மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

15.7.15

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்!


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்!

மெல்லிசை மன்னருக்கு ஒரு அஞ்சலி!

சுமார் 60 ஆண்டு காலம் திரையுலகில் கோலோச்சிய திருவாளர்
M.S. விஸ்வநாதன் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார். அவர்
ஆன்மா சாந்தியடைய நம் வகுப்பறையின் சார்பில் நமது அஞ்சலியைப்
பதிவு செய்கிறேன். எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்தனை செய்கிறேன்.

சுமார் 1,200 படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவற்ரில் பல பாடல்கள் நம் மனதில் தங்கியுள்ளன.

பல கவிஞர்கள் அவருடைய இசைக்கு உறுதுணையாக அற்புதமான
பல பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார்கள். அவர்களில் கவியரசர்
கண்ணதாசன் அவர்களும் கவிஞர் வாலி அவர்களும் குறிப்பிடப் பட வேண்டியவர்களாகும்.

அவர்கள் எல்லாம் வாழ்ந்து பல ஆக்கங்களைக் கொடுத்து காலத்தில்
நாமும் வாழ்ந்திருந்தோம் என்பதே நாம் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயமாகும்.

வாழ்க அவர்களுடைய புகழ்!

மறக்க முடியாத, மறுக்க முடியாத மேதை M.S. விஸ்வநாதன்.

அவர் இறக்கவில்லை. திரையிசை வடிவில் அவர் என்றும் நம்முடன்
வாழ்ந்து கொண்டிருப்பார்!

கவியரசர் கண்ணதாசன் இன்று இருந்தால் இப்படித்தான் சொல்வார்:

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்
மெல்லிசை மன்னன் புகழ் பாடுங்களேன்!

அன்புடன்,
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

hamaragana said...

Vathiyar ayya vanakkam ...
Real musical hero... Our total class students 1 minute silent for his soul. One request.. If his horoscope available please ..show inthe class.

Chandrasekaran Suryanarayana said...

படம்: கிருஷ்ண கானம்
இயற்றியவர் : கண்ணதாசன்
பாடியவர்: எம் .ஸ் .விஸ்வநாதன்

அமர ஜீவிதம் ஸ்வாமி அமுத வாசகம்
பதித பாவனம் ஸ்வாமி பக்த ஸாதகம்
ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் .......

நளின தெய்வதம் ஸ்வாமி மதன ரூபகம்
நாக நர்தனம் ஸ்வாமி மார பக்திரம்
பஞ்ச சேவகம் ஸ்வாமி பாஞ்ச ஜன்னியம்
ஜீவா போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் ..

ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் .......

kmr.krishnan said...

ஆம் ஐயா! எம் எஸ் வி அவர்கள் ஒரு பெரிய சகாப்தம் தான். அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

Visu Iyer said...

கலை துறையில்
கால் பதித்த பெயர் விசுவநாதன்

விசுவநாதன் முத்தமிழில்
விளங்கி நிற்கும் பெயர்

நாடகத்தில் பூர்ணம் "விசுவநாதன்"
நடிப்பில் வசனத்தில் "விசு"

இசையில்
இந்த மெல்லிசை மன்னர் "விசுவநாதன்"

இந்த பெயருக்கும் எனக்கும்
இப்போ கலைதுறைக்கும் தொடர்பு உண்டு.

Visu Iyer said...

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...!

selvam velusamy said...

வணக்கம் குரு,

மெல்லிசை மன்னரின் ஆத்மா சாந்தியடைய உங்கலுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

நன்றி,
செல்வம்

Siva Radjane said...

ஐயா ..இந்த இணைப்பில் பழங்காலத்து ஜோதிடநூல்கல் pdf வடிவில் கிடைக்கிறது..பயன்படுத்திக் கொள்ளாவும்..https://www.facebook.com/photo.php?fbid=1042753032409031&set=a.221921974492145.62054.100000230332057&type=1

thozhar pandian said...

நேற்று காலை செய்திகளை வாசித்தால் ஒரு அதிர்ச்சி. மெல்லிசை மன்னரின் மறைவு பற்றி. அவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இசைஞானி அவரை வந்து சந்தித்தது பற்றியெல்லாம் செய்திகள் படித்திருந்ததால் அவரது முடிவு நெருங்குகிறதோ என்று ஒரு அச்சம் இருந்தது. ஆனாலும் அவரது மறைவு பற்றிய செய்தி ஒரு சிறு கலக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. இசைஞானியின் இசையோடு வளர்ந்திருந்தாலும் மெல்லிசை மன்னரின் இசையும் எங்கள் தலைமுறையை பெரிதும் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை. அவரும் கவியரசரும் சேர்ந்து படைத்த விருந்துகளை உண்ட நமக்கு அவரது பிரிவு ஈடு செய்ய இயலாதது. 87 வயது காலம் வாழ்ந்து எண்ணற்ற இதயங்களுக்கு இசை சேவை செய்த இந்த மாமேதைக்கு இந்திய அரசு எந்த பத்ம விருதுகளையும் அளித்து கவுரவிக்க‌வில்லையே என்று எண்ணும் போதுதான் மனம் வலிக்கிறது. வாழ்க இந்த மாமேதையின் புகழ். அவரது ஆத்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
Vathiyar ayya vanakkam ...
Real musical hero... Our total class students 1 minute silent for his soul. One request.. If his horoscope available please ..show inthe class./////

நல்லது. உங்கள் பரிந்துரைக்கு நன்றி கணபதியாரே

Subbiah Veerappan said...

///Blogger Chandrasekaran Suryanarayana said...
படம்: கிருஷ்ண கானம்
இயற்றியவர் : கண்ணதாசன்
பாடியவர்: எம் .ஸ் .விஸ்வநாதன்
அமர ஜீவிதம் ஸ்வாமி அமுத வாசகம்
பதித பாவனம் ஸ்வாமி பக்த ஸாதகம்
ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் .......
நளின தெய்வதம் ஸ்வாமி மதன ரூபகம்
நாக நர்தனம் ஸ்வாமி மார பக்திரம்
பஞ்ச சேவகம் ஸ்வாமி பாஞ்ச ஜன்னியம்
ஜீவா போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் ..
ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ......./////

ஆஹா...! அற்புதம்! நினைவு படுத்தியமைக்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
ஆம் ஐயா! எம் எஸ் வி அவர்கள் ஒரு பெரிய சகாப்தம் தான். அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்./////

ஆமாம். அந்த நல்ல மனிதரின் ஆன்மா சாந்தியடையட்டும் கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger Visu Iyer said...
கலை துறையில்
கால் பதித்த பெயர் விசுவநாதன்
விசுவநாதன் முத்தமிழில்
விளங்கி நிற்கும் பெயர்
நாடகத்தில் பூர்ணம் "விசுவநாதன்"
நடிப்பில் வசனத்தில் "விசு"
இசையில்
இந்த மெல்லிசை மன்னர் "விசுவநாதன்"
இந்த பெயருக்கும் எனக்கும்
இப்போ கலைதுறைக்கும் தொடர்பு உண்டு./////

ஏன் ஆன்மீகத்தை விட்டு விட்டீர்கள். வாரணாசியிலும் விஸ்வநாதன் இருக்கிறாரே!

Subbiah Veerappan said...

/////Blogger Visu Iyer said...
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...!//////

கரெக்ட். ஆனாலும் அவரது பிரிவு வலிக்கிறதே சுவாமி!

Subbiah Veerappan said...

///Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
மெல்லிசை மன்னரின் ஆத்மா சாந்தியடைய உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.
நன்றி,
செல்வம்/////

நல்லது. நன்றி செல்வம்!

Subbiah Veerappan said...

//////Blogger thozhar pandian said...
நேற்று காலை செய்திகளை வாசித்தால் ஒரு அதிர்ச்சி. மெல்லிசை மன்னரின் மறைவு பற்றி. அவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இசைஞானி அவரை வந்து சந்தித்தது பற்றியெல்லாம் செய்திகள் படித்திருந்ததால் அவரது முடிவு நெருங்குகிறதோ என்று ஒரு அச்சம் இருந்தது. ஆனாலும் அவரது மறைவு பற்றிய செய்தி ஒரு சிறு கலக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. இசைஞானியின் இசையோடு வளர்ந்திருந்தாலும் மெல்லிசை மன்னரின் இசையும் எங்கள் தலைமுறையை பெரிதும் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை. அவரும் கவியரசரும் சேர்ந்து படைத்த விருந்துகளை உண்ட நமக்கு அவரது பிரிவு ஈடு செய்ய இயலாதது. 87 வயது காலம் வாழ்ந்து எண்ணற்ற இதயங்களுக்கு இசை சேவை செய்த இந்த மாமேதைக்கு இந்திய அரசு எந்த பத்ம விருதுகளையும் அளித்து கவுரவிக்க‌வில்லையே என்று எண்ணும் போதுதான் மனம் வலிக்கிறது. வாழ்க இந்த மாமேதையின் புகழ். அவரது ஆத்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்./////

ஆமாம்! அந்த மேதையின் ஆத்மா சாந்தியடையட்டும்!