மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.9.16

Technology: தொழில்நுட்பம் படுத்தப் போகின்ற பாடு!Technology: தொழில்நுட்பம் படுத்தப் போகின்ற பாடு!

25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இதுவரை சோறு போடுது...ஆனால் நிலைமை  இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம், நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்!

1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்சத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்லை..!

வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்லை.

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்ங்கறது தான் அந்த நண்பரோட ( நான் ஒத்துக்கொண்ட) வாதம்....!

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??

எதனால ? ஏன் இப்படின்னு  கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா

Artificial Intelligence. சிம்ப்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும்
இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு  ஆயிரக்கணக் கான கல்யாணங்களை      நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...!  இல்லீங்களா..?

'Ubar'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு  உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு  தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை  பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  IPC Sectionஓட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!

IBM Watson, இப்ப  அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு  சட்டச்சிக்கலுக்கு
தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில  சொல்லுது...!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல  90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..!

அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?

 ஆடிட்டர்கள், டாக்டர்கள்ள இருந்து  ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி  ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பார்த்துக்கும்.

'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!

ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப துறைல 15 வருஷமா இருக்கறதால நான் 100% நம்புகிற ஒரு விஷயத்தை  சொல்றேன் கேட்டுக்கோங்க...!
2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல  இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில
நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில்  இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிற்கும்.

நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும்.

பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்.  எல்லாமே  மின்சாரத்துல  தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15
வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா.ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட்  (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும்.

சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு
பொருள்கள் தயாராகும்.

விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள்.

நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல
உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம்

வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder X னு ஒண்ணு அடுத்த  வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன  வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.

அதனால்..மக்களே...! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..புதுசா தொழில்கள் வரும்..ஆனா
வேலையில்லா திண்டாட்டம் கூடிகிட்டே போகும்.  மொத்தத்துல, ஜாக்கிரதையா இருந்தால்தான் பிழைப்பு ஓடும்

அப்புறம் என்ன? புரிஞ்சு நடத்துக்குங்க..சொல்லிட்டேன்...!

படித்ததில் பிடித்தது!

நன்றி:

அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

 1. :-) , ஐயா,

  ஒரு 7,8 வயது வாக்கில், எனக்கு ஒரு ஆசை கற்பனையில் ஓடியது. ஏன் இந்த ரோடு; ஓடும்படியாக இருக்கக் கூடாது என்று! அதாவது escalator கணக்காக. அந்தக் காலத்தில் இப்படி ஒரு escalator இருக்கும் விடயமே எனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், அதே போல் ரோடு ஓடிக்கொன்டேயிருக்க வேண்டும். அதில் நாம் வெறுமே நின்றால் போதும். ஒரு ரோட்டிலிருந்து அடுத்த ரோட்டிற்கு நாம் மாறிக்கொள்ள கூடியவாறு வேகம் குறைவாகவே இவை ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதாக என் கற்பனை இருக்கும்.

  சரி, நீங்கள் பகிர்ந்ததை போல, கடந்த 25 வருடகாலத்தில் நாம் நினைத்தறியாத உலகத்தை நாம் பார்த்து விடடோம். இன்னும் மாற்றங்களுக்கு இடமுண்டே. ஆனாலும்,...
  100 பிரச்சனைகள் ஒன்றுமில்லாமல் போகும் போது, 1000 புதுப் பிரச்சனைகளும் நாம் எதிர்பார்க்காமலேயே நம் முதுகில் வந்து உட்க்கார்ந்து கொண்டுவிடும். அது தான் யதார்த்தம். அந்த 1000 புதுப் பிரச்சனைகளை வைத்தே நாமெல்லோரும் வாழ்ந்து விடுவோம். அது தான் மனித இயல்பும்.
  என்ன தான் சாப்ட்வேர் மனிதனை முழுங்கி விடும் என்று பயமுறுத்தினாலும், அந்த சாப்ட்வேரையே நாம தானே உருவாக்கி நாம் விரும்பிய விதத்தில் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்?

  ஆனாலும், மனிதர்கள் நாம், எதையுமே திருந்த செய்வதில்லையே! அந்த ஒரு மகத்தான தனித்துவம் தான், நம்மை தொடர்ந்து வாழவைக்கப் போவதே. நமது தவறுகள், தவறான எதிர்பார்ப்புகள் தான் இன்றளவும் பல பிரச்சனைகளையும் சரி செய்து கொண்டு வந்திருக்கின்றன. இனியும் கூட!

  ReplyDelete
 2. வணக்கம் குருவே!
  எதிர்பார்ப்புகள் ஏராளம்!என்னமோ நடக்குது புரியலயே!!

  ReplyDelete
 3. அசத்துறீங்க அய்யா, அனைத்தும் மிகவும் உபயோகமான தகவல்கள்.
  காலத்திற்கு தகுந்தாற்போல நாமும் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்...

  ReplyDelete
 4. Vanakam Ayya,

  Neengal solvathu anaithum unmai....

  Nandri,
  S.Kumanan.

  ReplyDelete
 5. ஆசிரியர் ஐயா வணக்கம்.

  உங்களுக்கு "படித்ததில் பிடித்தது".

  எங்களுக்கு படித்தவுடன் "கிலி" பிடித்தது.

  என்ன செய்வது கலி காலம் இது.

  எல்லாவற்றையும் எதிர் கொள்ளத்தான் வேண்டும். இறைவன் துணையால் உலகம் செழிக்கும்.

  நன்றி ஐயா.

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா,நூற்றுக்கு நூறு உண்மை.உண்மை சுடும் என்பார்கள் அதனால் நம் வருங்கால சந்ததியினரை பற்றி கவலையாக இருக்கிறது.எனக்கு தெரிந்து நம் இந்தியாவிலேயே பல துறையிலும் ஆட்களை குறைத்துவிட்டார்கள்.முன்பெல்லாம் பேங்க்,இன்ஸ்யூரன்ஷ் துறைகளில் தினசரி வரும் வாடிக்கையாளறை விட எம்ப்ளாயிஸ் அதிகமாக இருப்பார்கள்.இப்போது தலைகீழ்.ரயில்வேயிலும் கார்டு,ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாமல் வண்டி ஓட்ட எலக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன.வளர்ச்சியா அல்லது வீக்கமா என்று தெரியவில்லை.கடவுள்தான் காப்பற்றவேண்டும்.நன்றி.

  ReplyDelete
 7. வணக்கம் அய்யா!
  மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதால் உலகில் இது போல பல தொழில் நுட்ப மாற்றங்கள் வரத்தான் செய்யும். அதன் தாக்கம் எல்லோராலும் உணரப்படும். ஆனால் ஊழல் தொழிலும்,அரசியல் பெருச்சாளிகளும் மாறாமல் அதே பிழைப்பை செய்து கொண்டுதான் இருப்பார்கள். "சொல்லுறத நான் சொல்லிப்புட்டேன் நான், அதை புரிஞ்சுகிட்டு நடந்துகிடுங்க" என்று பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் அய்யா!

  ReplyDelete
 8. ஐயா வணக்கம்,
  நீங்கள் பதிவிட்ட செய்திகள் 200/100 உண்மை. எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை உணர்கிறேன். எந்த சூழ்நிலையிலும் தொழில் செய்யவோ, வேலை செய்யவோ தயாராகிவிட வேண்டும்.

  ReplyDelete
 9. Respected Sir,

  Pleasant morning... This post explains about future technology.

  Very very informative one.

  Have a great day.

  Thanks & Regards,
  Ravi-avn

  ReplyDelete
 10. /////Blogger kmr.krishnan said...
  Futurology study!??!! Very nice, Sir!////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 11. /////Blogger Mrs Anpalagan N said...
  :-) , ஐயா,
  ஒரு 7,8 வயது வாக்கில், எனக்கு ஒரு ஆசை கற்பனையில் ஓடியது. ஏன் இந்த ரோடு; ஓடும்படியாக இருக்கக் கூடாது என்று! அதாவது escalator கணக்காக. அந்தக் காலத்தில் இப்படி ஒரு escalator இருக்கும் விடயமே எனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், அதே போல் ரோடு ஓடிக்கொன்டேயிருக்க வேண்டும். அதில் நாம் வெறுமே நின்றால் போதும். ஒரு ரோட்டிலிருந்து அடுத்த ரோட்டிற்கு நாம் மாறிக்கொள்ள கூடியவாறு வேகம் குறைவாகவே இவை ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதாக என் கற்பனை இருக்கும்.
  சரி, நீங்கள் பகிர்ந்ததை போல, கடந்த 25 வருடகாலத்தில் நாம் நினைத்தறியாத உலகத்தை நாம் பார்த்து விடடோம். இன்னும் மாற்றங்களுக்கு இடமுண்டே. ஆனாலும்,...
  100 பிரச்சனைகள் ஒன்றுமில்லாமல் போகும் போது, 1000 புதுப் பிரச்சனைகளும் நாம் எதிர்பார்க்காமலேயே நம் முதுகில் வந்து உட்க்கார்ந்து கொண்டுவிடும். அது தான் யதார்த்தம். அந்த 1000 புதுப் பிரச்சனைகளை வைத்தே நாமெல்லோரும் வாழ்ந்து விடுவோம். அது தான் மனித இயல்பும்.
  என்ன தான் சாப்ட்வேர் மனிதனை முழுங்கி விடும் என்று பயமுறுத்தினாலும், அந்த சாப்ட்வேரையே நாம தானே உருவாக்கி நாம் விரும்பிய விதத்தில் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்?
  ஆனாலும், மனிதர்கள் நாம், எதையுமே திருந்த செய்வதில்லையே! அந்த ஒரு மகத்தான தனித்துவம் தான், நம்மை தொடர்ந்து வாழவைக்கப் போவதே. நமது தவறுகள், தவறான எதிர்பார்ப்புகள் தான் இன்றளவும் பல பிரச்சனைகளையும் சரி செய்து கொண்டு வந்திருக்கின்றன. இனியும் கூட!/////

  உண்மைதான். புரிதலும். அதற்குத் தகுந்த நடவடிக்கைகளும் இருக்கும்போது. பிரச்சினைகளை நம்மால் எதிர்கொள்ள முடியும். நன்றி சகோதரி!

  ReplyDelete
 12. ////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  எதிர்பார்ப்புகள் ஏராளம்!என்னமோ நடக்குது புரியலயே!!///////

  போகப் போகப் புரியும். பொறுத்திருங்கள் வரதராஜன்!

  ReplyDelete
 13. //////Blogger Sivakumar Selvaraj said...
  அசத்துறீங்க அய்யா, அனைத்தும் மிகவும் உபயோகமான தகவல்கள்.
  காலத்திற்கு தகுந்தாற்போல நாமும் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்.../////

  உண்மைதான். மாற்றிக்கொள்வோம். நன்றி!

  ReplyDelete
 14. /////Blogger Kumanan Samidurai said...
  Vanakam Ayya,
  Neengal solvathu anaithum unmai....
  Nandri,
  S.Kumanan.///////

  நல்லது. நன்றி குமணன்!

  ReplyDelete
 15. /////Blogger mohan said...
  ஆசிரியர் ஐயா வணக்கம்.
  உங்களுக்கு "படித்ததில் பிடித்தது".
  எங்களுக்கு படித்தவுடன் "கிலி" பிடித்தது.
  என்ன செய்வது கலி காலம் இது.
  எல்லாவற்றையும் எதிர் கொள்ளத்தான் வேண்டும். இறைவன் துணையால் உலகம் செழிக்கும்.
  நன்றி ஐயா.//////

  ஆமாம். இறைவன் துணையிருக்கும்போது, கிலி எதற்கு? வருவதை எதிர்கொள்வோம். நன்றி மோகன்!

  ReplyDelete
 16. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,நூற்றுக்கு நூறு உண்மை.உண்மை சுடும் என்பார்கள் அதனால் நம் வருங்கால சந்ததியினரை பற்றி கவலையாக இருக்கிறது.எனக்கு தெரிந்து நம் இந்தியாவிலேயே பல துறையிலும் ஆட்களை குறைத்துவிட்டார்கள்.முன்பெல்லாம் பேங்க்,இன்ஸ்யூரன்ஷ் துறைகளில் தினசரி வரும் வாடிக்கையாளறை விட எம்ப்ளாயிஸ் அதிகமாக இருப்பார்கள்.இப்போது தலைகீழ்.ரயில்வேயிலும் கார்டு,ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாமல் வண்டி ஓட்ட எலக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன.வளர்ச்சியா அல்லது வீக்கமா என்று தெரியவில்லை.கடவுள்தான் காப்பற்றவேண்டும்.நன்றி.//////

  வளர்ச்சிதான்! கடவுள் காப்பாற்றுவார். நம்பிக்கையோடு இருங்கள்!

  ReplyDelete
 17. /////Blogger venkatesh r said...
  வணக்கம் அய்யா!
  மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதால் உலகில் இது போல பல தொழில் நுட்ப மாற்றங்கள் வரத்தான் செய்யும். அதன் தாக்கம் எல்லோராலும் உணரப்படும். ஆனால் ஊழல் தொழிலும்,அரசியல் பெருச்சாளிகளும் மாறாமல் அதே பிழைப்பை செய்து கொண்டுதான் இருப்பார்கள். "சொல்லுறத நான் சொல்லிப்புட்டேன் நான், அதை புரிஞ்சுகிட்டு நடந்துகிடுங்க" என்று பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் அய்யா!/////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 18. //////Blogger selva kumar said...
  ஐயா வணக்கம்,
  நீங்கள் பதிவிட்ட செய்திகள் 200/100 உண்மை. எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை உணர்கிறேன். எந்த சூழ்நிலையிலும் தொழில் செய்யவோ, வேலை செய்யவோ தயாராகிவிட வேண்டும்./////

  கரெக்ட். புரிந்துகொண்டமைக்கு நன்றி!

  ReplyDelete
 19. Blogger ravichandran said...
  Respected Sir,
  Pleasant morning... This post explains about future technology.
  Very very informative one.
  Have a great day.
  Thanks & Regards,
  Ravi-avn//////

  ஆமாம். நன்றி ரவிச்சந்திரன்!

  ReplyDelete
 20. /////Blogger பரிவை சே.குமார் said...
  நல்ல கட்டுரை.../////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com