மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.3.16

மனவளம்: கோபத்தை அடக்க சுலபமான வழிகள்❗

மனவளம்: கோபத்தை அடக்க சுலபமான வழிகள்❗

1. பொருட்படுத்தாதீர்கள்.
(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல்

விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.
(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும்

எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்.
(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை

தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.
(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும்.

அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம்.
====================================================
2
*பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்.

*உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

*நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள்.

*உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள்.

*விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

*தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள்.

*விவாதம் செய்யுங்கள்.விவகாரம் செய்யாதீர்கள்.

*விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள்.

*பரிசீலனை செய்யுங்கள். பணிந்து போகாதீர்கள்.

*சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.

*செல்வாக்கு இருந்தாலும்  சரியானதைச் செய்யுங்கள்.

*எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள்.  எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

*நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள்.

*தானாய்த்தான் முடியுமென்றால் வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லை என்பது  போல் வாழுங்கள்.
👍👍👍👍👍
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

 1. மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா

  ReplyDelete
 2. அய்யா அட்டகாசம்

  SANTHANAM SALEM

  ReplyDelete
 3. அருமையான வழிகாட்டுதல் வாத்தியார் அவர்களே!!!

  நன்றி.....

  ReplyDelete
 4. வணக்கம் குருவே!
  "செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள்"
  "சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்"
  எவ்வளவு உயர்ந்த எண்ணங்கள்!
  சினத்தின் கொடுமையை உணர்ந்த தவசீலர்கள், அதனால்தான் நிதானத்தைக் கடைப்பிடித்துள்ளனர்!
  கட்டுரை போலில்லாமல் சிறிய வரிகளில் சீறிய கருத்துக்கள் தந்துள்ளதால் படிக்கவும், பரிசீலிக்கவும் எளிமை! மனதினில் நிறுத்திவிட்டேன், தேவைக்கு எடுக்க!

  ReplyDelete
 5. Respected Sir,

  Happy morning... Very very useful post.

  Have a holy day.

  Thanks & Regards,
  Ravi-avn

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா

  தங்கள் உடல் நலம் எப்படி உள்ளது...மனம் மணக்க, வாழ்வை ருசிக்க, இன்றைய உலக வாழ்வுக்கு அவசியம் தேவை..அருமை... பகிர்வுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 7. ஐயா வணக்கம். பயன் தரும் பதிவு.ஒவ்வொன்றாக முயற்ச்சித்து பார்க்க விழைகிறேன்.நன்றி.

  ReplyDelete
 8. ////Blogger siva kumar said...
  மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா////

  நல்லது. நன்றி சிவகுமார்

  ReplyDelete
 9. ////Blogger slmsanuma said...
  அய்யா அட்டகாசம்
  SANTHANAM SALEM////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
  அருமையான வழிகாட்டுதல் வாத்தியார் அவர்களே!!!
  நன்றி....//////.

  நல்லது. நன்றி லக்‌ஷ்மிநாராயணன்!

  ReplyDelete
 11. ////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  "செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள்"
  "சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்"
  எவ்வளவு உயர்ந்த எண்ணங்கள்!
  சினத்தின் கொடுமையை உணர்ந்த தவசீலர்கள், அதனால்தான் நிதானத்தைக் கடைப்பிடித்துள்ளனர்!
  கட்டுரை போலில்லாமல் சிறிய வரிகளில் சீறிய கருத்துக்கள் தந்துள்ளதால் படிக்கவும், பரிசீலிக்கவும் எளிமை! மனதினில் நிறுத்திவிட்டேன், தேவைக்கு எடுக்க!/////

  நல்லது. உங்களின் மனம் நெகிழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 12. ////Blogger வேப்பிலை said...
  kovam illai...////

  தெரிந்ததுதானே! நன்றி வேப்பிலையாரே!

  ReplyDelete
 13. ///Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... Very very useful post.
  Have a holy day.
  Thanks & Regards,
  Ravi-avn////

  நல்லது. நன்றி அவனாசி ரவி!

  ReplyDelete
 14. ////Blogger kmr.krishnan said...
  very nice sir.
  kmrk////

  நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 15. /////Blogger Santhanam Raman said...
  வணக்கம் ஐயா
  தங்கள் உடல் நலம் எப்படி உள்ளது...மனம் மணக்க, வாழ்வை ருசிக்க, இன்றைய உலக வாழ்வுக்கு அவசியம் தேவை..அருமை... பகிர்வுக்கு மிக்க நன்றி../////

  உடல் நலம் தேறிவருகிறது. உங்களின் அன்பிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 16. /////Blogger adithan said...
  ஐயா வணக்கம். பயன் தரும் பதிவு.ஒவ்வொன்றாக முயற்சித்து பார்க்க விழைகிறேன்.நன்றி./////

  ஆஹா! அப்படியே செய்யுங்கள். நன்றி!

  ReplyDelete
 17. வணக்கம் அய்யா,
  மிக அருமையான கருத்துக்கள். என்னை மிகவும் கவர்ந்தன!
  நன்றி!
  பன்னீர் செல்வம்.இரா

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com