மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

22.4.10

எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பது யார்?+++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பது யார்?

"மாபெரும் சபையினில் நீ நடந்தால் பல மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று பலர் போற்றிப் புகழவேண்டும்!"
- கவியரசர் கண்ணதாசன்

-------------------------------------------------------------------------
பாடம் 3

இரண்டாம் பாடத்தை (இதற்கு முந்தைய பாடத்தைப்) படித்துவிட்டு, அதற்கு தங்கள் ஜாதகத்தின் கிரக நிலையைக் குறிப்பிட்டு நிறையக் கேள்விகள் வந்ததால், அவற்றிற்குப் பதில் சொல்லும் முகமாக, மூன்றாம் பாடத்தை
உடனே வலையேற்றுகிறேன்.

லக்கின அதிபதி சென்று அமரும் இடங்களுக்கான பலன்கள்.

லக்கின அதிபதி லக்கினத்திலேயே இருந்தால் நன்று. உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினக்காரராக இருந்து அதன் அதிபதி செவ்வாய் மேஷத்திலேயே இருந்தால், அது அவருக்குச் சொந்த வீடு. ஆட்சி வீடு. அது நன்மை பயக்கும்.

இல்லை அந்த வீட்டை விட்டு வேறு இடங்களில் அமர்ந்திருந்தால் அதன் பலன் மாறுபடும். அவர் சென்று அமரும் வீடு, அவருக்குப் பகை வீடு என்றால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.

அதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம் வீடாகவோ அல்லது 8அம் வீடாகவோ அல்லது 12ஆம் வீடாகவோ இருந்தால் எதிர்மறையான பலன்களே கிடைக்கும். வாழ்க்கை போராட்டம்
மிகுந்ததாக இருக்கும். எதிர் நீச்சல் போட வேண்டியதிருக்கும்.

அப்படியிருந்தால், பார்த்துவிட்டுக் கவலைப் படாதீர்கள். கன்னத்தில் கையை முட்டுக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்து விடாதீர்கள். அதற்கான நஷ்ட ஈடு வேறு இடங்களில் வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் யாராக
இருந்தாலும் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.அதை நினைவில் வையுங்கள்.

லக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு கேந்திரம் அல்லது திரிகோண இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர் அங்கிருந்து லக்கினத்தைப் பார்த்தாலும் நன்மையாக இருக்கும்.

லக்கினத்தைப் பகைக் கிரகங்களோ அல்லது நீசக் கிரகங்களோ பார்க்காமலும் லக்கினத்தில் இல்லாமலும், லக்கினாதிபதியுடன் சேராமல் இருந்தாலும் நன்மை உடையதாக இருக்கும்

அதேபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அதிக நன்மையான பலன்கள் கிடைக்கும். அதேபோல லக்கினம் சுபக் கிரகங்களின் பார்வையில் இருந்தாலும் நன்மைகள் உடையதாக இருக்கும்.

ஆகவே அனைத்தையும் அலசிப் பாருங்கள்
-------------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்:

ஜாதகன் சுதந்திர மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக இருப்பான். யார் சொன்னாலும், அவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான். தன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான். ஜாதகன் தீர்க்க ஆயுளை உடையவனாக இருப்பான். சொத்துக்களை உடையவனாக இருப்பான். பெருமைகள், புகழை உடையவனாக வளர்வான். வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும். மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.
தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான். உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான். தனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில்
அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான்.

மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும் நன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர் மாறான பலன்களே நடைபெறும்
------------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள் எல்லா இடங்களிலும் எடுபடும்.

தனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்பவனாக இருப்பான். தன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருப்பான். செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான். மன

அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான். நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான் அனேக உடன் பிறப்புக்கள் இருக்கும். அழகான தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான். ஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான். நல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக
இருப்பான். ரோட்டி, கப்டா, மக்கான் என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள்,
இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லாத வாழ்க்கையைப் பெற்றவனாக இருப்பான்.தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான். தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். சுகவாசியாக இருப்பான். வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான். இத்துடன், ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும்

வலிமை பெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான். அதாவது நிறைய மக்களைப் பெற்றவனாக இருப்பான். அதோடு தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான்.
ஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை உடையவனாகவும் இருப்பான்.

மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். சிலருக்கு அரசியல் செல்வாக்கும், ஆட்சியாளர்களின் ஆதரவும் இருக்கும்
------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான். எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான். பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும். பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும். லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக்
காலங்களில் கடன் மற்றும் நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து சிறப்பைப் பெறுவார்கள். சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமை யடைவார்கள்
--------------------------------------------------------------------------
லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும். சிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள். மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது ஏழையாக இருப்பான். ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான். மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும். சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக

இருப்பார்கள். எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள். எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும்பொருள் ஈட்டி
மகிழ்வுடன் வாழ்வான்.
===========================================
லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

ஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான். சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும். ஒழுக்கக் குறைவு ஏற்படும். சிலருக்கு மரணம் - அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும், ஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும்.

இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும். ஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும். சிலருக்கு உடலில் அங்கக் குறைபாடுகள் இருக்கும்.

சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை எடுத்து வளர்க்க நேரிடும். இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம ஆயுளை உடையவன். வாழ்க்கையில் வறுமை

ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். சிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர் உண்டாகும்.
=============================================
லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

பொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும். ஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான். நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது. இது பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க! ஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக் கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன் பெரியவர்களை மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான்.சிறந்த பக்திமானாக விளங்குவான். தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான், நேர்மையாளனாக இருப்பான்.
வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள் எதுவும் இருக்காது.
=================================================
லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

தொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான அமைப்பு இது. பத்தாம் அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான். இந்த அமைப்பை

சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான். நற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான். தொழிலில் மேன்மை அடைவான்.
அதிகாரமும், பதவிகளும் தேடிவரும். அரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும். சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள். நிலபுலன்கள், பெரிய வீடு, வண்டி, வாகன வசதிகளுடனான வாழ்க்கை ஏற்படும்.
==================================================
லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான தொழிலைச் செய்வான். நற்பெயரும், செல்வாக்கும் தேடிவரும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும்,
அல்லது இந்த பதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று
இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள். ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன் இந்த அமைப்பும் சேர்ந்து மேலும்

பலவிதமான நன்மைகளைச் செய்யும். Gains; Gains: Gains - அவ்வளவுதான். ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே இல்லாத வாழ்க்கை அமையும்.

இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு மேற்கூறிய நன்மைகள் இருக்காது. ஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்
==================================================
லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும்.

வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.

இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம் செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான்.

அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும். வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்

சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு, மன அமைதி பெறுவார்கள்
====================================================

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

41 comments:

Alasiam G said...

Thank you so much for your lesson Sir.

ananth said...

6,8,12 ஆகிய மூன்றில் 6ம் இடம் அசுபத்தன்மை சற்று குறைந்தது என்று படித்திருக்கிறேன். காரணம் அது உபஜெய ஸ்தானங்களில் (House of growth) ஒன்று என்பதாலாம். ஆக மோசமானது 8ம் இடம். காரணம் பாக்கியத்தை விரயம் செய்ய கூடியது (அதாவது பாக்கிய ஸ்தானத்திற்கு 12ம் இடம்). இருப்பினும் தாங்கள் சொன்னது போல் இது பொது பலன்தான். மற்ற அம்சங்களையும் சீர் துக்கிப் பார்த்து பலன் காண வேண்டும்.

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம்...

எனக்கு லக்னாதிபதி குரு தனுசு லக்னம்....4 இல் ஆட்சி சுயவர்கத்தில் 6 பரல் தாங்கள் சொன்ன அனைத்து அமைப்புகளும் அமயபெற்றுள்ளேன் .....
நன்றி வணக்கம்....

Nareshkumar said...

Vanakam sir,
//you had mentioned that if lagnathypathy is in 12th house then there will be no profit,and money will not stay in hands.//
MY QUESTION:
Will this will be avoided if 12th house has 21 parals and 11 th house has 32 parals?.

Nithya said...

Thanks for revising the older lessons Sir.
I request you to do comparative study of EACH HOUSES in both RASI chart and AMSA chart simultaneously..As amsa chart being the magnified version of rasi chart,i request you to give detailed and new informations in navamsa,dasamsa charts also.I feel It ll be much more helpful sir.

Arul said...

வணக்கம் ஐயா,

லக்னாதிபதி 6,8,12 இடங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

நன்றி...
அருள்நிதி

RameshVeluswami said...

Sir,

In any one of the Planet has less suyavarga paral that is less than 3 or 3 in rasi chart. but at the same time the planet has mutual exchange between subha graha .[mars exchange with guru]. does we consider that mars is strong.

www.bogy.in said...

உங்களின் கட்டுரைகள் அனைத்தையும் அரம்பம் முதல் படித்து வருகிறேன். மேஷ, ரிஷப, துலா, விருச்சிக, கும்ப லக்கினங்களுக்கு லக்கன அதிபதியே 6,8,12ம் இடங்களுக்கும் அதிபதியாகவும் உள்ளார்கள். இவர்கள் லக்கினத்திலோ, அல்லது மறு அதிபதிய வீட்டில் அமரும் போது ஏற்ப்படும் பலன்கள் என்னவாக இருக்கும்

நன்றி
வருன்

Nareshkumar said...

Vannakam Sir,
you have taught about all the houses in the previous lessons but why the 8th house lessons are not teached sir? when shall we expect that lessons in the classroom!!!!!!!!!!!!

RameshVeluswami said...

Sir,

If any one of the planet has less suyavarga paral {3 or less than 3} in rasi chart. but at the same , the planet which has less S.V paral had a mutual exchange with subha Graha in navamsa [mars exchange house with guru]. does we consider that the mars will become strong.

[in my last comment i had missed some details. so that i had again posted this sir.]

RameshVeluswami said...

Sir,

if the Lagnam had the aspect from the utcha graham.

eg: magara lagna - lagna lord sani , For lagna lord the mars is enemy. for this lagna if mars had the aspect to lagna where the mars is placed at 6th from lagna and has his 8th parvai to lagna. what will be the result sir.

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

பாடங்களை மீண்டும் மீண்டும் படிக்கும் போது நன்றாக புரிந்துக் கொள்ளவும் நினைவில் வைத்துக் கொள்ளவும் முடிகிறது.நன்றி!

வணக்கம்.

தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-04-22

மகேஷ் ராஜ் said...

ஐயா லகேனம் வீருசகம் அதன் லகனதேபதி செய்வாய் என தங்கள் கொடுத்த ஜாதக மின்பொருள் கடுகேறது .அனால் மேஷம் என்றல் செய்வாய் என எழுதி உள்ளீர்

Loga said...

Thanks for your answer sir, yesterday

I read in some books that, From Lagnam continuously seven grahams will provide Vallagi Yogam or Maalavika yogam, is it correct sir.

For example

Viruchiga lagnam

In Lagnam - Kethu Bagavan
2nd house – Guru
3rd House – Sukkiran
4th House – Sooriyan
5th House – Budhan
6th House – Chandran
7th House – Ragu

If so what is the benefit out of it. Thanks

prithvi said...

Hello Sir,
\\லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான். நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.\\

Third house is also a malefic house na sir,then how these effects are so good.
My friend has laknathipathi guru in 3rd house(vakram).
What will be the effect sir.

Prithvi Raj

SP.VR. SUBBAIYA said...

////Alasiam G said...
Thank you so much for your lesson Sir./////

நல்லது. நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////ananth said...
6,8,12 ஆகிய மூன்றில் 6ம் இடம் அசுபத்தன்மை சற்று குறைந்தது என்று படித்திருக்கிறேன். காரணம் அது

உபஜெய ஸ்தானங்களில் (House of growth) ஒன்று என்பதாலாம். ஆக மோசமானது 8ம் இடம். காரணம்

பாக்கியத்தை விரயம் செய்ய கூடியது (அதாவது பாக்கிய ஸ்தானத்திற்கு 12ம் இடம்). இருப்பினும் தாங்கள்

சொன்னது போல் இது பொது பலன்தான். மற்ற அம்சங்களையும் சீர் துக்கிப் பார்த்து பலன் காண வேண்டும்.//////

உண்மை! உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

//////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்...
எனக்கு லக்னாதிபதி குரு தனுசு லக்னம்....4 இல் ஆட்சி சுயவர்கத்தில் 6 பரல் தாங்கள் சொன்ன அனைத்து
அமைப்புகளும் அமயபெற்றுள்ளேன் .....
நன்றி வணக்கம்....////

நல்லது நன்றி ஆதிராஜ்!

SP.VR. SUBBAIYA said...

//////Nareshkumar said...
Vanakam sir,
//you had mentioned that if lagnathypathy is in 12th house then there will be no profit,and money will not
stay in hands.//
MY QUESTION:
Will this will be avoided if 12th house has 21 parals and 11 th house has 32 parals?.//////

அப்படி அமைப்பிருந்தால், விரையம் ஓரளவிற்குக் குறையும்!

SP.VR. SUBBAIYA said...

//////Nithya said...
Thanks for revising the older lessons Sir.
I request you to do comparative study of EACH HOUSES in both RASI chart and AMSA chart
simultaneously..As amsa chart being the magnified version of rasi chart,i request you to give detailed and new
informations in navamsa,dasamsa charts also.I feel It ll be much more helpful sir./////

பொறுத்திருங்கள். செய்கிறேன்.

SP.VR. SUBBAIYA said...

/////Arul said...
வணக்கம் ஐயா,
லக்னாதிபதி 6,8,12 இடங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
நன்றி...
அருள்நிதி/////

லக்கினாதிபதி உச்சம் அடைவது நல்லதுதான். ஆனாலும், 6, 8, 12ஆம் இடங்களில் அமர்வதினால் உச்சத்திற்கான பலன்கள் கணிசமாகக் குறைந்துவிடும்.

SP.VR. SUBBAIYA said...

//////RameshVeluswami said...
Sir,
In any one of the Planet has less suyavarga paral that is less than 3 or 3 in rasi chart. but at the same time the planet has mutual exchange between subha graha .[mars exchange with guru]. does we consider that
mars is strong.//////

பரல்கள் எதைவைத்து வருகின்றன? ஜாதகத்தின் எல்லா அம்சங்களையும் கணக்கிட்டுத்தான் வருகின்றன!
பரிவர்த்தனை பெற்றாலும், சுயவர்க்கப் பரல்கள் குறைவாக இருந்தால், வீக்’ என்றுதான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்!

SP.VR. SUBBAIYA said...

/////www.bogy.in said...
உங்களின் கட்டுரைகள் அனைத்தையும் அரம்பம் முதல் படித்து வருகிறேன். மேஷ, ரிஷப, துலா, விருச்சிக, கும்ப லக்கினங்களுக்கு லக்கன அதிபதியே 6,8,12ம் இடங்களுக்கும் அதிபதியாகவும் உள்ளார்கள். இவர்கள் லக்கினத்திலோ, அல்லது மறு அதிபதிய வீட்டில் அமரும் போது ஏற்பபடும் பலன்கள் என்னவாக இருக்கும்
நன்றி
வருண்/////

பலன்கள் கலவையாக இருக்கும் (That is mixed results)

SP.VR. SUBBAIYA said...

//////Nareshkumar said...
Vannakam Sir,
you have taught about all the houses in the previous lessons but why the 8th house lessons are not
teached sir? when shall we expect that lessons in the classroom!!!!!!!!!!!!/////

எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் மிகவும் சுவாரசியமான பாடம்.நீண்ட பாடம். சற்று சிக்கலான பாடம். அதை எழுத வேண்டும். எழுதியபிறகு பதிவில் வரும். பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

//////RameshVeluswami said..
Sir,
If any one of the planet has less suyavarga paral {3 or less than 3} in rasi chart. but at the same , the

planet which has less S.V paral had a mutual exchange with subha Graha in navamsa [mars exchange house

with guru]. does we consider that the mars will become strong.
[in my last comment i had missed some details. so that i had again posted this sir.]////

இரண்டையும் போட்டுக் குழப்பாதீர்கள். அஷ்டகவர்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

//////RameshVeluswami said...
Sir,
if the Lagnam had the aspect from the utcha graham.
eg: magara lagna - lagna lord sani , For lagna lord the mars is enemy. for this lagna if mars had the aspect to lagna where the mars is placed at 6th from lagna and has his 8th parvai to lagna. what will be the result sir.//////

இப்படி உதிரியான செய்திகளைவைத்துப் பலன் சொல்வது சரியாக இருக்காது! முழு ஜாதகத்தையும் கையில் கொடுத்து, என்ன தெரிய வேண்டுமோ அதை நேரடியாகக் கேட்க வேண்டும். அதற்கு ஜாதகத்தை அலசிப்பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் பலன் சரியாக இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

//////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, பாடங்களை மீண்டும் மீண்டும் படிக்கும் போது நன்றாக புரிந்துக் கொள்ளவும் நினைவில் வைத்துக் கொள்ளவும் முடிகிறது.நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி//////

நல்லது நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////மகேஷ் ராஜ் said...
ஐயா லகேனம் வீருசகம் அதன் லகனதேபதி செய்வாய் என தங்கள் கொடுத்த ஜாதக மின்பொருள் கடுகேறது .அனால் மேஷம் என்றல் செய்வாய் என எழுதி உள்ளீர்/////

மேஷத்தின் அதிபதி செவ்வாய் என்று திருத்தி வாசித்துக்கொள்ளுங்கள் நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Loga said...
Thanks for your answer sir, yesterday
I read in some books that, From Lagnam continuously seven grahams will provide Vallagi Yogam or

Maalavika yogam, is it correct sir.
For example
Viruchiga lagnam
In Lagnam - Kethu Bagavan
2nd house – Guru
3rd House – Sukkiran
4th House – Sooriyan
5th House – Budhan
6th House – Chandran
7th House – Ragu
If so what is the benefit out of it. Thanks/////

கரெக்ட். இதை முன்பே எழுதியுள்ளேன். யோகங்களைப் பற்றிய பாட வரிசையில் இது உள்ளது.

SP.VR. SUBBAIYA said...

//////Blogger prithvi said...
Hello Sir,
\\லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான். நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.\\
Third house is also a malefic house na sir,then how these effects are so good.
My friend has laknathipathi guru in 3rd house(vakram).
What will be the effect sir.//////

மூன்றாம் இடம் தைரிய ஸ்தானம். அத்துடன் உடன்பிறப்புக்களுக்கான ஸ்தானம். அதைவைத்து அந்தப் பலன்கள்!

megala said...

துலாம் லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் கேந்திரத்தில் அதாவது 10ல் பகை வீடில் கடகத்தில் அதனுடன் சூரியன் சம வீடு, செவ்வாய் நீச்ச வீடு, புதன் பகை வீடு இப்படி இருந்தால் தொழில் அதாவது வேலை எப்படி இருக்கும்.

Arulkumar Rajaraman said...

Dear Sir

Thank you for your lesson sir

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

SP.VR. SUBBAIYA said...

/////megala said...
துலாம் லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் கேந்திரத்தில் அதாவது 10ல் பகை வீட்டில் கடகத்தில் அதனுடன் சூரியன் சம வீடு, செவ்வாய் நீச்ச வீடு, புதன் பகை வீடு இப்படி இருந்தால் தொழில் அதாவது வேலை எப்படி இருக்கும்?//////

இப்படிக் கேட்டால் என்ன சொல்வது? கண்ணில் கோளாறு என்றால், கண்ணைக் காட்டாமல், காலைக் காட்டி எப்படி வைத்தியம் செய்து கொள்ள முடியும்? உங்களுடைய வேலையைப் பற்றித் தெரிந்துகொள்ள, பத்தாம் வீடு, அதன் அதிபதி, கர்மகாரகன் சனியின் நிலைமை, அந்த வீட்டிற்கான பரல்கள், அதிபதிகளுக்கான சுயவர்க்கப்பரல்கள் என்று அந்த வீடு சம்பந்தப்பட்டவற்றையல்லாவா அலச வேண்டும். அதை விடுத்து, லக்கினாதிபதியை மட்டும் வைத்து எத்ற்காகக் கும்மி அடிக்கிறீர்கள்?

SP.VR. SUBBAIYA said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Thank you for your lesson sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது. நன்றி ராஜாராமன்!

பித்தனின் வாக்கு said...

அய்யா இந்த பதிவில் லக்கினாதிபதி நீசம் அடைந்தால் என்ன நேரும் என்பதை சொல்லவில்லை. மூன்றாம் இடத்தில் நீசம் அடைந்து இருந்தால் எதிர்மறை பலன் கள் விளையுமா? லக்கினாதிபதியே நீசம் அடைந்த ஜாதகம் எப்படி இருக்கும்?.

இனியன் பாலாஜி said...

மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எப்படி இருந்தாலும் மற்ற வீடுகளின் பலன் களும் கூட நன்றாக இருக்க வேண்டுமென்றாலும் கூட‌
லகனமும் லக்னாதிபதியும் அடிப்படையில் நன்றாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான
அபிப் பிராயம்.

மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

எனக்கு லக்னாதிபதி 12ல்தான் உள்ளார். எவ்வளவு வந்தாலும் தங்காது.தாங்கள் குறிப்பிட்டபடி
ஆன்மீக சேவையில் அதிகம் ஈடுபட்ட காரணத்தினால்தான் என்னால் இப்போது உயிரோடு மட்டுமல்ல. மன‌
மகிழ்ச்சியாகவும் கூட இருக்கமுடிகிறது.
தங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே அந்த 337 விஷயம் தான்.
இதை மட்டும் எல்லோரும் புரிந்து கொண்டார்களானால் யாருமே தன்னிடம் இல்லாத அல்லது கிடைக்காத‌
விஷயத்தைப் பற்றி கவலை படவே மாட்டார்கள்.மற்றவர்களுக்கு இல்லாத ஒன்றை நமக்கு ஆண்டவன்
கொடுத்திருக்கின்றான் என்பதை கவனித்தாலே போதும். வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்
தங்களது சேவைக்கு எல்லாம்வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் தந்து இது போல் அனைவருக்கும்
சேவை செய்யும் பாக்கியத்தையும் தந்து அருள பிரார்த்திக்கின்றேன்
நன்றி
இனியன் பாலாஜி

R.DEVARAJAN said...

தநுர் லக்னம்; குரு 5ல் அழகான மகனும், மகளும் உண்டு.அப்பாமேல் நல்ல பாசம் என்று சொல்ல முடியவில்லை; மன நிம்மதியும் இல்லை. வேறு க்ரஹ அமைப்பைப் பார்க்க வேண்டுமா ?

தேவ்

SP.VR. SUBBAIYA said...

/////பித்தனின் வாக்கு said...
அய்யா இந்த பதிவில் லக்கினாதிபதி நீசம் அடைந்தால் என்ன நேரும் என்பதை சொல்லவில்லை. மூன்றாம் இடத்தில் நீசம் அடைந்து இருந்தால் எதிர்மறை பலன்கள் விளையுமா? லக்கினாதிபதியே நீசம் அடைந்த ஜாதகம் எப்படி இருக்கும்?./////

லக்கினாதிபதி நீசம் அடைந்தால், ஜாதகன் எதிர்நீச்சல் போட வேண்டும்! எதையும் பொராடித்தான் பெற வேண்டும். போராடுங்கள் எல்லாம் கிடைக்கும்!

SP.VR. SUBBAIYA said...

/////இனியன் பாலாஜி said...
மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எப்படி இருந்தாலும் மற்ற வீடுகளின் பலன்களும் கூட நன்றாக இருக்க வேண்டுமென்றாலும் கூட‌
லகனமும் லக்னாதிபதியும் அடிப்படையில் நன்றாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான
அபிப்பிராயம். மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

எனக்கு லக்னாதிபதி 12ல்தான் உள்ளார். எவ்வளவு வந்தாலும் தங்காது.தாங்கள் குறிப்பிட்டபடி
ஆன்மீக சேவையில் அதிகம் ஈடுபட்ட காரணத்தினால்தான் என்னால் இப்போது உயிரோடு மட்டுமல்ல. மன‌
மகிழ்ச்சியாகவும் கூட இருக்கமுடிகிறது. தங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே அந்த 337 விஷயம் தான். இதை மட்டும் எல்லோரும் புரிந்து கொண்டார்களானால் யாருமே தன்னிடம் இல்லாத அல்லது கிடைக்காத‌
விஷயத்தைப் பற்றி கவலை படவே மாட்டார்கள்.மற்றவர்களுக்கு இல்லாத ஒன்றை நமக்கு ஆண்டவன்
கொடுத்திருக்கின்றான் என்பதை கவனித்தாலே போதும். வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்
தங்களது சேவைக்கு எல்லாம்வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் தந்து இது போல் அனைவருக்கும் சேவை செய்யும் பாக்கியத்தையும் தந்து அருள பிரார்த்திக்கின்றேன்
நன்றி
இனியன் பாலாஜி////////

அந்த 337 எனக்கும் பிடித்துப்போனதால்தான் ஜோதிடத்தைக் கையில் எடுத்து இங்கே எழுத ஆரம்பித்தேன். அதை அனைவரும் உள்வாங்கிக்கொண்டால் ஆனந்தமாக இருக்கலாம்.
உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////R.DEVARAJAN said...
தனுர் லக்னம்; குரு 5ல் அழகான மகனும், மகளும் உண்டு.அப்பாமேல் நல்ல பாசம் என்று சொல்ல முடியவில்லை; மன நிம்மதியும் இல்லை. வேறு க்ரஹ அமைப்பைப் பார்க்க வேண்டுமா?
தேவ்//////

ஆமாம். எதையும் கண்டுகொள்ளாமல் அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள். ஆண்டவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் உங்களை உணர்வார்கள்! அவர்களாக உணர்ந்தால்தான் உண்டு!

sri said...

Thank you sir!
Lagna lord sani in twelth house i'e thanusu and the astavarga paralkal for twelth house is 38(very high then how does it benefit a person.Actually he is not much affected in 7 1/2 sani period.astavarga paralkal in lagna is 30.
My kind request to teach more about paralkal

Thank you