மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.16

குட்டிக் கதை: மனம் திருந்திய மன்னன்!

குட்டிக் கதை: மனம் திருந்திய மன்னன்!

தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை !!!

காசி அரசனின் ரதம் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன்
தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம்
இருந்தும் மனநிம்மதி இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத்
தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்தான். எளிமையான உடைகளுடன் இருந்த அந்த மனிதரின் முகத்தில்
பேரானந்தம் தாண்டவமாடுவதை ஆச்சரியத்துடன் நோக்கினான்.

தனது மரணத்திற்கு முன்பு இந்த மனிதரிடம் ஆசுவாசமாகப் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து ரதத்தை நிறுத்தி இறங்கினான். தனது மூடிய விழிகளைத் திறந்தார் அந்த மாமனிதர். தன் முன் நின்ற மன்னனைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டார்.

"நான் ஒரு அரசன். எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாத எண்ணமே
என்னை வதைத்துக்கொண்டிருக்கிறது. என் பிரச்னையை என்னால்
தெரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் ஒளியுடைய முகம் என்னை ஈர்த்தது. நான் சாவதற்கு முடிவு எடுத்துள்ளேன். என் பிரச்னை என்னவென்று
அதற்கு முன்னர் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றான் மன்னன்.

மன்னன் சொல்வதையேல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த மனிதரின் பார்வை மன்னனின் கால்களையே உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தது. மன்னனுக்குச் சிறு வயது முதலே காலாட்டுகிற பழக்கம் உண்டு. அந்த மனிதர் தன் கால்களைப் பார்க்கிறார் என்பதை அறிந்த
மன்னன் சட்டென்று காலாட்டுவதை நிறுத்திவிட்டான்.

" மன்னனே உனக்கு எவ்வளவு காலமாக காலாட்டுகிற பழக்கம் உள்ளது?" என்று கேட்டார்.

தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் காலாட்டுவதாக மன்னன் பதில் கூறினான்.

"இப்போது நீ ஏன் காலாட்டுவதை நிறுத்திவிட்டாய்?" என்று கேட்டார்
அந்த மனிதர்.

" நீங்கள் என் கால்களையே கவனித்தீர்கள்" என்று பதிலளித்தான் மன்னன்.

" நான் உன் கால்களையே கவனித்ததால் உன் நீண்ட நாள் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் என்கிறாய். இனிமேல் நீயே உன்னைக் கவனி.
எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது உனக்கே தெரியவரும்."

மன்னனின் இருண்ட மனதில் ஓர் ஒளிக்கீற்று தெரியத் தொடங்கியது.

மிகுந்த பணிவோடு, "நீங்கள் யார்?" என்று கேட்டான் மன்னன்.

"புத்தர்" என்று பதில் வந்தது.

மன்னன் அவர் காலில் விழுந்து வணங்கினான். தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை என்பதை அறிந்த மன்னனின் தேர் இப்போது அரண்மனை
நோக்கி ஓடத் தொடங்கியது.

படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

  1. Palaiya padangalai padika aarvam uladhu. Can you please send in email. Jayanthi.praburam01@gmail.com

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    குட்டிக் கதை சுட்டி! நீதி போதனைக் கதை ஒன்று கூறிவிட்டு, ஆசிரியர், இக்கதையிலிருந்து நீங்கள் தெரிந்து கொண்டது என்ன என்று கேட்கும்போது நாங்கள் ஒவ்வொருவர் ஒன்று சொல்வோம்; கடைசியில் அவரே 'moral' என்ன என்பதைச் சொல்வார்.
    நான் சொல்வது சிறிய வகுப்பில், பழங்காலக்கதை! இன்றைய குட்டிக்கதை அவற்றை ஞாபகப்படுத்தியது!
    எவ்வளவு பெரிய விஷயம், "தன்னைத்தானே கவனித்தல்" என்றால் "Introspection" செய்தல் அல்லவா?!
    ஞானிகள் ஞானிகள் தான்!!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy monring... Nice post.

    Have a pleasant day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. குருவின் பார்வை கோடி நன்மை!அரசனுக்கும் பிரச்சினை, ஆண்டிக்கும் பிரச்சினை! போராடி ஜெயிப்பதே வாழ்க்கை.அதற்கு தன் குறைகளை கவனித்து களைய வேண்டும் என உணர்த்தியது குட்டிக்கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  5. புத்தம் சரணம் கச்சாமி

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,மனமெனும் மாயமானை நிறுத்த தெரிந்தால் துன்பமேது,துயரமேது,கவலை ஏது?நன்றி.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. /////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger jayanthi praburam said...
    Palaiya padangalai padika aarvam uladhu. Can you please send in email. Jayanthi.praburam01@gmail.com/////

    எல்லா பாடங்களும் வகுப்பறைப் பதிவில் உள்ளது. அங்கேயே படியுங்கள். மின்னஞ்சலில் அனுப்பும் வசதி எல்லாம் கிடையாது.வேண்டுமென்றால் வகுப்பறை ஜோதிட நூல் பாகம் ஒன்று உள்ளது. அதை வாங்கிப் படியுங்கள் சகோதரி!

    ReplyDelete
  10. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    குட்டிக் கதை சுட்டி! நீதி போதனைக் கதை ஒன்று கூறிவிட்டு, ஆசிரியர், இக்கதையிலிருந்து நீங்கள் தெரிந்து கொண்டது என்ன என்று கேட்கும்போது நாங்கள் ஒவ்வொருவர் ஒன்று சொல்வோம்; கடைசியில் அவரே 'moral' என்ன என்பதைச் சொல்வார்.
    நான் சொல்வது சிறிய வகுப்பில், பழங்காலக்கதை! இன்றைய குட்டிக்கதை அவற்றை ஞாபகப்படுத்தியது!
    எவ்வளவு பெரிய விஷயம், "தன்னைத்தானே கவனித்தல்" என்றால் "Introspection" செய்தல் அல்லவா?!
    ஞானிகள் ஞானிகள் தான்!!////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  11. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy monring... Nice post.
    Have a pleasant day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  12. //////Blogger venkatesh r said...
    குருவின் பார்வை கோடி நன்மை!அரசனுக்கும் பிரச்சினை, ஆண்டிக்கும் பிரச்சினை! போராடி ஜெயிப்பதே வாழ்க்கை.அதற்கு தன் குறைகளை கவனித்து களைய வேண்டும் என உணர்த்தியது குட்டிக்கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger kmr.krishnan said...
    புத்தம் சரணம் கச்சாமி/////

    நல்லஃது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  14. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மனமெனும் மாயமானை நிறுத்த தெரிந்தால் துன்பமேது,துயரமேது,கவலை ஏது?நன்றி./////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger KARTHIKEYAN V K said...
    Ayya super/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. Ayya avargale valga vazamudan.Thanks for share this good story.
    Regards A.SIVASARAVANAN, Chennai

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com