மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

21.4.10

தொட்டிலும், காலில்லாக் கட்டிலும்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொட்டிலும், காலில்லாக் கட்டிலும்!

”முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண்மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்.

இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்.”
- கவியரசர் கண்ணதாசன்
------------------------------------------------------------------
ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

முக்கியமான விவரங்கள் அதில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

ராசிச் சக்கரம், நவாம்ச சக்கரம், தசா/புத்தி விவரங்கள், கர்ப்பச்செல் இருப்பு (That is the balance dasa of the birth star at the time of the birth) அஷ்டகவர்க்கக் கட்டங்கள் ஆகியவை உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

அவைகள் இருந்தால் மட்டுமே, கையில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களிடம் காட்டியவரிடம் திருப்பிக் கொடுத்துவிடலாம்.

”கணினியில் கணித்துப் பிரதி ஒன்றைக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட வேண்டும்!
-------------------------------------------------------------------
சரி, எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

கதாநாயகன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க வேண்டும்.

ஒரு திரைப்படத்திற்கு எப்படி நாயகன் பிரதானமோ, அப்படி ஒருவரின் சொந்த வாழ்க்கைப் படத்திற்கு, லக்கினாதிபதி எனும் கதாநாயகன் பிரதானம்!

அவன் சரியாக இல்லையென்றால், வாழ்க்கைப் படம் சரியாக ஓடாது! ரசிக்காது! நீண்ட நாட்கள் படம் ஓடினாலும் படத்தைப் பார்க்க ஆளிருக்காது.

பாதிப்பேர்களுடைய வாழ்க்கைப் படம் அப்படித்தான் இருக்கும்.

எல்லாம் வாங்கி வந்த வரம்! முன்வினைப் பலன்!
--------------------------------------------------------------------
லக்கினாதிபதி 12ஆம் வீட்டில் இருக்கக்கூடாது.

12ஆம் வீடு விரைய ஸ்தானம். 12th house is the house of loss! அங்கே இருந்தால் ஜாதகனுடைய வாழ்க்கை சோபிக்காது. சின்ன வயதில் பல கஷ்டங்களை அல்லது துன்பங்களை அனுபவிக்க நேரிடும். 21 வயதிற்கு மேலும், இறுதிவரை அந்நிலைமை தொடரும். அவன் வாழ்க்கை அவனுக்குப் பயன்படாது. ஜாதகத்தில் மற்ற வீடுகள் நன்றாக இருந்து, அவன் அதீதமாகப் பொருள் ஈட்டினாலும், அது அவனுக்குப் பயன்படாது. அவனைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பயன் படும்.
In short, his life will be useful to others; Not for him!

லக்கினாதிபதி 6ல் இருந்தாலும் அல்லது 8ல் இருந்தாலும் இதே பலன்தான்

6 8, 12 ஆகிய மூன்று வீடுகளும் மறைவிடங்கள் (Hidden Houses)

லக்கினாதிபதி நீசமடைந்திருந்து, சுப கிரங்களின் பார்வை அல்லது சேர்க்கை இன்றி இருந்தாலும் இதே பலன்தான்

லக்கினாதிபதி தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களையோ அல்லது அதற்குக் குறைவான பரல்களையோ பெற்றி ருந்தாலும் இதே பலன்தான்

That is no use!
---------------------------------------------------------------------
சரி, எங்கே இருக்க வேண்டும்?

First Choice: 11ஆம் வீட்டில்!

Result: குறைந்த முயற்சி; அதிகப் பலன். Minimum efforts; Maximum benefits! அல்லது லாபாதிபதியுடன் (associated with 11th lord) சேர்ந்து இருக்க வேண்டும். இந்த சேர்க்கை கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் என்றால் உத்தமம். அந்த இருவருடைய திசைகளிலும் ஜாதகனின் வாழ்க்கை அசுர வளர்ச்சியைக்
காணும்

Second Choice: 9ஆம் வீட்டில்!

பாக்கியஸ்தானத்தில் இருக்க வேண்டும். (That is in the ninth house) He should be in the ninth house from his own house! அல்லது பாக்கியாதிபதியுடன் (associated with 9th lord) சேர்ந்து இருக்க வேண்டும். இந்த சேர்க்கை கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் என்றால் மிகவும் நன்மையளிக்கக்கூடியது.

Result: ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். எல்லா பாக்கியங்களும் அவனைத் தேடி வரும். சம்பந்தப்பட்ட இரண்டு கிரகங்களின் தசா/புத்திகளில் அவைகள் தேடி வரும். மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை உண்டு1

லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் இருந்தாலும் நல்ல பலன்கள் உண்டு. அது திரிகோண வீடாகும்

அதுபோல 4ல் அல்லது 7ல் இருந்தாலும் நல்லது. ஆனால் அந்த அமைப்பு மேற்சொன்ன பலன்களுக்கெல்லாம் அடுத்தபடிதான்

அதுபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அல்லது தனது சுயவர்க்கத்தில் ஆறு பரல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் பெற்றிருந்தாலும் நன்மையான பலன்களே கிடைக்கும்
-----------------------------------------------------------------------------
ஜோதிடம் கடல். கடலின் ஒரு பகுதியை, அதாவது மெரினாவிற்கு அல்லது சாந்தோம் பீச்சிற்கு எதிரில் உள்ள கடலைக் காட்டியிருக்கிறேன். அவ்வளவுதான்

மேற் சொன்ன பலன்கள் எல்லாம் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள் மாறுபடும். கூடலாம் அல்லது குறையலாம். ஆகவே உங்கள் ஜாதகத்தை இந்த விதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சற்றுக் கவனமாக அலசவும். அது முக்கியம்!

நன்றாக இருந்தால் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளவும் வேண்டாம்; கெட்டுப்போயிருந்தால் தலையில் கைவைத்துச் சாய்ந்து கொள்ள வேண்டாம். வாழ்க்கையில் அனைவரும் சமம். ஜாதகமும் அப்படியே!

அதனால்தான் அனைவருக்குமே 337 பரல்கள். உங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அது என்ன என்பதை முடிவில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். பொறுமையாகவும், கவனமாகவும் பாடங்களைப் படித்து வாருங்கள். அது ஒன்றை மட்டும் நீங்கள் தொடர்ந்து செய்தால்தான் நான் இங்கே எழுதுவதன் நோக்கம் நிறைவேறும்!
--------------------------------------------------------------
பின் குறிப்பு: “வாத்தியார், இந்தப் பாடத்தை நான் முன்பே படித்திருக்கிறேனே” என்று யாரும் சொல்ல வேண்டாம். படித்திருந்தால் என்ன? மறு ஒலிபரப்பு என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பாடங்கள் மின்னஞ்சல் வகுப்பில் நடத்தப் பெற்றது. இது மட்டுமல்ல! அடுத்துவரவுள்ள 10 பாடங்களும் மின்னஞ்சல்
வகுப்பில் வந்தவைதான். மின்னஞ்சல் வகுப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 700 மட்டுமே. ஆனால் வகுப்பறையின் வருகைப்பதிவேட்டில் சுமார் 1,437 பேர்கள் உள்ளதாகக் கணக்கு காட்டுகிறது. அதாவது சரிபாதிப்பேர்களுக்கு இந்தப் பாடங்கள் தெரியாது. அதோடு புதிதாக வருகிறவர்களும் தெரிந்துகொள்ள
வேண்டும். அதனால்தான் வகுப்பறையில் அவற்றைப் பதிவிடுகிறேன். படித்து அனைவரும் பயன் பெறுங்கள்!


அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

55 comments:

krishnar said...

ஐயன்மீர்.
இந்த 2வது பாடம் 2 மாதங்களாக உங்கள் பாடங்களை மேலோட்டமாக படித்த எனக்கு உதவுகிறது. எனக்கு தனுசு லக்கினாதிபதி குரு 12 ம் வீடு விருச்சிகத்தில். 62 வயதாகிறது, ஒரு முழுநாள் சந்தோசமாக இருந்ததில்லை. காலையில் சிரித்தால் எதிர்பார்க்கலாம் மாலையில் ஒரு கவலை ஏற்படுமென. உங்கள் பாடங்களை மேலும் எதிர்பார்க்கின்றேன்.

கிருஸ்ணர்

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்,
"இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கிறான்"!
தத்துவமேவிய வார்த்தைகள்,
நான் என்ற அகந்தைக்கு
சவுக்கடியாய் இல்லை சாவுமணியாய்;
இருட்டறையில் இட்ட விளக்கொளியாய்,
இன்னல் போக்கும் அருமருந்தாய்,
கண்ணனுக்கு உன்னதமான தாசன் அவன்
கவி கூறும் காப்பிய வரிகளை என்னென்பது!!
பாடங்களை (கவிஞரின் / வாத்தியாரின்)
மீண்டும் மீண்டும் படிக்கும் போதே
பார்க்கும் ஜாதகத்தில்
தெளிவுனுள் உள்ள உயர்வும்,
மறைவில் உள்ள குறையும்,
தெளியும் என்பதில் ஐயமில்லை!
6,8,12 - ல் லக்னாதிபதி உள்ளவர்கள்
என்றும் மற்றவர் மனதில் இருப்பார்கள்!
பிறருக்காக வாழ்ந்தவர்கள், இல்லையா குருவே!
பாடத்திற்கு நன்றிகள் குருவே!

Saravana said...

அன்புள்ள வாத்தியார்,

நல்ல பாடம்!

சந்தேகம், லக்னம் மேஷம் (அதில் குரு), லக்னாதிபதி செவ்வாய் 6 இல் கேது & சூரியனுடன், அனால் செவ்வாய் சுயவர்கத்தில் 5 பரல்கள்.
எனவே லக்னாதிபதி 6 இல் இருந்தாலும் இது நல்ல அமைப்பா அய்யா?

நன்றியுடன்
சரவணா
கோவை

mohan1981 said...

sir
wt about lagnathipathi occupies 3rd house .. is it also like 6,8 and 12 houses effect?..

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம்.....

கடந்த ஒரு வாரமாக வகுப்புக்கு வர முடியவில்லை........

ரிவிசன் என்பாற்களே அதை துவக்கி விட்டீர்கள் போலும் .......

நன்றி வணக்கம்......

KULIR NILA said...

nandru iya

padithukondu irukkiren

RameshVeluswami said...

Sir,

If the Lagna lord is in the 8 th house, and it is vargothamam as well it has 5 parals and the eight has 30 parals means, then what is the result sir.

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

"புதிதாக வருகிறவர்களும் தெரிந்துக் கொள்ளவேண்டும். அதனால்தான் வகுப்பறையில் அவற்றைப் பதிவிடுகிறேன். படித்து அனைவரும் பயன் பெறுங்கள்"!-------

மிகவும் பாராட்டப்பட வேண்டிய,வரவேர்க்கவேண்டிய கருத்து ஆகும். கலியுகத்தில் தங்களைப் போல ஒரு சிலர் இருப்பதால்தான்,பழைய கால நினைவுகள்,கருத்துக்கள் பரவலாக முடிந்த வரையில் அறிந்துக் கொள்ள முடிகிறது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்",இத்தகைய தங்களின் பொது நோக்கம் மற்றும் பெருந்தன்மையையும் அனைவருக்கும் அளிக்குமாறு இறைவனிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்களால் முடிந்த அளவில் எத்தகைய பலனையும் எதிர்பாராமல் செய்து வரும் இத்தகைய பணிக்கு ஈடு இணையே கிடையாது.இறைவன் தங்களுக்குத் தகுந்தபரிசினை தகுந்த நேரத்தில் தாங்கள் எதிர் பாராமலேயே கண்டிப்பாக நிச்சயமாக வழங்குவார். வாழ்த்துக்கள்.


நன்றி!
வணக்கம்.

தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-04-21

Babu said...

Iya vannakam

My laknam rishabam.lakna lord sukran in 8 th place individually.[ie thanusu.8th place lord guru in katagam].sukran suyavarka is 7 and astavarka 30 in that place.
This place is good or bad.
If good what are the benefits.
Pl explain sir.

Your student
S.A.Babu

Loga said...

Dear Sir,

Yesterday you answered for one question thanks

For viruchiga Lagnam, in 12th Place Sani and Sevvai, is it vibaritha Rajayogam.

மதி said...

>>>மறு ஒலிபரப்பு என்று நினைத்துக் கொள்ளுங்கள்<<<

ஓகே...

நேசன்..., said...

அய்யா,நான் மேஷ ராசி,மேஷ லக்கினம்.எனக்கு செவ்வாய் லக்கின காரகன் 6ம் வீட்டில் தனியாக உள்ளார்.எனக்கும் நீங்கள் சொன்ன பலன் தானா?...

prithvi said...

Hello sir,
My laknam is meenam,laknathipathi guru is in 4th house with 6 parals and labathipathi sani is in 10th house(vakram) with just 3 parals.What is the effect sir?

Prithvi Raj

T K Arumugam said...

ஐயா வணக்கம்

கன்னி லக்னம், லக்கினாதிபதி புதன் இரண்டில் பாக்கியாதிபதி சுக்கிரனுடன். தாங்கள் கூறியது போல பூர்வீக சொத்து உள்ளது. சுக்கிரன் திசை சிறு வயதிலேயே போய்விட்டது. மூல நட்சத்திரம். புதன் திசை 65 வயதில் தான். இருந்தாலும் அந்தந்த புத்திகள் துணை வருகிறது. கஷ்டமில்லை.

நன்றி

வாழ்த்துக்கள்

rajesh said...

ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய வணக்கம், காவி அணிந்து செய்ய முடியாதை நீங்கள் சாதாரணமாக செய்துகொண்டு உள்ளீர்கள். எப்படி என்றால் சோதிடத்தை அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று பாடத்தை இலவசமாக பாமரனுக்கும் புரியும் விதத்தில் கற்று தருகீரிகள் ஆனால் சாமியாராக இருப்பவர்கள் சோதிடத்தை கற்று கற்பீக்றேன் என்று காசு பார்த்து கொண்டுஉள்ளார்கள் . என்னைபொருத்தவரை இந்து மதத்தின் அற்புதமனா சோதிடத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்றது நீங்கள்தான். கடவுள் உங்களை படைத்து சோதிடத்தை வாழவைத்துவிட்டான் நீங்கள் கடவுளின் அவதாரம். என்றும் வணக்கத்துக்கு உரியவர்

பின்குறிப்பு
இதில் சோதிடத்தை மட்டும் எழுதவேண்டும் அய்யா. கண்ணதாசனை பற்றி தனி Blog கில் எழுதுங்கள் அய்யா

Sowmya said...

Appreciate your noble intention sir ..

Nareshkumar said...

ஐயா வணக்கம், my laganam is magaram,my lagnathypathy sani is in 12th place and recieving guru parvai from 6th house. And saturn's suyavarga paral is 3, and it is not good in both navamsam and rasi chart.And in 12th house mars,and mercury are combinely placed with sani. will the direct parvai of guru reduces the bad effects or not.my lagam has 27 parals.

ngs said...

எனக்கு தனுசு லக்னம் குரு 12 ல் உடன் சூரியன் ,கேது .இது நல்ல இடமா அய்யா ?

dhilse said...

Dear Sir,
I have a doubt. Blue sapphire stone (middle finger) can be weared along with yellow sapphire stone (Fore finger). Previously you told me to remove red coral (that is not to be weared along with blue sapphire). I would like to complete my higher studies, lot of hurdles are coming on my way. So I weared yellow sapphire. Kindly guide me sir.
J.Sendhil

aryboy said...

வணக்கம் அய்யா,
தாங்கல் சொன்ன கணக்கு சரிதான். என்னை போல இடையிலெ
வத்தவர்கலுக்கு படித்து பயன்பெரளாம்.இன்ட்ரைய பாடம் ரெம்பசோர்.
வாழ்க வளமுடன். நன்ரியுடன் அரிபாய்.

sury said...

லக்னாதிபதி 12ல் அமரக்கூடாது என்பது பொது விதி என்பது
இருந்தாலும் இந்த விதியிலிருந்து சுக்ரனுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்கிறார்களே ? இது சரிதானா ?

12 சயனஸ்தானம் என்பதால், சுக்ரன் அமர்ந்தால் நல்லது என்கிறார்களே ??

சுப்பு ரத்தினம்.

SP.VR. SUBBAIYA said...

////krishnar said...
ஐயன்மீர்.
இந்த 2வது பாடம் 2 மாதங்களாக உங்கள் பாடங்களை மேலோட்டமாக படித்த எனக்கு உதவுகிறது. எனக்கு தனுசு லக்கினாதிபதி குரு 12 ம் வீடு விருச்சிகத்தில். 62 வயதாகிறது, ஒரு முழுநாள் சந்தோசமாக இருந்ததில்லை. காலையில் சிரித்தால் எதிர்பார்க்கலாம் மாலையில் ஒரு கவலை ஏற்படுமென. உங்கள் பாடங்களை மேலும் எதிர்பார்க்கின்றேன்.
கிருஸ்ணர்/////

நம் வகுப்பில் உங்களைப்போன்ற சீனியர் சிட்டிஸன்கள் நிறைய உள்ளார்கள். உங்களின் ஆர்வத்திற்கும், கணினி அறிவிற்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,"இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கிறான்"!
தத்துவமேவிய வார்த்தைகள், நான் என்ற அகந்தைக்கு சவுக்கடியாய் இல்லை சாவுமணியாய்; இருட்டறையில் இட்ட விளக்கொளியாய், இன்னல் போக்கும் அருமருந்தாய், கண்ணனுக்கு உன்னதமான தாசன் அவன் கவி கூறும் காப்பிய வரிகளை என்னென்பது!!
பாடங்களை (கவிஞரின் / வாத்தியாரின்) மீண்டும் மீண்டும் படிக்கும் போதே பார்க்கும் ஜாதகத்தில் தெளிவுனுள் உள்ள உயர்வும், மறைவில் உள்ள குறையும், தெளியும் என்பதில் ஐயமில்லை!
6,8,12 - ல் லக்னாதிபதி உள்ளவர்கள் என்றும் மற்றவர் மனதில் இருப்பார்கள்! பிறருக்காக வாழ்ந்தவர்கள், இல்லையா குருவே!
பாடத்திற்கு நன்றிகள் குருவே!////

ஆமாம் ஆலாசியம் அவர்கள் மற்றவர்களுக்காக வாழுகின்றவர்கள். உங்களின் புரிதலுக்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Saravana said...
அன்புள்ள வாத்தியார்,
நல்ல பாடம்!
சந்தேகம், லக்னம் மேஷம் (அதில் குரு), லக்னாதிபதி செவ்வாய் 6 இல் கேது & சூரியனுடன், அனால் செவ்வாய் சுயவர்கத்தில் 5 பரல்கள். எனவே லக்னாதிபதி 6 இல் இருந்தாலும் இது நல்ல அமைப்பா அய்யா?
நன்றியுடன்
சரவணா
கோவை///////

லக்கினாதிபதி 6ல் அமர்ந்ததற்கு நஷ்ட ஈடாக ஒன்பதாம் (பாக்கிய) அதிபதி குரு வந்து லக்கினத்தில் அமர்ந்திருக்கிறார். நல்ல அமைப்புத்தான் கண்ணா!

SP.VR. SUBBAIYA said...

//////mohan1981 said...
sir
wt about lagnathipathi occupies 3rd house .. is it also like 6,8 and 12 houses effect?..///////

லக்கினாதிபதி 3ல் அமர்ந்தாலும் அதே பலன்தான். அதுவும் மறைவிடமே!

SP.VR. SUBBAIYA said...

/////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்.....
கடந்த ஒரு வாரமாக வகுப்புக்கு வர முடியவில்லை........
ரிவிசன் என்பார்களே அதை துவக்கி விட்டீர்கள் போலும் ......
நன்றி வணக்கம்.....//////

உங்களுக்கு ரிவிசன். புதிதாக வந்தவர்களுக்குப் புதிய பாடம்!

SP.VR. SUBBAIYA said...

/////KULIR NILA said...
nandru iya
padithukondu irukkiren///////

நல்லது. படியுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////RameshVeluswami said...
Sir,
If the Lagna lord is in the 8 th house, and it is vargothamam as well it has 5 parals and the eight has 30 parals means, then what is the result sir.//////

பரல்கள் அதிகமாக இருப்பதால், நல்ல பலன்கள் கிடைக்கும். நன்மைகள் உடையதாக இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
"புதிதாக வருகிறவர்களும் தெரிந்துக் கொள்ளவேண்டும். அதனால்தான் வகுப்பறையில் அவற்றைப் பதிவிடுகிறேன். படித்து அனைவரும் பயன் பெறுங்கள்"!-------
மிகவும் பாராட்டப்பட வேண்டிய,வரவேர்க்கவேண்டிய கருத்து ஆகும். கலியுகத்தில் தங்களைப் போல ஒரு சிலர் இருப்பதால்தான்,பழைய கால நினைவுகள்,கருத்துக்கள் பரவலாக முடிந்த வரையில் அறிந்துக் கொள்ள முடிகிறது."யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்",இத்தகைய தங்களின் பொது நோக்கம் மற்றும் பெருந்தன்மையையும் அனைவருக்கும் அளிக்குமாறு இறைவனிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களால் முடிந்த அளவில் எத்தகைய பலனையும் எதிர்பாராமல் செய்து வரும் இத்தகைய பணிக்கு ஈடு இணையே கிடையாது.இறைவன் தங்களுக்குத் தகுந்தபரிசினை தகுந்த நேரத்தில் தாங்கள் எதிர் பாராமலேயே கண்டிப்பாக நிச்சயமாக வழங்குவார். வாழ்த்துக்கள்.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி//////

இப்பொதே வழங்கியிருக்கிறார் ஸ்வாமி. 1,439 followers என்பது என் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம். பரிசு!
என்ன சொல்கிறீர்கள்?

SP.VR. SUBBAIYA said...

//////Babu said...
Iya vannakam
My laknam rishabam.lakna lord sukran in 8 th place individually.[ie thanusu.8th place lord guru in katagam].sukran suyavarka is 7 and astavarka 30 in that place.
This place is good or bad.
If good what are the benefits.
Pl explain sir.
Your student
S.A.Babu/////

பரல்கள் அதிகமாக இருப்பதால், நல்ல பலன்கள் கிடைக்கும். நன்மைகள் உடையதாக இருக்கும்! எட்டில் மறைந்ததற்கான பாதிப்புக்கள் அதிகம் இருக்காது. கவலையைவிடுங்கள் பாபு!

SP.VR. SUBBAIYA said...

Loga said...
Dear Sir,
Yesterday you answered for one question thanks
For viruchiga Lagnam, in 12th Place Sani and Sevvai, is it vibaritha Rajayogam.

துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக்
கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன்
அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
உதாரணத்திற்கு, சிம்ம லக்கினத்திற்கு, சனி 6ஆம் இட அதிபதி. அவர் ஜாதகனின்
12ஆம் வீட்டில் (கடகராசியில்) சந்திரனுடன் இருந்தால், அது வி.ரா.யோகம் ஆகும்!
சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள்
ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும்.
கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.
உங்களுக்கு விபரீத ராஜயோகம் உள்ளது. கிடைக்காதது கிடைத்தால், பங்கு வைக்க என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் லோகு!:-))))

SP.VR. SUBBAIYA said...

/////மதி said...
>>>மறு ஒலிபரப்பு என்று நினைத்துக் கொள்ளுங்கள்<<<
ஓகே...////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////நேசன்..., said...
அய்யா,நான் மேஷ ராசி,மேஷ லக்கினம்.எனக்கு செவ்வாய் லக்கின காரகன் 6ம் வீட்டில் தனியாக உள்ளார்.எனக்கும் நீங்கள் சொன்ன பலன் தானா?...//////

ஆமாம். பயப்படாதீர்கள். பரல்களையும் பாருங்கள். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

/////prithvi said...
Hello sir,
My laknam is meenam,laknathipathi guru is in 4th house with 6 parals and labathipathi sani is in 10th house(vakram) with just 3 parals.What is the effect sir?
Prithvi Raj//////

லக்கினாதிபதி குரு கேந்திரத்தில் இருக்கிறார் அல்லவா? எல்லாம் நல்லதாகவே நடக்கும். கவலையை விடுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////T K Arumugam said...
ஐயா வணக்கம்
கன்னி லக்னம், லக்கினாதிபதி புதன் இரண்டில் பாக்கியாதிபதி சுக்கிரனுடன். தாங்கள் கூறியது போல பூர்வீக சொத்து உள்ளது. சுக்கிரன் திசை சிறு வயதிலேயே போய்விட்டது. மூல நட்சத்திரம். புதன் திசை 65 வயதில் தான். இருந்தாலும் அந்தந்த புத்திகள் துணை வருகிறது. கஷ்டமில்லை.
நன்றி
வாழ்த்துக்கள்/////

திருப்பூர்காரர்களுக்கு என்றுமே கஷ்டங்கள் கிடையாது. கஷ்டத்தை நினைத்துப் பார்ப்பதற்கு அவர்களுக்கு ஏது நேரம்?

SP.VR. SUBBAIYA said...

/////rajesh said...
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய வணக்கம், காவி அணிந்து செய்ய முடியாதை நீங்கள் சாதாரணமாக செய்துகொண்டு உள்ளீர்கள். எப்படி என்றால் சோதிடத்தை அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று பாடத்தை இலவசமாக பாமரனுக்கும் புரியும் விதத்தில் கற்று தருகீறீர்கள் ஆனால் சாமியாராக இருப்பவர்கள் சோதிடத்தை கற்று கற்பிக்கிறேன் என்று காசு பார்த்து கொண்டுஉள்ளார்கள் . என்னைபொருத்தவரை இந்து மதத்தின் அற்புதமான சோதிடத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்றது நீங்கள்தான். கடவுள் உங்களை படைத்து சோதிடத்தை வாழவைத்துவிட்டான் நீங்கள் கடவுளின் அவதாரம். என்றும் வணக்கத்துக்கு உரியவர்//////

நான் சாதாரணமான் ஆள் ஸ்வாமி. இந்த ஜோதிடத்தை நமக்குத் தொகுத்துக் கொடுத்துவிட்டுப்போன பல மகான்கள் இருக்கிறார்கள் ஸவாமி. அவர்கள் தந்துவிட்டுப்போகவில்லை என்றால் ஜோதிடம் ஏது? கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் வேலையைத்தான் நான் செய்கிறேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////பின்குறிப்பு: இதில் சோதிடத்தை மட்டும் எழுதவேண்டும் அய்யா. கண்ணதாசனை பற்றி தனி Blog கில் எழுதுங்கள் அய்யா//////

வெறும் ஜோதிடத்தையே பாடமாகத் தினமும் நடத்திக்கொண்டிருந்தால் அலுத்துவிடும். புத்துணர்விற்காகத்தான் இடையிடையே கவியரசரைப் பற்றிய கட்டுரைகள்.

SP.VR. SUBBAIYA said...

//////Sowmya said...
Appreciate your noble intention sir ..////

நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////ngs said...
எனக்கு தனுசு லக்னம் குரு 12 ல் உடன் சூரியன் ,கேது .இது நல்ல இடமா அய்யா?///////

எதிர்நீச்சல் போடவேண்டும். அதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Nareshkumar said...
ஐயா வணக்கம், my laganam is magaram,my lagnathypathy sani is in 12th place and recieving guru parvai from 6th house. And saturn's suyavarga paral is 3, and it is not good in both navamsam and rasi chart.And in 12th house mars,and mercury are combinely placed with sani. will the direct parvai of guru reduces the bad effects or not.my lagam has 27 parals.////

குருவின் பார்வை தீயவற்றைக் குறைக்கும். கவலை எதற்கு?

SP.VR. SUBBAIYA said...

/////dhilse said...
Dear Sir,
I have a doubt. Blue sapphire stone (middle finger) can be weared along with yellow sapphire stone (Fore finger). Previously you told me to remove red coral (that is not to be weared along with blue sapphire). I would like to complete my higher studies, lot of hurdles are coming on my way. So I weared yellow sapphire. Kindly guide me sir.
J.Sendhil//////

ஏதாவது ஒன்றை மட்டுமே அணிய வேண்டும்!

SP.VR. SUBBAIYA said...

/////aryboy said...
வணக்கம் அய்யா,
தாங்கள் சொன்ன கணக்கு சரிதான். என்னைப் போல இடையில்
வந்தவர்களுக்குப் படித்துப் பயன்பெற இன்றையப் பாடம் ரெம்பஜோர்.
வாழ்க வளமுடன். நன்றியுடன் அரிபாய்.///////

நல்லது அரிபாய். நன்றி உங்களுடைய பின்னூட்டத்தில் உள்ள எழுத்துப் பிழைகளைச் சரி செய்துள்ளேன். பாருங்கள். அப்படியே நீங்களும் எழுத்துப்பிழையின்றி எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்!

BaskarChandran said...

Hello Sir

Thanks a lot for posting these email lessons. It really helps continuing your astrology lessons.

Nareshkumar said...

Thank you sir, i have another doubt sir, My lagnam is magaram.
3rd and 12 th house lord Guru is vagram, and combined with mandhi in the 6th house, is this is v.r.yogam.please tell sir, and what happens if both mandhi and guru sees the lagnathypathy sani at 12th house.
pls tell.

மகேஷ் ராஜ் said...

ஆசிரியருக்கு வணக்கம்,
ஐயா நான் கற்று வருகேரன் . மீகவும் பயன்படுகேறது
sir i send u one mail about asking one guy life in business .i cann't able to tell him clearly. please
mail me sir date of birth:26/5/1985
place:vedasandur
time:5.45pm he had sane in lakunam
நன்றி

ananth said...

பாடம்/பதிவு படித்து விட்டு பின்னூட்டம் இட கூட முடியாத சோம்பேரியாகி விட்டேன். அதனால் கடந்த 2 பாடங்களில் பின்னூட்டம் இடவில்லை.

எனக்கு லக்னாதிபதி புதன், 2,9 அதிபதி சுக்கிரனுடன் 8ல்தான் இருக்கிறார். 8ம் இடத்தின் மொத்த பரலே 26தான். இதில் என்ன நன்மை என்கிறீர்களா. ஜோதிடத்தையும் வகுப்பறையையும் நினைத்துப் பார்க்க நேரமும், மனமும் இருக்கிறதே. எனக்கு லக்னாதிபதி, கோணாதிபதி ஓஹோவென்று இருந்திருந்தால், ஏதோ வகுப்பறையாம், சுப்பையா வாத்தியாராம், அதற்கு 1000++ followerராம், வேலையற்றவர்கள் (மன்னிக்க வேண்டும், உதாரணத்திற்காக சொல்கிறேன்) என்று சொல்லிவிட்டு இந்த பக்கமே வராமல் இருந்திருப்பேன்.

ஜகன்னாத ஹோரா ஆசிரியர் PVR நரசிம்மராவ் அவர்களுக்கு லக்னாதிபதி புதன், 2,9 அதிபதி சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய நால்வரும் (கோணாதிபதிகள் மொத்தமாக 8ல், கோணத்தில் ஒரு கிரகமும் இல்லை). இருப்பினும் அவர் எப்படி இருக்கிறார் என்று நமக்கெல்லாம் தெரியும். இழப்பீடு என்பது அவர் ஜாதகத்தில் இருக்கிறது.

rajesh said...

இந்த எளிமைதான் எனக்கு பிடித்த ஒன்று. நன்றி அய்யா

SP.VR. SUBBAIYA said...

///sury said...
லக்னாதிபதி 12ல் அமரக்கூடாது என்பது பொது விதி என்பது இருந்தாலும் இந்த விதியிலிருந்து சுக்ரனுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்கிறார்களே ? இது சரிதானா ?
12 சயனஸ்தானம் என்பதால், சுக்ரன் அமர்ந்தால் நல்லது என்கிறார்களே ??
சுப்பு ரத்தினம்./////

விதிவிலக்கு யாருக்கும் இல்லை!

SP.VR. SUBBAIYA said...

/////BaskarChandran said...
Hello Sir
Thanks a lot for posting these email lessons. It really helps continuing your astrology lessons./////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Nareshkumar said...
Thank you sir, i have another doubt sir, My lagnam is magaram.
3rd and 12 th house lord Guru is vagram, and combined with mandhi in the 6th house, is this is v.r.yogam.please tell sir, and what happens if both mandhi and guru sees the lagnathypathy sani at 12th house.
pls tell./////
ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி இன்னொரு துஷ்டஸ்தானத்து அதிபதியுடன் சேர்ந்து ஒரு துஷ்டஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே வி.ரா யோகம். உங்களுக்கு அது இல்லை! குரு பார்வை நல்லது. மாந்திக்குப் பார்வை கிடையாது!

SP.VR. SUBBAIYA said...

////மகேஷ் ராஜ் said...
ஆசிரியருக்கு வணக்கம்,
ஐயா நான் கற்று வருகேரன் . மீகவும் பயன்படுகிறது
sir i send u one mail about asking one guy life in business .i cann't able to tell him clearly. please
mail me sir date of birth:26/5/1985
place:vedasandur
time:5.45pm he had sane in lakunam
நன்றி////

தனிப்பட்ட ஜாதகங்களை எல்லாம் பரிசோதித்துப் பலன் சொல்ல நேரம் இல்லை நண்பரே!

SP.VR. SUBBAIYA said...
This comment has been removed by the author.
SP.VR. SUBBAIYA said...

/////ananth said...
பாடம்/பதிவு படித்து விட்டு பின்னூட்டம் இட கூட முடியாத சோம்பேறியாகி விட்டேன். அதனால் கடந்த 2 பாடங்களில் பின்னூட்டம் இடவில்லை.
எனக்கு லக்னாதிபதி புதன், 2,9 அதிபதி சுக்கிரனுடன் 8ல்தான் இருக்கிறார். 8ம் இடத்தின் மொத்த பரலே 26தான். இதில் என்ன நன்மை என்கிறீர்களா. ஜோதிடத்தையும் வகுப்பறையையும் நினைத்துப் பார்க்க நேரமும், மனமும் இருக்கிறதே. எனக்கு லக்னாதிபதி, கோணாதிபதி ஓஹோவென்று இருந்திருந்தால், ஏதோ வகுப்பறையாம், சுப்பையா வாத்தியாராம், அதற்கு 1000++ followerராம், வேலையற்றவர்கள் (மன்னிக்க வேண்டும், உதாரணத்திற்காக சொல்கிறேன்) என்று சொல்லிவிட்டு இந்த பக்கமே வராமல் இருந்திருப்பேன்.
ஜகன்னாத ஹோரா ஆசிரியர் PVR நரசிம்மராவ் அவர்களுக்கு லக்னாதிபதி புதன், 2,9 அதிபதி சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய நால்வரும் (கோணாதிபதிகள் மொத்தமாக 8ல், கோணத்தில் ஒரு கிரகமும் இல்லை). இருப்பினும் அவர் எப்படி இருக்கிறார் என்று நமக்கெல்லாம் தெரியும். இழப்பீடு என்பது அவர் ஜாதகத்தில் இருக்கிறது.///////

நீங்கள் வந்து பதிவுகளைப் படித்தால் போதும். பின்னூட்டம் இரண்டாம்பட்சம்தான்!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Enakku 11il Lagnadhibahdhi (Viruchiga Lagnam)+ 11 th lord.

En maganukku Kadaga Lagnam - Meenathil Uchham petra Sukkiranudan(4,11th Lord).

Thank you

Loving Student
Arulkumar Rajaram

SP.VR. SUBBAIYA said...

/////rajesh said...
இந்த எளிமைதான் எனக்கு பிடித்த ஒன்று. நன்றி அய்யா////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Arulkumar Rajaraman said...
Dear Sir
Enakku 11il Lagnadhibahdhi (Viruchiga Lagnam)+ 11 th lord.
En maganukku Kadaga Lagnam - Meenathil Uchham petra Sukkiranudan(4,11th Lord).
Thank you
Loving Student
Arulkumar Rajaram/////

நல்லது. நன்றி ராஜாராமன்!