மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.3.16

நினைத்தது நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?



நினைத்தது நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

வயலூர் முருகனிடம் மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும். இன்று அத்திருக்கோயிலின் அருமை, பெருமைகளைப் பார்ப்போம். வாருங்கள்!

வயலூர் முருகன் கோவில்

முருகப் பெருமான் தன் குடும்பத்தோடு இருக்கும் ஒரே தளம்.

"கேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும்".

வாய் மணக்க பாடும் திருப்புகழ் என்னும் அரிய நூல் உருவாகக் காரணமான வயலூர் முருகனை பங்குனி உத்திரத்தை ஒட்டி தரிசித்து வருவோமா!

தல வரலாறு: சோழ மன்னன் ஒருவன் வயல்வெளிக்குச் சென்ற போது, ஒரே கணுவில் மூன்று கரும்புகள் விளைந்திருந்ததைக் கண்டான். அதன் அடியில் தோண்டியபோது சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டான். அந்த இடத்தில் கோயில் எழுப்பினான். சிவனுக்கு ஆதிநாதர் என்ற பெயர் சூட்டி, அம்பாள் ஆதிநாயகிக்கும் சன்னதி எழுப்பினான். வயல்கள் நிறைந்த அவ்வூருக்கு 'வயலூர்' என்று பெயர் ஏற்பட்டது.

திருப்புகழ் தந்த திருமுருகன்: திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார், 'முத்தைத் தரு' எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின், அவர் வேறு பாடல் எதுவும் பாடவில்லை. ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி, 'வயலூருக்கு வா!' என்றது.
அருணகிரியார் இங்கு வந்தார். அங்கு முருகனின் நேரடி தரிசனம் கிடைக்குமென நினைத்து வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முருகன் வரவில்லை. உடனே 'அசரீரி பொய்யோ?' என உரக்கக் கத்தினார். அப்போது, முருகன் அங்கு தோன்றி வேலால் அருணகிரிநாதரின்நாக்கில் 'ஓம்' என்று எழுதினார். அதன்பின், இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடினார். தொடர்ந்து பல முருகன் கோயில்களுக்குச்சென்று திருப்புகழ் பாடினார்.

பங்குனி உத்திர திருமணம்: சிவன் சன்னதிக்குப் பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட நல்ல வரன் அமையும். கந்த சஷ்டியின்போது முருகன்- தெய்வானை, பங்குனி உத்திர திருவிழாவில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின்போது, முருகனுக்கு வேடன் மற்றும் முதியவர் அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப் படுவது போல பாவனையாகச் செய்வர்.

வாரியார் திருப்பணி: 1934ல், வாரியார் சுவாமி இக்கோயிலுக்கு வந்தார். அப்போது அர்ச்சகராக இருந்த ஜம்புநாத சிவாச்சாரியார்,அவருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார். மகிழ்ந்த வாரியார், ஐம்பது பைசாவை அவரிடம் காணிக்கையாகக் கொடுத்தார். அன்றிரவில் கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் தோன்றிய முருகன், 'ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயே? அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா?' என்று கேட்டார். வியந்த நிர்வாகி, மறுநாள் கோயிலுக்கு வந்தபோது, வாரியார் ஐம்பது காசு கொடுத்ததை அறிந்தார். அவருக்கு அந்த காசை திருப்பி அனுப்பி விட்டார். நடந்ததை அறிந்த வாரியார், கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார்.

சதுர தாண்டவ நடராஜர்: பாதம் தூக்கி நடனமாடும் நடராஜரை மட்டுமே நீங்கள் பார்த்திருப்பீர்கள். இங்கோ, காலைத் தூக்காமலேயே உள்ள நடராஜரைக் காணலாம். இவரது ஜடாமுடி முடியப்பட்ட நிலையில் இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவருக்கு 'சதுரதாண்டவ நடராஜர்' என்று பெயர். மார்கழி திருவாதிரைத் திருநாள் இவருக்கு விசேஷமாக நடக்கும்.விசேஷ விநாயகர்: அருணகிரிநாதருக்கு காட்சி தந்த 'பொய்யா கணபதி விசேஷமான மூர்த்தியாவார்.அருணகிரியார் இவரைப்போற்றி திருப்புகழில் காப்புச்செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ, அந்த அளவிற்கு இவர் செல்வத்தைத் தருவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அருணகிரிநாதருக்கும் சன்னதி உள்ளது.

ஆனி மூலத் தன்று இவர் முருகனுடன் புறப்பாடாவார். சிவனுக்குரிய வன்னி மரம் இத்தலத்தின் விருட்சம். கோயிலுக்கு வெளியே சக்தி தீர்த்தம் உள்ளது.திருவிழா: வைகாசியில் பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம். சித்திரை பிறப்பு,இருப்பிடம்:

திருச்சியில் இருந்து 11 கி.மீ., தூரத்தில் வயலூர் உள்ளது
குறிப்பு:
-------------------------------------------------
பக்தர்கள் யாரேனும் வேறு முருகன் கோவிலுக்கு வேண்டிய நேர்த்திகடனை வயலூர் முருகன் கோவிலில் செலுத்தலாம் ஆனால் வயலூர் முருகன் கோவில்க்கு வேண்டிய நேர்த்திகடனை வேறு எங்கும் செலுத்த கூடாது .
பேருந்து வழிதடம்: சத்திரம் பேருந்து நிலையம் TO வயலூர் பேருந்து எண்:46 , 46K,29 ,SR ,LRS ,T1 ,NTS .
------------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. ஓம் ஷண்முகாய நம:

    சரணம் சரணம் சரவண பவ ஓம்
    சரணம் சரணம் ஷண்முகா சரணம்.



    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி ஐயா

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Hope all is well.

    Thank you so much for sharing this.

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. ஒரு தல யாத்திரை ஏற்பாடு செய்யுங்கள்..
    ஒரு முறை நிச்சயம் போக வேண்டிய தலம் ...

    இதுவரை இங்கு சென்று வரும் வாய்ப்பினை
    இந்த முருகன் எனக்கு தரவில்லை...

    இந்த ஆண்டு நிச்சயம் செல்ல
    இறையருள் துணை செய்யட்டும்.

    முருகன் அருள்
    முன் நிற்கும்

    ReplyDelete
  5. ஐயா,வணக்கம். அதிகம் தரிசித்த கோவில்.ஆனால் தெரியாத தகவல்கள் ஏராளம்.நன்றி.

    ReplyDelete
  6. Vanakkam ayya erkanave vayalure Murugan kovilukku sentri ullen tharpothu entha thagavalgal mendum Sella aaval erpattulluthu nantri vazhga valamudan

    ReplyDelete
  7. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    ஓம் ஷண்முகாய நம:
    சரணம் சரணம் சரவண பவ ஓம்
    சரணம் சரணம் ஷண்முகா சரணம். ////

    வயலூர் முருகா சரணம்!

    ReplyDelete
  8. /////Blogger Subathra Suba said...
    மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி ஐயா////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Hope all is well.
    Thank you so much for sharing this.
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  10. ////Blogger kmr.krishnan said...
    Very nice information.Thank you Sir
    kmrk////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. ////Blogger வேப்பிலை said...
    ஒரு தல யாத்திரை ஏற்பாடு செய்யுங்கள்..
    ஒரு முறை நிச்சயம் போக வேண்டிய தலம் ...
    இதுவரை இங்கு சென்று வரும் வாய்ப்பினை
    இந்த முருகன் எனக்கு தரவில்லை...
    இந்த ஆண்டு நிச்சயம் செல்ல
    இறையருள் துணை செய்யட்டும்.
    முருகன் அருள்
    முன் நிற்கும் /////

    ஆஹா...சென்று வாருங்கள்!

    ReplyDelete
  12. /////Blogger adithan said...
    ஐயா,வணக்கம். அதிகம் தரிசித்த கோவில்.ஆனால் தெரியாத தகவல்கள் ஏராளம்.நன்றி.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger Gajapathi Sha said...
    Vanakkam ayya erkanave vayalure Murugan kovilukku sentri ullen tharpothu entha thagavalgal mendum Sella aaval erpattulluthu nantri vazhga valamudan////

    மீண்டும் சென்று வாருங்கள் நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com