ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்கள்!
ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் !!!
ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம்,.
*1, திங்களூர் (சந்திரன்):*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*காலை 6மணி*
ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
*2, ஆலங்குடி (குரு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 7.30மணி*
ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்
காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்
*3, திருநாகேஸ்வரம் (ராகு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 9.30*
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.
*4, சூரியனார் கோவில் (சூரியன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 11.00மணி*
நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
*5, கஞ்சனூர் (சுக்கிரன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 12.15*
சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
*6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*மாலை 4மணி*
நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
*7, திருவெண்காடு (புதன்) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 5.15மணி*
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.
*8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 6.15மணி*
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்
*9, திருநள்ளாறு (சனி) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*இரவு 8.00மணி*
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.
9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

AYYA,
ReplyDeleteTHANKS FOR THE INFORMATION
நல்ல அட்டவணை....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ஐயா...
அருமை
ReplyDeleteநல்ல ஆலோசனைதான். நடைமுறையில் மிகவும் கடினம்.ஏதாவது ஒரு கோவில் விட்டுப் போகிறது.சொந்தக் காரில் சென்றாலும் வழியில் ஏற்படும் ட்ராஃபிக் ஜாம் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.கூட வருபவர்களின் ஒத்துழைப்பு ,உடல் நிலை, வயது,ஷாப்பிங்கில் ஆர்வம் ஆகியவையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ReplyDeleteகும்பகோனம் போன்ற இடத்தில் தங்கிக்கொண்டு இரண்டு நாட்களில் பார்ப்பதே சரியான யோசனை.
எங்கள் ஊரிலேயே நவகிரஹ தலங்கள் உள்ளது..
ReplyDeleteஎதற்கு இவ்வளவு தூரம் போக வேண்டும்...
வணக்கம் ஐயா,கட்டுரையை படித்த உடன் நவக்கிரக ஆலயங்கள் அனைத்தையும் ஒரே நாளில் தரிசித்த உணர்வு ஏற்பட்டது.நன்றி.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteGreetings,
Useful information... Thank you very much.
Regards,
S.Kumanan
வணக்கம் குருவே!
ReplyDeleteமனதுக்கு நிறைவான செய்தியைத் தந்தமைக்கு நன்றி!
/////Blogger Mahadevan Krishnaswamy said...
ReplyDeleteAYYA,
THANKS FOR THE INFORMATION/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger பரிவை சே.குமார் said...
ReplyDeleteநல்ல அட்டவணை....
பகிர்வுக்கு நன்றி ஐயா.../////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger Nagendra Bharathi said...
ReplyDeleteஅருமை////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteநல்ல ஆலோசனைதான். நடைமுறையில் மிகவும் கடினம்.ஏதாவது ஒரு கோவில் விட்டுப் போகிறது.சொந்தக் காரில் சென்றாலும் வழியில் ஏற்படும் ட்ராஃபிக் ஜாம் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.கூட வருபவர்களின் ஒத்துழைப்பு ,உடல் நிலை, வயது,ஷாப்பிங்கில் ஆர்வம் ஆகியவையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கும்பகோணம் போன்ற இடத்தில் தங்கிக்கொண்டு இரண்டு நாட்களில் பார்ப்பதே சரியான யோசனை./////
நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!
//////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஎங்கள் ஊரிலேயே நவகிரஹ தலங்கள் உள்ளது..
எதற்கு இவ்வளவு தூரம் போக வேண்டும்.../////
எந்த ஊர் சுவாமி?
///////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,கட்டுரையை படித்த உடன் நவக்கிரக ஆலயங்கள் அனைத்தையும் ஒரே நாளில் தரிசித்த உணர்வு ஏற்பட்டது.நன்றி./////
நல்லது. நன்றி நண்பரே!
//////Blogger Kumanan Samidurai said...
ReplyDeleteDear Sir,
Greetings,Useful information... Thank you very much.
Regards,
S.Kumanan//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
மனதுக்கு நிறைவான செய்தியைத் தந்தமைக்கு நன்றி!//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!
ReplyDeleteவணக்கம் குருவே!
Thanks for the information(Life experieance) about the Siddha medicine for Jandice it is very usefull.
Thank you Sir,