மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.3.16

பிரச்சினைகளை அஞ்சி ஓடவைப்பது எப்படி?


பிரச்சினைகளை அஞ்சி ஓடவைப்பது எப்படி?

சுமைதாங்கி மரம்

ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர
வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.

போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை
தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு
மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி
கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர்
வேலைகளை ஆரம்பித்தார்.

சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை
தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. "என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி
இல்லையே"  என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்படத்
தயாரானார்.

வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி
எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார்.
போகும்  வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிக்கொண்டு  போனார் முதலாளி.

தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணீர் எடுத்துக்
கொண்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க
முதலாளி" என்று  அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும்
அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின்
மீது சிறிது நேரம் கை  வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார்.
தன் மனைவியை  பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில்
நடந்த எந்த பிரச்சனையையும்  நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த
வித கவலையும் இல்லாமல்  குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.

வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி
உன்னால் இருக்க முடிந்தது" என்றார்.

"அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு
நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும்
இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போகக்கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான்
அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில்
நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை
எடுத்துக் கொண்டு போவேன் .ஆனால் என்ன ஆச்சரியம் என்றால்
நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள்
அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.

நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள்.
பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்..

படித்ததில் பிடித்தது.
அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18 comments:

 1. உபதேச குருவுக்கு வணக்கம்.
  இன்றைய தங்கள் பகிர்வு அனைவருக்கும் இன்றியமையாத ஒரு உபதேசத் தேர்வு.
  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் விதம் விதமான அனுபவங்கள்!சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்குத் துன்பம்(தச்சருக்கு ஏற்பட்டது போல) அஃது அவரவரது ஜாதக கோசார பலன்களைப் பொருத்தது!
  ஆனால்,இதில் வரும் தச்சரின் அனுபவ வார்த்தைகள் ஆயிரம் கோடி பெறும்.தனது கஷ்டங்களுக்கு வீட்டிலுள்ளவர் எப்படிப் பொறுப்பாக முடியும்! எவ்வளவு உண்மையான வாக்கு! நான் திருந்திவிட்டேன். இனி தச்சரின் வாக்கை மதித்து நடப்பேன்.
  வாத்தியாரின் உபதேசப் பதிப்புக்குக் கோடி நன்றி!!

  ReplyDelete
 2. வணக்கம் குருஜி அவர்களுக்கு... அடடே!..என்னே!.. ஒரு அருமையான பதிவு...பாராட்டுகள் பல. தாங்கள் உடல் நலம் பற்றி ஒரு வரி எழுதுங்கள் ஐயா.

  ReplyDelete
 3. சென்ற சனிக்கிழமை தஞ்சையில் இருந்து ஆங்கரைக்கு பேருந்தில் திரும்பி வந்து கொண்டு இருந்தேன்.வழி நெடுக கிராமங்களில் சுமை தாங்கிக் கற்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு கொண்டே ஊர் திரும்பினேன். கர்பிணிப்பெண்கள் பிரசவம் ஆகாமல் இறந்துவிட்டால் அவர்கள் நினைவாக சாலை ஓரங்களில் சுமை தாங்கிக் கற்கள் நட்டு வைப்பார்கள்.

  நல்ல நண்பர்கள் கிடப்பது அருகிவிட்ட நாளில் மரங்கள் தான் சுமை தாங்கி.
  நல்ல கட்டுரைக்கு நன்றி ஐயா!

  ReplyDelete
 4. Vanakkam ayya manithanin sumaigal kurainthalay udal arokkiama erukkum arumaiyana kathai vazhga valamudan

  ReplyDelete
 5. வாத்தியார் அவர்களுக்கு வணக்கம், வழக்கம்போல உங்களின் கதை சொல்லும் விதம், நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என மன மகிழ்வுடன், பலநேரம் மனதின் பாரத்தை இருக்கிவைக்க ஒரு பொருள் தேவைப்படுகிறது என்பது ஒரு நம்பிக்கையே.... எனது பால்ய நண்பன் (சுந்தர்) அவனது வீட்டில் தொடர்ந்து பல கேட்ட நிகழ்வுகள் ஏற்ப்பாட்டதால், வீட்டிற்குள் எதோ கெட்டதது வந்துவிட்டது என்றான். (நான் அரவிந்தர் ஆசிரமத்தில் பயிற்சி பெற்றவன் என்பதால்) எதோ என்னால் ஆனா உதவி என்று மனதளவில் அவனை மகிழ்ச்சி ஏற்ப்படுத்த, தர்ப்பைப் புள் எடுத்துவர செய்து அதை தீ மூட்டி எரியவிட்டு வீட்டின் ஈசான மூளை முதல அனைத்து அறைகளுக்கும் சுவரோடு ஒட்டிய நிலையில் ஒரு சுற்று சுற்றி வீட்டிற்கு பின்புறத்தில் ஒரு குழியைவெட்டி அதனுல் போட்டு மூடிவிட்டு கேட்டது விலகிவிட்டது இன்று இரவு முழுதம் வீட்டின் அனைத்து இடத்திலும் விளக்கு எரிய விட்டால் நலமான வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்பிவிடும் என்று அதை செயல்படுத்திய மறுநாள் முதல் நல்ல நிலை திரும்பிவிட்டதாக அவனும் அவனது குடும்பத்தினரும் நம்பிக்கை தெரியப்படுத்தினார்கள். 2 மாதங்கள் போனதும் திடீர் என்று ஓர்நாள் நண்பன் என்னிடம் பதட்டமாக அன்று வீட்டின் பின்புறம் புதைத்த இடத்தை யாரோ தோண்டி இருப்பதால் எங்கே அந்த கேட்டது திரும்ப வீட்டிற்கு வந்துவிடும் என்கிற பயத்தை தெரியப்படுத்த... விளைவு திரும்பவும் முன்பு செய்ததுபோலவே செய்து, இந்தமுறை எரித்த தர்ப்பைப் புள் சாம்பலை அவன் வீட்டின் அருகே இருந்த அம்மன் கோவில் சுமைதாங்கி கல்லுக்கடியில் புதைத்துவிட்டோம். நண்பனும் இன்றுவரை எந்த தொந்தரவும் இருப்பதாக சொல்லவில்லை... நன்றிகளுடன் கோகி

  ReplyDelete
 6. super.. great ayya..
  வேலைக்கு செல்லும் ஒவ்வருவருக்கும் இது பொருந்தும்

  ReplyDelete
 7. /////Blogger வரதராஜன் said...
  உபதேச குருவுக்கு வணக்கம்.
  இன்றைய தங்கள் பகிர்வு அனைவருக்கும் இன்றியமையாத ஒரு உபதேசத் தேர்வு.
  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் விதம் விதமான அனுபவங்கள்!சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்குத் துன்பம் (தச்சருக்கு ஏற்பட்டது போல) அஃது அவரவரது ஜாதக கோசார பலன்களைப் பொருத்தது!
  ஆனால்,இதில் வரும் தச்சரின் அனுபவ வார்த்தைகள் ஆயிரம் கோடி பெறும்.தனது கஷ்டங்களுக்கு வீட்டிலுள்ளவர் எப்படிப் பொறுப்பாக முடியும்! எவ்வளவு உண்மையான வாக்கு! நான் திருந்திவிட்டேன். இனி தச்சரின் வாக்கை மதித்து நடப்பேன்.
  வாத்தியாரின் உபதேசப் பதிப்புக்குக் கோடி நன்றி!!///////

  ஆஹா, அப்படியே செய்யுங்கள். நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 8. //////Blogger murali krishna g said...
  arumaiyaana kathai !/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 9. /////Blogger C.P. Venkat said...
  வணக்கம் குருஜி அவர்களுக்கு... அடடே!..என்னே!.. ஒரு அருமையான பதிவு...பாராட்டுகள் பல. தாங்கள் உடல் நலம் பற்றி ஒரு வரி எழுதுங்கள் ஐயா.//////

  நல்லது. உடல் நலம் இப்போது நன்றாக உள்ளது.

  ReplyDelete
 10. //////Blogger kmr.krishnan said...
  சென்ற சனிக்கிழமை தஞ்சையில் இருந்து ஆங்கரைக்கு பேருந்தில் திரும்பி வந்து கொண்டு இருந்தேன்.வழி நெடுக கிராமங்களில் சுமை தாங்கிக் கற்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு கொண்டே ஊர் திரும்பினேன். கர்பிணிப்பெண்கள் பிரசவம் ஆகாமல் இறந்துவிட்டால் அவர்கள் நினைவாக சாலை ஓரங்களில் சுமை தாங்கிக் கற்கள் நட்டு வைப்பார்கள்.
  நல்ல நண்பர்கள் கிடப்பது அருகிவிட்ட நாளில் மரங்கள் தான் சுமை தாங்கி.
  நல்ல கட்டுரைக்கு நன்றி ஐயா!//////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 11. //////Blogger chandrasekharan said...
  good. need of the present times.//////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. //////Blogger Gajapathi Sha said...
  Vanakkam ayya manithanin sumaigal kurainthalay udal arokkiama erukkum arumaiyana kathai vazhga valamudan//////

  நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 13. ////Blogger Gopal Krishnan said...
  வாத்தியார் அவர்களுக்கு வணக்கம், வழக்கம்போல உங்களின் கதை சொல்லும் விதம், நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என மன மகிழ்வுடன், பலநேரம் மனதின் பாரத்தை இருக்கிவைக்க ஒரு பொருள் தேவைப்படுகிறது என்பது ஒரு நம்பிக்கையே.... எனது பால்ய நண்பன் (சுந்தர்) அவனது வீட்டில் தொடர்ந்து பல கேட்ட நிகழ்வுகள் ஏற்ப்பாட்டதால், வீட்டிற்குள் எதோ கெட்டதது வந்துவிட்டது என்றான். (நான் அரவிந்தர் ஆசிரமத்தில் பயிற்சி பெற்றவன் என்பதால்) எதோ என்னால் ஆனா உதவி என்று மனதளவில் அவனை மகிழ்ச்சி ஏற்ப்படுத்த, தர்ப்பைப் புல் எடுத்துவர செய்து அதை தீ மூட்டி எரியவிட்டு வீட்டின் ஈசான மூளை முதல அனைத்து அறைகளுக்கும் சுவரோடு ஒட்டிய நிலையில் ஒரு சுற்று சுற்றி வீட்டிற்கு பின்புறத்தில் ஒரு குழியைவெட்டி அதனுல் போட்டு மூடிவிட்டு கேட்டது விலகிவிட்டது இன்று இரவு முழுதம் வீட்டின் அனைத்து இடத்திலும் விளக்கு எரிய விட்டால் நலமான வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்பிவிடும் என்று அதை செயல்படுத்திய மறுநாள் முதல் நல்ல நிலை திரும்பிவிட்டதாக அவனும் அவனது குடும்பத்தினரும் நம்பிக்கை தெரியப்படுத்தினார்கள். 2 மாதங்கள் போனதும் திடீர் என்று ஓர்நாள் நண்பன் என்னிடம் பதட்டமாக அன்று வீட்டின் பின்புறம் புதைத்த இடத்தை யாரோ தோண்டி இருப்பதால் எங்கே அந்த கேட்டது திரும்ப வீட்டிற்கு வந்துவிடும் என்கிற பயத்தை தெரியப்படுத்த... விளைவு திரும்பவும் முன்பு செய்ததுபோலவே செய்து, இந்தமுறை எரித்த தர்ப்பைப் புல் சாம்பலை அவன் வீட்டின் அருகே இருந்த அம்மன் கோவில் சுமைதாங்கி கல்லுக்கடியில் புதைத்துவிட்டோம். நண்பனும் இன்றுவரை எந்த தொந்தரவும் இருப்பதாக சொல்லவில்லை... நன்றிகளுடன் கோகி//////

  உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 14. ////Blogger C.Senthil said...
  super.. great ayya..
  வேலைக்கு செல்லும் ஒவ்வருவருக்கும் இது பொருந்தும்/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 15. வணக்கம் ஐயா,வெளியே உள்ள பிரச்சினைகளை வாசலிலேயே இறக்கிவிட்டு பேகலாம்.உள்ளிருந்து வரும் பிரச்சினைகளையும் சமாளிக்க உபாயம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா.நன்றி.

  ReplyDelete
 16. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,வெளியே உள்ள பிரச்சினைகளை வாசலிலேயே இறக்கிவிட்டு பேகலாம்.உள்ளிருந்து வரும் பிரச்சினைகளையும் சமாளிக்க உபாயம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா.நன்றி./////

  வீட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு பொறுமையைக் கடைப் பிடியுங்கள். அன்பாகப் பேசுங்கள். பிறகு பாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்!

  ReplyDelete
 17. a very good story of a carpentar. ThANK YOU SIR.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com