மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.3.16

Astrology: Quiz: புதிர் 106: கேள்விக்கென்ன பதில்!

Astrology: Quiz: புதிர் 106: கேள்விக்கென்ன பதில்!


மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இந்த ஜாதகத்தை வைத்து இன்றைய கேள்விகள்:

1. ஜாதகத்தின் முக்கியமான சிறப்பு என்ன?
2. ஜாதகருக்கு படித்து முடித்தவுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தமான வேலை கிடைக்கவில்லை. ஆண்டுக்கு ஒரு வேலை என்று மாறிக் கொண்டே இருந்தார். அதற்கு என்ன காரணம்?
3. பிற்காலத்தில் ஜாதகருக்கு ஒரு நிரந்தமான வேலை கிடைத்தது. அது எப்போது?

ஜாதகத்தை நன்றாக அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

  1. ஜாதகர் 14 மார்ச் 1974 அன்று பிறதவர். காலை 6 மணி என்றால் லக்கினம் சரியாக அமைகிறது.ஆனால் தசா இருப்பை, நேரத்தை சரி செய்து கொடுத்துள்ள தசா இருப்புடன் பொருத்த முடியவில்லை.அப்படி தசா இருப்பை சரி செய்தால் லக்கினம் மாறிப் போகிறது.

    1. கஜ கேசரி யோகம் இந்த ஜாதகத்தின் சிறப்பு.மேலும் சந்திரன் மற்றும் சுக்கிரன்
    ராசி நவாம்சத்தில் ஒரே இடங்களில் இருப்பது சிறப்பு.சந்திரன் நீச பங்கம் பெற்றது மேலும் சிறப்பு.
    2. 6க்கு உடைய சந்திரன் பத்தில் அமர்ந்தது, 10க்கு உடைய செவ்வாய் 3லும் மேலும் தன் வீட்டுக்கு ஆறிலும், அமர்ந்தது, காரகன் சனி கேதுவுடன் உறவு வைத்தது, பூர்வ புண்ணியத்தில் சனி கேது நின்றது ஆகியவையும், வேலைக்கு வரும் பருவமான 20 வயது போல கேதுதசா நடந்தது ஆகியவை வேலையில் ஸ்திரத்தன்மையை கொடுக்காமல் அடிக்கடி வேலை மாறியது.
    3.சுக்கிர தசா சுக்கிர புக்தி அல்லது சுக்கிர தசா சூரிய புக்தியில் நல்ல வேலையில் நிரந்தரமாக அமர்ந்தார். சுக்கிரன் இவருக்கு யோக காரகன். 12ல் இருந்தாலும் ராசி நவாம்சத்தில் மகரத்தில் இருந்து வலிமை பெற்றதால் சுக்கிரதசாவில் நிரந்தர வேலையைக் கொடுத்து இருப்பார்.

    ReplyDelete
  2. ஜாதகம் பார்க்கத் தெரியாது என்பதால் ஜாதகம் அறிந்தவர்களின் பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா...

    ReplyDelete
  3. வணக்கம் குருஜி ,

    1. கும்ப லக்னத்திற்கு யோககாரகன் சுக்ரனும் vrgotthamam .
    , சந்திரனும் வர்கோத்தமம் பெற்றது மற்றும் கெஜ கேசரி யோகம் உள்ள ஜாதகம்.

    2. கேது தசா , சுகர தசா சுயபுத்தி வரை நிலையான வேலை இல்லை

    3. யோகாதிபதி சுகர தசையில் பத்தாம் இடத்தில உள்ள சந்திரன் புத்தியில் (சந்திரன் சுய வர்க்கம் 7 பரல்கள் ) நிலையான வலை கிடைத்தது

    சு. தயாநிதி அவியனுர்

    ReplyDelete
  4. வாத்தியார் அவர்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள்.
    "Astrology: Quiz: புதிர் 106: கேள்விக்கென்ன பதில்!"
    எதோ எனக்கு தெரிந்த சில விவரங்களை வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறேன்... தவறு இருந்தால் எனது தலையில் உங்களின் மோதிர விரல் அணிந்த கையால் குட்டி... எனக்கு புரியும்படி தெளிவு படுத்துங்கள்.

    # நீங்கள் குறிப்பிட்டிருந்த ஜாதகருக்கு கால சர்ப தோஷம் இருக்கிறது. 33 வயதிற்குப் பிறகுதான் சிறப்புநிலையை எட்ட முடியும்.

    # கும்ப லக்கினத்தில் சனியின் வீட்டில் சூரியனோடு மற்ற இரு கிரகங்களும் கிரக யுத்தத்தில் (சூரியனுக்கு 7 பாகைக்குள் இருப்பின்) குரு , புதன் நீசமாகும் வாய்ப்பு உள்ளது. புதன் பரிவர்த்தனை என்று பார்த்தால் சனியும் சூரியனும் எதிரிகள் ஆகவே பரிவர்த்தனை பெற்றும் பலனில்லை.

    # புதன் பரிவர்த்தனை பெறுவதால், புத-ஆதித்ய யோகம் முழுமையாக கிடைக்காமல் போகிறது. பரிவர்த்தனையால் குரு சனி இணைவு சண்டாள யோகமாக மாறும் நிலை.

    # தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குருவின் வீட்டில் மாந்தன் (குளிகன்) இருப்பது விதண்டா வாதம் செய்பவராகவும், பிடிவாத குணமுடையவராகவும் இருப்பார் அதுவே அவரது செயல் திறனை கெடுக்கும்.

    # எத்தனை படித்திருந்தாலும் சனியும் புதனும் பரிவர்த்தனை பெற்று, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவோடு சனி அல்லது பரிவர்த்தனை பெற்ற புதன் அவரது வேலை வாய்ப்பை கெடுப்பார், அதோடு கேது அவரை பதப்படுத்தி எதிலும் நிலைத்தன்மை அற்ற நிலையில் நல்ல அனுபவத்தை தருவார்.

    # திரிகோணத்தில், தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் தனது சொந்த வீட்டில் உச்சம் பெற்று ஜாதகருக்கு எதையும் தாங்கும் மன தைரியத்தை தருகிறார்.

    # கேந்திரிய மாத்துரு ஸ்தான சுக்கிரன் 12இல் மறைவு.

    # சுக்கிரன் வர்கோத்தமம் பெற்று, சுப பார்வை பெறாமலும் ஜாதகரின் விரய ஸ்தானத்தை உறுதிபடுத்தியுள்ளார். ஆகவே ஜாதகரின் கையில் காசு தங்காது. இருப்பினும் சூரியனுக்கு 12 இல் சுக்கிர- சுபகிரகம் அமைந்ததால் "சுபாவாசி யோகம்" ஏற்ப்படுவதால், வேலை சம்பாத்தியம் இல்லை என்றாலும் ஜாதகர் சுபவாசியாக இருப்பார். மேலும் இவருக்கு இருக்கும், பரிவர்த்தனையால் நீசபங்க ராஜ யோகமும், மேலும் கஜ கேசரி யோகமும் இதை உறுதி செய்கிறது. ஆகவே ஜாதகர் கால சர்ப தோஷம் இருக்கிற -33 வயதிற்கு பிறகு நல்ல நிலையை பெறுவார்.

    # கும்ப, ஸ்திர லக்ன காரரான இவருக்கு சுக்கிரன் பாதகாதிபதியாக அமைகிறார் ஆகவே "காசு பணம் துட்டு- கோவிந்தா கோவிந்தா என" உறுதியாகிறது

    # தொழில் மற்றும் லாபஸ்தானமான குருவின் வீட்டில் ராகு இருப்பதும் தொழில் வாய்ப்புக்கள் இல்லை என்பது தெரிகிறது

    # 6வது மறைவு வீட்டின் ரண, ரூன, ரோக ஸ்தான அதிபதி சந்திரன், 10வது வீட்டில் கர்ம ஸ்தானத்தில் செவ்வாயின் வீட்டில் நீச சந்திரனாக அமர்ந்து கஷ்டங்களை தருகிறார். (விருசிக ராசிக்கு நீச சந்திரன் பிறந்த வீட்டின் பெருமை கிடைக்காமல் போகும் )

    அன்புடன் கோகி என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.

    ReplyDelete
  5. கோவிலில் விளக்கு ஏற்றி அதை எடுத்து வைக்கும் போது அது கைதவறி கீழே விழுந்துள்ளது, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தயவு செய்து கூறவும்.

    ReplyDelete
  6. புதிர் 106:
    ஜாதகத்தின் சிறப்புகள்: ஜாதகர் 15 / 02 / 1974 ல் காலை பிறந்தவர்.
    கும்ப லக்னம். லக்னாதிபதி திரிகோணத்தில் 5 ஆம் இடத்தில் வக்ரம். குருவின் பார்வையில்.
    ஐந்தாம் அதிபதி புதன் (8 ஆம் அதிபதியும் கூட) லக்னாதிபதியுடன் பரிமாற்றம்.
    இரண்டுக்கும் 11க்கும் அதிபதியான குரு, ஏழாம் அதிபதி சூரியன், 5 & 8 ஆம் அதிபதி புதன் மூவரும் லக்னத்தில். குரு அஸ்தமனம்.
    யோகாதிபதி சுக்ரன் 12 ல்.
    சந்த்ரன் 10 ஆம் இடத்தில் நீச்ச வர்க்கோத்தமம்.
    சந்த்ரன், குரு, சூரியன், புதனுக்கு கேந்த்ரத்தில்.
    ராஹு 11 ஆம் வீட்டில் தனுசுவில் குருவின் வீட்டில். சனியின் பார்வையில்.
    மாந்தி இரண்டாம் வீட்டில். சனியின் பார்வை.
    அஷ்டவர்க பரல் – 1, 3, 5, 6, 8, 10, 11, 12 க்கு 25க்கு மேல். (10 ஆம் வீட்டிற்கு 35, 11 ஆம் வீடு 40). வீடுகள் 2 மற்றும் 7 க்கு பரல்கள் 20.
    கேள்வி 2: ஜாதகர் 20 ஆவது வயது வரை புதன் தசையில் படித்து முடித்தார். பின்னர் வந்த கேது தசை அவரை ஒரு நிரந்தர வேலையை கொடுக்காமல் 27 வயது வரை படுத்தியது. பின்னர் வந்த சுக்ர தசை சுக்ர புக்தி அவர் யோகாதிபதியாக இருந்தும் 12ல் இருந்ததாலும், சூரியன் புக்தி லக்னாதிபதிக்கு பகையானதாலும், சந்த்ர புக்தி அவர் நீச்ச வர்கோத்தமமாயிருப்பதாலும் பெரிதும் வேலையில் படித்த பின்னர் 10 வருடங்களுக்கு உதவவில்லை.
    கேள்வி 3: செவ்வாய் புக்தியில் அவர் 10 ஆம் அதிபதியாவதால் மேஷத்தில் அவர் வீட்டில் இருப்பதால் ஒரு நிரந்தர வேலையை கொடுத்தார்.
    நன்றியுடன்,
    க இரா அனந்தகிருஷ்ணன்

    ReplyDelete
  7. இலக்கினாதிபதியும் கர்மகாரகருமான சனி பகவான், 10ம் வீட்டிற்கு 8ல் மறைந்தார். உடன் கேது. 10ம் வீட்டு அதிபதியான செவ்வாய் ஆட்சி பலம் பெற்றும் 10ம் வீட்டிற்கு 6ல் மறைந்தார். 10ம் வீட்டிற்கோ 10ம் வீட்டு அதிபதிக்கோ சுபர் பார்வை இல்லை. 10ம் வீட்டில் தேய்பிறை சந்திரன் நீசத்தில். படித்து முடித்தவுடன் இவருக்கு கேது தசை தொடங்கி இருக்கும். அதன் பின்னர் நடந்த சுக்கிர தசையில் செவ்வாய் புக்தியில் ஜாதகருக்கு நிரந்தர வேலை கிடைத்திருக்கும்.

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்
    புதிரின் 106 பதில்

    1......ஜாதகத்தின் முக்கியமான சிறப்பு என்ன?
    கும்ப லக்ன யோக்காரகன் சுக்கிரன் வர்கோத்தம்ம் அதிக வலிமை.
    செயல் வீரர் செவ்வாய் ஆட்சி,
    11 ல் ராகு உகந்த இடம் ,
    மனக்காரகன் சந்திரன் வர்கோத்தம்ம்,

    2.....ஜாதகருக்கு படித்து முடித்தவுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தமான வேலை கிடைக்கவில்லை. ஆண்டுக்கு ஒரு வேலை என்று மாறிக் கொண்டே இருந்தார். அதற்கு என்ன காரணம்?
    தசாபுத்தி யும் கர்மகாரகன் சனி கேது கூட்டணி, அம்சத்தில் சனி பகை வீட்டில், மாந்தி கூட்டணிதான் காரணம் ஐயா

    சனி , புதன் ( நீசமாகியுள்ளார் ), கேது திசை வரை அலைச்சல் தான்
    3......சுக்கிர திசை சுயபுக்தியில் வேலை நிரந்த மாகியுள்ளது.
    நன்றி
    கண்ணன்

    ReplyDelete
  9. வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்

    1) ஜாதகம் கால சர்ப்ப தோஷம் அமைந்த ஜாதகம் .
    சந்திரன் தவிர அனைத்து கிரகங்களும் ராஹு கேது பிடியில் .
    ஆனால் கிரகங்கள் கேதுவை நோக்கி செல்கின்றன .
    அதனால் 32 வயதுக்கு மேல் யோகமாக மாறும் . (அ) லக்ன பரல்கள் எத்தனையோ அத்தனை வயதுக்கு மேல் யோகமாக மாறும் .
    2) 6 க்குடைய வில்லன் சந்திரன் 10ம் இடத்தில அமர்ந்ததனால் வேலையில் நிரந்தரமின்மை . ஆனால் 10 க்குடைய செவ்வாயே 10 ம் இடத்தை பார்ப்பது பிளஸ் பாயிண்ட்
    3)சுக்ரன் 12 ல் மறைந்தாலும் வர்கோத்தமம் .
    அவர் 4க்கும் 9க்கும் (ஒரு கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் )அதிபதியான ராஜயோகாதிபதி
    மேலும் தன்னுடைய சுகஸ்தானத்துக்கு(4 ம் வீட்டிற்கு ) பாக்கியத்திலும்(9 லிலும் ) தன்னுடைய பாக்கிய ஸ்தானத்துக்கு(9 ம் வீட்டிற்கு ) சுகஸ்தானத்திலும்(4 லிலும் ) உள்ளார்
    10 க்குடையவரான செவ்வாய் தன்னுடைய 10 ம் வீட்டை 8 ம் பார்வையாக பார்க்கிறார் ஆகையால் சுக்ரனின் தசையில் செவ்வாய் புத்தியில் வேலை நிரந்திரம் ஆகியிருக்கும்

    ஜெ.சுதர்சன் குமார் , செங்கல்பட்டு

    ReplyDelete
  10. SIR, THE VENUS AND MOON BOTH VARGOTHAM , THE SIX LORD MOON IS IN NEECHAM AND THE YOGAKARAN VENUS IS IN 12TH PLACE AND HE SAW THE SIX PLACE SO LOT OF STRUGGLE IN JOB CARRIER AFTER THE RAGU BUTHI HE GOT A BETTER JOB BECAUSE THE KARAKAN SANI ASPECT THE RAGU

    ReplyDelete
  11. Dear sir,

    1. good points are
    i) lord of second,eleventh house guru is sitting in lagnam
    ii)lagna lord is placed fifth house
    iii) lagna lord and fifth house lords are exchanged their house
    iv) seventh lord is sitting in lagna along with mercury which gives putha adipathiya yogam
    v) Ragu is sitting in eleventh house
    Vi) Third place lord mars is sitting in his own sign and it gives lot of confident
    2.Answer for second question
    i) he must have completed his education during the start of kethu dasa ,Kethu dasa never gives good result during his period hence he got temporary job
    ii) Next period venus has given some trouble during his own sub period and after that sun sub period or moon sub period would have good permanent job.

    ReplyDelete
  12. புதிர் எண் 106 கேள்விக்கென்ன பதிலுக்கான‌ அலசல்:

    வணக்கம் அய்யா!
    கும்ப லக்கினம், விருச்சிக ராசி ஜாதகர்.
    1) ஜாதகத்தின் முக்கியமான அம்சம் என்ன?
    ஐந்தாம் அதிபதி புதனும் 7ம் அதிபதி சூரியனும் லக்கினத்தில் அமர்ந்து வலுவான ராஜயோகத்தை கொடுக்கின்றனர்.அது அவருக்கு நல்ல படிப்பை கொடுத்தது.லக்கினாதிபதி சனி ஐந்தில் அமர்ந்து, அதன் அதிபதி புதனுடன் பரிவர்த்தனையிலுள்ளார்.

    2)ஜாதகருக்கு படித்து முடித்தவுடன் 10 ஆண்டுகள் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை.அதற்கு என்ன காரணம்?
    1.ஆறாம் அதிபதி சந்திரன் நீசமாகி 10மிடத்தில் அமர்ந்தது.
    2.ஜாதகரின் படிப்பு முடிந்த போது அவருக்கு கேது தசை நடப்பில் இருந்தது. பிறகு வந்த‌ சுக்கிர தசை,சந்திர‌ புத்தி முடியும் வரையில் (13 வருடங்கள்)அவருக்கு நிரந்தரமான வேலை அமையவில்லை. தவிர யோககாரகனும் தசா நாயகனுமான‌ சுக்கிரன் லக்கினத்திற்கு 12ல் மறைந்தது.

    3) பிற்காலத்தில் அவருக்கு நிரந்தரமான வேலை கிடைத்தது. அது எப்போது?
    சுக்கிர தசை, செவ்வாய் புத்தியில் 33 வயதிற்கு மேல் வேலை நிரந்தரமானது. 10ம் அதிபதி செவ்வாய் 3ல் அமர்ந்து தன் 8ம் தனிப்பார்வையில் 10மிடத்தை பார்ப்பது ஒரு காரணம்.

    ஒரு சந்தேகம். அவருக்கு திருமணமாயிற்றா?ஜாதகரின் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது? தெரிந்திருந்தால் பதில் சொல்லவும்.

    Over to Vaathiyaar!



    ReplyDelete
  13. சுதர்சன்,
    காஞ்சிபுரம்.

    1. லக்னாதிபதியும் 5ஆம் அதிபதியும் பரிவர்தனையில் உள்ளது.செவ்வாய் ஆட்சி வீட்டில் உள்ளது.லக்கனத்தில் குரு.(venus and moon in same rasi at both amsam and rasichakram).
    2. சனி ஆரம்ப தசை(3yr), அடுத்து முறையே புதன் தசை(17yrs), அடுத்து வந்த கேது தசை(7yrs) காரணமாக வேலையில் தடுமாற்றம் இருந்திருக்கும்.
    3.பிறகு வந்த சுக்கிர தசையினால் வேலை மாற்றம் நின்றிருக்கும். சுக்கிரன் ஜாதகத்தில் 12ஆம் அதிபதி. ஆகவே சுக்கிர தசையில் சந்திர (அ) செவ்வாய் புக்தியில் வேலை மாற்றம் நின்றிருக்கும்.

    ReplyDelete
  14. DOB 15.02.1974 Place of Birth Chennai Time 7 AM

    In fifth place Kethu. Sanniyasi Yokam or Raja Yokam.
    Mars is in Own house.
    Mercury and Saturn are in Parivarthanai yokum.
    Jupiter is in Lakna. So this Native is a blessed One.
    Venus and Moon is in Varkothamam.

    Moon is in Neecham and in 10th place. Jupiter is also in Asthankatham.
    Though the 10th place owner Mars is in his own house but the neecha Moon spoiled his opportunity to get the standard job in time.
    Karmakaragan Saturn is also in Vakkiram.
    10th Bhavgam got 34 Parals.
    So delay in getting good job.

    But got permanent job during sukkira Thisa Moon Bukthi

    Santhanam, Salem

    ReplyDelete
  15. வணக்கம் QUIZ 106 ; (முதலில் பதிவு இட்டதை நீக்கவும். கை தவறுதலாக ஏற்பட்டது மன்னிக்கவும்)

    ஜாதகர் கும்ப லக்கினம், அனுஷ நட்சத்திரம் , விருச்சிக ராசி.
    லக்கினாதிபதி சனி , கும்ப லக்கின யோக காரர்கள் ; சுக்கிரன்

    1. முக்கியமான சிறப்பு ;
    1ம் வீட்டு அதிபதியும் (சனி) , 5ம் வீட்டு திருகோண அதிபதியும் (புதன்) பரிவர்த்தனை . பலன்; ஜாதகர் புகழ் பெற்று விளங்குவார் , மகிழ்ச்சியுடன் இருப்பார்.

    [ வாத்தியார் குறிப்பு: - ஒரு வீட்டின் பலம், வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருத்தல். இந்த விதிதான் இருக்கும் விதிகளில் அதீத பவரானது. உங்கள் மொழியில் சொன்னால் சூப்பர் பவரானது. மற்றதெல்லாம் அதற்கு அடுத்ததுதான். ]

    அடுத்த சிறப்பு : லக்கினத்தில் குரு அமர்ந்து 9ம் பார்வையால் பாக்கியஸ்தான வீட்டை பார்ப்பது . 5ம் பார்வையால் புத்திர ஸ்தான வீட்டையும், 7ம் பார்வையால் களத்திரஸ்தானத்தையும் பார்ப்பது விசேஷம் .

    ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12 ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. ஆகையால் சிறப்பு கிடையாது. (இந்த ஜாதகத்தில் புதன் 8ம் வீட்டு அதிபதி)

    2. நிரந்திர வேலை கிடைக்கவில்லை காரணம்:

    ஜாதகருக்கு 3 வயதில் புதன் தசை ஆரம்பம் , 20 வயதில் கேது தசை ஆரம்பம் , 27 வயதில் சுக்கிரதசை ஆரம்பம்.47 வயதில் சூரிய தசை ஆரம்பம்.

    1. 6ம் வீட்டு அதிபதி சந்திரன் 10ம் வீட்டில் அமர்ந்தது தான் முக்கிய காரணம் .
    2. 10ம் வீடு விருச்சிகம் . அதில் சந்திரன் நீசம். நவாம்சத்திலும் சந்திரன் நீசம்.
    3. 27 வயது முதல் 47 வயது வரை சுக்கிர தசை. சுக்கிரன் 12ல் விரய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார் . அவர் பாக்கிய ஸ்தானத்தின் அதிபதி. 12ம் வீடு பாப கர்தாரி தோஷம் (ஒரு பக்கம் ராகு, மறு பக்கம் சூரியன் )
    4. 5ம் வீட்டில் சனி இருப்பதால் அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் மாறி மாறி வரும்.
    சனியும் கேதும் கூட்டு 5ம் வீட்டில் இருப்பதால் துறவு மன பான்மை ஏற்படும் . சன்யாச யோகம்.

    3. நிரந்திரமான வேலை கிடைத்தது :

    சுக்கிர தசை ராகு புக்தியில் .
    11ம் வீட்டில் ராகு - பலம் பொருந்திய வீடு. (41 பரல்) வளம் உடைய வாழ்க்கை கிடைக்கும் , சுகங்களையும் சௌகரியங்களையும் அனுபவிப்பான். தொழில் காரகன் சனியின் பார்வை ராகுவின் மீது உள்ளது.
    அல்லது
    சுக்கிர தசை குரு புக்தியில்:
    லக்கினத்தில் குரு அமர்ந்து 9ம் பார்வையால் பாக்கியஸ்தான வீட்டை பார்ப்பதால் . குருவின் 5ம் பார்வை தொழில் காரகன் சனியின் மீது உள்ளது.

    யோகங்கள்: சங்க யோகம், பர்வத யோகம்,, பாச யோகம் .

    ஜாதகத்தில் செவ்வாய் மேஷ ராசியில் உள்ளது கம்ப்யுட்டரில் செவ்வாய் ரிஷப ராசியில் உள்ளது. (14 march 1974 5.45.02 காலை இடம்: Chennai)
    மற்ற எல்லா ராசியும் சரியாக உள்ளது.

    வாத்தியார் தவறு செய்யமாட்டார் என்ற அடிபடையில் கம்புயுட்டர் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளவில்லை .

    -------------------------------------------------------------------------------

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com