மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.4.10

கவியரசரின் தமிழ் இலக்கணம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கவியரசரின் தமிழ் இலக்கணம்!

இந்தத் தொடர் பதிவில் இதற்குமுன் வந்த பதிவின் சுட்டி இங்கே உள்ளது.
அதைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


"காரிகை கற்றுக் கவி பாடுவதிலும்
பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே!"

என்று ஒரு தமிழ் அறிஞர் தமிழ் இலக்கணத்தின் சிறப்பையும், அதைக் கற்றுத் தேர்வதிலுள்ள சிரமத்தையும் பற்றிக் கூறும்போது சொல்வார்.

'யாப்பருங்கலக் காரிகை' என்பது கவிதைக்குரிய இலக்கணத்தை சொல்லும் நூல்

எதுகை, மோனை, சீர் என்று கவிதைக்குரிய எல்லா வரம்புகளையும் அந்த நூல் உள்ளடக்கியது.

அந்த நூலைப் படித்துத் தேர்ச்சி பெற்றுக் கவி பாடுவதை விடக் கோயிலில் பேரிகை கொட்டிப் பிழைப்பு நடத்தலாம் என்றார் அந்தத் தமிழ் அறிஞர்.

கவிதைகளில் எதுகை (Rhyme) முக்கியம், எதுகைதான் ஒரு கவிதைக்கும், பாடலுக்கும் இனிமை தருவது.

ஒவ்வொரு அடியின் ஆரம்பத்திலும் எதுகை இருப்பதுதான் கவிதையின் சிறப்பு.

சொல்லின் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரி வருவது எதுகை.

முருகனே என்ற சொல் முதல் அடியின் முதற்சொல்லாக உள்ளது என்றால் மருகனே என்ற சொல் அடுத்த வரியின் முதற்சொல்லாக வந்தால் எதுகை பாட்டில் வந்து அமர்ந்து கொண்டு விடும்.

பாட்டைப் பாருங்கள்:

"முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்."

முருகனே, மருகனே என்று 'ரு' எழுத்து உள்ள சொற்கள் அடுத்தடுத்த வரிகளில் வருகின்றன.

அதேபோல தம்பியே, நம்பியே என்று 'ம்' எழுத்து உள்ள சொற்கள் அடுத்தடுத்த வரிகளில் வருகின்றன.

நாம் எழுதினால் வார்த்தைகளைத் தேடிப் போட்டு எழுத வேண்டிய சிக்கல் உண்டு.

ஆனால் கடவுள் கொடுத்த வரத்தால், கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதியபோது, சொற்கள் வரிசையில் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தன. கை கொடுத்தன.

அவரும் எல்லாப் பாடல்களையும் சிறப்பாக எழுதினார்.

அதனால்தான் அவரைக் கவியரசர் என்கின்றோம்.

எல்லோரும் எதுகையை முதல் சொல்லில் வைப்பார்கள். கவியரசர் அதற்கு விதிவிலக்காகத் தன் பாடல்களில் கடைசி சொல்லில் எதுகையை வைப்பார்.

பாடலைப் பாடுபவருக்கு அது கை கொடுப்பதோடு பாடலில் ஒரு இனிமையும் தூக்கலாக வந்து விடும்.

"கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும், முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல!"

சொல்லச் சொல்ல, மெல்ல மெல்ல, என்று எதுகைகள் எங்கே வருகின்றன பார்த்தீர்களா?

மேலும் சில பாடல்களில் இருந்து வரிகள்.

"கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணமலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்"

"கடவுள் ஒருநாள் உலகைக்காணத் தனியே வந்தாராம்
கண்ணில்கண்ட மனிதரையெல்லாம் நலமா என்றாராம்"

"ஆறு மனமே ஆறு
ஆண்டவன் கட்டளை ஆறு

"கையளவு உள்ளம் வைத்தான்
கடலளவு ஆசை வைத்தான்"

"மாம்பழத்து வண்டு
வாசமலர்ச் செண்டு
யார்வரவைக் கண்டு
வாடியது இன்று!"

"தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு

"நி¢லவுக்குப் போவோம்
இடமொன்று பார்ப்போம்
மாளிகை அமைப்போம்
மாலையும் முடிப்போம்
மஞ்சத்தில் இருப்போம்
உலகத்தை மறப்போம்"

(மாலையும் முடிப்போம் என்றால் திருமணம் செய்து கொள்வோம்)

"அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
இரவுக்குப் பகலிடம் கோபமில்லை
ஏழையின் காதலில் பாபமில்லை"

"மலரும் கொடியும் பெண்னென்பார்
மதியும் நதியும் பெண்னென்பார்."

இப்படி எண்ணற்ற பாடல்கள் உள்ளன. எழுதிக் கொண்டே போகலாம்.

இதில் ஒன்று கவனித்தீர்களா" பாடலில் மோனை அனாசயமாக வந்திருக்கும். மோனை என்பது வரிகளில் உள்ள முதற் சொல்லின் முதல் எழுத்து ஒரே மாதிரி வருவது

க' விற்குக் க'
அ' விற்கு அ'
ம' விற்கு ம'

கவியரசரின் பாடலில் எப்படி எதுகையும் மோனையும் சிறப்பாக இருக்கும் என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்டவே இந்தப் பதிவை எழுதினேன்.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் நேரம், மற்றும் பொறுமை கருதியும் இந்தப் பதிவை இத்துடன் நிறைவு செய்கிறேன்

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
(தொடரும்)

நட்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

22 comments:

  1. கண்ணதாசன் பாடலை மறக்க முடியுமா அய்யா..அனைத்தும் அருமையல்லவா..பாடல்களை மீண்டும் நினைவு படித்தியமைக்கு நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    கவியரசரின் தமிழ் இலக்கணம்,தங்களின் எழுத்து வன்மையினாலும்,தகுந்த மேற்கோல்களினாலும் இதனைப் படிப்பவர்கள் மிகவும் சுலபமாக புரிந்துக் கொள்ள இயலும்.

    மிக்க நன்றி!

    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-04-08

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு வணக்கம்,
    புதுமைக்கவிஞர் புரியும் தமிழில் அவர்
    புதுமை செய்த வர்.

    கவிஞன் ஞானோ ஒருக்காலக்கணிதம் என்றவர்
    கவிப்பாடுவதில் புதுமைச்செய்த புலவராவர்.

    பூஜைக்குவந்த மலர்கள் பூஜிக்க உதவிய மலர்கள்
    கொண்டுவந்தவன் கடந்துவந்த பாதைகள் கரடு முரடானப் பாதைகள்
    அவைகள் அவன் உடலை மட்டுமே மாசு படுத்தின மலர்களை அல்ல..
    பூஜைக்குவந்த மலர்கள் பூஜிக்க உதவிய மலர்கள்....
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  4. கவி அரசரின் சிரிப்பை மட்டும் அல்லாமல் தமிழின் சிறப்பையும் கற்று கொண்டோம்

    ReplyDelete
  5. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் பாடத்துடன் இலக்கணத்தையும் கற்ற தருகிறீர்கள் நன்றி அய்யா, கண்ணதாசன் போல் பட்டுக்கோட்டையார் பாடல்களையும் தாருங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  6. //////Blogger வேலன். said...
    கண்ணதாசன் பாடலை மறக்க முடியுமா அய்யா..அனைத்தும் அருமையல்லவா..பாடல்களை மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.//////

    நல்லது. நன்றி வேலன்!

    ReplyDelete
  7. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கவியரசரின் தமிழ் இலக்கணம்,தங்களின் எழுத்து வன்மையினாலும்,தகுந்த மேற்கோல்களினாலும் இதனைப் படிப்பவர்கள் மிகவும் சுலபமாக புரிந்துக் கொள்ள இயலும்.
    மிக்க நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    எல்லாப் புகழும் அவருக்கே! நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    புதுமைக்கவிஞர் புரியும் தமிழில் அவர் புதுமை செய்தவர்.
    கவிஞன் ஞானோ ஒருக்காலக்கணிதம் என்றவர்
    கவிப்பாடுவதில் புதுமைச்செய்த புலவராவர்.
    பூஜைக்குவந்த மலர்கள் பூஜிக்க உதவிய மலர்கள்
    கொண்டுவந்தவன் கடந்துவந்த பாதைகள் கரடு முரடானப் பாதைகள்
    அவைகள் அவன் உடலை மட்டுமே மாசு படுத்தின மலர்களை அல்ல..
    பூஜைக்குவந்த மலர்கள் பூஜிக்க உதவிய மலர்கள்....
    நன்றிகள் குருவே!////

    சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஆலாசியம். நன்றி!

    ReplyDelete
  9. ////LK said...
    கவி அரசரின் சிரிப்பை மட்டும் அல்லாமல் தமிழின் சிறப்பையும் கற்று கொண்டோம்/////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் பாடத்துடன் இலக்கணத்தையும் கற்ற தருகிறீர்கள் நன்றி அய்யா, கண்ணதாசன் போல் பட்டுக்கோட்டையார் பாடல்களையும் தாருங்கள் தெரிந்துக்கொள்கிறோம்./////

    ஆகா, உங்களுக்கு இல்லாததா? எழுதுகிறேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  11. அனைத்துமே நல்ல அர்த்தம் பொதிந்த பாடல்கள். இதற்காகவே இந்த பாடல்களை நான் அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
  12. உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு புதுமைதான் . அதிலும் இந்த பதிவு இன்னும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி ! தொடரு ங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  13. ananth said...
    அனைத்துமே நல்ல அர்த்தம் பொதிந்த பாடல்கள். இதற்காகவே இந்த பாடல்களை நான் அதிகம் ரசித்தேன்./////

    நல்லது. நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  14. /////♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு புதுமைதான் . அதிலும் இந்த பதிவு இன்னும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி ! தொடருங்கள் மீண்டும் வருவேன்//////

    உங்களின் பெயர் புதுமையாக உள்ளது. நன்றி!

    ReplyDelete
  15. /////raj said...
    arumai o arumai ,/////

    பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. இரவுக்கு பகலிடம் கோபமில்லை
    ஏழையின் காதலில் பாபமில்லை

    இங்கு இரவுக்கு என்றும் ஏழையின்
    என்றும் வருகிற்தல்லவா

    அதுகூட மோனை தான்


    அ‍‍‍‍‍ ஆ ஐ ஔ‍ இவையெல்லாம் ஒரு பிரிவுக்குள் அடக்கம்.

    இ ஈஎ ஏ இவை ஒரு பிரிவு

    உ ஊஒ ஓ இவை ஒரு பிரிவு
    இதனோடு மெய் எழுத்துக்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
    உம் அ+க் _ க‌
    உம்
    போனால் போகட்டும் போடா‍ இந்த‌
    பூமியில் நிலையாய்
    இங்கு போனால் என்றும் பூமியில் என்றும் மோனையாக வந்தது
    இவை ச் தவிர சில விதி விலக்கும் உண்டு
    த வுக்கு ச வரலாம்
    ம வுக்கு வ வரலாம்.

    மௌனமே பார்வையால் ஒரு
    வார்த்தை பேச வேண்டும்உம்
    மௌனம் வார்ததை
    இனியன் பாலாஜி

    ReplyDelete
  17. தாங்கள் தனியாகவே கண்ணதாசன் பாடல்கள் என்று ஒன்று தொடங்கி
    எழுதலாம்.
    . நான் இது வரை ஒரே ஒரு மனிதனுக்கு மட்டுமே {vip}இறுதி
    அஞ்சலி செலுத்தி இருக்கிறேன். அது கண்ணதாசனுக்கு மட்டுமேதான்/ கடைசி வரை
    பின்னாலே மௌனமாக அவரது பாடல்களை எல்லாம் அசை போட்டபடி நடந்தது
    மறக்க முடியாது. தங்களது பதிவுகள் என்னை அந்த காலத்திற்கு இட்டு சென்று விட்டது
    அதுவும் அந்த காலத்தில் எதுகை மோனை எல்லாம் அறிந்து பாடலை
    ரசித்த விதமே தனிதான். வெறும் பாடல்வரிகளுக்காக கைதட்டல் வாங்கியவர்
    இவராகத்தான் இருக்கும்
    போலீஸ்காரன் மகள் போன்றபடங்களின் பாடல்களில்.
    இனியன் பாலாஜி

    ReplyDelete
  18. இனியன் பாலாஜி said...
    இரவுக்கு பகலிடம் கோபமில்லை
    ஏழையின் காதலில் பாபமில்லை

    இங்கு இரவுக்கு என்றும் ஏழையின்
    என்றும் வருகிற்தல்லவா
    அதுகூட மோனை தான்


    அ‍‍‍‍‍ ஆ ஐ ஔ‍ இவையெல்லாம் ஒரு பிரிவுக்குள் அடக்கம்.
    இ ஈஎ ஏ இவை ஒரு பிரிவு

    உ ஊஒ ஓ இவை ஒரு பிரிவு
    இதனோடு மெய் எழுத்துக்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
    உம் அ+க் _ க‌
    உம்
    போனால் போகட்டும் போடா‍ இந்த‌
    பூமியில் நிலையாய்
    இங்கு போனால் என்றும் பூமியில் என்றும் மோனையாக வந்தது
    இவை ச் தவிர சில விதி விலக்கும் உண்டு
    த வுக்கு ச வரலாம்
    ம வுக்கு வ வரலாம்.

    மௌனமே பார்வையால் ஒரு
    வார்த்தை பேச வேண்டும்
    மௌனம் வார்ததை
    இனியன் பாலாஜி///////

    உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////இனியன் பாலாஜி said...
    தாங்கள் தனியாகவே கண்ணதாசன் பாடல்கள் என்று ஒன்று தொடங்கி
    எழுதலாம்.
    . நான் இது வரை ஒரே ஒரு மனிதனுக்கு மட்டுமே {vip}இறுதி
    அஞ்சலி செலுத்தி இருக்கிறேன். அது கண்ணதாசனுக்கு மட்டுமேதான்/ கடைசி வரை
    பின்னாலே மௌனமாக அவரது பாடல்களை எல்லாம் அசை போட்டபடி நடந்தது
    மறக்க முடியாது. தங்களது பதிவுகள் என்னை அந்த காலத்திற்கு இட்டு சென்று விட்டது
    அதுவும் அந்த காலத்தில் எதுகை மோனை எல்லாம் அறிந்து பாடலை
    ரசித்த விதமே தனிதான். வெறும் பாடல்வரிகளுக்காக கைதட்டல் வாங்கியவர்
    இவராகத்தான் இருக்கும்
    போலீஸ்காரன் மகள் போன்றபடங்களின் பாடல்களில்.
    இனியன் பாலாஜி/////

    அந்த மாபெரும் கவிஞரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
    மறக்க முடியாத நெஞ்சைத் தொடும் நிகழ்வு அது. பகிர்விற்கு நன்றி நண்பரே! இப்போது உள்ள பதிவிற்கு நேரம் சரியாக உள்ளது. ஓராண்டு செல்லட்டும் செய்துவிடலாம்.

    ReplyDelete
  20. நன்றி வாத்தியாரே..!

    பாடத்தைத் தொடருங்கள்..!

    ReplyDelete
  21. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    நன்றி வாத்தியாரே..!
    பாடத்தைத் தொடருங்கள்..!////

    ஆகா, நீங்கள் சொல்லிவிட்டீர்கள். செய்துவிடுகிறேன் தமிழரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com