மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.7.15

கன்னியாஸ்திரியின் வாதம் என்ன ஆயிற்று?

கன்னியாஸ்திரியின் வாதம் என்ன ஆயிற்று?

போலந்து நாட்டின் இந்துக்களுக்கு எதிராக நடந்த ஒரு வழக்கு:

“இஸ்கான்” என்று அழைக்கப்படும் கிருஷ்ண பக்தி இயக்கம் உலக
முழுவதும் இந்து மதம் பரவ ஒரு காரணமாகவும் இருக்கிறது...

அப்படி இந்து மதம் உலக அளவில் பரவுவதை விரும்பாத ஒரு கிறித்துவ கன்னியாஸ்திரி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலந்து நாட்டின்
தலைநகர் வார்சாவில்”இஸ்கான்” அமைப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.....

வழக்கும் விசாரணைக்கு வந்தது.....

கன்னியாஸ்திரியின் வாதம் என்னவென்றால் “இஸ்கான்” போலந்து
நாட்டில் பகவான் கிருஷ்ணரைப் பற்றி பிரச்சாரம் செய்து தங்கள் மதத்தை
பிரபலப் படுத்துகின்றனர்..... ஆனால் அவர்கள் அப்படி பிரபலப்படுத்தும் கிருஷ்ணரோ மிகவும் ஒழுக்கமற்றவராக இருந்துள்ளார்....அவர் சுமார்
16,000 கோபிகளை திருமணம் செய்துகொண்டுள்ளதாக புராணங்கள் சொல்கின்றன....அப்படிப்பட்ட ஒரு ஒழுக்கமற்றவரைப் பற்றி பிரச்சாரம்
செய்வது தடை செய்யப் பட வேண்டும்.....

”இஸ்கான்” சார்பில் எதிர்வாதம் செய்தவர் நீதிபதியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்...

.”தயவு செய்து வழக்கு தொடர்ந்த கன்னியாஸ்திரியிடம் அவர் கன்னியாஸ்திரியாக குருப்பட்டம் பெறும் போது எடுத்துக் கொள்ளும்
உறுதி மொழியினை இந்த நீதிமன்றத்தில் ஒருமுறை திரும்பச் சொல்ல வேண்டி உத்தரவேண்டும்” என்பதுதான்....

நீதிபதியும் அவ்வாறே அந்த கன்னியாஸ்திரியிடம் உறுதிமொழியினை ஒருமுறை நீதிமன்றத்தில் ஒப்புவிக்கச் சொன்னார்.... ஆனால் அவர்
சொல்லவில்லை.....

“இஸ்கான்” நபர் நீதிபதியிடம் தானே அந்த உறுதிமொழியினை ஒப்புவிப்பதற்கு அனுமதி கேட்டார்.... நீதிபதியும் அதற்கு சம்மதித்தார்....

அந்த உறுதி மொழியின் படி ஒருவர் கன்னியாஸ்திரி ஆனால் அவர் ஏசுநாதருடன் திருமணம் செய்து வைக்கப் பட்டவர்....

”இஸ்கான்” நபரின் வாதம்:  கனம் நீதிபதி அவர்களே...!  பகவான் கிருஷ்ணர் 16,000 பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொண்டுள்ளார்.....ஆனால் சுமார் இரண்டு மில்லியன் (இருபது லட்சம்) கன்னியாஸ்திரிகள் ஏசுநாதருடன் திருமணம் செய்து கொண்டுள்ளதாக உறுதிமொழி ஏற்றுள்ளனர்....அப்படி இருக்கையில் பகவான் கிருஷ்ணர் மற்றும் ஏசுநாதர் இருவருக்கிடையில் யார் அதிகமாக ஒழுக்கமற்றவர்?!....

அது தவிர அந்த கன்னியாஸ்திரிகளை என்னவென்பது....?

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது..
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது. நன்றாக இருந்ததால் உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

 1. தஙகளின் பதிவுகளில் மிக மிக பிடித்தது.ஹிந்து வழக்கறிங்கரின் வாதம் அருமை.
  நன்றி,
  தயாநிதி, அவியனுர்

  ReplyDelete
 2. அப்படியானால் இரண்டு பேருமே ஒழுக்கம் கெட்டவர்கள்
  அதானால் இரண்டு மதங்களையும் தடை செய்கிறேன்

  என்றல்லவா தீர்ர்ப்பு சொல்லி இருக்க வேண்டும்.
  என்னவோ போங்க இத பற்றியா இருக்கனும் இன்றைய பதிவு

  ReplyDelete
 3. அய்யா! எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான் போல் இருக்கிறது ...........

  ReplyDelete
 4. அன்புடன் வணக்கம்
  உண்மையியல்..நடந்த விஷயம் இது ..

  ReplyDelete
 5. கன்னியாஸ்திரிகள் ஏசுநாதரை திருமணம் செய்வதாக உறுதிமொழி எடுத்தவர்கள் என்பது புதிய செய்தி.

  "இஸ்கான்" இந்து மத அமைப்பு என்பதை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இஸ்கானை ஏற்றுக் கொண்டவர்கள் சைவ சித்தாந்தங்களை மற்ற மதத்தினரை விட கடுமையாக எதிர்ப்பவர்களாக இருக்கின்றனர். எங்களது சமுதாயம் முழுக்க சைவ மறையை ஏற்றுக் கொண்ட ஒன்று. முருகனையும் சிவனையும் அனுதினமும் வழிபடுபவர்கள். ஆனாலும் திருமாலையும் வணங்குபவர்களே. எங்களது சமுதாயத்தில் சிலர் இஸ்கான் வழிக்கு சென்று இப்போது முருகனையும் சிவனையுமே ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். இந்து மதம் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் மதம். எங்களது வழியில் செல்லாதவர்கள் கடவுளை ஏற்காதவர்கள் என்று நமது மத நூல்கள் கூறியதே இல்லை.

  ஆனால் இஸ்கான் நூல்கள் சிலவற்றை படித்த போது சைவ திருமுறையை கடுமையாக விமர்சித்துள்ளனர். அது போக ஏகப்பட்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுள்ளனர். அவற்றில் ஒன்று: ஏதோ ஒரு அரசனுக்கும் யாதவர்களுக்கும் போர் மூண்டதாம். அந்த அரசன் தோற்றோடி சிவபெருமானிடம் உதவி கேட்டானாம். அவரும் கணேசரையும் முருகனையும் உதவிக்கு அனுப்பினாராம். ஆனால் அவர்களும் கண்ணனை வெல்ல முடியவில்லையாம். பிறகு சிவபெருமானே போருக்கு வந்து யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாத நிலையில் இரு தரப்பினரிடமும் சமாதானம் செய்தாராம். இது போன்ற உளறல்கள் அவர்களது நூல்களில் உள்ளது. இதே கண்ணன் ஜராசந்தனை அவன் ஈசனிடம் பெற்ற வரம் காரணமாக வெல்ல இயலாமல் வீமன் உதவியுடன் அவனை வீழ்த்தினான் என்று மகாபாரதம் சொல்கிறது. வனவாசத்தில் இருந்த அர்ஜுனனிடம் ஈசனை நோக்கி தவம் இருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்று வருமாறு கண்ணனே பணிக்கிறான். ஆக எந்த இடத்திலும் ஈசனை புராதன இந்து மத நூல்கள் தூற்றவில்லை. அப்படி இருக்க இஸ்கான் தூற்றுவதற்கு காரணமென்ன? இது விஷமத்தனம் இல்லையா? கண்ணனை ஏற்காதவர்கள் இல்லை நாங்கள். ஆனால் கண்ணனும் இராமனுமே போற்றி வணங்கிய‌ சிவபெருமானை இந்த விஷமிகள் கண்ணனின் பெயரால் தூற்றுவதை ஏற்க முடியாது.

  முடிவாக நான் இஸ்கான் அமைப்பை சேர்ந்த அனைவரையும் குறை கூறவில்லை. ஆனால் அவர்கள் தங்களது சைவ திருமுறை துவேஷத்தை துறக்காத வரை அவர்கள் இந்து மத வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள் என்பதை ஏற்க முடியாது.

  நீண்ட பதிவுக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 6. //////Blogger daya nidhi said...
  தஙகளின் பதிவுகளில் மிக மிக பிடித்தது.ஹிந்து வழக்கறிஞரின் வாதம் அருமை.
  நன்றி,
  தயாநிதி, அவியனுர்///////

  நல்லது.உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 7. /////Blogger SELVARAJ said...
  Excellent////

  நல்லது.உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. ////Blogger Visu Iyer said...
  அப்படியானால் இரண்டு பேருமே ஒழுக்கம் கெட்டவர்கள்
  அதானால் இரண்டு மதங்களையும் தடை செய்கிறேன்
  என்றல்லவா தீர்ர்ப்பு சொல்லி இருக்க வேண்டும்.
  என்னவோ போங்க இத பற்றியா இருக்கனும் இன்றைய பதிவு///////

  வேப்பிலையாரே, உங்களின் கருத்துப் பகிர்விர்க்கு நன்றி!

  ReplyDelete
 9. /////Blogger Prakash Kumar said...
  Excellent///////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. //////Blogger கறுத்தான் said...
  அய்யா! எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான் போல் இருக்கிறது .........../////

  வாதங்களும் எதிர்வாதங்களும் அப்படித்தான் தோன்றும்!

  ReplyDelete
 11. //////Blogger hamaragana said...
  அன்புடன் வணக்கம்
  உண்மையியல்..நடந்த விஷயம் இது ../////

  நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

  ReplyDelete
 12. ////////Blogger thozhar pandian said...
  கன்னியாஸ்திரிகள் ஏசுநாதரை திருமணம் செய்வதாக உறுதிமொழி எடுத்தவர்கள் என்பது புதிய செய்தி.
  "இஸ்கான்" இந்து மத அமைப்பு என்பதை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இஸ்கானை ஏற்றுக் கொண்டவர்கள் சைவ சித்தாந்தங்களை மற்ற மதத்தினரை விட கடுமையாக எதிர்ப்பவர்களாக இருக்கின்றனர். எங்களது சமுதாயம் முழுக்க சைவ மறையை ஏற்றுக் கொண்ட ஒன்று. முருகனையும் சிவனையும் அனுதினமும் வழிபடுபவர்கள். ஆனாலும் திருமாலையும் வணங்குபவர்களே. எங்களது சமுதாயத்தில் சிலர் இஸ்கான் வழிக்கு சென்று இப்போது முருகனையும் சிவனையுமே ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். இந்து மதம் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் மதம். எங்களது வழியில் செல்லாதவர்கள் கடவுளை ஏற்காதவர்கள் என்று நமது மத நூல்கள் கூறியதே இல்லை.
  ஆனால் இஸ்கான் நூல்கள் சிலவற்றை படித்த போது சைவ திருமுறையை கடுமையாக விமர்சித்துள்ளனர். அது போக ஏகப்பட்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுள்ளனர். அவற்றில் ஒன்று: ஏதோ ஒரு அரசனுக்கும் யாதவர்களுக்கும் போர் மூண்டதாம். அந்த அரசன் தோற்றோடி சிவபெருமானிடம் உதவி கேட்டானாம். அவரும் கணேசரையும் முருகனையும் உதவிக்கு அனுப்பினாராம். ஆனால் அவர்களும் கண்ணனை வெல்ல முடியவில்லையாம். பிறகு சிவபெருமானே போருக்கு வந்து யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாத நிலையில் இரு தரப்பினரிடமும் சமாதானம் செய்தாராம். இது போன்ற உளறல்கள் அவர்களது நூல்களில் உள்ளது. இதே கண்ணன் ஜராசந்தனை அவன் ஈசனிடம் பெற்ற வரம் காரணமாக வெல்ல இயலாமல் வீமன் உதவியுடன் அவனை வீழ்த்தினான் என்று மகாபாரதம் சொல்கிறது. வனவாசத்தில் இருந்த அர்ஜுனனிடம் ஈசனை நோக்கி தவம் இருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்று வருமாறு கண்ணனே பணிக்கிறான். ஆக எந்த இடத்திலும் ஈசனை புராதன இந்து மத நூல்கள் தூற்றவில்லை. அப்படி இருக்க இஸ்கான் தூற்றுவதற்கு காரணமென்ன? இது விஷமத்தனம் இல்லையா? கண்ணனை ஏற்காதவர்கள் இல்லை நாங்கள். ஆனால் கண்ணனும் இராமனுமே போற்றி வணங்கிய‌ சிவபெருமானை இந்த விஷமிகள் கண்ணனின் பெயரால் தூற்றுவதை ஏற்க முடியாது.
  முடிவாக நான் இஸ்கான் அமைப்பை சேர்ந்த அனைவரையும் குறை கூறவில்லை. ஆனால் அவர்கள் தங்களது சைவ திருமுறை துவேஷத்தை துறக்காத வரை அவர்கள் இந்து மத வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள் என்பதை ஏற்க முடியாது.
  நீண்ட பதிவுக்கு மன்னிக்கவும்.//////

  உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி தோழரே!

  ReplyDelete
 13. ////////Blogger thozhar pandian said...

 14. 'I am wedded to something'

  என்பது திருமணம் என்று மட்டும் பொருள் படுவதில்லை.எந்த ஒரு செயலிலும் மிகத் தீவிரமான ஈடுபாடு இருந்தால் அதனை அவ்வாறு ஒரு குறியீடாகக் கூறுவதுண்டு.சாதாரணமாக தொழிலில் ஈடுபட்டு இருப்போர் மனைவியிடம் 'உனக்கு முன்னரே நான் தொழிலினைத் திருமணம் செய்து கொண்டு விட்டேன்' என்று கூறுவார். அது போலத்தான் கன்னிகாஸ்திரிகளும் யேசுவின் காரியத்திற்காகத் தங்களை அர்பணித்துக் கொண்டு விட்டவர்கள் என்று கூறுதல் வேண்டும்.

  வழக்குத் தொடர்ந்தவர் நமது புராணங்களின் குறியீட்டுத்தன்மை பற்றி அறியாமல் மேம்போக்காகப் பார்த்துவிட்டு வழக்குத் தொடர்ந்து விட்டார்.அதற்கு இஸ்கான் அளித்த பதிலடி முள்ளை முள்ளால் எடுப்பதைப் போன்றது. ஆனால் அவ‌ர்கள் கூறும் வாதம் இந்து மதத்திற்கு ஏற்புடையதல்ல்.

  16000 பேருடன் கண்ணன் நடனமாடினான் என்றால் இறைவன் 16000 வடிவம் எடுத்து கொண்டாலும் தன் முழுமை குறையாமல் இருக்கிறான்.ஒரே சமயத்தில்
  அவனால் எல்லா இடத்திலும் இருக்க முடியும். அதனால் அவன் சக்தி குறைபடுவதில்லை என்பதையெல்லாம் இது புலப்படுத்தும். ஒரே சூரியன் 16000
  கல‌சத்தில் உள்ள நீரில் ஒரே முறையில் பிரதிபலித்தாலும் அவன் தன் ஆற்றல் குறையாமல் வானத்தில் இருந்து ஒளிர்ந்து கொண்டே இருப்பான்.

  ஒவ்வொரு மதத்திலும் புராண‌ம், சடங்குகள், தத்துவம் என்று மூன்று பகுதிகள் உண்டு.மதங்களை ஒப்பாய்வு செய்யும் போது புராணங்களைப் புராணங்களுடனும், சடங்குகளைச் சடங்குகளுடனும், தத்துவங்களைத் தத்துவங்களுடனும் ஒப்பிடவேண்டும். நமது சகோதர மதங்களான கிறித்துவ, இஸ்லாமிய மதத்த‌வர்கள் நமது புராணங்களை அவர்களுடைய தத்துவத்துடன் ஒப்பிட்டு நமது மக்களைக் குழப்புகிறார்கள்.

  எல்லாவற்றையும் கடந்து நமது பாரம்பரியமும் கலாசாரமும் நம்பிக்கைகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.இன்னும் பல கல்ப கோடி வருடங்கள் வாழும்.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com