மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.5.08

ஜோதிடத் தொடர்: ராகு திசை,கேது திசை எனக்கில்லையா?



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜோதிடத் தொடர்: ராகு திசை,கேது திசை எனக்கில்லையா?

இரவு நேரம். வீட்டில் மின்சாரம் தடைப்படுகிறது. இருள் சூழ்கிறது!

என்ன செய்வீர்கள்?

முதலில் மின் இலாக்காவை அல்லது திருவாளர் ஆற்காட்டாரைத் திட்டி விட்டு,
கஷ்டப்பட்டு மேஜை மேலிருக்கும் டார்ச் லைட்டை எடுப்பீர்கள்.

இன்னும் சிலர் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டு, இரவுத்தூக்கம்
கெட்டுவிடுமே என்ற கவலையுடன், ஃப்யூஸ் கால் அலுவலகத்திற்குப் போன்
செய்து, “எப்போது மின்சாரம் மீண்டும் வரும்? என்று கேட்பீர்கள்

சரி, பொதுஜனக் குணம் என்ன?

“நம் வீட்டில் மட்டும்தான் போயிருக்கிறதா? அல்லது அக்கம் பக்கத்து வீடுகளிலும்
போயிருக்கிறதா?” என்று பார்த்து, தெருவோடு எல்லா வீடுகளிலும் போயிருந்தால்
நிம்மதி அடைவதுதான் இந்தியப் பொதுஜனக் குணம் என்பார்கள்.

எல்லா வீடுகளிலும் போயிருந்தால் எவனாவது போன் செய்து, உடனே வந்து விடும்
அல்லது சரி பண்ணி விடுவார்கள் என்ற நம்பிக்கை மேலிடுமாம்.

அதுபோல நம் மக்களுக்குப் பல வினோதமான குணங்கள் உண்டு!

கீழே உள்ள தசா விவரங்களைப் பாருங்கள்.

இதைப் பார்த்துவிட்டு, என் நண்பர் ஒருவர் சொன்னார்:

“நான் தப்பித்து விட்டேன், எனக்கு ராகு திசையே வராது!”

எனக்குச் சிரிப்பு வந்தது.

“எப்படிச் சொல்கிறீர்?” என்றேன்.

அவர் உடனே டக்கென்று சொன்னார்.

“நான் புனர்பூச நட்சத்திரம். ஆரம்ப திசை குரு திசைதான். அதில் இருப்பு
14 ஆண்டுகள் ஆகவே நான் நூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்தால்தான் ராகு திசை
வரும். அதற்கு சாத்தியம் இல்லை ஆகவேதான் ராகு திசை எனக்கு வராது. அதன்
சிரமங்களில் இருந்து தப்பித்து விட்டேன்” என்றார்

நான் விடவில்லை. தொடர்ந்து கேட்டேன். “சரி உங்களுடைய 50 வயதில்
கேது திசை வருமே அப்போது என்ன செய்வீர்கள் என்றேன்?”

”கேது திசை என்ன செய்யும்?” என்றார்

“ராகு திசை 18 வருடங்களில் அடிக்கும் அடியைக் கேது ஏழு வருடங்களிலேயே
செய்து விடும்” என்றேன்.

“எனக்கு ரிஷப கேது. நீசமடைந்தவன். அவனே நீசமடைந்ததால் - பலமிழந்து
இருப்பதால் பெரிதாக என்ன செய்து விடுவான்?”

“இங்கே பலம் முக்கியமில்லை. அவன் லக்கினத்திலிருந்து எந்த வீட்டில்
இருக்கிறானோ - அந்த வீட்டின் பலனை பக்காவாகக் கொடுத்து விடுவான். நீங்கள்
மிதுன லக்கினம், ஆகவே உங்களுடைய 12ஆம் வீட்டில் இருக்கும் கேதுவும்,
அதேபோல ஆறாம் வீட்டில் இருக்கும் ராகுவும் அவர்களுடைய
மேஜர் (மகா) திசை வரவேண்டும் என்றில்லாமல், அவர்களுக்குக் கிடைக்கும்
புக்திகளில் (Sub-periods) அந்த வேலையை நடத்தி விடுவார்கள். ஆகவே ஒன்பது
கிரகங்களும், திசை வரவேண்டும் என்ற கணக்குக் கிடையாது. ஒவ்வொரு கிரகத்தின்
மகா திசையிலும், மற்ற எட்டுக் கிரகங்களின் புக்தி வரும். அதது தனது புக்தியில்
நல்லதோ அல்லது கெட்டதோ - ஜாதகப் பலனைத் தவறாமல் கொடுத்து விடும்.”
என்றேன்.

ஒரு இசைக்குழுவில் பலர் சேர்ந்து மகிழ்ச்சி இசையையும் கொடுப்பார்கள். சோக
கீதத்தையும் கொடுப்பார்கள் இல்லையா? அதுபோல கிரகங்களும் உட்டணி போட்டு
அதே வேலையைச் செய்து விடும்.

அகவே எனக்கு அது வராது, இது வராது என்று சொல்லிக் கொண்டிராதீர்கள்

உங்களுக்காக மொத்த திசைகள், புக்திகளை அட்டவணையாக மாற்றிக் கொடுத்
திருக்கிறேன்.

மிகவும் நேரம் எடுத்துக் கொண்டு செய்த வேலையாகும் இது.

அட்டவனையை நன்றாகப் பாருங்கள். வேண்டும் என்றால் உங்கள் கணினியில்
சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் பல செய்திகள், பல விஷயங்கள் அதில் உள்ளன.

ராகு திசை மொத்தம் 6,480 நாட்கள். அதே ராகு மற்ற கிரகங்களின் திசையில்
புக்தியாக வந்தாலும் அதே 6,480 நாட்கள் உண்டு. இது எல்லா கிரகங்களுக்கும்
பொதுவானது.

நன்றாகப் பாருங்கள். ஒரு பெரிய செய்தியை அட்டவனையாக்கித் தந்துள்ளேன்.

அதன் மூலம் படைப்பின் பெருமையை உணர வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------------
சர்ட்டின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால், பெரியதாகத் தெரியும்!




-------------------------------------------------------

50 comments:

  1. ராகு கேது திசை,தசா புத்தி பதிவுக்கு நன்றி.

    கால ஸர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு
    இந்த ராகு கேது பகவான்கள் (சாயா கிரங்கள்-திசை தசா புத்தி))மேலும் அதிக கெடுதல் செய்து (அவரவர் விதிப்படி)உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார் என்கிறார்களே..உண்மையா சார்.

    ReplyDelete
  2. சென்னையில் நடந்த தமிழக வலைபதிவாளர்கள் சந்திப்புக்கு தாங்கள் செல்லவில்லையா?( please see dondu.blogspot.com). தங்களின் தமிழ் மண பதிவின் தாக்கத்தை பரவலாக்கும் நன்முயற்சியின் திட்டங்களின் செயல்கலை
    நடைமுறை படுத்தி மகிழ்ந்திருக்கலாமே.தங்களுக்கும் அழைப்பு அனுப்பபட்டாதாக டோண்டு அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

    ReplyDelete
  3. ராகு திசை இருந்தால் திருமணம் தாமதமாகுமா?

    ReplyDelete
  4. புதிய தகவல்கள், நன்றி.

    1)விபரீத ராஜ யோகம் எல்லாம் ராகுவால் தானா?

    2) த்ரிகோனத்தில் ராகு இருந்தார் என்றால் (180 பாகையில் கேதுவும் இருப்பார்) அந்த ஜாதகம் மிகுத பலம் வாய்ந்ததா?

    ReplyDelete
  5. சந்திர திசை 3600 நாட்களா அல்லது 3650 நாட்களா

    ReplyDelete
  6. குருவே,

    இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை! அட்டவணைக்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  7. நன்றி ஐயா! ராகு/கேது இன்னொரு பாவ கிரகத்துடன்(சனி) சேர்ந்திருந்தால், தீமை அதிகமாகுமா? இல்லை கெட்டவன் கெட்டிடில் ரீதியில் தீமை குறையுமா?

    ReplyDelete
  8. /////நெல்வேலி கார்த்திக் said...
    ராகு கேது திசை,தசா புத்தி பதிவுக்கு நன்றி.
    கால ஸர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு
    இந்த ராகு கேது பகவான்கள் (சாயா கிரங்கள்-திசை தசா புத்தி))மேலும் அதிக கெடுதல் செய்து (அவரவர் விதிப்படி)உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார் என்கிறார்களே..உண்மையா சார்./////

    கால சர்ப்ப தோஷம் மற்றும் கால சர்ப்ப யோகம் என்பது (தோஷமே யோகமாக மாறும்) ஒரு பெரிய கட்டுரைக்கான மேட்டர். அதைத் தனிப் பதிவாக இடுகிறேன். பொறுத்திருங்கள்.

    காலசர்ப்ப தோஷம்/யோகத்திற்கு ஏராளமான ஜாதகங்களை உதாரணமாகக் கூறலாம். சின்ன வயதிலும், இளைஞனாக இருக்கும்போதும் மிகவும் சிரமங்களை அனுபவித்துவிட்டுப் பிறகு பெரிய ஆளாக வருவது.
    இசைஞானி இளையராஜா, நடிகர் பாக்யராஜ் ஆகியோரைப் போன்று பலர் உள்ளனர். கட்டுரை எழுதும்போது அதையெல்லாம் அறியத்தருகிறேன்

    ReplyDelete
  9. /////Anonymous said...
    சென்னையில் நடந்த தமிழக வலைபதிவாளர்கள் சந்திப்புக்கு தாங்கள் செல்லவில்லையா?( please see dondu.blogspot.com). தங்களின் தமிழ் மண பதிவின் தாக்கத்தை பரவலாக்கும் நன்முயற்சியின் திட்டங்களின் செயல்களை நடைமுறை படுத்தி மகிழ்ந்திருக்கலாமே.தங்களுக்கும் அழைப்பு அனுப்பபட்டாதாக டோண்டு அவர்கள் சொல்லியுள்ளார்கள்.////

    என்னுடைய முதல் பிரச்சினை நேரமின்மை!. ஆகவே சென்னையில் நடந்த வலைப்பதிவாளர்கள்
    சந்திப்பிற்குச் செல்லவில்லை.

    முன்பு ஒரு முறை ஓசை செல்லா அவர்கள் கோவையில் ஏற்பாடு செய்திருந்த
    பதிவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். அது சமயம் 22 பதிவர்கள் வந்திருந்தார்கள்

    சங்கை ஊதி விட்டேன். நடைமுறைப் படுத்த வேண்டியது நீங்கள்தான்

    டோண்டு அவர்கள் எதில் சொல்லியிருக்கிறார்? சுட்டியைக் கொடுங்கள்

    ReplyDelete
  10. /////நானானி said...
    ராகு திசை இருந்தால் திருமணம் தாமதமாகுமா?////

    ராகு திசையில் சுக்கிர புக்தியில் திருமணம் ஆகுமே சகோதரி!
    அதேபோல ராகு திசையில் ஏழாம் இடத்திற்கு உரிய கிரகத்தின் புக்தி நடைபெறும்போதும் திருமண
    வாய்ப்புக் கிட்டும்

    ReplyDelete
  11. //////ambi said...
    புதிய தகவல்கள், நன்றி.
    1)விபரீத ராஜ யோகம் எல்லாம் ராகுவால் தானா?/////

    ஒரு உச்சமான கிரகமும், ஒரு நீசமான கிரகமும் ஒன்று சேர்ந்து இருந்தால் அதுதான் நீங்கள் சொல்லும் யோகம்

    ///// 2) த்ரிகோனத்தில் ராகு இருந்தார் என்றால் (180 பாகையில் கேதுவும் இருப்பார்) அந்த ஜாதகம் மிகுத பலம் வாய்ந்ததா?//////

    அப்படியொன்றும் இல்லை!

    ReplyDelete
  12. //////புருனோ Bruno said...
    சந்திர திசை 3600 நாட்களா அல்லது 3650 நாட்களா/////

    அட்டவணை வாக்கியப் பஞ்சாங்க அடிப்படையில் எழுதப்பெற்றது டாக்டர்!
    வருடத்திற்கு 360 நாட்கள் என்ற கணக்கு (30 Days x 12 Months = 1 year)
    Moon Dasa is 10 years (30 Days x 12 Months x 10 years = 3,600)
    கழித்தல் கூட்டல் என்று எல்லாமே மாத அடிப்படையில் வருவதால் பெரிய வித்தியாசம்
    ஒன்றும் இருக்காது

    ReplyDelete
  13. /////Anonymous said...
    குருவே,
    இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை! அட்டவணைக்கு மிக்க நன்றி.
    அன்புடன்
    இராசகோபால்/////

    இதற்கு எதற்கு நன்றி? எல்லாம் உங்களைப் போன்ற அன்பர்களுக்காகத்தான்!

    ReplyDelete
  14. மிக்க நன்றி! வாத்தியாரையா!
    என் மகன் திருமணம் தாமதமாவதற்கு
    ராகுதான் காரணம் என்று சொல்கிறார்கள். நீங்க சொன்னதை என் ஜோஸியரிடம் சொல்கிறேன். மீண்டும் நன்றி!!

    ReplyDelete
  15. //உங்களுக்காக மொத்த திசைகள், புக்திகளை அட்டவணையாக மாற்றிக் கொடுத்
    திருக்கிறேன்.

    மிகவும் நேரம் எடுத்துக் கொண்டு செய்த வேலையாகும் இது.

    அட்டவனையை நன்றாகப் பாருங்கள். வேண்டும் என்றால் உங்கள் கணினியில்
    சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் பல செய்திகள், பல விஷயங்கள் அதில் உள்ளன.//
    நீங்கள் கொடுத்துள்ள அட்டவணை சுலபமாக உள்ளது.எங்கலுகாக நேரம் ஒதுக்கி அட்டவணை தயார் செய்தமைக்கு நன்றி, கண்ணினியில் சேமித்து வைத்து கொண்டேன் நன்றி வாத்தியரே,
    //முதலில் மின் இலாக்காவை அல்லது திருவாளர் ஆற்காட்டாரைத் திட்டி விட்டு,
    கஷ்டப்பட்டு மேஜை மேலிருக்கும் டார்ச் லைட்டை எடுப்பீர்கள்.
    //
    அப்புறம் , தமிழ் நாட்டில் மின் தடை எப்ப்டி உள்ளது? ஆற்காட்டர் வந்தபின் கேரளாவில் மின் தடை நின்று தமிழ் நாட்டில் அதிகமாகி விட்டது!!#?#!!.

    அடுத்த வகுப்பு எப்போ வாத்தியரே?

    விமல்

    ReplyDelete
  16. //////நானானி said...
    மிக்க நன்றி! வாத்தியாரையா!
    என் மகன் திருமணம் தாமதமாவதற்கு
    ராகுதான் காரணம் என்று சொல்கிறார்கள். நீங்க சொன்னதை என் ஜோஸியரிடம் சொல்கிறேன். மீண்டும் நன்றி!!////


    பெண்கள் திருமணத்திற்கு 2ம் வீட்டையும் (House of Family affairs -குடும்ப ஸ்தானம்), 8ஆம் வீட்டையும்(மாங்கல்ய ஸ்தானம்) ஜோதிடர்கள் பார்ப்பார்கள், இந்த வீடுகளில் ஒன்றில் ராகு இருந்தால்
    27 வயதிற்கு மேல் திருமணம் செய்வது நல்லது. இயற்கையாகவே அந்தப் பெண் மாங்கல்ய பலம் உள்ளவள் என்றால் தாமதமாகி ராகு தோஷம் விலகியபின்தான் திருமண வாழ்வு அமையும். அதைத்தான் ஜோதிடர்கள்
    தாமத திருமணம் என்று குறிப்பிடுவார்கள். அதே போல 7ம் வீட்டில் ராகு இருந்தாலும் சொல்வார்கள்

    ஆனால் உண்மை என்ன வென்றால், திருமணம் நடைபெற வேண்டிய திசை புக்தி வந்தால், அது அதிரடியாக
    திருமணத்தை நடத்தி வைத்து விடும்!

    ReplyDelete
  17. வாத்தியாரே.. 3 நாளா ஊர்ல இல்லை.. வெளியூர் போயிருந்தேன். அதனால் உடனே வகுப்புக்கு வர இயலவில்லை.

    இப்போதுதான் படித்தேன்.. அறிந்தேன்..

    எனக்குத்தான் இப்ப என்ன 'தசை' நடக்குதுன்னே தெரியல.. ?

    ஏன்னா வருஷக்கணக்கா ஒரு மாற்றமும் இல்லாம ஒரே மாதிரியா அடி வாங்கிக்கிட்டே இருக்கேன்னா.. வித்தியாசம் தெரியல வாத்தியாரே..

    ReplyDelete
  18. வணக்கம், வாத்தியார் ஐயா
    எல்லாதிசை, அதன்புத்திகள் எல்லாவற்றையும் ஒரே அட்டவணையில் மிகவும் அழகாகதந்துஉள்ளிர்கள் நன்றி ஐயா
    மாணவன்
    சிவா

    ReplyDelete
  19. வணக்கம் அய்யா,
    வகுப்புக்கு ஆஜர் ஆய்ட்டேன் .
    பதிவேட்டில் குறித்துக்கொள்ளுங்கள் ,
    ராகு கேது விளக்கம் மிக அருமை !!

    ReplyDelete
  20. ///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே.. 3 நாளா ஊர்ல இல்லை.. வெளியூர் போயிருந்தேன். அதனால் உடனே வகுப்புக்கு வர இயலவில்லை.
    இப்போதுதான் படித்தேன்.. அறிந்தேன்..
    எனக்குத்தான் இப்ப என்ன 'தசை' நடக்குதுன்னே தெரியல.. ?
    ஏன்னா வருஷக்கணக்கா ஒரு மாற்றமும் இல்லாம ஒரே மாதிரியா அடி வாங்கிக்கிட்டே இருக்கேன்னா.. வித்தியாசம் தெரியல வாத்தியாரே..//////

    அப்படித் தொடர்ந்து அடிவாங்கியும் உற்சாகமாக இருக்கிறீர் என்றால் அதற்கு தண்டாயுதபாணிதான் காரணம்
    கவலையை விடுங்கள். உங்களையும், என்னையும் எந்தக் கிரகமும் ஒன்றும் செய்யாது. ஏனென்றால் We are under the control of Dhandayuthapani!

    (கோள் என் செய்யும், வினைதான் என் செய்யும் எனை நாடி வந்த கொடுங்கூற்று என் செய்யும், குமரேசன் இரு தாளும், தண்டையும் சண்முகமும் சதங்கையும் என் கண் முன் தோன்றிடினே! - படித்திருக்கிறீர் அல்லவா?)

    ReplyDelete
  21. //////siv said...
    வணக்கம், வாத்தியார் ஐயா
    எல்லாதிசை, அதன்புத்திகள் எல்லாவற்றையும் ஒரே அட்டவணையில் மிகவும் அழகாகதந்துஉள்ளிர்கள் நன்றி ஐயா
    மாணவன்
    சிவா/////
    உங்கள் பாராட்டிற்கு நன்றி சிவ்!

    ReplyDelete
  22. வாத்தியரே என் பின்னுட்டத்தின் மறுமொழி வரவில்லை, எதற்கும் ஒரு கண் மருத்துவரை ஆலோசிககவும், ஒரு நாள்-ல் 22 மணி நேரம் கணிப்பொறி முன் செலவிதுவதினால் வந்த பாதகமோ?

    விமல்

    ReplyDelete
  23. வாத்தியாருக்கு, பதிவின் விஷயங்களுக்கு நன்றி.

    நானானி அம்மா, எனக்கு ராகு தசையில் தான் திருமணம் நடந்தது. பின்னூட்டம் இடலாம்னு வந்தப்போ, //ராகு திசையில் சுக்கிர புக்தியில் திருமணம் ஆகுமே சகோதரி!// ந்னு சார் சொன்னதை கவனிச்சேன், திரும்பி என் தசா புக்தி சார்ட் பார்த்தா ராஹு தசா, சுக்ர புக்தில தான் திருமணம் நிச்சயம்:‍-)

    சார் சும்மாவா!

    ReplyDelete
  24. //////vimal said...
    வாத்தியரே என் பின்னுட்டத்தின் மறுமொழி வரவில்லை, எதற்கும் ஒரு கண் மருத்துவரை ஆலோசிககவும், ஒரு நாள்-ல் 22 மணி நேரம் கணிப்பொறி முன் செலவிதுவதினால் வந்த பாதகமோ?
    விமல்///

    எனக்கு கண் காது தொண்டை என்று சகலத்திற்கும் ஒரே மருத்துவர்தான். பழநி மலைமேல் நிற்கிறாரே அவர்தான்
    அந்த மருத்துவர். அவரிடம் காட்டிக் கேட்டுவிடுகிறேன்!

    ப்ளாக்கர் சொதப்பலுக்கும், கண்ணிற்கும் என்ன சம்பந்தம் ஸ்வாமி?

    ReplyDelete
  25. //////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    வாத்தியாருக்கு, பதிவின் விஷயங்களுக்கு நன்றி.
    நானானி அம்மா, எனக்கு ராகு தசையில் தான் திருமணம் நடந்தது. பின்னூட்டம் இடலாம்னு வந்தப்போ, //ராகு திசையில் சுக்கிர புக்தியில் திருமணம் ஆகுமே சகோதரி!// ந்னு சார் சொன்னதை கவனிச்சேன், திரும்பி என் தசா புக்தி சார்ட் பார்த்தா ராஹு தசா, சுக்ர புக்தில தான் திருமணம் நிச்சயம்:‍-)

    சார் சும்மாவா!////

    பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    “டேய் வாத்தியார் கிளாஸ் டோய்” என்று அதிக உற்சாகத்துடன் நட்சத்திர வாரத்தில் வந்தீர்கள்
    அதற்குப் பிறகு உங்களைக் காணவில்லையே?

    ReplyDelete
  26. இனி அடிக்கடி வருவேன், பின்னூட்டம் இடுகிறேன். பழைய பதிவுகளில் இல்லாத விஷயங்கள் இதில் இருக்கின்றன...

    நன்றி.

    ReplyDelete
  27. Dear Sir,

    Thanks a ton!Will Rahu and Ketu do any benefics.
    ///பெண்கள் திருமணத்திற்கு 2ம் வீட்டையும் (House of Family affairs -குடும்ப ஸ்தானம்), 8ஆம் வீட்டையும்(மாங்கல்ய ஸ்தானம்) ஜோதிடர்கள் பார்ப்பார்கள், இந்த வீடுகளில் ஒன்றில் ராகு இருந்தால்
    27 வயதிற்கு மேல் திருமணம் செய்வது நல்லது. இயற்கையாகவே அந்தப் பெண் மாங்கல்ய பலம் உள்ளவள் என்றால் தாமதமாகி ராகு தோஷம் விலகியபின்தான் திருமண வாழ்வு அமையும். அதைத்தான் ஜோதிடர்கள்
    தாமத திருமணம் என்று குறிப்பிடுவார்கள். அதே போல 7ம் வீட்டில் ராகு இருந்தாலும் சொல்வார்கள்////
    Is this for only girls,If so, let me know how is it for guys?
    Your presentation style,answering to questions, detailing all keypoints, your efforts and time is really amazing and I salute for the same!
    -Shankar

    ReplyDelete
  28. One more thing, I am waiting for the "kalasarpa yoga" article, because I have that yoga/dosha...so waiting and counting to see!!!

    Thanks
    Shankar

    ReplyDelete
  29. நானும் குரு திசையில் பிறந்து இருப்பதால் எனக்கும் ராகு திசை வராது என் இத்தனைக்காலம் மகிழ்ந்திருந்தேன்...

    எனக்கு ஒர் ஆப்பு வைத்திவிட்டிர்கள் ஐயா !!

    ஓ கடவுளே இன்னும் ஒரு சில வருடங்களில் கேது திசை வேறு வருகிறதே?

    இன்னும் ஒரு விசயம்

    யோகம் இல்லாத ஜாதகங்களையும் சாஸ்திர முறைப்படி யோகமாக மாற்றாலம் என விஜய் டீவியில் ஜோதிடர் ஒருவர் கூறிவருகிறாறே அது பற்றி தங்கள் கருத்து என்ன?நானும் குரு திசையில் பிறந்து இருப்பதால் எனக்கும் ராகு திசை வராது என் இத்தனைக்காலம் மகிழ்ந்திருந்தேன்...

    எனக்கு ஒர் ஆப்பு வைத்திவிட்டிர்கள் ஐயா !!

    ஓ கடவுளே இன்னும் ஒரு சில வருடங்களில் கேது திசை வேறு வருகிறதே?

    இன்னும் ஒரு விசயம்

    யோகம் இல்லாத ஜாதகங்களையும் சாஸ்திர முறைப்படி யோகமாக மாற்றாலம் என விஜய் டீவியில் ஜோதிடர் ஒருவர் கூறிவருகிறாறே அது பற்றி தங்கள் கருத்து என்ன?

    ReplyDelete
  30. /////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    இனி அடிக்கடி வருவேன், பின்னூட்டம் இடுகிறேன். பழைய பதிவுகளில் இல்லாத விஷயங்கள் இதில் இருக்கின்றன...
    நன்றி.////

    ஆகா அப்படியே ஆகட்டும் சகோதரி!

    ReplyDelete
  31. /////Anonymous said...
    Dear Sir,
    Thanks a ton!Will Rahu and Ketu do any benefics.
    ///பெண்கள் திருமணத்திற்கு 2ம் வீட்டையும் (House of Family affairs -குடும்ப ஸ்தானம்), 8ஆம் வீட்டையும்(மாங்கல்ய ஸ்தானம்) ஜோதிடர்கள் பார்ப்பார்கள், இந்த வீடுகளில் ஒன்றில் ராகு இருந்தால்
    27 வயதிற்கு மேல் திருமணம் செய்வது நல்லது. இயற்கையாகவே அந்தப் பெண் மாங்கல்ய பலம் உள்ளவள் என்றால் தாமதமாகி ராகு தோஷம் விலகியபின்தான் திருமண வாழ்வு அமையும். அதைத்தான் ஜோதிடர்கள்
    தாமத திருமணம் என்று குறிப்பிடுவார்கள். அதே போல 7ம் வீட்டில் ராகு இருந்தாலும் சொல்வார்கள்////
    Is this for only girls,If so, let me know how is it for guys?
    Your presentation style,answering to questions, detailing all keypoints, your efforts and time is really amazing and I salute for the same!
    -Shankar//////

    மாங்கல்ய ஸ்தானம் என்பது பெண்களுக்கு மட்டும்தான். அதைத்தவிர்த்து மற்றதெல்லாம் இருசாராருக்கும் பொருந்தும்!

    ReplyDelete
  32. ////Anonymous said...
    One more thing, I am waiting for the "kalasarpa yoga" article, because I have that yoga/dosha...so waiting and counting to see!!!
    Thanks
    Shankar///

    கவனத்தில் கொண்டுள்ளேன். விரைவில் எழுதுகிறேன் நண்பரே!

    ReplyDelete
  33. Cany you describe benefics of Ragu and ketu...if any?

    -Shankar

    ReplyDelete
  34. வாத்தியாரே என்னையும் உங்க சீடராக்கி கொள்ளுங்கோ பிளீஸ்.
    ராஜி

    ReplyDelete
  35. //டோண்டு அவர்கள் எதில் சொல்லியிருக்கிறார்? சுட்டியைக் கொடுங்கள்//
    சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - 18.05.2008

    http://dondu.blogspot.com/2008/05/19052008.html

    ReplyDelete
  36. ///////தங்ஸ் said...
    நன்றி ஐயா! ராகு/கேது இன்னொரு பாவ கிரகத்துடன்(சனி) சேர்ந்திருந்தால், தீமை அதிகமாகுமா? இல்லை கெட்டவன் கெட்டிடில் ரீதியில் தீமை குறையுமா?/////

    கெட்டவன் கெட்டிடில் என்பதற்குப் பொருள் வேறு. ஒரு தீய கிரகம் நீசம் பெற்று நிற்கும் நிலை அது.
    நீங்கள் சொல்வது சேர்க்கை (association) இரண்டிற்கும் மாறுபட்ட பலன்கள் உண்டாகும்.

    ReplyDelete
  37. /////vimal said...
    //உங்களுக்காக மொத்த திசைகள், புக்திகளை அட்டவணையாக மாற்றிக் கொடுத்
    திருக்கிறேன்.
    மிகவும் நேரம் எடுத்துக் கொண்டு செய்த வேலையாகும் இது.
    அட்டவனையை நன்றாகப் பாருங்கள். வேண்டும் என்றால் உங்கள் கணினியில்
    சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் பல செய்திகள், பல விஷயங்கள் அதில் உள்ளன.//
    நீங்கள் கொடுத்துள்ள அட்டவணை சுலபமாக உள்ளது.எங்கலுகாக நேரம் ஒதுக்கி அட்டவணை தயார் செய்தமைக்கு நன்றி, கண்ணினியில் சேமித்து வைத்து கொண்டேன் நன்றி வாத்தியரே,
    //முதலில் மின் இலாக்காவை அல்லது திருவாளர் ஆற்காட்டாரைத் திட்டி விட்டு,
    கஷ்டப்பட்டு மேஜை மேலிருக்கும் டார்ச் லைட்டை எடுப்பீர்கள். //
    அப்புறம் , தமிழ் நாட்டில் மின் தடை எப்ப்டி உள்ளது? ஆற்காட்டர் வந்தபின் கேரளாவில் மின் தடை நின்று தமிழ் நாட்டில் அதிகமாகி விட்டது!!#?#!!.
    அடுத்த வகுப்பு எப்போ வாத்தியரே?
    விமல்///

    அடுத்த வகுப்பு விரைவில். இந்த வகுப்பில் எழுந்துள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டாமா?

    ReplyDelete
  38. ///////Geekay said...
    வணக்கம் அய்யா,
    வகுப்புக்கு ஆஜர் ஆய்ட்டேன் .
    பதிவேட்டில் குறித்துக்கொள்ளுங்கள் ,
    ராகு கேது விளக்கம் மிக அருமை !!////

    பின்னூட்டம் போட்டாலே வருகைப் பதிவேட்டில் குறித்தது போலத்தான்!

    ReplyDelete
  39. /////கூடுதுறை said...
    நானும் குரு திசையில் பிறந்து இருப்பதால் எனக்கும் ராகு திசை வராது என் இத்தனைக்காலம் மகிழ்ந்திருந்தேன்..
    எனக்கு ஒர் ஆப்பு வைத்திவிட்டிர்கள் ஐயா !!
    ஓ கடவுளே இன்னும் ஒரு சில வருடங்களில் கேது திசை வேறு வருகிறதே?
    இன்னும் ஒரு விசயம்
    யோகம் இல்லாத ஜாதகங்களையும் சாஸ்திர முறைப்படி யோகமாக மாற்றாலம் என விஜய் டீவியில் ஜோதிடர் ஒருவர் கூறிவருகிறாறே அது பற்றி தங்கள் கருத்து என்ன?நானும் குரு திசையில் பிறந்து இருப்பதால் எனக்கும் ராகு திசை வராது என் இத்தனைக்காலம் மகிழ்ந்திருந்தேன்..
    எனக்கு ஒர் ஆப்பு வைத்திவிட்டிர்கள் ஐயா !!
    ஓ கடவுளே இன்னும் ஒரு சில வருடங்களில் கேது திசை வேறு வருகிறதே?
    இன்னும் ஒரு விசயம்
    யோகம் இல்லாத ஜாதகங்களையும் சாஸ்திர முறைப்படி யோகமாக மாற்றாலம் என விஜய் டீவியில் ஜோதிடர் ஒருவர் கூறிவருகிறாறே அது பற்றி தங்கள் கருத்து என்ன?/////

    எனக்குத் தெரிந்தவரை அப்படியெல்லாம் மாற்ற முடியாது சுவாமி! அப்படியெல்லாம் முடிந்தால் உலகில் பிரச்சினைகள் ஏது நண்பரே?

    ReplyDelete
  40. //////Anonymous said...
    Can you describe benefics of Ragu and ketu...if any?
    -Shankar////

    ஆகா நன்மைகள் இல்லாமலா? அது ஒரு தனிப் பதிவாகப் பின்னால் வரும்!

    ReplyDelete
  41. //////Anonymous said...
    வாத்தியாரே என்னையும் உங்க சீடராக்கி கொள்ளுங்கோ பிளீஸ்.
    ராஜி /////

    ஆகா, இப்படி விரும்பி வருபவர்களைச் சேர்த்துக்கொள்ளாமலா?
    சேர்த்து விடுகிறேன் சகோதரி

    ReplyDelete
  42. //////////Anonymous said...
    //டோண்டு அவர்கள் எதில் சொல்லியிருக்கிறார்? சுட்டியைக் கொடுங்கள்//
    சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - 18.05.2008
    http://dondu.blogspot.com/2008/05/19052008.html////

    தகவலுக்கு நன்றி நண்பரே!
    நேரமின்மை காரணமாகச் சென்னை சென்று அந்த சந்திப்பில் கலந்துகொள்ள இயலவில்லை!

    ReplyDelete
  43. Madhippirkuriya Iyya,

    Enakku ippodhu Raghu dhasa , suya buthi nadaiperukiradhu.
    Suya buthi July maadham mudikiradhu.

    Details:
    Midhuna lagna, 5il sukran,raghu,kalasarpam,endha planets um paarkavillai,5il sarvashtaga varka paralghal 22,2il sani,3il chandra+budhan, 4il suryan+chevvai,12il gur.

    Apdinna raghu dhasa vil enakkum sodhanai mel sodhanai thaanaa :-(

    Anbudan,
    Kandhiah

    ReplyDelete
  44. Blogger kandhiah said...
    Madhippirkuriya Iyya,
    Enakku ippodhu Raghu dhasa , suya buthi nadaiperukiradhu.
    Suya buthi July maadham mudikiradhu.
    Details:
    Midhuna lagna, 5il sukran,raghu,kalasarpam,endha planets um paarkavillai,5il sarvashtaga varka paralghal 22,2il sani,3il chandra+budhan, 4il suryan+chevvai,12il gur.
    Apdinna raghu dhasa vil enakkum sodhanai mel sodhanai thaanaa :-(
    Anbudan,
    Kandhiah///////

    இல்லை. ராகு திசையில் மற்ற கிரகங்களின் புத்திகளில் (Sub periods)மாற்றங்கள் இருக்கும்! மகிழ்ச்சி இருக்கும்!

    ReplyDelete
  45. Mikka nanri Iyya.
    Thangaludaya paadangal ovvonrum mighavum suvaiyanadhaaghavum, payanulladhaghavum irukkindrana.

    -kandhiah

    ReplyDelete
  46. /////Blogger kandhiah said...
    Mikka nanri Iyya.
    Thangaludaya paadangal ovvonrum mighavum suvaiyanadhaaghavum, payanulladhaghavum irukkindrana.
    -kandhiah/////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி கந்தைய்யா!

    ReplyDelete
  47. My Lagna is Dhanur. Rahu in 10th Place (Kanya), Kethu in 4th Place (Meena. Lagna lord Guru is in 8th place. From next month i am going to have rahu dasa and kethu bukthi. Kindly tell your predictions.

    ReplyDelete
  48. ////saaigee said...
    My Lagna is Dhanur. Rahu in 10th Place (Kanya), Kethu in 4th Place (Meena. Lagna lord Guru is in 8th place. From next month i am going to have rahu dasa and kethu bukthi. Kindly tell your predictions. /////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை.

    ReplyDelete
  49. sir,
    i am yr old student due to some reason i could not attend the class regularly sorry for that.
    i humble request i want to know about my raghu dasa which is running
    in raghu dasa sani pukkthi
    D.O.B 29.06.1960 08.45 A.M CHENNAI PROPER I AM SO MUCH CONFUSING ABOUT
    THIS DASA BECAUSE IN NAVAMSA RAGHU AND SATURN ARE UTTACHAM IN CONDITION
    PL ADVICE ME

    G R MURUGAN BSNL YR OLD STUDENT

    ReplyDelete
  50. வணக்கம் ஐயா ,
    சித்திரைமாதம் மிறந்தவர் பற்றி சிறு ஜோதித கட்டுரை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com