மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.3.18

Astrology: விசுவாசம் இல்லாதவர்கள் - Lesson on unfaithfulness!!!!


Astrology: விசுவாசம் இல்லாதவர்கள் - Lesson on unfaithfulness!!!!

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!

பறக்கும் பாவை (1966) என்னும் படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் அற்புதமான பாடல் ஒன்றை எழுதினார்!

அன்னை பெற்றாள் பெண் என்று அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே கருணை தந்தால் ஆகாதோ”

என்று பெண்படும் பாட்டைச் சொன்னவர், தொடர்ந்து சொல்கிறாள்.

வேட்டை ஆடும் மானானேன் வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல் நாட்டில் வாழும் பெண்ணானேன்”
என்று பெண் தன் வாயால் சொல்வதாக எழுதியுள்ளார். அவளே மனக் கிலேசத்துடன் மீண்டும் ஒன்றைச் சொல்கின்றாள்:

அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா மனிதர் இங்கே எவருண்டு?

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

உண்மைதான் சுயநலத்தால் இன்று கல்லாகிப் போன - அதாவது மனதைக் கல்லாக்கிக் கொண்ட மனிதர்கள்தான் அதிகம்.

பல்லவியில் கவிஞர் இப்படிக் சொன்னார்:

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

உண்மைதான். இன்று பூமியில் எல்லாம் - அதாவது பெரும்பாலும் வஞ்சமாக உள்ளது. மனிதர்கள் விஷமாகப் போய்விட்டார்கள். விஷமாகப் போய்விட்ட மனிதர்களால், உடன் இருக்கும் சக நல்ல மனிதர்களுக்குத்தான் அவர்களால் பெரும் துயரம்!

அதை இன்று பார்ப்போம்!
------------------------------------------------------------------
முதலில் விசுவாசமில்லாத ஆசாமிகளைப் பார்ப்போம். பிறகு மற்றவர்களைப் பார்ப்போம்!

unfaithful people - விசுவாசமில்லாத ஆசாமிகள்!

(unfaithfulness - infidelity: the quality of being unfaithful = விசுவாசமின்மை. unfaithfulness - the quality of being unfaithful - infidelity - quality - an essential and distinguishing attribute of something or someone; "the quality of mercy is not strained"--Shakespeare
faithlessness, fickleness, inconstancy, falseness - unfaithfulness by virtue of being unreliable or treacherous, disloyalty - the quality of being disloyal faithfulness, fidelity - the quality of being faithful -  not true to a promise, vow, etc,  not true to a wife, husband, lover, etc, esp in having sexual intercourse with someone else -  inaccurate; inexact; unreliable; untrustworthy)

உலகில் நமக்குத் தெரிந்த அல்லது நன்கு பரீட்சயமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று யாரை வேண்டுமென்றாலும் அல்லது யாரிடம் வேண்டுமென்றாலும் நாம் நட்புடன் இருக்கலாம். அவர்கள் மீது அன்பு, பாசம், பரிவு கொள்ளலாம்.

ஆனால் விசுவாசமில்லாத ஆசாமிகளிடம் நட்பே வைத்துக்கொள்ளக்கூடாது. தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. அவர்களை விலக்கி வைத்துவிட வேண்டும்.

அப்படிப்பட்ட ஆசாமிகள் நம்மை ஏமாற்றத் தயங்க மாட்டார்கள். நமக்குத் துரோகம் செய்யத் தயங்கமாட்டார்கள். ஒரே வரியில் சொன்னால், கூட இருந்தே குழி பறிக்கவும் தயங்க மாட்டார்கள்.

வியாபாரத்தில் உங்களுடன் கூட்டாக இருப்பவர் விசுவாசமில்லாத ஆசாமி என்றால், ஒரு நாள் வியாபரத்தில் கிடைக்கும் லாபம் மற்றும் முதலீடு செய்த பணத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு போய்விடுவதோடு, நஷ்டக் கணக்கை உங்கள் தலை மீது சுமத்தி உங்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிடுவார்கள். எந்த துரோகத்தையும் செய்ய அஞ்சாதவர்கள் அவர்கள். நெஞ்சில் ஈரமில்லாதவர்கள் அவர்கள்.

அதுபோன்ற சிலரை நான் சந்தித்திருக்கிறேன். 12ஆம் இடத்தில் அமர்ந்த சனீஷ்வரன் தன்னுடைய திசையில் அதுபோன்ற சிலரை எனக்கு அடையாளம் காட்டியிருக்கிறான். நம்முடைய நேரம் என்று அவர்களால் ஏற்பட்ட நஷ்டங்களை எல்லாம் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். சில ஆலை அதிபர்கள் என்னால் அதீத லாபம் அடைந்து விட்டு என்னை நஷ்டப்படுத்தியிருக்கிறார்கள். சில வியாபாரிகளுக்கு நான் நல்ல வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறேன். அந்த வியாபாரமெல்லாம் செட் ஆனவுடன், என்னைக் கழற்றி விட்டு விட்டு எனக்குத் துரோகம் இழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே விசுவாசம் இல்லாதவர்கள்.

அவர்களுக்கு உரிய தண்டனையை, விசுவாசமின்மைக்கு உரிய தண்டனையை வழங்கும் பொறுப்பைப் பழநிஅப்பனிடம் விட்டுவிட்டு நான் அவர்களை விட்டு ஒதுங்கி விட்டேன். உங்கள் மொழியில் சொன்னால் அவர்களை நான் ஓரம் கட்டிவிட்டேன்.

இதைவிடக் கொடுமையான விசுவாசமில்லாத செயல்கள் எல்லாம் நிறைய உள்ளன. பட்டியல் இட்டால் பதிவு அனுமார் வால்போல நீண்டு கொண்டே இருக்கும். ஆகவே இரண்டொன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.

1. பிள்ளைகள் பெற்றவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். பெற்றுப் பெயரிட்டு, வளர்த்து ஆளாக்கியதை மறந்து விடக்கூடாது. மனைவி வந்ததும் மாறி விடக்கூடாது. அவர்களின் வயதான காலத்தில் அவர்களைத் தலைமுழுகிவிடக் கூடாது.

2. கணவன் - மனைவி உறவில் விசுவாசமில்லாத நிலைமை, கடைசியில் துன்பத்தில் முடியும்.

3. வேலையில் இருப்பவர்கள், தங்களுக்குப் படியளக்கும் நிர்வாகத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். வேலையில் இருந்துகொண்டே, அந்நிறுவனத்தைற்கு எதிரான மற்றும் தகாத செயல்களில் ஈடுபடக்கூடாது.

4. உடன் பிறப்புக்கள் இல்லாத வாழ்க்கை உப்பு, சப்பில்லாத வாழ்க்கை. பருப்பு, நெய், கெட்டிக்குழம்பு, சாம்பார், மோர்க்குழம்பு, ரசம், தயிர், கூட்டு, அவியல், பொரியல், பச்சடி, பிரட்டால், ஊறுகாய், பாயாசம், அப்பளம் என்று விதம் விதமான சுவையான சாப்பாடு இல்லாமல், தக்காளி சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என்று தனித்தனியாக ஒவ்வொரு நாளும் ஒரு சித்திரான்னம் சாப்பிடும் வாழ்க்கையாகிவிடும் அது.

ஆர்க்கெஸ்ட்டிரா இல்லாத கச்சேரியாகிவிடும் அது. அத்துடன் உடன் பிறப்புக்கள் இறைவன் அருளால், வாங்கி வந்த வரத்தால் கிடைத்ததாகும். ஆகவே உடன்பிறப்புக்களுடன் விசுவாசமாக இருங்கள். அவர்களில் ஒருவர் விசுவாசமாக இல்லாவிட்டாலும், டேக் இட் ஈஸி என்று அதை எடுத்துக்கொண்டு, அவரை விட்டு நீங்கள் சற்று விலகி இருங்கள்.

5. நண்பர்களுடன் விசுவாசமாக இருங்கள். நட்பில் விசுவாசம் இல்லாத நிலைமை துன்பத்தில் முடியும். ஆகவே உங்கள் நண்பர்களில் ஒருவர் விசுவாசமில்லாதவர் என்று தெரிந்தால், அவரை ஓரம் கட்டிவுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.

இப்படி எழுதிக்கொண்டே போகலாம். ஆகவே பதிவின் நீளம் கருதி, இத்துடன் நிறுத்திக்கொண்டு, சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்:

ஜாதகப்படி விசுவாசமின்மைக்கான அமைப்புக்கள் சில உள்ளன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.எல்லாம் பொது விதிகள். அதை மனதில் கொள்ளவும்.

1. ஜாதகத்தில் மகாபுருஷ யோகம் இல்லாத நிலைமை.
2. லக்கினத்தின் மேல் வலிமையான தீய கிரகங்களின் பார்வை.
3. ஐந்தாம் வீட்டின் மேல் வலிமையான தீய கிரகங்களின் பார்வை.
4. வக்கிரம் பெற்ற குரு.
5. குருபகவானுக்கு 6, 8, 12ஆம் இடங்களில் சந்திரன் வலிமையற்றுத் தனித்திருக்கும் நிலைமை!
6. சந்திரனின் மேல் தீய கிரகத்தின் பார்வை உள்ள அமைப்பு

அன்புடன்,
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Good morning sir very excellent post,once again happy to see astrology post,im expecting more post on astrology sir, thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. மேற்கண்ட ஜாதக அமைப்பு உடையவர்கள் விசுவாசம் அற்றவர்களா? அல்லது மேற்கண்ட ஜாதக அமைப்பு உடையர்க்கு விசுவாசமானவர் கிடைக்க மாட்டாரா

    ReplyDelete
  3. Very good lesson Sir. New one also.Thank you.

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    1966ம் ஆண்டில் வந்த" பறக்கும் பாவை" படத்தில் வந்த கவிஞரின் பாடல் வரிகளில் தொடங்கி, தங்கள்
    வாழ்க்கையில் சனீஸ்வரன் 12ம் இடத்தில் அமர்ந்த சமயத்து விளைந்த எதிர்பாராத ஏமாற்றத்தையும் தெரிவித்து, அதன்
    மூலம் பொது எச்சரிக்கையையும்
    வகுப்பறை மாணவர்கட்குத் தந்துள்ள
    அதே சமயம், ஜாதகத்தில் எப்படிப்பட்ட கிரஹ அமைப்புகள்
    'விசுவாசமின்மை'யைக்
    குறிக்கிறது என்பதையும் விளக்கியுள்ளீர்கள்,எளிமையான
    முறையில்!
    தங்களை ஏமாற்றியவர்களை தண்டிக்கும் பணியையும் பழநி ஆண்டவனிடம் விட்டுள்ளதாகவும்
    எழுதியுள்ளது காணும் போது... தாங்கள் எப்போதும் இறைப்பணி
    செய்கிறேன் என்று சொல்வது தான்
    நினைவுக்கு வருகிறது, வாத்தியார்
    ஐயா!

    ReplyDelete
  5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very excellent post,once again happy to see astrology post,im expecting more post on astrology sir, thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!

    ReplyDelete
  6. //////Blogger SELVARAJ said...
    மேற்கண்ட ஜாதக அமைப்பு உடையவர்கள் விசுவாசம் அற்றவர்களா? அல்லது மேற்கண்ட ஜாதக அமைப்பு உடையர்க்கு விசுவாசமானவர் கிடைக்க மாட்டாரா///////

    மேற்கண்டபடி ஜாதகம் அமைந்தவர்கள் விசுவாசம் அற்றவர்களை சந்திக்க நேரிடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். நன்றி செல்வராஜ்!!!!

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    Very good lesson Sir. New one also.Thank you.

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  8. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    1966ம் ஆண்டில் வந்த" பறக்கும் பாவை" படத்தில் வந்த கவிஞரின் பாடல் வரிகளில் தொடங்கி, தங்கள்
    வாழ்க்கையில் சனீஸ்வரன் 12ம் இடத்தில் அமர்ந்த சமயத்து விளைந்த எதிர்பாராத ஏமாற்றத்தையும் தெரிவித்து, அதன்
    மூலம் பொது எச்சரிக்கையையும்
    வகுப்பறை மாணவர்கட்குத் தந்துள்ள
    அதே சமயம், ஜாதகத்தில் எப்படிப்பட்ட கிரஹ அமைப்புகள்
    'விசுவாசமின்மை'யைக்
    குறிக்கிறது என்பதையும் விளக்கியுள்ளீர்கள்,எளிமையான
    முறையில்!
    தங்களை ஏமாற்றியவர்களை தண்டிக்கும் பணியையும் பழநி ஆண்டவனிடம் விட்டுள்ளதாகவும்
    எழுதியுள்ளது காணும் போது... தாங்கள் எப்போதும் இறைப்பணி
    செய்கிறேன் என்று சொல்வது தான்
    நினைவுக்கு வருகிறது, வாத்தியார்
    ஐயா!//////

    நல்லது. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com