மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

6.5.08

எல்லாம் இருக்கிறது; நீ மட்டும் எங்கே போனாய்?

நெத்தியடியான பாடல் வரிகள் - பகுதி 2

எல்லாம் இருக்கிறது; நீ மட்டும் எங்கே போனாய்?

சட்டையைப் பிடித்து உலுக்குவது. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது.
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு மட்டுமே
கைவந்த கலை. அப்படிச் சொல்லப்பட்ட வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------------------------------------------
எல்லாம் இருக்கிறது; நீ மட்டும் எங்கே போனாய்?

”நீ பிறந்த வீடு இருக்கிறது. நீ பொருள் சேர்த்துக் கட்டிய வீடு இருக்கிறது
உன்னைப்பெற்றவள் இருக்கிறாள், உன் கரம் பிடித்தவளும் இருக்கிறாள்
நீ பெற்ற பிள்ளைகளும் இருக்கின்றன
நீ பெற்ற விருதுகளும், ஊர் பேசிய பெருமைகளும் இருக்கின்றன
உற்றார் உறவினர்களும் இருக்கிறார்கள், சேர்த்த பொருள்களும் இருக்கின்றன
உணக்கு அடுத்த வேளை உணவும் தயாராக இருக்கிறது. இத்தனை காலமும்
உனக்கு உருவமளித்த உடலும் இங்கே இருக்கிறது -உயிரற்ற நிலையில்!
உன்னை மட்டும் காணவில்லையே - எங்கே போனாய்?”

என்று மனித வாழ்வு, ஒருநாள் முடிந்து, ஒன்றுமில்லாமல் போய் விடும்
அவலத்தை, ஒரு ஞானி நான்கே வரிகளில் நெத்தியடியாகப் பாட்டில்
சொன்னார்

அதை உங்களுக்காக இன்று கொடுத்துள்ளேன்

”வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”
- பட்டினத்தார்

பீடு = பெருமை (Honour)
ஊண் = உணவு (food)
----------------------------------------------------------------------------------
இந்தப் பாட்டிலுள்ள கருத்தைக் கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் எளிமைப்படுத்தி இப்படிச்சொன்னார்:

அடிய ஆட்டமென்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
பேசிய வார்த்தையென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?

---------------------------------------------------------------------------------------------

6 comments:

Anonymous said...

சேர்த்து வைத்த பாவ புண்ணியங்கள் மட்டும்தான் !!!

அன்புடன்
இராசகோபால்

SP.VR. SUBBIAH said...

////Anonymous said...
சேர்த்து வைத்த பாவ புண்ணியங்கள் மட்டும்தான் !!!
அன்புடன்
இராசகோபால்////

அதைப் பட்டினத்தாரே வேறு ஒருபாடலில் சொல்லியுள்ளார்

பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமுமே!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்தியாரே..

நம்ம வாத்தியாருக்கு வாத்தியார் பட்டினத்தார்..

அவரையொட்டி "அர்த்தமுள்ள இந்து மதத்தில்" அவர் எழுதியவைகள்தான் பட்டினத்தார் பற்றிய எனது முதல் அறிமுகம்.

அதுவே ஆலமரத்தாணி போல் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

முன்வினையோ, பின்வினையோ.. வருவதை, வந்ததை யார் மீதும் பழி போடாமல் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மனிதருக்கு வந்தால் அதுவே நோய் தீர்க்கும் மருந்தாகும்.

டிஸ்கி : நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் வரிகளில் "பேசிய வார்த்தையென்ன" என்ற வரிகள் இரண்டாவதாக வர வேண்டியவை என்று நினைக்கிறேன்.

நான் பாடி பார்த்தேன். எனக்கு சுதி பிசுறுகிறது.. உங்களுக்கு..?

SP.VR. SUBBIAH said...

////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே..
நம்ம வாத்தியாருக்கு வாத்தியார் பட்டினத்தார்..
அவரையொட்டி "அர்த்தமுள்ள இந்து மதத்தில்" அவர் எழுதியவைகள்தான் பட்டினத்தார் பற்றிய எனது முதல் அறிமுகம்.
அதுவே ஆலமரத்தாணி போல் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
முன்வினையோ, பின்வினையோ.. வருவதை, வந்ததை யார் மீதும் பழி போடாமல் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மனிதருக்கு வந்தால் அதுவே நோய் தீர்க்கும் மருந்தாகும்.
டிஸ்கி : நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் வரிகளில் "பேசிய வார்த்தையென்ன" என்ற வரிகள் இரண்டாவதாக வர வேண்டியவை என்று நினைக்கிறேன்.
நான் பாடி பார்த்தேன். எனக்கு சுதி பிசுறுகிறது.. உங்களுக்கு..?////

ஆமாம் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. புத்தகம் உள்ளது எடுத்துப் பார்த்து மாற்றிவிடுகிறேன். நன்றி!

வடுவூர் குமார் said...

என்னை “இடிக்குது”. :-)))

தியாகராஜன் said...

கவியரசரின் வைர வரிகள் உங்களால் பட்டை தீட்டப்படுகின்றன.