மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

12.3.16

எதற்காக பெருந்தலைவர் தோளில் துண்டை மாற்றிப் போட்டார்?

எதற்காக பெருந்தலைவர் தோளில் துண்டை மாற்றிப் போட்டார்?

தமிழக முதல்வராக இருந்த காமராஜர் அவர்கள், ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில்,இடது பக்கத்தில் போட்டு
இருந்தார்.

இதைக் கண்ட பத்திரிக்கையாளர்கள் எப்போதும் வலதுபுறம் தானே துண்டை போடுவீர்கள்?? இன்று இடதுபுறத்தில் மாற்றி போட்டுள்ளீர்கள்??
எதுவும் விஷேசமா? என்று கேட்டனர்.

காமராஜர் அவர்கள் அப்படிலாம் ஒன்னும் இல்ல னே..சும்மாதான் போட்டுள்ளேன் என்று சொன்னார்.

பத்திரிகையாளர்கள் காமராஜரை விடவில்லை.ஏதோ காரணம் உள்ளது,
அந்த காரணத்தை தெரிந்தே ஆகவேண்டும் என்று காமராஜரிடம் மீண்டும்
மீண்டும் காரணத்தை கேட்டனர்..

காமராஜரும் காரணம் ஒன்னும் இல்ல னே..சும்மாதான் போட்டுள்ளேன்
என்று கூறினார்...ஆனால் பத்திரிக்கையாளர்கள் காமராஜரை
விட்டபாடில்லை.. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன என்று
மீண்டும் மீண்டும் கேள்விகேட்டு துளைக்க ஆரம்பித்து விட்டனர் .

இதைக்கண்டு கோபம் அடைந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்,
காரணம் ஒண்ணும் இல்லைய்யா.,எனது சட்டை இடது பக்கம் லேசா
கிழிந்துள்ளது. அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை மாற்றிப் போட்டுள்ளேன். வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை எடுத்து
விட்டு, தனது கிழிந்த சட்டையை காண்பித்தாராம்.

இவர்தான் சாமி உன்மையான முதல்வர்..முதலமைச்சர் பதவியால்
இவருக்கு பெருமையல்ல...இவறால் தான் முதலமைச்சர் பதவிக்கே பெருமை உண்டானது...!!!
================================
2

கொடூர நோய்களை பரப்பும் தனி ரக வாழைப்பழம்!

ஓர் அதிர்ச்சி தகவல்.

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.

ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும்,

நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல்,

வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும்.

இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்
பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.

இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.

மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும்.

இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.

பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.

கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.

இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா.
இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம்
கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிடச் செய்தார்.

நோய்களை பரப்பும்:

உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும்
விற்கப்படுகிறது.

முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.

மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு
படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ்
வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி.
 மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குப்
போதிய வரவேற்பு இல்லை.

இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல்
ருசியாக இருக்காது.

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.

எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ்
வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.

இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.

பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.

பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.

செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு,
கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல்
கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற
பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

ஆகவே எச்சரிக்கையாக இருங்கள். வாழைப்பழம் வாங்கும்போது பார்த்து வாங்குங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

BDO mecheri said...

காமராஜர் பற்றிய தகவல்களுக்கு

மிகப்பெரிய வலிமையான செயல்கள் // தத்துவங்கள் நிலைக்க
வலிமையான மனிதர்களும் அவர்களின் வைராக்கியமான செயல்களுமே காரணம்
அதை அவர்கள் எவ்வித சறுக்கலும் இல்லாமல் பின்பற்றியதே காரணம்

எளிமைக்கு காமராஜர்
அஹிம்சைக்கு காந்தி
தேசப்பற்றுக்கு பாரதி
கருணைக்கு தெரசா
வீரத்திற்கு நேதாஜி
வைராக்கியதிற்க்கு திருப்பூர் குமரன்

இன்னும் பல மிகப்பெரிய வலிமையான செயல்கள் // தத்துவங்கள்
இன்னும் பல வலிமையான மனிதர்களும்
இன்னும் பல அவர்களின் வைராக்கியமான செயல்களும்

SANTHANAM SALEM

BDO mecheri said...

பி டி வாழைபழம் பற்றிய செய்தி தொடர்பாக

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் நம்மிடம் இவ்வளவு குறைபாடுகள்?

இந்த பூவுலகில் மிகபெரிய முட்டாள் உயிரினம் ---- மனிதர்கள்.
அவர்களில் மிகபெரிய முட்டாள்கள் ------- இந்தியர்கள்.
அவர்களிலும் மிகபெரிய முட்டாள்கள் ------------ தமிழர்கள்.
புத்திசாலித்தனத்திற்கும் அறிவாளிதனத்திற்கும் வேறுபாடு உண்டு.
நம்மிடம் நிறைய அறிவாளிகள் உள்ளனர். புத்திசாலிகள் இல்லை.
பிற நாட்டை போன்று புத்தி இல்லாதவர்கள் தவறு செய்தால் கூட அது பரவாயில்லை.
புத்தி கண்டறிந்த தமிழர்கள் தவறு செய்கிறார்கள்.

இந்த புத்தி வளம் நம்மிடம் இருந்தும் நாம் அதை பயன்படுத்தாமல் தவறு செய்கிறோம்.
ஆங்கிலேயன் எல்லா தப்பும் செய்வான். அதை அடுத்தவன் மீது சோதிப்பான். அவன் மக்களுக்கு அதை தரமாட்டான்.
நம் நாட்டில் விவசாயத்தை அளிக்க 1947ல் சீமை முள் செடி விதைத்ததை போல.
இதை கூடவா நம்மால் இவ்வளவு நாளில் கண்டுபிடிக்க முடியவில்லை? உணர முடியவில்லை?

பி டி வாழைபழம் கண்டுபிடித்த திருட்டு விஞ்ஞானி குழுவில் நிச்சயம் நம்மாள் ஒருத்தன் இருப்பான். அவன்தான் இதை இந்தியாவில் சோதிக்க ஐடியா கொடுத்திருப்பான்.ஏழைகள் நாம்!!!!! கொஞ்ச காசில் பெரிய பழம் என வாங்குவோம்.

அமெரிக்கா நாட்டில் விசா தரவில்லை என்றால் நமக்கு மிகபெரிய நஷ்டம். external affairs ministry உடன் நடவடிக்கை எடுக்கும். ஏனென்றால் நமக்கு அடிமை தொழில் மிகவும் பிடிக்கும். ஆனால் இதற்கெல்லாம் உடன் நடவடிக்கை கிடையாது. ஏனென்றால் அது காசு வரும் வழி. இது மக்கள் காசில் மக்கள் தொகை கட்டுபடுத்தும் வழி.

இது Corporateக்கு காசு வரும் வழி. அவன்தானே தேர்தலுக்கு காசு தருவான். காசு கொடுத்தால்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். மக்கள் அந்த காசில் பெரிய பழம் என பி டி வாழைபழம் வாங்குவார்கள்.

தற்போது நாம் போகும் வழி அழிவிற்கான வழி!!!!
விழுமின் எழுமின்
இல்லையேல்?????????
ஐயோ பாவம் நாம் !!!!!!

சந்தானம் சேலம்

வரதராஜன் said...

குருவே சரணம்.
அண்ணல் காமராஜர் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தேடித்தந்த பல நிகழ்ச்சிகள் உள்ளன.அவற்றில் ஒன்று தான் இன்றைய தொகுப்பு! இதை நான் படிக்காத ஒன்று.சுயநலத்தைக் கருத்தில் கொள்ளாத இம்மாமனிதர் மனித சமுதாயத்திற்கே மேம்பட்டவர்!!இந்தியப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காமலே அக்கால இந்திய அரசியலின் King Makerஆக இருந்து தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித்தந்தவர். காந்திஜி முதல் அனைத்து தேசத் தலைவர்களாலும் பாராட்டப்பட்டவர்.சுயநலக் கும்பலுடன் சேர்ந்த இராஜாஜியால் கரமவீரர் காமராஜரின் புகழைக் கண்டு, பொறாமையால், கர்மவீரரை வெறுத்துப் பிரிந்தது, பெருங்கதை!?
அண்ணல் காமராஜரை நினைவு படுத்திய வாத்தியாருக்கு நன்றி!!
அய்யய்யோ, வாழைப்பழக் கதை இதுவா? பழம் சாப்பிடும் எண்ணம் போச்சு?

C.P. Venkat said...

வணக்கம்... குருஜி அவர்களுக்கு. மிகவும் அருமையான கருத்துக்கள்.

பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் என்பதன் சுருக்கம் தான் இந்த பி.டி என்பது, இதனைக் கொண்டு மரபணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. The Govt. Also knowingly allowing these type seeds and fruits.

pal raj said...

super

KJ said...

Sir, thanks a lot for Banana information.
My personal suggestion, if we see the topic simply, we will assume that this is about Mr.kamaraj. But this banana info is next to that topic which is mandatory for all readers to read. So if you prioritize the topics(which is important) and publish, then nobody will miss suCh useful info. Also I am trying to keep this link in FB. It shows me the title which is not relevent for this banana info. Hope you got my point. Thanks once again Sir.

Thanks
Sathishkumar GS

வேப்பிலை said...

உஷ்...சத்தம் போடா கூடாது
உங்களுக்கு தெரியுமா?

விவசாயத்தை இப்போ
விவரமானவர்கள்

இலாபகரமான தொழிலாக
இப்போ மாற்றி வருகிறார்கள்...

அரசு கூட விவசாயிகளுக்கு என
அவர்களுக்கு ஆதரவாக பட்ஜெட் போடுது...

எதுக்குன்னு தெரியுதா இப்போ
எல்லாம் அதுத்க்கு தான்...

பரிவை சே.குமார் said...

முகநூலில் வாசித்திருந்தாலும் மீண்டும் வாசித்தேன் ஐயா...

Venkat Training said...

Software Training Videos In Tamil
சாப்ட்வேர் ட்ரைனிங் விதேஒஸ் இன் தமிழ்
http://goo.gl/pPk30v

Subbiah Veerappan said...

///////Blogger BDO mecheri said...
காமராஜர் பற்றிய தகவல்களுக்கு
மிகப்பெரிய வலிமையான செயல்கள் // தத்துவங்கள் நிலைக்க
வலிமையான மனிதர்களும் அவர்களின் வைராக்கியமான செயல்களுமே காரணம்
அதை அவர்கள் எவ்வித சறுக்கலும் இல்லாமல் பின்பற்றியதே காரணம்
எளிமைக்கு காமராஜர்
அஹிம்சைக்கு காந்தி
தேசப்பற்றுக்கு பாரதி
கருணைக்கு தெரசா
வீரத்திற்கு நேதாஜி
வைராக்கியதிற்க்கு திருப்பூர் குமரன்
இன்னும் பல மிகப்பெரிய வலிமையான செயல்கள் // தத்துவங்கள்
இன்னும் பல வலிமையான மனிதர்களும்
இன்னும் பல அவர்களின் வைராக்கியமான செயல்களும்
SANTHANAM SALEM//////

உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger BDO mecheri said...
பி டி வாழைபழம் பற்றிய செய்தி தொடர்பாக
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் நம்மிடம் இவ்வளவு குறைபாடுகள்?
இந்த பூவுலகில் மிகபெரிய முட்டாள் உயிரினம் ---- மனிதர்கள்.
அவர்களில் மிகபெரிய முட்டாள்கள் ------- இந்தியர்கள்.
அவர்களிலும் மிகபெரிய முட்டாள்கள் ------------ தமிழர்கள்.
புத்திசாலித்தனத்திற்கும் அறிவாளிதனத்திற்கும் வேறுபாடு உண்டு.
நம்மிடம் நிறைய அறிவாளிகள் உள்ளனர். புத்திசாலிகள் இல்லை.
பிற நாட்டை போன்று புத்தி இல்லாதவர்கள் தவறு செய்தால் கூட அது பரவாயில்லை.
புத்தி கண்டறிந்த தமிழர்கள் தவறு செய்கிறார்கள்.
இந்த புத்தி வளம் நம்மிடம் இருந்தும் நாம் அதை பயன்படுத்தாமல் தவறு செய்கிறோம்.
ஆங்கிலேயன் எல்லா தப்பும் செய்வான். அதை அடுத்தவன் மீது சோதிப்பான். அவன் மக்களுக்கு அதை தரமாட்டான்.
நம் நாட்டில் விவசாயத்தை அளிக்க 1947ல் சீமை முள் செடி விதைத்ததை போல.
இதை கூடவா நம்மால் இவ்வளவு நாளில் கண்டுபிடிக்க முடியவில்லை? உணர முடியவில்லை?
பி டி வாழைபழம் கண்டுபிடித்த திருட்டு விஞ்ஞானி குழுவில் நிச்சயம் நம்மாள் ஒருத்தன் இருப்பான். அவன்தான் இதை இந்தியாவில் சோதிக்க ஐடியா கொடுத்திருப்பான்.ஏழைகள் நாம்!!!!! கொஞ்ச காசில் பெரிய பழம் என வாங்குவோம்.
அமெரிக்கா நாட்டில் விசா தரவில்லை என்றால் நமக்கு மிகபெரிய நஷ்டம். external affairs ministry உடன் நடவடிக்கை எடுக்கும். ஏனென்றால் நமக்கு அடிமை தொழில் மிகவும் பிடிக்கும். ஆனால் இதற்கெல்லாம் உடன் நடவடிக்கை கிடையாது. ஏனென்றால் அது காசு வரும் வழி. இது மக்கள் காசில் மக்கள் தொகை கட்டுபடுத்தும் வழி.
இது Corporateக்கு காசு வரும் வழி. அவன்தானே தேர்தலுக்கு காசு தருவான். காசு கொடுத்தால்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். மக்கள் அந்த காசில் பெரிய பழம் என பி டி வாழைபழம் வாங்குவார்கள்.
தற்போது நாம் போகும் வழி அழிவிற்கான வழி!!!!
விழுமின் எழுமின்
இல்லையேல்?????????
ஐயோ பாவம் நாம் !!!!!!
சந்தானம் சேலம்/////

உங்களுடைய நீண்ட, மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

///////Blogger வரதராஜன் said...
குருவே சரணம்.
அண்ணல் காமராஜர் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தேடித்தந்த பல நிகழ்ச்சிகள் உள்ளன.அவற்றில் ஒன்று தான் இன்றைய தொகுப்பு! இதை நான் படிக்காத ஒன்று.சுயநலத்தைக் கருத்தில் கொள்ளாத இம்மாமனிதர் மனித சமுதாயத்திற்கே மேம்பட்டவர்!!இந்தியப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காமலே அக்கால இந்திய அரசியலின் King Makerஆக இருந்து தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித்தந்தவர். காந்திஜி முதல் அனைத்து தேசத் தலைவர்களாலும் பாராட்டப்பட்டவர்.சுயநலக் கும்பலுடன் சேர்ந்த இராஜாஜியால் கரமவீரர் காமராஜரின் புகழைக் கண்டு, பொறாமையால், கர்மவீரரை வெறுத்துப் பிரிந்தது, பெருங்கதை!?
அண்ணல் காமராஜரை நினைவு படுத்திய வாத்தியாருக்கு நன்றி!!
அய்யய்யோ, வாழைப்பழக் கதை இதுவா? பழம் சாப்பிடும் எண்ணம் போச்சு?//////

பி.டி ரகப் பழத்தை மட்டும் தவிர்க்கவும். மற்ற வாழைப்பழங்களை எல்லாம் நீங்கள் சாப்பிடலாம்!

Subbiah Veerappan said...

///////Blogger C.P. Venkat said...
வணக்கம்... குருஜி அவர்களுக்கு. மிகவும் அருமையான கருத்துக்கள்.
பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் என்பதன் சுருக்கம் தான் இந்த பி.டி என்பது, இதனைக் கொண்டு மரபணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. The Govt. Also knowingly allowing these type seeds and fruits./////

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger pal raj said...
super////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger வேப்பிலை said...
உஷ்...சத்தம் போடா கூடாது
உங்களுக்கு தெரியுமா?
விவசாயத்தை இப்போ
விவரமானவர்கள்
இலாபகரமான தொழிலாக
இப்போ மாற்றி வருகிறார்கள்...
அரசு கூட விவசாயிகளுக்கு என
அவர்களுக்கு ஆதரவாக பட்ஜெட் போடுது...
எதுக்குன்னு தெரியுதா இப்போ
எல்லாம் அதுக்கு தான்.../////

நல்லது. உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

////////Blogger பரிவை சே.குமார் said...
முகநூலில் வாசித்திருந்தாலும் மீண்டும் வாசித்தேன் ஐயா...//////

எனக்கு வாட்ஸப்பில் வந்தது. நன்றாக இருந்ததால் உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்! நன்றி!

adithan said...

வணக்கம் ஐயா, காமராஜர் போன்ற உதாரண புருஷர்களை இனி இலக்கியங்களிலும் வரலாற்றிலும்தான் பார்க்கமுடியுமோ?.மெய் சிலிர்க்கும் பதிவு.நன்றி.

Subbiah Veerappan said...

//////Blogger adithan said...
வணக்கம் ஐயா, காமராஜர் போன்ற உதாரண புருஷர்களை இனி இலக்கியங்களிலும் வரலாற்றிலும்தான் பார்க்கமுடியுமோ?.மெய் சிலிர்க்கும் பதிவு.நன்றி.//////

உண்மைதான். நன்றி நண்பரே!