மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.9.16

வீட்டிற்கு வீடு வாசற்படியும் உண்டு: பிரச்சினையும் உண்டு!

வீட்டிற்கு வீடு வாசற்படியும் உண்டு: பிரச்சினையும் உண்டு!

மனவளக் கட்டுரை!

கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..?

Following are excerpts from the book.

தகராறு  இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே
என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு
இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..

காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும்
பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு

அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத
குடும்பங்களும் உண்டு சந்ததி  இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை

ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும்
தான் கஷ்டப் படுவது போலவும் பிரம்மை வேண்டாம்

கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக்கூடாது
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்கக் கூடாது..

கணவர் எதையும் அடித்து சொல்லக்கூடாது
மனைவி எதையும் இடித்துப் பேச கூடாது

"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால்.."எந்த நாய் சொன்னது?" என்று
கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை..
தன் தவறை ஒத்துக் கொண்டு.."சரி இனி பார்த்து
வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது

"நீ  செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்..
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.."இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று  சொன்னால் அன்பு வெள்ளம் தான்...

மனைவி புது புடவை உடுத்தினால் ...."இந்த புடவை
நன்றாக இருக்கு.. அழகா இருக்கே" என்று சொல்லணும்
கணவன் வெளியிலிருந்து வரும் போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..எளச்சு போய்ட்டீங்களே" என்று
அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்

தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு
நிம்மதி. தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக
கூறினால் மனைவிக்கு நிம்மதி

BedRoom இல் Board Room இல் பேசுவது போல் பேசக் கூடாது..கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள்
பேசக் கூடாது..

பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று
இரவிற்குள் சரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்..

முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்..வார்த்தைகளில் ஜாக்கிரதை

எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது

முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே
தனக்குள் அடக்கி கொள்ள முடியும்

இரண்டு கை தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டுக்
 கொடுக்க வேண்டும்..

"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் ".என்றும்..
"கணவன் தானே ..பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து
விட்டால் உள்ளம் துடிக்காது..உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது..

வாழ்க இல்லறம் !
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

 1. வணக்கம் ஐயா,பதிவின் ஆரம்பமவரி முதல் கடைசிவரி வரை உண்மையோ உண்மை.தசா நாதன் நாக்கிலேயே அமர்ந்து அருள்பாளிப்பதால் ஏட்டிக்கு போட்டியாகவே அமைந்து விடுகிறது.நன்றி.

  ReplyDelete
 2. It's very nice and i felt the timing is good as well.

  எல்லோரும் இதை பின்பற்றினால் வீட்டில் அன்பு பொங்கிவிடும் :)

  ReplyDelete
 3. வணக்கம் குருவே!
  மீண்டும் கவியரசர் கண்ணதாசன்!
  "பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று
  இரவிற்குள் சரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்."

  "எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
  சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது"
  எவ்வளவு பொருள் பொதிந்தவை!
  மறக்கவொண்ணா மாணிக்கக் கவிஞர்!

  ReplyDelete
 4. கண்ணதாசனுக்கு ஈடு இணை யாரும் இல்லை ஐயா! அது பாட்டானாலும் சரி, புத்தகமானாலும் சரி. இந்த பாட்டின் வரிகளில்....
  வீட்டுக்கு வீடு வாசப்படி
  விஷயங்கள் ஆசைப்படி
  எங்கெங்கும் போராட்டந்தான்
  எல்லாரும் ஒன்னாட்டந்தான்

  (வீட்டுக்கு)

  கல்யாணம் கடவுள் செயல்
  கண்ணீரும் அவன் செயலே
  நடந்தது மறப்பது நல்லதம்மா

  (வீட்டுக்கு)

  சீதைக்கும் துன்பம் உண்டு
  ராதைக்கும் துன்பம் உண்டு
  எப்போதும் தாங்கிக் கொண்டால் எல்லோர்க்கும் மேன்மை உண்டு
  ஆசைகள் கோடி உண்டு
  ஆனாலும் எல்லை உண்டு
  பாதைகள் நூறு உண்டு
  பயணங்கள் வேறு வேறு
  பயணங்கள் வேறு வேறு
  அடடடடடடட அஹா...
  வீட்டுக்கு)

  ஐயாவும் அம்மாவும் ஒண்ணாகக் கூடுங்க கண்ணாக வாழுங்க
  அன்பாக பண்பாக
  சேர்ந்து நடப்பது சம்சாரம்
  சேர்ந்து படிப்பது சங்கீதம்

  (வீட்டுக்கு)

  மைசூரில் தங்கம் உண்டு
  மலைனாட்டில் ரப்பர் உண்டு
  எங்கெங்கே என்ன உண்டோ
  அதிலேதான் வாழ்க்கை உண்டு
  ஏதேதோ எண்ணம் கொண்டு
  என்னாளும் சண்டையிட்டால்
  வாதாட நேரம் போகும்
  வாழ்வுக்கு நேரம் ஏது
  வாழ்வுக்கு நேரம் ஏது

  (வீட்டுக்கு)

  தண்ணீரில் நீந்தும் மீனை
  தரைமீது போடலாமா
  பெண்ணாக வந்த பின்னே
  பிரிவாகி வாழலாமா
  பெண்டாட்டி ஆசை கொண்டால் கொண்டாட நேரம் வேண்டும்
  என்னாளும் வேலை என்றால்
  எங்கேதான் தாரம் செல்வாள்
  எங்கேதான் தாரம் செல்வாள்

  (வீட்டுக்கு)

  என்று தாம்பத்தியத்தின் பெருமையை விளக்கியிருக்கிறார். நன்றி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com