மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.3.16

தர்மம் எது? தானம் எது?

தர்மம் எது? தானம் எது?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனை வணங்கி  சுவர்க்க பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ?

பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

சூரியனே...நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்...

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....

ஆனால்,  தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர  தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.
அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது.

கேட்டு கொடுப்பது தானம் !
கேட்காமல் அளிப்பது தர்மம் !
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. கேட்டபின் கொடுப்பதற்கே புண்ணியபலன் இல்லையென்றால், கேட்டாலும் கொடுக்காதவர்களுக்கு என்ன பலன் ஏற்படும் ஐயா?

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Hope all is well.

    Nice post...

    Have a pleasant day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. குருவே சரணம்.
    முழுவதும் படித்தேன்.புரிந்தது போல இருந்தது.ஆனால்,புரியவில்லை போலவும் உள்ளது!!?
    சில ஆண்டுகட்கு முன் ஷீர்டி பாபாவின் சத்சரித்திரம் ஏழு நாட்களில் ஐம்பது அத்தியாயங்கள் நியமப்படி படித்து முடித்து, நிறைவு நாளன்று, விதிப்படி(Rule) ஏழைகட்கு, மதிய உணவு பெரம்பூர் அன்னதான சமாஜம் மூலம் என் கைப்பட வழங்கினேன். உண்மையான பசியில் வந்து சாப்பிட்டுச் சென்றனர்.இவ்வகையில், செய்த செயல் தர்மமா?தானமா?
    புண்ணியம் உண்டா? தயவு செய்து, என் வினாவுக்கு விடை தந்து என்னைக் குழப்பத்திலிருந்து விடுவியுங்கள், வாத்தியாரையா.
    என் வினாவே குரு நிந்தனைக்கு உட்பட்டதானால், பதிலளிக்கவேண்டாம்.
    மன்னியுங்கள்!
    பிரசுரிக்கவே வேண்டாம், ஐயா!

    ReplyDelete
  4. /////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  5. /////Blogger kmr.krishnan said...
    கேட்டபின் கொடுப்பதற்கே புண்ணியபலன் இல்லையென்றால், கேட்டாலும் கொடுக்காதவர்களுக்கு என்ன பலன் ஏற்படும் ஐயா?//////

    கேட்டாலும் கொடுக்காதவர்களில் 2 வகை உண்டு. அவர்களிடம் உரிய அளவு பொருள் (பணம்) இல்லாதவர்கள் முதல் வகை
    பொருள் இருந்தும் கொடுக்க மனமில்லாதவர்கள் 2வது வகை. இரண்டாவது வகையினர் பாவிகள். அவர்களைத் தண்டிக்கும் பொறுப்பை இறைவனிடம் விட்டு விடுவோம். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. //////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Hope all is well.
    Nice post...
    Have a pleasant day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  7. ///////Blogger வரதராஜன் said...
    குருவே சரணம்.
    முழுவதும் படித்தேன்.புரிந்தது போல இருந்தது.ஆனால்,புரியவில்லை போலவும் உள்ளது!!?
    சில ஆண்டுகட்கு முன் ஷீர்டி பாபாவின் சத்சரித்திரம் ஏழு நாட்களில் ஐம்பது அத்தியாயங்கள் நியமப்படி படித்து முடித்து, நிறைவு நாளன்று, விதிப்படி(Rule) ஏழைகட்கு, மதிய உணவு பெரம்பூர் அன்னதான சமாஜம் மூலம் என் கைப்பட வழங்கினேன். உண்மையான பசியில் வந்து சாப்பிட்டுச் சென்றனர்.இவ்வகையில், செய்த செயல் தர்மமா?தானமா?
    புண்ணியம் உண்டா? தயவு செய்து, என் வினாவுக்கு விடை தந்து என்னைக் குழப்பத்திலிருந்து விடுவியுங்கள், வாத்தியாரையா.
    என் வினாவே குரு நிந்தனைக்கு உட்பட்டதானால், பதிலளிக்கவேண்டாம்.
    மன்னியுங்கள்!
    பிரசுரிக்கவே வேண்டாம், ஐயா!///////

    தானம்தான்! அதற்கு முழுப்பெயர் அன்னதானம்!

    ReplyDelete
  8. பலனை எதிர்பார்க்காமல் தானமோ தர்மமோ செய்வது நல்லது...
    அதனால் நன்மை உண்டோ இல்லையோ
    கண்டிப்பா
    எந்த நஷ்டமும் இல்லை...
    ஒரு மன சாந்தி திருப்தி கிடைக்கும்...

    ReplyDelete
  9. //////Blogger A. Anitha said...
    பலனை எதிர்பார்க்காமல் தானமோ தர்மமோ செய்வது நல்லது...
    அதனால் நன்மை உண்டோ இல்லையோ
    கண்டிப்பா
    எந்த நஷ்டமும் இல்லை...
    ஒரு மன சாந்தி திருப்தி கிடைக்கும்.../////

    ஆமாம். நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com