மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.7.15

Half Quiz: பாதி புதிர்: உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது!

Half Quiz: பாதி புதிர்: உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது!

Quiz.89

3.7.2015

தலைப்பு: படிப்பின்மை

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகன் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. உங்கள் மொழியில் சொன்னால் ஸ்கூல் டிராப் அவுட்
ஜாதகன் படிக்க முடியாமல் போனதற்கு ஜாதகப்படி என்ன காரணம்?காரணத்தை எழுதுங்கள்!


ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

37 comments:

 1. quiz 89 answer.

  1. 2ம் இடத்தில் கேது பகை பெற்றது.
  2. 2ம் அதிபதி லக்கினத்திற்கு 6ல் நீசம் பெற்றது.
  3. லக்னாதிபதி மற்றும் வித்யாகாரகன் லக்கினத்திற்கு மாரக இடத்தில் அமர்ந்து அட்டமாதிபதி சேர்க்கை பெற்றது.
  4. 2ம் இடத்திற்கு ராகுவுடன் இணைந்த மாரகாதிபதி நேர்பார்வை.

  எம். திருமால்.

  ReplyDelete
 2. Quiz.89 ற்கான பதில்..

  வணக்கம் வாத்தியாரே!

  மிதுன லக்னம், படிப்பு ஸ்தானமான 4ம் அதிபதி புதன் அந்த இடத்திற்கு 8ல் மறைந்து நீட்ச சனியுடன் சேர்ந்து கெட்டு விட்டார், மேலும் அதன் மீது 6ம் அதிபதி வில்லன் செவ்வாயின் பார்வை, பள்ளி படிப்பை கைவிட்டார்.


  அனுபவ கல்வி அதிபதி 5ம் அதிபதி சுக்கிரனும் அந்த இடத்திற்கு 6ல் மறைந்து விட்டார். அதுவும் இல்லாமல் போயிற்று.


  அன்புள்ள மாணவன்,
  பா. லக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி.

  ReplyDelete
 3. 1) கல்விக்குக் காரகனும், ஸ்தானாதிபதியுமான புதன், நாலுக்கு எட்டாம் இடமான 11-ஆம் இடத்தில்- மூன்று மற்றும் அட்டமாதிபதிகளுடன் கூடி நின்றது - இரண்டு சுபாவ பாபிகளின் கூட்டணிக்கு நடுவில்.
  2) அத்தகைய புதனை, உச்சனான அவரின் பகையாளி செவ்வாய் பார்த்தது.
  3) குருவானவர், ஆறில் மறைந்தது.
  4) வாக்குஸ்தானத்தில் நின்ற கேதுவையும் உச்ச செவ்வாய் நோக்கியது. (பலவீனமான குரு பார்வை உதவி செய்யவில்லை)
  5) கற்கும் காலத்தில் வந்த அட்டமாதிபதி (அல்லது) பாதிக்கப்பட கல்வி ஸ்தானாதிபதியின் தசை படிப்பிற்குத் தடா போட்டது.
  6) கல்விஸ்தானத்தைப் பார்க்கும் உச்சனான விரைய ஸ்தானாதிபதி சுக்கிரன், படிப்பில் நாட்டமில்லாமல் செய்தது.
  7) வாக்குஸ்தானாதிபதி நீச்சமாகிப் போனது.

  ஆகிய காரணங்கள், ஜாதகரை பள்ளி செல்லவிடாமல் செய்து விட்டன.
  ஆனாலும் மூன்று உச்ச கிரகங்கள், நிபுண யோகம், சனியின் நீசபங்கம், கஜகேசரி போன்றவற்றால் ஜாதகருக்கு உன்னத வாழ்க்கை.

  ReplyDelete
 4. லக்கினாதிபதியும் நான்காம் இடத்திற்குரியவனுமாகிய புதன் எட்டு ஒன்பதுக்குரிய சனியுடனும் மூன்றாமிட அதிபதி சூரியனுடனும் கூட்டு. மேல் படிப்புக்குரிய ஒன்பதாமிட சனி நீச்சம். மூன்றாம் அதிபதி சூரியன் உச்சம்.

  நான்காமிட புதன் நான்காம் வீட்டிற்கு எட்டாம் இடத்தில். இது பள்ளீப்படிப்பையும் கெடுத்து விட்டது.

  சனி, சூரியன் கூட்டு லக்கினாதிபதியையும் நான்காம் அதிபதியையும் (புதன்) கெடுத்து விட்டது.
  ஒன்பதாம் இடத்து சனி ஒன்பதாம் இடத்திற்கு மூண்றாம் வீட்டில். இது மேல் படிப்பையும் கெடுத்துவிட்டது.

  மேலும் மன காரகன் சந்திரன் ஆறில் நீச்சம்.

  குருவும் நீச்சம். எனவே பலனில்லை.

  ReplyDelete
 5. Answer to Quiz.89

  ஆரம்ப கல்வி 4 ஆம் இடம்.4 ஆம் அதிபதி 4 க்கு எட்டு மற்றும் எட்டாம்
  அதிபதியாகிய நீச்சமான சனி உடன்.

  மற்றும் 12ஆம் அதிபதயின்(விரயஸ்தான அதிபதி) பார்வை.

  மு.சாந்தி

  ReplyDelete
 6. kethu 2nd house, 2nd house owner kethu in 6th place and 4th house house owner budhan 8th from 4th house so discontinue his studies.

  ReplyDelete
 7. வணக்கம் ஐயா .

  மிதுன லக்னத்திற்கான நான்காம் ஆதி புதன் இயற்கை பாவிகளான அஷ்டமாதி சனி மற்றும் மூன்றாம் ஆதியான சூரியன் உடன் சேர்க்கை பெற்றுள்ளது .

  இரண்டாம் ஆதி சந்திரன் விருச்சிகத்தில் நீசம் மற்றும் பாதகாதிபதி குருவுடன் சேர்க்கை .

  மிதுன லக்னத்திற்கு ஆறாம் அதிபதி செவ்வாயின் உச்ச பார்வை கல்விகாரகன் புதனுக்கு .

  அதனால் தான் ஜாதகர் படிக்கவில்லை .

  நன்றி ஐயா .

  ReplyDelete
 8. 1. Elementary Education is given by 2nd house and the owner of the second house who is in Neecha Bangam and in 6th place to Laknam.
  2. Neecham Bangam is like a handicapped Graham and thus the Chandiran failed to give the benefits of the second house as he is the owner of the house.
  3. 2nd house spoiled by the presence of Kethu and aspect of Ucha Sevvai who is also associated with Raghu.
  4. Karagan Budhan is in Asthangatham by Suriyan and also in Vakkiram.
  So the connected 2nd House is spoiled and the Karagan is also spoiled and thus the native could not complete his education.

  ReplyDelete
 9. இரண்டில் கேது. இரண்டுக்குரிய சந்திரன் ஆறில் மறைவு. குருவும் ஆறில் மறைவு. இது போதாதா படிப்பை ஒரு வழியாக்க.

  ReplyDelete
 10. Primary education is seen from 2nd bhavam
  Second lord debliated in 6th house,
  Ketu in second house
  Exalted 6th lord Mars and rahu aspecting second house
  affecting early education,person will be a school dropout

  ReplyDelete
 11. வணக்கம் ஐயா..

  கல்வி காரகன் மற்றும் நான்காமிட அதிபதியுமான‌ புதன், 4ம் இடத்துக்கு 12ம் இடமான மூன்றாமிட‌ அதிபதி சூரியனால் அஸ்தமனமாகி விட்டான். அதுவுமில்லாமல் எட்டாமிட அதிபதி சனியுடன் கூட்டணி போட்டுள்ளான். குருவும், நீசமான மனகாரன் சந்திரனும் ஆறாம் இடத்தில் மறைந்துள்ளனர்.

  சரியா ஐயா?

  ReplyDelete
 12. அய்யாவவிற்க்கு வணக்கங்கள்.
  புதிர் விடை Q-33, 31-12-2013 & 1/01/2014 ல் தாங்களே விடையும் அளித்துள்ளீர்கள்.
  நன்றியுடன்,
  -பொன்னுசாமி.

  ReplyDelete
 13. தசா இருப்பு கொடுக்காததால் சரியான ஜாதகத்தைக் கணிக்க முடியவில்லை.

  1.நான்காம் அதிபன் புதன் தன் வீட்டிற்கு எட்டில் மறைந்து, 2.லக்கினத்திற்கு எட்டாம் அதிபதி சனியால் பாதிக்கப்பட்டு,3. சூரியனால் அடிவாங்கி,4, செவ்வாயால் நான்காம் பார்வையாகப் பார்க்கப்பட்டு கெட்டுவிட்டதால் படிப்பு வ‌ரவில்லை.

  செவ்வாய் சனி தைன்யபரிவர்தனையும், வாக்கு ஸ்தான கேதுவும் எரியும் கொள்ளியில் எண்ணை ஊற்றின.

  ReplyDelete
 14. SIR,1. THE MIDDLE EDUCATION THAT IS SECOND PLACE THE LORD MOON IS IN 6TH PLACE IS IN NEECHAM
  2. THE EDUCATION PLACE THAT IS 4TH PLACE THE 4TH LORD BUDHAN IS IN 8TH PLACE FROM 4TH AND HE IS IN BOTH SIDE BAD PLANNET
  3. THE 9TH PLACE THAT IS BAKASTHANAM SANI IS IN NEECHAM, AND GURU IS 7TH LORD IS IN 6TH PLACE THAT IS 12TH PLACE FROM 7TH SO THESE FACTORS ARE AFFECTING HIS EDUCATION LIFE.

  ReplyDelete
 15. 1. லக்னாதிபதி, மற்றும் 4 ஆம் இடத்துக்கு உரிய புதன்,4 க்கு 12 ஆம் அதிபதியான( 4 ஆம் வீட்டுக்கு விரயம்), உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்க்கை பெற்றார்.

  2.உடன் நீச்சம் பெற்றசனி( 8 ஆம்வீட்டிற்கு உரியவர்)புதனை த்ழுவுகிறார்

  3 .கூட்டனியை உச்சம் பெற்ற செவ்வாய் பார்க்கிரார்

  முடிவு: சனி, செவ்வாய் ( பரிவர்த்தனை )பார்வையால் புதன் முற்றிலும் கெட்டார்.படிப்பு நாசமானது.

  நன்றி, தயாநிதி, அவியனூர்

  ReplyDelete
 16. வணக்கம் சார்.......
  மிதுனலக்னம். 2ஆம் அதிபதி6ல் நீசம்..

  சூரி+சனி யுத்தத்தில் புதன் தடுமாரிபோனான்(கல்விகாரகன்)
  வில்லன்செவ்வாயின் பார்வையில் புதனுக்கு நாயடிபேயடி!!!
  2ல் கேது. கேடிகள் ராகு+செவ்.நேரடிபார்வையில் 2ஆம் இடம்(அப்கானிஸ்தான் போல)
  எப்படி படிப்பான் ஜாதகன்...கொடுப்பினை இல்லை............

  ReplyDelete
 17. 2மிடம் முதல் நிலைக் கல்விக்கான பாவம். அதன் அதிபதி சந்திரன் 6ல் நீசடைந்து வலுவிழந்துள்ளார். 2ல் கேது பகவான் அமர்ந்து அந்த பாவத்தை கெடுத்து விட்டார். புத்திகாரகனும் லக்கினாதிபதியுமான புதனோ 11ல் அட்டமாதிபதி நீச சனி மற்றும் சூரியயனுடன் உள்ளார்.
  மேற்கண்ட காரணங்ளால் ஜாதகருக்கு படிப்பு ஏறவில்லை.

  ReplyDelete
 18. Guru hiding in 6th house, mercury lord of 4th house in combustion; also with needs sevvai. These are the main reasons.
  AMG

  ReplyDelete
 19. Iya....

  2-m itathil kethu....
  2- m itathil chndran 6-il neecham.....
  Ithuve padippu keduvatharkku karanam..

  ReplyDelete
 20. வணக்கம் குரு,

  ஆரம்ப கல்வியை குறிப்பிடும் ஜனன லக்னதிர்க்கு இரண்டாம் பாவாதிபதி சந்திரன் லக்னதிர்க்கு ஆறில் மறைந்தார். அவர் வீட்டில் கேது அமர்ந்தார். மேலும் அந்த வீட்டை செவ்வாயும் ராகுவும் ஒருசேர பார்த்து கெடுத்தார்கள். வித்யா காரகனும் கல்வி ஸ்தானதிபதியுமான புதனோ சனியோடு கூட்டு சேர்ந்ததோடு செவ்வாயின் பார்வையும் பெற்று பள்ளிக்கு செல்லும் வயதில் தசையை நடத்தினார். அத்தோடு புதனுக்கு நான்காமிடம் கேது அமர்வு, ராகு மற்றும் செவ்வாய் பார்வையும் பெற்று கெட்டது.

  நன்றி
  செல்வம்

  ReplyDelete
 21. வணக்கம்.

  ஜாதகர் படிக்கவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்.

  4ம் வீட்டு அதிபதி புதன்(லக்கினாதிபதி)11ம் வீட்டில்,8ம் வீட்டு அதிபதி சனி, புதனுடன் கூட்டு.புதன் அசுப கிரகமாக மாறியது. அதனால், படிப்பில் தடங்கல்.
  6ம் வீட்டு அதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்து 4ம் பார்வையால் புதனை பார்க்கிறார்.
  6ம் வீட்டு அதிபதியின் பார்வை மிகவும் மோசமானது.
  11ம் வீடு 4ம் வீட்டிலிருந்து 8வது வீடு. அதனால், புத்தி அமைதியில்லாமல் இருக்கும். புத்தி எப்பொழுதும் தடுமாற்றத்துடன் இருக்கும்.
  வித்தியாகாரகன் குரு 6ம் வீட்டில் வக்கிரமாக அமர்ந்துள்ளார். அவருடைய பார்வை லக்கினத்தையோ, 4ம் வீட்டையோ, 4ம் வீட்டு அதிபதியையோ பார்க்கவில்லை. துரதிருஷ்ட்டம். படிக்கமுடியாமல் போனதர்க்கு இது ஒரு முக்கியமான காரணம்.
  2ம் வீட்டில் கேது இருப்பதால், படிப்பை பாதியில் விட்டு விடும் நிலைமை, விரும்பிய வண்ணம் படிப்பை அடையமுடியாது. மேலும், நாவன்மை பங்கு எற்படும்.

  ReplyDelete
 22. Anbudan vathiyar ayya vanakkam ...
  Mithuna laknam laknaathipathi Puthan with sani..
  2...kedhu in second house..vakkushthaanam.
  3...mankaarakan chandran at 6th house.
  4..education house4.. &kalvikarakan Puthan jointly with sani

  So school dropout...

  Sorry ayya..my computer under repair so this is from my iPad ...

  ReplyDelete
 23. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
  ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப் பெற்ற ஜாதகம்.
  1). மிதுன லக்கினம்.லக்கினாதிபதி புதன், 4ம் வீட்டு கல்வி ஸ்தானத்திற்கும் அதிபதியாகி தன்னுடைய வீட்டிற்கு 8ல் மறைந்துவிட்டார். அவரே புத்திகாரகனும் ஆவார்.புதனுடன் சேர்ந்த சனீஷ்வரன் 8மிடத்திற்கு அதிபதியானதால் படிப்பை கெடுத்து விட்டார்.2மிடத்தில் அமர்ந்த மாந்தி அதற்க்கு உறுதுணையாக இருந்தார். 6ம் வீட்டு அதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்து தன் கொடூரமான 4ம் பார்வையால் புதனையும் சனீஷ்வரனையும் கெடுத்தால் படிப்பும் போயே போச்.
  மற்ற படி குரு பகவான் (வாத்தியார்) வேறு மறைவு ஸ்தானமான 6மிடத்தில் அமர்ந்து விட்டதால்,திகைத்துப் போய் கம்மென்று உட்கார்ந்துவிட்டார்.
  ஆனாலும் குரு வாத்தியாராயிற்றே? சும்மாவா இருப்பார்.தன் 5ம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை ஆசீர்வதித்துள்ளார்.7ம் பார்வையால் அயன சயன சுகத்தையும், 9ம் பார்வையால் 2மிடமான தன ஸ்தானத்தையும் பலப்படுத்தியுள்ளார்.
  லக்கினாதிபதி புதனும் பாக்கியாதிபதி சனிபகவானும் (பாக்கியாதிபதி சனி நீச்சபங்க ராஜயோகம்) 11ல் அமர்ந்து,தைரியத்திற்க்கு 3ம் வீட்டுக்காரர் உச்ச சூரியனையும் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளதால் தன் தொழிலில் உச்சத்தைத் தொட்டிருப்பார். 10ல் அமர்ந்த உச்ச சுக்கிரன் தொழில் ஸ்தான அதிபதி வாத்தியாரின்(குருங்க) பார்வையைப் பெற்று உறுதி செய்கின்றார்.(இது அதிக பிரசங்கித்தனம். வாத்தியார் அடிச்சுப் போடுவாருங்கோ!!!)
  நன்றியுடன்,
  -பொன்னுசாமி.

  ReplyDelete
 24. வணக்கம் வாத்தியார் ஐயா!

  அடியவனுக்கு தெரிந்த முதல் பதில்

  ஜாதகருக்கு திருமண வாழ்க்கை திருப்தி அளிப்பதாக இருக்காது என்பது ஆணித்தரமான பதில். காரணம் குடும்ப ஸ்தானத்தில் உள்ள கேது பகவானின் மகிமை.

  ஜாதகர் ஏதோனும் ஒரு வகையில் மன நிலை பாதிக்க பட்டவராக இருப்பார் என்பது இரண்டாவது ஆணித்தரமான பதில். காரணம் பதினோராம் வீட்டில் உள்ள சூரியன், புதன் சேர்க்கை மற்றும் சனி பகவானின் மகிமையும் ஆகும்.

  நன்றி வணக்கம் .

  ReplyDelete
 25. AYYA,

  2m Veettil Kethu. Kethu amarndhulla veettathibathi lagnathirkku 6il maraivu. Lagnathibathi, 4m Athibathi matrum Buthi Kaaragararaana Budhan 8m Athibathi Saniyudan. 6m Athibathi Ucha Sevvayin Paarvai, Budhan matrum 2m veettinmel. Indha kaaranangalaal, jadhagar School Drop out. Thanks.

  ReplyDelete
 26. அய்யா,
  கல்விக்கான நாலாம் இட அதிபதி புதன் நாலாம் இடத்துக்கு எட்டில் மறைந்து விட்டார். உடன் சனி வேறு.செவ்வாய் நாலாம் பார்வையாக புதனை பார்க்கிறார். உடன் உள்ள சூரியன் புதனை வலுவிலக்க செய்துள்ளது.
  மோகன்‍‍, காரைக்கால்

  ReplyDelete
 27. 1.மிதுன லக்னம்,.விருச்சிக ராசி..லக்னப்படி வித்யாகாரகனும்,கல்வி ஸ்தானாதிபதியுமான புதன் 4ம் வீட்டிற்கு 8ல் மறைவு 4ம் வீட்டுக்கு 12,6க்கு உடைய சூரியன் சனி சேர்க்கை.லக்னத்திற்கு முதல் பாவியான செவ்வாய் 8ல் உச்சம் பெற்று 4 ம் அதிபதியின் மேல் பார்வை.
  2.ராசிப்படியும் 4 ஆம் அதிபதி 6ல் நீச்சம்,.இதனால் பள்ளிகல்வி இல்லை.

  ReplyDelete
 28. Respected sir
  This chart looks familiar and I check old post. Fount it in Last December. Sorry I cheated. Will not look older posts next time.

  ReplyDelete
 29. வணக்கம் ஐயா,

  1. அடிப்படை கல்விக்கு காரகம் 2ம் வீடு.
  2. 2ம் வீட்டில் கேது இருந்து அந்த பாவகத்தை கெடுத்தது.
  3. 2ம் வீட்டின் அதிபதி (சந்திரன்) நீசபங்கம் பெற்று என்ன பயன் 6ல் மறைவு.
  4. கல்விக்கு கரகன் (புதன்) சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் பெற்றத்தோடு 8ம்
  (சனி) அதிபதியுடன் கூடி கேடுகிறார்.
  ஆகவே இந்த ஜாதகத்தில் பிறந்தவர்க்கு அடிப்படை கல்வியே பெற முடியாமல் போனது.

  ReplyDelete
 30. 1.புதன்_செவ்வாய் வீட்டில் இருப்பது.
  2.8ஆம் அதிபதி சனியின் சேர்க்கை.
  3.6ஆம் அதிபதி செவ்வாய் பார்வை.
  4.புதன் தன்னுடைய வீட்டிற்கு எட்டில்.
  5.புதன் தன்னுடைய எதிரி வீட்டில் இருப்பது.
  6.4ஆம் இடத்திற்கும் புதனுக்கும் குரு பார்வை இல்லை.

  ReplyDelete
 31. உயர்திரு ஐயா வணக்கம் புதிர்க்கான எனது பதில் நான்காம் வீட்டு அதிபதியும் கல்விக்கு அதிபதியும் ஒருவரே புதன் அவர் நான்காம் வீட்டிற்க்கு எட்டில் மற்றும் அஸ்தமனம் அதனால் ஜாதகர் படிக்கவில்லை.

  ReplyDelete
 32. கேது 2 இல் , அந்த வீடு அதிபதி(Chandran) நீசம். And also that is in 6th house from laknam.

  ReplyDelete
 33. ஐயா வணக்கம்.

  கல்வி ஸ்தான 4ம் அதிபதி அந்த இடத்துக்கு 8 ஆம் இடத்தில் இருக்கிறார்

  வித்தைகாரகன் புதன் அஸ்தமனம்

  4 ஆம் இட அதிபதிக்கு செவ்வாய் பார்வை

  ஆகிய காரணங்களால் படிப்பு ஏறவில்லை.
  ஆனால், உச்ச செவ்வாய், உச்ச சுக்கிரன், உச்ச சூரியன் - உச்சத்திற்கு சென்று விடுவார்

  கண்ணன்.

  ReplyDelete
 34. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். இது எனது கன்னி முயற்சி. கத்துக்குட்டி முயற்சி. ஆவல் காரணமாக ஆசைப்பட்டு எழுதுகின்றேன்.

  மிதுன லக்கினம்.
  விருச்சிக ராசி.
  பிறந்த தேதி 10.5.1971

  சூரியன் - உச்சம்.
  சுக்கிரன் - உச்சம்.
  செவ்வாய் - உச்சம்

  மகரச்செவ்வாய் எட்டில் இருப்பதினால் செவ்வாய் தோஷம் இல்லை.

  சந்திரன் - நீசம்.
  சனிபகாவான் - நீசம்.

  அசுப கிரகங்கங்களான சூரியன் மற்றும் நீசச்சனியுடன் அஸ்தமனமாகியுள்ளார் கல்விகாரன் புதன். அதனால் படிப்பு ஏறவில்லை.

  மற்றபடி குருசந்திர யோகம். அமலா யோகம் உடையவர். வாழ்வில் வெற்றி பெற்றிருப்பார்.

  ஐயா. இது ஆர்வக்கோளாறில் எழுதியது.
  தவறு இருந்தால் மன்னிக்கவும்.
  அன்பன்
  வேந்தன்பட்டி ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி.

  ReplyDelete
 35. வணக்கம் ஐயா:
  1. 2 க்கு உடைய சந்திரன் 6 ல் நீசம்.
  2. 4 க்கு உடைய புதன் அஸ்தமம்.
  நன்றி

  ReplyDelete
 36. sir frankly I say that it is un believable. Horoscope of the native is not a trust worthy one . so if you give date of birth We can analyze. sorry for it.
  nellai padmanaban

  ReplyDelete
 37. 1.லக்னாதிபதியும், 4க்கு உரியவனும் அஸ்டமாதிபதிமான சனி, சேர்க்கை

  2.கல்விக்காரன் குரு நீசம் பெற்ற சந்திரனுடன் மறைவு ஸ்தானமாஸ்தானமான 6 ல்.
  3.2ல் கேது.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com