மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.9.16

மனிதனுக்கு எது சிறந்த உணவு?


மனிதனுக்கு  எது  சிறந்த  உணவு? 

இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?

இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .

இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

இனி ஆராய்ச்சி செய்வோம்.

*1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு* .

சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.

அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.

*2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.*

சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன.
அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.

*3. கால் விரல்கள்:-*

சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.

அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

*4. குடல் அமைப்பு:*

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது.   காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும்,

அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.

*5. சமநிலையான உடல் உஷ்ணம்:-*

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது.

ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

*6. மலத்தின் தன்மை*

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது.

அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.
           
இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம்.

இனி மனநிலையில் ஆராயலாம்.

*1.  வாழும் முறை :*

சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான்.

ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)

*2.  இயல்பு :*

சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும். அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.

*3. ஆக்கப்பூர்வமான வேலைகள் :*

சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.

*மன இறுக்கம்:-*

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?

ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.

உதாரணமாக, ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும்.

இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும்.

இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான்.

இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது.

மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான்.

ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை?

 உதாரணமாக சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்.

எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும், கோபம் இல்லாமலும், மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்வது சாலச் சிறந்தது.

====================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

 1. Respected sir,

  Health tips in respect of food in take for human being is presented neatly and in comparable manner. Very nice and Thank you very much for this information. Life is for live and Veg. foods for Health life.

  kind regards,

  Visvanathan N

  ReplyDelete
 2. இன்றைய தேதியில் பேலியோ டயட் என்ற ஒன்றை இங்கே பிரபலப்படுத்தி வருகிறர்ர நியாண்டர் செல்வம் என்ற அன்பர்.அவர் கூறுவது மாவுச்சத்து மிக்க தானியங்களைத்தவிர்த்து, அதிக அளவில் கொழுப்புச் சத்துக்களை, அதாவது அசைவத்தைப் பழக்கத்திற்குக் கொண்டுவரச் சொல்கிறார். வெறும் மாவுச்சத்து உணவைச் சாப்பிடுவதால்தான் உடல் பெருமனும், சர்க்கரை, இரத்த அழுத்தம் நோய்கள் வருவதாகக் கூறுகிறார்.

  நீங்கள் கூறியுள்ள யானையை அவரும் குறிப்பிடுகிறார்.யானை சைவம். காண்டாமிருகம் சைவம். அவை அதிக எடையுடன் உள்ளன பார்த்தீர்களா என்கிறார். சைவமாக உள்ள குதிரை, மான், ஆடு, மாடு ஆகியவை அவ்வாறு குண்டாவதில்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

  ஆதிக‌க் கொழுப்பை சாப்பிட்டு, மாவுச்சத்தை முற்றிலும் தவிர்த்த பலர் உடல் இளைத்து நியாண்டர் செல்வத்தைப் புகழ்கிறார்கள்.தினமும் காலை உணவாக 100 பாதாம், மதிய உணவாக கிலோ அளவில் ஆடு மாடு பன்றி எருமைக் கொழுப்புக்களைச் சாப்பிட வேண்டுமாம்.

  இப்போது இதுதான் ஃபேஷன் சார்.

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா,சைவ உணவே நல்லது என தோன்றுகிறது.ஆதிமனிதன் அசைவம்தான் உண்டான்.எனவே ஆரோக்கிய உணவு இறைச்சியும் கொழுப்பும்தான் என்பர் ஒன்றை மறந்து விடுகின்றனர்.ஆதிமனிதன் தன் உணவுக்காக எவ்வளவு உழைக்க வேண்டியிருந்து என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.மிஸ்டர் யுனிவர்ஸ் வாங்கிய பில் பேர்ல் என்ற அமெரிக்கர் சுத்த சைவம்.இன்றும் உடல் உழைப்பு உள்ளவர்கள்(மது சிகரட் இல்லா விட்டால்)ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்கள்.இன்று சைவ உணவிலேயும் விஷம் கலந்திருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட அட்ரலின் படிமங்கள் இல்லை.எனவே சைவத்திற்கே என் ஓட்டு.நன்றி.

  ReplyDelete
 4. Discussion on food never stops, isn't?

  Veg is better than non veg. All times.

  If you cannot avoid NV, just try organic (nasatu kolzhi,fish, mutton) and avoid broiler chicken (if you know the life span of 40 day broiler chicken, you won't go near egg or its flesh), pork or beef.

  Google is your best friend for finding technical reasons.

  Animal product is a big Business, we can't avoid what's happening around us, just limit yourself on harming yourself.

  ReplyDelete
 5. ////Blogger Visvanathan N said...
  Respected sir,
  Health tips in respect of food in take for human being is presented neatly and in comparable manner. Very nice and Thank you very much for this information. Life is for live and Veg. foods for Health life.
  kind regards,
  Visvanathan N////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!

  ReplyDelete
 6. //////Blogger kmr.krishnan said...
  இன்றைய தேதியில் பேலியோ டயட் என்ற ஒன்றை இங்கே பிரபலப்படுத்தி வருகிறர்ர நியாண்டர் செல்வம் என்ற அன்பர்.அவர் கூறுவது மாவுச்சத்து மிக்க தானியங்களைத்தவிர்த்து, அதிக அளவில் கொழுப்புச் சத்துக்களை, அதாவது அசைவத்தைப் பழக்கத்திற்குக் கொண்டுவரச் சொல்கிறார். வெறும் மாவுச்சத்து உணவைச் சாப்பிடுவதால்தான் உடல் பெருமனும், சர்க்கரை, இரத்த அழுத்தம் நோய்கள் வருவதாகக் கூறுகிறார்.
  நீங்கள் கூறியுள்ள யானையை அவரும் குறிப்பிடுகிறார்.யானை சைவம். காண்டாமிருகம் சைவம். அவை அதிக எடையுடன் உள்ளன பார்த்தீர்களா என்கிறார். சைவமாக உள்ள குதிரை, மான், ஆடு, மாடு ஆகியவை அவ்வாறு குண்டாவதில்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
  ஆதிக‌க் கொழுப்பை சாப்பிட்டு, மாவுச்சத்தை முற்றிலும் தவிர்த்த பலர் உடல் இளைத்து நியாண்டர் செல்வத்தைப் புகழ்கிறார்கள்.தினமும் காலை உணவாக 100 பாதாம், மதிய உணவாக கிலோ அளவில் ஆடு மாடு பன்றி எருமைக் கொழுப்புக்களைச் சாப்பிட வேண்டுமாம்.
  இப்போது இதுதான் ஃபேஷன் சார்.///////

  நம் வயதிற்கு ஃபேஷன் தேவையில்லை. நல்லது கிடைத்தால் போதும். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 7. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,சைவ உணவே நல்லது என தோன்றுகிறது.ஆதிமனிதன் அசைவம்தான் உண்டான்.எனவே ஆரோக்கிய உணவு இறைச்சியும் கொழுப்பும்தான் என்பர் ஒன்றை மறந்து விடுகின்றனர்.ஆதிமனிதன் தன் உணவுக்காக எவ்வளவு உழைக்க வேண்டியிருந்து என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.மிஸ்டர் யுனிவர்ஸ் வாங்கிய பில் பேர்ல் என்ற அமெரிக்கர் சுத்த சைவம்.இன்றும் உடல் உழைப்பு உள்ளவர்கள்(மது சிகரட் இல்லா விட்டால்)ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்கள்.இன்று சைவ உணவிலேயும் விஷம் கலந்திருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட அட்ரலின் படிமங்கள் இல்லை.எனவே சைவத்திற்கே என் ஓட்டு.நன்றி./////

  உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆதித்தன்!

  ReplyDelete
 8. /////Blogger selvaspk said...
  Discussion on food never stops, isn't?
  Veg is better than non veg. All times.
  If you cannot avoid NV, just try organic (nasatu kolzhi,fish, mutton) and avoid broiler chicken (if you know the life span of 40 day broiler chicken, you won't go near egg or its flesh), pork or beef.
  Google is your best friend for finding technical reasons.
  Animal product is a big Business, we can't avoid what's happening around us, just limit yourself on harming yourself.//////

  உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி செல்வா!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com