மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.3.16

திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி

திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி

திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2000 வருடங்களுக்கு முன் சோழர்களால்  கட்டப்பட்டக் கோயில். இத்திருத்தலத்தின் மூலவர் ஸ்ரீ மஹாலிங்க ஸ்வாமி, தாயார்  பெருமுலையாள். இத்தல இறைவன்
சுயம்பு மூர்த்தியாவார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 93 வது தேவாரத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்
தலங்களில் இது 30வது தலம்.

" பொங்குநூல் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை தங்குசெஞ்
சடையினீர் சாமவேதம் ஓதினீர் எங்கும் எழிலா
மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் மங்குல்தோய்
கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே "
-திருஞானசம்பந்தர்

தல வரலாறு:

உமாதேவியை நினைத்து தவம் செய்ய அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தார்.  உமயவளும் அகத்திய முனிவருக்கு காட்சி
அளித்தார். முனிவர்கள் அனைவரும் தேவியிடம் சிவபெருமானையும்
காண வேண்டும் எனக்கூறினர். முனிவர்களுக்காக  இறைவனை எண்ணி உமாதேவி தவமிருக்கிறார். இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும்முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.  காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார். வியப்பு  கொண்டு அம்பாள் " இறைவா, பிரம்மன்முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே!" என்று வினவ "உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே".  நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர்.  அதனாலே பூசிக்கிறேன் என்றார்.முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெற்றனர் என்று தலவரலாறுகூறுகிறது.

ஸ்ரீ மூகாம்பிகை -
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையைப் போலவே  இத்தலத்திலும் மூகாம்பிகைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.  இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே  மூகாம்பிகைக்குத் தனி சந்நிதி உள்ளது. இக்கோயிலில் அம்பாள்
சன்னதிக்குத்  தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற்கோபுர அமைப்பில் அமைந்துள்ளது. இந்த சன்னதியில்  மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள் கர்ப்பம் தரிக்கவும் சுக பிரசவம் அடைவதற்காகவும் வேண்டுகின்றனர்.

இத்திருக்கோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம்வந்து மூலவரை  வழிபட்டால் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள்,  பைத்தியம்  முதலிய பெருநோய்முதலியவை நீங்கி, நலன்களெல்லாம் பெற்று இன்புற்று வாழ்வர். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.  மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோகஉயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை  நிச்சயம் நிறைவேற்றிகொடுப்பார்.

ஆண்ட விநாயகர் -

கோயிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர்  சன்னதி அமைந்துள்ளது. இந்த விநாயகக்கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார். தேவ கணங்கள் குறையாமல்  கொண்டுவந்து அளிக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக  இறைவனை வழிபடுகிறார், மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில், தமது  அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால் இவருக்கு ஆண்ட விநாயகர் என்ற காரணப்பெயர் உண்டு.

அசுவமேதப் பிரதட்சிணம் : திருவிடைமருதூரில் மருதப் பெருமானை  வழிபடுவதற்குக் கோயிலையடைந்து முதல் மதிலின் உட்புறத்தில் வலம்  வருதலை அசுவமேதப் பிரதட்சிணம் என்பர். இந்த அசுவமேதப் பிரதட்சிணம்  செய்வோர் எல்லா நலன்களும்பெறுவர். தொடங்குங்கால் முருகப் பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும். ஒரு மண்டலம், அரை மண்டலம், கால்மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும். வலம் வருவதும்  நூற்றி எட்டு, இருபத்து நான்கு,பன்னிரண்டு, ஏழு என்ற அளவில் அமைய வேண்டும்.

திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர்பெரும் பயன்  அடைவர். இதனை அடுத்துள்ளது கொடுமுடிப்பிரகாரம். கயிலாய மலையை வலம் வருவதால்கிடைக்கும் பேறு இப்பிரகாரத்தை வலம் வருதலால் கிடைக்கும்.

அனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம்,

காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன. 27நட்சத்திரத்திற்கும் 27 லிங்கங்கள் உள்ளன. இத்தலத்தின் நான்கு திசைகளிலும் விசுவநாதர், ஆன்மநாதர், ரிஷிபுரீசுவரர், சொக்கநாதர்  ஆகிய மூர்த்திகளுக்கு கோயில்கள் அமைந்து பஞ்சலிங்கத் தலம்  என்றும் அழைக்கப்படுகிறது.

வரகுணபாண்டியன் இத்தலத்தை அடைந்து  தன்னைப் பற்றியிருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றான். பட்டினத்தார், பத்திரகிரியார், வரகுணபாண்டியன், அருணகிரிநாதர், கருவூர்தேவர் ஆகியோர்  வழிபட்டு பெரும்பேறு பெற்றபெருமையுடையது. அனுஷ நட்சத்திரத்திற்கு இது பரிகார தலம்.

ஒரு முறை சென்று மகாலிங்க ஸ்வாமியை வணங்கி, அருள் பெற்று வாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

  1. அர்ஜுனம் என்றால் மருதமரம். மல்லிகர்ஜுனம் என்பது ஸ்ரீசைலம் கோவில்.இது ஆந்திரவில் உள்ளது.தலை மருதூர் ஆகும். இடை மருதூர் என்பது மத்யார்ஜுனம்.அதைப் பற்றித்தான் ஐயா விளக்கமாக எழுதியுளார்கள். கடை மருதூர் என்பது திருப்புடை மருதூர். இது நெல்லை மாவட்டத்தில் உள்ளது. அந்த ஈஸ்வரன் பெயர் புடார்ஜுனேஸ்வரர்.இந்த சுவாமியின் பெயர் எங்கள் குடும்பத்தில் பலருக்கும் உண்டு.

    திருவிடை மருதூருக்கு அருகில் தட்சிண் பண்டரிபுரம் என்ற பெயரில் ஸ்ரீ ஜெயகிருஷ்ணன் தீட்சதர் பெரிய கோவிலைக் கட்டியுள்ளார். அங்கே கண்ணன் மேய்த்த மாடுகளின் வழித்தோன்றல்கள் பிருந்தாவனத்திலிருந்து கொண்டுவந்து சுமார் 300 மாடுகள் பராமரிக்கப்படுகின்றன.இடம் கோவிந்தபுரம்.

    கோவிந்தபுரத்தில் பகவன் நாம போதேந்திர ஸ்வாமிகளின் அதிஷ்டானமும்,
    மேலும் முரளிதர ஸ்வாமிகள் அவர்களின் நாமதுவார் என்ற அமைப்பும் உள்ளது.

    ஆன்மீகத்தில் மட்டும் ஈடுபட விரும்புவர்களுக்கு ஏற்ற இடம் கோவிந்தபுரம்.

    ReplyDelete
  2. குருவே சரணம்.
    2000 ஆண்டுகட்குப் புராதனமான ஒரு கோவிலின் மகத்துவத்தை தெளிவாகத் தெரியப்படுத்தியிருக்கிறீர்கள்!இப்படிப்பட்ட விசேஷங்கள் கொண்ட பஞ்சலிங்கத்தலத்தை ஒருமுறையேனும்
    சென்று காருண்யாமிருத தீர்த்தத்தில் நீராடி, ஆண்ட விநாயகரின் அடிபணிந்து, இயன்றால் அஸ்வமேதப் பிரதக்ஷணமும், கொடுமுடிப்பிரகார வலம் வருதலும் செய்து (கைலாய மலையை வலம் வருவதாக எண்ணி) மூலவர் ஶ்ரீமஹாலிங்கேஸ்வரர் மற்றும் தாயார் பெருமுலையாள் ஆகியோரின் அருளுக்குப் பாத்திரமாக முயற்சிப்பேன்!

    ReplyDelete
  3. எவ்வளவோ வசதி இருந்தும், அழகு இருந்தும், திறமை இருந்தும் - ஒரு சிலருக்கு திருமணம் எளிதில் நடப்பதில்லை.... ஏன் ??
    நல்ல வேலை ... கை நிறைய சம்பளம்... ஆனால் கழுத்துக்கு மேல கடன்... எப்படி?
    நல்ல திறமை, கடின உழைப்பு... - ஆனா , ப்ரோமோஷன் , இன்கிரிமென்ட் எல்லாம் இது எதுமே இல்லாத , உங்க "கலீக்" க்கு மட்டும்.. உங்களுக்கு , நல்ல அழகா ஒரு பட்டை... நாமம்..!! ஏன் இப்படி நமக்கு மட்டும்?
    எவ்வளவோ வசதி இருந்தும், கொஞ்சுறதுக்கு ஒரு குழந்தை இல்லை... ஏன் இப்படி?
    இந்த பிறவிலேயோ, இல்லை போன பிறவியிலோ , ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டு இருந்தா.... ஆண்டவன் அடிக்கிறது இந்த மாதிரி தான்...
    ஜாதகத்தை நன்றாக பார்க்க தெரிந்தவர்கள் , இதை உடனே கணித்து விடுவார்கள். இதற்கு பெயர் - பிரம்மஹத்தி தோஷம்.
    யார் ஒருவர் ஜாதகத்தில், சனி , குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர் , பார்த்து இருந்தாலோ - 99 % அவருக்கு - பிரம்மஹத்தி தோஷம் - இருப்பதாக அர்த்தம்..... நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும் , இது பொருந்தும்..
    பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?
    ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் :
    1. பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபவித்து, திருமணம் செய்யாமல் இருத்தல்
    2. பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது
    3. குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது
    4. குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுவது
    5. வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது
    6. சென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்
    7. உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)
    பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?
    1. வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்
    2. தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்
    3. மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய் வரும்
    4. தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
    5. திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
    6. குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்
    பரிகாரம் : தமிழ்நாடு,கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல்.

    இறைவர் திருப்பெயர் : மருதவாணர், மகாலிங்கேசுவரர்
    இறைவியார் திருப்பெயர் : பிருகச்சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை
    தல மரம் : மருதமரம்
    தீர்த்தம் : அயிராவணத்துறை, காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம்
    வழிபட்டோர் : உமாதேவியார், ருத்திரர், மூத்த பிள்ளையார், முருகர்,
    பிரமன், திருமால்.
    தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. ஓடேகலன் உண்பதும்,
    2. தோடொர் காதினன்,
    3. மருந்தவன் வானவர்,
    4. நடைமரு திரிபுரம்,
    5. விரிதரு புலியுரி,
    6. பொங்குநூல் மார்பினீர்.

    2. அப்பர் - 1. காடுடைச் சுடலை,
    2. பாசமொன்றிலராய்,
    3. பறையின் ஓசையும்,
    4. சூலப் படையுடையார்,
    5. ஆறு சடைக்கணிவர்.

    3. சுந்தரர் - கழுதை குங்குமந் தான்.

    ReplyDelete
  4. PLEASE CONTINUE WITH MY PREVIOUS POST

    தல வரலாறு
    இத்தல விநாயகர் அருள்மிகு மகாலிங்கப் பெருமானைப் பூசித்து பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகப் பெருமான் அருள்மிகு ஆண்ட விநாயகர் என்னுந் திருநாமம் பூண்டு எழுந்தருளியுள்ளார்.

    அகத்திய முனிவர் முதலிய முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொத்த சிறப்புடைய இத்தலத்தில், அம்முனிவர்களின் பொருட்டு அருள்மிகு மகாலிங்கப்பெருமானைக் குறித்து, அம்பிகையானவள் மௌனத்துடன் மூகாம்பிகையாக இருந்து தவம் புரிய, பெருமான் சோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகைக்கும் முனிவர்களுக்கும் காட்சி கொடுத்தருளினார்.

    பூசை விதிகளைத் தேவர்களுக்கு அறிவுறுத்தற் பொருட்டு பரமசிவன் தம்மைத்தாமே அர்ச்சித்துக் காட்சியருளினார்.

    மருத மரத்தைத் தல மரமாகக் கொண்டுள்ள மூன்று தலங்களான திருப்பருப்பதம்(வடநாடு), சோழநாட்டுத் திருஇடைமருதூர் மற்றும் திருப்புடைமருதூர்(பாண்டியநாடு) ஆகியவற்றுள் இது இடையாக உள்ளது.

    சிவ பரிவார மூர்த்தத் தலங்கள் யாவும் அருகே அமையப்பெற்றதால் இது மகாலிங்கத்தலம் எனப்படுகிறது. அவையாவன:
    விநாயகர்- திருவலஞ்சுழி,
    முருகர்- சுவாமி மலை,
    நடராஜர்-சிதம்பரம்,
    தட்சிணாமூர்த்தி-ஆலங்குடி,
    சண்டேச்சுரர்- திருசேய்ஞலூர்,
    பைரவர்-சீர்காழி,
    நவக்கிரகம்-சூரியனார் கோவில்

    வரகுண பாண்டியனின் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்.
    சிறப்புகள்

    இத்தலம் சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் முதலிய காரணப்பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.

    உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், இலக்குமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் முதலியேர் பெருமானை பூசித்து பேறு பெற்றுள்ளனர்.

    இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும்.

    இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு புரமஹத்தி தோஷம் நேங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

    27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன.

    இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும்.

    இத்தலத்தில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என முப்பத்துரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

    இத்தலத்தில் உள்ள அசுவமேதத் திருச்சுற்றை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவர்.

    கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கயிலாய மலையை வலம் செய்த பலனை அடைவர்.

    பிரணவத் திருச்சுற்றில் இப்போதும் நாதோற்பத்தி விளங்கி வரும் சிறப்புடையது; இத்திருச்சுற்றை வலம் வருவோர் மெஞ்ஞானம் பெற்றுச் சிறப்பர்.

    இத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர் முதலானோர் பாடிப் பரவியுள்ளனர்.

    பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம்.

    இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

    மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன.

    பட்டிணத்தடிகளாரால் மும்மணிக்கோவை பாடப் பெற்றது.

    இத்தலத்தில் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்புடையது.

    சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் ஆகியோர் இத்திருக் கோயிலைத் திருப்பணி செய்துள்ளனர்.

    சோழர்காலக் கல்வெட்டுகள் பல உள்ளன.

    அமைவிடம்

    மாநிலம் : தமிழ் நாடு
    மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள இரயில் நிலையம். மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

    Thanks for the following site owners who publish the above details as our VATHIYARRRRRRR

    For additional details please refer
    http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_idaimarudhur.htm

    http://tkarumugam.blogspot.in

    ReplyDelete
  5. சாத்திரத்திற்கு புறம்பான செய்தியை
    சரியில்லை என கோடிட்டு காட்டிய பின்னும்

    அந்த பதிவை நீக்கம் செய்யாததினால்... இந்த வகுப்பு
    அறையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம்.

    மீண்டும் திங்கள் கிழமை வருவேன்... கண்களில்
    மீதமுள்ள கண்ணீரை கொட்டியபடி செல்கிறேன்...

    ReplyDelete
  6. திரு. தயானந்த சுவாமிகள் தலைமயில் திருத்தேர் ஏற்பாடு செய்யபட்டது.
    நீண்ட காலங்களுக்கு பிறகு திருவிடை மருதூரில் தேர் வலம் வந்தது சென்ற ஆண்டிலிருந்து. அடியேன் கைங்கரியமும் செய்துள்ளேன்.

    ஆதி சங்கரர் அத்துவைதம் ஆரம்பிப்தர்க்கு முன்னால் திருவிடைமருதூரில் சென்றார். சிவன் இவருக்கு அருள் புரிந்தார்.

    இத்தலம் சாம வேதத்திற்கு பிரசித்தமானது.

    நேரமின்மைக்காரனமாக குறிப்பு மட்டும் கொடுத்துள்ளேன் .

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா. அருமையான தகவல் பகிர்வு.நன்றி.

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    அர்ஜுனம் என்றால் மருதமரம். மல்லிகர்ஜுனம் என்பது ஸ்ரீசைலம் கோவில்.இது ஆந்திரவில் உள்ளது.தலை மருதூர் ஆகும். இடை மருதூர் என்பது மத்யார்ஜுனம்.அதைப் பற்றித்தான் ஐயா விளக்கமாக எழுதியுளார்கள். கடை மருதூர் என்பது திருப்புடை மருதூர். இது நெல்லை மாவட்டத்தில் உள்ளது. அந்த ஈஸ்வரன் பெயர் புடார்ஜுனேஸ்வரர்.இந்த சுவாமியின் பெயர் எங்கள் குடும்பத்தில் பலருக்கும் உண்டு.
    திருவிடை மருதூருக்கு அருகில் தட்சிண் பண்டரிபுரம் என்ற பெயரில் ஸ்ரீ ஜெயகிருஷ்ணன் தீட்சதர் பெரிய கோவிலைக் கட்டியுள்ளார். அங்கே கண்ணன் மேய்த்த மாடுகளின் வழித்தோன்றல்கள் பிருந்தாவனத்திலிருந்து கொண்டுவந்து சுமார் 300 மாடுகள் பராமரிக்கப்படுகின்றன.இடம் கோவிந்தபுரம்.
    கோவிந்தபுரத்தில் பகவன் நாம போதேந்திர ஸ்வாமிகளின் அதிஷ்டானமும்,
    மேலும் முரளிதர ஸ்வாமிகள் அவர்களின் நாமதுவார் என்ற அமைப்பும் உள்ளது.
    ஆன்மீகத்தில் மட்டும் ஈடுபட விரும்புவர்களுக்கு ஏற்ற இடம் கோவிந்தபுரம்.////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. ////Blogger வரதராஜன் said...
    குருவே சரணம்.
    2000 ஆண்டுகட்குப் புராதனமான ஒரு கோவிலின் மகத்துவத்தை தெளிவாகத் தெரியப்படுத்தியிருக்கிறீர்கள்!இப்படிப்பட்ட விசேஷங்கள் கொண்ட பஞ்சலிங்கத்தலத்தை ஒருமுறையேனும்
    சென்று காருண்யாமிருத தீர்த்தத்தில் நீராடி, ஆண்ட விநாயகரின் அடிபணிந்து, இயன்றால் அஸ்வமேதப் பிரதக்ஷணமும், கொடுமுடிப்பிரகார வலம் வருதலும் செய்து (கைலாய மலையை வலம் வருவதாக எண்ணி) மூலவர் ஶ்ரீமஹாலிங்கேஸ்வரர் மற்றும் தாயார் பெருமுலையாள் ஆகியோரின் அருளுக்குப் பாத்திரமாக முயற்சிப்பேன்!/////

    நல்லது. அப்படியே செய்யுங்கள்!

    ReplyDelete
  10. ////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா////

    நல்லது. நன்றி

    ReplyDelete
  11. /////Blogger BDO mecheri said...
    எவ்வளவோ வசதி இருந்தும், அழகு இருந்தும், திறமை இருந்தும் - ஒரு சிலருக்கு திருமணம் எளிதில் நடப்பதில்லை.... ஏன் ??
    நல்ல வேலை ... கை நிறைய சம்பளம்... ஆனால் கழுத்துக்கு மேல கடன்... எப்படி?
    நல்ல திறமை, கடின உழைப்பு... - ஆனா , ப்ரோமோஷன் , இன்கிரிமென்ட் எல்லாம் இது எதுமே இல்லாத , உங்க "கலீக்" க்கு மட்டும்.. உங்களுக்கு , நல்ல அழகா ஒரு பட்டை... நாமம்..!! ஏன் இப்படி நமக்கு மட்டும்?
    எவ்வளவோ வசதி இருந்தும், கொஞ்சுறதுக்கு ஒரு குழந்தை இல்லை... ஏன் இப்படி?
    இந்த பிறவிலேயோ, இல்லை போன பிறவியிலோ , ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டு இருந்தா.... ஆண்டவன் அடிக்கிறது இந்த மாதிரி தான்...
    ஜாதகத்தை நன்றாக பார்க்க தெரிந்தவர்கள் , இதை உடனே கணித்து விடுவார்கள். இதற்கு பெயர் - பிரம்மஹத்தி தோஷம்.
    யார் ஒருவர் ஜாதகத்தில், சனி , குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர் , பார்த்து இருந்தாலோ - 99 % அவருக்கு - பிரம்மஹத்தி தோஷம் - இருப்பதாக அர்த்தம்..... நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும் , இது பொருந்தும்..
    பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?
    ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் :
    1. பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபவித்து, திருமணம் செய்யாமல் இருத்தல்
    2. பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது
    3. குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது
    4. குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுவது
    5. வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது
    6. சென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்
    7. உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)
    பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?
    1. வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்
    2. தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்
    3. மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய் வரும்
    4. தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
    5. திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
    6. குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்
    பரிகாரம் : தமிழ்நாடு,கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல்.
    இறைவர் திருப்பெயர் : மருதவாணர், மகாலிங்கேசுவரர்
    இறைவியார் திருப்பெயர் : பிருகச்சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை
    தல மரம் : மருதமரம்
    தீர்த்தம் : அயிராவணத்துறை, காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம்
    வழிபட்டோர் : உமாதேவியார், ருத்திரர், மூத்த பிள்ளையார், முருகர்,
    பிரமன், திருமால்.
    தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. ஓடேகலன் உண்பதும்,
    2. தோடொர் காதினன்,
    3. மருந்தவன் வானவர்,
    4. நடைமரு திரிபுரம்,
    5. விரிதரு புலியுரி,
    6. பொங்குநூல் மார்பினீர்.
    2. அப்பர் - 1. காடுடைச் சுடலை,
    2. பாசமொன்றிலராய்,
    3. பறையின் ஓசையும்,
    4. சூலப் படையுடையார்,
    5. ஆறு சடைக்கணிவர்.
    3. சுந்தரர் - கழுதை குங்குமந் தான்.//////

    அருமை. நன்றி நண்பரே! உங்களின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே!

    ReplyDelete
  12. ////Blogger BDO mecheri said...
    PLEASE CONTINUE WITH MY PREVIOUS POST
    தல வரலாறு
    இத்தல விநாயகர் அருள்மிகு மகாலிங்கப் பெருமானைப் பூசித்து பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகப் பெருமான் அருள்மிகு ஆண்ட விநாயகர் என்னுந் திருநாமம் பூண்டு எழுந்தருளியுள்ளார்.
    அகத்திய முனிவர் முதலிய முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொத்த சிறப்புடைய இத்தலத்தில், அம்முனிவர்களின் பொருட்டு அருள்மிகு மகாலிங்கப்பெருமானைக் குறித்து, அம்பிகையானவள் மௌனத்துடன் மூகாம்பிகையாக இருந்து தவம் புரிய, பெருமான் சோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகைக்கும் முனிவர்களுக்கும் காட்சி கொடுத்தருளினார்.
    பூசை விதிகளைத் தேவர்களுக்கு அறிவுறுத்தற் பொருட்டு பரமசிவன் தம்மைத்தாமே அர்ச்சித்துக் காட்சியருளினார்.
    மருத மரத்தைத் தல மரமாகக் கொண்டுள்ள மூன்று தலங்களான திருப்பருப்பதம்(வடநாடு), சோழநாட்டுத் திருஇடைமருதூர் மற்றும் திருப்புடைமருதூர்(பாண்டியநாடு) ஆகியவற்றுள் இது இடையாக உள்ளது.
    சிவ பரிவார மூர்த்தத் தலங்கள் யாவும் அருகே அமையப்பெற்றதால் இது மகாலிங்கத்தலம் எனப்படுகிறது. அவையாவன:
    விநாயகர்- திருவலஞ்சுழி,
    முருகர்- சுவாமி மலை,
    நடராஜர்-சிதம்பரம்,
    தட்சிணாமூர்த்தி-ஆலங்குடி,
    சண்டேச்சுரர்- திருசேய்ஞலூர்,
    பைரவர்-சீர்காழி,
    நவக்கிரகம்-சூரியனார் கோவில்
    வரகுண பாண்டியனின் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்.
    சிறப்புகள்
    இத்தலம் சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் முதலிய காரணப்பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.
    உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், இலக்குமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் முதலியேர் பெருமானை பூசித்து பேறு பெற்றுள்ளனர்.
    இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும்.
    இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு புரமஹத்தி தோஷம் நேங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
    27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன.
    இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும்.
    இத்தலத்தில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என முப்பத்துரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
    இத்தலத்தில் உள்ள அசுவமேதத் திருச்சுற்றை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவர்.
    கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கயிலாய மலையை வலம் செய்த பலனை அடைவர்.
    பிரணவத் திருச்சுற்றில் இப்போதும் நாதோற்பத்தி விளங்கி வரும் சிறப்புடையது; இத்திருச்சுற்றை வலம் வருவோர் மெஞ்ஞானம் பெற்றுச் சிறப்பர்.
    இத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர் முதலானோர் பாடிப் பரவியுள்ளனர்.
    பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம்.
    இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
    மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன.
    பட்டிணத்தடிகளாரால் மும்மணிக்கோவை பாடப் பெற்றது.
    இத்தலத்தில் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்புடையது.
    சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் ஆகியோர் இத்திருக் கோயிலைத் திருப்பணி செய்துள்ளனர்.
    சோழர்காலக் கல்வெட்டுகள் பல உள்ளன.
    அமைவிடம்
    மாநிலம் : தமிழ் நாடு
    மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள இரயில் நிலையம். மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
    Thanks for the following site owners who publish the above details as our VATHIYARRRRRRR
    For additional details please refer
    http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_idaimarudhur.htm
    http://tkarumugam.blogspot.in///////

    அருமை. எடுத்துக்கொடுத்த மேன்மைக்குப் பாராட்டுக்கள்! நன்றி நண்பரே! உங்களின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே!

    ReplyDelete
  13. ////Blogger வேப்பிலை said...
    சாத்திரத்திற்கு புறம்பான செய்தியை
    சரியில்லை என கோடிட்டு காட்டிய பின்னும்
    அந்த பதிவை நீக்கம் செய்யாததினால்... இந்த வகுப்பு
    அறையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம்.
    மீண்டும் திங்கள் கிழமை வருவேன்... கண்களில்
    மீதமுள்ள கண்ணீரை கொட்டியபடி செல்கிறேன்...//////

    எந்த செய்தி? குழப்பமாக இருக்கிறது வேப்பிலையாரே! சற்று விரிவாகச் சொன்னால்தான் என்னவாம்?

    ReplyDelete
  14. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
    திரு. தயானந்த சுவாமிகள் தலைமயில் திருத்தேர் ஏற்பாடு செய்யபட்டது.
    நீண்ட காலங்களுக்கு பிறகு திருவிடை மருதூரில் தேர் வலம் வந்தது சென்ற ஆண்டிலிருந்து. அடியேன் கைங்கரியமும் செய்துள்ளேன்.
    ஆதி சங்கரர் அத்துவைதம் ஆரம்பிப்தர்க்கு முன்னால் திருவிடைமருதூரில் சென்றார். சிவன் இவருக்கு அருள் புரிந்தார்.
    இத்தலம் சாம வேதத்திற்கு பிரசித்தமானது.
    நேரமின்மைக்காரனமாக குறிப்பு மட்டும் கொடுத்துள்ளேன் .//////

    உங்கள் பங்கிற்கு கைங்கரியம் செய்த தகவலுக்கு நன்றி! மகாலிங்க ஸ்வாமியின் பூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்! நன்றி1

    ReplyDelete
  15. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா. அருமையான தகவல் பகிர்வு.நன்றி.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com