மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

29.9.16

சிக்கனம்: கொசு விரட்டி திரவத்தை நீங்களே தயாரிக்கலாம்!


சிக்கனம்:  கொசு விரட்டி திரவத்தை நீங்களே தயாரிக்கலாம்!

வீட்டில் நாம் கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.

ஒருமுறை தீர்ந்தால் அந்த பாட்டிலை தூக்கி எறியாதீர்கள்.

அந்த பாட்டிலில் சிறிதளவு ஆரத்தி கற்பூரத் துண்டுகளையும், வேப்ப எண்ணையையும் கலந்து மீண்டும் உபயோகப் படுத்தலாம்.

அதை விட கூடுதல் பயன்கள் ஏராளம். 50 மில்லி வேப்ப எண்ணை விலை சுமார் ரூ10 மட்டுமே (பதஞ்சலியில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது). மொத்த செலவே ரூ 11 மட்டும், ஒரு மாதத்திற்கு.

இரண்டாவது மிகப் பெரிய விஷயம், இது உடல் நலத்திற்கோ, சுவாசத்திற்கோ தீங்கு விளைவிக்காத இயற்கை எண்ணெய். கடையில் வாங்கும் கொசு விரட்டியில் அல்லோத்ரின் எனும்
வேதிப் பொருள் கெடுதி விளைவிப்பதாகும்.

இதை விற்பவர்கள் இந்தியாவில் மொத்தம் நாலே நாலு உற்பத்தியாளர்கள். யோசியுங்கள், ரூ 65 பெறுமானமுள்ள
இந்த வேதிப் பொருளை சுமார் 10 கோடி மக்கள் இந்தியாவில்
மாதம் தோறும் வாங்குகிறார்கள். ஆக, மொத்த வியாபாரப் பரிவர்த்தனை வருடத்திற்கு ரூ 7800 கோடிகள். நான்கு கம்பெனிகளில் ஒரு கம்பெனி ஜப்பான் கூட்டுறவு. அந்நிய செலாவணியாக நம் பணம் அங்கே போகிறது.

இந்த வேதிப் பொருளை விற்று வரும் லாபப் பணத்தில் சினிமா எடுக்கிறார்கள். மக்களை மயக்க விளம்பரம் எடுத்து கோடி கோடியாக கொட்டுகிறார்கள்.

ரூ 65 விற்பனை விலையில் லாபம் 250%.

நீங்களே உங்கள் வீட்டில் செய்து கொண்டால் குறு நிறுவனங்களாகிய வேப்ப எண்ணெய் உற்பத்தி உயர்ந்து
நமது விவசாயி பயனடைவான்.

நாம் அனைவரும் பயன் பெறவும், நாடு பயனடையவும்
உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.

இந்த தகவலை பகிருங்கள். ஒரு பத்தாயிரம் பகிர்வுகள் நடந்தால் ஒரு நல்ல விஷயத்தை பகிர்ந்தது குறித்து நாம் மகிழ்ச்சியடையலாம்!.

"சிறுதுளி பெருவெள்ளம்'
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

kmr.krishnan said...

Thank you, Sir.

adithan said...

வணக்கம் ஐயா,
காலிபாட்டில் ரெடி
கற்பூரமும் ரெடி
வேப்பெண்ண
வாங்கி வந்தால்
வேல முடிஞ்சி
போச்சி.பலனை
சொல்லுறேன்
பயன்படுத்தி
பார்த்துவிட்டு.நன்றி.

Siva Saravanan said...

Thanks ayya

Bhuvan said...

நன்றி ஐயா, நாங்கள் உபயோக படுத்தினோம் ஆனால் பயன் இல்லை, வேப்பம் என்னை 20ml + ஆரத்தி கற்பூரம் 10rs .
நாங்கள் ஏதாவது தவறு செய்கிறோமா என்று தெரியவில்லை.

சரியான முறையை, பயன் பெற்ற நண்பர்கள் பகிரிந்து கொள்ளவும் ...

Bhuvan said...

நன்றி ஐயா, நாங்கள் உபயோக படுத்தினோம் ஆனால் பயன் இல்லை, வேப்பம் என்னை 20ml + ஆரத்தி கற்பூரம் 10rs .
நாங்கள் ஏதாவது தவறு செய்கிறோமா என்று தெரியவில்லை.

சரியான முறையை, பயன் பெற்ற நண்பர்கள் பகிரிந்து கொள்ளவும் ...

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
Thank you, Sir./////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,
காலிபாட்டில் ரெடி
கற்பூரமும் ரெடி
வேப்பெண்ணெய்
வாங்கி வந்தால்
வேலை முடிஞ்சி
போச்சி.பலனை
சொல்லுறேன்
பயன்படுத்தி
பார்த்துவிட்டு.நன்றி.//////

பலனை அவசியம் சொல்லுங்கள் ஆதித்தன்!

Subbiah Veerappan said...

/////Blogger Siva Saravanan said...
Thanks ayya/////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

///////Blogger Bhuvan said...
நன்றி ஐயா, நாங்கள் உபயோக படுத்தினோம் ஆனால் பயன் இல்லை, வேப்பம் என்னை 20ml + ஆரத்தி கற்பூரம் 10rs .
நாங்கள் ஏதாவது தவறு செய்கிறோமா என்று தெரியவில்லை.
சரியான முறையை, பயன் பெற்ற நண்பர்கள் பகிரிந்து கொள்ளவும் .../////

எழுதுவார்கள். பதிவிடுகிறேன்!