மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

26.9.16

நகைச்சுவை: எழுத்தாளர் மாநாட்டில் என்.எஸ்.கே பேசியது!

நகைச்சுவை:  எழுத்தாளர் மாநாட்டில் என்.எஸ்.கே பேசியது!

ஒரு சமயம் கலைவாணர் என். எஸ் . கிருஷ்ணன், எழுத்தாளர் மாநாடு ஒன்றில் பேசினார்.

    “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் தற்பெரு“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ பழ“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை. இவற்றையெல்லாம் அரு“மை“யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொகூடாத சில “மை“கள் உள்ளன.

இவை என்ன தெரியுமா? கய“மை“, பொய்“மை“, மட“மை“,
வேற்று“மை“ ஆகியவைதாம்.

    அதைக்கேட்டதும் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.

    “எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“ என்னென்ன தெரியுமா? நன்“மை“ தரக்கூடிய நேர்“மை“, புது“மை“, செம்“மை“,
உண்“மை“. இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியது எவைத் தெரியுமா? வறு“மை“, ஏழ்“மை“, கல்லா“மை“, அறியா“மை“
ஆகியவையே. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள் கட“மை“யாகவும், உரி“மை“யாகவும் கொண்டு சமூகத்திற்குப் பெரு“மை“ சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.

   கூட்டத்தில் கைதட்டலும் உற்சாக ஒலியும் விண்ணைப் பிளந்தன.
பிடித்ததைப் பகிர்ந்தேன்.
---------------------------------------------------------------------------------------------------
2
கொஞ்சம் சிரிங்க பாஸ்...  

😂😂😂😂😂😂😂😂😂😂😂

1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா

நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா

நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா

நண்பர் 2: ?????
__________________________

2) காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல.

காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா?

காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் ...

காதலி : ????
__________________________

3) அப்பா : புள்ளையடா நீ. எல்லா பாடத்திலும் பெயில். என்ன இனிமே அப்பானு கூப்பிடாத மகன் : சரி மச்சி.. சும்மா சீன் போடாம கையெழுத்து போடு மச்சி அப்பா : ?????

4) மேனேஜர் : எங்க பேங்க் 'ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.

கிராமத்தான் : கொடுக்கறதா கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார் . ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?

மேனேஜர் : ?????
__________________________

5) பிரின்சிபல் : ஏண்டா லேட்..?

மாணவன் : பைக் பஞ்செர் சார் , அதான் லேட்

பிரின்சிபல் : பஸ்ல வரலாம் ல,

மாணவன் : பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார் ...

பிரின்சிபல் : ?????
__________________________

6) கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்.

பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும்

கடவுள் : ஆகட்டும்.மற்ற ஒரு வரம்?

பக்தன் :எனக்கு தூக்கமே வர கூடாது

கடவுள் : ?????
__________________________

7) அமைச்சர் : மண்ணா எதிரி நாடு மன்னன் உங்களை "போருக்கு" அழைக்கிறார்.

மன்னர் : போருக்குலாம் வரமுடியாது, வேண்டுமானால் "பாருக்கு" வர சொல்லு. அடிச்சு பாக்கலாம்

அமைச்சர் :?????
__________________________

8) காதலன் : நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?

காதலி : (பேச வில்லை)

காதலன் : சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன்.

காதலி : (பேச வில்லை)

காதலன் : இப்ப நீ சொல்ல போரியா இல்லையா?

காதலி : பேசாம இரு Count (கௌன்ட்) பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.

காதலன் : ?????
___________________________

9) கணவன் : என் கண்ணை பார்... அதுல என்ன தெரியுது

மனைவி : உங்களுடைய உண்மையான லவ்

கணவன் : நாசமா போச்சு... கண்ணுல என்னமோ விழுந்திருக்கு அத எடுடி

மனைவி : ????
___________________________

10 ) டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு பி பி இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர் : பல்ஸ் இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர் : சுகர் இருக்கா?

நர்ஸ் : உயிரே இல்ல, அப்றம் எப்படி இது எல்லாம் இருக்கும்?

============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

adithan said...

வணக்கம் ஐயா,திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவரைப் போலவே எல்லோருக்கும் இருக்கும் ஆற்றா'மையை,செம்'மையாக பேசியிருக்கிறார்.337 டானிக் போல அவ்வப்போது கொடுக்கும் நகைச்சுவை டானிக்கிற்கும் நன்றி.

venkatesh r said...

சிரிப்பை மையமாக்கி பாடியவர்கள்:
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்

சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு - மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்க ண்ணாடி சிரிப்பு - இது
களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு

துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில்துலங்கிடும் தனி செழிப்பு

பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப்பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு - அதன பலனாய்
உடனே பரிசாய்க் கிடைப்பது
காதறுந்த பழம் செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு - வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு

இந்த பாடலைக் கேட்பவர்கள், காணொளியில் பார்ப்பவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாது்.

அது போலவே, வகுப்பறையில் நகைச்சுவையைப் படிப்பவர்களும் சிரிக்காமல் இருக்க முடியாது. என்னை 4ம்,9ம் சிரிக்க வைத்தன ஐயா.நன்றி.

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவரைப் போலவே எல்லோருக்கும் இருக்கும் ஆற்றா'மையை,செம்'மையாக பேசியிருக்கிறார்.337 டானிக் போல அவ்வப்போது கொடுக்கும் நகைச்சுவை டானிக்கிற்கும் நன்றி./////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

Subbiah Veerappan said...

/////Blogger venkatesh r said...
சிரிப்பை மையமாக்கி பாடியவர்கள்:
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்

சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு - மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்க ண்ணாடி சிரிப்பு - இது
களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு
துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில்துலங்கிடும் தனி செழிப்பு
பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப்பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு - அதன பலனாய்
உடனே பரிசாய்க் கிடைப்பது
காதறுந்த பழம் செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு
சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு - வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு
இந்த பாடலைக் கேட்பவர்கள், காணொளியில் பார்ப்பவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாது்.
அது போலவே, வகுப்பறையில் நகைச்சுவையைப் படிப்பவர்களும் சிரிக்காமல் இருக்க முடியாது. என்னை 4ம்,9ம் சிரிக்க வைத்தன ஐயா.நன்றி./////

நல்லது. உங்களின் தெரிவைத் தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே!