மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.3.16

ஆன்மிகம்: இறைவனைக் கும்பிட ஒரு எளிய வழி!


ஆன்மிகம்: இறைவனைக் கும்பிட ஒரு எளிய வழி!

இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் அவனை பாட்டுப் பாடி கும்பிடுவதா?
அது எப்படி முடியும்? என்கிறீர்களா? முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது.

கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்னத் துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருணையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

#ஞாயிற்றுக்கிழமை

தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

#திங்கட்கிழமை

தங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

#செவ்வாய்க்கிழமை

செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

#புதன்கிழமை

மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

#வியாழக்கிழமை

மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

#வெள்ளிக்கிழமை

அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

#சனிக்கிழமை

கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

====================================================================

2

கோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் !

சில விதிகள் ஏற்ப கோலமிட்டால் வாழ்க்கையில் வளம் சேரும்.

சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும்.

வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புதுத் தண்ணீரே தெளிக்க வேண்டும்.

தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது.

கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும்.

கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும்.

பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம்

ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம்,

திங்கட்கிழமை அல்லி மலர்க் கோலம்

செவ்வாய்க்கிழமை வில்வ இலைக் கோலம்,

புதன் மாவிலைக் கோலம்

வியாழக்கிழமை துளசி மாடக் கோலம்,

வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரைக் கோலம்

சனிக்கிழமை பவளமல்லி கோலம்

ஞாயிற்றுக்கிழமை சூரிய கோலம் போடுதல் நல்லது.

வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது.

அமாவாசை மற்றும் இறந்தவர்களுக்கு திதி தரும் நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது.

அந்த ஆத்மாக்களை வீட்டினுள் அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும்.

அதனால் நம் முன்னோர்கள் நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து, அவர்களை வீட்டினுள் அனுமதித்து
ஆசி பெறுவது நல்லது.

இடது கையால் கோலம் போடக்கூடாது. பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும். உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.

கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும். கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும்.

ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும்.

கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால் கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது.
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17 comments:

 1. Very good informations. Thank you, Sir.

  ReplyDelete
 2. நலம் பயக்கும்
  நல்ல பதிவு...

  ஆனால்...

  ஸ்டிக்கர் கோலம் பிரபலமானதால் கோலத்தில் யாரும்
  stick ஆவதில்லை... அதைவிட பெண்கள்

  இப்போது நைட்டி போடுவதால்
  இப்படி நீங்கள் சொல்வது போல

  பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட முடியாது - இது
  பேராசையா தெரியாது...

  தொடரட்டும் கலாச்சாரத்தை வளர்க்கும் பதிவுகள்...
  தோள் கொடுக்கும் தோழனாய் வகுப்பறை தோழர்கள்..

  ReplyDelete
 3. Respected Sir,

  Happy morning... Thanks for sharing wonderful post.

  Lord Muruga's glorifying songs are superb.

  Have a pleasant day.

  Thanks & Regards,
  Ravi-avn

  ReplyDelete
 4. Sir I am Niranjana. I am interested in learning astrology. I am a continuous reader of your blog . I have requested log in for Galaxy classroom from 2014 but still I have not got access. Kindly grant me access . my id is jayanthi.praburam01@gmail.com

  ReplyDelete
 5. வணக்கம் குருவே,
  இதயம் கனிந்த பாராட்டுக்கள்.வார நாட்களுக்கான வாரியார் சுவாமிகள் தந்துள்ள துதிகளை மறவாமல் மனனம் செய்கிறேன். ஏனெனில், அவை இலகுவாக உள்ளன. குமரனைக் கும்பிட்டு குவலயம் செல்வோம்!
  கோலம் போடுவதிலும் கவனிக்க வேண்டியவை இத்தனை உண்டா?! திதி தினங்களில் கோலம் போடக்கூடாது என்று கேள்விப்பட்டதுண்டு! ஆனால், எதற்காக என்ற காரணம் அறியாதிருந்தேன்!
  நல்லன பலதும் நயம்பட உரைக்கும்
  நல்லாசிரியர் சுப்பையாக்கு
  நல்வினைகள் நாளும் சேர்ந்தே
  நல்கட்டும் நோயற்ற வாழ்வே!!

  ReplyDelete
 6. ஐயா,வணக்கம்.இறைவனை வழிபட ஒரு எளிய வழியைக் காட்டி வாழ்க்கையை எளிமைப் படுத்தியதற்க்கு மனமார்ந்த நன்றி.galaxy 2015 ஜோதிட பாடங்களை படிக்க விண்ணப்பித்திருந்தேன்.மன்னிக்கவும்.நினைவூட்டல்தான்.ஜோதிடபாடங்கள் பாகம்1 கிடைக்குமா?.யாரை அனுக வேண்டும்.

  ReplyDelete
 7. /////Blogger kmr.krishnan said...
  Very good informations. Thank you, Sir.//////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 8. ////Blogger வேப்பிலை said...
  வருகை பதிவு...////

  வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 9. /////Blogger வேப்பிலை said...
  நலம் பயக்கும்
  நல்ல பதிவு...
  ஆனால்...
  ஸ்டிக்கர் கோலம் பிரபலமானதால் கோலத்தில் யாரும்
  stick ஆவதில்லை... அதைவிட பெண்கள்
  இப்போது நைட்டி போடுவதால்
  இப்படி நீங்கள் சொல்வது போல
  பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட முடியாது - இது
  பேராசையா தெரியாது...
  தொடரட்டும் கலாச்சாரத்தை வளர்க்கும் பதிவுகள்...
  தோள் கொடுக்கும் தோழனாய் வகுப்பறை தோழர்கள்../////

  பேராசைகளுக்கு இதில் இடம் இல்லை. கலாச்சாரப் பதிவு அவ்வளவுதான்!

  ReplyDelete
 10. ////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... Thanks for sharing wonderful post.
  Lord Muruga's glorifying songs are superb.
  Have a pleasant day.
  Thanks & Regards,
  Ravi-avn/////

  நல்லது. நன்றி அவனாசி ரவி!

  ReplyDelete
 11. ////Blogger dgjagadeesan jaga said...
  Information is super Ayya thanks////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. /////Blogger jayanthi praburam said...
  Sir I am Niranjana. I am interested in learning astrology. I am a continuous reader of your blog . I have requested log in for Galaxy classroom from 2014 but still I have not got access. Kindly grant me access . my id is jayanthi.praburam01@gmail.com//////

  கேலக்ஸி வகுப்பு முடிந்து விட்டது. வேண்டுமென்றால் நீங்கள் Stars2015 சேர்ந்து படிக்கலாம். spvrsubbiah@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்!

  ReplyDelete
 13. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே,
  இதயம் கனிந்த பாராட்டுக்கள்.வார நாட்களுக்கான வாரியார் சுவாமிகள் தந்துள்ள துதிகளை மறவாமல் மனனம் செய்கிறேன். ஏனெனில், அவை இலகுவாக உள்ளன. குமரனைக் கும்பிட்டு குவலயம் செல்வோம்!
  கோலம் போடுவதிலும் கவனிக்க வேண்டியவை இத்தனை உண்டா?! திதி தினங்களில் கோலம் போடக்கூடாது என்று கேள்விப்பட்டதுண்டு! ஆனால், எதற்காக என்ற காரணம் அறியாதிருந்தேன்!
  நல்லன பலதும் நயம்பட உரைக்கும்
  நல்லாசிரியர் சுப்பையாக்கு
  நல்வினைகள் நாளும் சேர்ந்தே
  நல்கட்டும் நோயற்ற வாழ்வே!!/////

  நல்லது. உங்களின் மேலான அன்பிற்கு நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 14. ////Blogger siva kumar said...
  உள்ளேன் ஐயா////

  நன்றி சிவகுமார்!

  ReplyDelete
 15. /////Blogger adithan said...
  ஐயா,வணக்கம்.இறைவனை வழிபட ஒரு எளிய வழியைக் காட்டி வாழ்க்கையை எளிமைப் படுத்தியதற்க்கு மனமார்ந்த நன்றி.galaxy 2015 ஜோதிட பாடங்களை படிக்க விண்ணப்பித்திருந்தேன்.மன்னிக்கவும்.நினைவூட்டல்தான்.ஜோதிடபாடங்கள் பாகம்1 கிடைக்குமா?.யாரை அனுக வேண்டும்./////

  கேலக்ஸி வகுப்பு முடிந்து விட்டது. வேண்டுமென்றால் நீங்கள் Stars2015 சேர்ந்து படிக்கலாம். spvrsubbiah@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்! ஜோதிடப் புத்தகத்திற்கு umayalpathippagam@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com