மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.7.15

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்!


புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்!

கல்லறை வாசகங்கள் என்றால் சாதாரணமானதா? எத்தனையோ புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள் உள்ளன. நீங்கள் தெரிந்துகொள்வதற்காக புகழ்பெற்ற சில கல்லறை வாசகங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
1
கவிஞர் ஷெல்லி தன் தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை :
சப்தமிட்டு நடக்காதீர்கள்
இங்கேதான்என் அம்மா
இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்!.
2
உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்.
‘உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது.
நல்ல வேளையாகப் பிணமானாள்.
இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருக்கும்’.
3
மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்:
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு
இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது.".
4
ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளியின் கல்லறை வாசகம்
"இங்கும் புதை குழியில் கூட
இவன் கறையான்களால் சுரண்டப்படுகின்றான்.".
5
அரசியல்வாதியின் கல்லறை மீது எழுதப்பட்ட வாசகம்
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள்,
இவன் எழுந்துவிடப்போகிறான்."
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

 1. ஒரு போர்வீரனின் கல்லறயில்:

  "மற்றவர்கள் வாழ்வதற்காகத் தான் இறந்தவர்."

  ReplyDelete
 2. As a Comrade, I appreciate Commeades command

  ReplyDelete
 3. வகுப்பாசிரியர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். இது ஒர் அருமையான பதிவு. மிகவும் நன்றாக இருந்தது. பாராட்டுகள் பல பல..

  நான் இது போன்ற ஒரு வாசகத்தை படித்து இருக்கிறேன். ஆனால் புலவரின் பெயர் சரியாக நினைவில் இல்லை. “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்” என்பது தான் அந்த வாசகம்.

  மேலும், தாங்கள் எழுதிய பாடங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவரையில் 50 பாடங்கள் முடித்து இருக்கிறேன். எனது கேள்விக்களுக்கு ஏன் பதில் எழுதவில்லை என்று தெரியவில்லை.நீங்கள் பதில் தந்துருந்தால் நான் படித்து இருக்க மாட்டேன். இதன் பேரும் புகலும் உங்களையே சேரும். மிகவும் நன்றி நன்றி.

  ReplyDelete
 4. என்னுடய கல்லறையில்
  என்ன எழுத போகிறிர்கள்

  ReplyDelete
 5. வணக்கம் வாத்தியார் ஐயா!

  திருமலா திருப்பதி பாதயாத்திரை அழைப்பிதழை தங்களுக்கு அனுப்பி உள்ளேன் என்பதனை தெரியபடுத்துகின்றேன் .

  நன்றி ஐயா

  ReplyDelete
 6. ////Blogger My Mobile Studios said...
  nanraga ualathu aya/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 7. ///Blogger Prakash Kumar said...
  1st. & last super////

  உங்கள் தெரிவிற்கும் அதைப் பின்னூட்டத்தில் தெரியப் படுத்தியதற்கும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. ////Blogger kmr.krishnan said...
  ஒரு போர்வீரனின் கல்லறயில்:
  "மற்றவர்கள் வாழ்வதற்காகத் தான் இறந்தவர்."////

  உண்மைதான். நன்றாக உள்ளது. நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 9. ////Blogger kmr.krishnan said...
  ஒரு போர்வீரனின் கல்லறயில்:
  "மற்றவர்கள் வாழ்வதற்காகத் தான் இறந்தவர்."////

  உண்மைதான். நன்றாக உள்ளது. நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 10. /////Blogger SELVARAJ said...
  As a Comrade, I appreciate Commeades command////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 11. /////Blogger C.P. Venkat said...
  வகுப்பாசிரியர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். இது ஒர் அருமையான பதிவு. மிகவும் நன்றாக இருந்தது. பாராட்டுகள் பல பல..
  நான் இது போன்ற ஒரு வாசகத்தை படித்து இருக்கிறேன். ஆனால் புலவரின் பெயர் சரியாக நினைவில் இல்லை. “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்” என்பது தான் அந்த வாசகம்.
  மேலும், தாங்கள் எழுதிய பாடங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவரையில் 50 பாடங்கள் முடித்து இருக்கிறேன். எனது கேள்விக்களுக்கு ஏன் பதில் எழுதவில்லை என்று தெரியவில்லை.நீங்கள் பதில் தந்துருந்தால் நான் படித்து இருக்க மாட்டேன். இதன் பேரும் புகழும் உங்களையே சேரும். மிகவும் நன்றி நன்றி./////

  நாளொன்றிற்கு 50ற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வருகின்றன. அனைத்தையும் படித்துப் பதில் எழுத விருப்பம்தான். ஆனால் நேரத்திற்கு எங்கே போவது? நேரமின்மைதான் காரணம்!

  ReplyDelete
 12. /////Blogger Visu Iyer said...
  என்னுடய கல்லறையில்
  என்ன எழுதப் போகிறிர்கள்?//////

  நமக்கு, அதாவது நம் இருவருக்கும் கல்லறை ஏது? இறந்தால் 24 மணி நேரத்திற்குள் எரித்து சாம்பலாக்கி விடமாட்டார்களா என்ன? அஸ்தியை சின்ன டின்னில் அடைத்து வாரணாசிக்கு அனுப்பிவிடுவார்களே!

  ReplyDelete
 13. //////Blogger kannan Seetha Raman said...
  வணக்கம் வாத்தியார் ஐயா!
  திருமலா திருப்பதி பாதயாத்திரை அழைப்பிதழை தங்களுக்கு அனுப்பி உள்ளேன் என்பதனை தெரியபடுத்துகின்றேன் .
  நன்றி ஐயா/////

  நல்லது. பார்த்து வலையில் ஏற்றுகிறேன்.

  ReplyDelete
 14. //நான் இது போன்ற ஒரு வாசகத்தை படித்து இருக்கிறேன். ஆனால் புலவரின் பெயர் சரியாக நினைவில் இல்லை. “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்” என்பது தான் அந்த வாசகம்.//

  ஜி யு போப் தனது கல்லறயில் அந்த வாசகம் பொறிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.ஆனால் அது அவ்வாறு செயல் படுத்தபடவில்லை.

  ReplyDelete
 15. வகுப்பாசிரியர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். பின்னூட்த்திற்கு பதில் தந்ததற்கு மிகுந்த நன்றி மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் சரியான பதில் தந்த கிருஷ்ணனன் அவர்களுக்கு நன்றிகள் பல. எனது திருமணம் தாமதம் ஆகி கொண்டிருக்கிறது. இது ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் இது மிகவும் முக்கியமான கட்டம் இல்லையா? இதில் சோதிடர்கள் தோஷம் இருப்பதாக சொல்கிறார்கள். மணமகள் விட்டார்கள் பெண் தர மறுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தடை போல இருக்கிறது. எனவேதான் தாங்கள் அடியேனுகு தயவுசெய்து சற்று நேரம் ஒதுக்கி கவனிக்க வேண்டிகொள்கிறேன்.தங்களுக்கு நேரகாலம் போதாது என்பது என்க்கு புரிகிறது.பிறகு விதி விட்ட வழியில் முயற்சி செய்து பார்கிறேன்...

  ReplyDelete
 16. ///C.P. Venkat said...
  எனது திருமணம் தாமதம் ஆகி கொண்டிருக்கிறது. மணமகள் விட்டார்கள் பெண் தர மறுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தடை போல இருக்கிறது. ///

  கொடுத்து வைத்தவர் என்று சொல்லி வாழ்த்தட்டுமா திருமணம் செய்து
  கொள்ளமலே சுகமாக வாழ முடியும்...

  என்னுடய ஆலோசனை இது தான்
  எப்போதும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்

  கால சுழல் அதற்கேற்ப நாம் வாழ வேண்டாமா
  காலம் கொடுத்த பரிசு என சந்தோஷமாக இருங்கள்.

  தனிமையில் இனிமை காண முடியும்
  தரமான வாழ்க்கை தாராளமாக கிடைக்கும்

  மனம் போல் வாழ்க

  ReplyDelete
 17. /// visu lyer said..
  கொடுத்து வைத்தவர் என்று சொல்லி வாழ்த்தட்டுமா திருமணம் செய்து
  கொள்ளமலே சுகமாக வாழ முடியும்...

  என்னுடய ஆலோசனை இது தான்
  எப்போதும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்

  கால சுழல் அதற்கேற்ப நாம் வாழ வேண்டாமா
  காலம் கொடுத்த பரிசு என சந்தோஷமாக இருங்கள்.

  தனிமையில் இனிமை காண முடியும்
  தரமான வாழ்க்கை தாராளமாக கிடைக்கும்

  மனம் போல் வாழ்க///

  என்னுடைய திருமணம் தாமதம் ஆகி கொண்டிருக்கிறதுதான். எனது ஜாதகத்தில் 7 ல் சந்திரன் ஆட்சி, சுக்ரனும் சேர்ந்து உள்ளது. சிலர் தோஷம் எனவும், தாயா தாரமா என என்னை பயமுறுத்துகிறார்கள்.சிலர் உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆனாதால் ஒன்றுமில்லை என்றும் சொல்கின்றார்கள்.எனவேதான் குருஜியிடம் விளக்கம் கேட்டேன்.குருஜிதான் பதில் தராமல் இருக்கிறார்...

  எனக்கு நிறைய வாழ்க்கை அனுபவம் உண்டு.கரடுமுரடான பாதைகளில் தான் எனது பயணம் இருந்திருக்கிறது.எத்தனை தீமைகள், நன்மைகள் வந்தாலும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்பது எனது எண்ணம். அடுத்த பிறவி வேண்டவே வேண்டாம்.

  எனக்கு தந்தையார் இல்லை.தாய் மட்டும்தான் எங்களை வளர்கக,படிக்க என அவர்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லிலாகது. அவர்கள் விருப்பத்தை நிறைவு செய்ய வேண்டும்.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com