மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.5.08

பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 2



==========================================================
ஜோதிடக் கட்டுரை 2

உட்தலைப்பு: பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 2

முன்பகுதியைப் படித்துவிட்டு வாருங்கள்: சுட்டி இங்கே!

சொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.

அசையாத சொத்து (Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப்
பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம் எல்லாம் முதல் வகையில் சேரும்.
நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம்
வகையில் சேரும்

அதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான
கஷ்டங்கள்.

நிரந்தரமான கஷ்டங்கள் எதெது? தற்காலிகமான கஷ்டங்கள் எதெது?

கஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள்
இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர் இருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில்
உள்ள 110 கோடி ஜனங்களுக்கும் 110 கோடி விதமான கஷ்டங்களைக் கொடுத்திருக்கிறான்.

எப்படி மனித முகம் வேறு படுகிறதோ, எப்படி வலது கை கட்டை விரல் ஆளாளுக்கு
வேறு படுகிறதோ, அப்படி கஷ்டங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

அதுபோல கஷ்டங்களும் தீர்ந்த பாடில்லை. ஒரு கஷ்டம் போனால் அடுத்த கஷ்டம்
கதவைத் திறந்து கொண்டு வந்து விடுகிறது. கஷ்டம் என்பதை எளிமைப் படுத்திப்
பிரச்சினை என்று கொள்ளலாம்.

சிலருக்குப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வரும். சிலருக்கு ஒட்டு மொத்தமாக வரும்.
சிலருக்கு க்யூவில் நின்று அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் வரும்.

அதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று
நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான் இந்தத் தொடர் எழுதுவதையே நிறுத்தி
விடுகிறேன்.

கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.

”தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!”

என்னவொரு அற்புதமான வெளிப்பாடு பாருங்கள். இரண்டே வரிகளில் வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளும்படி சொன்னார் பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர்
என்கின்றோம்.

ஆகவே இங்கே கஷ்டங்கள் என்பதை நான் சற்று Fine Tuning செய்து, கட்டுரைக்கு
வசதியான முறையில் உங்கள் அனுமதியுடன் பிரச்சினைகள் என்று மாற்றிக்கொள்கிறேன்.

உடல் ஊனம், மன நோய், வறுமை, தீராத பிணி இவைகள் ஜாதகத்தின் வேறு பகுதியில்
பார்க்கப் பட வேண்டியவை ஆகும். ஆகவே அவற்றை இங்கே நான் எடுத்துக்கொள்ள
வில்லை

பொதுவாக உள்ள பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை மட்டுமே நான் இங்கே வகைப்
படுத்திப் பேச உள்ளேன்
------------------------------------------------------------------------------------------
1. வளர்கின்ற வயதில், தாய் அல்லது தந்தை இல்லாமல் வளர்வது

2. படிக்கவேண்டிய வயதில் சூழ்நிலை காரணமாக அல்லது சேர்க்கை காரணமாக படிக்க
முடியாமல் போய்விடுவது.

3. வேலை கிடைக்க வேண்டிய வயதில் சரியான அல்லது தோதான வேலை கிடைக்காமல்
அல்லாடுவது.

4. திருமணமாக வேண்டிய வயதில் ஏதாவதொரு காரணத்தினால் திருமணம் தள்ளிக்
கொண்டேபோவது.

5. திருமணம் ஆனாலும், அன்பு செலுத்தாத, அரவனைக்காத கணவன், கூட இருந்தும்
உதவியாக இல்லாத மாமனார் மாமியார், மற்றும் இன் லாக்கள்.

6. வேலை கிடைத்தாலும் திருப்தியில்லாத வேலை, தகுதிக்கு ஒத்துவராத வேலை,
நிறைவில்லாத சம்பளம்.

7. வாடகை வீடு - அதுவும் வீடு ஓரிடம், வேலை ஓரிடம், தினமும் 40 கிலோமீட்டர் தூரம்
பயணிக்க வேண்டிய அலுப்பு

8. வாழ்க்கையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாகக் கவலைப்பட்டு, குழந்தை
களைப் படி, படி என்று அனுதினமும் விரட்டிப் படிக்க வைக்க வேண்டிய அவதி

9. பருவம் வந்த பெண் குழந்தையாக இருந்தால் அவளை வெளியே அனுப்பும்போது
ஏற்படும் பரிதவிப்பு

10. அத்தியாவசியத் தேவைக்குக் கூட செலவு செய்ய முடையாமல் ஏற்பட்டு விடும்
கடன் சுமைகள்

இப்படிப் பிரச்சினைகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஆகவே ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் பிரச்சினை என்பது உங்களுக்கு மட்டுமில்லை.
ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பெரும்பாலான பிரச்சினைகள் பணத்தைச் சார்ந்து இருக்கும்.

“பணம் இருந்தால் போதும் சார்! எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நொடியில் தீர்த்து
விடுவேன்!” என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம்.

அது உண்மையல்ல! பணத்தால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் அது உரு
மாறி வேறு விதத்தில் நம்மிடமே திரும்பவும் வந்து நிற்கும்.

இன்று பணம் இல்லாதவனை விட, பணக்காரனிடம்தான் அதிகமான பிரச்சினைகள் உள்ளன!

மெத்தையை வாங்கலாம், ஸ்பிளிட் ஏர்கண்டிஷன் இயந்திரத்தை வாங்கலாம் - ஆனால்
தூக்கத்தை வாங்க முடியாது. பணம் கொடுத்துப் பசியை வாங்க முடியாது! பணம் கொடுத்து
அரண்மனையை வாங்கலாம். அன்பு செலுத்தும் இல்லாளை வாங்க முடியாது. சொன்னதைக்
கேட்கும் குழந்தையை வாங்க முடியாது. துரோகம் இல்லாத நட்பை வாங்க முடியாது. இப்படி
முடியாதது எவ்வளவோ இருக்கின்றன!
-----------------------------------------------------------------------------
சரி, உங்களுக்குப் புரியும் படியாக ஒரே வரியில் சொல்கிறேன்.

பிரச்சினை தீரவே தீராது.

ஒன்றைத் தீர்க்க அடுத்தது வந்து நிற்கும். பிர்ச்சினை என்பது சீட்டாட்டத்தைப்போல!
உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒன்றைக்
கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்கு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான்
ஆகவேண்டும்.

கேஸ் ஸ்டவ், பிரஷ்சர் குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், வாஷிங்
மெஷின், டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர், ஸ்டெபிலைசர், ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர்
அல்லது மின் விசிறிகள், மோட்டார் சைக்கிள் அல்லது கார், கணினி, யு.பி.எஸ் என்று
வீட்டிலுள்ள சாதனங்கள் ஒன்று மாற்றி ஒன்று ரிப்பேராகிக் கொண்டே இருக்கும்.

பணம் இருப்பவன் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரே நாளில் அத்தனை சாதனங்
களையும் புதிதாக மாற்றி விட்டு, நிம்மதியாக இருப்போம் என்று நினைத்தால், விதி அவனை
விடாது. அவனேயே நோய்க்கு ஆளாக்கி அல்லது எங்காவது விபத்தில் புரட்டி எடுத்து
மருத்துவமனையில் கொண்டுபோய் படுக்க வைத்துவிடும். அவனையே ரிப்பேர் செய்ய
வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கி விடும்.

ஆகவே பிரச்சினை என்பது, நமது இரத்த ஓட்டம்போல, சுவாசம் போல உடன் இருப்பது
ஆகும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையின் அவசியமென்ன?

இரண்டு வழிகளில் உங்களுக்குப் பதில் சொல்வதற்குத்தான் இந்தக்கட்டுரை!

1. பிரச்சினையைத் தாங்கக் கூடிய திறன் இருக்கிறதா?

2. அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக்கொள்வோம்,
இப்போதுள்ள பிரச்சினை எப்போது தீரும்?
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகத்தில் திரிகோண வீடுகளான ஒன்றாம் வீடு (லக்கினம்) ஐந்தாம் வீடு (House of Mind)
ஒன்பதாம் வீடு (House of Gains - பாக்கிய ஸ்தானம்) ஆகிய வீடுகள் நன்றாக - அதாவது
வலுவாக இருந்தால் - உங்களுக்குப் பிரச்சினைகளைத் தாங்கக்கூடிய திறன் இருக்கிறது
என்று கொள்ளலாம். அதுதான் முக்கியம் - தாங்கும் வல்லமை இருந்தால் போதாதா?

சரி, அதை எப்படித் தெரிந்து கொள்வது?

மூன்று வீடுகளும் ஒட்டு மொத்தமாக நன்றாக இருப்பது என்பது ஆயிரத்தில் ஒருவருக்குத்
தான் இருக்கும். சராசரியாக, மனிதனுக்கு மூன்றில் ஒன்று நன்றாக இருந்தாலும் போதும்!

முன்பே சொல்லியிருக்கிறேன் உலகில் அனைவருக்கும் உள்ள மொத்த பரல்கள் 337 மட்டுமே
அதை 12 ஆல் (ராசிகளால்) வகுத்தால் சராசரியாக 28 வரும். சராசரிக்கும் மேலே கூடுதலாக
இரண்டு பரல்களுடன் - அதாவது 30 பரல்கள் அந்த வீடுகளில் - அல்லது ஒன்றிலாவது
இருத்தல் நல்லது.

அதோடு ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைக்குரிய பரல்கள் எட்டு. நான்கு என்பது
சராசரி. 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் அந்த கிரகம் இருந்தால் நல்லது

உதாரணம் சிம்ம லக்கின ஜாதகனுக்கு, சூரியன்தான் லக்கின அதிபதி. ஜாதகத்தில் சூரியன்
அதன் சுய வர்க்கத்தில் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஐந்தாம் வீடு, தனுசு வீடாகும், தனுசிவின் அதிபதி
குரு பகவானும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஒன்பதாம் வீடு, மேஷமாகும், மேஷத்தின் அதிபதி
செவ்வாயும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு லக்கினக்காரர்களும் தங்களுக்குரிய லக்கினத்தை வைத்து அந்த
மூன்று இடங்கலையும் தாங்களே மதிப்பிட்டுக்கொள்ள வேண்டுகிறேன்

இவ்வாறு ஒரு வீடும், வீட்டின் அதிபதியும் அமைந்து விட்டால் போதும். உங்களை
ஒன்றும் சீண்ட முடியாது. எது வந்தாலும் தாங்கக்கூடிய உத்தம மனிதர் அல்லது
பெண்மணி நீங்கள். அந்த கிரகங்கள் உங்களுக்குக் கடைசிவரை கை கொடுக்கும்!

பதிவின் நீலம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்ற செய்திகள்
அடுத்த பதிவில்

(தொடரும்)

புதியவர்களுக்கு: பரல்களைக் கணித்துக்கொடுக்கும் மென்பொருளிற்கு இங்கே சொடுக்கவும்:

----------------------------------------------------------------------------------------

20 comments:

  1. Dear Sir,

    Your articles gives a different perception. It is interesting to follow-up.

    Respects
    Sundar

    ReplyDelete
  2. ////Sundar Said: Your articles gives a different perception. It is interesting to follow-up.
    Respects
    Sundar/////

    வாருங்கள் கனடா சுந்தர். உங்கள் கருத்திற்கு நன்றி!

    நானும் எழுதும்போது சுவாரசியம் குறையாமல் பார்த்துக்கொள்வேன். அடிப்படையில் நானும் ஒரு வாசகன்.அதனால் எங்கே தொய்வு விழும் என்று தெரியும்!:-))))

    ReplyDelete
  3. Dear Sir,

    I am your regular reader and this is my first comment.
    Really your articles are excellent.


    We must thank god for getting teacher like you, Great work.

    Thanks a lot.

    Gopal, Bangallore.

    ReplyDelete
  4. /////Anonymous said...
    Dear Sir,
    I am your regular reader and this is my first comment.
    Really your articles are excellent.
    We must thank god for getting teacher like you, Great work.
    Thanks a lot.
    Gopal, Bangallore.////

    நன்றி மிஸ்டர் கோபால்!
    பின்னூட்டம் என்பது எழுதுபவருக்கு டானிக்!
    நமது மக்கள் அதை உணர்வதில்லை!

    ReplyDelete
  5. வாத்தியார் ஐயா,

    //பின்னூட்டம் என்பது எழுதுபவருக்கு டானிக்!
    நமது மக்கள் அதை உணர்வதில்லை!//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  6. குருவே,

    பாடமும் அருமை. பாடத்திற்கு வலு சேர்க்கும் பாடலும் அருமை.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  7. ////சதங்கா (Sathanga) said...
    வாத்தியார் ஐயா,
    //பின்னூட்டம் என்பது எழுதுபவருக்கு டானிக்!
    நமது மக்கள் அதை உணர்வதில்லை!//
    மிகச் சரியாகச் சொன்னீர்கள்.///

    மாய்ந்து மாய்ந்து எழுதுபவர்களுக்கு வேறு என்ன சன்மானம் கிடைக்கிறது
    சொல்லுங்கள்? மேலும் அதை (சன்மானத்தை) எதிர்பார்த்து யாரும் வலையில் எழுதுவதில்லை!
    ஒரு ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம். பின்னுட்டங்கள் மட்டுமே ஊக்க மருந்தாகப் பயன்படும்!

    ReplyDelete
  8. /////Anonymous said...
    குருவே,
    பாடமும் அருமை. பாடத்திற்கு வலு சேர்க்கும் பாடலும் அருமை.
    அன்புடன்
    இராசகோபால்/////

    பாராட்டிற்கு நன்றி மிஸ்டர் இராசகோபால்

    ReplyDelete
  9. விளக்கமான பதிவு. தீரும் கஷ்டங்களாவது சீக்கிரம் தீரட்டும்;0)
    நன்றி சார்.

    ReplyDelete
  10. சுவையாகவும், சுமையோடிருப்பவர்களுக்கு சுகமாகவும் இருக்கின்ற வகையிலே பாடங்களை கொண்டுசெல்லும் குருவிற்கு நமஸ்காரம்.
    நா.தியாகராஜன்.

    ReplyDelete
  11. //உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒன்றைக்
    கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்கு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான்
    ஆகவேண்டும்.//

    இது புரியவில்லை... 13 சீட்டு வச்சு ஆடும் விளையாட்டு எது... வகுப்பில் சீட்டாட்ட பாடமும் நடப்பதற்கு வழி உண்டா... :-)))

    நானும் தற்சமயம் ரிஷபானந்தரின் கிரக கோட்சாரமும் அஷ்டவர்கமும் எனும் நூலை படித்து வருகிறேன்... சுலபமான முறையில் உள்ளது.. உங்கள் பாடங்களை போல... எனக்கு ஜோதிடத்திலும், பதிவு எழுதவும் ஆர்வம் உண்டானது உங்கள் பல்சுவை மற்றும் வகுப்பறை பதிவினால் தான்... நன்றி ஐயா....

    அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  12. ///////வல்லிசிம்ஹன் said...
    விளக்கமான பதிவு. தீரும் கஷ்டங்களாவது சீக்கிரம் தீரட்டும்;0)
    நன்றி சார்.////

    வாருங்கள் சகோதரி! ஆரம்பம் என்று ஒன்று இருக்கும்போது, முடிவு என்று ஒன்றும் இல்லாமலா போய்விடும்?
    அதெல்லாம் சீக்கிரம் தீர்ந்துவிடும். நாம் மட்டும் நம்பிக்கையை இழக்காமல் இருந்தால் போதும்!

    ReplyDelete
  13. /////தியாகராஜன் said...
    சுவையாகவும், சுமையோடிருப்பவர்களுக்கு சுகமாகவும் இருக்கின்ற வகையிலே பாடங்களை கொண்டுசெல்லும் குருவிற்கு நமஸ்காரம்.
    நா.தியாகராஜன்.///

    ஆகா, வாருங்கள் கரூர்க்காரரே! உங்கள் கருத்திற்கு நன்றி!

    ReplyDelete
  14. sorry sir, am in holidays...but am regularly reading, once i'll b back to desk, will start on regular pinootam ...rocking sir

    vimal

    ReplyDelete
  15. //////விக்னேஷ்வரன் said...
    //உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒன்றைக்
    கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்கு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான்
    ஆகவேண்டும்.//
    இது புரியவில்லை... 13 சீட்டு வச்சு ஆடும் விளையாட்டு எது... வகுப்பில் சீட்டாட்ட பாடமும் நடப்பதற்கு வழி உண்டா... :-)))////

    13 சீட்டு வைத்து ஆடும் ஆட்டம் தெரியாதா? அதுதான் சாமி ‘ரம்மி'
    ஒரு உதாரணத்திற்குத்தான் அதைச் சொன்னேன்.
    வகுப்பிற்கு வெளியே நீங்கள் ஆடலாம்!

    ReplyDelete
  16. /////vimal said...
    sorry sir, am in holidays...but am regularly reading, once i'll b back to desk, will start on regular pinootam ...rocking sir
    vimal///

    பரவாயில்லை! நீங்கள் படித்தால் போதும்! அதுவே மகிழ்ச்சி!

    ReplyDelete
  17. Dear sir

    How are you? Your explanation are simply superb!! Always I open my horoscope and compare it with what you given, this time it is positive, I have 9th house-34 points with 6 points for Mars.5th house with 29 points (just one point miss) with 5 points for jupiter... This gives tonic that I can overcome any difficulty with help of God!Thanks a lot for your blog. Keep Rocking!!

    -Shankar

    ReplyDelete
  18. /////Dear sir
    How are you? Your explanation are simply superb!! Always I open my horoscope and compare it with what you given, this time it is positive, I have 9th house-34 points with 6 points for Mars.5th house with 29 points (just one point miss) with 5 points for jupiter... This gives tonic that I can overcome any difficulty with help of God!Thanks a lot for your blog. Keep Rocking!!
    -Shankar ////

    வாழ்க உங்கள் நம்பிக்கை! வளர்க உங்கள் இறையுணர்வு!

    ReplyDelete
  19. சில மாதங்கள் விடுமுறைக்குப் பிறகு உங்கள் தளத்திற்கு வருகிறேன்...சனிபகவான் கதை அற்புதம்.

    ReplyDelete
  20. ///Thangs Said: சில மாதங்கள் விடுமுறைக்குப் பிறகு உங்கள் தளத்திற்கு வருகிறேன்...சனிபகவான் கதை அற்புதம்.///

    பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com