Astrology: Quiz 104: புதிருக்கான விடை!
6-3-2016
நேற்றைய புதிரில் ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ”ஜாதகருக்கு எப்போது திருமணம் ஆனது? அதாவது எந்த வயதில், எந்த மகா திசை மற்றும் புத்தியில் (Sub Period) திருமணம் ஆனது?” என்ற கேள்வியைக் கேட்டிருந்தேன்.
திருமணம் ஆகும் நேரம் பற்றிய கேள்வி அது
ஜாதகனுக்கு 36 வயதிற்குப் பிறகுதான் திருமணம் ஆனது! காரணம் ஜாதகத்தில் களத்திரம் சம்பந்தமான கிரக அமைப்புக்கள்தான் காரணம். வாருங்கள் ஜாதகத்தை ஒருமுறை பார்ப்போம்.
சிம்ம லக்கின ஜாதகம் சித்திரை நட்சத்திரம்
1. ஏழாம் அதிபதி சனி அந்த வீட்டில் உடன் இரண்டு தீய கிரகங்களின் பிடியில் (சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்க்கை)
2. களத்திரகாரகன் சுக்கிரன் எட்டில் (மறைவு ஸ்தானத்தில்)
3. சுப கிரகமான குரு பகவானும் எட்டில்
4. ஜாதகனுக்கு செவ்வாய் திசை இருப்புடன் ராகு திசை முடியும்போது 25 வயதாகி விட்டது. அடுத்து வந்த மகா திசை அதிபதி குரு பகவானும் எட்டில் இருப்பதால், அந்த திசையும் மேன்மையுடையதாக இல்லை.
5. லக்கினாதிபதி சூரியன் ஏழில் இருப்பதால், அவர் தன்னுடைய புத்தியில் (sub period) திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தசா நாதனும் புத்தினாதனும் (குருவும், சூரியனும்) ஒருவருக்கொருவர் 12/2 நிலையில் இருப்பதைப் பாருங்கள். ஆகவே சூரிய புத்தியில் திருமணம் நடக்கவில்லை
6. அதற்கு அடுத்துவந்த (குரு மகா திசை) சந்திர புத்தியில் ஜாதகனுக்குத் திருமணம் நடந்தது. சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் இருப்பதைப் பாருங்கள்
உரிய தசா புத்தி வரும்போது நடக்க வேண்டியது நடக்கும். அதை வலியுறுத்திச் சொல்வதற்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை வகுப்பில் நடத்தப் பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்பதற்காக இப்போது வலை ஏற்றினேன்
இந்தப் புதிர்ப்போட்டியில் 18 பேர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். அவர்களுள் 3 பேர்கள் மட்டும் மிகச் சரியான பதிலை எழுதியுள்ளார்கள். அவர்களின் பெயர்களுடன் அவர்கள் எழுதிய பதிலையும் கீழே கொடுத்துள்ளேன். அவர்கள் மூவருக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
வாத்தியார்
---------------------------
1
**********//////////Blogger Srinivasa Rajulu.M said...
வணக்கம் ஐயா,
இரண்டு வருடங்களுக்கு முன் தங்களின் புதிரில் அலசிய ஜாதகம் இது. பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது. 36 வயதுக்கு மேல் வந்த குரு-சந்திரனில், மிகவும் தாமதமாக நடந்த திருமணம். (இருந்தாலும் லீப் வருடம் 29,ஃபெப்ரவரியில் பிறந்தவர்களுக்கு 4 வருடங்களுக்கு ஒருமுறைதான் பிறந்த தினம வருவதால் இவருக்கு 9-ஆம் பிறந்த தின வருடத்தில் திருமணம் நடந்ததாக எண்ணி மகிழ வேண்டியதுதான்)
Friday, March 04, 2016 7:24:00 AM/////
உங்களின் நினைவாற்றல் வாழ்க!
------------------------------------------
2
**********//////OpenID guest2015 said...
DOB - MAR 1 1964
Marriage happened possibly in the Jupiter-moon dasha/subperiod. 1999-2000.
reason for the delayed marriage.
lagna lord in the 7th house with saturn and mars.
auspicious planets like venus and jupiter in 8th house.
9th lord mars got combusted.
there is no connectivity between jupiter and other planets like mars, mercury, sun and saturn as they are postioned 12/2.
however jupiter/venus/moon aspects each other.
so marriage happened in jupiter dasha/moon subperiod.
thanks
sree///////
Saturday, March 05, 2016 10:17:00 AM
------------------------------------------------
3
*********///////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO. 104 வணக்கம்
01.03.1964 ஆம் தேதி ஞாயிறு கிழமை மாலை 6.59 மணிக்கு பிறந்தவர் இந்த ஜாதகர்.
37 வது வயதில் திருமணம் நடைபெற்றது.
லக்கினம்: சிம்மம், ராசி: கன்னி, நட்சத்திரம்: சித்திரை
யோககாரகர்கள்: சூரியன் (5 பரல்), குரு, செவ்வாய்(5பரல்), யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி.
ஏழாம் அதிபதி சனி அந்த வீட்டில் சூரியன் , செவ்வாய் கிரகங்களின் பிடியில் .
7ல் சனி (4 பரல்) இருந்தால் திருமணம் தாமதமாகும். 30 வயதிற்க்கு மேல் தான் திருமணம் நடைபெறும் .
களத்திரகாரகன் சுக்கிரன் (2 பரல்) எட்டில் ,குரு பகவானும் எட்டில்.
சந்திரனும் (5 பரல்) குருவும் (5 பரல்) ஒருவருக்கொருவர் 7ம் பார்வையில் இருக்கிறார்கள்.
7ம் வீட்டில் (25 பரல்) 4 கிரகங்கள் இருந்தால் நான்கு கல்யாணம் நடக்கும் என்று கூறுவார்கள் . எது உண்மையோ?
ராகு தசை முடிந்தது - 25 வயது.
குரு தசை சந்திர புக்தியில் திருமணம் நடைபெற்றது . காரணம் : சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் 7ம் பார்வையில் இருக்கிறார்கள்.
மேலும் , சந்திர ராசியிலிருந்து 7ம் வீட்டில் சுக்கிரனும், குருவும் சுப கிரகங்கள் உள்ளன . ராசியிலும் , நாவாம்சத்திலும் சுக்கிரனும், குருவும் சுப கிரகங்கள் உள்ளன .ஆகையால் வர்கோத்தமம். 37 வது வயதில் திருமணம் நடைபெற்றது.
குரு தசை குரு புக்தியில் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை . காரணம் : 8ம் வீட்டு அதிபதி 8ல்.
குரு தசை சூரிய புக்தியில் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை . காரணம்: குருவும், சூரியனும் ஒருவருக்கொருவர் 12/2 நிலையில் இருக்கிறார்கள்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.
Saturday, March 05, 2016 10:47:00 AM////////
-----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
அருமையான விளக்கம் வாத்தியார் அவர்களே!!!
ReplyDeleteநன்றி.
I have a basic query. I am a novice. Please bear with me
ReplyDeletesun is lagna lord. kuaja is the lord of 4 and 9(yoga karaka)
why do you call these two lords malefic (in the given example)
Ayya vanakkam sun and guru in 12/2 position is not clear is it 12/1 position, please advise
ReplyDeleteregards kittuswamy
Dear Sir,
ReplyDeleteAm new to your blog. It is really interesting. I have just started learning astrology.
Can you please help me with to find AAdhiandha Parama Naizhigai.
Thanks in advance
Balaji