மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.1.14

Astrology: யார் தீர்த்தமாட வேண்டும்?

 
 
===============================================================
Astrology: யார் தீர்த்தமாட வேண்டும்?

யார் வேண்டுமென்றாலும் தீர்த்தமாடலாம். புண்ணிய நதிகளில் நம்பிக்கை யோடு நீராடி, அருகில் கரையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வழிபடுதல் நன்மை பயக்கும். குறிப்பாகக் காரியத் தடைகள்உள்ளவர்கள், ஜாதகத்தில் தோஷமுள்ளவர்கள் நீராட வேண்டும். அதிலும் புத்திர தோசம் உள்ளவர்கள் கண்டிப்பாகத் தீர்த்தமாட வேண்டும்.

பல நதிகளில் மின் உற்பத்திக்காக அணைகளைக் கட்டி ஆறுகளில் நீரோட்டத்தைக் குறைத்துவிட்டார்கள்.

வைகை, காவேரி போன்ற ஆறுகள் நீரின்றி வறண்டுபோய்விட்டன. பல இடங்களில் மணல் திட்டுக்கள்தான் உள்ளன. அந்த மணலையும் போட்டி போட்டுக்கொண்டு பொக்லைன், ஜே.பி.சி போன்ற இயந்திரங்களை
வைத்து அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே ராமேஸ்வரம்தான் தீர்த்தமாடுவதற்கு உரியதும், பழம் பெருமை மிக்கதும் ஆகும். புத்திரபாக்கியக் குறைபாடு உள்ளவர்கள், ஒரு முறை அங்கே சென்று, கோவிலுக்கு எதிரே உள்ள கடலில் நீராடி, இராமநாத சுவாமியை மனம் உருக பிரார்த்தனை செய்துவிட்டு வந்தால், குறை நீங்கிக் குழந்தை பிறக்கும்.
--------------------------------------------------------
ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, காரகன் குரு ஆகியோர்கள் வலிமையற்று இருப்பது குறைபாடாகும். அதைப் பற்றி முன்பு பலமுறை எழுதியுள்ளேன். புதிதாக ஒரு செய்தியையும் குறிப்பிட்டுக் கீழே எழுதியுள்ளேன்.அதையும் படியுங்கள்.

ஐந்தாம் வீட்டுக்காரனும் ஆறாம் வீட்டுக்காரனும் ஜாதகத்தில் ஒன்று சேர்ந்திருந்தால் (Association of 5th and 6th Lord) அது புத்திர தோசமாகும்.
அதுவும் அவர்களின் சேர்க்கை முன்றாம் வீட்டில் இருப்பது, இருக்கும் நிலைமை மிகவும் மோசமானதாகும்.

அவர்களின் மேல் குரு பார்வை இருப்பது அதற்கு விதிவிலக்காகும். அதை மனதில் கொள்க!

இந்த விதியை (Rule) விளக்கும் பழைய பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஆரப்பா அயன்விதியை அறையக்கேளு
    அப்பனே ஐந்துள்ளோன் ஆறோன்கூடில்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திரதோஷம்
    சிவசிவாயிது மூன்றில் சேர்ந்துநிற்க
கூறப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும்
    கொற்றவனே கொள்ளிக்குப் பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
    பலனுண்டுபல தீர்த்த மாடச்சொல்லே!

    - புலிப்பாணி முனிவரின் பாடல்

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
========================================================

10 comments:

  1. கங்கை ஆடிலன்
    காவிரி ஆடிலன்

    எங்கும் ஈசன்
    எனாதவற்கு

    என்ற அப்பர் வரிகளை
    எமது நினைவிற்கு வந்தது

    கடலில் கலக்காத நதி
    வைகை அங்கே அப்படித்தான்

    பழைய நினைவுகளை
    புரட்டி பார்க்க வைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. வணக்கம் குருவே,

    கன்னி லக்கினத்தாற்கு ஐந்து மற்றும் ஆறுக்குடையவன் ஒருவனே. அவர்களுக்கும் இதே விதிதானா.

    நன்றி.
    செல்வம்

    ReplyDelete
  3. My question is same as Mr Selvam Velusamy question. Because my position such like that and Guru Aspect.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா!வைகாசி மாதம் அமாவாசையன்று பிறக்கும் மீன லக்னக்காரர்களுக்கு இந்த அவயோகம் ஏற்பட வாய்ப்பு நிறைய உள்ளது.இருந்தாலும் இப்பொழுதுதான் மருத்துவ துறை நிறைய முன்னேறியுள்ளதால் கடவுளின் துணையோடு மருத்துவரையும் நாடலாமே!

    ReplyDelete
  5. Makara Rasi
    Simha Laknam
    5, 6 lords in 2'nd place, Sevvai is looking at that house. I don't know if Sevvai is bad or not.
    Tell me what happens for this situation?

    ReplyDelete
  6. Dear guruji,
    Thanks for new updates and rules...

    ReplyDelete
  7. யார் தீர்த்தமாட வேண்டும் என சொல்லியிருக்கிறீர்கள்...
    நல்ல பகிர்வு....

    ReplyDelete
  8. வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன மாதிரியான பரிகாரம் செய்வது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்?

    ReplyDelete
  9. ஐயா இது போல் திருசெந்தூரிலும் நீராடினால் வரும் நன்மைகள் பற்றி ஒரு பதிவு எழுதவும்.

    ReplyDelete
  10. ஐயா இது போல் திருசெந்தூரிலும் நீராடினால் வரும் நன்மைகள் பற்றி ஒரு பதிவு எழுதவும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com