மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.5.08

ஜோதிட சூத்திரம் (Formula) No.1

ஜோதிட சூத்திரம் (Formula) No.1

ஜோதிடரிடம் செல்லும் அனைவரிடமுமே பொதுவான கேள்வி ஒன்று இருக்கும்!

அது: எப்போது சார் நல்ல நேரம்?

ஏன் இப்போது இருக்கும் நிலையில் என்ன குறை?

வாழ்க்கை சுவாரசியமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதனால்தான் அந்தக்
கேள்வி!

திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆக வேண்டும். திருமணம் ஆனவர்களுக்கு
ஒரு குழந்தை பிறக்க வேண்டும். குழந்தை பிறந்தவர்களுக்கு அது நோய் நொடியின்றி
எப்போதும் சிரித்து விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்களுக்கு அவர்கள்
சொன்னதைக் கேட்கும் மனைவி வேண்டும். பெண்களுக்கு மாமியார் மற்றும்
இன்லாக்களின் உபத்திரவம் இல்லாமல் இருக்க வேண்டும். அடுத்து கை நிறையச்
சம்பளம் வேண்டும். முப்பத்திரண்டு வயதிற்குள் சொந்த வீடு மற்றும் சொந்த வாகனம்
வேண்டும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம்
போன்ற நோய்கள் இல்லாமல் இருக்க வேண்டும். இப்படி எழுதிக் கொண்டே போகலாம்

மொத்தத்தில் நாம் நினைத்த தெல்லாம் நடக்க வேண்டும்!

நினைத்ததெல்லாம் எப்படி நடக்கும்?

நாம் என்ன லல்லு வீட்டுக் குழந்தைகளா? அல்லது மன்மோகன் வீட்டுக் குழந்தைகளா?

அவர்களைக் கேட்டால்தான் தெரியும் அவர்களுடைய பிரச்சினைகள் என்னவென்று?

அதைக் கேட்டால் அதைவிட நம்முடைய பிரச்சினைகளே பரவாயில்லை என்று
தோன்றும்.

பொதுவாக அத்தனை மனிதர்களும், பணம் இருந்தால் போதும் எல்லாப் பிரச்சினை
களையும் தீர்த்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மை
அதுவல்ல! பணத்தால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் எத்தனையோ இருக்கின்றன!

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு பணத்தை வைத்து உங்களால் குழந்தைப் பேற்றைக்
கொடுக்க முடியுமா?

முடியாது! முடியவே முடியாது!

அட்லீஸ்ட் அவர்களுடைய மன உளைச்சலைப் போக்க முடியுமா? முடியாது?

இநதச் சமூகம் அவர்களை எத்தனை கேள்விகள் கேட்கின்றன என்பதாவது உங்களுக்குத்
தெரியுமா? தெரியாது!
---------------------------------------------------------------------------------------------
சரி பாடத்திற்கு வருகிறேன். ஒரு ஜாதகத்தைப் பார்த்து அவருக்கு அல்லது அவளுக்குக்
குழந்தை பாக்கியம் உள்ளதா என்று சொல்ல முடியுமா?

முடியும்!

அதற்குத்தான் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது இருவருக்கும் மகேந்திரப்
பொருத்தம் என்னும் மக்கட் பொருத்தப் பேறு உள்ளதா என்று பார்த்து
திருமணத்தை நிச்சயம் செய்வார்கள்.

அஷ்டகவர்க்கத்திலும் அதற்கு ஒரு வழி உள்ளது.

ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, குழந்தைக்கு உரிய காரகன் (authority for awarding
Children) குரு ஆகியோர் 28 பரல்களுக்குமேல் கொண்டிருக்க வேண்டும். இல்லை
யென்றால் இல்லை. தம்பதிகளுக்குப் பார்க்கும் போது இருவரில் ஒருவருக்காவது
அந்த அமைப்பு இருக்க வேண்டும். இல்லையென்றால் இல்லை!

நிறைய மகப்பேறு மருத்துவர்களுக்கே குழந்தைகள் இல்லை! இன்றைய விஞ்ஞான
நுட்பங்களை வைத்து அவர்களால் ஏன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடிய
வில்லை?

அதைத்தான் எல்லா வேதங்களும் சொல்கின்றன!

“இறைவனால் மறுக்கப்பட்டதை யாராலும் உனக்குத் தர முடியாது. அதுபோல
இறைவனால் உனக்குக் கொடுக்கப்பட்டதை யாராலும் பறிக்கவும் முடியாது!”

இதை உணர்ந்தவன் நிம்மதியாக இருப்பான்.
------------------------------------------------------------------
இந்த clipping ஐப் பாருங்கள்






++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலே உள்ள உதாரண ஜாதகத்தைப் பாருங்கள்.ஜாதகரின் லக்கினம் மகரம்
ஐந்தாம் வீடு ரிஷபம் அதன் பரல்கள் 24 மட்டுமே! ஐந்தாம் வீட்டின் அதிபதி
சுக்கிரனும், காரகன் குருவும் ஒன்றாகச் சேர்ந்து கும்பத்தில் இருக்கிறார்கள்
அங்கே உள்ள பரல்கள் 24 மட்டுமே. ஆக மூன்றுமே பலவீனமாக (வீக்காக)
உள்ளதால் ஜாதகருக்குக் குழந்தை இல்லை!

The lessor bindus in the said houses annihilated the prosperity.
(annihilate = to destroy completely; put out of existence)

ஜாதகத்தில் ஒரு வீடு (House) நன்றாக இருந்து நல்ல பலன்களைத்தர வேண்டு
மென்றால் அந்த வீடும், வீட்டின் நாயகரும் (Lord of that house), அந்த வீட்டின்
காரகரும் (authority) 28 பரல்களுக்கு மேல் கொண்டிருக்க வேண்டும்.

28 என்பது சராசரி.

337 வகுத்தல் 12 = 28

சராசரி அல்லது சராசரிக்கும் மேல் இருக்க வேண்டும்.

மேஷ லக்கினத்திற்கு ஐந்தாம் வீடு சிம்மம். அதன் நாயகர் சூரியன்
ரிஷப லக்கினத்திற்கு ஐந்தாம் வீடு கன்னி. அதன் நாயகர் புதன்
மிதுன லக்கினத்திற்கு ஐந்தாம் வீடு துலாம். அதன் நாயகர் சுக்கிரன்
கடக லக்கினத்திற்கு ஐந்தாம் வீடு விருச்சிகம். அதன் நாயகர் செவ்வாய்
கன்னி லக்கின ஜாதகரின் ஐந்தாம் வீடு மகரம். அதன் நாயகர் சனி
இப்படிப் பார்க்க வேண்டும்!

காரகன்:(authority)
தந்தைக்குக் காரகன் சூரியன்
உடல் காரகன் சூரியன்
தாய்க்குக் காரகன் சந்திரன்
மன காரகன் சந்திரன்
தொழில் காரகன் சனி
களத்திர காரகன் சுக்கிரன்
புத்திர காரகன் குரு
கல்வி, புத்தி காரகன் புதன்
ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்!

இதுதான் சூத்திரம் (Formula). இதை உபயோகித்து ஒரு வீட்டின் பலனைத்
தெரிந்து கொள்ளலாம். இது முக்கியமான சூத்திரம். ஆகவே நினைவில்
பதித்து வையுங்கள்.

குழந்தைப் பாக்கியத்தைப் பொறுத்தவரை, தம்பதியர் இருவருக்குமே
பார்க்க வேண்டும். ஆகவே குழப்பிக் கொள்ளாதீர்கள். இருவருக்குமே
இல்லையென்றால் இல்லை! இருவரில் ஒருவருக்கு உண்டு என்றால் உண்டு!

ஒருவருக்கு மட்டும் இருந்தால் என்ன ஆகும்?

தாமதம் ஆகும். அவ்வளவுதான்.

சாதாரணமாக ஜோதிடர்கள், ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி, சுவாமி தரிசனம்
செய்துவிட்டு வாருங்கள், கிரக தோஷம் போகும் என்பார்கள். தாமத ஜாதகங்
களுக்கு அது முற்றிலும் பொருந்தும்
-------------------------------------------------------------------------
கல்வி, வேலை, திருமணம், வீடு, வாசல், பணம், உடல் நலம், மன நிம்மதி என்று
எல்லாவற்றிற்கும் இதே பார்முலாதான்!

வீடுகளை முன்பே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். காரகர்களை இப்போது
கொடுத்திருக்கிறேன். நீங்களே கணக்கிட்டு ஒவ்வொன்றாகப் பார்த்துக்
கொள்ளுங்கள்.

இன்றையப் பாடம் முக்கியமான பாடம். மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

பட்டையைக் கிளப்புங்கள். உங்களுக்கு மட்டும் கிளப்புங்கள்! அடுத்தவர்களுக்குக்
கிளப்பிவிடாதீர்கள்:-)))

அடுத்த பாடமும் முக்கியமானது; சுவையானது!
ஒரு சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது
அது அடுத்த வாரம்!
அதுவரை பொறுத்திருங்கள்!

(தொடரும்)

40 comments:

  1. ஆஹா..சுவையான பாடம்..5ம் வீடு,அதன் அதிபதி,குரு இவற்றில் ஏதேனும் ஒன்று 30க்கு மேல் இருந்து,மற்றவை சராசரிக்கு கீழ் இருந்தால் எப்படி கணிக்க??இதே சந்தேகம்தான் இரண்டு,மூன்று கிரகங்கள் சேர்ந்து ஒரு வீட்டில் இருக்கும்போது அந்த வீட்டின் பலத்தை எப்படி அறிய???

    அதே மாதிரி எத்தனை குழந்தைகள் என்பதை எப்படி கணிப்பது?

    நிறைய கேள்விகள் கேட்டுட்டேனா??

    ReplyDelete
  2. So many wonderful info. I printed this post. I am going to save this post for sure. Excellent. Keep posting. We all can learn so much from you Sir.

    Ramya

    ReplyDelete
  3. /////தங்ஸ் said...
    ஆஹா..சுவையான பாடம்..5ம் வீடு,அதன் அதிபதி,குரு இவற்றில் ஏதேனும் ஒன்று 30க்கு மேல் இருந்து,மற்றவை சராசரிக்கு கீழ் இருந்தால் எப்படி கணிக்க??/////

    மூன்றுமே சராசரிக்கு மேல் இருந்தால் கை மேல் பலன் - அதாவது உடனே பலன்.
    மூன்றில் ஒன்று அல்லது இரண்டு குறைந்தாலும் கவலை இல்லை. பலன் உண்டு.
    இரண்டு அல்லது மூன்று வருட தாமத பலன்.
    மூன்றுமே சராசரிக்குக் கீழே என்றால் மட்டுமே கவலைப் பட வேண்டும்!

    ////இதே சந்தேகம்தான் இரண்டு,மூன்று கிரகங்கள் சேர்ந்து ஒரு வீட்டில் இருக்கும்போது அந்த வீட்டின் பலத்தை எப்படி அறிய???///

    அதற்குப் பெயர் கிரக யுத்தம்.(Planetary war) அது சற்றுப் பெரிய பாடம்
    பின்னால் வரும்! பொறுத்திருங்கள்

    ///// அதே மாதிரி எத்தனை குழந்தைகள் என்பதை எப்படி கணிப்பது?////

    இதுவும் தனிப்பாடம். பின்னால் வரும்!

    ////நிறைய கேள்விகள் கேட்டுட்டேனா??///

    ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை!
    -கவியரசர் கண்ணதாசன்!

    ReplyDelete
  4. /////Anonymous said...
    So many wonderful info. I printed this post. I am going to save this post for sure. Excellent. Keep posting. We all can learn so much from you Sir.
    Ramya////

    இந்தப் பதிவு பலரையும் மகிழச்செய்யும் என்பதை அறிந்தே எழுதினேன்.
    உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  5. அருமையான பயனுள்ள பதிவு பதிவுக்கு பாரட்டுக்கள்.
    .ஒரு சோதிடப் புத்தகத்தில் (நாடி சோதிடம் பற்றிய விளம்பரம்)ஜாதங்களில் பிள்ளையின் நேரம் தவறக குறித்து இருந்தால் பலன்கள் சரியாக இருக்க வாய்பில்லை என்று கூறி. தவறுக்கு ஆன சாத்யங்களாக

    1.மருத்துவமனை தவறான கடிகரங்கள்
    2.மருத்துவர்கள் சொல்லும் தவறான நேரங்கள்- குழ்ந்தையின் சிரசு வெளிவரும் முதல் நிலை- முதல் அழுகை குரல்........)
    3.அறுவை சிகிச்சை செய்து நடைபெறும் குழந்தையின் ஜனன நேரம்( தங்கள் இஸ்டப்படி)
    4.தவரான ஜாதகக் குறிப்புகள்.(கணித தவறுகள்)

    அதனால் எங்களிடம் வாருங்கள் கை (பெருவிரல்)ரேகை பொய் சொல்லாது என அவர்கள் சொல்வதில் உண்மை உள்ளதா?

    அது சரி எப்படி ஒருவருடைய பெரு விரல் கை ரேகை ஜாதக் குறிப்பு தமிழகத்தில் பல நகரங்களில் இருக்க சாத்யமாகிறது?(சென்னை,திருநெல்வேலி,வை.கோவில்,...........)

    ReplyDelete
  6. அருமையான பதிவு. மிக எளிமையாக புரியும்படி எழுதியுள்ளீர்கள் ஐயா. அந்த காலத்தில் 10, 15னு குழந்தைகள் இருந்ததே?

    பொதுவா இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் 5ம் இடம் ரொம்ப ஸ்ட்ராங்க் போலிருக்கு. ஹிஹி. ;))

    ReplyDelete
  7. வாத்தியரே !
    கேள்விகள் பலவிதம்..
    1.புத்திர பாக்கியம் என்பது , தத்து பிள்ளை சேர்க்கையில் வருமா, இல்லை வராத? (test tube baby, or child adoption)
    2.ஒரு நல்ல ஜோதிடர் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இப் பலன் கலை பார்ப்பரா? (if it is arrange marriage)
    3.புத்திர பாக்கியத்தில் ஆண், பெண் குழந்தை என கனிக்க இயலுமா?

    யோசனைகள் ஒருவிதம்
    1.புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், ஏன் தத்து பிள்ளை எடுக்கலாமே! :-)
    என் no.1 கேள்வியின் பதில் சாதகமாக இருந்தால்)

    //ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை!
    //
    சனிதிசை நடைபெறாமல் இருந்தால் கேட்கலாம் வாத்தியரே, இல்லை என்றால் த்ரைவேதி வாத்தியார் கதிதான்

    விமல்

    ReplyDelete
  8. வணக்கம் அய்யா!!
    இன்றைய பாடம், மிக அருமை..
    எனக்கு ஒரு சந்தேகம் , தாஸா / புக்தி கணிக்கும் போது சில மாறுபடுகள் வருகிறது .
    இதை பற்றி தனியாக மடல் அனுப்புகிறேன். (some websites from north india)
    Now following are the buzz words for me when I look my horoscope, can you please clarify:
    There are lot of tables with following headings what are they and its use:
    Horai,Navamsam,therakanam,sowdamsam,Sapthamamsam,Dasamsam,duvathamamsam,Sodasamsam, etc..KP lagna chakara,KP Bhavam.Sudarsana chakara.

    Different types of analysis like KP syetem,Kalidas, parasarar,etc.

    Sorry for the long comment.

    There are some free lessons in the given link can you validate\comment on this system.

    http://krushna.sageasita.com/

    Thanks in advance.

    Yours obdiedent student.
    GeeKay, Blr.

    ReplyDelete
  9. //////நெல்வேலி கார்த்திக் said...
    அருமையான பயனுள்ள பதிவு பதிவுக்கு பாரட்டுக்கள்.
    .ஒரு சோதிடப் புத்தகத்தில் (நாடி சோதிடம் பற்றிய விளம்பரம்)ஜாதங்களில் பிள்ளையின் நேரம் தவறக குறித்து இருந்தால் பலன்கள் சரியாக இருக்க வாய்பில்லை என்று கூறி. தவறுக்கு ஆன சாத்யங்களாக
    1.மருத்துவமனை தவறான கடிகரங்கள்
    2.மருத்துவர்கள் சொல்லும் தவறான நேரங்கள்- குழ்ந்தையின் சிரசு வெளிவரும் முதல் நிலை- முதல் அழுகை குரல்........)
    3.அறுவை சிகிச்சை செய்து நடைபெறும் குழந்தையின் ஜனன நேரம்( தங்கள் இஸ்டப்படி)
    4.தவரான ஜாதகக் குறிப்புகள்.(கணித தவறுகள்)
    அதனால் எங்களிடம் வாருங்கள் கை (பெருவிரல்)ரேகை பொய் சொல்லாது என அவர்கள் சொல்வதில் உண்மை உள்ளதா?/////

    பெருவிரல் கைரேகையை மட்டும் வைத்து (மற்ற விவரங்கள் எதையும் சப்ஜாடாகக் கேட்காமல்) உங்கள் ஜாதகத்தை எழுதிக்கொடுத்தால் அது உண்மை. அதுபோல் எழுதித் தருவதற்கு முன்பு காரைக்குடியில் சாரி என்னும் வித்தகர் ஒருவர் இருந்தார். இப்போது அவர் இயற்கை எய்திவிட்டார். வேறு பகுதியில் யாரேனும் இருக்கலாம்.
    ஒரு அளவு மற்றும் கணக்கை வைத்து அப்படி எழுதித் தருவார்கள். குறிப்பை வைத்து அல்ல!

    ReplyDelete
  10. /////vimal said...
    வாத்தியரே !
    கேள்விகள் பலவிதம்..
    1.புத்திர பாக்கியம் என்பது , தத்து பிள்ளை சேர்க்கையில் வருமா, இல்லை வராத? (test tube baby, or child adoption)
    2.ஒரு நல்ல ஜோதிடர் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இப் பலன் கலை பார்ப்பரா? (if it is arrange marriage)
    3.புத்திர பாக்கியத்தில் ஆண், பெண் குழந்தை என கனிக்க இயலுமா?
    விமல்/////

    1. வராது
    2. பார்க்க வேண்டும், பார்ப்பதாகத் தெரியவில்லை!
    3. இயலும்!

    ReplyDelete
  11. எனக்கு மிக உபயோகமாக உள்ளது

    மிக்க நன்றி ஐயா!

    எனது கடந்த பதிவிற்கு பதில் இல்லை ஐய்யா

    ReplyDelete
  12. /////Geekay said...
    வணக்கம் அய்யா!!
    இன்றைய பாடம், மிக அருமை..
    எனக்கு ஒரு சந்தேகம் , தாஸா / புக்தி கணிக்கும் போது சில மாறுபடுகள் வருகிறது .
    இதை பற்றி தனியாக மடல் அனுப்புகிறேன்.////

    அனுப்புங்கள். ஏன் என்று பார்க்கலாம்!


    /////(some websites from north india)
    Now following are the buzz words for me when I look my horoscope, can you please clarify:
    There are lot of tables with following headings what are they and its use:////

    பின்னால் எழுதுகிறேன்

    Horai,Navamsam,therakanam,sowdamsam,Sapthamamsam,Dasamsam,duvathamamsam,Sodasamsam, etc..KP lagna chakara,KP Bhavam.Sudarsana chakara.
    Different types of analysis like KP syetem,Kalidas, parasarar,etc.
    Sorry for the long comment.
    There are some free lessons in the given link can you validate\comment on this system.
    http://krushna.sageasita.com/
    Thanks in advance.
    Yours obdiedent student.
    GeeKay, Blr./////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  13. //////கூடுதுறை said...
    எனக்கு மிக உபயோகமாக உள்ளது
    மிக்க நன்றி ஐயா!
    எனது கடந்த பதிவிற்கு பதில் இல்லை ஐய்யா/////

    விட்டுப்போயிருக்கும் பார்த்துப் பதில் எழுதுகிறேன் நண்பரே!

    ReplyDelete
  14. /////கூடுதுறை said...
    இது தொடர்புக்கு//////

    முழுமையாக இல்லையே?

    ReplyDelete
  15. வணக்கம் ஐய்யா,

    இன்றைய பாடம் நல்லா இருந்தது.
    ஆனாலும் என்னை மாதிரி சில பேருக்கு எல்லாம் சரியாக இருந்தாலும் ஏன் புத்ர பாக்கியம் இல்லை னு தான் தெரியலை. சரியா இருக்குனு நிறைய்ய ஜோசியர் சொன்னது.

    ReplyDelete
  16. ஆசிரியருக்கு நமஸ்காரம்.
    மகர லக்ன ஜாதகத்தில்
    3ல் சுக்ரன்,செவ்வாய்,கேது,
    4ல் சூரியன்,புதன்,
    5ல் குரு,
    7ல் சனி,
    9ல் ராகு,
    10ல் சந்திரன்.
    5ம் வீடு ரிஷபத்தில் 22 பரல்கள்,
    5ன் அதிபதி சுக்ரன் இருக்குமிடம் 3ல் 32 பரல்கள்,
    காரகன் குரு இருக்குமிடம் 5ல் 22 பரல்கள்.
    ஜாதகனது 30 வது வயதில் பெண் குழந்தை பிறந்தது.
    3ம் இடத்தின் அடிப்படையில் குழந்தை பிறந்ததா? பெண் குழந்தை என்பதற்கான விளக்கம் அறிய தர வேண்டும்.

    ReplyDelete
  17. /////Sumathi. said...
    வணக்கம் ஐய்யா,
    இன்றைய பாடம் நல்லா இருந்தது.
    ஆனாலும் என்னை மாதிரி சில பேருக்கு எல்லாம் சரியாக இருந்தாலும் ஏன் புத்ர பாக்கியம் இல்லைன்னு தான் தெரியலை. சரியா இருக்குனு நிறைய்ய ஜோசியர் சொன்னது.////

    தனி மடலில் விவரம் எழுதுங்கள் சகோதரி! பார்க்கலாம்!

    ReplyDelete
  18. //////தியாகராஜன் said...
    ஆசிரியருக்கு நமஸ்காரம்.
    மகர லக்ன ஜாதகத்தில்
    3ல் சுக்ரன்,செவ்வாய்,கேது,
    4ல் சூரியன்,புதன்,
    5ல் குரு,
    7ல் சனி,
    9ல் ராகு,
    10ல் சந்திரன்.
    5ம் வீடு ரிஷபத்தில் 22 பரல்கள்,
    5ன் அதிபதி சுக்ரன் இருக்குமிடம் 3ல் 32 பரல்கள்,
    காரகன் குரு இருக்குமிடம் 5ல் 22 பரல்கள்.
    ஜாதகனது 30 வது வயதில் பெண் குழந்தை பிறந்தது.
    3ம் இடத்தின் அடிப்படையில் குழந்தை பிறந்ததா? பெண் குழந்தை என்பதற்கான விளக்கம் அறிய தர வேண்டும்.////

    அஷ்டகவர்க்கம் சிலவற்றையே சொல்லும். தசா புத்திகள், 5க்கு 5ந்து இடையே உள்ள கிரகங்கள் மற்றவற்றைச் சொல்லும். Birth data of both husband and wife is required for assessing the other aspects

    ReplyDelete
  19. ஐயா, புத்திர பாக்கியத்தை பற்றி விரிவாக அறிய முடிந்தது. நன்றி

    ReplyDelete
  20. குருவே,

    பாடமும், அட்டவணையும், விளக்கமும் அருமை.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  21. //////மணிவேல் said...
    ஐயா, புத்திர பாக்கியத்தை பற்றி விரிவாக அறிய முடிந்தது. நன்றி////

    உங்கள் பின்னூட்டம் எழுதிய எனக்கும் ஒரு மன நிறைவை அளிக்கிறது நண்பரே!

    ReplyDelete
  22. /////Anonymous said...
    குருவே,
    பாடமும், அட்டவணையும், விளக்கமும் அருமை.
    அன்புடன்
    இராசகோபால்////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. Dear Sir

    Its really good with example,I had one question for which I have sent you an e-mail.Please answer whenever you find time.

    Thanks!
    Shankar

    ReplyDelete
  24. விளக்கங்களுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  25. Thanks.
    your lessons are very nice and very intresting.Well, please keep itup.
    moorthy.

    ReplyDelete
  26. ////Anonymous said...
    Dear Sir
    Its really good with example,I had one question for which I have sent you an e-mail.Please answer whenever you find time.
    Thanks!
    Shankar///
    ஓக்கே, பதில் எழுதுகிறேன் சங்கர்!

    ReplyDelete
  27. ////தங்ஸ் said...
    விளக்கங்களுக்கு நன்றி ஐயா!///

    நல்லது நண்பரே!

    ReplyDelete
  28. ////Anonymous said...
    Thanks.
    your lessons are very nice and very intresting.Well, please keep itup.
    moorthy./////
    உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. ஐயா, எனது பின்னூட்டம் அதிகப் பிரசங்கித் தனமாக இருப்பின் மன்னிக்கவும். அஸ்டவர்கத்தின் அட்டவனையை கொடுத்திருப்பது அதை புரிந்துக் கொள்ள முடியாத மாணவர்களுக்கு சிறமமாக இருக்காதா? பாரல்கள் போடும் பாடம் பின்னாட்களிலா??

    ReplyDelete
  30. /////விக்னேஸ்வரன் said...
    ஐயா, எனது பின்னூட்டம் அதிகப் பிரசங்கித் தனமாக இருப்பின் மன்னிக்கவும். அஸ்டவர்கத்தின் அட்டவனையை கொடுத்திருப்பது அதை புரிந்துக் கொள்ள முடியாத மாணவர்களுக்கு சிறமமாக இருக்காதா? பாரல்கள் போடும் பாடம் பின்னாட்களிலா??////

    பரல்கள் போடும் பாடம் எதற்கு?
    அதுதான் மென்பொருள் கொடுத்திருக்கிறேனே! அதுவே போட்டுக் கொடுத்துவிடும் இல்லையா?
    எஸ்கலேட்டர் கொடுத்திருக்கிறேன். நீங்கள் ஏணிகளையும் தாருங்கள் என்கிறீர்களே?

    ReplyDelete
  31. //எஸ்கலேட்டர் கொடுத்திருக்கிறேன். நீங்கள் ஏணிகளையும் தாருங்கள் என்கிறீர்களே?//

    அதற்கு சொல்லவில்லை ஐயா. இது எப்படி வந்தது என சிலர் குழம்பக் கூடும். நான் முன்பு இப்படி குழம்பியதுண்டு. அதனால் தான்... நன்றி...

    ReplyDelete
  32. //1.புத்திர பாக்கியம் என்பது , தத்து பிள்ளை சேர்க்கையில் வருமா, இல்லை வராத? (test tube baby, or child adoption)//

    தத்து பிள்ளை சேராது
    test tube baby - சேரும்


    //2.ஒரு நல்ல ஜோதிடர் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இப் பலன் கலை பார்ப்பரா? (if it is arrange marriage) //

    ”நல்ல” ஜோதிடர் பார்ப்பார்

    //3.புத்திர பாக்கியத்தில் ஆண், பெண் குழந்தை என கனிக்க இயலுமா? //

    கண்டிப்பாக கணிக்கலாம்

    --

    இது குறித்து எனக்கு தெரிந்த சில கருத்துக்களை எழுதுகிறேன்

    ReplyDelete
  33. இந்த இடுகையை தொட்டு எழுதிய என் இடுகை

    http://payanangal.blogspot.com/2008/05/blog-post_9119.html

    ReplyDelete
  34. Blogger புருனோ Bruno said...
    இந்த இடுகையை தொட்டு எழுதிய என் இடுகை http://payanangal.blogspot.com/2008/05/blog-post_9119.html

    தவறே இல்லை!
    தொடருங்கள் டாக்டர்!
    ஜோதிடம் என்பது கடல்!
    எனக்குத் தெரிந்த பகுதிகள் சிலவே!
    உங்களுக்கு வேறு சில பகுதிகள் தெரிந்திருக்கலாம்
    ஆகவே உற்சாகமாக எழுதுங்கள்
    எனது பதிவில் இணைப்பும் கொடுங்கள்
    வாழ்க உங்கள் மனித நேயம்!
    வளர்க உங்கள் தொண்டு!

    ReplyDelete
  35. Dear Sir,

    Please let me know where can i get the ashtavarga paral software given by you in the blogspot

    ReplyDelete
  36. /////Rambalaji said...
    Dear Sir,
    Please let me know where can i get the ashtavarga paral software given by you in the blogspot/////

    அஷ்டகவர்க்கத்தை எல்லாக் கணினி மென்பொருள்களுமே கணித்துக் கொடுக்கும். அதற்கென்று தனியாக
    மென்பொருள் எதுவுமில்லை!

    ReplyDelete
  37. aya nan ithuku new visitor super ah iruku! k orutharuku puthira pakiyam irukuratha epdi pakurathu!!!!!!!

    ReplyDelete
  38. oruvarku matum puthira pakiyam irupathai epadi arivathu!!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com