மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.1.10

Doubt: பாட்டியாலா சுடிதாரும் காஞ்சிபுரம் பட்டுச்சேலையும்!

-----------------------------------------------------------------
Doubt: பாட்டியாலா சுடிதாரும் காஞ்சிபுரம் பட்டுச்சேலையும்!

Doubts: கேள்வி பதில் பகுதி ஒன்பது!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஒன்பது!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.36
சுந்தரி பரமசிவம்

1. மாந்திக்கு வர்கோத்தமம் உண்டு என்றால் அதன் செயல்பாடு என்ன?

தமிழ்நாட்டில் பல ஜோதிடர்கள் மாந்தியை ஆட்டத்திற்கு சேர்த்துக் கொள்வதில்லை! அதில் அவருக்கு பெளலிங் சான்ஸ் பத்து ஓவர்களுக்கு மேல் (அதாவது வர்கோத்தம சான்ஸ்) இருக்கிறதா என்று தெரியவில்லை!
உங்கள் சந்தோஷத்திற்காக இருப்பதாக வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்? கள்குடித்த குரங்கின் ஆட்டம்தான்! பெளன்சராக வந்து விழுகும். ஹெல் மட்டை யும் மீறி மண்டையில் அடிபடும் வாய்ப்பு ஜாதகனுக்கு அப்போது கிடைக்கலாம்!

2.புனர்பூ தோஷம் என்பது சந்திரன் சனியின் சேர்க்கை இது எப்பொழுதும் துன்பத்தை தான் கொடுக்குமா? கடமையை செய்யக் கடும் போராட்டத்தை கொடுப்பதுடன் தள்ளி தள்ளி வைத்து விடுகிறதே? இதன் தாக்கம் லக்கனத்திற்கு ஏற்றார்ப் போல மாறுபடுமா?

முதலில் புனர்பூ தோஷம் என்பது என்னவென்று பார்ப்போம்

சந்திரனுக்கும், சனிக்கும் ஜாதகத்தில் உள்ள தொடர்பு (குறிப்பாக சேர்க்கை அல்லது பரிவர்த்தனை) திருமணவாழ்வில் பல சிரமங்களை/துன்பங்களை உண்டாக்கும். தலைவலி, பய உணர்வு, பரபரப்பு, படபடப்பு போன்றவையும் அதன் உப விளைவுகள்தான்

(Connection between Saturn and Moon is known as Punarphoo Dosham. Whenever Saturn has got any connection what-so-even with Moon, there will be some obstacle or impediment, not only during negotiation but also at the time of fixation and even at the time of celebration of the marriage. This connection between Moon and Saturn causes delay)

இந்த அமைப்பில் சூரியன் உள்ளே நுழைந்தால் (அந்த இரண்டு கிரகங்களுடன் சூரியன் இருந்ததாலும், அல்லது அவைகளைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும்) புனர்பூ தோஷம் நீங்கிவிடும்.

connection of Sun with the Punarphoo causing planets (Saturn and Moon) results in cancellation of Punarphoo. Precisely speaking, cancellation takes place due to following conditions:

1. Sat or Moon or both in association with Sun in one sign (could involve even two houses)
2. Sat or Moon in the star of Sun
3. Sun is in a star, lord of which is near either Moon or Saturn.
4. Sun is in the star of either Moon or Sat
5. Any planet near the Moon or Saturn, but is posited in the star of Sun
6. Sat or Moon is in the sub-sub of Sun

3.சிம்ம லக்கனகாரர்களுக்கு சந்திரன் 12ஆம் அதிபதி சனி 6 ஆம் அதிபதி இவர்கள் இருவரும் சேர்ந்து மீனத்தில் 8ல் விற்றிருந்தால் அவை புனர்பூ தோஷத்தில் சேருகிறதா அல்லது விபரித ராஜயோகத்தில் சேருகிறதா? விபரித ராஜயோகம் புனர்பூ தோஷத்தினால் செயலிழந்து விடுகிறாதா? அப்படி செயல் இழக்க வில்லையென்றால் சந்திர மகா தசை/சனி மகாதசையில் விபரீத ராஜயோகத்தைப் பெற முடியுமா?

ஒரு படத்தில் நாகேஷ் சொல்வார்: ”மேலாக ஊற்றினால் ரசம். கலக்கி ஊற்றினால் சாம்பார்” ஒரு அமைப்பில் யோகமும், தோஷமும் கலந்த பலன் எனும் போது இரண்டுமே இருக்கும். ஒரு ஜாதகத்திற்கு 36 விதமான பலன்கள் உண்டு. திருமண வாழ்க்கை என்பது அதில் ஒன்று. கணவன்/மனைவி என்பது இரண்டு. அதில் கிடைக்கும் இன்பம்/துன்பம் என்பது மூன்று. அந்த மூன்றை மட்டும்தான் புனர்பூ கையில் எடுத்துக்கொள்ளூம். அந்த மூன்றைத்தவிர மீதம் 33 இருக்கிறதே அதில் வேறு ஒரு மூன்றை வி.ரா. யோகம் கையில் எடுத்துக் கொள்ளும். அதற்கான நன்மைகளைச் செய்யும்.

ஆகவே குழப்பிக்கொள்ளாதீர்கள். பாட்டியாலா சுடிதார் வேறு, காஞ்சிபுரம் பட்டுச் சேலை வேறு. இரண்டும் ஆடைகளே! ஆனால் இரண்டையும் ஒன்றாக உடுத்திக்கொள்ள முடியாது. விளக்கம் போதுமா சகோதரி?
---------------------------------------------------------
email No.37
ஆர். கதிரவன்

1. செய்கின்ற வேலைக்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லை... எப்படி இது...?(மருத்துவம் சம்பந்தமாக படித்துவிட்டு கணிணியில் வேலை செய்து கொண்டு இருப்பவர்கள் நிறையபேர்)

அதைத்தான் கிரகக் கோளாறு என்பார்கள் (கிளி போன்ற மனைவி இருக்கும் போது, குரங்கு போன்ற தொடுப்புடன் அலைபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தக் கணக்கில் இது வரும்) அதை வைத்துப் பத்துப் பக்கங்கள் கட்டுரை எழுதலாம். இப்போது நேரம் இல்லை. முடிந்தால் பின் ஒரு நாளில் எழுதுகிறேன்

2. ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கும், தொழிலாகச் செய்வதற்கும், ஆராய்ச்சி மட்டுமே செய்யவும் தனித்தனியான அமைப்புகள் உண்டா? புதனின் ஆதிபத்தியம் வேண்டும் என்று சொல்லி விடாதீர்கள்...(சில ஜோதிடர்கள் சொல்வதனால் கேட்கிறேன்)

கூட்டு, அவியல், பொரியல் என்று சமையலில் காய்களின் எண்ணிக்கையும் அளவும் வேறு படுவதைப் போல, இதிலும் வேறுபாடு உண்டு. புதன் நன்றாக இருந்தால் கற்றுக் கொள்ளலாம். புதனும் குருவும் நன்றாக இருந்தால் கற்றுக்கொண்டு ஆராய்ச்சி செய்யலாம். அவர்கள் இருவரோடு, சனி அல்லது பத்தாம் இடத்து அதிபதியும் கலக்கலாக இருந்தால் ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்யலாம். செய்து காசு பார்க்க வேண்டுமென்றால் அந்த அமைப்புடன், 2 & 11ஆம் வீடுகளும் நன்றாக இருக்க வேண்டும்.

என்ன தலை சுற்றுகிறதா?
தலை சுற்றாமல் இருக்க 3 & 6ஆம் இடத்து அதிபதிகள் வலிமையாக இருக்க வேண்டும்:-))))

3. கேது திசை எல்லாருக்குமே ஞானத்தை மட்டுமே தருமா?(அனுபவித்துத்தான் ஆகவேண்டும். தீய பலன்கள் மட்டுமே என்கின்றனர்.)

மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததைப்போல கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். எல்லோருக்கும் எப்படி புத்தி வரும்? எப்படி அடிபட்டாலும் திருந்தாத ஞான சூன்யங்கள் பல உள்ளன. அவர்களுக்குக் கடைசி வரையில் ஞானம் வராது. ஜாதகத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரமடைந்திருப்பவர்களுக்கு, குறிப்பாகப் புதன் கெட்டிருப்பவர்களுக்குப் புத்தி வராது. புத்தி இருந்தால் அல்லவா ஞானம்?

4. வாழ்க்கையின் இறுதியில் வரும் சுக்ரதிசை மட்டுமே நன்மைகளை அளிக்குமா? (சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதற்கு நானே உதாரணம்)

இறுதிக் காலத்தில் சுக்கிரதசை வந்து என்ன பயன் சொல்லுங்கள்? 20 - 30ற்குள் ஸ்டார்ட்டாகி 40 - 50 க்குள் முடிந்து பலன்கள் கிடைத்தால்தானே ஜாதகன் அவற்றை அனுபவிக்க முடியும்? ஒரு பெண்ணிற்கு எப்போது திருமணம் செய்வது - 55 வயதிற்குப் பிறகா? அதுபோலத்தான் சுக்கிரதசைப் பலன்களும்!

5. அஷ்டவர்க்கங்களினால் சரியான பலன்களை அறிவிக்கமுடியாது என்கிறார் என் நண்பர் ஒருவர் (ஜோதிடர்) அப்படியா?

எதைவைத்துச் சரியான பலனைச் சொல்ல முடியும் என்று அவரிடமே கேளுங்கள். கேட்டு அடுத்த மின்னஞ்சலில் சொல்லுங்கள். நம் வகுப்பறை மாணவர்களுக்கு அது பயனளிக்குமா என்று பார்ப்போம்!
-------------------------------------------------------------------
email No.38
அருள் நிதி

வணக்கம் ஐயா,

எனது சந்தேகங்கள்...

1.கோள்சாரத்தின் பலன் அறிய லக்னத்தை கணக்கில் எடுக்காமல் சந்திரராசியை கணக்கில் எடுப்பது ஏன்?

கோள்சாரம் என்பது இன்றையத் தேதியில் வானில் கிரகங்கள் இருக்கும் நிலைமையைக் காட்டுவது!. சந்திரன் எண்ணிக்கையில் ஒருவர். லக்கினங்கள் பன்னிரெண்டு. எதைவைத்துக் கணக்கிடுவது சுலபமாக இருக்கும் நீங்களே சொல்லுங்கள். கோள்சாரத்தில் Man of the match award எப்போதும் சந்திரனுக்குத்தான். மற்றவர்கள் எல்லாம் (லக்கினங்கள் எல்லாம்) டீம் மேட்ஸ். பரிசுத்தொகையை அல்லது கிடைக்கும் Champagnes பாட்டிலைப் பங்கு வைத்துக்கொள்வார்கள். அவ்வளவுதான்!

2.சனிப்பெயர்ச்சி பற்றி சொல்லும் போது சில மாணவர்களின் பின்னூட்டங்களுக்கு அவர்களின் ராசி சக்கரத்தில் உள்ள லக்னத்தை வைத்து பலன் சொல்லி இருந்தீர்கள்...ஆனால் பொதுவாக ராசியை வைத்தும் பலன் சொல்லி இருந்தீர்கள்...இதில் எது சரியான கணிப்பை சொல்லும்?

அஷ்டமச்சனி, ஏழரைச் சனி போன்ற அவஸ்தைகளுக்கு ராசியைவைத்துப் பலனைப் பார்க்க வேண்டும். தசா/புத்திகளுக்கு லக்கினத்தில் இருந்து அவர் எந்த வீட்டிற்கு அதிபதி எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை வைத்துப் பலனைப் பார்க்க வேண்டும். துணியின் நீள அகலத்தை ஸ்கேலால் அளக்கிறோம். தண்ணீரை லிட்டரால் அளக்கிறோம். அதுபோலத்தான் இதுவும். ஒரே அளவுமுறை எனபது கிடையாது!

3.பிறந்த நேர திருத்தம் என்பது என்ன?கணினி மென் பொருள் இதை செய்யுமா?

நாட்டின் பொது நேரமும் (Standard Time) அந்த நாட்டில் ஜாதகன் பிறந்த ஊரின் நேரமும் மாறுபடும். நீங்கள் கேட்கும் நேர திருத்தம் அதுவாக இருந்தால், அதைக் கணினி மென் பொருள் செய்து கொள்ளும். கவலை வேண்டாம்!
---------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

58 comments:

  1. ஆச்சர்யமாக உள்ளது!! சகோதரி சுந்தரி நிறைய சோதிட அறிவுள்ளவர் போல்
    உள்ளதே!அவருடைய பின்னூட்டங்களைப் பார்த்து நான் கொண்டிருந்த அபிப்ராயங்களை மாற்றிக்கொண்டேன்.புனர்ப்பூ யோகம் என்று கேட்டு நல்ல பதிலைப் பெற்று விட்டார்.சந்திரன், சனி அவர் ஜாதக அமைப்புத்தான் என்று நினக்கிறேன்.தமிழ்மண‌த்தில் பயனர் பதிவு செய்தேன்.வோட்டுப்போட உள்ளே
    செல்லத் தடையாக இன்டெர்னெட் எக்ஸ்ப்லோரெர் எக்ஸ்பீரியென்ஸ் எர்ரர் என்று காட்டி தளத்திற்கே திரும்பிவிடுகிறது. மீண்டும் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  2. ஐயா !!!

    அதிகாலைவணக்கம் .

    அலுவலக வேலை நேரத்தில், வேலை இல்லாத போது ஜோதிடம் படிக்க வேண்டி கூகிள் உதவியுடன் எதேர்த்சையாக வந்தேன், வாத்தியாரின்! வகுப்பறைக்குள்.

    அடியேனை செதுக்கிய சிர்ப்பியோ! (என்தந்தை) மின்னணு பொறியாளனாக செதுக்கியதால் தான் இன்று, சகலவசதியுடன் தொடர்புகொள்ளும் வசதியும் கிடைத்துள்ளது
    ஐயனை.!

    ஒருகுறையை தவிர, தமிழில் நல்லபுலன்மை இல்லாமல் போகிவிட்டது.

    ஐயா!

    இன்றுதான் " ஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்" என்ற தலைப்பில்

    (பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடை களில்)

    " வாழ்ந்த வாழ்க்கை சரித்திரத்தை படித்தேன்." !

    அதில் தாங்கள் சொல்லி உள்ளது அனைத்தும் உண்மை ஐயா!

    " குட்டி சுக்கிரன் .......கெடுக்கும்"!!! என்பது

    இது தங்களுக்காக துதி பாடுவதக்காகவோ! அல்லது மகிழ்விக்கவோ நான்! சொல்லவில்லை ஐயா !

    " இடுப்பு வலியும், முதுகுவலியும் பட்டால் தான் தெரியும்" என்பார்கள் ஐயா!

    (எ , கா)

    ஜாதகன் பிறந்தபோது புதன் திசை இருப்பு! 4 வருடம், 11 மாதம், 27 நாட்கள், கும்ப இலக்கணம், நீசபங்க ராஜயோக ஜாதகம் ஐயா!!!

    தாய் மாமன்கள் வீட்டில் (தாத்தா @ ஆச்சி வீட்டில் ) உண்மையிலே இராஜ வாழ்க்கை.

    பின்னர் வந்த கேது திசை 7 வருடம் பரவாயில்லை. திசை கடைசியில்
    (அம்மாவின் அப்பா ) தாத்தா! மரணம், குடும்பம் பிரிகின்றது. ஜாதகனுக்கு தந்தை முகம் தெரிகின்றது .

    பின்னர் வந்த (நீச) சுக்கிர திசை இருக்கே, ஐயா! நான் என்னவென்று சொல்லுவேன் ஐயா!

    காலங்கள் ஓடுகின்றது (நீச) சுக்கிர திசையில் ராகு புத்தியில் தந்தையின் திடீர் மரணம்,

    பூர்வீகம் (தந்தையின் சுய சொத்து) உள்பட குண்டு ஊசி விழ கூட இடம் இல்லை. போதாது என்று கடன்வேறு ஐயா !!!

    ஆதரிப்பார் பலர் இருந்தும், நாங்கள் கடனோட அனாதைகள் .

    அவப்பெயர், ஏமாற்றம், கல்வி வித்தையில் தடங்கள் (அதுவும் sine wave or sinusoid மாதிரியாக 10 வருடம் வீன்)

    (நீச) சுக்கிர திசையில், சனி புத்தியில் வாழ்கைக்கு வேண்டிய அஸ்திவாரம் கிடைக்கின்றது .

    (நீச) சுக்கிர திசையில், புதன் புத்தியில் அயல்நாட்டில், நல்ல நிலையில், அரசு உத்தியோகம்,

    சென்ற அனைத்தையும் இன்று ஜாதகன் உருவாக்கி கொண்டுள்ளான்! " இறைவன் அருள் கொண்டு"( பிரிந்து சென்ற உறவுகள் உள்பட) ஆசைகள் அனைத்தும் இருந்தும், ஒன்றும் அறியாது இன்றுவரை ஐயா!!!

    சூரியனையும், சந்திரனையும் (திசையை) எதிர்நோக்கி.........குருநாதனே !!!

    ReplyDelete
  3. ஆர்தார்த்தமான

    Guruveeeee>>>>..........

    Ponkaalai poluthu Vanakkam

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    புனர்பு தோஷம்
    பரிபூர்ண விளக்கம்.

    செய்யவேண்டிய மற்றும்
    செய்யும் வேலையும் வேறு வேறு.

    ஓட்டப்பானையில் ஓராயிரம் படி
    தேனை விட்டாலும் ஒருத்துளியும்
    தேங்காது அக்தொப்ப, வக்கிரப்
    புதனுக்(கேது) வின் ஞானம்.

    மாந்தியின் ஆட்டம் மட்டையைப்
    பிய்த்துகொண்டு வந்து
    மண்டையையும் உடைக்கும்.

    சுக்கிரன் வதென்னப் புண்ணியம் ரத்தமே
    சுண்டியப்பின்பு.

    கொள்ச்சாரம் என்பது சும்மா அதுக்கும்மேலே
    தசாப் புத்தி தான் யம்மா!! அதில் மீண்டும்
    ஒரு அழுத்தம்.

    கேள்வியால் வேள்வி செய்தவருக்கு
    நீவிர் தந்த
    விளக்கமும் விவேகமும் அருமை!
    பதிலைப் படித்த என்போன்றோருக்கு அதன்
    ஆக்கமும் தாக்கமும் ஒரு புதுமை!
    பொன்னான நேரத்தை
    உருக்கி வார்க்கும் உமது
    நோக்கமும் வேகமும் தரும் வலிமை.

    நன்றிகள் என் குருவே!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா

    நீங்கள் மேற்கோள் காட்டும் விதமே தனிதான். அதனால் பாடம் சுமையாக இல்லாமல் சுவையாக உள்ளது.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  6. காலை வணக்கம்,
    Thanks to sundari paramasivam, kathiravan, arul nidhi Super questions.

    ஆசானின் பதில்கள் சொலவே வேண்டாம் top class, நீச்ச புதன் ஜாதகனுக்கும் புரியும் :-) என் ஒரு இளிமை + உதாரணங்கள்.

    ReplyDelete
  7. ////Shyam Prasad said...
    மிக்க நன்றி

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  8. //////kmr.krishnan said...
    ஆச்சர்யமாக உள்ளது!! சகோதரி சுந்தரி நிறைய சோதிட அறிவுள்ளவர் போல்
    உள்ளதே!அவருடைய பின்னூட்டங்களைப் பார்த்து நான் கொண்டிருந்த அபிப்ராயங்களை

    மாற்றிக்கொண்டேன்.புனர்ப்பூ யோகம் என்று கேட்டு நல்ல பதிலைப் பெற்று விட்டார்.சந்திரன், சனி அவர்

    ஜாதக அமைப்புத்தான் என்று நினக்கிறேன்.தமிழ்மண‌த்தில் பயனர் பதிவு செய்தேன்.வோட்டுப்போட உள்ளே
    செல்லத் தடையாக இன்டெர்னெட் எக்ஸ்ப்லோரெர் எக்ஸ்பீரியென்ஸ் எர்ரர் என்று காட்டி தளத்திற்கே

    திரும்பிவிடுகிறது. மீண்டும் முயற்சிக்கிறேன்.////////

    உண்மை. இங்கே ஜோதிடம் அறிந்த பலரும் வந்து செல்கிறார்கள். அதை நான் அறிவேன். அதனால் ஒரு

    எச்சரிக்கை உணர்வோடுதான் பதில்களை எழுதுகிறேன். எனக்குத் தெரியாத எதையும் எழுதுவதில்லை.

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. வணக்கம் சார்,
    "ஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்" உங்களுடைய சிறு கதைக்கு vote பண்ணிட்டேன் sir in tamilmanam.net. Today's கேள்வி பதில் lesson is interesting with new informations. புதன் நீசம் ஆனால், or 6, 8, 12 இல் மறைந்தால் புத்தி இருக்காது, ஆனால் புதன் மீனத்தில் நீசபங்கம் ஆனால் புத்தி கூர்மை இருக்குமா சார்?

    Thanks
    Thanuja

    ReplyDelete
  10. //////kannan said...
    ஐயா !!!
    அதிகாலைவணக்கம் .
    அலுவலக வேலை நேரத்தில், வேலை இல்லாத போது ஜோதிடம் படிக்க வேண்டி கூகிள் உதவியுடன்
    எதேர்த்சையாக வந்தேன், வாத்தியாரின்! வகுப்பறைக்குள்.
    அடியேனை செதுக்கிய சிற்பியோ! (என்தந்தை) மின்னணு பொறியாளனாக செதுக்கியதால் தான் இன்று, சகலவசதியுடன் தொடர்புகொள்ளும் வசதியும் கிடைத்துள்ளது
    ஐயனை.! ஒருகுறையை தவிர, தமிழில் நல்லபுலமை இல்லாமல் போகிவிட்டது.
    ஐயா!
    இன்றுதான் " ஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்" என்ற தலைப்பில்
    (பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடை களில்)
    " வாழ்ந்த வாழ்க்கை சரித்திரத்தை படித்தேன்." !
    அதில் தாங்கள் சொல்லி உள்ளது அனைத்தும் உண்மை ஐயா!
    " குட்டி சுக்கிரன் .......கெடுக்கும்"!!! என்பது
    இது தங்களுக்காக துதி பாடுவதக்காகவோ! அல்லது மகிழ்விக்கவோ நான்! சொல்லவில்லை ஐயா !
    " இடுப்பு வலியும், முதுகுவலியும் பட்டால் தான் தெரியும்" என்பார்கள் ஐயா!
    (எ , கா).......................................//////

    அம்மாடியோவ், ஒரு பதிவு அளவிற்கிற்கு எழுதியிருக்கிறீரே ஸ்வாமி! நல்லா இரும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. /////kannan said...
    ஆர்தார்த்தமான
    Guruve..........
    Ponkaalai poluthu Vanakkam/////

    இன்னும் கரும்பு வாங்கவில்லை! அதற்குள் பொங்கல் வாழ்த்தா? சரி, ஏற்றுக்கொள்கிறேன். நன்றி!

    ReplyDelete
  12. /////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம், புனர்பு தோஷம் பரிபூர்ண விளக்கம். செய்யவேண்டிய மற்றும்
    செய்யும் வேலையும் வேறு வேறு. ஓட்டப்பானையில் ஓராயிரம் படி தேனை விட்டாலும் ஒருத்துளியும்
    தேங்காது அக்தொப்ப, வக்கிரப் புதனுக்(கேது) வின் ஞானம். மாந்தியின் ஆட்டம் மட்டையைப்
    பிய்த்துகொண்டு வந்து மண்டையையும் உடைக்கும். சுக்கிரன் வந்தென்னப் புண்ணியம் ரத்தமே
    சுண்டியப்பின்பு.கோள்ச்சாரம் என்பது சும்மா அதுக்கும்மேலே தசாப் புத்தி தான் யம்மா!! அதில் மீண்டும்
    ஒரு அழுத்தம். கேள்வியால் வேள்வி செய்தவருக்கு நீவிர் தந்த விளக்கமும் விவேகமும் அருமை!
    பதிலைப் படித்த என்போன்றோருக்கு அதன் ஆக்கமும் தாக்கமும் ஒரு புதுமை! பொன்னான நேரத்தை
    உருக்கி வார்க்கும் உமது நோக்கமும் வேகமும் தரும் வலிமை.
    நன்றிகள் என் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  13. /////Success said...
    வணக்கம் ஐயா
    நீங்கள் மேற்கோள் காட்டும் விதமே தனிதான். அதனால் பாடம் சுமையாக இல்லாமல் சுவையாக உள்ளது.
    வாழ்க வளமுடன்./////

    எல்லாம் உங்களுக்காகத்தான். அழகாகவும், சுவையாகவும், ருசியாகவும் இல்லாவிட்டால் எதுவுமே ரசிக்காது!
    கசந்துவிடும்!

    ReplyDelete
  14. ////சிங்கைசூரி said...
    காலை வணக்கம்,
    Thanks to sundari paramasivam, kathiravan, arul nidhi Super questions.
    ஆசானின் பதில்கள் சொலவே வேண்டாம் top class, நீச்ச புதன் ஜாதகனுக்கும் புரியும் :-) என்ன ஒரு எளிமை + உதாரணங்கள்./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  15. ////Thanuja said...
    வணக்கம் சார்,
    "ஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்" உங்களுடைய சிறு கதைக்கு vote பண்ணிட்டேன் sir in tamilmanam.net. Today's கேள்வி பதில் lesson is interesting with new informations. புதன் நீசம் ஆனால், or 6, 8, 12 இல் மறைந்தால் புத்தி இருக்காது, ஆனால் புதன் மீனத்தில் நீசபங்கம் ஆனால் புத்தி கூர்மை இருக்குமா சார்?
    Thanks
    Thanuja////

    இருக்கும். புத்திக்கூர்மைக்கு (keen intelligence) இன்னொருவரின் ஆசியும் வேண்டும். அவர் குரு பகவான்!உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. Kmr.krishnan
    I also had the same problem. I opened Tamilmanam in Firefox and voted.Firefox browser is a small programme and is very stable.

    ReplyDelete
  17. அனைத்துக் கிரகங்களுக்கும்
    7 -ஆம் பார்வை நேரடிப் பார்வை
    அவைகள் போக
    குருவிற்கு 5-ஆம், 9 -ஆம் பார்வையும்.
    சனிக்கு -3ஆம், 10-ஆம் பார்வையும்
    செவ்வாய்க்கு 4-ஆம், 8-ஆம் பார்வையும்,
    சூரியன்- ?,?
    சந்திரன்,?,?
    புதன்-?,?
    சுக்கிரன்- ?,?

    இவர்களுக்கு 7-ஐ தவிர வேறு பார்வைகள் யாவை?

    நன்றிக குருவே!

    ReplyDelete
  18. வணக்கம் அய்யா.
    பதில்கள் அருமை.
    காஞ்சிபுரம் சேலை,சுடிதார்,
    லிட்டர்,மீட்டர்,
    உதாரணங்கள் கலக்குறீங்க சாமி.
    ஜனவரி பொறந்தாச்சு.
    பதிவர் சந்திப்பு எப்பொழுது?
    புளியோதரை ரெடி.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  19. அய்யா இனிய காலை வணக்கம்,

    கலைகட்டுகிரது கேள்வி பதில் பிரிவு ,,,,அதிலும் பாட்டியாலா சுடிதார் உதாரணம் அருமை ,,,,இந்த புனர்பூ தோசம் அம்சத்தில் இருந்தாலும் வேலய காட்டுமா அய்யா ?

    நன்றி வணக்கம்.....

    ReplyDelete
  20. krish said...
    Kmr.krishnan
    I also had the same problem. I opened Tamilmanam in Firefox and voted.Firefox browser is a small programme and is very stable./////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  21. /////Alasiam G said...
    அனைத்துக் கிரகங்களுக்கும் 7 -ஆம் பார்வை நேரடிப் பார்வை அவைகள் போக குருவிற்கு 5-ஆம், 9 -ஆம் பார்வையும். சனிக்கு -3ஆம், 10-ஆம் பார்வையும் செவ்வாய்க்கு 4-ஆம், 8-ஆம் பார்வையும் சூரியன்- ?,? சந்திரன்,?,? புதன்-?,? சுக்கிரன்- ?,? இவர்களுக்கு 7-ஐ தவிர வேறு பார்வைகள் யாவை?
    நன்றி குருவே!/////

    சூரியன்,சந்திரன்,புதன்,சுக்கிரன், ஆகிய கிரகங்களுக்கு 7ஆம் பார்வை மட்டுமே. வேறு பார்வை கிடையாது!
    கண்ணில் பட்டை கட்டப்பட்டுள்ளது. குதிரைக்குக் கட்டுவார்களே அதுபோல:-))))

    ReplyDelete
  22. /////thirunarayanan said...
    வணக்கம் அய்யா. பதில்கள் அருமை.
    காஞ்சிபுரம் சேலை,சுடிதார், லிட்டர்,மீட்டர்,
    உதாரணங்கள் கலக்குறீங்க சாமி. ஜனவரி பொறந்தாச்சு.
    பதிவர் சந்திப்பு எப்பொழுது? புளியோதரை ரெடி.
    நன்றி அய்யா./////

    பதிவர் சந்திப்பு, புளியோதரை இரண்டையும் புத்தக வெளியீட்டின்போது வைத்துக்கொள்வோம் நாராயணனரே!

    ReplyDelete
  23. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    கலைகட்டுகிரது கேள்வி பதில் பிரிவு ,,,,அதிலும் பாட்டியாலா சுடிதார் உதாரணம் அருமை ,,,,இந்த புனர்பூ தோசம் அம்சத்தில் இருந்தாலும் வேலையைக் காட்டுமா அய்யா ?
    நன்றி வணக்கம்.....////

    பிறகு நவாம்சம் எதற்கு? அம்சத்தில் இருந்தாலும் வேலையைக் காட்டும். Navamsam is the magnified version of a Rasi Chart.

    ReplyDelete
  24. /////jee said...
    Dear sir,
    good explanations.
    Thank you sir./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  25. Ponkaalai poluthu Vanakkam/////

    இன்னும் கரும்பு வாங்கவில்லை! அதற்குள் பொங்கல் வாழ்த்தா? சரி, ஏற்றுக்கொள்கிறேன். நன்றி!////

    அவர் சொன்னது பொன்காலைப் பொழுது வணக்கம். நல்லா..... எழுத்து கூட்டி..... படிங்க சார். நானும் க்ரிஷ் சொன்னதுபோல முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  26. ஐயா,

    என்னுடைய சந்தேகங்களுக்கான விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    புணர்பூ தோசத்திற்கு விதிவிலக்கு உண்டு என்பதை தெளிவாக KP சிஸ்டத்தை மேற்கோள் காட்டி விளக்கி இருந்தீர்கள்.நீங்கள் vedic as well as KP இரண்டிலுமே தேர்ந்தவர் என்பதை இது காட்டுகிறது.உங்கள் மாணாக்கர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை அடைகிறேன்.

    நன்றி..நன்றி

    ReplyDelete
  27. பொறுமையாகப் படித்தால்தான் மண்டையில் ஏறும் போலிருக்கிறது..!

    வீட்டிற்குச் சென்று படிக்கிறேன்..!

    பதில்களை அளிக்க ஐயா மிகுந்த பிரயத்தனப்படுவதைப் போல் தெரிகிறது..

    கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே..?

    ReplyDelete
  28. அன்பு அய்யா தங்களின் பதில்கள் மிக அருமையான, அற்புதமான விளக்கங்களுடன் இருகின்றன மிக்க நன்றி
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  29. தெய்வமே !!!
    தெய்வமே !!!!!!!!!!!
    நன்றி! சொல்வேன்
    தெய்வமே !!!

    பொங்கல் நல் வாழ்த்தும் சொல்வேன்
    தெய்வமே !!!

    சகல தோழர்கள் மற்றும்
    தோழிகளுக்கும்,

    "தமிழர் திருநாளாம்"!"தைபொங்கல்"! நன்னாள் நல்வாழ்த்துக்கள்.!

    பொங்கலோ பொங்கல் !!!

    பொங்கலோ பொங்கல் !!!

    பொங்கலோ பொங்கல் !!!

    ReplyDelete
  30. Uma said...
    Ponkaalai poluthu Vanakkam/////
    இன்னும் கரும்பு வாங்கவில்லை! அதற்குள் பொங்கல் வாழ்த்தா? சரி, ஏற்றுக்கொள்கிறேன். நன்றி!////
    அவர் சொன்னது பொன்காலைப் பொழுது வணக்கம். நல்லா..... எழுத்து கூட்டி..... படிங்க சார். நானும் க்ரிஷ் சொன்னதுபோல முயற்சிக்கிறேன்.////

    இல்லை அம்மணி (சகோதரி), எனக்குப் பொங்கல் mood வந்துவிட்டது. அதுதான் கோளாறு. பொங்கலுக்கு எத்தனை நாள் (வகுப்பறைக்கு) விடுமுறை அளிக்கலாம் சொல்லுங்கள்

    ReplyDelete
  31. /////Arul said...
    ஐயா,
    என்னுடைய சந்தேகங்களுக்கான விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    புணர்பூ தோசத்திற்கு விதிவிலக்கு உண்டு என்பதை தெளிவாக KP சிஸ்டத்தை மேற்கோள் காட்டி விளக்கி இருந்தீர்கள்.நீங்கள் vedic as well as KP இரண்டிலுமே தேர்ந்தவர் என்பதை இது காட்டுகிறது.உங்கள் மாணாக்கர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை அடைகிறேன்.
    நன்றி..நன்றி//////

    இல்லை ஜோதிடத்தைப் பொறுத்தவரை நானும் மாணவன்தான், இன்னமும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்!
    முழுத்தேர்ச்சியடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்!

    ReplyDelete
  32. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    பொறுமையாகப் படித்தால்தான் மண்டையில் ஏறும் போலிருக்கிறது..!
    வீட்டிற்குச் சென்று படிக்கிறேன்..!
    பதில்களை அளிக்க ஐயா மிகுந்த பிரயத்தனப்படுவதைப் போல் தெரிகிறது..
    கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே..?/////

    உங்களுக்குப் (மாணவர்களுக்கு) பதில் சொல்வதே ஓய்வுதான் (ரிலாக்சேசன்) உண்மைத்தமிழரே!
    இருந்தாலும் உங்களுடைய கரிசனத்திற்கு நன்றி!

    ReplyDelete
  33. ////ஜீவா said...
    அன்பு அய்யா தங்களின் பதில்கள் மிக அருமையான, அற்புதமான விளக்கங்களுடன் இருகின்றன மிக்க நன்றி, அன்புடன் ஜீவா////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  34. ////kannan said...
    தெய்வமே !!! தெய்வமே !!!!!!!!!!! நன்றி! சொல்வேன் தெய்வமே !!!
    பொங்கல் நல் வாழ்த்தும் சொல்வேன் தெய்வமே !!!
    சகல தோழர்கள் மற்றும் தோழிகளுக்கும்,
    "தமிழர் திருநாளாம்"!"தைபொங்கல்"! நன்னாள் நல்வாழ்த்துக்கள்.!
    பொங்கலோ பொங்கல் !!! பொங்கலோ பொங்கல் !!! பொங்கலோ பொங்கல் !!!//////

    விட்டால், உட்காரவைத்துத் தலையில் சூடம் ஏற்றிவிடுவீர் போலிருக்கிறதே சாமி!
    இத்துடன் விட்டதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  35. EN JADHGATHAI ELUDHIYAVAR MANDHIai KANAKIL SAERKAVILLAI POLUM.. JADHAGATHIL MANDHIai KANAVILLAI AYYA...

    ReplyDelete
  36. சார் வணக்கம்,
    தாங்களின் பதில நன்றாக் இருந்தது அதுமட்டும் இல்லாமல் காஞ்சி பட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் மற்ற ப்ட்டுகள் பிடிக்காது நீங்க நல்ல தலைப்பு தந்திருக்கிறீங்க‌
    ரொம்ப நன்றி சார். என் தந்தையிடமிருந்து நான் பாசத்தையும் அறிவையும் பெறவில்லை அப்ப என்று கூப்பிட்டலே சனினே எழவு எடுக்க கூப்பிடதே என்று அடிப்பார். நீங்க பொறுமையா,அன்பா,தத்துவமா நல்ல அறிவை தருகிறீர்கள்
    மேலும் கோபம்,பிடிவாதம, எல்லாத்தையும் விட்டு விட்டேன். தங்கள் பதிவு
    என்னை மாற்றி கொண்டு வ்ருகிறது.
    சுந்தரி

    ReplyDelete
  37. ஐயா வணக்கம்...!
    புனர்பூ தோஷம் பற்றிய தங்கள் விளக்கம் மிக அருமை..! இந்த தோஷம் மணவாழ்க்கை சம்மந்தப் பட்டது என்பதால் மேலும் ஒரு சந்தேகம்.. நவாம்சத்திலும் இதன் பாதிப்பு உண்டா குருதேவா...? இந்த தோஷம் பற்றி கேள்வி கேட்ட சகோதரி சுந்தரிக்கும் நன்றியும் பாராட்டுக்களும்...
    மிக்க நன்றியுடன்
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  38. ///kannan said...
    தெய்வமே !!! தெய்வமே !!!!!!!!!!! நன்றி! சொல்வேன் தெய்வமே !!!
    பொங்கல் நல் வாழ்த்தும் சொல்வேன் தெய்வமே !!!
    சகல தோழர்கள் மற்றும் தோழிகளுக்கும்,
    "தமிழர் திருநாளாம்"!"தைபொங்கல்"! நன்னாள் நல்வாழ்த்துக்கள்.!
    பொங்கலோ பொங்கல் !!! பொங்கலோ பொங்கல் !!! பொங்கலோ பொங்கல் !!!//////

    விட்டால், உட்காரவைத்துத் தலையில் சூடம் ஏற்றிவிடுவீர் போலிருக்கிறதே சாமி!
    இத்துடன் விட்டதற்கு மிக்க நன்றி!///
    சகோதரர் கண்ணனுக்கு அப்பா உங்கள் பொங்கல் வாழ்த்து ரொம்ப நல்ல இருக்குது ரொம்ப இனித்தது பொங்கலைப் போல கரும்பை போல ரொம்ப நன்றி
    உங்களுக்கும் இதயம் கனிந்த‌ பொங்கல் வாழ்த்துகள்.
    சுந்தரி

    ReplyDelete
  39. kmr.krishnan said...

    ஆச்சர்யமாக உள்ளது!! சகோதரி சுந்தரி நிறைய சோதிட அறிவுள்ளவர் போல்
    உள்ளதே!அவருடைய பின்னூட்டங்களைப் பார்த்து நான் கொண்டிருந்த அபிப்ராயங்களை மாற்றிக்கொண்டேன்.புனர்ப்பூ யோகம் என்று கேட்டு நல்ல பதிலைப் பெற்று விட்டார்.சந்திரன், சனி அவர் ஜாதக அமைப்புத்தான் என்று நினக்கிறேன///
    சாகோதரர் கிருஷ்ணனுக்கு தங்களும்.வாத்தியாரும் ரொம்ப ஜோதிட ஞானம் பெற்றவர்கள் தாங்களிட்மிருந்து கற்று கொள்கிறேன். தினசரி உங்க web site(block) poவேன் படிப்பேன்
    சுந்தரி

    ReplyDelete
  40. http://www.planetarypositions.com/chartmatch.html

    indha thalathirku sendru porutham parthaen ayya.
    en jadhagathil 8il sevvai aanal magarthil ulladhu adhalal sevvai dhosham illai.
    nan maer kooriya thalathil porutham partha podhu sevvai dhosam undu endru vandhadhu ayya..
    edhai nan sari endru eduthukolvadhu..

    ReplyDelete
  41. ////சிங்கைசூரி said...
    காலை வணக்கம்,
    Thanks to sundari paramasivam, kathiravan, arul nidhi Super questions.
    ஆசானின் பதில்கள் சொலவே வேண்டாம் top class, நீச்ச புதன் ஜாதகனுக்கும் புரியும் :-) என்ன ஒரு எளிமை + உதாரணங்கள்./////
    Dear Brother,
    Ok, thanks
    sundari

    ReplyDelete
  42. ////KARTHIK said...
    EN JADHGATHAI ELUDHIYAVAR MANDHIai KANAKIL SAERKAVILLAI POLUM.. JADHAGATHIL MANDHIai KANAVILLAI AYYA.../////

    காணாவிட்டால் விட்டு விடலாமா? நீங்கள் உங்கள் Birth Details ஐ வைத்துத் தேடிப்பிடியுங்கள்

    ReplyDelete
  43. /////sundari said...
    சார் வணக்கம்,
    தாங்களின் பதில நன்றாக் இருந்தது அதுமட்டும் இல்லாமல் காஞ்சி பட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் மற்ற ப்ட்டுகள் பிடிக்காது நீங்க நல்ல தலைப்பு தந்திருக்கிறீங்க‌
    ரொம்ப நன்றி சார். என் தந்தையிடமிருந்து நான் பாசத்தையும் அறிவையும் பெறவில்லை அப்ப என்று கூப்பிட்டலே சனினே எழவு எடுக்கக் கூப்பிடாதே என்று அடிப்பார். நீங்க பொறுமையா,அன்பா,தத்துவமா நல்ல அறிவை தருகிறீர்கள் மேலும் கோபம்,பிடிவாதம, எல்லாத்தையும் விட்டு விட்டேன். தங்கள் பதிவு
    என்னை மாற்றி கொண்டு வருகிறது.
    சுந்தரி///

    வயது ஏற ஏற பக்குவம் வரும். அந்தப் பக்குவம்தான் உங்களை முழுமையாக மாற்றும். வாத்தியாரின் சொல் அல்ல! வாத்தியாரின் சொல்லால் என்றால், என்னுடைய பதிவைப் படிக்கும் அத்தனை பேருக்கும் உங்களுக்கு ஏற்பட்டதுபோல மனமாற்றம் ஏற்படவேண்டும்! சாத்தியமாகுமா?

    ReplyDelete
  44. /////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    புனர்பூ தோஷம் பற்றிய தங்கள் விளக்கம் மிக அருமை..! இந்த தோஷம் மணவாழ்க்கை சம்மந்தப் பட்டது என்பதால் மேலும் ஒரு சந்தேகம்.. நவாம்சத்திலும் இதன் பாதிப்பு உண்டா குருதேவா...? இந்த தோஷம் பற்றி கேள்வி கேட்ட சகோதரி சுந்தரிக்கும் நன்றியும் பாராட்டுக்களும்...
    மிக்க நன்றியுடன்
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்///

    நவாம்சத்தில் இருந்தாலும் பாதிப்பு இருக்கும்! நீங்கள் நவாம்சத்தைப் பற்றி இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை என்று நினைக்கிறேன். Navamsam is the magnified version of a rasi chart!

    ReplyDelete
  45. தாங்கள் சொன்ன பதிலிலிருந்து நான் பல விஷயங்களைத் தெரிந்துக் கொண்டேன். ஜோதிடம் கற்றுக் கொள்வது சுலபம். ஆனால் மற்றவருக்கு பார்த்து பலன் சொல்வது என்பது சற்று கடினமானதுதான். என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். காரணம் 1) ஒரு விதியை வைத்துக் கொண்டு எல்லாருக்கும் பலன் காண முடியாது. 2) கிரகங்களின் காரகத்துவம் ஒன்றாக இருந்தாலும் ஆதிபத்தியம் வேறு வேறாக இருக்கும். 3) முன்வினை/பரம்பரை இவற்றைப் பொறுத்து பலன் மாறுபடும். இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம்.

    ReplyDelete
  46. இனிய காலை வணக்கம் ஐயா

    ReplyDelete
  47. //பொங்கலுக்கு எத்தனை நாள் (வகுப்பறைக்கு) விடுமுறை அளிக்கலாம் சொல்லுங்கள்//

    உங்களுக்கு என்ன சார், தமிழ்நாட்டில் பொங்கலுக்கு 3 நாள் லீவு விடுவிடுவிர்கள். இங்கே டெல்லியில் ஒரு நாள் கூட கிடையாது. நான்தான் ஒரு நாள் லீவு எடுக்கப் போறேன்.

    ReplyDelete
  48. வாத்தியாரின் சொல்லால் என்றால், என்னுடைய பதிவைப் படிக்கும் அத்தனை பேருக்கும் உங்களுக்கு ஏற்பட்டதுபோல மனமாற்றம் ஏற்படவேண்டும்! சாத்தியமாகுமா?////

    இல்லை உண்மைதான், பக்குவம் வர வயது ஒரு காரணம் என்றாலும், இந்த மாதிரி பக்குவம் உள்ளவர்களால் ஏற்படும் பாதிப்பும் உதவுகிறது. உங்கள் பிளாகிற்கு வரும் முன் ஓரளவு ஜோதிடம் பற்றிய அறிவு இருந்தாலும் அதைத்தவிர நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டேன். ஜோதிடம் தெரிந்திருந்தாலும் அதை கற்றுக்கொடுக்க ஒரு திறமை வேண்டும். அதுவும் மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில். அது உங்களிடம் நிறைய உள்ளது. என் தாத்தாவும் ஒரு சிறந்த ஜோதிடர். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள இயலாமல் போய்விட்டது. ஜோதிட ஆர்வம் 14 வயதிலிருந்தே இருந்தது. கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இப்போதுதான் உங்களால் கிடைத்தது. நேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் செய்யும் இந்த சேவை நிஜமாகவே பாராட்டிற்குறியது.

    ReplyDelete
  49. /////ananth said...
    தாங்கள் சொன்ன பதிலிலிருந்து நான் பல விஷயங்களைத் தெரிந்துக் கொண்டேன். ஜோதிடம் கற்றுக் கொள்வது சுலபம். ஆனால் மற்றவருக்கு பார்த்து பலன் சொல்வது என்பது சற்று கடினமானதுதான். என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். காரணம் 1) ஒரு விதியை வைத்துக் கொண்டு எல்லாருக்கும் பலன் காண முடியாது. 2) கிரகங்களின் காரகத்துவம் ஒன்றாக இருந்தாலும் ஆதிபத்தியம் வேறு வேறாக இருக்கும். 3) முன்வினை/பரம்பரை இவற்றைப் பொறுத்து பலன் மாறுபடும். இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம்./////

    உண்மைதான் ஆனந்த்! அதோடு பலன் சொல்லும் ஜோதிடருக்கும் நல்ல தசை நடக்க வேண்டும். அப்போதுதான் அவர்சொல்வது பலிக்கும்/எடுபடும்!:-))))

    ReplyDelete
  50. /////Kumares said...
    இனிய காலை வணக்கம் ஐயா!////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  51. /////Uma said...
    //பொங்கலுக்கு எத்தனை நாள் (வகுப்பறைக்கு) விடுமுறை அளிக்கலாம் சொல்லுங்கள்//
    உங்களுக்கு என்ன சார், தமிழ்நாட்டில் பொங்கலுக்கு 3 நாள் லீவு விடுவிடுவிர்கள். இங்கே டெல்லியில் ஒரு நாள் கூட கிடையாது. நான்தான் ஒரு நாள் லீவு எடுக்கப் போறேன்./////

    சொந்த ஊரை விட்டு வெளிப் பிரதேசங்களில் வசிக்கும் போது சில தியாகங்களைச் செய்துதான் ஆக வேண்டும். அது தவிர்க்க முடியாதது!

    ReplyDelete
  52. /////Uma said...
    வாத்தியாரின் சொல்லால் என்றால், என்னுடைய பதிவைப் படிக்கும் அத்தனை பேருக்கும் உங்களுக்கு ஏற்பட்டதுபோல மனமாற்றம் ஏற்படவேண்டும்! சாத்தியமாகுமா?////
    இல்லை உண்மைதான், பக்குவம் வர வயது ஒரு காரணம் என்றாலும், இந்த மாதிரி பக்குவம் உள்ளவர்களால் ஏற்படும் பாதிப்பும் உதவுகிறது. உங்கள் பிளாகிற்கு வரும் முன் ஓரளவு ஜோதிடம் பற்றிய அறிவு இருந்தாலும் அதைத்தவிர நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டேன். ஜோதிடம் தெரிந்திருந்தாலும் அதை கற்றுக்கொடுக்க ஒரு திறமை வேண்டும். அதுவும் மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில். அது உங்களிடம் நிறைய உள்ளது. என் தாத்தாவும் ஒரு சிறந்த ஜோதிடர். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள இயலாமல் போய்விட்டது. ஜோதிட ஆர்வம் 14 வயதிலிருந்தே இருந்தது. கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இப்போதுதான் உங்களால் கிடைத்தது. நேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் செய்யும் இந்த சேவை நிஜமாகவே பாராட்டிற்குறியது./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  53. புனர்பூ தோஷம் இருந்தால் என்ன பலன் என்கிற ஆசிரியரின் ஆங்கில விளக்கம் அப்படியே நடந்தது.
    ///not only during negotiation but also at the time of fixation and even at the time of celebration of marriage.. ///
    சகோதரி சுந்தரிக்கு நன்றி...

    ReplyDelete
  54. ///minorwall said...
    புனர்பூ தோஷம் இருந்தால் என்ன பலன் என்கிற ஆசிரியரின் ஆங்கில விளக்கம் அப்படியே நடந்தது.
    ///not only during negotiation but also at the time of fixation and even at the time of celebration of marriage.. ///
    சகோதரி சுந்தரிக்கு நன்றி...////

    தகவலுக்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  55. ஒரு குடும்பத்தில் யாருடைய ஜாதகத்திற்கு வலிமை அதிகம்?
    ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
    வியாழன், 10 டிசம்பர் 2009( 15:22 IST )

    ஒரு தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாக கணவரின் ஜாதகத்திற்கே வலிமை அதிகம். ஆனால் குழந்தைகள் பிறந்த பின்னர் அந்தக் குழந்தைகளின் ஜாதகமே பிரதானமாக வேலை செய்யும். இதில் ஆண்/பெண் என்ற பேதம் இல்லை.

    பிள்ளைகள் பிறந்த பின்னர் தாய், தந்தையர் ஜாதகத்தை பார்த்துக் பலன் கூறினால் சரியாக வராது. மாறாக பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்தே அந்த குடும்பத்தின் நலனைப் பற்றி கணிக்க வேண்டும்.

    ஒரு சில வீடுகளில் தந்தைக்கு மிகப்பெரிய யோக தசை நடக்கும், ஆனால் அவர் மகனுக்கு மிக மோசமான தசை நடந்து கொண்டிருக்கும். தந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தால், அவருக்கு வீடு வாங்கும் யோகம் இருக்கும். ஆனால் மகனின் ஜாதக அமைப்பு காரணமாக அவர் இருக்கும் வீட்டை விற்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பார்.

    எனவே, ஒரு குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வரை அந்தக் குடும்பத் தலைவரின் ஜாதகத்திற்கு வலிமை அதிகம். வாரிசுகள் வந்து விட்டால் அவர்களின் ஜாதகம்தான் குடும்பத்தின் ஏற்றத் தாழ்வுகளை முடிவு செய்யும். குறிப்பாக தலைப்பிள்ளையின் (முதல் வாரிசு) ஜாதகத்திற்கு வலிமை அதிகம்.

    இது என்ன சார் புது குழப்பம்?

    ReplyDelete
  56. /////ஈழத்துப் புயல் said...
    ஒரு குடும்பத்தில் யாருடைய ஜாதகத்திற்கு வலிமை அதிகம்?
    ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: வியாழன், 10 டிசம்பர் 2009( 15:22 IST )
    ஒரு தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாக கணவரின் ஜாதகத்திற்கே வலிமை அதிகம். ஆனால் குழந்தைகள் பிறந்த பின்னர் அந்தக் குழந்தைகளின் ஜாதகமே பிரதானமாக வேலை செய்யும். இதில் ஆண்/பெண் என்ற பேதம் இல்லை.
    பிள்ளைகள் பிறந்த பின்னர் தாய், தந்தையர் ஜாதகத்தை பார்த்துக் பலன் கூறினால் சரியாக வராது. மாறாக பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்தே அந்த குடும்பத்தின் நலனைப் பற்றி கணிக்க வேண்டும்.
    ஒரு சில வீடுகளில் தந்தைக்கு மிகப்பெரிய யோக தசை நடக்கும், ஆனால் அவர் மகனுக்கு மிக மோசமான தசை நடந்து கொண்டிருக்கும். தந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தால், அவருக்கு வீடு வாங்கும் யோகம் இருக்கும். ஆனால் மகனின் ஜாதக அமைப்பு காரணமாக அவர் இருக்கும் வீட்டை விற்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பார்.
    எனவே, ஒரு குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் வரை அந்தக் குடும்பத் தலைவரின் ஜாதகத்திற்கு வலிமை அதிகம். வாரிசுகள் வந்து விட்டால் அவர்களின் ஜாதகம்தான் குடும்பத்தின் ஏற்றத் தாழ்வுகளை முடிவு செய்யும். குறிப்பாக தலைப்பிள்ளையின் (முதல் வாரிசு) ஜாதகத்திற்கு வலிமை அதிகம்.
    இது என்ன சார் புது குழப்பம்?/////

    உங்களூக்கு உங்கள் ஜாதகம்தான் வலிமை. அதை மட்டும் பாருங்கள். கூட்டணிக்குப் பார்த்தால் எப்போதும் குழப்பம்தான் வரும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com