மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.1.14

Short Story, சிறுகதை: இறந்தவன் எங்கே போகிறான்?

 
Short Story, சிறுகதை: இறந்தவன் எங்கே போகிறான்?

அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 5

(எங்கள் அப்பச்சி (MY Father) சொன்ன கதைகள் வரிசையில் இது ஐந்தாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. கருவிற்கு உருவம் கொடுத்து விரிவாக்கம் செய்து, எழுத்தில்  வடிவமைத்தது எல்லாம் என்னுடைய கைவண்ணம்)

தலைப்பு: பிறவிப் பயன்!

கொட்டு முளக்கத்தோடு ஒருவர் இறுதி யாத்திரை சென்று கொண் டிருந்தார். கண்ணீரும் கம்பலையுமாக முன்னால் சென்று கொண்டிருந்த அவருடைய மகன்களுடன், உறவினர்கள், நண்பர்கள் என்று சுமார் 100 பேர்கள் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆற்றில் குளித்துவிட்டு எதிரில் வந்து கொண்டிருந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர் ஒருவர், வருகிறவர்களுக்கு வழிவிட்டு, அருகில் இருந்த வீட்டுத் திண்ணை ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டார். அவர்கள் யாரையும் தொட்டு விடக்கூடாது என்று எண்ணி அப்படிச் செய்தார்.

ஆனால் அவர் ஏறி நின்றது ஒரு தாசியின் வீடு. ஏறிய பிறகுதான் அவருக்கு அது நினைவிற்கு வந்தது. அறியாமல் நடந்து விட்டது. வீட்டிற்குப்போய் மீண்டும் ஒரு முறை குளித்து விட்டால் போகிறது என்று தன் மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டார்.

வீட்டின் உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. தாசி தன் வீட்டு வேலைக்காரியிடம் சொன்னாள், "அடியே அஞ்சலை, உலக அலைக்கழிப்பும், அவதியும் நீங்கி ஆத்மா ஒன்று விடுதலையாகிப் போய்க்கொண்டிருக்கிறது. அது சொர்க்கத்திற்குப் போகிறதா அல்லது நரகத்திற்குப்போகிறதா என்று போய்ப் பார்த்துவிட்டு வா!"

வேலைக்காரியும் விளக்குமாற்றைக் கீழே போட்டுவிட்டுக் கதவைத்திறந்து கொண்டு, சென்று கொண்டிருந்த இறுதிப் பயணக் கூட்டத்தோடு தானும் கலந்து செல்லத் துவங்கினாள்.

திண்ணை மீது நின்று கொண்டிருந்த நம் கதாநாயகருக்கு மிகுந்த ஆச்சரியம் ஆகிவிட்டது. "அடடா! நாமும் தான் கடந்த முப்பது ஆண்டுகளாக எவ்வளவு நூல்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறோம்? எத்தனை இடங்களில் பிரசங்கம் செய்திருக்கிறோம்? இந்தத் தாசிக்குத் தெரிந்தது மட்டுமல்ல தாசியின் வேலைக்காரிக்குத் தெரிந்த வித்தை நமக்கு தெரியாமல் போய்விட்டதே?  அது எப்படி, இறுதி யாத்திரை செல்பவன் ஒருவன் சொர்க்கத்திற்குப் போகிறானா அல்லது நரகத்திற்குப் போகிறானா என்று கண்டு பிடிக்க முடியும்?" என்று மின்னாலாய் மனதிற்குள் எண்ணங்கள் சுழன்றடிக்க, கடைசியில் தாசியையே வெளியில் அழைத்து விபரத்தைச் சொல்லி, விடையைக் கேட்டார்.

தாசி புன்முறுவலோடு பதில் சொன்னாள் "அய்யா. இது உப்புப் பெறாத சாதாரண விஷயம். செத்தவனோடு கூடப் போகிறவர்கள் பேசிக்கொண்டு போவதைக் கேட்டால் போதும் அது தெரிந்து விடும். நல்ல மனுஷனப்பா, நாலு பேருக்கு உதவியாக இருந்தானப்பா, காசு பணம் பார்க்க மாட்டானப்பா, ஓடி வந்து உதவி செய்வானப்பா, பரோபகாரியப்பா என்று அவர்கள் சொன்னால் அவன் சொர்க்கத்திற்குப் போகிறானென்று அர்த்தம். அப்படி யாரும் பேசவில்லை என்றால், அவன் கிராதகன், நரகத்திற்குத்தான் போகிறான் என்று அர்த்தம்"

நம் ஆசாமி அதிர்ந்துபோய் செயலற்று நின்று விட்டார்

கற்றது கையளவு: கல்லாதது கடலளவு!

”மனிதன் பிறவி எடுத்தது, நாலு பேருக்கு நன்மை செய்வதற்காகத்தான். தன்னைப் பேணியாக அதாவது சுயநலம் மிக்கவனாக இருக்கக்கூடாது. பிறவிப் பயன் அதுதான்” என்பதை வலியுறுத்துவதற்காக எங்கள் அப்பச்சி, இந்தக் கதையைச் சொல்வார்கள்.

=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

  1. இறந்தவர் பின்னால் யாரும் போகவில்லை
    இப்போ எப்படி கண்டுபிடிப்பதாம்?

    இருக்கும் வரை வாழ்த்துவது
    இறந்தபிறகு போகுமிடத்தை சொல்லாது

    para pshychology பற்றி நமது தோழர்
    லால்குடியார் விளக்குவார்..

    கதை என்பதால் சரி என
    கட்டாயம் எதையும் கேட்டுக் கொள்வோம்

    ReplyDelete
  2. கற்றது கையளவு: கல்லாதது கடலளவு!

    ”மனிதன் பிறவி எடுத்தது, நாலு பேருக்கு நன்மை செய்வதற்காகத்தான். தன்னைப் பேணியாக அதாவது சுயநலம் மிக்கவனாக இருக்கக்கூடாது. பிறவிப் பயன் அதுதான்” என்பதை வலியுறுத்துவதற்கான அருமையான க்தைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete

  3. கதை நன்றாக இருக்கிறது !

    கதை கேட்டு திருந்தும் காலம் இப்பொது இல்லை.

    ReplyDelete
  4. அய்யா
    கதையின் சாராம்சம் மனிதன் பிறர்க்கு உபகாரம் செய்பவனாகயிரு என்று சொல்கிறது.நல்ல கதை.அய்யா எனக்கு ஒரு சந்தேகம், ஒருவன் இறந்த பின் சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்கின்றன் என்றால், அடுத்த பிறவி என்பது ?

    ReplyDelete
  5. // வேப்பிலை said..
    இறந்தவர் பின்னால் யாரும் போகவில்லை இப்போ எப்படி கண்டுபிடிப்பதாம்? //

    பிறக்கும் முன்னால் யாரை பார்த்து பிறந்தோம்....
    அது போல் தான் இதுவும் நண்பரே,,,,,


    ஆத்மாவுடன் எப்பொழுதும் இருப்பது எண்ணங்கள் மட்டுமே..


    ஆத்மா இந்த உடலை விட்டு
    பிரியும்பொழுது கூடவே எடுத்து செல்வது எண்ணங்கள் மட்டுமே.
    வேதமும், வேதாந்தமும் இதையேதான் கூருகின்றன.



    ஆகையினால் தான் கீதையில் கண்ணன் எப்பொழுதும் எண்னை நினை. கடைசியில் எண்னை வந்து அடைவாய்.


    சீரான எண்ணங்களை வைத்துக்கொள்வது மிகவும் கடினம்.அதை வெற்றி பெறுவது தான் வாழ்க்கையின் முக்கிய கடமை. நோக்கமும் அதுவே..


    நான் அறிந்த சிலவற்றை இங்கு கூறினேன்...


    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  6. /////Blogger வேப்பிலை said...
    இறந்தவர் பின்னால் யாரும் போகவில்லை
    இப்போ எப்படி கண்டுபிடிப்பதாம்?
    இருக்கும் வரை வாழ்த்துவது
    இறந்தபிறகு போகுமிடத்தை சொல்லாது
    para pshychology பற்றி நமது தோழர்
    லால்குடியார் விளக்குவார்..
    கதை என்பதால் சரி என
    கட்டாயம் எதையும் கேட்டுக் கொள்வோம்//////

    பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும்’ என்றார் பட்டினத்தார். அது எப்படிப் போகுமோ? அப்படித்தான் மற்றவையும் போகும் வேப்பிலையாரே!

    ReplyDelete
  7. /////Blogger இராஜராஜேஸ்வரி said...
    கற்றது கையளவு: கல்லாதது கடலளவு!
    ”மனிதன் பிறவி எடுத்தது, நாலு பேருக்கு நன்மை செய்வதற்காகத்தான். தன்னைப் பேணியாக அதாவது சுயநலம் மிக்கவனாக இருக்கக்கூடாது. பிறவிப் பயன் அதுதான்” என்பதை வலியுறுத்துவதற்கான அருமையான கதை. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!//////

    உங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. /////Blogger Sattur Karthi said...
    கதை நன்றாக இருக்கிறது !
    கதை கேட்டு திருந்தும் காலம் இப்பொது இல்லை./////

    சங்கை ஊதி வைப்போம் என்று ஊதுகிறேன். காது நன்றாக இருப்பவர்கள் அதைக் கேட்கட்டுமே!

    ReplyDelete
  10. //////Blogger Kalai Rajan said...
    அய்யா
    கதையின் சாராம்சம் மனிதன் பிறர்க்கு உபகாரம் செய்பவனாகயிரு என்று சொல்கிறது.நல்ல கதை.அய்யா எனக்கு ஒரு சந்தேகம், ஒருவன் இறந்த பின் சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்கின்றன் என்றால், அடுத்த பிறவி என்பது ?//////

    அங்கே அவனுடைய கணக்குகள் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு தந்தாற்போல சீட்டைக் கொடுத்தனுப்புவார்கள். அந்த சீட்டுதான் அடுத்த பிறவிக்கான பயணச் சீட்டு. அதை நாம் வாங்கி வந்த வரம் என்கிறோம்.

    ReplyDelete
  11. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    // வேப்பிலை said..
    இறந்தவர் பின்னால் யாரும் போகவில்லை இப்போ எப்படி கண்டுபிடிப்பதாம்? //
    பிறக்கும் முன்னால் யாரை பார்த்து பிறந்தோம்....
    அது போல் தான் இதுவும் நண்பரே,,,,,
    ஆத்மாவுடன் எப்பொழுதும் இருப்பது எண்ணங்கள் மட்டுமே..
    ஆத்மா இந்த உடலை விட்டு
    பிரியும்பொழுது கூடவே எடுத்து செல்வது எண்ணங்கள் மட்டுமே.
    வேதமும், வேதாந்தமும் இதையேதான் கூருகின்றன.
    ஆகையினால் தான் கீதையில் கண்ணன் எப்பொழுதும் எண்னை நினை. கடைசியில் எண்னை வந்து அடைவாய்.
    சீரான எண்ணங்களை வைத்துக்கொள்வது மிகவும் கடினம்.அதை வெற்றி பெறுவது தான் வாழ்க்கையின் முக்கிய கடமை. நோக்கமும் அதுவே..
    நான் அறிந்த சிலவற்றை இங்கு கூறினேன்...
    சந்திரசேகரன் சூரியநாராயணன்//////

    உங்களுடைய விளக்கங்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. அன்புடன் வணக்கம்
    **இறந்தவர் பின்னால் யாரும் போக வில்லை என்றால் **??
    1.எப்படியும் ஒரு உறவினராவது போகணும் இறந்தவர் தானே எழுந்து போவதில்லை.
    2.இறந்தவரை தள்ளி கொண்டு போவதற்கு எப்படியும் ஒரு 2 பேர் வேண்டும்
    3.அங்கே .இருவர் இறந்தவரை தகனம் செய்வதற்கு. !! அங்கெ இருப்பவன் அய்யா ஒருத்தரும் வரல நாங்கள் மட்டும்தான் ஆகவே கூலி கூடுதலாக கொடுங்கள் ..கொடுத்தே ஆக வேண்டும் ..அவன் நினைப்பான் ஆக இந்த பிணத்தின் புண்ணியத்தால் இன்று நமக்கு நிறைய கூலி...ஆக இறந்தவனுக்கு சொர்க்கம்..
    4.ஆனாலும் அநாதை என்றால் கூட இன்னும் சொர்கம்தான் ..??இறந்தவரை அரசாங்க செலவில் தகனம்..... ஆக தகனம் செயபவன் ஆகா இன்று நமக்கு நல்ல கூலி கிடைத்தது.. வாழ்க இந்த பிணம் !!

    சும்மா ஒரு தர்க ரீதியாக விவாதித்தேன் தவறாக எண்ண வேண்டாம் ..
    s.n.ganapathi.

    ReplyDelete
  13. Chandrasekaran Suryanarayana said...
    ///பிறக்கும் முன்னால் யாரை பார்த்து பிறந்தோம்....
    அது போல் தான் இதுவும் நண்பரே///

    பேறு, இழவு, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு என்னும் ஆறும் முன் கருஉட்பட்டது
    என சிவஞான சித்தியார் சொல்கிறது..

    சொல்ல வந்தது..(இது தான்)
    ஒரு ஊரில் பிறந்து அறிமுகமில்லா வேறு
    ஒரு ஊரில் இறப்பவர்களை பற்றி

    யாரும் எதுவும் பேசமாட்டார்களே
    யாருக்கும் இவரை பற்றி தெரியாதே

    அப்போது எப்படி கண்டுபிடிப்பதாம் என
    அந்த கேள்விளை தொடுத்தோம்..

    கண்ணனை பற்றி எமக்கு வேறு
    கருத்துண்டு அதை இங்கு சொல்வது

    ஆரோக்கியமாக இருக்காது என்பதினால்
    அமைதி காக்கின்றோம்..

    விளக்கம் சொல்ல
    விரும்பிய உங்களுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  14. அய்யா,
    ஜனனம், மரணம் இவை இரண்டு மட்டும் தான் உண்மை, இடையில் நடப்பது அறிதாராம் பூசாத நதி, ஒருவன் நன்மை செய்வதும், தீமை செய்வதும் அவன் பிறக்கின்ற நேரம் மற்றும் கிரக அமைப்பை பொறுத்து தானே தவிர அந்த உடலை பொறுத்து அல்ல. இந்த உடலை படைத்ததே எரிப்பதற்க்கு தான்.

    இந்த உடலானது இறைவனது பகட்டு காய்கள், உடலை ஆண்டவன் நகர்த்துகிறான் நகருகின்றோம். சிலர் கால்களால், சிலர் மற்றவர் துணையால், சிலர் கைகளால். இந்த வேற்றுமை கிரகத்தை பொறுத்தே தவிர அந்த அழியப்போகின்ற உடலை பொருத்து அல்ல.
    God’s playing chess we are like chess coins.


    அப்பனென்றும் அம்மையென்றும்
    ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
    குப்பையாக வந்த உடம்பு

    அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
    ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
    பந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
    எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

    குத்தம் குறை ஏதும் அற்ற ஜீவன் இங்க யாரடா
    சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
    சிவனைக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
    புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப்பார்வை ஏதடா

    ஆதி முதல் அந்தம் உன் சொந்தம்
    உன் பந்தம் நீ உள்ளவரைதான்
    வந்து வந்து கூடும் கூட்டம்தான்
    விட்டோடும் ஓர் சந்தைக்கடைதான்
    இதில் நீ என்ன நான் என்ன
    வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு

    ****கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
    ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்
    ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
    ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா****

    தட்டுக் கெட்டு ஓடும் தள்ளாடும்
    எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
    நீ போடு மெய்ஞான விலங்கு
    மனம் ஆடாமல் வாடாமல்
    மெய்ஞானம் உண்டாக
    அஞ்ஞானம் அற்று விழும்

    ReplyDelete
  15. Story is really good. But too small.

    ReplyDelete
  16. Story is really good. But too small.

    ReplyDelete
  17. அன்புடன் வணக்கம்
    அன்பரே ..!!இதைத்தான் நானும் பதிவிட்டேன் எனது தந்தை பிறந்தது சங்கரன்கோவில் இறந்தது கயாவில் [வட நாடு] புனித யாத்திரை செல்லும் சமயம் தனது பித்ருக்களுக்கு பிண்டம் காலையல் போட்டு விட்டு மாலை கடமை மூடிந்து விட்டது என எண்ணி அங்கெ எனது தயாரை தவிக்க விட்டு சென்றார்.உடன் யாத்திரை அழைத்து சென்ற.. அமைப்பாளர் ..இருவரை நியமித்து என் தந்தையின் ஈம கடன்கள் அனைத்தும் அங்கெ நிறைவேற்றி ..ஒரு பாத்திரத்தில் சாம்பல் மட்டும் கொண்டு வந்தார்கள் எனது தாயார் !!
    இங்கே வந்த பின்பு விசாரிக்க வந்தவர்கள் பல பேர்..
    ஆனால் இறந்த இடத்தில..??
    இதை கருத்தில் கொண்டுதான் அந்த அப்பதிவு.. உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி s.n.ganapathi..

    ReplyDelete
  18. C.Senthil said...
    ///ஒருவன் நன்மை செய்வதும், தீமை செய்வதும் அவன் பிறக்கின்ற நேரம் மற்றும் கிரக அமைப்பை பொறுத்து தானே தவிர அந்த உடலை பொறுத்து அல்ல. ///

    சரியாக சொன்னீர்கள் செந்தில்..
    சபாஷ் ஒன்னு வாங்கிக்கோங்க..

    ReplyDelete
  19. //////Blogger C.Senthil said...
    அய்யா,
    ஜனனம், மரணம் இவை இரண்டு மட்டும் தான் உண்மை, இடையில் நடப்பது அறிதாராம் பூசாத நதி, ஒருவன் நன்மை செய்வதும், தீமை செய்வதும் அவன் பிறக்கின்ற நேரம் மற்றும் கிரக அமைப்பை பொறுத்து தானே தவிர அந்த உடலை பொறுத்து அல்ல. இந்த உடலை படைத்ததே எரிப்பதற்க்கு தான்.
    இந்த உடலானது இறைவனது பகட்டு காய்கள், உடலை ஆண்டவன் நகர்த்துகிறான் நகருகின்றோம். சிலர் கால்களால், சிலர் மற்றவர் துணையால், சிலர் கைகளால். இந்த வேற்றுமை கிரகத்தை பொறுத்தே தவிர அந்த அழியப்போகின்ற உடலை பொருத்து அல்ல.
    God’s playing chess we are like chess coins.
    அப்பனென்றும் அம்மையென்றும்
    ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
    குப்பையாக வந்த உடம்பு
    அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
    ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
    பந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
    எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்
    குத்தம் குறை ஏதும் அற்ற ஜீவன் இங்க யாரடா
    சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
    சிவனைக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
    புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப்பார்வை ஏதடா
    ஆதி முதல் அந்தம் உன் சொந்தம்
    உன் பந்தம் நீ உள்ளவரைதான்
    வந்து வந்து கூடும் கூட்டம்தான்
    விட்டோடும் ஓர் சந்தைக்கடைதான்
    இதில் நீ என்ன நான் என்ன
    வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு
    ****கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
    ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்
    ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
    ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா****
    தட்டுக் கெட்டு ஓடும் தள்ளாடும்
    எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
    நீ போடு மெய்ஞான விலங்கு
    மனம் ஆடாமல் வாடாமல்
    மெய்ஞானம் உண்டாக
    அஞ்ஞானம் அற்று விழும்/////

    உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கும் ராஜாவின் பாடலுக்கும் நன்றி!

    ReplyDelete
  20. ////Blogger PS said...
    Story is really good. But too small.////

    சொல்லவந்த சம்பவத்தின் அளவும் சின்னதுதான். ஆகவே கதையும் சின்னதாகிவிட்டது.

    ReplyDelete
  21. /////Blogger hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    அன்பரே ..!!இதைத்தான் நானும் பதிவிட்டேன் எனது தந்தை பிறந்தது சங்கரன்கோவில் இறந்தது கயாவில் [வட நாடு] புனித யாத்திரை செல்லும் சமயம் தனது பித்ருக்களுக்கு பிண்டம் காலையல் போட்டு விட்டு மாலை கடமை மூடிந்து விட்டது என எண்ணி அங்கெ எனது தயாரை தவிக்க விட்டு சென்றார்.உடன் யாத்திரை அழைத்து சென்ற.. அமைப்பாளர் ..இருவரை நியமித்து என் தந்தையின் ஈம கடன்கள் அனைத்தும் அங்கெ நிறைவேற்றி ..ஒரு பாத்திரத்தில் சாம்பல் மட்டும் கொண்டு வந்தார்கள் எனது தாயார் !!
    இங்கே வந்த பின்பு விசாரிக்க வந்தவர்கள் பல பேர்..
    ஆனால் இறந்த இடத்தில..??
    இதை கருத்தில் கொண்டுதான் அந்த அப்பதிவு.. உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி s.n.ganapathi../////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. நல்ல கதை.

    'தக்கார் தகவிலர் என்பது அவர் அவர் எச்சத்தாற் காணப்படும்'என்பது அய்யன் திருவள்ளுவர் வாக்கு.

    இங்கே எச்சம் என்பதற்கு அவர்கள் விட்டுச்சென்ற நற்கருமம் தீய கருமம் ஆகியவை எனப் பொருள் கொள்ளத்தகும்.அதிகம் நற்கருமம் செய்தவர்களைப் பற்றி அவர்கள் உடல் மறைந்த பின்னரும் பலரும் பேசுவார்கள்.அவர்கள் புகழ்
    உடம்புடன் வாழ்வார்கள்.

    ஸ்ரீ ரமண மகரிஷியின் வாழ்வில் நிகந்த ஒரு நிகழ்வை முன்னர் நான் பக்திமலரில் எழுதியுள்ளேன்.

    நற்கருமங்களுக்காக சொர்க்க வாசமும், தீயகருமங்களுக்காக நரக வாசமும் எல்லாருக்கும் உண்டு.ஒரே ஜீவன் சொர்கமும் நரகமும் அநுபவிக்க நேரிடும். அதிக நன்மை அதிக சொர்க்க வாசம். அதிகத் தீமை அதிக நரகவாசம். அதன்பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்பி கர்ப்ப வாசம் செய்து முற்பிறவியின் செயலகளுக்கு ஏற்ற பிறவியெடுக்க வேண்டும்.

    ஊர் பேர் தெரியாத இடத்தில் மரித்தாலும், நல்லவர்களின் உடலை நல்லவ‌ர்கள்
    எடுத்துச் சென்று சம்ஸ்காரம் செய்வர். தீயவர்க்கோ அரசாங்க அலுவலர் கடமையே என்று எரிப்பர் அல்லது புதைப்பர்.

    கதையின் அழுத்தம் படிப்பு அறிவைக் காட்டிலும் பட்டறிவே உயர்ந்தது என்பதைக் காட்டுவதே.ஏட்டுக்கல்வி படித்த பிராமணரைவிட, படிக்காத தாசிப்பெண் சூழ்நிலைக் கல்வி(observation) கற்றவள் என்பதைக் காட்டுவதே கதையின் நோக்கம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com