மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

4.5.08

இந்தத் திருடனை எப்படித் துவைக்கலாம்?

இந்தத் திருடனை எப்படித் துவைக்கலாம்?

கடந்த மூன்று மாதங்களாக என்னுடைய வலைப்பூ மற்றும் மின்னஞ்சல் பாஸ்வேர்டைத் திருடுவதற்கு
யாரோ ஒரு கேடு கெட்டவன் ஆதீதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறான்.

தினம் ஒன்று அல்லது இரண்டு ‘Trap Mail' மெயில்கள்' வரும். விதம் விதமாக வரும். நான் எப்படியாவது
ஏமாந்து அதைக் கிளிக்கித் தொலைக்க மாட்டேனா என்று எதிர்பார்க்கிறது அந்த இழி பிறவி!

வருகிற மெயில்கள் எல்லாம் என்னுடைய பதிவுகளில் அடிக்கடி பின்னூட்டமிடுகின்ற, எனக்கு நன்கு
பரீட்சையமான பெயர்களிலேயே வரும்

ஒரு சமயம் இதைக் கிளிக்கிப் படித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள் என்று வரும், ஒரு சமயம்
இந்த அழைப்பைக் கிளிக்கிப் பாருங்கள் அல்லது ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வரும்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தத் தொல்லை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை
ஏமாறாமல் தப்பித்துக் கொண்டு வந்துள்ளேன்.

என்னுடன் இருக்கும் இறையருள் நான் ஏமார்ந்துவிடாமல் என்னைக் காக்கும்!

இதை மற்ற வலைப் பதிவர்கள் அறிவதற்காகத் தந்துள்ளேன். ஏனென்றால் இது உங்களுக்கும்
ஒரு நாள் நடைபெறலாம். கவனமாக இருங்கள்.

இன்று சகோதரி ரேவதிநரசிம்ஹன் அவர்கள் பெயரில் வந்த போலி மின்னஞ்சலை உங்கள்
பார்வைக்குக் கீழே கொடுத்துள்ளேன்
---------------------------------------------------------------------


வந்த மெயில் as it is


அனுப்பியவர் யாரென்று கிளிக்கிப் பார்க்கும்போது கிடைக்கும் வடிவம்

----------------------------------------------------------------------------------------
pimpmysearch.com என்ற இனையதளத்தில் இருந்து இந்த போலி மின்னஞ்சல்கள் வந்து
கொண்டிருக்கின்றன.
அந்த இணைய தளத்தில் இருந்து இவற்றை அனுப்பும் அந்தக் கழிசடை யார்?
கண்டுபிடிக்க வழியுண்டா?
எனக்கு கணினி அறிவு அவ்வளவாக இல்லை. வல்லுனர்கள் யாராவது
உதவ வேண்டுகிறேன்


அன்புடன்
SP.VR.சுப்பையா

22 comments:

வடுவூர் குமார் said...

இப்பதான் கொஞ்ச நேரத்துக்குமுந்தி ஒரு சொடுக்கு மட்டும் சொடுக்கினேன், அடுத்த சொடுக்குவதற்கு முன்பு சந்தேகம் வந்தது, தூக்கிட்டேன்.
நன்றி ஐயா.

SP.VR. SUBBIAH said...

ஆமாம் குமார. ஜாக்கிரதையாக இருங்கள். மின்னஞ்சலில் வரும் எதையுமே க்ளிக்கிப் பார்க்காதீர்கள்!

SP.VR. SUBBIAH said...

அந்தக் கேடு கெட்ட கயவனின் முகவரியைப் பார்த்தீர்களா?
pimpmysearch.com

அதற்குப் பொருள் என்ன தெரியுமா?

அதாவது pimp என்ற சொல்லிற்கு?

கீழே கொடுத்துள்ளேன்

Dictionary:
pimp
(pĭmp) pronunciation
n.

One who finds customers for a prostitute; a procurer.

intr.v., pimped, pimp·ing, pimps.
To serve as a procurer of prostitutes.
[Origin unknown.]
Free Online Dictionary, Encyclopedia, Thesaurus and much more
Search Answers.com

துளசி கோபால் said...

ஐய்யய்யோ........(-:

SP.VR. SUBBIAH said...

/// Sunday, May 04, 2008 9:54:00 AM
துளசி கோபால் said...

ஐய்யய்யோ........(-:////

மின்ஞசலில் யாராவது யு.ஆர்.எல் லிங்க் கொடுத்தால் க்ளிக்கிப் பார்க்க வேண்டாம் டீச்சர்.அவ்வளவுதான். கவனமாக இருந்தால் போதும்

துளசி கோபால் said...

இந்த ஐய்யய்யோ எதுக்குன்னா நான் க்ளிக்கிப் பார்த்துட்டு நம்ம டெல்ஃபீனுக்கும் ஒரு இன்விடேஷனை அனுப்பிட்டேன்(-:

ரேவதின்னு இருந்ததாலே அவ்வளவாக் கவனம் இல்லாமல் இருந்துட்டேன்.

உங்க பதிவைப் பார்த்தவுடந்தான் ரேவதிக்குத் தொலைபேசிக் கேட்டேன். அவுங்க யாருக்கும் அனுப்பவே இல்லையாம்.

இப்ப ஜிமெயில் பாஸ் வேர்டை மாத்தியாச்சு. அவுங்களையும் மாத்தச் சொல்லி இருக்கேன்.

டெல்பீனுக்கும் மடலில் சேதி சொல்லணும்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சுப்பையா,

இது போல தினமும் எனக்கு மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இது என்னவென்றால் இந்த அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ளுமிடத்து நமது பெயரை கூகுள் லோகோ போல வண்ணமயமாகக் காட்டும்.ஆனால் ஏற்றுக் கொள்ளும் போது நமது கூகுள் அக்கவுண்ட்,பாஸ்வேர்ட் கொடுக்கவேண்டி வரும்.நாம் கொடுத்து எமது பெயரைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்துக்குள் அது நமது மின்னஞ்சல் நண்பர்கள்,மற்றும் தேவையானவைகளைத் திருடிவிடும் நண்பரே.

உங்களது நல்ல பதிவு.நண்பர்களுக்கும் இதனை அனுப்பிவையுங்கள்.
அவர்களுக்குத் தெரியாமலே இந்த மின்னஞ்சல்கள் உங்களுக்கு வந்துகொண்டிருக்கும் !

சந்தோஷ் = Santhosh said...

வாத்தியாரய்யா,
இந்த வலைத்தளம் ஒரு personalised search engine, அதாவது கூகுள் தேடல் வலை தளத்துல கூகுளுக்கு பதில் உங்க பெயர் வந்தால் எப்படி இருக்கு, இது ஒரு மாதிரி fun வலைத்தளம்.. மற்றபடி நீங்க அந்த வலை தளத்தில் இருந்து yahoo, hotmail, gmail போன்ற தளங்களுக்கு சென்றால் சரியாக அந்த தளத்துக்கு தான் செல்கிறீர்கள் இதில் pishing போன்ற தாக்குதல் எனக்கு தெரிந்த வரை எதுவும் இல்லை.. பயப்பட தேவை இல்லை.. உங்களுக்கு வந்த invitations எல்லாம் உங்க நண்பர்கள் அனுப்பியவையாக தான் இருக்கும்.. அவர்களிடம் கேட்டுப்பாருங்க.

திவா said...

ஐயா ஜிமெய்ல் இல் பார்க்கும்போது மேலே ஒரு பெட்டி இருக்கும் பாருங்க. more actions.அது பக்கத்துல இருக்கிற அம்பு குறியை சொடுக்கினா தேர்வுகள் வரும். அதில் filter messages like this தேர்வு செய்யுங்க. உள்ளே இருக்கிற உண்மை முகவரியை வைத்து பில்டர் வரும்.

அடுத்த முகவரிலேந்து வரும் வரை இதே ஆசாமிகிட்டேந்து தப்பிக்கலாம். :-))

விக்னேஷ்வரன் said...

இப்படியும் சில விஷ பூச்சிகள் உண்டா?

SP.VR. SUBBIAH said...

/////துளசி கோபால் said...
இந்த ஐய்யய்யோ எதுக்குன்னா நான் க்ளிக்கிப் பார்த்துட்டு நம்ம டெல்ஃபீனுக்கும் ஒரு இன்விடேஷனை அனுப்பிட்டேன்(-:
ரேவதின்னு இருந்ததாலே அவ்வளவாக் கவனம் இல்லாமல் இருந்துட்டேன்.
உங்க பதிவைப் பார்த்தவுடந்தான் ரேவதிக்குத் தொலைபேசிக் கேட்டேன். அவுங்க யாருக்கும் அனுப்பவே இல்லையாம்.
இப்ப ஜிமெயில் பாஸ் வேர்டை மாத்தியாச்சு. அவுங்களையும் மாத்தச் சொல்லி இருக்கேன்.
டெல்பீனுக்கும் மடலில் சேதி சொல்லணும்.///

டாக்டரம்மாவிற்கு உடனே சொல்லிவிடுங்கள்!
விரிவான பதில் தகவலுக்கு நன்றி டீச்சர்!

SP.VR. SUBBIAH said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
அன்பின் சுப்பையா,
இது போல தினமும் எனக்கு மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இது என்னவென்றால் இந்த அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ளுமிடத்து நமது பெயரை கூகுள் லோகோ போல வண்ணமயமாகக் காட்டும்.ஆனால் ஏற்றுக் கொள்ளும் போது நமது கூகுள் அக்கவுண்ட்,பாஸ்வேர்ட் கொடுக்கவேண்டி வரும்.நாம் கொடுத்து எமது பெயரைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்துக்குள் அது நமது மின்னஞ்சல் நண்பர்கள்,மற்றும் தேவையானவைகளைத் திருடிவிடும் நண்பரே.
உங்களது நல்ல பதிவு.நண்பர்களுக்கும் இதனை அனுப்பிவையுங்கள்.
அவர்களுக்குத் தெரியாமலே இந்த மின்னஞ்சல்கள் உங்களுக்கு வந்துகொண்டிருக்கும் !///

உங்களுடைய விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரரே!

SP.VR. SUBBIAH said...

////சந்தோஷ் = Santhosh said..
வாத்தியாரய்யா,
இந்த வலைத்தளம் ஒரு personalised search engine, அதாவது கூகுள் தேடல் வலை தளத்துல கூகுளுக்கு பதில் உங்க பெயர் வந்தால் எப்படி இருக்கு, இது ஒரு மாதிரி fun வலைத்தளம்.. மற்றபடி நீங்க அந்த வலை தளத்தில் இருந்து yahoo, hotmail, gmail போன்ற தளங்களுக்கு சென்றால் சரியாக அந்த தளத்துக்கு தான் செல்கிறீர்கள் இதில் pishing போன்ற தாக்குதல் எனக்கு தெரிந்த வரை எதுவும் இல்லை.. பயப்பட தேவை இல்லை.. உங்களுக்கு வந்த invitations எல்லாம் உங்க நண்பர்கள் அனுப்பியவையாக தான் இருக்கும்.. அவர்களிடம் கேட்டுப்பாருங்க.////

இல்லை மிஸ்டர் சந்தோஷ் மூன்று மாதங்களாக எனக்குப் பல பெயரில் வந்து கொண்டிருக்கின்றன!
இது திருட்டு மெயில் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நீங்கள் மேலே உள்ள துளசி டீச்சரின் பின்னூட்டத்தைப் படித்துப் பார்த்துவிட்டு மீண்டும் வாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

///திவா said...
ஐயா ஜிமெய்ல் இல் பார்க்கும்போது மேலே ஒரு பெட்டி இருக்கும் பாருங்க. more actions.அது பக்கத்துல இருக்கிற அம்பு குறியை சொடுக்கினா தேர்வுகள் வரும். அதில் filter messages like this தேர்வு செய்யுங்க. உள்ளே இருக்கிற உண்மை முகவரியை வைத்து பில்டர் வரும்.
அடுத்த முகவரிலேந்து வரும் வரை இதே ஆசாமிகிட்டேந்து தப்பிக்கலாம். :-))////

உங்கள் அன்பான தகவலுக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி மிஸ்டர் திவா!

SP.VR. SUBBIAH said...

////விக்னேஷ்வரன் said...
இப்படியும் சில விஷ பூச்சிகள் உண்டா?///

ஆமாம் விக்னேஷ் பூச்சி கடித்துவைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்

ஒரிஜினல் "மனிதன்" said...

எல்லாம் விதிண்னே.விட்டுத்தள்ளுங்க.
நம்ம கையில என்ன இருக்கு.மரம் வச்சவன் தண்ணி ஊத்தாமலா இருப்பான்.கெரக நேரஞ்சரியில்லனா இப்பிடித்தான்.கவலப்படாதீங்க.

சென்ஷி said...

தகவலுக்கு நன்றி ஆசானே...

எனக்கும் இப்படி இன்விடேஷன் வந்தது. இந்த பதிவ படிச்சப்புறம் நானும் என் மெயில் ஐடி மாத்திட்டேன்.

அப்புறம் நான் எப்பவுமே ஒரு மாசத்துக்கு இல்ல ரெண்டு மாசத்துக்கு ஒருதபா இப்படி பாஸ்வேர்டு மாத்தறது வழக்கமாகிப்போச்சு :(

அன்பு மாணவன்

சென்ஷி

SP.VR. SUBBIAH said...

//////ஒரிஜினல் "மனிதன்" said...
எல்லாம் விதிண்னே.விட்டுத்தள்ளுங்க.
நம்ம கையில என்ன இருக்கு.மரம் வச்சவன் தண்ணி ஊத்தாமலா இருப்பான்.கெரக நேரஞ்சரியில்லனா இப்பிடித்தான்.கவலப்படாதீங்க./////

நான் விட்டுத்தள்ளிட்டேன் சாமி!
மற்றவர்களுக்கு அறியத் தரவேண்டாமா?
அதற்குத்தான் இந்த இடுகை!

SP.VR. SUBBIAH said...

/////சென்ஷி said...
தகவலுக்கு நன்றி ஆசானே...
எனக்கும் இப்படி இன்விடேஷன் வந்தது. இந்த பதிவ படிச்சப்புறம் நானும் என் மெயில் ஐடி மாத்திட்டேன்.
அப்புறம் நான் எப்பவுமே ஒரு மாசத்துக்கு இல்ல ரெண்டு மாசத்துக்கு ஒருதபா இப்படி பாஸ்வேர்டு மாத்தறது வழக்கமாகிப்போச்சு :(
அன்பு மாணவன்
சென்ஷி////

வாங்க சென்ஷி! கவனமாக இருங்க அவ்வளவுதான்!
மற்றபடி வருவது வரட்டும்; எதிர் கொள்வோம்!

Anonymous said...

இன்றைய நமது பாரத தேசத்தின் பிரமாண்ட பொருளாதார வளர்ச்சிக்கு ஆங்கில அறிவுதான் காரணம்(software).
ஆங்கில அறிவில் நம்மிடம் போட்டி போடமுடியாமல் தான் சீனா நமது web site களில் கள்ளத்தனமாக நுளைந்து அதை கெடுக்க முயலுவதாக செய்தி.(இதை போல் தான் தங்கள் பதிவிலும் ஒருவன் கெடுதல் வேலை செய்வதாகவும் அதை தடுக்க வழி கேட்டுள்ளிர்கள்.please ask help for this to SRI PKP
( http://pkp.blogspot.com/ )
உங்கள் எச்சரிக்கை பதிவு அனவருக்கும் உதவியாக இருக்கும்.

Anonymous said...

//pimpmysearch.com என்ற இனையதளத்தில் இருந்து இந்த போலி மின்னஞ்சல்கள் வந்து
கொண்டிருக்கின்றன. அந்த இணைய தளத்தில் இருந்து இவற்றை அனுப்பும் அந்தக் கழிசடை யார்?
கண்டுபிடிக்க வழியுண்டா? எனக்கு கணினி அறிவு அவ்வளவாக இல்லை. வல்லுனர்கள் யாராவது
உதவ வேண்டுகிறேன//
please seek help from mr pkp

http://pkp.blogspot.com/

கிரி said...

உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி. கவனமாக இருக்க முயல்கிறேன். நான் பொதுவாக எனக்கு சந்தேகமாக உள்ள மின்னஞ்சல் முகவரிகளை திறக்காமல் நீக்கி விடுகிறேன்.