மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.3.16

ஆனந்தமாய் வாழ்வது எப்படி?

ஆனந்தமாய் வாழ்வது எப்படி?

ஒரு சிங்கமோ, புலியோ இன்னொரு சிங்கத்தையோ, புலியையோ பார்த்து...."சே.....நீ எவ்வளவு வேகமா துரத்தி எப்படி லாவகமா அந்த மானை வேட்டையாடினே.  உன் வீரமும், ஆற்றலும் மெச்சுதற்குரியது. நீ மேலும் மேலும் நிறைய மான்களை வேட்டையாடி, விரைவில் சதம் அடிக்க உனக்கு என் மனம் திறந்த பாராட்டுக்கள்" என பாராட்டுவதில்லை.  

ஏனெனில் திறமையாய் வேட்டையாடுவது என்பது அதன் இயல்பு.  அது இயற்கை. அவ்வளவுதான்.  இதில் பாராட்டுவதற்கு ஏதுமில்லை.  

பூவலகில் எல்லா உயிர்களும் ஒன்றுக்கொன்று ஒத்துதவி வாழ்கின்றன.

டிஸ்கவரி சேனலில் ஒரு காட்சி.

நதியோரம் ஓங்கி உயரமாய் வளர்ந்திருந்த ஒரு மரத்திலுள்ள குரங்குகள் அந்த மரத்தின் பழங்களை சாப்பிடுகின்றன.  சில பழங்களை அவை முகர்ந்து பார்த்துவிட்டு நதியில் வீசிவிடுகின்றன.  

அதற்காகவே காத்துக்கிடக்கும் மீன் கூட்டம் ஒன்று அந்தப் பழங்களை உணவாகக் கொள்கின்றன.

பின்பு சமவெளியில் நதியின் ஓட்டத்தோடு நீண்ட நெடுந்தூரம் பயணித்து வேறோரு இடத்தை அடைகின்றன.  அங்கு கழிவுகளை வெளியேற்றுகின்றன.  
கழிவுகளோடு சேர்ந்து வெளியேறும் அம்மரத்தின் விதைகள் கரையொதுங்கி புதிய நிலத்தில் முளைக்கத்தொடங்குகின்றன.  அந்த மரத்தின் சந்ததி நிலைபெறுகிறது.

இதில் யார் யாரைப் பாராட்டுவது?   இந்த மரத்தின் சந்ததியை நிலைபெறச் செய்யும் பணியை நாம் செய்கிறோம் என அந்தக் குரங்களுக்கோ, மீன்களுக்கோ அல்லது அந்த ஆற்றிற்கோ தெரியுமா?

இது இருப்பு சக்தியின் திருவிளையாடல்.  அதன் பேரறிவு மயமான திட்டம். குரங்கு, மரம், மீன், ஆறு என அனைத்துமே வெறும் கருவிகளே.

இவை எதுவும் அந்த மரத்தைத் தான் நட்டதாக பெருமை பேசிக்கொள்வதில்லை. ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துதவி வாழ்கின்றன.

மனிதனும் அது போலத்தான்.  இந்த பூமியில் அவன் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து செல்லும் ஜீவன்.  தனியாக ஆகாயத்திலிருந்து குதித்துவிட்டவனல்ல. அவனும் பிற ஜீவன்களோடும், சக மனிதர்களோடும் ஒத்துதவி வாழ்பவன்.

இது புரியாமல் ஒருவரையொருவர் பொய்யாய்ப் புகழ்ந்து தள்ளி, அகங்காரத்திற்குப் பெருந்தீனியிட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.

புகழ் என்ற ஒன்று கிடையவே கிடையாது.  அது கற்பனையானது.  அது ஒரு மாயை.  அது ஒரு போதை.  அது ஒரு மனநோய்.

துன்பப்படும் ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அத்துன்பத்திலிருந்து வெளிவந்தவர் மிகவும் தளர்வாக உணர்கிறார்.  அந்தத் தளர்வு நிலையை தனக்குக் கொடுத்துதவியவர் மீது அவர் ஆன்மாவிலிருந்து நன்றியுணர்வு பெருகுகிறது. உயிரிலிருந்து வாழ்த்துகிறார். இது ஆறாவது அறிவின் காரணமாய் எழுந்த நன்றியுணர்வு.  அதன் வெளிப்பாடு.  இதுவே உயர் புகழ். இதில் அகங்காரத்திற்கு இடமில்லை. மற்றெல்லாம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கபட வேடங்களே. அவை தந்திரமான உள் நோக்கங்களைக் கொண்டவை.  மிகுந்த ஆபத்தானவை.  அகங்காரத்தை வளர்ப்பவை.  மனித குலத்தின் சாபக்கேடுகள்.

ஆகவே புகழ்வதும், புகழ்ச்சிக்கு அடிமையாவதும் மனிதனை பல்வேறு துன்பங்களுக்குள் அழைத்துச் செல்பவை என உணர்ந்து, இங்கு நாம் அனைவரும் ஒத்துதவி வாழ்வதே வாழ்க்கை எனப் புரிந்து, இறைநிலையில் பேரறிவு மயமான திட்டத்தில் நாம் அனைவரும் சாதாரணக் கருவிகளே எனத்தெளிந்து, அகங்காரம் தொலைத்து ஆனந்தமாய் வாழ்வோம்.

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் சொன்னது
-------------------------------------------------


14 comments:

  1. Respected Sir,

    Happy morning... Superb... Very very useful.

    Thanks for sharing.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. Dear sir,

    i am new here ,recently viewed all your astrological postings it is really good . your service is very appreciable sir ..

    ReplyDelete
  3. "ஆனந்தமாய் வாழ்வது எப்படி?"
    அருமை. நாம் அனைவரும் கடவுளின் கருவிகள் என்பதை நன்றாக புரியும் படி விளக்கியதற்கு நன்றி.

    ReplyDelete
  4. Ayya vanakkam . arumayana pathivu. ovvoru manithanukkum thevaiyanathu adakkam. potty poramai illatha ulagai evaikal moolam kanpoom. regards kittuswamy

    ReplyDelete
  5. உண்மை தான் ஐயா.
    ஆறறிவு என்னும் உயர் (?!) அறிவு பெற்றதனால் தானோ, நாம் எல்லா உயிரினங்களுக்கும் கீழாக செயல்பட்டுக் கொண்டு, ஆனால் பெருமை மட்டும் பட்டுக்கொண்டிருக்கிறோம்? மனிதன் நாகரிகமடைந்தபின்னர் தான் உண்மையில் மிக கீழ் நிலையை அடைந்தது. மீண்டும் அந்த ஆறறிவை உண்மையில் உயர்ந்த அறிவாக பயன்படுத்த வேண்டுமாயின், இயற்கையிடமிருந்தும், ஏனைய உயிர்களிடமிருந்துமே மீண்டும் பல விடயங்களை படித்து (இது தான் உண்மையான படிப்பு - கல்வி) தன் நிலையை மீட்டுக் கொள்ள வேண்டும்.

    அப்போது தான் இப்பூமி எல்லா உயிர்களுக்கும் போதுமானதாக, பயனுடையதாக மாறும்.

    இந்த வேண்டுதலை அந்த ஆண்டவன் விரைவில் நிறைவேற்றட்டும்.

    ReplyDelete
  6. ஐயா வணக்கம், உண்மைதான்.உயர்வு தாழ்வு,பெருமை சிறுமை,புகழ்ச்சி இகழ்ச்சி என எல்லாமே இந்த பிறவியின் பயன் எனும்போது,இப்பறவியை கொடுத்த இறைவனிடமே அனைத்தையும் அற்பணித்து விடலாம்.

    ReplyDelete
  7. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Superb... Very very useful.
    Thanks for sharing.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  8. /////Blogger santhosh said...
    Dear sir,
    i am new here ,recently viewed all your astrological postings it is really good . your service is very appreciable sir ..//////

    ஜோதிடம் தவிர, ஆன்மீகம், மனவளம், சிறுகதைகள் என்று மற்ற பதிவுகளும் ஏராளமாக உள்ளன. அவற்றையும் படியுங்கள்.

    ReplyDelete
  9. /////Blogger Rsankar Gm said...
    "ஆனந்தமாய் வாழ்வது எப்படி?"
    அருமை. நாம் அனைவரும் கடவுளின் கருவிகள் என்பதை நன்றாக புரியும் படி விளக்கியதற்கு நன்றி./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger kittuswamy palaniappan said...
    Ayya vanakkam . arumayana pathivu. ovvoru manithanukkum thevaiyanathu adakkam. potty poramai illatha ulagai evaikal moolam kanpoom. regards kittuswamy//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger Mrs Anpalagan N said...
    உண்மை தான் ஐயா.
    ஆறறிவு என்னும் உயர் (?!) அறிவு பெற்றதனால் தானோ, நாம் எல்லா உயிரினங்களுக்கும் கீழாக செயல்பட்டுக் கொண்டு, ஆனால் பெருமை மட்டும் பட்டுக்கொண்டிருக்கிறோம்? மனிதன் நாகரிகமடைந்தபின்னர் தான் உண்மையில் மிக கீழ் நிலையை அடைந்தது. மீண்டும் அந்த ஆறறிவை உண்மையில் உயர்ந்த அறிவாக பயன்படுத்த வேண்டுமாயின், இயற்கையிடமிருந்தும், ஏனைய உயிர்களிடமிருந்துமே மீண்டும் பல விடயங்களை படித்து (இது தான் உண்மையான படிப்பு - கல்வி) தன் நிலையை மீட்டுக் கொள்ள வேண்டும்.
    அப்போது தான் இப்பூமி எல்லா உயிர்களுக்கும் போதுமானதாக, பயனுடையதாக மாறும்.
    இந்த வேண்டுதலை அந்த ஆண்டவன் விரைவில் நிறைவேற்றட்டும்.//////

    உங்களின் மேலான கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. //////Blogger adithan said...
    ஐயா வணக்கம், உண்மைதான்.உயர்வு தாழ்வு,பெருமை சிறுமை,புகழ்ச்சி இகழ்ச்சி என எல்லாமே இந்த பிறவியின் பயன் எனும்போது,இப்பறவியை கொடுத்த இறைவனிடமே அனைத்தையும் அற்பணித்து விடலாம்./////

    ஆமாம். அப்படி நடந்து கொண்டால் மனித இனத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. நன்றி!

    ReplyDelete
  13. குருவே சரணம்.
    உன்னதமான பகிர்ப்பு/ தொகுப்பு!இராமானுஜர், இராகவேந்திரர் மற்றும் நம்முடன் வாழ்ந்து மறைந்த காஞ்சி மஹாமுனிவர் போன்றோர் மனித அவதாரம் எடுத்து, மனிதன் இப்பூவுலகில் எப்படி வாழவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர்கள், அல்லவா! அவர்களது திருவாக்குகள் அனைத்துமே
    வேத வாக்குகள்தான்!
    இவ்வகுப்பறையில் ஜோதிடத்துடன், பக்தி மணச் சொற்கள், பொதுஅறிவுக் குறிப்புகள், புது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மற்றும் விதம் விதமான சிறுகதைகள் என்று வாத்தியார் நம்மை அசத்தி, அத்கனை பேர் ஆழ்மனதிலும்
    நீங்காத இடம் பெற்றுள்ளார்!அன்னார் எனறென்றும் நம்மை நலவழியில் நடத்திச் செல்ல,அன்னாருக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நல்க எல்லாம் வல்ல குமரகுருபரன் பொற்றாமரைத்தாள் வணங்கிப் பிரார்த்தனையை சமர்ப்பிக்கின்றேன், நம் அனைவரின் சார்பில்!

    ReplyDelete
  14. ////Blogger வரதராஜன் said...
    குருவே சரணம்.
    உன்னதமான பகிர்ப்பு/ தொகுப்பு!இராமானுஜர், இராகவேந்திரர் மற்றும் நம்முடன் வாழ்ந்து மறைந்த காஞ்சி மஹாமுனிவர் போன்றோர் மனித அவதாரம் எடுத்து, மனிதன் இப்பூவுலகில் எப்படி வாழவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர்கள், அல்லவா! அவர்களது திருவாக்குகள் அனைத்துமே
    வேத வாக்குகள்தான்!
    இவ்வகுப்பறையில் ஜோதிடத்துடன், பக்தி மணச் சொற்கள், பொதுஅறிவுக் குறிப்புகள், புது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மற்றும் விதம் விதமான சிறுகதைகள் என்று வாத்தியார் நம்மை அசத்தி, அத்கனை பேர் ஆழ்மனதிலும் நீங்காத இடம் பெற்றுள்ளார்!அன்னார் எனறென்றும் நம்மை நலவழியில் நடத்திச் செல்ல,அன்னாருக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நல்க எல்லாம் வல்ல குமரகுருபரன் பொற்றாமரைத்தாள் வணங்கிப் பிரார்த்தனையை சமர்ப்பிக்கின்றேன், நம் அனைவரின் சார்பில்!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com