மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.4.10

நீங்களும் முதல்நிலை சுபக்கிரகமும்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீங்களும் முதல்நிலை சுபக்கிரகமும்!

"இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை!"
- கவியரசர் கண்ணதாசன்
------------------------------------------------------------------
ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று முதல் இரண்டு பாடங்களில் கோடிட்டுக் காட்டியிருந்தேன்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

முதல்நிலை (first rated benefic) சுபக்கிரகமான குரு ஜாதகத்தில் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டும்!

குரு 1, 5, 9 ஆம் விடுகளில் இருந்தால் உத்தமம்.

லக்கினத்தில் குரு இருந்தால் அதி உத்தமம். ஜாதகன் ஆசீர்வதிக்கப்பட்டவன். Yes, the native of the horoscope is a blessed person. அவனுக்கு ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்ல வேண்டாம். ஜாதகத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவனுடைய வாழ்வில் அது இரண்டும் இருக்கும்.அந்த இரண்டு சூழ்நிலைகளிலும், குரு அவனுக்குக் கை கொடுப்பார்.

நல்லதிற்குக் கை கொடுக்க யாரும் வேண்டியதில்லை. ஆனால் கெட்ட சூழ்நிலையில் நமக்குக் கை கொடுக்க ஒருவராவது வேண்டும். அந்த ஒருவராகக் குரு பகவானே வந்து நிற்பார் எனும்போது வேறு என்ன வேண்டும்?

வந்து நிற்பார் என்றால் என்ன பொருள்?

The native is self equipped to stand in any situation!

அது முக்கியம்.

அதேபோல 7ல் குரு இருந்தாலும் நல்ல பலன். இரண்டு விதமான பலன். அவர் லக்கினத்தைத் தன் கண் பார்வையில் வைத்திருப்பதோடு, ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுப்பார்.

”நீ பாதி; நான் பாதி கண்ணே” என்று ஜாதகன் பாடிக் கொண்டிருப்பான் (திருமணத்திற்குப் பிறகுதான்)

அதேபோல 5ஆம், வீடு அல்லது 9ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் சிறப்புத்தான். 5ல் இருந்து தனது விஷேச பார்வையான 9ஆம் பார்வையாக லக்கினத்தை அவர் தன் கண்ணில் வைத்திருப்பார். 9ஆம் வீட்டில் இருந்தாலும், தனது 5ஆம் பார்வையால், அவர் லக்கினத்தைத் தன் கண்ணில் வைத்திருப்பார்.

9ல் குரு இருந்தால் ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். 5ல் குரு இருந்தால் ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். (Guru is the authority for keen intelligence).

கல்வி நான்காம் வீடு; அறிவு ஐந்தாம் வீடு. அதனால்தான் படித்த முட்டாளூம் இருக்கிறான். படிக்காத மேதையும் இருக்கிறான்.

அதுபோல 4, 7, 10ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் நல்லதே! நன்மையான பலன்கள் கிடைக்கும். அதற்கு அடுத்ததாக 2,11 ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் நன்மையே!

குரு உச்சம் பெற்று இருந்தால் அதிக நன்மைகளைச் செய்வார். அவருடைய தசா, புத்திகளில் அந்த நன்மை களைக் கொடுப்பார்.

சரி, குரு எங்கே இருக்கக் கூடாது?

3,6,8,12 ஆம் வீடுகளில் குரு இருக்ககூடாது. அதோடு அவர் ஜாதகத்தில் நீசமாகி அடிபட்டிருக்கக்கூடாது. அப்படி இருந்தால், ஜாதகத்தில் வேறு நல்ல அம்சங்கள் இல்லையென்றால் ஜாதகனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.

அதை எதிர்நீச்சல் ஜாதகம் என்பார்கள். எதிர்நீச்சல் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

மற்றவை அடுத்த பாடத்தில்,

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

57 comments:

 1. Dear Sir

  Viruchiga Lagnam - 7il Guru - Lagnadhibhadhi 11il (Guru than 5im parvayaga). Lagnathai 7im parvayaga. Palam Arumai.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 2. வாத்தியாரயையா,
  குரு, குருவின் வீட்டிலேயே இருந்தால் என்ன பலன்? (மீன ராசியில்)

  மற்றபடி நல்ல தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

  ReplyDelete
 3. குருவைப் பற்றிய பாடத்திற்கு நன்றிகள் குருவே!
  6-க்கும் 7-க்கும் அதிபதி சனி அவர் 10-ல் இருக்க அவரோடு 5-க்கும் 6-க்கும் அதிபதி குருவும் சேர்ந்திருப்பது எப்படி? நன்றிகள் குருவே!

  ReplyDelete
 4. அன்புள்ள அய்யா,

  லக்னத்தில் குரு இருந்தால், அவர்கள் தங்கள் நடத்தையில் ஒழுக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று படித்திருக்கிறேன்.
  5, 7 & 9 ஆம் இடங்களில் பார்வை விழுவதால். உண்மையா அய்யா?

  நன்றி
  சரவணா
  கோவை

  ReplyDelete
 5. அன்புள்ள அய்யா,

  குரு உட்சம் பெறுவது நல்லது என்றாலும், துலா லக்னத்துக்கு உட்சம் பெறுவது நல்லது அல்ல என்று கூறுகிறார்கள்.
  ஏன் என்றால், அவர் 3 & 6 ஆம் இடங்களின் அதிபதி ஆகிறாராம். அவர்திசையும் நன்றாக இருக்காதாம்?
  தங்கள் கருத்து வேண்டும். இந்த அமைப்பு எனக்கு உள்ளது, சுயவர்க்கம் பரல் 8, 10 ஆம் இடது பரல்கள் 30.

  நன்றி
  சரவணா
  கோவை

  ReplyDelete
 6. குரு பகையாக இருக்கும் லக்னகார்களுக்கும் குருவை பற்றிய இந்த Article பெருந்துமா ?

  eg ரிஷப லக்னம் - ராசியில் குரு 9ல் நீச்சம், அம்சகத்தில் கன்னி லக்னம் ரிஷபதில் குரு,சுக்கிரன் 9ல்

  இதில் குருவினால் இந்த் ஜதகருக்கு எதேனும் நல்ல பலன் இருக்குமா?

  ReplyDelete
 7. அய்யா பலதடவை நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். நான் பதிவு போட்டவுடன் உங்கள் ஜாதகத்தை வைத்துக்கொண்டு கேள்வி கேக்காதீர்கள் என்று.
  அனால் அரைகுறை ஜோசியன்னா எனக்கு உங்களின் எல்லாப் பதிவுகளையும் படித்தவுடன் கேள்வி கேக்க குறுகுறுக்கும், அனால் உங்களை தெந்திரவு செய்யக் கூடாது என்று பின்னூட்டம் இடாமல் சென்று விடுவேன். இருந்தாலும் ஒரே ஒரு கேள்வி. அடக்க முடியாத சந்தோகம் உள்ளது.

  அருமையான கும்ப லக்கினம் இருந்து 7ல் சிம்ம குருவாக பார்வை பெற்றும் 41 வயதில் கூட விவாக வாய்ப்புக்கள் வரவில்லை.

  நல்ல வேலை இருந்தால் கல்யாணப் பேச்சு எடுத்தாலே வேலையில் பிராபளம் வருகின்றது. இது எதனால்.

  ReplyDelete
 8. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

  ஜாதகத்தில் குரு நின்ற பலன்கள் பாடம் மிக நன்றாக புரியும் படியாக உள்ளது.

  "கல்வி நான்காம் வீடு; அறிவு ஐந்தாம் வீடு. அதனால்தான் படித்த முட்டாளூம் இருக்கிறான். படிக்காத மேதையும் இருக்கிறான்". அருமையான உதாரணம்.


  நன்றி!
  வணக்கம்.

  தங்களன்புள்ள மாணவன்

  வ.தட்சணாமூர்த்தி

  2010-04-26.

  ReplyDelete
 9. dear sir...guru entha veetil irukinraro antha veetin nalla palankalai kodukka mattar enbathu oru karuthu...whatif for dhanus lagnam guru+sukran in sagittarius...can we assume same palan as first point? I see guru+sukran as hariyogam...some books say it spoils entire life...kindly let me know your views in this regard

  ReplyDelete
 10. ஆஹா! குரு 7 ல் இருக்கிறாரே என்று மகிழ்ந்து விடக்கூடாது என்று நீசம் பெற‌க்கூடாது என்றும் சொல்லி புஸ்வாணம் ஆக்கி விட்டீர்களே அய்யா!
  கடக ல‌க்னகாரனான எனக்கு மகரத்தில் குரு! இதில் வர்கோத்தமும் கூட!வக்கிரமும்!என்னதான் பலன்? என்னவாயிருந்தால் என்ன? ஒரு நடுத்தர வர்க வாழ்க்கை வாழ்ந்து முடித்துவிட்டேன்.

  ReplyDelete
 11. Sir

  MY laknam rishabam.guru in katagam.(ie utcham and suyavarka is 5 astavarga 30 in that place)
  Guru utcham at the same time 3rd place from my laknam.
  what is the effect?i will get utcha benefit or 3rd place effects.
  Guru dasa eppadi irukkum.
  Pl explain sir

  Your student
  S.A.Babu

  ReplyDelete
 12. Sir
  My laknam kumabm.
  Guru is 1st place ie in my laknam.
  Also mandhi in laknam.
  What is effect its blessed horoscope or not.
  What is the effect mandhi and guru in that place.

  Your student
  B.L.MOHANAPRIYA

  ReplyDelete
 13. /////Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Viruchiga Lagnam - 7il Guru - Lagnadhibhadhi 11il (Guru than 5im parvayaga). Lagnathai 7im parvayaga.

  Padam Arumai.
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman//////

  நல்லது.நன்றி ராஜாராமன்!

  ReplyDelete
 14. /////நானானி said...
  வாத்தியாரய்யா,
  குரு, குருவின் வீட்டிலேயே இருந்தால் என்ன பலன்? (மீன ராசியில்)
  மற்றபடி நல்ல தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!/////

  குரு தன் சொந்தவீட்டிலேயே இருந்தால் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். நல்லதுதான். நன்மைகளைச் செய்வார் சகோதரி!

  ReplyDelete
 15. ////Alasiam G said...
  குருவைப் பற்றிய பாடத்திற்கு நன்றிகள் குருவே!
  6-க்கும் 7-க்கும் அதிபதி சனி அவர் 10-ல் இருக்க அவரோடு 5-க்கும் 6-க்கும் அதிபதி குருவும்

  சேர்ந்திருப்பது எப்படி? நன்றிகள் குருவே!//////

  6க்கு அதிபதி சனி என்று சொல்கிறீர்கள். அத்துடன் 6க்கு அதிபதி குரு என்றும் சொல்கிறீர்கள். ஒரு இடத்திற்கு இருவர் எப்படி அதிபதியாக முடியும்? குரு 5க்கும் 8க்கும் அதிபதியாக இருக்க வேண்டும். சரிதானா?

  ReplyDelete
 16. ////Saravana said...
  அன்புள்ள அய்யா,
  லக்னத்தில் குரு இருந்தால், அவர்கள் தங்கள் நடத்தையில் ஒழுக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று

  படித்திருக்கிறேன். 5, 7 & 9 ஆம் இடங்களில் பார்வை விழுவதால். உண்மையா அய்யா?
  நன்றி
  சரவணா
  கோவை/////

  லக்கினத்தில் இருக்கும் குரு ஜாதகனின் வாழ்க்கையை நெறிப்படுத்தும். அதனால்தான் அதன் நிலைக்கு அங்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது!

  ReplyDelete
 17. Saravana said...
  அன்புள்ள அய்யா,
  குரு உச்சம் பெறுவது நல்லது என்றாலும், துலா லக்னத்துக்கு உச்சம் பெறுவது நல்லது அல்ல என்று

  கூறுகிறார்கள்.
  ஏன் என்றால், அவர் 3 & 6 ஆம் இடங்களின் அதிபதி ஆகிறாராம். அவர்திசையும் நன்றாக இருக்காதாம்?
  தங்கள் கருத்து வேண்டும். இந்த அமைப்பு எனக்கு உள்ளது, சுயவர்க்கம் பரல் 8, 10 ஆம் இடது பரல்கள்

  30.
  நன்றி
  சரவணா
  கோவை/////

  துலா லக்கினத்திற்கு கடகம் 10ஆம் இடம். அங்கே உச்சம் பெற்ற குரு இருப்பது நல்லது சாமி. தொழிலில்/ வேலையில் அபாரமான ஏற்றத்தைத்தருவார் ஸ்வாமி. எதற்குக் கவலை?

  ReplyDelete
 18. சிங்கைசூரி said...
  குரு பகையாக இருக்கும் லக்னகார்களுக்கும் குருவை பற்றிய இந்த Article பெருந்துமா?
  eg ரிஷப லக்னம் - ராசியில் குரு 9ல் நீச்சம், அம்சகத்தில் கன்னி லக்னம் ரிஷபதில் குரு,சுக்கிரன் 9ல்
  இதில் குருவினால் இந்த் ஜாதகருக்கு எதேனும் நல்ல பலன் இருக்குமா?/////

  அம்சமும் முக்கியம்தானே! அம்சத்தில் குரு நீசமடையாததால் தப்பித்தீர்கள். நல்ல பலன்கள் உண்டு.

  ReplyDelete
 19. /////kannan said...
  Iyaa!
  Vanakkam./////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 20. ////பித்தனின் வாக்கு said...
  அய்யா பலதடவை நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். நான் பதிவு போட்டவுடன் உங்கள் ஜாதகத்தை

  வைத்துக்கொண்டு கேள்வி கேக்காதீர்கள் என்று.
  அனால் அரைகுறை ஜோசியன்னா எனக்கு உங்களின் எல்லாப் பதிவுகளையும் படித்தவுடன் கேள்வி கேக்க

  குறுகுறுக்கும், அனால் உங்களை தெந்திரவு செய்யக் கூடாது என்று பின்னூட்டம் இடாமல் சென்று விடுவேன்.

  இருந்தாலும் ஒரே ஒரு கேள்வி. அடக்க முடியாத சந்தேகம் உள்ளது.
  அருமையான கும்ப லக்கினம் இருந்து 7ல் சிம்ம குருவாக பார்வை பெற்றும் 41 வயதில் கூட விவாக

  வாய்ப்புக்கள் வரவில்லை.
  நல்ல வேலை இருந்தால் கல்யாணப் பேச்சு எடுத்தாலே வேலையில் பிராபளம் வருகின்றது. இது எதனால்//////.

  விவாகத் தடைக்கு வேறு பல காரணங்கள் உண்டு. முழு ஜாதகத்தையும் பார்த்தால் (அலசினால்) மட்டு

  ReplyDelete
 21. ////பித்தனின் வாக்கு said...
  அய்யா பலதடவை நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். நான் பதிவு போட்டவுடன் உங்கள் ஜாதகத்தை

  வைத்துக்கொண்டு கேள்வி கேக்காதீர்கள் என்று.
  அனால் அரைகுறை ஜோசியன்னா எனக்கு உங்களின் எல்லாப் பதிவுகளையும் படித்தவுடன் கேள்வி கேக்க

  குறுகுறுக்கும், அனால் உங்களை தெந்திரவு செய்யக் கூடாது என்று பின்னூட்டம் இடாமல் சென்று விடுவேன்.

  இருந்தாலும் ஒரே ஒரு கேள்வி. அடக்க முடியாத சந்தேகம் உள்ளது.
  அருமையான கும்ப லக்கினம் இருந்து 7ல் சிம்ம குருவாக பார்வை பெற்றும் 41 வயதில் கூட விவாக

  வாய்ப்புக்கள் வரவில்லை.
  நல்ல வேலை இருந்தால் கல்யாணப் பேச்சு எடுத்தாலே வேலையில் பிராபளம் வருகின்றது. இது எதனால்//////.

  விவாகத் தடைக்கு வேறு பல காரணங்கள் உண்டு. முழு ஜாதகத்தையும் பார்த்தால் (அலசினால்) மட்டுமே அது
  தெரியவரும்!

  ReplyDelete
 22. ////V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  ஜாதகத்தில் குரு நின்ற பலன்கள் பாடம் மிக நன்றாக புரியும் படியாக உள்ளது.
  "கல்வி நான்காம் வீடு; அறிவு ஐந்தாம் வீடு. அதனால்தான் படித்த முட்டாளூம் இருக்கிறான். படிக்காத

  மேதையும் இருக்கிறான்". அருமையான உதாரணம்.
  நன்றி!
  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி/////

  அது உண்மையான உதாரணம். நிறையப் படித்தவர்கள் பிரகாசிக்காமல் போவதற்கு இந்த அமைப்பும் ஒரு காரணம்!

  ReplyDelete
 23. //////infopediaonlinehere.blogspot.com said...
  dear sir...guru entha veetil irukinraro antha veetin nalla palankalai kodukka mattar enbathu oru karuthu...whatif

  for dhanus lagnam guru+sukran in sagittarius...can we assume same palan as first point? I see guru+sukran as

  hariyogam...some books say it spoils entire life...kindly let me know your views in this regard//////

  இரண்டு சுபர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் கிரகயுத்தத்தில் (மிகவும் நெருக்கமாக) இல்லாமல் இருந்தால் சரிதான்!

  ReplyDelete
 24. /////kmr.krishnan said...
  ஆஹா! குரு 7 ல் இருக்கிறாரே என்று மகிழ்ந்து விடக்கூடாது என்று நீசம் பெற‌க்கூடாது என்றும் சொல்லி

  புஸ்வாணம் ஆக்கி விட்டீர்களே அய்யா!
  கடக ல‌க்னகாரனான எனக்கு மகரத்தில் குரு! இதில் வர்கோத்தமும் கூட!வக்கிரமும்!என்னதான் பலன்?

  என்னவாயிருந்தால் என்ன? ஒரு நடுத்தர வர்க வாழ்க்கை வாழ்ந்து முடித்துவிட்டேன்.//////

  நீசமானாலும் நல்லவன் நல்லவனே! அதனால் உங்களை அதிகம் சிரமப்படுத்தாமல் நடுத்தர வாழ்க்கைக்கு அனுமதி கொடுத்துள்ளான். அதற்கு சந்தோஷம் கொள்ளுங்கள் கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 25. /////Babu said...
  Sir
  MY laknam rishabam.guru in katagam.(ie utcham and suyavarka is 5 astavarga 30 in that place)
  Guru utcham at the same time 3rd place from my laknam.
  what is the effect?i will get utcha benefit or 3rd place effects.
  Guru dasa eppadi irukkum.
  Pl explain sir
  Your student
  S.A.Babu/////

  இரண்டு பலன்களும் சேர்ந்து கிடைக்கும்!

  ReplyDelete
 26. ///////MOHANAPRIYA said...
  Sir
  My laknam kumabm.Guru is 1st place ie in my laknam.
  Also mandhi in laknam. What is effect its blessed horoscope or not.
  What is the effect mandhi and guru in that place.
  Your student
  B.L.MOHANAPRIYA//////

  மாந்தியும் இருக்கிறதே சகோதரி! அதனால் உங்களுக்குப் பாதி மதிப்பெண்தான் கிடைத்துள்ளது!

  ReplyDelete
 27. "6க்கு அதிபதி சனி என்று சொல்கிறீர்கள். அத்துடன் 6க்கு அதிபதி குரு என்றும் சொல்கிறீர்கள். ஒரு இடத்திற்கு இருவர் எப்படி அதிபதியாக முடியும்? குரு 5க்கும் 8க்கும் அதிபதியாக இருக்க வேண்டும். சரிதானா?"

  சரிதான் ஐயா! அப்படி குருவும் சனியும் பத்தில் இருப்பது சுகப்படுமா? அதுவும் சுக்கிரனின் வீடான ரிஷபத்தில்; சுக்கிரனோ எட்டில் உட்சம்; நிற்க ஜாதகர் மருத்துவத் துறைக்குச் செல்ல வாய்ப்பு உண்டா? (ராகு பதினொன்றில், செவ்வாய் நான்கில் ஆட்சி).
  நன்றிகள் குருவே!

  ReplyDelete
 28. ஐயா வணக்கம்!

  துலா லக்கின ஜாதகருக்குக் கூட குரு 3ஆமிடத்தில் இருக்கக் கூடாதா? 3ஆமாதிபதி 3ல் ஆட்சி பெறுவது நல்லதில்லையா?(என்னுடைய ஜாதகத்தில் இருக்கிறது). அதேபோல் மகர லக்கின ஜாதகருக்கு குரு 12க்கும் 3க்கும் அதிபதி. அவர் 7ல் இருந்து (கடகத்தில் உச்சம் பெற்று) லக்கினத்தைப் பார்ப்பது நல்லதா? தயவு செய்து விளக்கவும்..

  தங்கள் அன்பு மாணவன்
  மா. திருவேல் முருகன்
  ஷிம்லா, ஹி. பி

  ReplyDelete
 29. வணக்கம் அய்யா,
  குருபகவானுக்கு இருக்கும் செல்வாக்கே தனிமகிமைதான்,
  ரிசபம்,துலாம்(லக்கணம்) இவை இரண்டுக்கும் பாவி.அவர்
  அங்கு இருந்தாலும் நல்ல பலனை செய்வார?
  நன்ரி அரிபாய், வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 30. வணக்கம் ஐயா

  முகோண பரிவர்த்தனை ஏன்றால் என்ன ?

  ReplyDelete
 31. vanakkam sir,
  For magara lagnam guru is virayathipathi 12 th lord will he do good?.
  And what is the effect if guru is in 6th house ?
  And in amsam guru is in aatchi what will be its effect?

  ReplyDelete
 32. Dear Sir,

  How about Retrograde Guru In Lagna..


  Regards
  Vinodh

  ReplyDelete
 33. எனக்கு குரு 3ம் இடத்தில் இருக்கிறார். நவாம்சத்தில்தான் லக்னாதிபதி புதனுடன் நவாம்ச லக்னத்திலேயே இருக்கிறார். இருப்பினும் ராசி சக்கரத்தில் உள்ள லக்னத்தில் இருப்பது போல் வருமா. ராசி சக்கரத்தை அனுசரித்துதான் மற்ற அம்சங்களிலும் (D-Chart) பலன் இருக்கும். முன்பொரு முறை படித்தது. இன்னும் மறக்காமல் இருக்கிறேன். A D-Chart cannot give what rasi chart cannot promise. ராசி சக்கரத்தின் பலன்கள் முழுமையாக கிடைக்க மற்ற அம்சங்களின் தயவு வேண்டும். இருப்பினும் ராசி சக்கரமில்லாமல் அம்சங்கள் தனியாக இயங்க முடியாது.

  ReplyDelete
 34. ////Alasiam G said...
  "6க்கு அதிபதி சனி என்று சொல்கிறீர்கள். அத்துடன் 6க்கு அதிபதி குரு என்றும் சொல்கிறீர்கள். ஒரு இடத்திற்கு இருவர் எப்படி அதிபதியாக முடியும்? குரு 5க்கும் 8க்கும் அதிபதியாக இருக்க வேண்டும். சரிதானா?"
  சரிதான் ஐயா! அப்படி குருவும் சனியும் பத்தில் இருப்பது சுகப்படுமா? அதுவும் சுக்கிரனின் வீடான ரிஷபத்தில்; சுக்கிரனோ எட்டில் உட்சம்; நிற்க ஜாதகர் மருத்துவத் துறைக்குச் செல்ல வாய்ப்பு உண்டா? (ராகு பதினொன்றில், செவ்வாய் நான்கில் ஆட்சி).
  நன்றிகள் குருவே!////

  நான்கில் செவ்வாய் பத்தில் சனி. உங்கள் எண்ணம் ஈடேறும். கவலையை விடுங்கள்

  ReplyDelete
 35. //////M. Thiruvel Murugan said...
  ஐயா வணக்கம்!
  துலா லக்கின ஜாதகருக்குக் கூட குரு 3ஆமிடத்தில் இருக்கக் கூடாதா? 3ஆமாதிபதி 3ல் ஆட்சி பெறுவது நல்லதில்லையா?(என்னுடைய ஜாதகத்தில் இருக்கிறது). அதேபோல் மகர லக்கின ஜாதகருக்கு குரு 12க்கும் 3க்கும் அதிபதி. அவர் 7ல் இருந்து (கடகத்தில் உச்சம் பெற்று) லக்கினத்தைப் பார்ப்பது நல்லதா? தயவு செய்து விளக்கவும்..
  தங்கள் அன்பு மாணவன்
  மா. திருவேல் முருகன்
  ஷிம்லா, ஹி. பி/////

  குரு ஆட்சி பலத்துடன் இருப்பது நன்மைதான். அதுபோல குரு பார்ப்பதும் நன்மையானதுதான்.

  ReplyDelete
 36. //////aryboy said...
  வணக்கம் அய்யா,
  குருபகவானுக்கு இருக்கும் செல்வாக்கே தனிமகிமைதான்,
  ரிசபம்,துலாம்(லக்கனம்) இவை இரண்டுக்கும் பாவி.அவர்
  அங்கு இருந்தாலும் நல்ல பலனை செய்வார?
  நன்றி அரிபாய், வாழ்க வளமுடன்./////

  நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனே. நல்லதே செய்வார் கவலையை விடுங்கள்!

  ReplyDelete
 37. ///sundaresan p said...
  வணக்கம் ஐயா
  முகோண பரிவர்த்தனை என்றால் என்ன?////

  உன் வீட்டில் நான். என் வீட்டில் நீ என்று கிரகங்கள் மாறி அமர்ந்தால் அது பரிவர்த்தனை எனப்படும். மூன்று கிரகங்கள் அப்படிப் பரிவர்த்தனையாகி இருப்பது முக்கோணப் பரிவர்த்தனை எனப்படும்!

  ReplyDelete
 38. /////Nareshkumar said...
  vanakkam sir,
  For magara lagnam guru is virayathipathi 12 th lord will he do good?.
  And what is the effect if guru is in 6th house ?
  And in amsam guru is in aatchi what will be its effect?//////

  அம்சத்தில் குரு ஆட்சி பலம் பெற்றிருக்கிறது அல்லவா? கவலையை விடுங்கள். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்!

  ReplyDelete
 39. ////Vinodh said...
  Dear Sir,
  How about Retrograde Guru In Lagna..
  Regards
  Vinodh//////

  கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தால், முழுமையான பலன் கிடைக்காது.

  ReplyDelete
 40. //////ananth said...
  எனக்கு குரு 3ம் இடத்தில் இருக்கிறார். நவாம்சத்தில்தான் லக்னாதிபதி புதனுடன் நவாம்ச லக்னத்திலேயே இருக்கிறார். இருப்பினும் ராசி சக்கரத்தில் உள்ள லக்னத்தில் இருப்பது போல் வருமா. ராசி சக்கரத்தை அனுசரித்துதான் மற்ற அம்சங்களிலும் (D-Chart) பலன் இருக்கும். முன்பொரு முறை படித்தது. இன்னும் மறக்காமல் இருக்கிறேன். A D-Chart cannot give what rasi chart cannot promise. ராசி சக்கரத்தின் பலன்கள் முழுமையாக கிடைக்க மற்ற அம்சங்களின் தயவு வேண்டும். இருப்பினும் ராசி சக்கரமில்லாமல் அம்சங்கள் தனியாக இயங்க முடியாது./////

  உண்மைதான். உங்கள் கருத்துப்பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

  ReplyDelete
 41. Hello sir,
  My friend has laknathipathi(meena lakna) guru in 3rd house(vakra).what is the effect,if guru is vakra....good or bad??

  ReplyDelete
 42. ////prithvi said...
  Hello sir,
  My friend has laknathipathi(meena lakna) guru in 3rd house(vakra).what is the effect,if guru is vakra....good or bad??/////

  குரு வக்கிரமடைந்திருந்தால் பலன்கள் தாமதமாகும். பாதியாகக் குறையும்.

  ReplyDelete
 43. Dear Sir

  Idhu Guruvai Patri Paadam. I have one small doubt - Sani 2il Vakram Petral Podhuvana Palan Enna Sir.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 44. /////Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Idhu Guruvai Patri Paadam. I have one small doubt - Sani 2il Vakram Petral Podhuvana Palan Enna Sir.
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman/////

  லக்கினத்திற்கு லக்கினம் அது மாறும். சனியின் ஆதிபத்யம் முக்கியமில்லையா? பொதுப்பலன் சனி இரண்டில் இருப்பது விரும்பத்தக்கதல்ல. கையில் காசு தங்காது. குடும்பவாழ்வில் உரசல்கள் இருக்கும்!

  ReplyDelete
 45. Sir,

  I have a doubt & hope you clarify the same.
  1- Raagu
  7- Kethu
  8- Guru (Owner of the lagna as well)

  Will there be an exception for this? Do we need to consider the navamsha also? Will it going to be a tough life for the person?

  ReplyDelete
 46. ஐயா,
  எனக்கு விருச்சிக லக்னம். லக்னத்தில் குரு , கேது & மாந்தி . மாந்தி என்ன செய்யும் ஐயா? கொஞ்சம் பயமாய் இருக்கிறது......!

  ReplyDelete
 47. This comment has been removed by the author.

  ReplyDelete
 48. ayya vanakkam,sameebamaha ungal paadangalai paarthu padikkum bagyam kidaithathu.intha varam kodutha kadavulluku nandri,
  en magalukku guru 8aam idathil,makara rasiyil neecham adainthu raguvudam irrukirar.ninaithaaley varuthamaha ullathu......veru ethaavathu amaippu ithai seri seyuma????????navamsathil tula lagnam,guru simathil,ketuvum simathil.......ethavathu nalla palan kidaikumma

  ReplyDelete
 49. அய்யா,
  வணக்கம் .
  எட்டிர்க்குரிய குரு மூன்றாம் வீட்டில் மூன்றாம் வீட்டு அதிபதியோடு கூடி விபிரீத ராஜயோகமாய்
  இருக்கும் போது பலன் எப்படி இருக்கும் ?
  தயவு செய்து விளக்கவும்.
  நன்றி .

  ReplyDelete
 50. /////அட்சயா said...
  Sir,
  I have a doubt & hope you clarify the same.
  1- Raagu
  7- Kethu
  8- Guru (Owner of the lagna as well)
  Will there be an exception for this? Do we need to consider the navamsha also? Will it going to be a tough life for the person?//////

  இப்படி உதிரிக் கிரக நிலைகளை வைத்துக்கொண்டு உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாதீர்கள். மொத்தம் 350 பாடங்கள் உள்ளன. அனைத்தையும் பொறுமையாகப் படியுங்கள். உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசுவதற்கான பயிற்சி கிடைக்கும். அதுதான் நான் இங்கே எழுதுவதன் நோக்கமும் ஆகும்!

  ReplyDelete
 51. ////kumar.S said...
  ஐயா,
  எனக்கு விருச்சிக லக்னம். லக்னத்தில் குரு , கேது & மாந்தி . மாந்தி என்ன செய்யும் ஐயா? கொஞ்சம் பயமாய் இருக்கிறது......!/////

  எதற்காகப் பயப்படுகிறீர்கள்? உங்களைப் பயமுறுத்தவா நான் ஜோதிடப் பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன்? லக்கினத்தில் குரு இருப்பது நல்லதுதானே? அத்துடன் உச்சம் பெற்ற கேதுவும் இருப்பது நல்லதுதான். எல்லாம் நல்லபடியாக நடக்கும். பொறுமையாக இருங்கள். மாந்தி இருந்தால் குணக்கேடு. இந்தமாதிரி கண்டதற்கும் பயப்படுவதும் குணக்கேடுதான். மாந்தியை மறந்துவிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்!

  ReplyDelete
 52. ////praneeta said...
  ayya vanakkam,sameebamaha ungal paadangalai paarthu padikkum bagyam kidaithathu.intha varam kodutha kadavulluku nandri,
  en magalukku guru 8aam idathil,makara rasiyil neecham adainthu raguvudam irrukirar.ninaithaaley varuthamaha ullathu......veru ethaavathu amaippu ithai seri seyuma????????navamsathil tula lagnam,guru simathil,ketuvum simathil.......ethavathu nalla palan kidaikumma/////

  இறைவன் கருணைமிக்கவர். அனைவரின் ஜாதகமும் சமம். அதனால்தான் அனைவருக்குமே உள்ள மொத்தப்பரல்கள் 337. எட்டில் குரு இருப்பதைவைத்து ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களையும் பாருங்கள். பழைய பாடங்கள் அனைத்தையும் படியுங்கள். இப்படி உதிரிக் கிரக நிலைகளை வைத்துக்கொண்டு உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாதீர்கள். மொத்தம் 350 பாடங்கள் உள்ளன. அனைத்தையும் பொறுமையாகப் படியுங்கள். உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசுவதற்கான பயிற்சி கிடைக்கும். அதுதான் நான் இங்கே எழுதுவதன் நோக்கமும் ஆகும்! அதற்கு நேரம் இல்லாவிட்டால், நல்ல ஜோதிடராகப் பார்த்து உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள்

  ReplyDelete
 53. /////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
  அய்யா,
  வணக்கம் .
  எட்டிற்குரிய குரு மூன்றாம் வீட்டில் மூன்றாம் வீட்டு அதிபதியோடு கூடி விபிரீத ராஜயோகமாய்
  இருக்கும் போது பலன் எப்படி இருக்கும் ?
  தயவு செய்து விளக்கவும்.
  நன்றி //////

  விபரீத ராஜயோகத்தைப் பற்றி விரிவான பாடம் எழுதியுள்ளேனே ஸ்வாமி. அதைப் படியுங்கள். மீண்டும் எழுத வேண்டுமா? பொறுத்திருங்கள். அடுத்தவாரம் மீண்டும் அதை வலை ஏற்றுகிறேன்!

  ReplyDelete
 54. குருவை பற்றி குருவிடம் இரண்டு கேள்விகள்...

  1) குரு பலன் இல்லாமல் திருமணம் செய்யலாமா?
  2) ராசியில் குரு ஆட்சி அம்சத்தில் உச்சம். சுயபraல் 6 . ஆனால் வக்கிரம் மற்றும் சனின் சாரம். குரு தனது திசை புக்திகளில் முழு பலன் தருவாரா?

  நன்றிகளுடன்
  சிவ. மணிகண்டன்

  ReplyDelete
 55. ////Manikandan said...
  குருவை பற்றி குருவிடம் இரண்டு கேள்விகள்...
  1) குரு பலன் இல்லாமல் திருமணம் செய்யலாமா?/////

  குருபலன் என்று எதைச் சொல்கிறீர்கள்? கோள்சாரத்தைவைத்தா?
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  ///// 2) ராசியில் குரு ஆட்சி அம்சத்தில் உச்சம். சுயபraல் 6 ஆனால் வக்கிரம் மற்றும் சனியின் சாரம். குரு தனது திசை புக்திகளில் முழு பலன் தருவாரா?
  நன்றிகளுடன்
  சிவ. மணிகண்டன்/////

  குரு எந்த நிலையில் இருந்தாலும் நன்மைகளையே செய்வார். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com