மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.7.15

நகைச்சுவை: "தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தாய்?”


நகைச்சுவை: "தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தாய்?”

------------------------------------------------------------------------------------
1
எதற்குத்தான் அவசரம் என்பது கணக்கில் இல்லையா?

கணவர் தில்லியில் இருந்து சண்டிகரில் இருக்கும் மனைவிக்கு போன் போடுகிறார். எதிர் முனையில் வேலைக்காரர்தான் போனில் தொடர்பு
கொள்கிறார். இருவருக்கும் நடந்த உரையாடல்:

கணவர்: போனை என் மனைவியிடம் கொடு!


வேலையாள்: அவர் தன் கணவருடன் உள் அறையில் இருக்கிறார்


கணவர்: நான்தானப்பா கணவன்


வேலையாள்: நான் இப்போது என்ன செய்யட்டும் அய்யா?


கணவர்: இரண்டு பேரையும் இரக்கமில்லாமல் கொன்று விடு. உனக்கு நான் ஐம்பது லட்ச ரூபாய் பணம் தருகிறேன். சொன்னதை உடனே செய்!


அதை உடனே செய்து முடித்துவிட்டு வந்த வேலையாள் தொடர்ந்து பேசுகிறார்: செத்துக் கிடக்கும் உடல்களை என்ன செய்ய வேண்டும்?


கணவர்: வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் அவைகளை வீசிவிட்டு, நீ உன் சொந்த ஊருக்கு ஓடி விடு!


வேலையாள்: நம் வீட்டில் நீச்சல்குளம் எதுவும் இல்லையே அய்யா!


கணவர்: இது 45678922 என்ற எண்தானே?

வேலையாள்: இல்லை. 45688922

கணவர்: Oh Sorry, Wrong Number
😂😂😂😂

-------------------------------
2
”ஆஃபரேசன் தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தாய்?”

”நர்ஸ் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். உணர்ச்சி வசப் படாதீர்கள். பயப்படாதீர்கள். தைரியமாக இருங்கள். இது சிறு அறுவை
சிகிச்சைதான்”

”ஆமாம், அவள் சொன்னதில் என்ன தவறு? உனக்கு ஏன் இத்தனை பயம்?”

”அவள் சொன்னது டாக்டரிடம்”
---------------------------------------------
3
கொஞ்ச நேரம் சிரிப்போம்

Sundar: வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

Jayakumar: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

Sundar: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத்
தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

Jayakumar: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

Sundar: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த
சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

Jayakumar: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும்
அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

Sundar: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி
விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

Jayakumar: எப்படிச் சொல்றீங்க?

Sundar: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத்
தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள்
காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.
இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

Jayakumar: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர்
இல்லை.என் மனைவி போட்ட காபி.

Sundar: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

Jayakumar: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!
---------------------------------
இந்த மூன்றில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26 comments:

  1. மூன்றும் முத்துக்கள்.

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்
    நகைச்சுவை கள் அருமை
    அதில்.

    ///குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.! ////

    காலையில் காபி குடிக்கும் போது நினைத்து நினைத்து சிரிப்பு வந்த்து.

    சூப்பர் ஐயா.:):)
    கண்ணன்.

    ReplyDelete
  3. #3 Coffee!! Since its in NSK style!


    Another one:

    மனைவி: ராத்திரி மேகி ஓகே'வா ?
    கணவன்: அது சாப்பிட கூடாதாம் ..பேப்பர் பாக்கலையா?
    மனைவி: ஐயோ..சரி உப்மா பண்ணவா ?
    கணவன்: போற உசுரு மேகிலேயே போகட்டும்...

    ReplyDelete
  4. One small request. When time permits please write about a person's Freewill Vs Fate (Jothidam).

    If everything WILL happen according to Fate, then what does or how much of a person's free will would influence.

    I have seen people who does absolute hard work, but luck never came to them. Also seen people got succeed after their effort. So on questioning 'Theivathaal aagatheninum muyarchi than mei varutha kooli tharum', I am not sure on absolute or obselete answer.

    ReplyDelete
  5. இரண்டாவதுதான் உண்மையான யார் மனமும் புண்படாத நகைச்சுவை.

    ReplyDelete
  6. ஒரு சிப் குடிக்கனுமா பார்த்தாலே தெரியாதா
    ஓ.. அதனால் தான் நிறையா டீ கடை இருக்கா




    ReplyDelete
  7. சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் சூப்பர்...

    ReplyDelete
  8. சார், நீங்க ஷேர் பண்றீங்களா?
    .
    இல்ல...
    .
    உங்களுக்கு ஷேர் பண்ற ஐடியா இருக்கா?
    .
    இருக்கு.
    .
    எவ்ளோ பண்ணலாம்ன்னு நினைக்குறீங்க?.
    .
    முதல்ல ஒரு 10 ஆவது பண்ணனும்.
    ...
    சூப்பர் சார்.. ஒரு பத்தாயிரம் எங்க அக்கவுண்ட்ல போட்டீங்கன்னா உங்களுக்கு யூசர் நேம், பஸ்வோர்டு தரோம்.. அதே வெச்சு நீங்க வீட்ல இருந்தே ஷேர் பண்ணலாம்..
    .
    அமௌன்ட் ரொம்ப ஜாஸ்தி சொல்லுறீங்களே மேடம்...

    வயர் சேர் பண்றதுக்கு, 30 ரூவாய்க்கு ஊசியும், 300 ரூவாய்க்கு வயரும் வாங்கிட்டேன்......... என் பொண்டாட்டி மகா சோம்பேறி... அத வீட்ல இருந்து டிவி பார்த்துகிட்டே பிண்ணி குடுன்னு சொன்னா முடியாதுன்னு சொல்றா!!!... அவ என்னைக்கு பிண்ணி குடுக்கறது, நான் என்னைக்கு அத வித்து பணக்காரன் ஆவுறது...
    நீங்களே சொல்லுங்க.... ஆமா! வயர் கூடை, வயர் ஷேர் பின்னுறதுக்கு எதுக்கு யூசர் நேம், பஸ்வோர்டு.... புரிஞ்சிரிச்சு!!!... நீங்க பெரிய சைஸ்ல கூடை பின்னுவீங்க போல.... நான் இப்பதான் சின்ன லெவல்ல பண்றேன்... பெருசா பண்றப்ப சொல்றேன்....
    ...
    டிங்...


    --
    Regards,
    B.Lakshmi Narayanan
    Tuticorin

    ReplyDelete
  9. மூன்றுமே நன்று. அதிலும் தற்போதய டாக்டர்களை எண்ணும்போது இரண்டாவது நகைச்சுவை மிகவும் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  10. நகைச்சுவை மிகவும் அருமை குருஜி அவர்களே.. பாராட்டுகள்.!!! எத்துனை ஆறுதல் சொன்னாலும் என் மனம் என் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறது.என்ன செய்ய.. ஒரு முறை எனது ஜாதகத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள்.கேள்விகள் நான் கேட்கவில்லை நீங்களே சொல்லுங்கள் அதுவே போதும்.அதிலும் இரண்டு மட்டும் 1. வேலை 2. மனைவி தாய். நேரம் போதாது என்று மீண்டும் ஒரு முறை சொல்ல மாட்டிர்கள் என் நம்புகிறேன்.

    மனதில் நம்பிக்கை அதிகமாக இருக்கும்போது எதையும் கவலைப்படாமல் துணிச்சலுடன் செய்ய முடிகிறது. நம்பிக்கை இல்லாத போது சின்ன விசயத்திற்கு கூட அஞ்ச வேண்டியுள்ளது. எதையும் ஒரு வெறுமையாய் பார்க்க தோன்றுகிறது.

    I HOPE YOU MAY NOT REJECT MY OBLIGATION. SO KINDLY HELP TO ME PLEASE...

    ReplyDelete
  11. /////Blogger SELVARAJ said...
    மூன்றும் முத்துக்கள்./////

    நல்லது. நன்றி செல்வராஜ்

    ReplyDelete
  12. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    நகைச்சுவை கள் அருமை
    அதில்.
    ///குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.! ////
    காலையில் காபி குடிக்கும் போது நினைத்து நினைத்து சிரிப்பு வந்தது.
    சூப்பர் ஐயா.:):)
    கண்ணன்.///////

    ஆமாம். கடைசி வரியிலும் சிரிப்பு உள்ளது அதன் சிறப்பு. நன்றி!

    ReplyDelete
  13. /////Blogger selvaspk said...
    #3 Coffee!! Since its in NSK style!
    Another one:
    மனைவி: ராத்திரி மேகி ஓகே'வா ?
    கணவன்: அது சாப்பிட கூடாதாம் ..பேப்பர் பாக்கலையா?
    மனைவி: ஐயோ..சரி உப்மா பண்ணவா ?
    கணவன்: போற உசுரு மேகிலேயே போகட்டும்.../////

    அடடா, பாவம் அந்த மனைவி!

    ReplyDelete
  14. ///////Blogger selvaspk said...
    One small request. When time permits please write about a person's Freewill Vs Fate (Jothidam).
    If everything WILL happen according to Fate, then what does or how much of a person's free will would influence.
    I have seen people who does absolute hard work, but luck never came to them. Also seen people got succeed after their effort. So on questioning 'Theivathaal aagatheninum muyarchi than mei varutha kooli tharum', I am not sure on absolute or obselete answer.//////

    நான் முன்பு ஒரு பெரிய கட்டுரை ஒன்றை எழுதினேன். அதன் சாராம்சம்: நீ மாட்டை வைத்துப் பிழைப்பு நடத்த வேண்டுமென்றால் மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்துவாய். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை விதி நிர்ணயிப்பதில்லை. அது 4 மாடா, 40 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது உன் கையில்தான் இருக்கிறது. அங்கேதான் முயற்சி வேலை செய்யும். அதைத்தான் பெரியவர்கள் முயற்சி திருவினையாக்கும் என்பார்கள்!

    ReplyDelete
  15. /////Blogger kmr.krishnan said...
    இரண்டாவதுதான் உண்மையான யார் மனமும் புண்படாத நகைச்சுவை.//////

    நல்லது. உங்கள் தெரிவைத் தெரியப் படுத்தியதற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. /////Blogger நாமக்கல் சிபி said...
    Anaiththum Arumai!/////

    அடடா, சிபியாரா? வாருங்கள் சுவாமி உங்கள் வருகை நல்வருகையாகட்டும். எத்தனை மாதங்களாயிற்று உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து. நன்றி நாமக்கல் சிபியாரே!

    ReplyDelete
  17. //////Blogger Visu Iyer said...
    ஒரு சிப் குடிக்கனுமா பார்த்தாலே தெரியாதா
    ஓ.. அதனால் தான் நிறையா டீ கடை இருக்கா //////

    என்ன சொல்லவருகிறீர்கள் வேப்பிலையாரே?

    ReplyDelete
  18. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் சூப்பர்...///////

    நல்லது. நன்றி லக்‌ஷ்மிநாராயணன்!

    ReplyDelete
  19. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    சார், நீங்க ஷேர் பண்றீங்களா?.
    இல்ல....
    உங்களுக்கு ஷேர் பண்ற ஐடியா இருக்கா?.
    இருக்கு..
    எவ்ளோ பண்ணலாம்ன்னு நினைக்குறீங்க?..
    முதல்ல ஒரு 10 ஆவது பண்ணனும்....
    சூப்பர் சார்.. ஒரு பத்தாயிரம் எங்க அக்கவுண்ட்ல போட்டீங்கன்னா உங்களுக்கு யூசர் நேம், பஸ்வோர்டு தரோம்.. அதே வெச்சு நீங்க வீட்ல இருந்தே ஷேர் பண்ணலாம்...
    அமௌன்ட் ரொம்ப ஜாஸ்தி சொல்லுறீங்களே மேடம்...
    வயர் சேர் பண்றதுக்கு, 30 ரூவாய்க்கு ஊசியும், 300 ரூவாய்க்கு வயரும் வாங்கிட்டேன்......... என் பொண்டாட்டி மகா சோம்பேறி... அத வீட்ல இருந்து டிவி பார்த்துகிட்டே பிண்ணி குடுன்னு சொன்னா முடியாதுன்னு சொல்றா!!!... அவ என்னைக்கு பிண்ணி குடுக்கறது, நான் என்னைக்கு அத வித்து பணக்காரன் ஆவுறது...
    நீங்களே சொல்லுங்க.... ஆமா! வயர் கூடை, வயர் ஷேர் பின்னுறதுக்கு எதுக்கு யூசர் நேம், பஸ்வோர்டு.... புரிஞ்சிரிச்சு!!!... நீங்க பெரிய சைஸ்ல கூடை பின்னுவீங்க போல.... நான் இப்பதான் சின்ன லெவல்ல பண்றேன்... பெருசா பண்றப்ப சொல்றேன்....
    ...
    டிங்...
    --
    Regards,
    B.Lakshmi Narayanan
    Tuticorin/////

    இதுவும் நன்றாகத்தான் உள்ளது. நன்றி!

    ReplyDelete
  20. //////Blogger asbvsri said...
    மூன்றுமே நன்று. அதிலும் தற்போதய டாக்டர்களை எண்ணும்போது இரண்டாவது நகைச்சுவை மிகவும் நன்றாக இருந்தது./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. ////Blogger rmn said...
    first one/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  22. //////Blogger C.P. Venkat said...
    நகைச்சுவை மிகவும் அருமை குருஜி அவர்களே.. பாராட்டுகள்.!!! எத்துனை ஆறுதல் சொன்னாலும் என் மனம் என் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறது.என்ன செய்ய.. ஒரு முறை எனது ஜாதகத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள்.கேள்விகள் நான் கேட்கவில்லை நீங்களே சொல்லுங்கள் அதுவே போதும்.அதிலும் இரண்டு மட்டும் 1. வேலை 2. மனைவி தாய். நேரம் போதாது என்று மீண்டும் ஒரு முறை சொல்ல மாட்டிர்கள் என் நம்புகிறேன்.
    மனதில் நம்பிக்கை அதிகமாக இருக்கும்போது எதையும் கவலைப்படாமல் துணிச்சலுடன் செய்ய முடிகிறது. நம்பிக்கை இல்லாத போது சின்ன விசயத்திற்கு கூட அஞ்ச வேண்டியுள்ளது. எதையும் ஒரு வெறுமையாய் பார்க்க தோன்றுகிறது.
    I HOPE YOU MAY NOT REJECT MY OBLIGATION. SO KINDLY HELP TO ME PLEASE...//////

    நம்பிக்கையை மட்டும் எப்போதும் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். மற்றதெல்லாம் பின்னால் தானாக ஓடி வரும்!

    ReplyDelete
  23. /////Blogger Spalaniappan Palaniappan said...
    3/////

    நல்லது. நன்றி பாரீஸ் பழநியப்பன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com