மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

23.1.14

Astrology: ஏமாறச் சொன்னது நானா? என் மீது கோபம் தானா?

 

Astrology: ஏமாறச் சொன்னது நானா? என் மீது கோபம் தானா?

நேற்று பதிவில் கொடுத்திருந்த ஜாதகம் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான திரு. வாரன் பஃப்பெட் (Warren Buffett) அவர்களின் ஜாதகம்!

இப்போது சொல்லுங்கள், அவருக்கு என்ன பணக் கஷ்டம்? சேர்த்த பணத்தைக் காப்பாற்றுவதும் அந்த நம்பர் ஒன் நிலைமையைத் தக்க வைத்துக்கொள்வதும் தான் அவருக்கு உள்ள கஷ்டம்.

உங்களிடம் விளையாடுவதற்காக, ஜாதகத்தைக் கொடுத்த நான், கேள்வியை சற்று மாற்றி எழுதினேன். பணக்கஷ்டம் உள்ளதா? என்ற வார்த்தைகளைச் சேர்த்தேன்.

சிலர் எந்த ஜாதகத்தைக் கொடுத்தாலும், பிறந்த தேதியைக் கண்டு பிடித்து, இணையத்தில் ஆள் யார் என்று தேடுவார்கள். அவ்வாறு இருவர் தேடிக் கண்டிபிடித்து வாரென் பஃப்பெட்டின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

லக்கினத்தில் சனி இருப்பதையும், அவர் இரண்டாம் வீட்டுக்காரர், தன்னுடைய வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருக்கிறார் என்பதையும் வைத்து, ஜாதகரின் கையில் பணம் தங்காது என்றுதான் சட்டென்று சொல்லத் தோன்றும்.

ஆனால் ஜாதகத்தில் வேறு பல நல்ல அமைப்புக்கள் உள்ளன. இருபதிற்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் அலசினால் விபரம் தெரியும். அந்த யோகங்கள்தான் (By placement and association of planets) அவரை உயர்த்திப் பிடித்தன!

30.8.1930ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அமெரிக்காவில் உள்ள ஒமாஹா நகரில் பிறந்த அவர், துவக்கத்தில் தன்னுடைய 24ஆம் வயது முதல் 3 வருட காலங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் பொன்மகள் வந்து அவருக்குக் கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறாள்.

அவரும் முறைப்படியாக கோடி கோடியாகக் குவித்திருக்கிறார். இன்று அவருடைய ஒரு நாள் வருமானம் ரூ.223 கோடிகள் (அம்மாடியோவ்.....)

வாத்தியார் வெளியூர்ப் பயணத்தில் இருந்து இன்று காலைதான் வந்தேன். நீங்கள் எல்லாம் ஆர்வமாக இருப்பீர்கள் என்பதற்காக விடையைச் சுருக்கமாக எழுதிப் பதிவை வலை ஏற்றியிருக்கிறேன்.

இன்னொரு நாள் அவருடைய ஜாதகத்தை விரிவாக அலசுவோம்.

அவரைப் பற்றிய செய்திகளுக்கான சுட்டி (URL Link):

http://en.wikipedia.org/wiki/Warren_Buffett

போட்டியில் கலந்து கொண்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் வாத்தியாரின் நன்றி உரித்தாகுக!

அன்புடன்,
வாத்தியார்

===============================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

வேப்பிலை said...

எல்லோருக்கும் ஒவ்வொரு அலர்ஜி
எனக்கு பணம் என்றால் அலர்ஜி

இப்படியும் ஒருவர் என்பதில்
இவர் 200கோடிக்கு மேல் ஒரே நாளில்

என்பது பங்கு வர்த்தகத்தில்
ஏமாறும் இனிய தோழர்களுக்கு

ஒருவருடைய ஏமாற்றம் இன்னும்
ஒருவருக்கு லாபம்..

Kalai Rajan said...

அய்யா
வண‌க்கம், இது மாதிரி பயிற்ச்சிகள் அதிகம் இருந்தால்தான் நமது மாணவர்கள் உயர்னிலை பள்ளிக்கு தேர்ச்சியாவார்கள்

venkatesh r said...

வணக்கம்."வாத்தியார் பிள்ளைதான் மக்கு! ஆனால் வாத்தியார் வகுப்பறை பிள்ளைகளையும் மக்காக ஆக்கிவிட்டீர்! இந்த மாதிரி ஜாதகங்களை கொடுக்கும் போது சரியான "க்ளூ" வையும் கொடுக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
மிக நன்று...கோடீஸ்வரர் வாரன் பபாட் ஜாதகம் கொடுத்து அலச வைத்தமைக்கு !!
அலசலில். **சனி** 1.தன் வீட்டிற்கு 12ல் !!!2. இரண்டாம் வீட்டுக்காரன் 12ல் இருப்பதால் ஓட்டை என்பது பொது விதி!! (ஏன் 3ம் வீட்டுக்காரன் அவன்தானே தன் வீட்டிற்கு 11ல் இருக்கிறான் லாபாதிபதி ..கர்மகாரகன்.. என எடுத்துக் கொள்ள கூடாதா??.வாத்தியார் அய்யா எடுத்துகோங்க என்று கூறாதீர்கள்....அப்படி எடுத்து அலசலாம??) ஆனால் லக்னாதிபதி குரு தன வீட்டை தனது நேரடி பார்வையல் வைப்பதாலும் .உடன் செவ்வாய் சேர்ந்து தலைமை பண்பு (குருமங்கள யோகம் ) என்பதாலும்..இவரின் பொருள் சேர்க்கை அதிகம் விரயம் ஆகவில்லை. மேலும் 12 ல் சந்திரன் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டி நீசமடைந்து இருக்கிறான் அதலால் விரயம் என்பது குறைவுதான் ...!!!அதாவது 12 இடத்தில் இருப்பவன் கெட்டு விட்டான் என்பதுதானே கருத்து.... வாத்தியார் அய்யா .அலசல் சரிதானா ??

Subbiah Veerappan said...

///Blogger வேப்பிலை said...
எல்லோருக்கும் ஒவ்வொரு அலர்ஜி
எனக்கு பணம் என்றால் அலர்ஜி
இப்படியும் ஒருவர் என்பதில்
இவர் 200கோடிக்கு மேல் ஒரே நாளில்
என்பது பங்கு வர்த்தகத்தில்
ஏமாறும் இனிய தோழர்களுக்கு
ஒருவருடைய ஏமாற்றம் இன்னும்
ஒருவருக்கு லாபம்../////

பங்கு வர்த்தகம் என்பது அப்படித்தான்.என்ன செய்யலாம் சொல்லுங்கள்.

Subbiah Veerappan said...

////Blogger Kalai Rajan said...
அய்யா
வண‌க்கம், இது மாதிரி பயிற்ச்சிகள் அதிகம் இருந்தால்தான் நமது மாணவர்கள் உயர்னிலை பள்ளிக்கு தேர்ச்சியாவார்கள்/////

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்பார்கள். நல்ல மாணவர்கள் அடுத்தமுறை ஏமாற மாட்டார்கள் இல்லையா? அதற்குத்தான் நடு நடுவே இதுபோன்ற பயிற்சிகள். நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger venkatesh r said...
வணக்கம்."வாத்தியார் பிள்ளைதான் மக்கு! ஆனால் வாத்தியார் வகுப்பறை பிள்ளைகளையும் மக்காக ஆக்கிவிட்டீர்! இந்த மாதிரி ஜாதகங்களை கொடுக்கும் போது சரியான "க்ளூ" வையும் கொடுக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.//////

அதெப்படி ஒரே பாடத்தில் மக்கு ஆவார்கள்? காளைராஜனின் பின்னூட்டத்தையும், அதற்கான என்னுடைய பதிலையும் படியுங்கள் வெங்கடேஷ்!
என்ன மாதிரி க்ளூ கொடுக்கலாம் என்பதைச் சொல்லுங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
மிக நன்று...கோடீஸ்வரர் வாரன் பபாட் ஜாதகம் கொடுத்து அலச வைத்தமைக்கு !!
அலசலில். **சனி** 1.தன் வீட்டிற்கு 12ல் !!!2. இரண்டாம் வீட்டுக்காரன் 12ல் இருப்பதால் ஓட்டை என்பது பொது விதி!! (ஏன் 3ம் வீட்டுக்காரன் அவன்தானே தன் வீட்டிற்கு 11ல் இருக்கிறான் லாபாதிபதி ..கர்மகாரகன்.. என எடுத்துக் கொள்ள கூடாதா??.வாத்தியார் அய்யா எடுத்துகோங்க என்று கூறாதீர்கள்....அப்படி எடுத்து அலசலாம??) ஆனால் லக்னாதிபதி குரு தன வீட்டை தனது நேரடி பார்வையல் வைப்பதாலும் .உடன் செவ்வாய் சேர்ந்து தலைமை பண்பு (குருமங்கள யோகம் ) என்பதாலும்..இவரின் பொருள் சேர்க்கை அதிகம் விரயம் ஆகவில்லை. மேலும் 12 ல் சந்திரன் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டி நீசமடைந்து இருக்கிறான் அதலால் விரயம் என்பது குறைவுதான் ...!!!அதாவது 12 இடத்தில் இருப்பவன் கெட்டு விட்டான் என்பதுதானே கருத்து.... வாத்தியார் அய்யா .அலசல் சரிதானா ??/////

சங்கரன் கோவில்காரர் சொன்னால் சரியாக இல்லாமல் இருக்குமா? உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

venkatesh r said...

வாத்தியார் ஐயா! க்ளூ கொடுக்கும்போது அய்யனின் தற்போதுள்ள நிதி நிலைமை என்ன? என்று நீங்கள் கேட்டு இருக்கலாமோ என்று தோன்றியது. அதனால்தான் அந்த பின்னோட்டம். நீங்கள் கொடுத்துள்ள பதில் தெளிவை ஏற்படுத்தியது. நன்றி ஐயா!