மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

3.4.10

18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்!

எச்சரிக்கை: இது 18+ நகைச்சுவை கலந்த பதிவு. உம்மன்னா மூஞ்சி ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்.

“வாத்தி (யார்) வகுப்பறைக்கு இந்தப் பதிவு தேவைதானா? என்று கேட்பவர்களும் பதிவை விட்டு விலகவும்.

எனது மாணவர்களின் சராசரி வயது 40. வார இறுதியில், அவர்களுக்கு உள்ள இறுக்கத்தையும், மன அழுத்தத்தையும், குறைத்துக் கலகலப்பாக்குவதற்காகவே இந்தப் பதிவு வலையில் ஏற்றப்படுகிறது. அதை மனதில்வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1

உள்ளூர் அணிகளிக்கிடையே கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. பஞ்சாப் அணிக்காக ஆடிய சர்தார், 35 ரன்களை எட்டியவுடன், ரசிகர்களை நோக்கி மட்டையைத் தூக்கிக் காட்டி, பரவசமடைந்தார்.

உடன் ஆடிய பார்ட்னர், அருகே வந்து சந்தேகத்துடன் கேட்டார்.

”டேய், எல்லோரும் 50 ரன்கள் அல்லது 100 ரன்களை எட்டியவுடன் அல்லது வின்னிங் ஸ்ட்ரோக் அடித்தவுடன்தான் மட்டையைத் தூக்கிக் காட்டிப் பரவசம் அடைவார்கள். நீ எதுக்குடா, 35 ரன்களில் அதைச் செய்தாய்?”

சர்தார் அமைதியாகப் பதில் சொன்னார்:

”35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி உனக்கென்ன தெரியும்? எனக்குப் பள்ளிப் பருவத்தில் இருந்தே அது தெரியும். ஒவ்வொருமுறையும் 35ஐ எடுப்பதற்கு
நான் படாதபாடு பட்டிருக்கிறேன்!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

சர்ச்சில் இருந்து திரும்பிய கணவன் என்றும் செய்யாததை அன்று செய்தான்.

வந்தவுடன் மனைவியை வாழ்த்தியவன், இருகைகளாலும் அவளைத் தூக்கிப் பிடித்ததோடு,தூக்கிப் பிடித்த நிலையிலேயே வீட்டை ஒருமுறை சுற்றி வந்தான். வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த மனைவி மெல்லிய குரலில் கேட்டாள்:

“சர்ச்சில் என்ன நடந்தது? பாதிரியார் என்ன போதித்தார்? இன்று இத்தனை ரொமாண்டிக்கோடு நீங்கள் இருப்பதற்கு என்ன காரணம்?”

அதிரடியாகக் கணவன் பதில் சொன்னான்.

”அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! உனது சுமைகளையும், துன்பங்களையும் நீதான் மகிழ்ச்சியோடு சுமக்க வேண்டும். அதுதான்
வாழ்க்கை என்றார்”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
அது குட்டிக் குழ்ந்தைகளுக்கான பள்ளிக்கூடம் (Kindergarten School)
குட்டிக் குட்டிக் குழந்தைகள் தங்களுடைய பிஞ்சு விரல்களால் படங்கள்
வரைவதை, வகுப்பு ஆசிரியை மகிழ்ச்சியுடன் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்.

படம் வரையும் குழந்தைகளின் நடுவே கன்னத்தில் குழிவிழும் அழகான குழந்தை
ஒன்று தன்னை மறந்து மிகவும் சீரியசாகப் படம் வரைந்து கொண்டிருக்கிறது.
அதனருகே சென்ற ஆசிரியை அந்தப் பெண் குழந்தையிடம் வினவுகிறார்:

"என்ன படம்டா வரைகிறாய் ராஜாத்தி?

மழலை பதில் சொல்லிற்று;

"சாமி படத்தை வரைகிறேன் மிஸ்!"

சற்று நிதானித்த ஆசியை சொன்னார்," சாமி எப்படியிருப்பார் என்று யாருக்கும்
தெரியாதேடா?"

சட்டென்று யோசிக்காமல் குழந்தை சொன்னது."ஒரு நிமிடம் பொறுங்கள். நான்
வரைந்தவுடன் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்!"
+++++++++++++++++++++++++++++++++++++
4.
பல் மருத்துவர்: உங்கள் பல்லை நான் தொடக்கூட இல்லை : அதற்குள் ஏன் இப்படிக் கத்துகிறீர்கள்?

நாற்காலியில் அமர்ந்திருப்பவர்: "அது எனக்கும் தெரியும். ஆனால் நீங்கள் என் காலை மித்திதவாறு அல்லவா நின்றுகொண்டிருக்கிறீர்கள்!"
+++++++++++++++++++++++++++++++++++++
5
அப்பாவும் மருத்துவர். மகனும் மருத்துவர். அப்பாவிடம் பயிற்சி முடிந்தவுடன் மகன் கேட்டான்.

“டாடி, நமது தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விதியை ‘நச்’சென்று ஒரே வரியில் சொல்லுங்களேன்”

“நோயாளிக்குக் கொடுக்கும் மருந்துச் சீட்டைக் கிறுக்கி எழுது. கட்டணச் சீட்டைக் கிறுக்காமல் புரியும்படியாக எழுது! Always, write your prescriptions illegibly and
your bills legibly!”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
பள்ளிக்கூடத்தில், வகுப்பறை வாரியாக, குழுக்களாகக் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்தார்கள். ஆளுக்கு ஒரு புகைப்படம்

வாங்கிக் கொள்ளும்படி வலியுறுத்திய ஆசிரியை சொன்னார்:

“நினைத்துப்பாருங்கள். நீங்கள் பெரியவர்களானதும் இந்தப் படம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இது ஜெனிஃபர், இப்போது அவள் வக்கீல், இது மைக்கேல் இப்போது அவன் ஒரு டாக்டர்....”

கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குரல் குறுக்கிட்டுச் சொன்னது: “இது நமது அறுவை டீச்சர். இப்போது அவர் உயிருடன் இல்லை!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளே வந்த வயாக்ரா ஜோக்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

7

தாத்தவும், பாட்டியும் பெங்களூரில் உள்ள பேரனின் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

வந்த தாத்தா சும்மா இருக்காமல், பேரனின் அறையை நோட்டமிட்டபோது, புத்தக ஷெல்ஃபில் இருந்த வயாகரா மாத்திரைகள்

அடங்கிய பாட்டிலைப் பார்த்துவிட்டார். அதை எப்படி உபயோகிப்பது என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். முப்பது வயது நிரம்பிய பேரனும், 75 வயது நிரம்பிய தாத்தாவிற்கு, ஒரு வழியாக, வெட்கத்ததுடன், அதைச் சொல்லிக்
கொடுத்தான்.

அதோடு சும்மா இருக்காமல், இப்படிச் சொல்லி வைத்தான்.”அது உங்களுக்குப் பயன்படாது தாத்தா. அது மிகவும் ஸ்ட்ராங்கானது. அத்துடன் காஸ்ட்லியானது”

”என்ன விலை?” தாத்தா தொடர்ந்து கேட்டார்

“ஒரு மாத்திரையின் விலை ஐநூறு ரூபாய்”

“ச்சே..அவ்வளவுதானா? நீ ஒன்றும் கவலைப் படாதே! இன்று ஒரு மாத்திரையை எடுத்துப் பாயன்படுத்திப் பார்க்கிறேன். அத்துடன் அதற்குரிய பணத்தைக் காலையில் தலையணையின் கீழே வைத்துவிடுகிறேன். "
--------------------------------------------------------------------------
அடுத்த நாள் காலை, தலையணையின் கீழே ஐயாயிரத்து ஐநூறு இருந்ததைக் கண்ட பேரன் திகைத்துவிட்டான். ஓடிச்சென்று முன் அறையில் அமர்ந்திருந்த தாத்தாவிடம், மெதுவாகச் சொன்னான்:

“தாத்தா மாத்திரையின் விலை. ஐநூறு ரூபாய்தான். ஐயாயிரத்து ஐநூறு அல்ல!”

“எனக்குத் தெரியும். நான் வைத்தது ஐநூறு மட்டுமே. அதிகமாக உள்ள அந்த ஐயாயிரம் உன் பாட்டியின் கைங்கர்யம்!”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழில் எது நன்றாக உள்ளது?

இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தவை. மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது!

நட்புடன்,
வாத்தியார்வாழ்க வளமுடன்!

35 comments:

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ஏழில் உள்ளவைகள் வானவில்லின் நிறங்கள் போல்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில்
தங்களுடைய மொழியாக்கத்தால் நன்றாக உள்ளது.

இருப்பினும் வரிசை எண் 5
“நோயாளிக்குக் கொடுக்கும் மருந்துச் சீட்டைக்
கிறுக்கி எழுது. கட்டணச் சீட்டைக்
கிறுக்காமல் புரியும்படியாக எழுது!"

---இது நகைச்சுவை மட்டுமல்ல சிந்திக்க வேண்டிய வரிகள்

நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-04-03

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம்....

நகைச்சுவைகள் அருமை....அனைத்தும் பிரமாதம்.....

நன்றி வணக்கம்...

ms torrent said...

nice jokes sir. thankign u .

and 1 small doubt . recently me & my parents went to see a astrologer. he took my chart & he made some calc on his own . and predicted ,the no bros & sisters i have. also he predicted the no of bros & sisters who were born with my mother from my chart.(my mom dont know her dob & no chart for her from birth).he did the same prediction perfectly for my father too.. how did he predicted it..he took not more than 2 mins.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ம்ஹும்... முருகன் ரொம்பவே சோதிக்கிறான் என்னை..!

புருனோ Bruno said...

:) :) :)

sundaresan p said...

7 ஆம் எண் பற்றிய பாடம் எப்போது ???

Alasiam G said...

Sir,
Jokes are fine......especially no. 6 is really fun (indeed, it comes from the last bench so called "Maappilai bench")
Thanks.

LK said...

3rd one was nice :)

ஜீவா said...

அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம்,
இந்த நகைசுவைகள் எல்லாம் பிரமாதம், அதில் எனக்கு பிடித்தது இரணடாவது, உனது சுமைகளையும், துன்பங்களையும் நீதான் மகிழ்ச்சியோடு் சுமக்கவேண்டும் என்பதை நான் வெகுவாக ரசித்தேன்.
அன்புடன் உங்கள் மாணவன்
ஜீவா

snkm said...

நன்று! ஐயா! எப்போதும் படித்தாலும் கருத்து சொல்ல முடிவது இல்லை! மன்னியுங்கள்!

rajesh said...

ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.அனைத்தும் அருமையாக உள்ளது நன்றி

ananth said...

ரசனைகள் பலவிதம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடித்திருக்கும். எனக்குப் பிடித்தது 2. நகைச்சுவை என்பதை விட Over exaggerated என்பதைத்தான் வயதான பெரியார் ஜோக்ஸ் ஞாபகப் படுத்தியது.

பின்தொடருபவர்கள் 1400ஐ தாண்டினாலும் வகுப்பறைக்கு வருகை புரிபவர்கள் குறைந்து கொண்டு வருவதைப்போல் தெரிகிறது. சில விஷயங்களை உற்று கவணித்து விட்டுதான் இதைச் சொல்கிறேன்.

kmr.krishnan said...

75,80 வயதிலும் கூட தொடுதல் இன்பத்திற்கு மட்டுமே பணம் செலவழிக்கும்
முதியவர்களை அறிவேன்.சில சமயங்க‌ளில் அந்தக் காலத்தில் இதற்கென்றே
தெருக்கள் (மும்பை சிவ‌ப்பு விள‌க்குப் பகுதி போல)இருந்தது கூட சரிதானோ என்று தோன்றுகிறது."பரத்தையர் தெருக்களால் கற்பின் மகளிர் கற்பினைக் காத்துக்கொள்வது எளிதாகும்"என்பார் எங்களூர் தமிழ்ப் பேரறிஞர்.
முதியவர்களுகான மருத்துவம் இப்போது தனி இயலாக உருவாகி வருகிறது.
மறு நாள் இறந்த ஒரு 75 வயது முதியவருக்கு சிறு நீர் வெளியேற்ற குழாய்(catheter)
சொறுகவதற்கு செவிலிப் பெண்ணுக்கு உதவினேன்.அந்த முதியவருக்கு ஏற்பட்ட உடல் மாற்றங்களைக் கண்டு வியந்தேன்!இத்தனைக்கும் அவ‌ர் 'கோமா'என்னும் மயக்கத்தில் இருந்தார்.உணர்வுகள் மங்கவில்லை.‌
இப்போது முதியோர் சிகிச்சையில்,முதியவர்களின் பாலியல் முரண்படுகளைக்(sexual abberations) கண்டு குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து, அதை அவருக்கு ஒரு மான அவமானப் பிரச்சனையாக மாற்றிவிடாமல் இருக்க அறிவுறுத்துகிறார்கள்.
மென்மையாகக் கையாளச் சொல்கிறார்கள்.

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ஏழில் உள்ளவைகள் வானவில்லின் நிறங்கள் போல்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில்
தங்களுடைய மொழியாக்கத்தால் நன்றாக உள்ளது.
இருப்பினும் வரிசை எண் 5
“நோயாளிக்குக் கொடுக்கும் மருந்துச் சீட்டைக்
கிறுக்கி எழுது. கட்டணச் சீட்டைக்
கிறுக்காமல் புரியும்படியாக எழுது!"
---இது நகைச்சுவை மட்டுமல்ல சிந்திக்க வேண்டிய வரிகள்
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்....
நகைச்சுவைகள் அருமை....அனைத்தும் பிரமாதம்.....
நன்றி வணக்கம்.../////

தங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////ms torrent said...
nice jokes sir. thankign u .
and 1 small doubt . recently me & my parents went to see a astrologer. he took my chart & he made some calc on his own . and predicted ,the no bros & sisters i have. also he predicted the no of bros & sisters who were born with my mother from my chart.(my mom dont know her dob & no chart for her from birth).he did the same prediction perfectly for my father too.. how did he predicted it..he took not more than 2 mins./////

Maharishi Parasara's Brihat Parasara Hora Sastra, சரவளி, கே.பி சிஸ்டமில் எல்லாம் அதற்கு சூத்திரங்கள் உள்ளன. அதைப்போல மரணத்தைச் சொல்வதற்கும் சூத்திரங்கள் உள்ளன. பொறுத்திருங்கள். பின்னால் விவரமாக எழுதுகிறேன்

SP.VR. SUBBAIYA said...

//////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ம்ஹும்... முருகன் ரொம்பவே சோதிக்கிறான் என்னை..!//////

முருகன் உங்களைப்போல ஒரு யூத்! அதை நினைவில் வையுங்கள் தமிழரே! அவர் இதற்கெல்லாம் சோதிக்க மாட்டார்!

SP.VR. SUBBAIYA said...

/////புருனோ Bruno said...
:) :) :)///////

வெறும் ஸ்மைலியோடு சிக்கனமாக முடித்துக்கொண்டுவிட்டீர்கள் டாக்டர். நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////sundaresan p said...
7 ஆம் எண் பற்றிய பாடம் எப்போது ???////

7 முதல் 9 வரை உள்ள எண்களுக்குத் திங்கள் முதல் பாடம் வரும்!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
Sir,
Jokes are fine......especially no. 6 is really fun (indeed, it comes from the last bench so called "Maappilai bench")
Thanks./////

எனக்கும் அது பிடித்தது. நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////LK said...
3rd one was nice :)//////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///////////ஜீவா said...
அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம்,
இந்த நகைசுவைகள் எல்லாம் பிரமாதம், அதில் எனக்கு பிடித்தது இரணடாவது, உனது சுமைகளையும், துன்பங்களையும் நீதான் மகிழ்ச்சியோடு் சுமக்கவேண்டும் என்பதை நான் வெகுவாக ரசித்தேன்.
அன்புடன் உங்கள் மாணவன்
ஜீவா/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////snkm said...
நன்று! ஐயா! எப்போதும் படித்தாலும் கருத்து சொல்ல முடிவது இல்லை! மன்னியுங்கள்!///////

இதையே உங்கள் பொதுக்கருத்தாக எடுத்துக்கொள்கிறேன்:-))))

SP.VR. SUBBAIYA said...

/////rajesh said...
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.அனைத்தும் அருமையாக உள்ளது நன்றி////

நல்லது நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////ananth said...
ரசனைகள் பலவிதம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடித்திருக்கும். எனக்குப் பிடித்தது 2. நகைச்சுவை என்பதை விட Over exaggerated என்பதைத்தான் வயதான பெரியார் ஜோக்ஸ் ஞாபகப் படுத்தியது.
பின்தொடருபவர்கள் 1400ஐ தாண்டினாலும் வகுப்பறைக்கு வருகை புரிபவர்கள் குறைந்து கொண்டு வருவதைப்போல் தெரிகிறது. சில விஷயங்களை உற்று கவனித்து விட்டுதான் இதைச் சொல்கிறேன்.///////

உற்றுக் கவனிப்பதற்கு எனக்கு நேரமில்லை. அதனால் கவனிக்கவில்லை. நீங்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்கிறேன்.
வாசகர்களின் நாடித்துடிப்பை நான் அறிவேன். அடுத்துவரும் வாரங்களில் பாருங்கள்!:-))))

hamaragana said...

அன்புடன் வணக்கம்.
சட்டென்று குழந்தை சொன்னது வரைந்த பின் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் . சிந்திக்க வேண்டியது .. குழந்தையும் தெய்வமும் ஒன்று. அதற்கு தெரியும் கடவுள் எப்படி இருப்பார் என்று....
கடேசி ம்ம் தேவை உள்ளவர்கள் ரசிக்கட்டுமே தவறென்ன ??

minorwall said...

////SP.VR. SUBBAIYA said...
Maharishi Parasara's Brihat Parasara Hora Sastra, சரவளி, கே.பி சிஸ்டமில் எல்லாம் அதற்கு சூத்திரங்கள் உள்ளன. அதைப்போல மரணத்தைச் சொல்வதற்கும் சூத்திரங்கள் உள்ளன. பொறுத்திருங்கள். பின்னால் விவரமாக எழுதுகிறேன்////

பராசரர் அப்போவே நித்யானந்த பரமஹம்சரைப் போலவே பரிசல் பயணத்தின் போது போதையேறிப் போய் பலான மேட்டர் முடிச்சு அந்தம்மா (மீன்காரம்மா)வுக்கு மீன் வாசம் இல்லாமல் போக ஸ்சென்ட் அடிச்சுவுட்டு உன் கற்புக்கு நான் கியாரண்டி -ன்னு
டொம்மு வுட்டு எஸ்கேப் ஆன கதை ஒரு வெப்சைட் லின்க்லே படிச்சேன்..http://www.reliableastrology.com/mphs.htm
அப்புறமா அந்தம்மா சந்தனு - ங்கிற (நம்ம தமிழ்பட ஹீரோ இல்லை..புராண கால சந்தனு) ஆளை செட் பண்ணிக்கிட்டு
குடும்பம் நடத்தியதாக போகிறது கதை..
எது எப்படியோ Mr . பராசரர் பண்ணிய research மேட்டர்தான் highlight ..astro research ஐ சொன்னேன்..அத படிச்சு பார்த்தா தலை சுத்துது..
எப்பிடியோ Mr.பராசரர் ஒரு great jenius தான்...Hats off ...

kannan said...

வாத்தி (யார்) ஐயா !
வணக்கம்.

முதல் பந்திலையே கிளீன் போல்ட் ஆக்கி விட்டீர்களே

கல்லூரி வாழ்க்கையை கூட நினைக்க வைத்து

{ ”35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி உனக்கென்ன தெரியும்? எனக்குப் பள்ளிப் பருவத்தில் இருந்தே அது தெரியும். ஒவ்வொருமுறையும் 35ஐ எடுப்பதற்கு
நான் படாதபாடு பட்டிருக்கிறேன்!” }

சிந்தனைக்கு!

காமத்திற்காக!

இன்றைக்கு தான் வயாகரா மாத்திரைகள் முதல் செயற்கை முறையில் அறுவை சிகிச்சை வரை

(ஆண்களுக்கு, வாத்திக்கு புரிந்திருக்கும்
என்று நினைக்கின்றேன் )

நமது முன்னோர்கள் காமத்திற்கு என்றே ஒரு கலையை
( 64 ல் ஒன்றாக காமசூத்திரம்) அன்றே தந்து விட்டு போகவில்லையா
அறுவை சிகிச்சை இல்லாமல்
அதுவும் கோவில் சிற்பத்தின் வழியாக பாடம் போதிக்க வில்லையா என்ன.

Sridhar Subramaniam said...

Dear Sir,

I liked Sardar hitting 35runs. This was quite new one, rest, I have heard or read somewhere.

Regards

Sridhar

SP.VR. SUBBAIYA said...

hamaragana said...
அன்புடன் வணக்கம்.
சட்டென்று குழந்தை சொன்னது வரைந்த பின் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் . சிந்திக்க வேண்டியது .. குழந்தையும் தெய்வமும் ஒன்று. அதற்கு தெரியும் கடவுள் எப்படி இருப்பார் என்று....
கடேசி ம்ம் தேவை உள்ளவர்கள் ரசிக்கட்டுமே தவறென்ன ??//////

நல்லது நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////minorwall said...
////SP.VR. SUBBAIYA said...
Maharishi Parasara's Brihat Parasara Hora Sastra, சரவளி, கே.பி சிஸ்டமில் எல்லாம் அதற்கு சூத்திரங்கள் உள்ளன. அதைப்போல மரணத்தைச் சொல்வதற்கும் சூத்திரங்கள் உள்ளன. பொறுத்திருங்கள். பின்னால் விவரமாக எழுதுகிறேன்////
பராசரர் அப்போவே நித்யானந்த பரமஹம்சரைப் போலவே பரிசல் பயணத்தின் போது போதையேறிப் போய் பலான மேட்டர் முடிச்சு அந்தம்மா (மீன்காரம்மா)வுக்கு மீன் வாசம் இல்லாமல் போக ஸ்சென்ட் அடிச்சுவுட்டு உன் கற்புக்கு நான் கியாரண்டி -ன்னு டொம்மு வுட்டு எஸ்கேப் ஆன கதை ஒரு வெப்சைட் லின்க்லே படிச்சேன்..http://www.reliableastrology.com/mphs.htm அப்புறமா அந்தம்மா சந்தனு - ங்கிற (நம்ம தமிழ்பட ஹீரோ இல்லை..புராண கால சந்தனு) ஆளை செட் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தியதாக போகிறது கதை..
எது எப்படியோ Mr . பராசரர் பண்ணிய research மேட்டர்தான் highlight ..astro research ஐ சொன்னேன்..அத படிச்சு பார்த்தா தலை சுத்துது..
எப்பிடியோ Mr.பராசரர் ஒரு great jenius தான்...Hats off ...///////

நீங்கல் ஒப்புக்கொண்டால் போதும் மைனர். நன்றி உரித்தாகுக!

SP.VR. SUBBAIYA said...

/////kannan said...
வாத்தி (யார்) ஐயா !
வணக்கம்.
முதல் பந்திலையே கிளீன் போல்ட் ஆக்கி விட்டீர்களே
கல்லூரி வாழ்க்கையை கூட நினைக்க வைத்து
{ ”35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி உனக்கென்ன தெரியும்? எனக்குப் பள்ளிப் பருவத்தில் இருந்தே அது தெரியும். ஒவ்வொருமுறையும் 35ஐ எடுப்பதற்கு நான் படாதபாடு பட்டிருக்கிறேன்!” }
சிந்தனைக்கு!
காமத்திற்காக!
இன்றைக்கு தான் வயாகரா மாத்திரைகள் முதல் செயற்கை முறையில் அறுவை சிகிச்சை வரை
(ஆண்களுக்கு, வாத்திக்கு புரிந்திருக்கும்
என்று நினைக்கின்றேன் )
நமது முன்னோர்கள் காமத்திற்கு என்றே ஒரு கலையை
( 64 ல் ஒன்றாக காமசூத்திரம்) அன்றே தந்து விட்டு போகவில்லையா
அறுவை சிகிச்சை இல்லாமல்
அதுவும் கோவில் சிற்பத்தின் வழியாக பாடம் போதிக்க வில்லையா என்ன.//////

ஆமாம். இந்த விஷயத்தில் நாம் ஒன்றும் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை

SP.VR. SUBBAIYA said...

/////Sridhar Subramaniam said...
Dear Sir,
I liked Sardar hitting 35runs. This was quite new one, rest, I have heard or read somewhere
Regards
Sridhar//////

நல்லது நன்றி!

மதுரை சரவணன் said...

அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்

SP.VR. SUBBAIYA said...

////மதுரை சரவணன் said...
அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்/////

நல்லது நன்றி!