மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.6.17

Astrology வைத்தீஸ்வரன் என்ற மருத்துவர்!!!!


Astrology வைத்தீஸ்வரன் என்ற மருத்துவர்!!!!

வைத்தீஸ்வரன் என்ற "God of medicine"

ஆன்மிகம் cum ஜோதிடக் கட்டுரை!
---------------------------------------------------------
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒருவித துணிச்சல் உண்டு.

பணம் வைத்திருப்பவன் பணம் நம்மைக் காப்பாற்றும் என்று எதற்கும் கவலைப் படாமல் தெனாவெட்டாக இருப்பான். பணம் இல்லாதவன் நம்மைப் படைத்தவன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையோடு துணிச்சலாக இருப்பான். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பான்.

அதெல்லாம் பொது நம்பிக்கை. மனித குணம்.

ஆனால் ஜாதகப்படி நேரம் சரியில்லாத போது எது நடக்கும் எப்படி நடக்கும் என்றே சொல்ல முடியாது.

நீங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, உங்களுடைய வாகனத்தை, எதிரில் வரும் டிப்பர் லாரிக்காரன் முத்தமிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? யோசித்துப் பாருங்கள். கண நேரத்தில் உங்கள் உதட்டைச் சிவக்க வைத்துவிடுவான்.

‘spot out' என்றால் பிரச்சினை இல்லை. சிவலோகம் அல்லது வைகுண்டம் போய்விடலாம். குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் என்ன செய்ய முடியும்?

இன்றையத் தேதியில் சாதாரண சிகிச்சை என்றால், வங்கி இருப்பை வழித்துக் கொடுக்க வேண்டும். சீரியசான சிகிச்சை என்றால் சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும்!

அதிர்ஷ்டம் வாசல் வழியாகத்தான் வரும். ஆனால் துன்பம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். கதவைச் சாத்தி வைத்திருந்தாலும், கதவு இடுக்கின் வழியாக வரும். சாவித் துவாரத்தின் வழியாக வரும். சாரளத்தின் வளியாக வரும். எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்படி செக்யூரிட்டி போட்டிருந்தாலும் வரும். செக்யூரிட்டியைத் தட்டிப் படுக்க வைத்துவிட்டு வரும்.

“அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.

அதுதான் கிரகங்களின் விளையாட்டு. சனி, ராகுவெல்லாம் பெளலிங் போட்டால் ‘மிடில் ஸ்டம்ப்’ பறக்கும். இரண்டாக ஒடிந்து பதினைந்தடி தூரத்தில் இருக்கும் விக்கெட் கீப்பரின் கைக்குப் போய்ச் சேரும்.

தீய கிரகங்கள் என்றில்லை. நல்ல கிரகங்களே ஒரு ஜாதகத்தின் ஆறாம் அதிபதியாக இருக்கும்போது, தன்னுடைய தசா புத்தியில் ஜாதகனைப் போட்டுப் பார்த்துவிடுவான். புரட்டி எடுத்துவிடுவான். அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது.

ஆறாம் இடத்தானின் (அவன்தான் ஜாதகத்தின் நம்பர் ஒன் வில்லன்) மகாதிசை அல்லது வேறு திசையில் அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் எச்சரிக்கையாக இருங்கள். தினமும் இறைவனை வழிபடுங்கள். குறிப்பாக விநாயகப் பெருமானை வழிபடுங்கள். அவர்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் - குளக்கரை, அரசமரத்தடி என்று எங்கும் இருக்கிறார். 27 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் ஜன்ம நட்சத்திர நாள் அன்று சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை அர்ச்சித்து வழிபடுங்கள். நம்பிக்கையோடு மனம் உருக வழிபடுங்கள்.

அந்த நம்பிக்கைதான் வழிபாட்டில் முக்கியம்!
----------------------------------------------------------------------
சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்னும் சிவஸ்தலம், இரண்டு விதங்களில் முக்கியமானது.

பார்த்தால் அசரவைக்ககூடிய பிரம்மாண்டமான கோவில் உள்ளது.

அங்கே உறைகின்ற சிவனாருக்கு, வைத்தியநாதர் என்று பெயர். நோயால் அவதிப்பட்டு, தன்னிடம் அடைக்கலமாக வரும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் அவர்! Fees எதுவும் வாங்காத மருத்துவர் அவர். இந்திய மருத்துவக் கழகத்தின் (Medical Council of India) அனுமதியைப் பற்றிக் கவலைப் படாமல் வைத்தியம் பார்க்கின்றவர். Blood Test, Urine Test, ECG Test, CT Scan என்று நம்மிடம் பணம் பிடுங்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கெல்லாம் அவரிடம் வேலை இல்லை!

நம்பிக்கையுடன் அவரைப் பார்த்து, மனம் உருகப் பிரார்த்தனை செய்தால் போதும். நோய்கள் ஓடிவிடும்.

இரண்டு அந்த ஊரில் உறையும் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உண்டு. அங்கார தோஷம் உள்ளவர்கள் அங்கே சென்று வழிபட வேண்டும்.

முருகப்பெருமான் முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அங்கே இருக்கிறார். அவரை வழிபட்டால் கிரகக் கோளாறுகளை எல்லாம் அவர் நீக்குவார்!

வைத்தீஸ்வரன் கோவில் எங்கே உள்ளது? எத்தனை தூரத்தில் உள்ளது? அதன் தலபுராணம் என்ன? அதன் முழுச் சிறப்பு என்ன? என்று

தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான பக்கம் இணையத்தில் உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். இங்கே க்ளிக்கிப் பாருங்கள் http://en.wikipedia.org/wiki/Vaitheeswaran_Koil

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Very useful information sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

    ////“அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.////

    மிகவும் அருமையான அனுபவம் பொதிந்த வரிகள் ஐயா.

    மிகவும் நல்லதொரு உபயோகமான தன்னம்பிக்கை அளிக்கின்ற பதிவு ஐயா.

    மகிழ்ச்சிகளுடன்,
    மணிவண்ணன் நம்பியப்பன்.

    ReplyDelete
  3. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

    *ரிஷப விருச்சக லக்னங்களுக்கு லக்னாதிபதியே ஆறாம் அதிபதியாக வருவதும்,
    கன்னியா லக்னத்திற்கு பூர்வ புண்ணிய அதிபதியே ஆறாம் அதிபதியாக வருவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் ஐயா.

    *இந்த மூன்று லக்னங்களுக்கும் ஆறாம் அதிபதி சுபர் ஆவதாலும் ஜாதகருக்கு அவர் தசை புத்திகளில் நன்மைகள் செய்ய வேண்டியதும் அவர்களே தானே ஐயா

    *ஆறாம் இடம் மறைவு ஸ்தானம் ஆவதாலும் ஆறிலே ஆட்சி பெறும் கிரகம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிய ஆவலாக உள்ளேன் ஐயா.

    எதிர்பார்ப்புகளுடன்,
    மணிவண்ணன் நம்பியப்பன்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,மிக்க பயனுள்ள தகவல்கள்.நன்றி.

    ReplyDelete
  5. There are mixed feelings from people who visited this tempt recently.

    While the temple is absolute marvelous state of art, people who do prayers to beggars are all after money. The maintenance is not even to basic. We are in 21st century still there is no decent toilets for ladies.

    It's not just the state of this temple, but in many famous temples.

    ReplyDelete
  6. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Very useful information sir thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  7. ////Blogger Manivannan said...
    ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    ////“அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.////
    மிகவும் அருமையான அனுபவம் பொதிந்த வரிகள் ஐயா.
    மிகவும் நல்லதொரு உபயோகமான தன்னம்பிக்கை அளிக்கின்ற பதிவு ஐயா.
    மகிழ்ச்சிகளுடன்,
    மணிவண்ணன் நம்பியப்பன்./////

    நல்லது. நான் விரும்புவதும், எழுதும் நோக்கமும் அனைவருக்கும் தன்னம்பிக்கையும், இறை உணர்வும் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான். நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  8. ///Blogger Manivannan said...
    ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    *ரிஷப விருச்சக லக்னங்களுக்கு லக்னாதிபதியே ஆறாம் அதிபதியாக வருவதும்,
    கன்னியா லக்னத்திற்கு பூர்வ புண்ணிய அதிபதியே ஆறாம் அதிபதியாக வருவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் ஐயா.
    *இந்த மூன்று லக்னங்களுக்கும் ஆறாம் அதிபதி சுபர் ஆவதாலும் ஜாதகருக்கு அவர் தசை புத்திகளில் நன்மைகள் செய்ய வேண்டியதும் அவர்களே தானே ஐயா
    *ஆறாம் இடம் மறைவு ஸ்தானம் ஆவதாலும் ஆறிலே ஆட்சி பெறும் கிரகம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிய ஆவலாக உள்ளேன் ஐயா.
    எதிர்பார்ப்புகளுடன்,
    மணிவண்ணன் நம்பியப்பன்.//////

    பொறுத்திருங்கள். இது குறித்து விரிவாக எழுதவேண்டும். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். நன்றி!!!!

    ReplyDelete
  9. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மிக்க பயனுள்ள தகவல்கள்.நன்றி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  10. ///Blogger selvaspk said...
    There are mixed feelings from people who visited this temple recently.
    While the temple is absolute marvelous state of art, people who do prayers to beggars are all after money. The maintenance is not even to basic. We are in 21st century still there is no decent toilets for ladies.
    It's not just the state of this temple, but in many famous temples.////

    நீங்கள் சொல்வது உண்மைதான். சில பெரிய கோவில்களின் அருகில் pay and use toiletகள் உள்ளன. கோவிலுக்குள் நுழையும் முன்பும், திரும்பி வந்த பிறகும் அவற்றைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் எல்லா கோவில்களிலும் அந்த வசதி இன்னும் வரவில்லை. நன்றி!!!!

    ReplyDelete

  11. //// We are in 21st century still there is no decent toilets for ladies.

    True, we have a dedicated priest for many generations of our family. We inform them, ahead of time about our visit (used to be post card). Priest family allow us to use their home during our visit.

    Otherwise, we have to "wait" until we reach Chithambaram!

    ReplyDelete
  12. /////Blogger Ragini Santosh said...
    //// We are in 21st century still there is no decent toilets for ladies.
    True, we have a dedicated priest for many generations of our family. We inform them, ahead of time about our visit (used to be post card). Priest family allow us to use their home during our visit.
    Otherwise, we have to "wait" until we reach Chithambaram! /////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com