மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.5.08

நண்பர் கொத்தனாருக்காக ஒரு பதிவு!

நண்பர் கொத்தனாருக்காக ஒரு பதிவு!

அலுவலகத்தில் தூங்குவது சாத்தியமா? சாத்தியம் என்று ஒருவர் நிருபித்திருக்கிறார்

அதுவும் ஆதாரங்களுடன்.

எழு படங்கள் உள்ளன!

பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!

நம் வலைப்பதிவின் ஆராய்ச்சி நிபுணர் கொத்தனார் அவர்கள்தான் இது சாத்தியம்
என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனால்தான் அவரை அழைக்கும் முகமாகப்
பதிவின் தலைப்பு உள்ளது.

அவர் சரியாகச் சொல்வார். அனுபவம் மிக்கவர்:-)))

நீங்களும் சொல்லுங்கள்! இது சாத்தியம்தானா?

எந்த பொஸிசனில் தூங்குவது வசதி?

படத்தின் எண்ணைச் சொல்லுங்கள்

நானும் தெரிந்து கொள்கிறேன்!

(படங்கள் மின்னஞ்சலில் வந்தவை!)
----------------------------------------------------------------------------




1



2


3


4


5


6


7


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

35 comments:

  1. வாத்தியாரய்யா,

    இப்போ வீட்டுலேயே சரியாத் தூக்கமில்லை, இதில் ஆபீஸில் போய் எங்க. அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும்.

    நாம எல்லாம் தூங்கினா, சேரை மேஜை பக்கத்தில் போட்டுக்கிட்டு, மேஜையில் கையை மடிச்சு வெச்சு அதில் தலை சாய்ச்சு வெச்சு தூங்கறது. எது இம்புட்டு எல்லாம் கஷ்டப்படணும்.....

    ஆனா இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் நம்ம பெனாத்தல் டிபார்ட்மெண்ட். ஓவர் டு பெனாத்தல்!! :))

    ReplyDelete
  2. /////இலவசக்கொத்தனார் said...
    வாத்தியாரய்யா,
    இப்போ வீட்டுலேயே சரியாத் தூக்கமில்லை, இதில் ஆபீஸில் போய் எங்க. அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும்.
    நாம எல்லாம் தூங்கினா, சேரை மேஜை பக்கத்தில் போட்டுக்கிட்டு, மேஜையில் கையை மடிச்சு வெச்சு அதில் தலை சாய்ச்சு வெச்சு தூங்கறது. எது இம்புட்டு எல்லாம் கஷ்டப்படணும்.....
    ஆனா இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் நம்ம பெனாத்தல் டிபார்ட்மெண்ட். ஓவர் டு பெனாத்தல்!! :))/////

    நீங்க சொன்னா சரிதான் கொத்தனாரே!
    நம்ம பெனாத்தலார் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்!
    ஒருவேளை, அவர் ரஷ்ய டாக்டரைக் கேளுங்கன்னு தள்ளி விட்டாருன்னா என்ன செய்யறது?

    ReplyDelete
  3. மேலே படத்தில் இருப்பது கொத்தனார் இல்லை என்பது தெள்ளத் தெளிவாத் தெரியுது வாத்தியார் ஐயா!

    கொத்ஸ் தூங்கினாலும் அவருக்கு முன்னாடி அந்தப் பின்னூட்டப் பெட்டி திரையில் இருக்கும்! அது இல்லையே!
    ஆக...
    இவன் கொத்தனார் இல்லை! :-)

    ReplyDelete
  4. ///K.R.S Said:மேலே படத்தில் இருப்பது கொத்தனார் இல்லை என்பது தெள்ளத் தெளிவாத் தெரியுது வாத்தியார் ஐயா!கொத்ஸ் தூங்கினாலும் அவருக்கு முன்னாடி அந்தப் பின்னூட்டப் பெட்டி திரையில் இருக்கும்! அது இல்லையே!
    ஆக...
    இவன் கொத்தனார் இல்லை! :-) ////

    என்னே ஆராய்ச்சி!
    முதலில் கொத்தனாரின் பின்னூட்டத்தைப் படியுங்கள் கே.ஆர் எஸ்.
    மனிதர் தூக்கம் இல்லையென்று எவ்வளவு வருத்தத்துடன் இருக்கிறார்.
    ஒபாமா வெற்றி பெற்றால் - தூக்கம் வருமா என்று கேட்டுச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  5. கொத்தனார் --> பெனாத்தலார் --> இரஷ்ய மருத்துவர் என்று சொல்லியிருக்கிறீர்கள் வாத்தியார் ஐயா. மும்மூர்த்திகளைப் போன்ற இந்த மூவரும் ஒருவரங்கத்து ஒருவர் உளர் என்று ஆழ்வார் பாடியது போல் ஒரே ஆள் தான் என்பதை அறிவீர்களா? :-)

    ReplyDelete
  6. ஒபாமாவுக்கும் கொத்ஸ்க்கும் என்ன(வாத்தியார்)ய்யா சம்பந்தம்?

    எல்லாம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

    காரணம் புரிஞ்சால் சரி:-)))))

    ReplyDelete
  7. மானிட்டர பாத்த மாதிரி,தூங்குவதுதான் என்னோட ஸ்டைல்...மெளஸ் அப்பப்ப மூவ் பண்ணிகிட்டே இருக்கணும்:-))

    ReplyDelete
  8. /////////குமரன் (Kumaran) said...
    கொத்தனார் --> பெனாத்தலார் --> இரஷ்ய மருத்துவர் என்று சொல்லியிருக்கிறீர்கள் வாத்தியார் ஐயா. மும்மூர்த்திகளைப் போன்ற இந்த மூவரும் ஒருவரங்கத்து ஒருவர் உளர் என்று ஆழ்வார் பாடியது போல் ஒரே ஆள் தான் என்பதை அறிவீர்களா? :-)/////

    என்ன புதுக்குழப்பம் குமரனாரே?
    மூவரும் பெயரால் ஒரு அரங்கரா?
    இல்லை பிறந்த ஊரால் ஒரு அரங்கத்தைச் சேர்ந்தவர்களா?
    சீக்கிரம் சொல்லுங்கள்! இல்லையென்றால் எனக்கும் தூக்கம் போய்விடும்!:-))))

    ReplyDelete
  9. /////துளசி கோபால் said...
    ஒபாமாவுக்கும் கொத்ஸ்க்கும் என்ன(வாத்தியார்)ய்யா சம்பந்தம்?
    எல்லாம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
    காரணம் புரிஞ்சால் சரி:-)))))////

    நீங்கள் கோடிட்டுக் காட்டிவிட்டீர்கள். இப்போது நன்றாகப் புரிகிறது டீச்சர்!

    ReplyDelete
  10. ///////தங்ஸ் said...
    மானிட்டர பாத்த மாதிரி,தூங்குவதுதான் என்னோட ஸ்டைல்...மெளஸ் அப்பப்ப மூவ் பண்ணிகிட்டே இருக்கணும்:-))/////

    உங்க ஆபிஸிலே டீம் லீடரெல்லாம் கிடையாதா?
    இல்லை அவரும் இப்படித் தூங்குபவரா?

    ReplyDelete
  11. மூவரும் தனித்தனியர்கள் தான். எப்படி சிவனும் பெருமாளும் ஒருவர் அங்கத்துள் ஒருவர் இருக்கிறார்களோ அந்த மாதிரி இணைபிரியாத நண்பர்கள்ன்னு சொல்ல வந்தேன். :-)

    ReplyDelete
  12. சுப்பையா சார்,

    ஆபீஸ்லே தூங்கறதுக்கு ஒரு கொடுப்பினை வேணும். இந்த மெத்தட்ஸை யூஸ் பண்ணி பாக்கலாம்:

    1. தூங்கிக் கொண்டே உம் கொட்டும் முறை : பாஸ் முக்கியமான (அவருக்கு முக்கியமான) மேட்டர் பற்றி பேசும் போது இந்த முறை உபயோகப்படும். என்ன அப்பப்ப நீங்க சொல்றது சரிதான் சார்.. என்றும் தூக்கத்திலே சிரிக்கறதுக்கும் பழகிக்கணும்.

    2. மீட்டிங்: மீட்டிங்கில் தூங்குவது, பேசும் எனக்கு எரிச்சல் ஊட்டும் என்றாலும் எல்லாரும் செய்வதுதான். என்ன, குறட்டை மட்டும் விடாமல் இருந்தால் போதும்.

    3. இது புத்தம்புது மெத்தட்: நீங்கள் வேலை செய்யும்போது அவ்வப்போது கணினி ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அந்த ஸ்க்ரீன்ஷாட்களையெல்லாம் வைத்து ஒரு ஸ்க்ரீன்சேவர் தயாரித்துக்கொள்ளுங்கள்,. வேலை நேரத்தின்போது தூங்கி, ஸ்க்ரீன்சேவர் ஓடினாலும் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ வேலை செய்வது போலவே தோற்றமளிக்கும்..

    கொத்தண்ணா, ஆராய்ச்சி எல்லாம் இல்லை.. யார் கண்ணுலயும் சுலபமா பட்டுறாத ஒரு சூப்பர் இடம் மாட்டிச்சு, லஞ்ச் டைம்லே தூங்கிட்டேன்.. இதை வச்சு பில்ட் அப் கொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  13. வாத்தியரே no.2 , பாதுகாப்பான போஸிசன், என்ன நான் சொல்வது கரெக்ட் தானே வாத்தியரே?

    உங்கள் முதல் வரிசை மாணவன்,
    விமல்

    ReplyDelete
  14. // தூங்கிக் கொண்டே உம் கொட்டும் முறை : பாஸ் முக்கியமான (அவருக்கு முக்கியமான) மேட்டர் பற்றி பேசும் போது இந்த முறை உபயோகப்படும். என்ன அப்பப்ப நீங்க சொல்றது சரிதான் சார்.. என்றும் தூக்கத்திலே சிரிக்கறதுக்கும் பழகிக்கணும்.//

    நமக்கு வேண்டப்பட்டவர் ஒருத்தர் இப்படித்தான் கனகாலமாச் செஞ்சுக்கிட்டு இருக்கார், ஒன்னே ஒன்னைத் தவிர.

    //சரிதான் சார்// இதில் 'சார்' மட்டும் மிஸ்ஸிங்:-)


    இங்கே யாரு சார் மோர் எல்லாம் சொல்றதில்லை ஆஃபீஸில்:-)

    ReplyDelete
  15. /What to say - Sleepless nights!//
    இதுதான் உங்க ஜிடாக் Status Message. அதனால ஆபிசுல தூக்கமா?

    ஓவர் டூ பெனாத்தலா? கரணம் தப்பினால் மரணம்னு தொழில் பண்றவரு பெனாத்தலு, அவரு தூங்கிட்டா யாரு இன்சுரன்ஸ் பணம் வாங்கப் போறது?

    ReplyDelete
  16. ////குமரன் (Kumaran) said...
    மூவரும் தனித்தனியர்கள் தான். எப்படி சிவனும் பெருமாளும் ஒருவர் அங்கத்துள் ஒருவர் இருக்கிறார்களோ அந்த மாதிரி இணைபிரியாத நண்பர்கள்ன்னு சொல்ல வந்தேன். :-)////

    அதாவது, குமரன் - கே.ஆர்.எஸ் - ஜி.ரா மூவரையும் போல!
    சரிதானா?

    ReplyDelete
  17. ////மதுரையம்பதி said...
    :-)///
    என்ன வெறும் ஸ்மைலி மட்டுமா?

    ReplyDelete
  18. ////////பினாத்தல் சுரேஷ் said...
    சுப்பையா சார்,
    ஆபீஸ்லே தூங்கறதுக்கு ஒரு கொடுப்பினை வேணும். இந்த மெத்தட்ஸை யூஸ் பண்ணி பாக்கலாம்:
    1. தூங்கிக் கொண்டே உம் கொட்டும் முறை : பாஸ் முக்கியமான (அவருக்கு முக்கியமான) மேட்டர் பற்றி பேசும் போது இந்த முறை உபயோகப்படும். என்ன அப்பப்ப நீங்க சொல்றது சரிதான் சார்.. என்றும் தூக்கத்திலே சிரிக்கறதுக்கும் பழகிக்கணும்.
    2. மீட்டிங்: மீட்டிங்கில் தூங்குவது, பேசும் எனக்கு எரிச்சல் ஊட்டும் என்றாலும் எல்லாரும் செய்வதுதான். என்ன, குறட்டை மட்டும் விடாமல் இருந்தால் போதும்.
    3. இது புத்தம்புது மெத்தட்: நீங்கள் வேலை செய்யும்போது அவ்வப்போது கணினி ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அந்த ஸ்க்ரீன்ஷாட்களையெல்லாம் வைத்து ஒரு ஸ்க்ரீன்சேவர் தயாரித்துக்கொள்ளுங்கள்,. வேலை நேரத்தின்போது தூங்கி, ஸ்க்ரீன்சேவர் ஓடினாலும் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ வேலை செய்வது போலவே தோற்றமளிக்கும்.
    கொத்தண்ணா, ஆராய்ச்சி எல்லாம் இல்லை.. யார் கண்ணுலயும் சுலபமா பட்டுறாத ஒரு சூப்பர் இடம் மாட்டிச்சு, லஞ்ச் டைம்லே தூங்கிட்டேன்.. இதை வச்சு பில்ட் அப் கொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.////

    கொத்தண்ணாவின் இப்போதைய கவலை வீட்டில் எப்படித் தூங்குவது என்பது மாட்டுமே1
    அதற்கு ஏதாவது யோசனை இருக்கிறதா பெனாத்தலாரே?

    ReplyDelete
  19. ////vimal said...
    வாத்தியரே no.2 , பாதுகாப்பான போஸிசன், என்ன நான் சொல்வது கரெக்ட் தானே வாத்தியரே?
    உங்கள் முதல் வரிசை மாணவன்,
    விமல்/////

    வேலை செய்யும் இடத்தில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம்!

    ReplyDelete
  20. ////////துளசி கோபால் said...
    // தூங்கிக் கொண்டே உம் கொட்டும் முறை : பாஸ் முக்கியமான (அவருக்கு முக்கியமான) மேட்டர் பற்றி பேசும் போது இந்த முறை உபயோகப்படும். என்ன அப்பப்ப நீங்க சொல்றது சரிதான் சார்.. என்றும் தூக்கத்திலே சிரிக்கறதுக்கும் பழகிக்கணும்.//
    நமக்கு வேண்டப்பட்டவர் ஒருத்தர் இப்படித்தான் கனகாலமாச் செஞ்சுக்கிட்டு இருக்கார், ஒன்னே ஒன்னைத் தவிர.
    //சரிதான் சார்// இதில் 'சார்' மட்டும் மிஸ்ஸிங்:-)
    இங்கே யாரு சார் மோர் எல்லாம் சொல்றதில்லை ஆஃபீஸில்:-)/////

    இது எல்லா வீட்டு அரசிகளுக்கும் உள்ள பொதுவான மனக்குறை டீச்சர்!
    நான் சொல்வது சரிதானே?

    ReplyDelete
  21. வாத்தியாரே..

    உலகம் முழுக்க மதிய நேரத்துல ஆபீஸ்ல தூங்குறது யாருன்னு சர்வே வெச்சா அதுல நாமதான் பர்ஸ்ட்டா இருப்போம்..

    கரெக்ட்டா..?

    ReplyDelete
  22. இதெல்லாம் இந்தியாவில வேணா நடக்கும்...
    இங்க, Oh..arivan,you are so tired,pl take rest at home..அப்படின்னு சொல்லி ஒருநாள் சம்பளம் அல்லது விடுப்பைக் காவு வாங்கிடுவாங்க....

    ReplyDelete
  23. /////ILA said...
    /What to say - Sleepless nights!//
    இதுதான் உங்க ஜிடாக் Status Message. அதனால ஆபிசுல தூக்கமா?
    ஓவர் டூ பெனாத்தலா? கரணம் தப்பினால் மரணம்னு தொழில் பண்றவரு பெனாத்தலு, அவரு தூங்கிட்டா யாரு இன்சுரன்ஸ் பணம் வாங்கப் போறது?////

    அய்யோ பாவம், நல்ல இருக்கட்டும் சாமி!
    கொத்தனார் சார்பில...ஸாரி!

    ReplyDelete
  24. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    உலகம் முழுக்க மதிய நேரத்துல ஆபீஸ்ல தூங்குறது யாருன்னு சர்வே வெச்சா அதுல நாமதான் பர்ஸ்ட்டா இருப்போம்..
    கரெக்ட்டா..? ////

    கரெக்ட்டாச் சொல்லிட்டீயே செல்லம்!

    ReplyDelete
  25. /////அறிவன்#11802717200764379909 said...
    இதெல்லாம் இந்தியாவில வேணா நடக்கும்...
    இங்க, Oh..arivan,you are so tired,pl take rest at home..அப்படின்னு சொல்லி ஒருநாள் சம்பளம் அல்லது விடுப்பைக் காவு வாங்கிடுவாங்க....////

    சில வங்கிகளில் மதியம் ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் இங்கே தூங்குபவர்கள் உண்டு.
    அதற்கு அவர்கள் வங்கிகளில் உள்ள டைனிங் ஹால்களைப் பயன் படுத்துவார்கள். அதற்குப் பிராயச் சித்தமாக
    மாலையில் அதிகப்படியாக ஒரு மணி நேரம் வேலை செய்துவிட்டுப் பிறகு வீட்டிற்குச் செல்வார்கள்!

    ReplyDelete
  26. Photos and comments are very interesting.But i will have to claim myself as unlucky,because in my 36 years of sevice(half of which with public sector Banks and second half with private sector)neither i got a chance to sleep in my office nor to enjoy a scene like this.Mr.subbiah sir your articles are interesting.Sorry i will learn Tamil typing.

    ReplyDelete
  27. //////Chandramohan said...
    Photos and comments are very interesting.But i will have to claim myself as unlucky,because in my 36 years of sevice(half of which with public sector Banks and second half with private sector)neither i got a chance to sleep in my office nor to enjoy a scene like this.Mr.subbiah sir your articles are interesting.Sorry i will learn Tamil typing.///

    நன்றி திரு.சந்திரமோகன். தமிழில் சுலபமாக எழுதலாமே!
    தமிழ்மணம் முகப்பில் அதற்கான செய்திகள் உள்ளதே. முயன்று பாருங்கள்!

    ReplyDelete
  28. //////Chandramohan said...
    Photos and comments are very interesting.///

    Thank you very much!


    //////But i will have to claim myself as unlucky,because in my 36 years of sevice(half of which with public sector Banks and second half with private sector)neither i got a chance to sleep in my office nor to enjoy a scene like this.Mr.subbiah sir your articles are interesting.Sorry i will learn Tamil typing.///

    தமிழ்மணம் முகப்பைப் பாருங்கள். தமிழில் தட்டச்ச உங்களுக்கு உதவி காத்துக் கொண்டிருக்கிறது.
    கீ போர்டு பிர்ச்சினை எல்லாம் இருக்காது. சுலபம். amma = அம்மா, appaa= அப்பா, அவ்வளவுதான்!

    ReplyDelete
  29. அற்புதமான தூக்கம், எந்த பொசிசனில் தூங்கினால் என்ன?
    ஆபிசில் தூங்க கொடுத்து வைக்க வேண்டும் !!
    எனக்கு கடந்த பதினான்கு வருட அலுவலக வாழ்கையில் இந்த பாக்யம் கிடைக்கவில்லை ..
    நெருப்பை கட்டிக்கொண்டு தான் வேலை.
    இது போன்ற ஆபிசில் எனக்கு ஒரு வேலை வேண்டும்.
    வாத்தியாரு அய்யா, இது போன்ற வேலை கிடைக்க என்ன மாதிரி ஜாதக அமைப்பு வேண்டும் ??

    ReplyDelete
  30. ஹலோ சார்,

    என்ன கேட்டா, பக்கத்துல இருக்கிறவன்
    கூட பேசிட்டே தூங்கறதுல ஒரு தனி சுகம் இருக்கு. யாருக்கும் சந்தேகமே வராது. இது எப்படி ....

    ReplyDelete
  31. 3. இது புத்தம்புது மெத்தட்: நீங்கள் வேலை செய்யும்போது அவ்வப்போது கணினி ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அந்த ஸ்க்ரீன்ஷாட்களையெல்லாம் வைத்து ஒரு ஸ்க்ரீன்சேவர் தயாரித்துக்கொள்ளுங்கள்,. வேலை நேரத்தின்போது தூங்கி, ஸ்க்ரீன்சேவர் ஓடினாலும் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ வேலை செய்வது போலவே தோற்றமளிக்கும்..

    Pinaththal Suresh's idea no 3 is simply suberb.

    Regards
    Sara,
    CMB

    ReplyDelete
  32. /////கனிமொழி said...
    அற்புதமான தூக்கம், எந்த பொசிசனில் தூங்கினால் என்ன?
    ஆபிசில் தூங்க கொடுத்து வைக்க வேண்டும் !!
    எனக்கு கடந்த பதினான்கு வருட அலுவலக வாழ்கையில் இந்த பாக்யம் கிடைக்கவில்லை ..
    நெருப்பை கட்டிக்கொண்டு தான் வேலை.
    இது போன்ற ஆபிசில் எனக்கு ஒரு வேலை வேண்டும்.
    வாத்தியாரு அய்யா, இது போன்ற வேலை கிடைக்க என்ன மாதிரி ஜாதக அமைப்பு வேண்டும் ??////

    சாப்பாடு, தூக்கம் எல்லாம் அசத்தலாக அமைய நான்காம் வீடு (House of comforts - சுகஸ்தானம்)
    நன்றாக இருக்க வேண்டும்!

    ReplyDelete
  33. ////////Sumathi. said...
    ஹலோ சார்,
    என்ன கேட்டா, பக்கத்துல இருக்கிறவன்
    கூட பேசிட்டே தூங்கறதுல ஒரு தனி சுகம் இருக்கு. யாருக்கும் சந்தேகமே வராது. இது எப்படி ....?/////

    நீங்க சொன்னா சரிதான் அம்மணி! (சகோதரி!)

    ReplyDelete
  34. ///////Anonymous said...
    3. இது புத்தம்புது மெத்தட்: நீங்கள் வேலை செய்யும்போது அவ்வப்போது கணினி ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அந்த ஸ்க்ரீன்ஷாட்களையெல்லாம் வைத்து ஒரு ஸ்க்ரீன்சேவர் தயாரித்துக்கொள்ளுங்கள்,. வேலை நேரத்தின்போது தூங்கி, ஸ்க்ரீன்சேவர் ஓடினாலும் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ வேலை செய்வது போலவே தோற்றமளிக்கும்..
    Pinaththal Suresh's idea no 3 is simply suberb.
    Regards
    Sara,
    CMB//////

    சரி, உங்கள் பாராட்டைப் பெனாத்தலாரிடம் சொல்லி விடுகிறேன் சரவணன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com