மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.3.18


Astrology: மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாமி!

அதாவது மாந்தி, குளிகன் என்று உப கிரக குழப்பத்தைச் சொல்கிறேன்

குளிகனுக்கும் மாந்திக்கும் என்ன வித்தியாசம்?
--------------------------
குளிகனும் மாந்தியும் ஒரே ஆசாமிதானா? சிலருக்கு அந்த சந்தேகம் இருக்கும். அந்த சந்தேகத்தை வைத்துக் குழப்புவார்கள்.

அவர்கள் இருவருமே வெவ்வேறானவர்கள் என்பார்கள். சித்தப்பன் மகன் பெரியப்பன் மகன் போன்று வேறுபட்டவர்கள் என்பார்கள்

8.6.2013 அன்று உள்ள கிரகநிலைகளைக் கீழே கொடுத்துள்ளேன் (Taken from Jagannatha Hora web site) அதில் பார்த்தீர்கள் என்றால் இரண்டும் வெவெவேறு பாகைகளில் இருப்பது தெரியவரும்!



சர்வார்த்த சிந்தாமணி என்னும் ஜோதிட நூல் குளிகனை சனியினுடைய புத்திரன் என்றும், மாந்தியை எமனுடைய புத்திரன் என்று கூறுகிறது. இருவரில் மாந்தி மிகவும் மோசமானவன்.பயம் கொள்ளவைப்பவன். இருக்கும் இடத்தின் பலன்களை ஜாதகனுக்குக் கிடைக்கவிடாமல் தட்டிப் பறிப்பவன். அழித்துவிடக்கூடியவன்.

ஆகவே ஜகந்நாத மென்பொருளை உபயோகிப்பவர்களுக்கு அந்த இரண்டின் அமைப்பும் இருக்கும். மற்ற மென்பொருளை உபயோகிப்பவர்களுக்கு மாந்தியின் அமைப்பு மட்டுமே கொடுக்கப் பெற்றிருக்கும்

அது பற்றி இன்று விவரமாகப் பார்ப்போம்!
---------------------------------------
4.8.2009ம் தேதியன்று மாந்தியால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி விவரமாக எழுதினேன்.

அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் நம் மதிப்பிற்குரிய ஓம்கார் சுவாமிஜி அவர்கள் இவ்வாறு பின்னூட்டம் இட்டார்கள்:

கேரள ஜோதிடம் அறிந்தவன் எனும் முறையில் சொல்லுகிறேன். அனைத்து கிரகங்களை விட மாந்தி அதிபயங்கரமானது..!

மாந்தி ப்ரேதஹா என்கிறார்கள்.

மாந்தி லக்னம் அல்லது 7ல் இருந்தால் அவர்களின் மணவாழ்க்கையில் 24 மணிநேரமும் சண்டை சண்டையாகவே இருக்கும். ஆனால் பிரிந்து வாழவும் மாட்டார்கள். சேர்ந்து சந்தோஷமாகவும் இருக்கமாட்டார்கள்.

இது எனது ஜோதிட ஆய்வு.

மாந்தியை ஞாபகப்படுத்தி என்னை கிலி ஏற்படுத்தியதற்கு நன்றி வாத்தியாரே..!

ஸ்வாமி ஓம்கார்
==========================================================
ஒரிஜினல் மிட்டாய்க் கடை அல்லது ஒரிஜினல் அல்வாக் கடை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான நெய்யினால் செய்யப்பெற்ற இனிப்புகள் என்பார்கள். அதுபோல வில்லன்களிலும் ஒரு ஒரிஜினல் வில்லன் இருக்கிறான். நீங்கள் திரைப்படங்களில் பார்க்கும் வில்லன் படத்தோடு போய்விடுவான்.நேரில் பார்க்கும் வில்லத்தனமான ஆசாமிகளைக் கொஞ்சம் புத்திசாலித் தனத்தோடு சமாளித்துவிடலாம்.

ஆனால் யாராலும் சமாளிக்க முடியாத வில்லன் ஒருவன் இருக்கிறான்.அவன் பெயர் மாந்தி!

எல்லோருடைய ஜாதகத்திலும் அவன் இருப்பான். யாருக்கும் விதிவிலக்கில்லை. ஆனால் 3,6,10 & 11ஆம் (3rd/6th/10th and 11th houses) வீடுகளில் அவன் இருந்தால், அந்த ஜாதகர்கள் மட்டும் தப்பிப் பிழைப்பார்கள்.

"அது மட்டும் ஏன்?" என்று கேட்காதீர்கள். சில ஜோதிட விதிமுறைகளுக்குக் காரணம் சொல்ல முடியாது. அதை வகுத்தவர்கள் எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே போய்ச் சேர்ந்துவிட்டார்கள். போய்ச் சேர்ந்தவர்களிடம் எப்படிக் கேட்பது? அவர்கள் சொல்லி விட்டுச் சென்றதை, அப்படியே நம்பி எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அது மட்டுமே நாம் செய்யக்கூடியது. அந்த வில்லனிடம் அடி வாங்கியவர்களும் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதையும், அதாவது அவர்கள் அனுபவித்ததையும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!

ராகு & கேதுவைப்போல மாந்தியும் ஒரு நிழல் கிரகம் (shadow' planet)

தீயவைகளைச் செய்யக்கூடியது.It has a malefic effect.

குளிகன் என்பவனும் மாந்தி என்பவனும் ஒரே ஆள்தான் என்று சிலர் சொல்கிறார்கள். ஒரே உபகிரகம்தான் என்கிறார்கள். ஆனால் சிலர் வேறு படுகிறார்கள். புராணங்கள் மாந்தியை சனியின் புதல்வன் என்கின்றன. அது நமக்குத் தேவையில்லாதது. எந்த மருத்துவமனையில் அவர் பிறந்தார் என்றெல்லாம் நாம் கேட்டுக் கொண்டிருப்போம். ஆகவே அது தேவையில்லாதது.

It is scientifically a satellite. There ends the matter.

சில ஜோதிடவல்லுனர்கள், இரண்டு பெயர்கள் இருந்தாலும், அவை ஒன்றுதான் என்பார்கள் வேறு சிலர் அவை தனித்தனி என்னும் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் பழைய ஜாதகங்களை எல்லாம் எடுத்துப்பார்த்தால், ஒன்றைத்தான் குறித்து வைத்துள்ளார்கள். ஆகவே அடித்துச் சொல்லலாம், அவை இரண்டும் ஒன்றுதான்! There is not a single chart in any book where Gulika & Mandi are both present, so both must be the same.

ஆகவே நாம் மாந்தியை மட்டும் எடுத்துக்கொள்வோம்!

ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தவர்கள் அறியத்தரலாம். தன் தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில் நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம்.

ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும், தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின் ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம்.

கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த, அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்தக் காலும், அதனுடன் இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின் வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே முடித்துக் கணக்கைத் தீர்த்ததாம். Mandi being on the lagna gave Indrajit, a short span of life!

இந்தக்கதையை நம்புவர்கள் நம்பலாம். நம்பாதவர்கள், பின்னூட்டத்தில் சொல்ல வேண்டாம். ஒரு குறுகுறுப்பான தகவல் என்பதற்காக அதைக் கொடுத்துள்ளேன். எனக்கும் அந்தக் கதையில் நம்பிக்கை இல்லை!:-))))

இன்னொரு கதையும் உண்டு, ராவணன் தன் அரசவையில், அரியணை இருக்கும் இடத்தில் ஏறுவதற்கான படிக்கட்டில் சனியையும் கல்லில் படிக்கட்டாகி, குப்புறப் போட்டு வைத்திருந்தானாம். அதுதான் முதல் படிக்கட்டாம். தினமும் அதை மிதித்துக் கொண்டு, ஏறிச் சென்றுதான் தன் அரியணையில் அமர்வானாம்.

அவனுடைய கொட்டத்தை அடக்க நினைத்த நாரதர், அவனுடைய சபைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்த போது சொன்னாராம், “ ராவணா, உன்னுடைய தவவலிமை என்ன? உன்னுடைய பெருமை என்ன? நீ எதற்காக சனியை குப்புறப் போட்டு மிதித்துக் கொண்டு செல்கிறாய்? நிமிர்த்திப்போட்டு, சனியின் நெஞ்சில் அல்லவா நீ மிதித்துக் கொண்டு செல்ல வேண்டும்?”

நெகிழ்ந்துபோன ராவணன் உடனே அதைச் செய்தான்.

என்ன ஆயிற்று?

நிமிர்ந்து கிடந்த சனியின் மார்பில், அவன் கால்கள் படும்போதெல்லாம், சனியின் பார்வை அவன் மேல் விழுக ஆரம்பித்தது.

சனியின் பார்வை படப்பட அவனுடைய வலிமை எல்லாம் நீங்கி, கெட்டவை குடிகொள்ள ஆரம்பித்தன. கடைசியில் மாற்றான் மனைவி சீதையின் மேல் கையை வைத்தான். வைத்த பிறகு நடந்ததைத்தான் அனைவரும் அறிவோமே!
----------------------------------------------------------------------------
கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜோதிடர்கள் ஜாதகப் பலன்களைச் சொல்லும்போது, மாந்தியின் நிலையை வைத்துத்தான் முக்கியமான பலன்களைச் சொல்வார்கள். அது சரியாகவும் இருக்கும். தமிழ்நாட்டு ஜோதிடர்கள், மாந்தியையும் பார்ப்பதில்லை. அஷ்டகவர்க்கத்தையும் பார்ப்பதில்லை. என் கண்ணிற்கு அது ஒரு குறையாகத்தான் படுகிறது!

நான் படித்ததெல்லாம் ஆங்கில ஜோதிட நூல்கள் என்பதால், எனக்கு ஒரு விரிந்த பார்வை கிடைத்தது. நான் கேரள ஜோதிடர்கள் எழுதிய கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். குஜராத் ஜோதிடர்கள் எழுதிய கட்டுரைகளையும் படித்திருக்கிறேன்.
----------------------------------------------------------------------------
மாந்தி அல்லது குளிகன், ஜாதகங்களில் இருக்கும் இடத்தைவைத்துப் பலாபலன்கள்:

1ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் பந்தாபேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர் கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள்
----------------------------------------------------------------------------
2ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால், சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும். சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள்.

இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில் (Dictionary) மட்டும்தான்.
---------------------------------------------------------------------
3ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன். யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக்கூடியவன்.உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு
நல்ல உறவு இருக்காது.

சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின் தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
----------------------------------------------------------------------
4ல் மாந்தி இருந்தால்:

ஒரே வரியில் சொன்னால் - துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor)
-----------------------------------------------------------------------
5ல் மாந்தி இருந்தால்:

நிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான். நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன். அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள் தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது. சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள். பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள்.
-------------------------------------------------------------------------
++++++6ல் மாந்தி இருந்தால்:

துணிச்சலானவன். உங்கள் மொழியில் சொன்னால் தெனாவெட்டான ஆசாமி. அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes). மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம் ஈடுபாடுகொள்வாள் (loved by women)
-------------------------------------------------------------------------
7ல் மாந்தி இருந்தால்:

வாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை உடையவன். உங்கள் மொழியில் சொன்னால் தனக்கென்று சில சட்டங்களை வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன்.

சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே வாழ்க்கையை ஓட்ட நேரிடும்!
-------------------------------------------------------------------------
8ல் மாந்தி இருந்தால்:

கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக் கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன்.

துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்காரன். ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது.
------------------------------------------------------------------------
9ல் மாந்தி இருந்தால்:

தன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள் அவனைஅம்போஅல்லதுசிவ சம்போஎன்று கடாசிவிட்டுப் போய் விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும். (deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள். வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும்.
-------------------------------------------------------------------------
10ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில் விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள்.

மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள்
----------------------------------------------------------------------------
11ல் மாந்தி இருந்தால்:

ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம் கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான்.

சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது. உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப் பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும்.
----------------------------------------------------------------------------
12ல் மாந்தி இருந்தால்:

ஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும். கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும்.
சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள்.

சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில் இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.
-----------------------------------------------------------------------
கூறப்படுள்ளவை அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, சுப கிரகங்களின் அமைப்பு, பார்வை ஆகியவற்றை வைத்து மேற்சொன்ன பலன்கள் மாறுபடும். கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம்.

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று அதை  இன்று  இங்கே மீண்டும் பதிவிட்டுள்ளேன்இங்கே பதிவிடப் பெறும் மேல் நிலைப் பாடங்கள் எல்லாம் 2 நாட்களுக்குப் பிறகு நீக்கப்பெற்றுவிடும். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைப் பொதுவில் சொல்ல முடியாது!

அன்புடன்,
வாத்தியார்
==================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Good morning sir once again happy to see astrology post sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    மாந்தி கிரஹத்தைப் பற்றி விபரமாக
    பதிவிட்டதற்கு நன்றி!
    ஸ்வாமி ஓம்கார் அவர்கள் கூட மாந்தி பற்றி கிலியாக உள்ளது என்பதைப் படிக்கும் போது அந்த கிரகத்தின் தன்மை நன்கு புலப்படுகிறது!

    ReplyDelete
  3. Dear Sir,

    Good post about மாந்தி.

    Please check your e-mail. I have ordered book no.1 & 4 jadagam in pdf.

    Please do the needful

    ReplyDelete
  4. Thanks for the lesson Sir. You have brought out only two volumes,is it not? IF MORE VOLUMES have come please let me know Sir.

    ReplyDelete
  5. super details about mandhi.. thanks..

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா!
    மாந்தி பற்றிய தகவல்கள் அருமை!

    ReplyDelete
  7. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir once again happy to see astrology post sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  8. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மாந்தி கிரஹத்தைப் பற்றி விபரமாக
    பதிவிட்டதற்கு நன்றி!
    ஸ்வாமி ஓம்கார் அவர்கள் கூட மாந்தி பற்றி கிலியாக உள்ளது என்பதைப் படிக்கும் போது அந்த கிரகத்தின் தன்மை நன்கு புலப்படுகிறது!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  9. ///Blogger arumuga nainar said...
    Dear Sir,
    Good post about மாந்தி.
    Please check your e-mail. I have ordered book no.1 & 4 jadagam in pdf.
    Please do the needful////

    நல்லது. பார்க்கிறேன் நண்பரே!!!!

    ReplyDelete
  10. /////Blogger kmr.krishnan said...
    Thanks for the lesson Sir. You have brought out only two volumes,is it not? IF MORE VOLUMES have come please let me know Sir./////

    புத்தகம் வெளியிடுவதற்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அறிவிப்பு பதிவில் வரும். பொறுத்திருங்கள் கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  11. /////Blogger jayaram thinagarapandian said...
    super details about mandhi.. thanks../////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  12. ////Blogger ayyappan s said...
    வணக்கம் அய்யா!
    மாந்தி பற்றிய தகவல்கள் அருமை!/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com