மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

12.5.08

ஜோதிடத் தொடர்: பூவெப்ப மலரும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜோதிடக் கட்டுரைத் தொடர்

நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள். நன்றாக வேலை செய்யக்கூடியவர்.
அதற்கான கல்வித் தகுதியும், திறமையும் உங்களிடம் இருக்கிறது.

ஆனால் உங்கள் வேலைக்கான பாராட்டும், அதைவிட முக்கியமாக அதற்குரிய
ஊதியமும் உங்களுக்குக் கிடைத்தால்தானே - உங்களுக்கு ஒரு சந்தோசமும்,
உற்சாகமும் இருக்கும்?

இல்லையென்றால் என்ன ஆகும்?

சலிப்புத்தான் மிஞ்சும்.

அல்லது இப்படி வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு அமைப்பில் இருக்கிறீர்கள்.
உங்களுக்கான அங்கீகாரமும், பதவியும் இல்லையென்றால் உங்கள் செயல்பாடு
எப்படி இருக்கும்?

நீங்கள் ஒரு பெரிய இயக்குனரிடம் உதவியாளராக இருக்கிறீர்கள். உங்கள்
மூளையைக் கசக்கி நீங்கள் சொல்லும் திரைக்கதையோ, காட்சி அமைப்போ
சூப்பராக இருந்து, அது படத்திலும் வெளிப்பட்டு, அதன் பாராட்டு முழுவதும்
இயக்குனருக்கே போய், உங்களை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தால்
உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

அல்லது நீங்கள் ஒரு வியாபாரம் செய்கிறீர்கள். தொழிலின் நுணுக்கமெல்லாம்
உங்களுக்கு அத்துபடி. இருந்தாலும், போட்டி காரணமாக அல்லது நீங்கள்
இருக்கும் ஊரின் மக்கள் வாங்கும் திறன் காரணமாக, உங்கள் தொழிலில்
தேக்கம் ஏற்பட்டு அல்லது நஷ்டம் ஏற்பட்டு, ஒரு சோக நிலைக்கு (கடனுக்கு)
நீங்கள் தள்ளப்பட்டால் உங்கள் நிலைமை என்னவாக இருக்கும்?

இப்படிப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

உங்கள் நேரம் நன்றாக இருந்தால், நடப்பவை நன்றாக இருக்கும்.
இல்லையென்றால், இல்லை!

கிராமங்களில் சொல்வார்கள்:

”தரித்திரம் தந்தியில் வரும்; அதிர்ஷ்டம் தபாலில் வரும்”

அது உண்மை.

கஷ்டங்கள் ஒரு நொடியில் வந்து விடும்.

சரி, அது எப்போது போகும்? எப்படிப்போகும்?

நல்ல கிரகத்தின் திசை அல்லது புக்தி (Major Dasa or Sub Period) ஆரம்பமானவுடன்
அது போக ஆரம்பிக்கும். அந்த திசை அல்லது புக்தி முடிவதற்குள் எல்லாம் சரியாகி
விடும்.

உதாரணமாக குரு திசை, சனி புக்தியில் (30 மாதம்,12 நாட்கள்) ஒருவன் பல
விதமான சோதனைகளைத் துன்பங்களை அனுபவித்தான் என்றால், அதைத்
தொடர்ந்து வரும் குரு திசை புதன் புக்தியில் (27 மாதங்கள் 6 நாட்கள்)
சரியாகி விடும். பொதுவாக குருவும், புதனும் சேரும் போதெல்லாம் மாற்றங்களைக்
கொடுப்பார்கள். நல்லதைச் செய்வார்கள்.

அதற்காக குரு திசை புதன் புக்தி ஆரம்பித்த அன்றே ஸ்விட்ச் போட்ட மாதிரி
ஒரே நாளில் எல்லாம் சரியாகி விடாது. ஒவ்வொரு பகுதியாகச் சரியாகி, அந்தக்
குறிப்பிட்ட காலம் முடிவதற்குள் எல்லாம் சரியாகி விடும்.

மொத்த நட்சத்திரங்கள் 27
மொத்த கிரகங்கள் 9
ஒவ்வொரு கிரகத்திற்கும் 3 நட்சத்திரங்கள் சொந்தமாகும் அல்லது 3 நட்சத்திரங்களுக்கு
ஒவ்வொரு கிரகமும் அதிபதியாகும்

உங்கள் நட்சத்திரத்திற்கு யார் அதிபதி என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

உதாரணமாக நீங்கள் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிறந்திருந்தால்
உங்களுடைய நட்சத்திர அதிபதி கேது. உங்களுடைய ஆரம்ப திசையும் கேது திசைதான்

அடுத்த நட்சத்திரமான பரணி என்றால் உங்களுடைய அதிபதி சுக்கிரன்.உங்களுடைய
ஆரம்ப திசையும் சுக்கிர திசைதான்

இப்படியே வரிசையாக வரும். முன் பாடங்களில் இதையெல்லாம் தெளிவாகச் சொல்லி
இருக்கிறேன். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அது முக்கியம்.

மொத்தம் 9 கிரகங்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் 9 புக்திகள்(sub periods) ஆக மொத்தம்
81 புக்திகள் (sub periods) அவற்றின் மொத்தகாலம் 120 ஆண்டுகள்

நாம் ஆசைப்பட்டாலும் 120 ஆண்டுகள் வாழ்வோமா என்றால் இல்லை!

முன்பெல்லாம், அதாவது 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் போதிய மருத்துவ வசதி
இன்மையால் ஒருவர் 60 வயதைத் தாண்டுவதே அதிசயம்.

ஆனால் இன்று 80 வயது வரை உள்ள மனிதர்களைச் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது

ஆகவே வாழும் வரை உள்ள காலத்திற்கு ஜாதகப்படி நடக்கும் பொதுப் பலன்களைப்
பழைய நூல் ஒன்றிலிருந்து எடுத்து முன் பதிவுகளில் (ஜோ.பாடம் எண் 23 - 25)
கொடுத்திருந்தேன்

அந்த நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கவலை வேண்டாம். ஜோதிடம் நன்கு அறிந்த ஒரு
பெரிய முனிவரால் எழுதப் பெற்ற நூல் அது!

அவருடைய பெயர் 'புலிப்பாணி'.

ஆமாம் பழநி மலையிலுள்ள விக்கிரகத்தை ஸ்தாபிதம் செய்த போகர் என்ற முனிவரின்
சீடர்தான் இந்த புலிப்பாணி

அது Scan செய்ய முடியாத அளவிற்கு மோசமாக இருந்தது. ஆகவே புதிதாக தட்டச்சு
செய்து, வரிகளின் அழகு மாறாமல் இருப்பதற்காக Jet Printerல் பிரிண்ட் எடுத்து, Scan
செய்து பதிவிட்டிருந்தேன்

எல்லாம் உங்கள் வசதிக்காகத்தான். மேலும் "செய்வன திருந்தச் செய்" என்பதை
வாத்தியார் கடைப்பிடிக்க வேண்டாமா? அதற்காகவும்தான்

பதிவின் நீளம் கருதி அதை 3 பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருந்தேன்.

அதைப் படித்து நீங்கள் புரிந்து கொண்டால் போதும். யாரையும் கேட்க வேண்டாம்.
உங்களுக்கு நீங்களே நல்லது கெட்டது எப்போது நடக்கும் என்று தெரிந்து அதற்குத்
தகுந்த மாதிரி வாழ்க்கையின் இன்பங்களையும், துன்பங்களையும் எதிர் கொள்ளலாம்

சுமார் 75% சதவிகிதம் பேர்களுக்கு தசா பலன்கள் அதில் உள்ள மாதிரிதான் இருக்கும்.
மீதமுள்ள 25% பேர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளின்
மேம்பாட்டைப் பொறுத்து பலன் மாறுபடும். உதாரணம் முன் பதிவில் (எண்22) நான்
சிவாஜி கணேசன் அவர்களின் ராகு திசைக்குக் கொடுத்திருந்த விளக்கத்தைப் படிக்க
வேண்டுகிறேன்

ஒரு மூன்று வருடத்திற்கு நேரம் சரியில்லை என்று தெரிந்தால், அன்றாடம் நடக்கும்
சம்பவங்களை வைத்து உணர்ந்தால், அதற்குப் பிறகு நல்ல காலம் உள்ளது என்று தசா
புத்தி (sub periods) சொல்லும் போது எவ்வளவு மகிழ்வாக இருக்கும்?

வரப்போகிற அந்த நல்ல காலத்தை நினைத்து இந்த மூன்று வருடத் துன்பங்களைத்
தெம்புடன் ஏற்றுக் கொள்வோமா - மாட்டோமா?

அதற்கு உதவுவதுதான் தசாபுத்திப் பலன்கள்.

வேறு சுலபமான வழி இல்லையா?

ஏன் இல்லை? இருக்கிறது.

அஷ்ட வர்கத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் சுய வர்க்கம் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதன்படி, உங்கள் ஜாதகத்தில் உள்ள அமைப்பின்படி ஒவ்வொரு கிரகமும் என்ன
வலுவுடன் (Strength) என்று பாருங்கள் அதன்படி பலன் இருக்கும்.

உதாரணமாக ஒருவருக்குப் புதன் திசை நடக்கிறது.
அவருடைய ஜாதகத்தில் புதனின் சுய வர்க்கத்தில் உள்ள கிரகங்கள் அந்தக் குறிப்பிட்ட
கட்டத்தின் படி எத்தனை பரல்களுடன் இருக்கிறது என்று குறித்துக் கொண்டு
புக்திகளுடன் வைத்துப் பலன்களை பாருங்கள்

உதாரணத்திற்குக் கீழே உள்ள படிவத்தைப் பாருங்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------
இதன்படி உங்களுக்கும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
மகிழ்வுடன் இருங்கள்.

இதே வரிசையில் (அஷ்டகவர்க்கத்தில்) அடுத்த பாடம் இன்னும் சுவையாக இருக்கும்.
அது அடுத்த திங்கட் கிழமையன்று (19.5.2008)

அதுவரை, பழைய படங்களை எல்லாம் புரட்டிப் பாருங்கள். பல செய்திகள் தெரிய
வரும்!

(இது: ஜோதிடக் கட்டுரை 2 உட்தலைப்பு: பொழுதெப்ப விடியும்? பூவெப்ப
மலரும்? பகுதி: 3)

அன்புடன்
வாத்தியார்

(தொடரும்)

40 comments:

அறிவன்#11802717200764379909 said...

சுப்பையா ஐயா,ஒரு சிறிய வேண்டுகோள்.
உங்கள் பதிவின் ஜோதிடப்பாடங்களை தனியாக ஒரு லேபிள் கொடுத்து சேமித்தீர்களானால்,என்னைப் போன்ற late comers எளிதாகத் தொகுத்துப்படிக்க வசதியாக இருக்கும்.

நீங்கள் முதல்லேயே போட்டிருப்பினும் ஒருமுறை லேபிள்களை சரி பார்க்க இயலுமா?

சில பதிவுகள் மாறி பொதுப்பதிவுகளுடன் இருப்பதாகத் தோன்றுகிறது.

கனிமொழி said...
This comment has been removed by a blog administrator.
கனிமொழி said...
This comment has been removed by a blog administrator.
SP.VR. SUBBIAH said...

////நீங்கள் முதல்லேயே போட்டிருப்பினும் ஒருமுறை லேபிள்களை சரி பார்க்க இயலுமா?

சில பதிவுகள் மாறி பொதுப்பதிவுகளுடன் இருப்பதாகத் தோன்றுகிறது.////

சரி பார்த்து விடுகிறேன் நண்பரே!
ஒரு நாள் அவகாசம் கொடுங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////வணக்கம் ஐயா,
ஜோதிட பாடம் நன்றாக புரியும் படி உள்ளது .
எந்த நட்சத்திரத்துக்கு யார் அதிபதி என்பது தெரியவில்லை .
உதாரணதிருக்கு மிருகசிரிடதிருக்கு யார் அதிபதி..?
நன்றி வணக்கம்.
(கோபால்.)////

முன்பே எழுதியிருக்கிறேன்

உங்களுக்காக மீண்டும் ஒருமுறை கீழே கொடுத்துள்ளேன்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இம்மூன்றிற்கும் அதிபதி சூரியன் Dasa Years 6

ரோகிணி, அஸ்தம், திருவோணம் இம்மூன்றிற்கும் அதிபதி சந்திரன் Dasa Years 10

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இம்மூன்றிற்கும் அதிபதி செவ்வாய் Dasa Years 7

திருவாதிரை, சுவாதி, சதயம் இம்மூன்றிற்கும் அதிபதி ராகு Dasa Years 18

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இம்மூன்றிற்கும் அதிபதி குரு Dasa Years 16

பூசம், அனுஷம், உத்திரட்டாதி இம்மூன்றிற்கும் அதிபதி சனி Dasa Years 19

ஆயில்யம், கேட்டை, ரேவதி இம்மூன்றிற்கும் அதிபதி புதன் Dasa Years 17

அஸ்வினி, மகம், மூலம் இம்மூன்றிற்கும் அதிபதி கேது Dasa Years 7

பரணி, பூரம், பூராடம் இம்மூன்றிற்கும் அதிபதி சுக்கிரன் Dasa Years 20

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்தியாரே..

எனக்கு சந்திரன் அதிபதி போல் தெரிகிறது.. தசா வருஷங்கள் கொஞ்சந்தான் 10. அஸ்தம் நட்சத்திரம்..

என்னமோ நடக்குது உலகத்துல.. முருகன் இட்ட வழியேன்னு சொல்லிப் போய்க்கிட்டிருக்கேன்..

பாடம் நடத்துவதுகூட ஒரு தனிக்கலைதான்.. அது உங்களுக்கு கை வந்த கலையாய் இஇருக்கிறது வாத்தியாரே..

அதுதான் உங்கள் வகுப்புக்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ்.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.. வாரவாரம் நான் விடாமல் படித்து வருவதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிஸ்கி : அதென்ன எனக்கு மட்டும் 'சட்டாம்பிள்ளை' அப்படீன்னு பிராக்கெட் ஒரு அடைமொழி கொடுத்திருக்கீங்க..? 'சட்டாம்பிள்ளை'ன்னா என்னன வாத்தியாரே..?

தியாகராஜன் said...

ஐயா, வணக்கம்.
ஜோ.பாடம் எண் 23 _ 25ஐ தளத்தில்
தேடிபார்த்தேன். கண்டுபிடிக்க இயலவில்லை.
சுட்டி கொடுத்தால் நலம்.

SP.VR. SUBBIAH said...

//////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே..
எனக்கு சந்திரன் அதிபதி போல் தெரிகிறது.. தசா வருஷங்கள் கொஞ்சந்தான் 10. அஸ்தம் நட்சத்திரம்..////

என்ன கொஞ்சம் என்று விட்டீர் சுவாமி?
சந்திரனைத் தொடர்ந்து செவ்வாய் 7 வருடங்கள், ராகு 18 வருடங்கள் என்று கூட்ஸ் ரயில் பெட்டிக் கணக்கா தாசா புக்திகள் வந்து கொண்டே இருக்குமே? அதெல்லாம் வேண்டாமா? வேண்டாம் என்றாலும் கிரகங்கள் விடாதே!

//////என்னமோ நடக்குது உலகத்துல.. முருகன் இட்ட வழியேன்னு சொல்லிப் போய்க்கிட்டிருக்கேன்..///

இது சரியானது. இங்கே போய் விட்டால் ஒன்றையும் பார்க்க வேண்டாம். எல்லவற்றையும் அவன் கைத்தண்டாயுதம் பார்த்துக்கொள்ளும்!

/////பாடம் நடத்துவதுகூட ஒரு தனிக்கலைதான்.. அது உங்களுக்கு கை வந்த கலையாய் இருக்கிறது வாத்தியாரே..அதுதான் உங்கள் வகுப்புக்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ்.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.. வாரவாரம் நான் விடாமல் படித்து வருவதைத் தெரிவித்துக் கொள்கிறேன்./////

பாடம் நடத்துவது: நான் அடிப்படையில் வாசகன். இப்போது 4 ஆண்டுகளாக சிறுகதை எழுத்தாளர்
கதை எழுதுவது போல ஜோதிடத்தைச் சொல்வதினால்தான் இத்தனை பேர் வருகிறார்கள். வெறும் பாடம் மட்டும் என்றால் பலர் ஓடிப்போயிருப்பார்கள். நான் மருந்துடன் தேனையும் கலந்து கொடுக்கிறேன்.

டிஸ்கி : அதென்ன எனக்கு மட்டும் 'சட்டாம்பிள்ளை' அப்படீன்னு பிராக்கெட் ஒரு அடைமொழி கொடுத்திருக்கீங்க..? 'சட்டாம்பிள்ளை'ன்னா என்னன வாத்தியாரே..?

சட்டாம்பிள்ளை என்றால் தெரியாதா? மானிட்டர். அதாவது வகுப்பறை மாணவர் தலைவர்!
Students Representative! மாணவர் பிரதிநிதி. கொடிபிடிக்கும் மாணவர்:-)))

SP.VR. SUBBIAH said...

////ஐயா, வணக்கம்.
ஜோ.பாடம் எண் 23 _ 25ஐ தளத்தில்
தேடிபார்த்தேன். கண்டுபிடிக்க இயலவில்லை.
சுட்டி கொடுத்தால் நலம்.////

The link has been appended:
http://classroom2007.blogspot.com/2007/04/23.html

Anonymous said...

///முன்பே எழுதியிருக்கிறேன்

உங்களுக்காக மீண்டும் ஒருமுறை கீழே கொடுத்துள்ளேன்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இம்மூன்றிற்கும் அதிபதி சூரியன் Dasa Years 6

ரோகிணி, அஸ்தம், திருவோணம் இம்மூன்றிற்கும் அதிபதி சந்திரன் Dasa Years 10

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இம்மூன்றிற்கும் அதிபதி செவ்வாய் Dasa Years 7

திருவாதிரை, சுவாதி, சதயம் இம்மூன்றிற்கும் அதிபதி ராகு Dasa Years 18

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இம்மூன்றிற்கும் அதிபதி குரு Dasa Years 16

பூசம், அனுஷம், உத்திரட்டாதி இம்மூன்றிற்கும் அதிபதி சனி Dasa Years 19

ஆயில்யம், கேட்டை, ரேவதி இம்மூன்றிற்கும் அதிபதி புதன் Dasa Years 17

அஸ்வினி, மகம், மூலம் இம்மூன்றிற்கும் அதிபதி கேது Dasa Years 7

பரணி, பூரம், பூராடம் இம்மூன்றிற்கும் அதிபதி சுக்கிரன் Dasa Years 20\\\

Thank you Sir!!

ambi said...

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..

வாரவாரம் நான் விடாமல் படித்து வருவதைத் தெரிவித்துக் கொள்கிறேன். :))

VIKNESHWARAN said...

வணக்கம் ஐயா,

இது நீங்கள் முன்பு சொல்லி கொடுத்த பாடம்தானே..
சரி, அடுத்து வரும் அஷ்டவர்க பாடத்தை பெரிதும் எதிர் பார்க்கிறேன். நானும் தற்சமயம் அஷ்டவர்கம் தான் படிக்கிறேன். உங்கள் வகுப்பு பாடங்கள் நான் படிப்பதை மேழும் சுலபமாக்கும் என நம்புகிறேன்... நன்றி... மாணவர்களுக்கு தொடர்ந்து உங்கள் 'பூஸ்ட்' கொடுத்து வாருங்கள்...

Anonymous said...

ஜோதிடப்பாடங்களை மிகருமையாக நடத்துகிறீர்கள்.நன்றி.pdf தொகுப்பாக மாற்றி கொடுத்திர்கள் என்றால் நலமாக இருக்கும்.அடுத்து கைரேகை பற்றி பாடம் நடத்தப் படுமா?நாடி ஜோதிடம் உண்மையா?.போலிகளை அடையாளம் காண்பது எவ்வாறு?

கூடுதுறை said...

ஐயா,

இன்றைய பாடம் சற்று கடினமாகத்தான் உள்ளது பலமுறை படித்து புரிந்துகொள்ள pdf ஆக காப்பி எடுத்து வைத்துகொண்டேன்.

சந்தேகம் வரும் பின்னுட்டமிடுகிறேன்

நன்றி

நெல்வேலி கார்த்திக் said...

தங்களின் ஜோதிடப் பாடங்கள் மீண்டும் சுவையுடன் படிப்பதற்கு கிடத்த வாய்ப்பு மாணவர்களுக்கு அருமை.தங்கள் வருகை பதிவில் என்னை சேர்த்தற்கு நன்றி.

SP.VR. SUBBIAH said...

/////VIKNESHWARAN said...
வணக்கம் ஐயா,
இது நீங்கள் முன்பு சொல்லி கொடுத்த பாடம்தானே..
சரி, அடுத்து வரும் அஷ்டவர்க பாடத்தை பெரிதும் எதிர் பார்க்கிறேன். நானும் தற்சமயம் அஷ்டவர்கம் தான் படிக்கிறேன். உங்கள் வகுப்பு பாடங்கள் நான் படிப்பதை மேழும் சுலபமாக்கும் என நம்புகிறேன்... நன்றி... மாணவர்களுக்கு தொடர்ந்து உங்கள் 'பூஸ்ட்' கொடுத்து வாருங்கள்.../////

எழுதுவதற்கான பூஸ்ட்டை எனக்கு நீங்கள்தான் (உங்களைப்போன்ற வாசகர்கள்) கொடுக்க வேண்டும்:-))

SP.VR. SUBBIAH said...

/////Anonymous said...
ஜோதிடப்பாடங்களை மிகருமையாக நடத்துகிறீர்கள்.நன்றி.pdf தொகுப்பாக மாற்றி கொடுத்திர்கள் என்றால் நலமாக இருக்கும்.அடுத்து கைரேகை பற்றி பாடம் நடத்தப் படுமா?நாடி ஜோதிடம் உண்மையா?.போலிகளை அடையாளம் காண்பது எவ்வாறு?////

பி.டி.எஃப் ஆக மாற்றும் வசதியைத் தமிழ்மணமே சுது கொடுத்துள்ளது.முயன்று பாருங்கள்
கைரேகை பற்றி எனக்குத் தெரியாது!
நாடி ஜோதிடம் - அந்தக்காலத்தில் உண்மை. இப்போது இல்லை. நாடி ஜோதிடரின் வாரிசுகள் ஏடுகளைப் பங்கு வைத்துக் கொண்டு விட்டார்கள். இருப்பதை வைத்து ஒருவர் என்ன செய்ய முடியும்?

SP.VR. SUBBIAH said...

/////கூடுதுறை said...
ஐயா,
இன்றைய பாடம் சற்று கடினமாகத்தான் உள்ளது பலமுறை படித்து புரிந்துகொள்ள pdf ஆக காப்பி எடுத்து வைத்துகொண்டேன்.
சந்தேகம் வரும் பின்னுட்டமிடுகிறேன்
நன்றி////

கடினமாக உள்ளதா? இந்தப் பதிவில் உள்ள மற்ற பின்னூட்டைங்களையும் படியுங்கள்.
பழைய படங்களைப் படிக்காமல் இதை மட்டும் படித்தால் எப்படி நண்பரே புரியும்?

SP.VR. SUBBIAH said...

//////நெல்வேலி கார்த்திக் said...
தங்களின் ஜோதிடப் பாடங்கள் மீண்டும் சுவையுடன் படிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு மாணவர்களுக்கு அருமை.தங்கள் வருகை பதிவில் என்னை சேர்த்தற்கு நன்றி./////

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் பதிவுகளுக்குத் தொடர்ந்து வந்தவர்களின் பெயரை வருகைப் பதிவேட்டில்
சேர்த்துள்ளேன். இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியது உள்ளது! அவர்களாகத் தெரிவிப்பார்களா என்று பார்க்கிறேன்! பலர் இன்னும் சொல்லவில்லை

Anonymous said...

குருவே,

தாமதத்திற்கு மன்னிக்கவும். ஒரு ஜாதகருக்கு பகை கிரகத்தின் தசை நடக்கும் பொழுதும் இப்பலன்கள் பொருந்துமா? அல்லது பகை கிரகம் சுயவர்க்கத்தில் ஐந்திற்கு மேல் பெற்று இருந்தாலும் பொருந்துமா?

அன்புடன்
இராசகோபால்

வல்லிசிம்ஹன் said...

வாத்தியார் சார் எனக்கு(ரேவதி)ப்
புத கிரகம்னு சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் புதன் கிழமை சில சம்யத்தில் எனக்கு லாபகரமாக இல்லையே.
வாழ்வில் சில வேண்டாத வாசனைகள் அந்தக் கிழமையில் தான் வந்துவிட்டன.
ரொம்ப அறிவிலியாகக் கேள்வி கேட்பதைப் போல் தோன்றுகிறது.
ஏதாவது காரணம் உண்டா. நன்றி.

மணிவேல் said...

ஐயா,

ராகு/கேது திசைக்கு எப்படி சுயவர்க்கம் காண்பது?

SP.VR. SUBBIAH said...

Anonymous said...
குருவே,
தாமதத்திற்கு மன்னிக்கவும். ஒரு ஜாதகருக்கு பகை கிரகத்தின் தசை நடக்கும் பொழுதும் இப்பலன்கள் பொருந்துமா? அல்லது பகை கிரகம் சுயவர்க்கத்தில் ஐந்திற்கு மேல் பெற்று இருந்தாலும் பொருந்துமா?
அன்புடன்
இராசகோபால்//////

/////சுயவர்க்கத்தில் ஐந்திற்கு மேல் பெற்று இருந்தாலும் பொருந்துமா?////
பொருந்தும்!

SP.VR. SUBBIAH said...

/////வல்லிசிம்ஹன் said...
வாத்தியார் சார் எனக்கு(ரேவதி)ப்
புத கிரகம்னு சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் புதன் கிழமை சில சமயத்தில் எனக்கு லாபகரமாக இல்லையே.
வாழ்வில் சில வேண்டாத வாசனைகள் அந்தக் கிழமையில் தான் வந்துவிட்டன.
ரொம்ப அறிவிலியாகக் கேள்வி கேட்பதைப் போல் தோன்றுகிறது.
ஏதாவது காரணம் உண்டா. நன்றி./////

சமயத்தில் என்கிறீர்களே - அதுதான் காரணம். வேறு கிரகங்களின் ஆதிக்க திசை நடக்கும்போது, புதனை
அவைகள் ஓரம் கட்டிவிடும்! ஜோதிடத்தில் கேள்வி கேட்க கேட்கத்தான் ஒரு தெளிவு ஏற்படும். ஆகவே கேளுங்கள் சகோதரி!

SP.VR. SUBBIAH said...

மணிவேல் said...
ஐயா,
ராகு/கேது திசைக்கு எப்படி சுயவர்க்கம் காண்பது?////

ராகு & கேதுவிற்கு சொந்த வீடும் கிடையாது. நாளும் கிடையாது (வாரத்திற்கு 7 நாட்கள்தானே!)
அதுபோல சுயவர்க்கமும் கிடையாது.
ராகுவிற்கும் கேதுவிற்கும் விருச்சிகம் உச்சம், ரிஷபத்தில் அவை இரண்டும் நீசம்.
மேஷம், கடகம், சிம்மம், கும்பம் ஆகிய இடங்கள் பகை ஸ்தானங்கள், மற்ற இடங்கள் நட்பு
இருக்கும் இடத்தை வைத்து - அவைகள் தங்களுடைய பலத்தைக் காட்டும்
பொதுவாக ராகு & கேது திசைகளோ அல்லது புக்திகளோ நல்லது செய்யாது (90%)

அறிவன்#11802717200764379909 said...

//////பொதுவாக ராகு & கேது திசைகளோ அல்லது புக்திகளோ நல்லது செய்யாது (90%)//////

கோவையாரே,நிஜம்தானா...
மகர ராகு,கடக கேதுவும் அப்படித்தானா?

மணிவேல் said...

ஐயா,

ராகு/கேது திசைக்கு சுய வர்க்கம் கிடையாது என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அத்திசை நடந்தால் எப்படி பலன் காண்பது? ராகு/கேது திசா புக்திகள் நன்மை செய்யாது என்கிறீர்கள்.
அப்படியானால் ராகு திசை நடக்கும் 18 ஆண்டுகள் மற்றும் கேது திசையின் 7 ஆண்டுகள் கஷ்டப்பட வேண்டுமா?
ராகு/கேதுக்கள் தான் நின்ற வீட்டதி்பதியைப் போல் பலன் தரும் என்று ஜோதிடம் கூறுகிறது. அது போல் ராகு/கேது நின்ற வீட்டதிபதிகளின் சுயவர்க்கம் மூலம் அவற்றின் திசாபுக்தி பலன்களை காணமுடியுமா?

மிக்க நன்றி.

தங்ஸ் said...

நன்றி ஐயா!

அஷ்டவர்க்க ஜோதிடம் மெல்ல புரிய ஆரம்பிக்கிறது..

ஜாதகத்தின் சில பக்கங்களில், கட்டம் கட்டமாக X போட்டு நிறைய இருந்தது. தங்கள் பாடங்களின் உதவியால்
விளங்கிக்கொள்ள முயல்வேன்...

குருப்பெயர்ச்சியின் போது குரு ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடம் என்றால், மகரத்தில் 5 or 6 மாதங்கள் மட்டுமா?

2008 குருப்பெயர்ச்சி டிசம்பரில் வருகிறது. 2009 குருப்பெயர்ச்சி மே-ல் வருகிறது எனக்கேள்விப்பட்டேன். உண்மையா?

Anonymous said...

I am present sir...

Shankar

SP.VR. SUBBIAH said...

///////அறிவன்#11802717200764379909 said...
//////பொதுவாக ராகு & கேது திசைகளோ அல்லது புக்திகளோ நல்லது செய்யாது (90%)//////
கோவையாரே,நிஜம்தானா...
மகர ராகு,கடக கேதுவும் அப்படித்தானா?/////

அது பொது விதி! 90% அப்படித்தான். எந்த இடத்து ஆதிபத்தியம் ஆனாலும் அப்படித்தான்
விருச்சிகம், ரிஷபத்திற்கு மட்டும் மாறுபடும் (உச்சம், நீசம் காரணமாக)
மற்றபடி சில ஜாதகங்களுக்கு அவற்றின் (அந்த ஜாதகங்களின்) உயர்வை வைத்து விதிவிலக்குகளும்
உண்டு.

SP.VR. SUBBIAH said...

//////மணிவேல் said...
ஐயா,
ராகு/கேது திசைக்கு சுய வர்க்கம் கிடையாது என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அத்திசை நடந்தால்

எப்படி பலன் காண்பது? ராகு/கேது திசா புக்திகள் நன்மை செய்யாது என்கிறீர்கள்.
அப்படியானால் ராகு திசை நடக்கும் 18 ஆண்டுகள் மற்றும் கேது திசையின் 7 ஆண்டுகள் கஷ்டப்பட

வேண்டுமா?////

18 வருடங்களிலும், 7 வருடங்களிலும் நிறைய Sub Periods வருமே சாமி! அந்தக் காலங்களில் பலன்கள்

எல்லாம் மாறுமே! நீங்கள், புலிப்பாணியின் தாசா புக்திப் பலன்களைக் கொடுத்துள்ளேனே, அவற்றைப்

படியுங்கள்! குழப்பிக்கொள்ளாதீர்கள்!

சற்றுப் பொறுங்கள். பின்னால் நேரம் கிடைக்கும்போது ராகு & கேது இரு கோள்களுக்கும் தனித்தனியாக விரிவான கட்டுரைகள் எழுதிப் பதிகிறேன்

SP.VR. SUBBIAH said...

//////////தங்ஸ் said...

குருப்பெயர்ச்சியின் போது குரு ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடம் என்றால், மகரத்தில் 5 or 6 மாதங்கள்

மட்டுமா?
2008 குருப்பெயர்ச்சி டிசம்பரில் வருகிறது. 2009 குருப்பெயர்ச்சி மே-ல் வருகிறது எனக்கேள்விப்பட்டேன்.

உண்மையா?////

குரு ஒருராசியில் இருக்கும் காலம் ஓர் ஆண்டு!
அது துள்ளியமாக ஓர் ஆண்டு அல்ல! 11 முதல் 13 மாதங்கள் வரை மாறுபடும்
கோச்சாரம் பற்றிப் பிறகு விரிவாக எழுதுகிறேன்

I will write a detailed article about the transit of planets soon! Please wait!

SP.VR. SUBBIAH said...

////Anonymous said...
I am present sir..
Shankar////

நன்றி சங்கர்!

Sumathi. said...

வாத்தியாரய்யா,

ஆஹா, சூப்பர் டெம்ப்ளேட், நன்றாக இருக்கிறது. நடுவுல கொஞ்சம் பிஸியானதால் 2-3 படிக்க முடியலை.சேர்த்து வச்சு இப்ப படிச்சுட்டேன். நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்.

SP.VR. SUBBIAH said...

/////Sumathi. said...
வாத்தியாரய்யா,
ஆஹா, சூப்பர் டெம்ப்ளேட், நன்றாக இருக்கிறது. நடுவுல கொஞ்சம் பிஸியானதால் 2-3 படிக்க முடியலை.சேர்த்து வச்சு இப்ப படிச்சுட்டேன். நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்.////

வாருங்கள் சகோதரி! டெம்ப்ளேட் உங்களுக்குப் பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே!
நீங்களும் தொடர்ந்துவந்து படியுங்கள்! நன்றி!

dammam bala said...

அன்புள்ள ஆசானே..

உங்கள் பரல்கள் 337, ஒரு தத்துவ விளக்கமாகவே அமைந்து விட்டது!

என் 2 சந்தேகங்கள்...

1.சுக்ரதசை படகளிப்பான், துடுப்பளியான்..
2. தனுர் லக்ன காரனுக்கு சுக்ர தசை வரவே கூடாது..
உங்கள் கருத்து.. என்னவோ?

உங்கள் வகுப்பு அறையில் இந்த தமாம் பாலாவையும் சேர்த்துக் கொள்வீர்களா?

என்றும் அன்புடன
தமாம் பாலா (சவுதி அரேபியா)

SP.VR. SUBBIAH said...

/////dammam bala said...
அன்புள்ள ஆசானே..
உங்கள் பரல்கள் 337, ஒரு தத்துவ விளக்கமாகவே அமைந்து விட்டது!
என் 2 சந்தேகங்கள்...
1.சுக்ரதசை படகளிப்பான், துடுப்பளியான்..
2. தனுர் லக்ன காரனுக்கு சுக்ர தசை வரவே கூடாது..
உங்கள் கருத்து.. என்னவோ?/////

துடுப்பை நாமே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்:-))))
(அதுதான் நமது செயல்பாடுகள்)

தனூர் லக்கினத்திற்கு சுக்கிரன் 6ம் வீட்டிற்கு மட்டும் உரியவன் அல்லவே?
11ம் வீட்டிற்கும் அவன்தான் அதிபதி (பலாப ஸ்தானம்) பலன்: mixed results

////////உங்கள் வகுப்பு அறையில் இந்த தமாம் பாலாவையும் சேர்த்துக் கொள்வீர்களா?
என்றும் அன்புடன
தமாம் பாலா (சவுதி அரேபியா)/////

இப்படி விரும்பி வருகிறவர்களை விடலாமா? சேர்த்துவிடுகிறேன் நண்பரே!

VCTALAR said...

Blogger SP.VR. SUBBIAH said...

//////நெல்வேலி கார்த்திக் said...
தங்களின் ஜோதிடப் பாடங்கள் மீண்டும் சுவையுடன் படிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு மாணவர்களுக்கு அருமை.தங்கள் வருகை பதிவில் என்னை சேர்த்தற்கு நன்றி./////

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் பதிவுகளுக்குத் தொடர்ந்து வந்தவர்களின் பெயரை வருகைப் பதிவேட்டில்
சேர்த்துள்ளேன். இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியது உள்ளது! அவர்களாகத் தெரிவிப்பார்களா என்று பார்க்கிறேன்! பலர் இன்னும் சொல்லவில்லை
Tuesday, May 13, 2008 9:48:00 AM
அய்யா,
என்னை உங்கள் வகுப்பில் சேர்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏற்கனவே நீங்கள் என் சமீபத்திய பின்னிடுவுகளுக்கு பதில் கொடுத்துள்ளீர்கள், அய்யா. வகுப்பில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை உங்கள் பாடத்தில் 70 வரை படித்துள்ளேன். மிக உற்சாகமாக உள்ளது .சந்தேகங்களையும், கருத்துக்களையும் அந்தப் பதிவிலேயே கேட்கலாமா ?
அருணாசலம் - கோட்டையூர் VCTALAR

SP.VR. SUBBAIYA said...

//////Blogger VCTALAR said...
அய்யா,
என்னை உங்கள் வகுப்பில் சேர்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏற்கனவே நீங்கள் என் சமீபத்திய பின்னிடுவுகளுக்கு பதில் கொடுத்துள்ளீர்கள், அய்யா. வகுப்பில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை உங்கள் பாடத்தில் 70 வரை படித்துள்ளேன். மிக உற்சாகமாக உள்ளது .சந்தேகங்களையும், கருத்துக்களையும் அந்தப் பதிவிலேயே கேட்கலாமா ?
அருணாசலம் - கோட்டையூர் VCTALAR/////

பதிவின் தலைப் பகுதியில் Join this site என்னும் option உள்ளது. அதைக் கிளிக்கி வகுப்பில் சேர்ந்து கொள்ளுங்கள்.
மொத்தம் 500 பாடங்கள் உள்ளன. அவைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பொறுமையாகப் படியுங்கள். சந்தேகம் வராது.
அத்துடன் ‘கேள்வி - பதில்’ என்னும் தொடர் பதிவில் சுமார் 175 அன்பர்களின் சந்தேகங்களுக்குப் பதில் சொல்லியுள்ளேன் (சுமார் 500 கேள்விகள் இருக்கும்) அவற்றையும் படியுங்கள். சந்தேகம் வராது. மீறி வந்தால், குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த கேள்வி - பகுதி வகுப்புப் பாடம் நடக்கும்போது கேளுங்கள். அதுவரை பொறுமையாக இருங்கள்

Latha Ramesh said...

good evening sir
I am a regular attender of your jothidam classes. i am grateful that you are doing a great service to humanity thru your classes. i have a doubt,in the previous lesson u said that above 4 parals in each house is good. In the above example given in Mercury dasa mars bhukti the paral is 6.why have you posted this period as better and not good period?Is there any other reason for it? kindly clarify my doubt

hema