மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.4.10

ருத்திராட்சமும் அதன் மகிமையும்!


ருத்திராட்சம், ருத்திராட்ச மாலை, ருத்திராட்ச மரம்
==========================================================
ருத்திராட்சமும் அதன் மகிமையும்!

ருத்திராட்சம் அணிவது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன!

நேற்றைய பின்னூட்டத்தில் அன்பர் ஒருவர் அது பற்றி எழுதும்படி பணித்திருந்தார்.

நான் சின்ன வயதில் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருந்தேன். அது நடுநிலைப் பள்ளியில் படித்த காலம் வரைதான். அதற்குப் பிறகு பிரச்சாரக் கூட்டங்களுக்கெல்லாம் போகின்றகால கட்டத்தில் (என்ன பிரச்சாரக்
கூட்டம் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்) அவிழ்த்து வைத்துவிட்டேன்.

வீட்டில் பெற்றோர்களும் கட்டாயப் படுத்தவில்லை!

செட்டிநாட்டில் (அந்தக் காலத்தில்) சின்னக்குழந்தைகளின் கழுத்தில் இரண்டு பக்கமும் தங்கப் பட்டி போட்ட ருத்திராட்சம் இருக்கும். செல்வந்தர் வீட்டுக் குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலியிலேயே ருத்திராட்சத்தைக் கோர்த்து
அணிந்திருப்பார்கள்.

மூன்று மாதம் முடிந்த பிறகு, குலதெய்வக்கோவிலிலோ அல்லது உள்ளூர் அம்மன் கோவிலிலோ அல்லது பழநிக் கோவிலிலோ குழந்தைக்கு முடியிறக்கிவிட்டு, முதல் வேலையாகக் கழுத்தில் ருத்திராட்சத்தைக் கட்டிவிட்டு விடுவார்கள். ஆண் குழந்தைகளுக்கு மட்டும்தான் அது! குழந்தைகளுக்கு அணிவதற்கென்றே சிறிய அள்வில் ருத்திராட்சங்கள் கிடைக்கும். சில வீடுகளில் கொட்டான் நிறைய உத்திராட்சங்கள் வைத்திருப்பார்கள். வாரணாசிக்குச் சென்று திரும்புபவர்கள் நிறையக் கொண்டுவந்து உறவினர்களுக்கெல்லாம் கொடுப்பார்கள்.

ருத்திராட்சத்திற்கும் தங்கத்திற்கும் பஞ்சமில்லாத காலம் அது!

நாற்பது வயது தாண்டியவர்கள் அனைவரும் ருத்திராட்சம் அணிந்திருப்பார்கள்.(அந்தக்காலக் கதை என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இவற்றைப் படிக்கவும்) வசதியானவர்கள் என்று இல்லாமல் பலரும் ருத்திராட்ச மாலை அணிந் திருப்பார்கள். சின்ன ருத்திரட்சமாக இருந்தால் 108 ருத்திராட்சங்கள் மாலையில் இருக்கும். அதை இரண்டு சுற்றுக்களாக்கி கழுத்தில் அணிந்து கொண்டிருப்பார்கள். பெரிய ருத்திரட்சமாக இருந்தால் மாலையில்
54 ருத்திராட்சங்கள் இருக்கும். வசதியானவர்களின் ருத்திராட்ச மாலை தங்கத்தில் இணைக்கப்பட்டதாக இருக்கும். அல்ல வென்றால் செம்புக்கம்பிகளால் இணைக்கப்பட்டதாக இருக்கும்.

சிலர் வயதான காலத்தில் தீவிர சிவபக்தர்களாக மாறி, மொட்டை, பட்டை, கொட்டை, கட்டையுடன் இருப்பார்கள்.

அதாவது தலை மொட்டை. நெற்றியில் விபூதிப்பட்டை, கழுத்தில் (ருத்திராட்சக்) கொட்டை. காலில் கட்டை (மரக் கட்டையால் செய்த செருப்பு). மாட்டுத் தோலினால் செருப்புக்கள் செய்யப்படுவதால் தோல் செருப்பை அணிய மாட்டார்கள். அப்படியொரு பக்தி.

உபதேசம் கேட்டுக்கொள்வார்கள். அதற்கென்று செட்டிநாட்டில் இரு ஊர்களில் குருமார்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அதற்கென்று அறக்கட்டளைகளும், விடுதிகளும் சொத்துக்களும் இருக்கின்றன.
வழிவழியாக வந்த குருமார்களும் இருக்கின்றார்கள்.

அந்த ஊர்களின் பெயர்கள்: பாதரக்குடி, துலாவூர். அந்த இரண்டு கிராமங்களும் குன்றக்குடிக்கு அருகே உள்ளது. நீங்கள் சென்றால் பார்க்கலாம்.

இந்த உபதேசம் கேட்டுக் கொண்டவர்கள், காலை, மாலை என இருவேளைகளும், குளித்து, சந்தியாவந்தனம் செய்வார்கள். 108 முறை சிவன் நாமத்தைச் சொல்லி - பஞ்சாட்சரத்தைச் சொல்லி (அதாவது நமச்சிவாயா என்று சொல்லி) சிவனை வணங்குவார்கள். அதற்கு அவர்களுக்கு நேரமும் இருந்தது. அந்த 108 எண்ணிக்கை தவறாமல் இருப்பதற்கு ருத்திராட்ச மாலையும் இருந்தது. மாலையின் மேல் பகுதிக் கொக்கியில் ஆரம்பித்தால், மறுபக்கக் கொக்கி வருவதற்குள் 108 முறைகள் பஞ்சாட்சரம் சொல்லி முடிக்கப்பெற்றிருக்கும். ஒவ்வொரு முறை சொல்லும்போதும் ஒரு ருத்திராட்சம் கைவிரல்களைக் கடந்திருக்கும்.

இன்றையத் தலைமுறையினர் (என்னையும் சேர்த்து) அப்படிச் செய்வதாகத் தெரியவில்லை. விட்டகுறை தொட்டகுறையாக ஒரு 20% அல்லது 25% அதைத் தொடர்கிறார்கள் (சரியான எண்ணிக்கையில்லை. உத்தேசம்தான்)

அப்படி அணிந்தவர்களுக்கும், பூஜை அல்லது ஜெபம் செய்தவர்களுக்கெல்லாம், ப்ளட் பிரஷ்சர், சுகர், ஹார்ட் அட்டாக் எல்லாம் இருந்ததில்லை. ஆரோக்கியமாக இருந்தார்கள். அது நிதர்சனமான உண்மை!

நமக்கெல்லாம் ஆரோக்கியத்தைவிட பணமே பிரதானமாகப் போய்விட்டது. பணத்தேடலிலேயே வாழ்க்கையின் பெரும்பகுதி கழன்று கொண்டிருக்கிறது. யாருக்கும் எதற்கும் நேரம் இல்லை!

நேரம் கிடைத்தாலும் பலர் அதை டாஸ்மாக்கில் அல்லது தொலைகாட்சி அழ்வாச்சி சீரியல்களில் அல்லது ஐ.பி.எல் ட்வென்டி ட்வெண்டி போட்டிகளில் செலவழித்துவிடுகிறார்கள். கலியுகம். வேறென்னத்தைச் சொல்வது?

ஒரு ஆறுதலான செய்தி: மெடிக்ளைம் இன்சூரன்ஸ் இருக்கிறது. ஆகவே அவன் பார்த்துக் கொள்வான்!:-))))
---------------------------------------------------------------------------------------------------------------------
“வாத்தி (யார்) ருத்திராட்சத்தைப்பற்றிய செய்தி அதிகமில்லாமல் எல்லாம் உங்கள் கதையாகவே இருக்கிறதே? ருத்திராட்சத்தைப்பற்றிய முக்கியமான செய்திகள் எங்கே?”

“நீ கேட்பாய் என்று தெரியும் கண்ணா! கீழே கொடுத்துள்ளேன். படித்துப்பார்!”
______________________________________________________________________

ருத்திராட்சத்தைப் பற்றி நான் சொல்ல வந்ததைவிட ஒரு இஸ்லாமிய அன்பர் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். விடாமல் அவருடைய கட்டுரை முழுவதையும் படியுங்கள். அதற்குப் பிறகு அதை அணிவதா அல்லது வேண்டாமா? என்பதை உங்கள் விருப்பப்படி முடிவு செய்யுங்கள்.

அந்தக் கட்டுரைக்கான சுட்டி இங்கே உள்ளது:

மேலதிகத் தகவல்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

1. நல்ல ருத்திராட்சமாக இருந்தால், அதைத் தண்ணீரில் போட்டால், அது நீருக்குள் மூழ்கிவிட வேண்டும்

2. ஐந்து முகம், ஆறுமுக முகம் கொண்ட ருத்திராட்சங்கள் அதிகமாகக் கிடைக்கும். எங்கும் கிடைக்கும். திருவண்ணாமலைக் கோபுரவாசலில் உள்ள கடைகளில் விற்கிறார்கள். விலை பத்து ரூபாய்தான்.

3. ஆறுமுகத்திற்கு மேல் ஏறுமுகம் என்பார்கள். அதாவது அதிக முகங்களைக் கொண்ட ருத்திராட்சம் நல்ல பலனைத் தரும் என்பார்கள். விலை 300 ரூபாய் முதல் 500 ரூபாய்வரை அதன் தன்மையைவைத்தும் முகங்களை வைத்தும் மாறுபடும்.

4. ஒரு கடினமான நிபந்தனை உண்டு. ருத்திராட்சம் அணிந்தவர்கள் புலால் அருந்தக் கூடாது. அதாவது நான் வெஜ்ஜிற்குத் தடா போட்டுவிட வேண்டும்.

5. ருத்திராட்ச மரத்தைப் பற்றிய செய்திகளுக்கான சுட்டி இங்கே உள்ளது!

நட்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

43 comments:

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்,
ருத்திராட்சம் பற்றிய தொகுப்புக்கு
நன்றிகள் குருவே!
கொட்டான் (பனை ஓலையில் செய்த ஒரு டப்பா)
என்ற வார்த்தையை கேட்டு வெகு நாட்களாகிறது.
ருத்ராட்ச்ச மரத்தையும் பழத்தையும் இப்போது தான் பார்க்கிறேன்,
அது கூட அந்த நீலகண்டனின் நிறமாகவே இருக்கிறதே!

ஜீவா said...

அன்பு அய்யாவுக்கு வணக்கம், ருத்ராட்சம் பற்றிய செய்திகளை
மிக தெளிவான விளக்கம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி, சன்யாசி,
சாமியார் மட்டும்தான் அணியலாம் என்று நினைத்திருந்தேன்,
இப்போது தெளிவு பெற்றேன்.
அன்புடன் உங்கள் மாணவன்
ஜீவா

கோவி.கண்ணன் said...

//அப்படி அணிந்தவர்களுக்கும், பூஜை அல்லது ஜெபம் செய்தவர்களுக்கெல்லாம், ப்ளட் பிரஷ்சர், சுகர், ஹார்ட் அட்டாக் எல்லாம் இருந்ததில்லை. ஆரோக்கியமாக இருந்தார்கள். அது நிதர்சனமான உண்மை!//

உணவு முறைகள் மாறியதும், யூரியா பொட்டாஸ் போன்ற இரசாயன உரவகைகளை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதும் கூட நோய்களின் பெருக்கத்திற்கு காரணமாக இருக்கலாம், கிராமத்து கூலி தொழிலாளிகள்(நடவு, அறுவடை செய்யும் ஆட்கள்) எந்த பட்டையும் கொட்டையும் அணிந்தததில்லை, நீங்க குறிப்பிடுகிறவர்களைவிட நன்றாக நலமுடன் கூடுதல் வாழ்நாள்களுடன் வாழ்ந்தார்கள்.

LK said...

அருமை. ஏக முக ருத்ராக்ஷம் அணிந்தால் இன்னும் கட்டுப்பாடு தேவை என்று என் தந்தை கூறுவார்.

காவேரி கணேஷ் said...

ருத்திராட்சம் அணிவதால் சளி தொந்தரவு போய்விடும் என்பது அனுபவ பூர்வ உண்மை.

kmr.krishnan said...

உருத்திராட்சத்தின் 'சைஸ்' குறைந்தால் விலை கூட ஆகும்! அதுபோல ஒருமுக(ஏக முகம்) ருத்ராட்சத்தின் விலை ரூபா 5000/ போல இருக்கும்.

நிறைய ஏமாற்று வேலை உண்டு.எனவே ருத்ராட்சம் அதிக விலை உள்ளது வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை.

உருத்ராட்சம் நம்மை "ருத்ராட்ச பூனையாக" மாற்றிவிடாமல் மனதை பக்குவப்படுத்த பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

ருத்திராட்சமும் அதன் மகிமையும்,சிறப்பாக மிகத தெளிவாக
அனுபவபூர்வமாக கொடுத்துள்ளீர்கள்.அதன் மருத்துவ குணங்களையும் அனைவரும் அறிந்துக் கொள்ளவேண்டிய விஷயமாகும்.நன்றி!
- - - - - - - - - -- - - -
"வீடுகளில் கொட்டான் நிறைய உத்திராட்சங்கள்"
என்று குறிப்பிட்டுள்ளீர்கள்,
- - - - - -- - - - - - --
ஒரு சந்தேகம்,
'கொட்டான்' என்றால் 'கொட்டாஞ்சி' என்றும் 'கொட்டாங்கச்சி' என்றும் சொல்வார்கள்.அதாவது தேங்காய் இரண்டாக உடைப்பார்கள்,அதில் வெள்ளைப் பகுதியை எடுத்த பின்பு உள்ள தேங்காய் ஓடுகளைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?

நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-04-16

ms torrent said...

Thank u sir. thanks a lot for the post regarding rudraksha. Also pls do mention about, how many faces should we wear and how many beads to be weared like 108,57,..etc.which age peoples should wear ,which faces of rudraksha?.

small doubt: muttai veg menuvil serndhuvitatha alladu non-veg menuvil ulladha. ? . hehe

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம், ருத்திராட்சம் பற்றிய தொகுப்புக்கு
நன்றிகள் குருவே!
கொட்டான் (பனை ஓலையில் செய்த ஒரு டப்பா) என்ற வார்த்தையை கேட்டு வெகு நாட்களாகிறது.
ருத்ராட்ச் மரத்தையும், பழத்தையும் இப்போது தான் பார்க்கிறேன்,
அது கூட அந்த நீலகண்டனின் நிறமாகவே இருக்கிறதே!/////

ஆமாம் அதுவும் விந்தைதான். அந்த மரப் பழத்திற்கும் மருத்துவக்குணம் உள்ளதாம்.
நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

////ஜீவா said...
அன்பு அய்யாவுக்கு வணக்கம், ருத்ராட்சம் பற்றிய செய்திகளை
மிக தெளிவான விளக்கம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி, சன்யாசி,
சாமியார் மட்டும்தான் அணியலாம் என்று நினைத்திருந்தேன்,
இப்போது தெளிவு பெற்றேன்.
அன்புடன் உங்கள் மாணவன்
ஜீவா/////

திருவோடு மட்டும்தான் அவர்களுக்கு என்று தனியானது. ருத்திராட்சம் அனைவருக்கும் பொதுவானது!

SP.VR. SUBBAIYA said...

////கோவி.கண்ணன் said...
//அப்படி அணிந்தவர்களுக்கும், பூஜை அல்லது ஜெபம் செய்தவர்களுக்கெல்லாம், ப்ளட் பிரஷ்சர், சுகர், ஹார்ட் அட்டாக் எல்லாம் இருந்ததில்லை. ஆரோக்கியமாக இருந்தார்கள். அது நிதர்சனமான உண்மை!//
உணவு முறைகள் மாறியதும், யூரியா பொட்டாஸ் போன்ற இரசாயன உரவகைகளை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதும் கூட நோய்களின் பெருக்கத்திற்கு காரணமாக இருக்கலாம், கிராமத்து கூலி தொழிலாளிகள்(நடவு, அறுவடை செய்யும் ஆட்கள்) எந்த பட்டையும் கொட்டையும் அணிந்தததில்லை, நீங்க குறிப்பிடுகிறவர்களைவிட நன்றாக நலமுடன் கூடுதல் வாழ்நாள்களுடன் வாழ்ந்தார்கள்./////

அதுதான் விஷயம். நீங்களே வாக்குமூலம் கொடுத்துவிட்டீர்கள்! கிராமத்துக் கூலித் தொழிலாலர்கள் உழைப்பாளிகள். அவர்களுக்கு ஒன்றும் வராது. காரணம் அதீத உடல் உழைப்பு. நான் சொல்லியிருக்கும் எங்கள் பகுதி மக்கள் உடல் உழைப்பு இல்லாதவர்கள். அர்த்தாமாயிந்தாண்டி?

SP.VR. SUBBAIYA said...

////LK said...
அருமை. ஏக முக ருத்ராக்ஷம் அணிந்தால் இன்னும் கட்டுப்பாடு தேவை என்று என் தந்தை கூறுவார்.////

அத்துடன் ஒருமுக (ஏகமுக) ருத்திராட்சம் அரிதானது. விலை அதிகம் உடையது.

SP.VR. SUBBAIYA said...

/////காவேரி கணேஷ் said...
ருத்திராட்சம் அணிவதால் சளி தொந்தரவு போய்விடும் என்பது அனுபவ பூர்வ உண்மை.//////

நல்லது. தகவலுக்கு நன்றி கணேஷ்!

SP.VR. SUBBAIYA said...

kmr.krishnan said...
உருத்திராட்சத்தின் 'சைஸ்' குறைந்தால் விலை கூட ஆகும்! அதுபோல ஒருமுக(ஏக முகம்) ருத்ராட்சத்தின் விலை ரூபா 5000/ போல இருக்கும்.
நிறைய ஏமாற்று வேலை உண்டு.எனவே ருத்ராட்சம் அதிக விலை உள்ளது வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை.
உருத்ராட்சம் நம்மை "ருத்ராட்ச பூனையாக" மாற்றிவிடாமல் மனதை பக்குவப்படுத்த பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.///////

நாட்டில் ருத்திராட்சப் பூனைகளைவிட, ருத்திராட்சம் அணியாத பூனைகளின் நடமாட்டம் அதிகம் கிருஷ்ணன் சார்!

கோவி.கண்ணன் said...

//நான் சொல்லியிருக்கும் எங்கள் பகுதி மக்கள் உடல் உழைப்பு இல்லாதவர்கள். அர்த்தாமாயிந்தாண்டி?//

30 ஆண்டுகளுக்கு முன்பு கூட செத்துப் போனவர்களை இந்த வியாதியால் செத்துப் போனவர்கள் என்று சொல்லும் பழக்கம் கிடையாது. ஏனெனில் நோய் பெயரே பலருக்கு தெரியாது. நல்லாதான் இருந்தாரு பொட்டுன்னு போய்ட்டாருன்னு தான் சொல்லுவாங்க, அது இதய நோயோ, மூளை ரத்தக்கசிவாகக் கூட இருக்கும். இன்றைய தேதிக்கு யார் யார் என்ன வியாதியால் செத்துப் போகிறார்கள் என்று தெரிந்துவிடுவதால் நாம அந்த காலத்தில் அந்த நோய் இருந்ததே இல்லைன்னு நம்புறோம். மேட்டர் அவ்வளவு தான்.

நீங்கள் குறிப்பிடும் காலத்தைவிட இன்றைய தேதியில் சராசரி ஆயுள் மிகுதி சார்.

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ருத்திராட்சமும் அதன் மகிமையும்,சிறப்பாக மிகத தெளிவாக
அனுபவபூர்வமாக கொடுத்துள்ளீர்கள்.அதன் மருத்துவ குணங்களையும் அனைவரும் அறிந்துக் கொள்ளவேண்டிய விஷயமாகும்.நன்றி! - - - - - - - - - -- - - -
"வீடுகளில் கொட்டான் நிறைய உத்திராட்சங்கள்"
என்று குறிப்பிட்டுள்ளீர்கள், - - - - - -- - - - - - --
ஒரு சந்தேகம்,
'கொட்டான்' என்றால் 'கொட்டாஞ்சி' என்றும் 'கொட்டாங்கச்சி' என்றும் சொல்வார்கள்.அதாவது தேங்காய் இரண்டாக உடைப்பார்கள்,அதில் வெள்ளைப் பகுதியை எடுத்த பின்பு உள்ள தேங்காய் ஓடுகளைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?
நன்றி! வணக்கம். தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////

கொட்டான் என்பது பனை ஓலையில் செய்த ஒரு சிறிய ஓலைப் டப்பா. மூடியில்லமாலும் இருக்கும். மூடியுடனும் இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

///////ms torrent said...
Thank u sir. thanks a lot for the post regarding rudraksha. Also pls do mention about, how many faces should we wear and how many beads to be weared like 108, 54,..etc.which age peoples should wear ,which faces of rudraksha?.
small doubt: muttai veg menuvil serndhuvitatha alladu non-veg menuvil ulladha. ? . hehe////

ஒரு உத்திராட்சம் என்றால் ஆறுமுகம் அணிந்து கொள்ளலாம். மாலை என்றால் சிறிய அளவு உத்திராட்சங்கள் கிடைக்கும். அதற்கு முகக் கணக்குகள் கிடையாது!
முட்டையும் நான் வெஜ். அத்துடன் முட்ட கலந்த கேக்குகளும் நான் வெஜ்! ஹி...ஹி...ஹி!

SP.VR. SUBBAIYA said...

////கோவி.கண்ணன் said...
//நான் சொல்லியிருக்கும் எங்கள் பகுதி மக்கள் உடல் உழைப்பு இல்லாதவர்கள். அர்த்தாமாயிந்தாண்டி?//
30 ஆண்டுகளுக்கு முன்பு கூட செத்துப் போனவர்களை இந்த வியாதியால் செத்துப் போனவர்கள் என்று சொல்லும் பழக்கம் கிடையாது. ஏனெனில் நோய் பெயரே பலருக்கு தெரியாது. நல்லாதான் இருந்தாரு பொட்டுன்னு போய்ட்டாருன்னு தான் சொல்லுவாங்க, அது இதய நோயோ, மூளை ரத்தக்கசிவாகக் கூட இருக்கும். இன்றைய தேதிக்கு யார் யார் என்ன வியாதியால் செத்துப் போகிறார்கள் என்று தெரிந்துவிடுவதால் நாம அந்த காலத்தில் அந்த நோய் இருந்ததே இல்லைன்னு நம்புறோம். மேட்டர் அவ்வளவு தான்.
நீங்கள் குறிப்பிடும் காலத்தைவிட இன்றைய தேதியில் சராசரி ஆயுள் மிகுதி சார்.////////

ஆயுளும் மிகுதி. நோய்களும் மிகுதி, மருத்துவமனைகளும் மிகுதி. மாத்திரைகளும் மிகுதி. மனிதனின் கவலையும் மிகுதி. கவலையை மறக்க ‘சரக்கடிக்கும்’ இடங்களும் மிகுதி!!! சாராயம் விற்றவர்கள் கல்லூரிகளை நடத்துகிறார்கள். கல்லூரிகளை நடத்த வேண்டிய அரசுகள் சாராயம் விற்கின்றன. எல்லாமே தலை கீழ்.!
நமக்கு தலைகீழாக நடக்க வரவில்லை. அதுதான் நமக்கு உள்ள ஒரே குறை! அதோடு சொந்த வேலைகளைப் பார்ப்போம். நாலு காசு தேற்றுவோம் என்றில்லாமல் பதிவுகள் எழுதி வீணாய்ப்போவது இன்னொருகுறை.இப்படிக் குறையோ குறை என்று வாழ்க்கை நகர்வதால். மிகுதிகள் கண்ணில் படுவதில்லை! (ஆயுள் மிகுதியையும் சேர்த்து):-)))))

ms torrent said...

aiyago muttai inuma non-veg menuvil irukindradu....enna vedhanai..endha ananduku vandha sodhanai....hahaha...thank u sir .

T K Arumugam said...

ஐயா வணக்கம்

ருத்ராட்சம் பற்றிய விளக்கம் அருமை. தெளிவு பெற்றேன். மணமானவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது என்கின்றனர். இரவில் படுக்கும் போது கழட்டி வைத்து விட்டு மறுநாள் அணிந்து கொள்ளளலாம், அதே போல் புலால் உண்ணும் பொது கழட்டி வைத்து விடலாம் என்கிறார்கள். ராசிக்கல் மோதிரமும் கூட புலால் உண்ணும் போதும், இரவிலும் கழட்டி வைத்து விடவேண்டும் என்கிறார்கள்.

இது பற்றி விளக்கம் தேவை.

நன்றி

வாழ்த்துக்கள்

kannan said...

Dear sir!

Super.

சூர்யநிலா said...

உண்மையான ருத்ராக்ஷம் அறிய உரைகல்லில் மாற்று உரைத்தால் பொன் மாற்று காண்பிக்கும்

SP.VR. SUBBAIYA said...

////ms torrent said...
aiyago muttai inuma non-veg menuvil irukindradu....enna vedhanai..endha ananduku vandha sodhanai....hahaha...thank u sir .////

நல்லது நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////T K Arumugam said...
ஐயா வணக்கம்
ருத்ராட்சம் பற்றிய விளக்கம் அருமை. தெளிவு பெற்றேன். மணமானவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது என்கின்றனர். இரவில் படுக்கும் போது கழட்டி வைத்து விட்டு மறுநாள் அணிந்து கொள்ளளலாம், அதே போல் புலால் உண்ணும் பொது கழட்டி வைத்து விடலாம் என்கிறார்கள். ராசிக்கல் மோதிரமும் கூட புலால் உண்ணும் போதும், இரவிலும் கழட்டி வைத்து விடவேண்டும் என்கிறார்கள்.
இது பற்றி விளக்கம் தேவை.
நன்றி
வாழ்த்துக்கள்/////

ருத்திராட்சம் மணவாழ்க்கைக்கு எதிரானதல்ல! ஆகவே அது பற்றிய சந்தேகம் வேண்டாம். எப்போதும் அணிந்து கொள்ளலாம். புலால் உண்பது மட்டும் கூடாது. கழற்றிவத்துவிட்டு உண்ணுவது என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது ஆகும். உண்ணும்போது கழற்றிவைத்தால், உண்ட உணவு வயிற்றில் ஜீரணமாகும் வரை என்ன செய்வீர்கள்?

SP.VR. SUBBAIYA said...

/////kannan said...
Dear sir!
Super.//////

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

///////சூர்யநிலா said...
உண்மையான ருத்ராக்ஷம் அறிய உரைகல்லில் மாற்று உரைத்தால் பொன் மாற்று காண்பிக்கும்//////

இந்த செய்தி புதிதாக உள்ளது. நல்ல ருத்திராட்சம் தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடும். அந்த சோதனை ஒன்று போதுமே சாமி!

Shyam Prasad said...

மிக்க நன்றி . ருத்திராட்சம் மரம் வளர வேண்டுமானால் , இறைவனுடைய கிருபை இருந்தால் தான் வளருமாம் . இந்தியாவில் கூட ருத்திராட்சம் மரம் இல்லை என்று கேள்விபட்டேன் . நேபாளத்தில் இருந்து தான் இந்தியாவிற்கு ருதிராக்ஷங்கள் வருகிறதாம் . அமெரிக்காவில் ஹவாய் (Hawaii)மாநிலத்தில் "ஹவாய் ஆதினம் " (Hawaii Adhinam) அமைந்துள்ள "இறைவன் கோவிலில்" (Iraivan Temple) ருத்திராக்ஷ மரங்கள் நிறைய உள்ளன .

http://himalayanacademy.com/blog/taka/category/saiva-siddhanta-church-missions/wailua-mission/

http://www.himalayanacademy.com/ssc/hawaii/iraivan/donate/rudraksha.shtml

sowri said...

Thank you for the wonderful sharing.

SP.VR. SUBBAIYA said...

/////Shyam Prasad said...
மிக்க நன்றி . ருத்திராட்சம் மரம் வளர வேண்டுமானால் , இறைவனுடைய கிருபை இருந்தால் தான் வளருமாம் . இந்தியாவில் கூட ருத்திராட்சம் மரம் இல்லை என்று கேள்விபட்டேன் . நேபாளத்தில் இருந்து தான் இந்தியாவிற்கு ருதிராக்ஷங்கள் வருகிறதாம் . அமெரிக்காவில் ஹவாய் (Hawaii)மாநிலத்தில் "ஹவாய் ஆதினம் " (Hawaii Adhinam) அமைந்துள்ள "இறைவன் கோவிலில்" (Iraivan Temple) ருத்திராக்ஷ மரங்கள் நிறைய உள்ளன
http://himalayanacademy.com/blog/taka/category/saiva-siddhanta-church-missions/wailua-mission/
http://www.himalayanacademy.com/ssc/hawaii/iraivan/donate/rudraksha.shtml//////

இல்லை. ஹரித்துவார் அருகில் உள்ள பகுதிகளில் ருத்திராட்ச மரங்கள் உள்ளதாகக் கூறுவார்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////sowri said...
Thank you for the wonderful sharing.////

நல்லது. நன்றி!

iyer said...

Sir ji..

I am with RUDRAKSHA for last 20 years..
and
practicing CAIVA philosophy..
(ofcourse, VEGETARIAN, with no spicy foods- taking only vegetables during my abroad stay) almost from childhood..
and being HEALTHY for last 27 years with NO AILMENT..!!

This is not to boast.. but to share with our classroom friends..!!

Will share more after being at India..

visuiyer

ananth said...

ருத்திராட்சம் பற்றி புத்தகங்கள் மற்றும் இணையத் தளங்களில் படித்திருக்கிறேன். 1லிருந்து 9 முகம் வரை உள்ள ருத்திராட்சங்களுக்கு முறையே சூரியன் முதல் கேது வரை ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும் அந்தந்த கிரகங்களுக்கான ருத்திராட்சம் அணிந்தால் கிரகங்களின் பூரண அருள் கிட்டும் என்றும் பல இடங்களில் படித்திருக்கிறேன். உதாரணம் புதனுக்குரிய 4 முகம் கொண்ட ருத்திராட்சம் படைப்பாளிகள், அறிவு திறம் குறைந்தவர்கள் போன்றோர் பயன் படுத்தினால் நல்ல பலன் காணலாம். அவை நான்முகன் பிரம்மாவின் அம்சம் கொண்டவை என்றும், மனிதனைக் கொன்ற நரஹத்தி தோஷமும் இதனால் விலகும் என்றும் படித்திருக்கிறேன். இப்படி வெவ்வேறு முகம் கொண்ட ருத்திராட்சத்திற்கும் பலன், அதிதேவதை மாறுபடும்.

சில வகை ருத்திராட்சங்கள் அதிகம் கிடைக்கும், சில கிடைக்காது. இதை வைத்துதான் அதற்கு விலை. அதற்காக விலை குறைந்தது பயன் தராது என்பதெல்லாம் கிடையாது.

நானும் கடந்த 3 வருடமாக ருத்ராட்சம் அணிந்து வருகிறேன். 2,4,7 முகம் கொண்ட ருத்ராட்சம் கோர்க்கப் பட்டது. எனக்கு தெரிந்த வரையில் இதை அணிந்தால் புலால் உண்ணக் கூடாது என்பதற்கு எந்த அடிப்படையும் இருப்பதாக தெரியவில்லை. அதைப் பற்றி கவலைப் படாமல் அணிந்துதான் வருகிறேன். நல்ல மாற்றம் தான் ஏற்பட்டதே ஒழிய எந்த கெடுதலும் ஏற்படவில்லை. என் மனைவி 1,4,6 முகம் கொண்ட ருத்திராட்சம் அணிந்திருக்கிறார்.

SP.VR. SUBBAIYA said...

/////iyer said...
Sir ji..
I am with RUDRAKSHA for last 20 years..
and practicing CAIVA philosophy..
(ofcourse, VEGETARIAN, with no spicy foods- taking only vegetables during my abroad stay) almost from childhood..and being HEALTHY for last 27 years with NO AILMENT..!!
This is not to boast.. but to share with our classroom friends..!!
Will share more after being at India..
visuiyer/////

நல்லது. நன்றி மிஸ்டர் விசு!

SP.VR. SUBBAIYA said...

/////ananth said...
ருத்திராட்சம் பற்றி புத்தகங்கள் மற்றும் இணையத் தளங்களில் படித்திருக்கிறேன். 1லிருந்து 9 முகம் வரை உள்ள ருத்திராட்சங்களுக்கு முறையே சூரியன் முதல் கேது வரை ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும் அந்தந்த கிரகங்களுக்கான ருத்திராட்சம் அணிந்தால் கிரகங்களின் பூரண அருள் கிட்டும் என்றும் பல இடங்களில் படித்திருக்கிறேன். உதாரணம் புதனுக்குரிய 4 முகம் கொண்ட ருத்திராட்சம் படைப்பாளிகள், அறிவு திறம் குறைந்தவர்கள் போன்றோர் பயன் படுத்தினால் நல்ல பலன் காணலாம். அவை நான்முகன் பிரம்மாவின் அம்சம் கொண்டவை என்றும், மனிதனைக் கொன்ற நரஹத்தி தோஷமும் இதனால் விலகும் என்றும் படித்திருக்கிறேன். இப்படி வெவ்வேறு முகம் கொண்ட ருத்திராட்சத்திற்கும் பலன், அதிதேவதை மாறுபடும்.
சில வகை ருத்திராட்சங்கள் அதிகம் கிடைக்கும், சில கிடைக்காது. இதை வைத்துதான் அதற்கு விலை. அதற்காக விலை குறைந்தது பயன் தராது என்பதெல்லாம் கிடையாது.
நானும் கடந்த 3 வருடமாக ருத்ராட்சம் அணிந்து வருகிறேன். 2,4,7 முகம் கொண்ட ருத்ராட்சம் கோர்க்கப் பட்டது. எனக்கு தெரிந்த வரையில் இதை அணிந்தால் புலால் உண்ணக் கூடாது என்பதற்கு எந்த அடிப்படையும் இருப்பதாக தெரியவில்லை. அதைப் பற்றி கவலைப் படாமல் அணிந்துதான் வருகிறேன். நல்ல மாற்றம் தான் ஏற்பட்டதே ஒழிய எந்த கெடுதலும் ஏற்படவில்லை. என் மனைவி 1,4,6 முகம் கொண்ட ருத்திராட்சம் அணிந்திருக்கிறார்.///////

தகவல் பகிர்விற்கு மிக்க நன்றி ஆனந்த்!

சிங்கைசூரி said...

ஆசானே உங்கள் ருத்திராட்சம் ரொம்ப நன்றி- it opens doors to lot of my queries

Last week i was in Mumbai, Got a chance to Visit Shirdi, & from there i visited Sanisignapur, a place where Houses dont have Doors, Amazing to see that- and had very good darshan of Sanishwar and it happened to be saturday. After our darshan - near temple - i bought ருத்திராட்சம் - the Boy who sold it said - he has ஒரு முகம்- it is very special- he like to sell it to me - very special -i knew it was usual sales talk - but also looks like Original காம்பொடு உள்ளது, after i bought showed it to travelmates - they said no way to buy a ஒரு முகம் ருத்திராட்சம் for 100 Rs, but also agreed it looks very original - double minded they went to give a shot buying it Rs.100/- but returned with empty hands- Could find the guy-
as per Akbar Hausar artile i put the ருத்திராட்சம் in water it sinks to bottom.
whether its Duplicate or Original
திருச்சிற்றபலம்............

hamaragana said...

அன்புடன் வணக்கம்
ருத்ராக்ஷம் பற்றிய விளக்கங்கள் அருமை. விஞ்ஞான பூர்வமாக ரூ.மணி காற்றில் உள்ள positive ion கிரகித்து negaitve ion வெளிய்டும் தன்மை உள்ளது நமக்கு தேவை negative ion .வீடுகளை
மaங்குளை கட்டுவது அதனால்தான் காற்றில் உள்ள மாசு அகற்றும் அது போல ரூ.மணியும் நமது உடம்பை சுற்றி ulla மாசுக்களை அகற்றும்..மாலையாக எண்ணிக்கை 33 போட்டால் மல ஜலம் கழிக்கும் போது ,தீட்டு வீடுகள் போகும்போது கழட்டி விட வேண்டும் கண்டத்தில் மணியாக போட்டால் கழட்ட வேண்டாம் ஆனால் புலால் உணவு மது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்..இது பற்றி மேலும் விபரம் வேண்டுவோர் எனது தனி meil வருக...ஒவொரு முக மணியும் ஒவ்வொரு நமது உடம்பில் இடத்தில அணிய வேண்டும் என்ற விதி உள்ளது( உபநிஷம் )

Sabarinathan TA said...

Thank God..,
I have taken Panchamukuhi Rudraksha resently and following the rules also. I am really looking such a great post like you sir. Many Thanks for you and the one who asked this too.

Best Regards,
Sabarinathan TA

SP.VR. SUBBAIYA said...

சிங்கைசூரி said...
ஆசானே உங்கள் ருத்திராட்சம் ரொம்ப நன்றி- it opens doors to lot of my queries
Last week i was in Mumbai, Got a chance to Visit Shirdi, & from there i visited Sanisignapur, a place where Houses dont have Doors, Amazing to see that- and had very good darshan of Sanishwar and it happened to be saturday. After our darshan - near temple - i bought ருத்திராட்சம் - the Boy who sold it said - he has ஒரு முகம்- it is very special- he like to sell it to me - very special -i knew it was usual sales talk - but also looks like Original காம்பொடு உள்ளது, after i bought showed it to travelmates - they said no way to buy a ஒரு முகம் ருத்திராட்சம் for 100 Rs, but also agreed it looks very original - double minded they went to give a shot buying it Rs.100/- but returned with empty hands- Could find the guy-
as per Akbar Hausar artile i put the ருத்திராட்சம் in water it sinks to bottom.
whether its Duplicate or Original
திருச்சிற்றபலம்............//////

தண்ணீரில் முழ்ழ்கினால் அது ஒரிஜினல்தான். அதில் என்ன சந்தேகம்?

SP.VR. SUBBAIYA said...

/////hamaragana said...
அன்புடன் வணக்கம்
ருத்ராக்ஷம் பற்றிய விளக்கங்கள் அருமை. விஞ்ஞான பூர்வமாக ரூ.மணி காற்றில் உள்ள positive ion கிரகித்து negaitve ion வெளிய்டும் தன்மை உள்ளது நமக்கு தேவை negative ion .வீடுகளை
மaங்குளை கட்டுவது அதனால்தான் காற்றில் உள்ள மாசு அகற்றும் அது போல ரூ.மணியும் நமது உடம்பை சுற்றி ulla மாசுக்களை அகற்றும்..மாலையாக எண்ணிக்கை 33 போட்டால் மல ஜலம் கழிக்கும் போது ,தீட்டு வீடுகள் போகும்போது கழட்டி விட வேண்டும் கண்டத்தில் மணியாக போட்டால் கழட்ட வேண்டாம் ஆனால் புலால் உணவு மது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்..இது பற்றி மேலும் விபரம் வேண்டுவோர் எனது தனி meil வருக...ஒவொரு முக மணியும் ஒவ்வொரு நமது உடம்பில் இடத்தில அணிய வேண்டும் என்ற விதி உள்ளது( உபநிஷம் )////

மேலதிகத்தகவல்களுக்கு நன்றி நண்பரே! மலஜலம் கழிக்கும்போது போடக்கூடாது என்பது சாத்தியமில்லை.
சிறுநீர்கழிக்கச் செல்லும் ஒவ்வொருமுறையும் எப்படிக் கழற்றிவைத்துவிட்டுச் செல்ல முடியும். இதெல்லாம் சற்று ஓவர்! பழைய நூல்களில் இதுபற்றிக் குறிப்பிட்டிருந்தால், ஸ்கேன் செய்து அனுப்புங்கள் நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Sabarinathan TA said...
Thank God..,
I have taken Panchamukuhi Rudraksha resently and following the rules also. I am really looking such a great post like you sir. Many Thanks for you and the one who asked this too.
Best Regards,
Sabarinathan TA/////

நல்லது நன்றி நண்பரே!

hamaragana said...

அன்புடன் வணக்கம் ருத்ராக்ஷம் அணிவது பற்றிய விளக்கம் பழமை நூல்களில் உள்ளவை பிரதி இணைத்துள்ளேன்,, இந்த நூல் ஸ்ரீ மறை ஞான சம்பந்த நாயனார் இரண்டு வரி பாடலாக பாடியது"" சைவ சமய நெறி """.இதனின் தெளிவுரை யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதியது ,இதனின் மூல பாதிப்பு சிதம்பரம் ஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் பள்ளிக்கு சொந்தமானது .பலத்த வேண்டுகொளுக்கு இணங்க திருபரங்குன்றம் ஸ்ரீ ராஜா பட்டார் மறு பாதிப்பு செய்துள்ளார் . நிற்க ,,பூணுல் அணிபவர்கள் சௌச காலத்தில் நூலை வலது காதில் சுற்றி கொள்வார்கள் ..அதை விட மணி புனிதமானது .ஆகவே மார்பு காம்புக்கு மேல் மணி அணிதிருந்தால் கழற்ற வேண்டியதில்லை என எனது குரு தேவர் மொழி..(காசி வாசி ஆடூர் வைத்திய நாத சிவாச்சாரியார் . சம்ச்க்ரிதம் தமிழ் பாண்டித்தியம் பெற்றவர்.அவர்கள் தறசமயம் பரிபூரணம் )மணி எண் சௌச காலத்தில் கழற்ற வேண்டும் என்பதற்க்கான லாசிக் உள்ளது சௌச நேரத்தில் அசுத்தமான கிருமிகள் வெளிப்படும் அவை அனைத்தும் ஈர்க்கும் தன்மையுள்ள மணில் ஓட்டும் ஆகவே ஒரு குறிபிட்ட உயரம் அக்கிரிமிகள் எளுமபaது ஆகவே மார்புக்கு மேல் அணியலாம் ...இதோபோல் நவ ரத்தினங்களை சோதிப்பது எப்படி அவற்றை சுத்தி செய்வது எப்படி அணியும் போது கடைபிடிக்க் வேண்டிய ஒளுக்கம் என்ன என்பது பற்றிய விளக்கம் திருவாவடு துறை சரஸ்வதிமாகால் நூலகத்தில் நூல்களாக உள்ளது ...திருவிளையாடல் புராணத்தில் சிவ பெருமான் ரத்தினம் விற்ற படலத்தில் இதுபற்றி கூறியதாக வரும் என கேட்ட ஞாபகம்.... நூலின் நகலை இதில் இணைக்க எனக்கு தெரியவில்லை ஆகவே தங்களின் மினஞ்சலுக்கு அனுப்பிஉள்ளேன் . நன்றி

SP.VR. SUBBAIYA said...

//////hamaragana said...
அன்புடன் வணக்கம் ருத்ராக்ஷம் அணிவது பற்றிய விளக்கம் பழமை நூல்களில் உள்ளவை பிரதி இணைத்துள்ளேன்,, இந்த நூல் ஸ்ரீ மறை ஞான சம்பந்த நாயனார் இரண்டு வரி பாடலாக பாடியது"" சைவ சமய நெறி """.இதனின் தெளிவுரை யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதியது ,இதனின் மூல பாதிப்பு சிதம்பரம் ஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் பள்ளிக்கு சொந்தமானது .பலத்த வேண்டுகொளுக்கு இணங்க திருபரங்குன்றம் ஸ்ரீ ராஜா பட்டார் மறு பாதிப்பு செய்துள்ளார் . நிற்க ,,பூணுல் அணிபவர்கள் சௌச காலத்தில் நூலை வலது காதில் சுற்றி கொள்வார்கள் ..அதை விட மணி புனிதமானது .ஆகவே மார்பு காம்புக்கு மேல் மணி அணிதிருந்தால் கழற்ற வேண்டியதில்லை என எனது குரு தேவர் மொழி..(காசி வாசி ஆடூர் வைத்திய நாத சிவாச்சாரியார் . சம்ச்க்ரிதம் தமிழ் பாண்டித்தியம் பெற்றவர்.அவர்கள் தறசமயம் பரிபூரணம் )மணி எண் சௌச காலத்தில் கழற்ற வேண்டும் என்பதற்க்கான லாசிக் உள்ளது சௌச நேரத்தில் அசுத்தமான கிருமிகள் வெளிப்படும் அவை அனைத்தும் ஈர்க்கும் தன்மையுள்ள மணில் ஓட்டும் ஆகவே ஒரு குறிபிட்ட உயரம் அக்கிரிமிகள் எளுமபaது ஆகவே மார்புக்கு மேல் அணியலாம் ...இதோபோல் நவ ரத்தினங்களை சோதிப்பது எப்படி அவற்றை சுத்தி செய்வது எப்படி அணியும் போது கடைபிடிக்க் வேண்டிய ஒளுக்கம் என்ன என்பது பற்றிய விளக்கம் திருவாவடு துறை சரஸ்வதிமாகால் நூலகத்தில் நூல்களாக உள்ளது ...திருவிளையாடல் புராணத்தில் சிவ பெருமான் ரத்தினம் விற்ற படலத்தில் இதுபற்றி கூறியதாக வரும் என கேட்ட ஞாபகம்.... நூலின் நகலை இதில் இணைக்க எனக்கு தெரியவில்லை ஆகவே தங்களின் மினஞ்சலுக்கு அனுப்பிஉள்ளேன் . நன்றி/////

நல்லது. மேலதிகத்தகவல்களுக்கு நன்றி நண்பரே!. நீங்கள் அனுப்பிய பக்கங்களைப் படித்துப்பார்க்கிறேன். முடிந்தால் பதிவில் ஏற்றுகிறேன்! நன்றி!

Kannan klazzy said...

Mukam lla ruthrajam ... Thirisulam mattrum sangu ullathu ithan payan enna