்லாம் இல்லாத காலம்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிறகு சுமார் 500 ஆண்டுகள் முடிந்துவிட்ட காலம். பாட்னா அருகே குசுமபுரா என்னும் ஊரில் இருந்த நளந்தா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கோளரங்கம். அங்கேதான் அந்த அரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த ஆண்டில் மார்ச் மாதம் 21ஆம் தேதி மதியம் சரியாகப் பன்னிரெண்டு மணி.

பல்கலைகழகத்தின் மணி ஒலிக்கிறது. மாணவர்களின் வேத பாடல்கள் ஓங்கி ஒலித்து காற்றை நிரப்புகின்றன. சாஸ்திர விற்பன்னர்களின் பிரார்த்தனை துவங்கி சற்று நேரத்தில் முடிவடைகின்றன.

23 வயது இளைஞன் மேடையில் ஏறுகிறான், அவன்தான் அன்றைய நாயகன். அவன் பலகலைக்கழகத்தில் வானவியல் துறையில் பயின்று படிப்பை முடித்துவிட்ட மாணவன். கணிதத் துறையிலும் மேதை அவன்!

எங்கும் அமைதி நிலவுகிறது. அங்கே மேடையின் மேல் இருக்கும் மேஜையின் மீதும், ஓலைகள், எழுத்தாணிகள் மீதும் கும்ப நீரைத் தெளிக்கிறான். தன் தலையை உயர்த்தி வானத்தில் இருக்கும் சூரியனையும் அவன் வணங்குகிறான். பிறகு தான் எழுதவிருக்கும் தொடர் ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் சொல்லை ஒரு ஓலையின் மீது பக்தியுடன் எழுதுகிறான். அருகில் இருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசான்கள் அவன் மீது மலர்களைச் சொறிகின்றார்கள்.

அந்த வானவியல் வல்லுனன், இளைஞன் வேறு யாருமில்லை. அவன்தான் ஆர்யபட்டா! அவன் அன்று துவங்கி எழுதிய நூலின் பெயர் ஆர்யபட்டியா!

ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். துவக்கத்தில் தனது மாநிலத்தில் படித்தவர், மேல் படிப்பிற்காக நளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். அன்றைய காலகட்டத்தில் அதுதான் நாட்டின் உயர்ந்த கல்விக்கூடம். அவன் எழுதிய அந்த ஒப்பற்ற நூலை, அனைவரும் பாராட்டினார்கள். அதன் அருமை, பெருமைகளை உணர்ந்த புத்தகுப்தா என்னும் அன்றைய மன்னன், அவனை, அப்பல்கலைகழகத்தின் தலைமைப் பதவியில் அமர வைத்தான்.

உலகம் உருண்டை. அது தன்னுடைய சொந்த அச்சிலேயே, ஒரு ஒழுங்கு முறையிலேயே சுழல்கிறது என்று உலகிற்கு முதன் முதலில் சொன்னவர் ஆர்யபட்டா! சுழலும் பூமியினால்தான் இரவு, பகல் உண்டாகிறது என்றும் முதன் முதலில் சொன்னவரும் அவர்தான். சந்திரன் இருளானது. சூரிய ஒளியால்தான் அது ஒளிர்கிறது என்று சொன்னவரும் அவர்தான்.

வானவியலிலும், கணிதத்ததிலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்து அனைத்திற்கும் முன்னோடியாக இருந்தவர் அவர்

ஆர்யபாட்டவின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் (Hindu calendars) அவர்தான் தந்தை!

அந்த மகானைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இங்கே க்ளிக்கிப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

18 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    ஆஹா அற்புதம், எல்லோரும் இந்தியர் தான் என்றாலும்; ஆர்யப் பட்டர் மழைனாட்டுத் தமிழன் என்பதில் நாம் அனைவரும் பெருமைக் கொள்வோம். ஒரு தமிழன் தான் அதையும் செய்திருக்கிறான்! அருமை! அருமை!!. நாளந்தாவின் மாணவன், சீனாவில் இருந்து வந்த முதல் பயணி யுவான் சுவாங் கொண்டுச் சென்ற அறியப்பல தகவல்களால் ஜோதிட, வாஸ்து, புத்த சமய அறிவுச் செல்வங்கள் சீனர்களால் இன்றும் போற்றி வளர்க்கப் படுகிறது. அதில் நமக்கும் பெருமை என்றெண்ணும் போது மிக்க மகிழ்ச்சியே!
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    மகான் ஆர்யபாட்டவின் வரலாறு அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.முன்பே அவரைப் பற்றி படித்திருந்தாலும்,தகுந்த நேரத்தில் அதாவது ஜோதிடம் கற்கும் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு தங்களால் நினைவூட்டப் பெறுவது மிகவும் வரவேற்கத் தகுந்தது.

    அவரின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் அவர்தான் தந்தை-இந்த குறிப்பு அனைவரும் தற்போது தெரிந்து கொண்டபின் அவருக்கு நன்றிகூற கடமைப் பட்டவர்கள் ஆகும்.

    தங்களால் பதிவேற்றப்பட்டதால் மேலும் சிறப்பாக உள்ளது.

    நன்றி!

    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-04-12

    ReplyDelete
  3. அய்யா இனிய காலை வணக்கம்....

    ஆரியபட்டர் பற்றி செய்திகள் சிறப்பாக உள்ளது .....

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  4. குருவே வணக்கம்,
    thanks for info about Aryabhata, You have mentioned in your article Aryabhata is born in Kerala, but in WiKi they say as below

    " Aryabhata provides no information about his place of birth. The only information comes from Bhāskara I, who describes Aryabhata as āśmakīya, "one belonging to the aśmaka country." While aśmaka was originally situated in the northwest of India, it is widely attested that, during the Buddha's time, a branch of the Aśmaka people settled in the region between the Narmada and Godavari rivers, in the South Gujarat–North Maharashtra region of central India. Aryabhata is believed to have been born there."

    ReplyDelete
  5. வணக்கம் அய்யா.
    தங்களின் கட்டுரைகள்
    அனைத்தும் அருமை.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  6. ////LK said...
    நல்ல விஷயம்////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  7. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    ஆஹா அற்புதம், எல்லோரும் இந்தியர் தான் என்றாலும்; ஆர்யப் பட்டர் மலைனாட்டுத் தமிழன் என்பதில் நாம் அனைவரும் பெருமைக் கொள்வோம். ஒரு தமிழன்தான் அதையும் செய்திருக்கிறான்! அருமை! அருமை!!. நாளந்தாவின் மாணவன், சீனாவில் இருந்து வந்த முதல் பயணி யுவான் சுவாங் கொண்டுச் சென்ற அறியப்பல தகவல்களால் ஜோதிட, வாஸ்து, புத்த சமய அறிவுச் செல்வங்கள் சீனர்களால் இன்றும் போற்றி வளர்க்கப் படுகிறது. அதில் நமக்கும் பெருமை என்றெண்ணும் போது மிக்க மகிழ்ச்சியே!
    நன்றிகள் குருவே!/////

    நல்லது நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  8. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    மகான் ஆர்யபாட்டவின் வரலாறு அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.முன்பே அவரைப் பற்றி படித்திருந்தாலும்,தகுந்த நேரத்தில் அதாவது ஜோதிடம் கற்கும் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு தங்களால் நினைவூட்டப் பெறுவது மிகவும் வரவேற்கத் தகுந்தது.
    அவரின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் அவர்தான் தந்தை-இந்த குறிப்பு அனைவரும் தற்போது தெரிந்து கொண்டபின் அவருக்கு நன்றிகூற கடமைப் பட்டவர்கள் ஆகும்.
    தங்களால் பதிவேற்றப்பட்டதால் மேலும் சிறப்பாக உள்ளது.
    நன்றி!
    வணக்கம்.தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்....
    ஆரியபட்டர் பற்றி செய்திகள் சிறப்பாக உள்ளது .....
    நன்றி வணக்கம்////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. //////சிங்கைசூரி said...
    குருவே வணக்கம்,
    thanks for info about Aryabhata, You have mentioned in your article Aryabhata is born in Kerala, but in WiKi they say as below
    " Aryabhata provides no information about his place of birth. The only information comes from Bhāskara I, who describes Aryabhata as āśmakīya, "one belonging to the aśmaka country." While aśmaka was originally situated in the northwest of India, it is widely attested that, during the Buddha's time, a branch of the Aśmaka people settled in the region between the Narmada and Godavari rivers, in the South Gujarat–North Maharashtra region of central India. Aryabhata is believed to have been born there."/////

    முன்பு இன்னொரு தளத்தில் படித்தது நன்றாக நினைவில் உள்ளது. அதையே நான் குறிப்பிட்டுள்ளேன். நன்றி!

    ReplyDelete
  11. /////thirunarayanan said...
    வணக்கம் அய்யா.
    தங்களின் கட்டுரைகள்
    அனைத்தும் அருமை.
    நன்றி அய்யா./////

    நல்லது நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  12. ஐயா வணக்கம்

    ஆர்யபட்டா பற்றிய செய்தி வியக்க வைத்தது. நம் முன்னோர்கள் பற்றி நமக்கு சரியாக தெரிவதில்லை. இது போல மேலும் நம் இந்திய அறிஞர்கள் பற்றிய கட்டுரைகள் நம் அனைவருக்கும் தேவை. இடை இடையே இது போன்ற கட்டுரைகள் எதிர்பார்க்கிறேன்.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. sir,

    you told about the stones & their benefits. But is there any procedure or rules for wearing them?

    ReplyDelete
  14. ஆர்யபட்டர் பிறந்தது கேரளாவா? எந்த கேரளா ஆசிரியரே. The political state of Kerala was formed on November 1st, 1956 with the joining of the Travancore-Cochin State and Malabar என்றுதான் வரலாற்றில் இருக்கிறது. அப்போது இருந்த ஊர்களின் பெயர் கூட இப்போது இல்லை. இங்கே இருந்தது அங்கே இருந்தது என்று ஒரு கணிப்பாகத்தான் சொல்ல முடியுமே தவிர உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.

    ReplyDelete
  15. ///T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    ஆர்யபட்டா பற்றிய செய்தி வியக்க வைத்தது. நம் முன்னோர்கள் பற்றி நமக்கு சரியாக தெரிவதில்லை. இது போல மேலும் நம் இந்திய அறிஞர்கள் பற்றிய கட்டுரைகள் நம் அனைவருக்கும் தேவை. இடை இடையே இது போன்ற கட்டுரைகள் எதிர்பார்க்கிறேன்.
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாது. ஒவ்வொன்றாக வரும். பொறுத்திருந்து படியுங்கள் நண்பரே!

    ReplyDelete
  16. /////ms torrent said... sir,
    you told about the stones & their benefits. But is there any procedure or rules for wearing them?/////

    இரண்டு விதமான விதிகள் உள்ளன. லக்கினநாதன் வலுவாக வேண்டி அவனுக்கான கல்லை அணியலாம். அதேபோல ஒரு மகாதிசை நடக்கும்போது, அது நன்மையளிக்க வேண்டி அதற்குரிய கல்லை அணியலாம்.
    இரண்டு வேறுவிதமான கற்களை ஒரே நேரத்தில் அணிவது நல்லதல்ல!

    ReplyDelete
  17. ////ananth said...
    ஆர்யபட்டர் பிறந்தது கேரளாவா? எந்த கேரளா ஆசிரியரே. The political state of Kerala was formed on November 1st, 1956 with the joining of the Travancore-Cochin State and Malabar என்றுதான் வரலாற்றில் இருக்கிறது. அப்போது இருந்த ஊர்களின் பெயர் கூட இப்போது இல்லை. இங்கே இருந்தது அங்கே இருந்தது என்று ஒரு கணிப்பாகத்தான் சொல்ல முடியுமே தவிர உறுதியாக எதுவும் சொல்ல முடியாது./////

    சோமபானம் என்று சொன்னால் பலருக்கும் தெரியாது. சரக்கு என்றால் தெரியும். அதுபோல சேரநாடு என்று சொன்னால் குழம்புவார்கள். கேரளா என்று சொன்னால் பிடிபடும். ஆர்யபட்டாவிற்கும் கேரளாவிற்கும் உள்ள தொடர்பு பற்றிய விரிவான செய்தி ஹிந்து நாளிதழில் முன்பு வந்ததை உங்களுக்காகப் பிடித்துக்கொடுத்துள்ளேன். கீழே உள்ள இந்த சுட்டியைப் பாருங்கள் நண்பரே!
    http://www.thehindu.com/2007/06/25/stories/2007062558250400.htm

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com